மீளா 4

Milla4

மீளா 4

 மீளா காதல் தீவிரவாதி!!

"யம்மா பொன்னி" என்று முனியன் மகள் தலை ஜன்னல் வழியே தெரிய, வளர்த்த பாசத்தில் தசையாட, தன் மகள் நோக்கி தள்ளாடி ஓட மகளுக்கும் முனியனுக்கும் இடையே தன் பறந்து விரிந்த உடலைக் கொண்டு மறைத்து நின்ற மருதுபாண்டி..

"ஏய் உன்னை உள்ளார போன்னு சொல்லி எவ்வளவு நேரம்டி ஆகுது? இங்க நின்னு என்னடி வேடிக்கை பார்த்துட்டு இருக்க "என் ஜன்னல் கம்பியில் ஒரு அடி போட , குழலி அலறி அடித்து தொழுவம் நோக்கி ஓடிவிட்டாள் ..முனியனுக்கு கண்ணெல்லாம் கட்டிக் கொண்டு வந்தது .. 

ஒரு வேலைக்காரனாக இருந்து வளர்த்துக் கொடு என்று அவன் கையில் பொன்னியை பத்து வயது குழந்தையாக கொடுத்த அன்றே, தன் வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகளுக்காக என்று பத்திரம் எழுதி வைத்து.. இதோ இன்று வரை தனக்காக ஒரு வாழ்க்கை கூட அமைத்துக் கொள்ளாமல் , அவளை தங்கமாக பூட்டி வைத்து ராப்பகல் தூங்காது, இந்த சிங்கத்திடமிருந்து தன் ஆட்டுக்குட்டியை பத்திரமாக காத்து வைத்திருந்தான்.. தெரியும் என்றாவது ஒருநாள் இவன் அவள் ரத்தத்தை அடித்து புசித்து விடுவான் என்பது இருந்தாலும் தன் உயிரைக் கொடுத்தாகிலும் மகளைக் காப்பாற்றி விடமாட்டோமா என்ற சிறுதுளி நம்பிக்கையில் தான் காத்து கிடந்தான்.. ஆனால் நம்பிக்கை எல்லாம் தூள் தூளாக போய்விட்டதே .. இதோ நினைத்ததை சாதித்துவிட்டு தன்மகள் முகம் கூட பார்க்க முடியாதபடி விரட்டி விடுகிறானே .. அப்பா பசிக்குது வலிக்குது, போகவா , வரவா என்று அவள் சத்தம் கூட அதிர்ந்து அந்த வீட்டில் கேட்டது இல்லை .. எங்கே கேட்டால் இவர்கள் கூட்டத்திற்கு கேட்டு விடுமோ என்று பயம் .. வெளியே வராத தாயி இந்த ரூமுக்குள்ளே இருந்துக்கோ, தலைய வெளியே காட்டாத .. அப்பா கோழிக்குஞ்சு பார்க்கணும் என்று ஆசையாக வெளியுலகம் பார்க்க தவிக்கும் போது..  

"கோழிக்குஞ்சு உள்ள எடுத்து தாரேன், நீ உள்ளேயே இருந்துக்கோ" என கூட்டுக்குள் போட்டு வளர்த்தவருக்கு சுமக்காத கரு வலித்தது.. மகளுக்காக தானே அடியையும் உதையையும் இவனிடம் வாங்கிக் கொண்டு நிற்கிறார்..

"சாமி என்ன வேணும்னா அடிச்சு கொல்லுய்யா, அது பாவம் வாய் கூட பேச தெரியாது.. அவங்க வயித்தில பிறந்ததை தவிர பொன்னி ஒரு தப்பும் செய்யலைய்யா உங்க கால புடிச்சு கேட்கிறேன்.. என் கூட அனுப்பி வச்சிடுங்க .. நான் அவளை கூட்டிக்கிட்டு எங்கேயாவது போயிடுறேன், உங்க கண்ணுல கூட பட மாட்டோம் சாமி என்று மருதுவின் முன்னால் கையை கட்டிக்கொண்டு நின்றார் ..

அவன் காதில்தான் எதுவும் போய் அடையாதே, அவன் இருதயம்தான் இரும்பு வேலி போட்டு அடைக்கப்பட்டு விட்டதே .. நினைத்ததை முடித்தே தீர வேண்டும் எதிர்பார்க்கும் அவர்கள் வந்தே தீர வேண்டும்.. அவர்களை கருவறுத்தே ஆக வேண்டும் தீட்டி வைத்திருக்கும் அருவாள் அவர்கள் தலையை சீவாமல் விடாது என்பது மட்டுமே அவனுடைய குறிக்கோளாக இருந்தது.. 

"ஏலேய் நாயை கழட்டி விடு, நாலு பேர் கறியை கவ்விட்டு போகட்டும்" என்றதும் மகள் சாணி அள்ளுவதை தளர்ந்து போன கண்களோடு பார்த்து கொண்டே ,, நடையை கட்ட குழலியோ அப்பா என்று வாயசைத்தாள்.. அவள் உரிமைகள் தாலி மூலம் பறிக்கபட்டு போனது.. உடல் உபாதை ஒருபக்கம், மனபாரம் ஒரு பக்கம் என வேலையை முடித்து உள்ளே வர, 

"இந்தா சோத்தை போடு ,வேலை கிடக்கு" என்று ஏவ..

"சோறா??" மைனா வாயை பிளந்தது ..  

"என்னது சோறா , ஏன்டி நீ பொட்டச்சிதானா, ஏது எடுத்தாலும் அப்படின்னான்னு வாயை வாயை பிளக்கிற , "குழலி உடனே அரண்டு பின் வாங்க ..அந்த சிமிட்டிய கண்கள் இவன் கோவத்துக்கு தற்சமயம் வேலி போட, வியர்வை வடிந்து நின்ற மனைவியை இழுத்து மடியில் போட்டவன்..

"பொண்ணுதான் அதான் காலையில பார்த்தேனே நல்லா கும்முன்னு தின்னு தின்னு தூங்கி ஆளுக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லைடி , "கைகள் விரசல் காட்டை தேடி சேலைக்குள் புகுந்து விளையாட..

"எனக்கு இது புடிக்கல" சொல்லிவிட்டு பயந்து மருது முகம் பார்த்தாள்.. 

"எதுடி பிடிக்கல" ஆள் மஞ்சு விரட்டினாலும் மஞ்சத்தில் வீக்.. அப்போ ஓன்லி மோகம், நோ கோவம் .. அவளுக்கு மருது பாண்டியன் ரத்த ஓட்டம் புரியல.. புரிஞ்சிருஞ்சிருந்தா பத்தே நாளில் புடவை கொசுவத்தில் அந்த காளையை கட்டி போட்டு, போடா வாடா என மிரட்டி விடலாம்.. இந்த மண்டு ஏலியன் அவதாரம் அன்றோ , எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுத்து அவன் அடியில் நசுங்குகிறாள்.. 

"இந்த மாதிரி தொடுறது புடிக்கல , அம்....மாஆஆஆஆஆ "என்று அலறி போய் மூலையில் விழுந்தாள் குழலி...

"___ நான் தொட கூடாதுன்னு சொல்றியா அம்புட்டு தைரியம் வந்துடுச்சா , வாய் இருந்தா தான பேசுவ "என்று அவளை நோக்கி குனிய ,, குழலி வாயை பொத்தி கொண்டே விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள்...

"இனிமே நான் தொட்டா மறுப்பு சொல்லு தூக்கிபோட்டு சமுட்டி புடுறேன் ,போஓஓ ,போய் சோத்தை பொங்கு , ஆளையும் முகரையும் "என்று ஒரு கூடையை தூக்கி வீசிவிட்டு வெளியே போக .....

"அண்ணன் வந்துட்டேன்" என்று வந்து குதித்தான் விருமாண்டி வீருமா.. அவன் வளர்ப்பு தம்பி... ஆளு கடாமாடு ஆனா புத்தியை புல் பாயில் போட்டு தின்று விட்டு சுற்றும் கேட்டகிரி...

"ஏம்லே நேத்து என்ன சோலியா போயிருந்த??" என பேசி கொண்டே மனைவியை கண்ணால் எழும்பி போ என சைகை காட்ட.. குழலி வலித்த கையை தடவி கொண்டு எழும்பி சமையலறை போய் விட்டாள்.. இப்பதான் சற்று அம்மா, அப்பா அனைத்தும் வந்து விட்டது என பேச தொடங்கினாள், இந்த மூதேவி பேய் ஓட்டிருச்சு .. இனி தும்ம கூட வாய் திறக்க மாட்டேன், போடா என்று வாய்க்கு பூட்டு போட்டுவிட்டு ,வேலையை செவ்வனே செய்ய கிளம்பி விட்டது ஏலியன்... ஆனால் விதி விடணும்ஸ ...

"அய் மதனி வந்தாச்சா ,மதனி நில்லுங்க" என்ற விருமன் சத்தத்தில் அவள் எட்டியே பார்க்காது ஓட ..

"இந்தா அவன் உன்னையத்தான கூப்பிட்டு இருக்கான், உன்ற பாட்டுக்கு காது கேட்காம போயிட்டு இருந்தா என்னடி கணக்கு ,, வந்து, வாங்க தம்பி சாப்பிட்டிங்களா , குளிச்சிங்களான்னு கேட்கமாட்டியா "உண்மையிலேயே அவனிடம் அவள் மாட்டவில்லை, இவன் தான் வகையாக போய் மாட்டி கொண்டான்.. கணவன் பாச கனைப்பில் யூடர்ன் அடித்து ஓடி வந்த குழலி..

"தம்பி நல்லா இருக்கிங்களா, சாப்பிட்டிகளா , குளிச்சீங்களா??" என்று அவசரமாக சொன்னதை சொல்ல விட்டு அடுத்து என புருஷன் முகத்தை பார்க்க .. அவன் ஏதோ பாச மழை பொழிய போகும் முன் குறுக்கால் விழுந்து, அம்பை வாங்கி கொண்டது நாம நேந்து விட்ட எருமை..

"சும்மா மிரட்டாத அண்ணன்,. மதனி பாவமா முழிக்கிறாங்க, நீங்க போய் காப்பி தண்ணி கொண்டு வாங்க, மதியம் சாப்பாடு உங்க கையிலதேன்.."அவள் அப்பவும் அதே போல் நிற்க...

"சரின்னு சொல்லி தொலைடி.."

"சரி சரி .. "அய்யோ பாவம் என்றாகி போனது விருமனுக்கு.. 

"இவளோடு ஜீவன் போகுதுல" என்று தலையில் அடித்து கொண்டு திண்ணையில் அமர்ந்தான் மருது... 

"அட விடுண்ணே சின்ன புள்ளதானே மதனி, நாள் போனா சரியா போவும் ..

"அது போவும் , நீ என்னலே நேத்து இங்கன இல்லாம போயிட்ட மாடு பிடிக்க சந்தை போன, வரும் போது வெறுங் கையோட வந்திருக்க.. 

"இங்கன விலை சாஸ்தி சொல்லுதாம்ணே ..

"அதுக்கு ..

"அதேன் இப்ப அமேசான் அது இதுன்னு வருதுல்ல அதுல ஆர்டர் போட்டு நாலு மாட்டை வாங்கி புடுவோம்னு திரும்பி வந்துட்டேன்" என்று திண்ணையில் காலை நீட்டி அண்ணன் அருகே உட்கார..

"யாரு நீ ..

"ஆமா நான்தேன், வேற யாரு..

"யாருக்குலே காசை அள்ளி விதைச்சுபுட்டு வந்த..

"ஹிஹி ஒரு புள்ள படிக்க காசு கேட்டிச்சு..அதேன்" தலையை சொரிந்தான் ... இவன் ஹிட்லர் என்றால் அவன் தாராள பிரபு ... வாரி வாரி வழங்கி அண்ணன் செய்யும் தவறுக்கு புண்ணியம் தேடுவான் , வெகுளி அன்பை தவிர எதுவும் கொடுக்கத் தெரியாது..

"உன்னய எத்தனை தடவை சொல்லி இருக்கேன்டா எவனுக்கும் ஒத்த பைசா கொடுக்காதன்னு.. "

"புத்தியில ஏற மாட்டைக்குது அண்ணன்.. யாராவது பசியில வயித்தை தடவினா, எனக்கு என் நியாபகம் வருதுண்ணே" என்று தலையை குனிய ...

"அது எல்லாம் மனசுல இருந்துமாடா, திருந்தாம சுத்திகிட்டு இருக்க.. "

"விடுண்ணே எனக்குதேன் அண்ணன் நீ இருக், க இந்தா மதனி இருக்காவ , அப்படித்தான மதனி?" என காப்பியை சொம்பில் கொண்டு வந்த மதனியிடம் கேட்க ..

"ஆமா ஆமா" என்று வேகமாக பதில் வர, மருது கூட சிரித்து விட்டான்... அவள் நிற்கவா போகவா என்று பதிலுக்கு காத்திருக்க .. 

"என்ன? 

"நிற்கணுமா போகணுமா??" ஸ்கூல் பிள்ளை போல கேட்டாள்...

"இங்க உட்கார், இவன் என் தம்பி விருமாண்டி.. 

"ம்ம் .. "அத்தோடு அண்ணனும் தம்பியும் பேச ,குழலி விளையாடும் முயலை ஆர்வமாக வேடிக்கை பார்க்க ..அவளை கவனித்த விருமன்

"கிட்டக்க போய் பாருங்க மதனி, ஒன்னும் செய்யாது" என்றதும் குழலி புருஷன் கட்டளையே சாசனம் என்று மருதுவை திரும்பி பார்க்க..மீசையை திருகி பார்த்தியா என் பொஞ்சாதியை??!! என்று கெத்தாக ஒரு பார்வையை செலுத்திவிட்டு தலையாட்ட.. குழலி துள்ளிகொண்டு முயல் பார்க்க ஓட , தம்பியோடு பேசிய மருதுவின் கண்கள், மனையாள் தாண்டி எங்கேயும் போக வில்லை.. சிரித்தாள், அதை தூக்கி வைத்து கொஞ்சினாள் , ஏதோ குசுகுசுவென கதை பேசி அதோடு விளையாண்டாள்.. அத்தனையும் அழகுக் கவிதை ரசித்தான் ..தான் ரசிக்கிறோம் என தெரிந்தே சொட்டு வீண் செய்யாது அவள் அதிசயமாக காட்டும் உடல் மொழியை பருகினான்..

ரசனைகள் எப்போதும் காதலுக்கு உட்பட்டவை..

ரசிக்கத் தெரிந்தவன் காதலிக்க தெரிந்திருப்பான்..

அவன் ரசிகன் என்றால், காதலனும்தான்..   

சதுரகிரி மலை   

என்னலே சொல்லுத அவனுக்கு எப்படிலே என்ற பொண்ணுதான் பொன்னின்னு தெரியும் என்று கஞ்சா முட்டையை ஒற்றை கையில் தூக்கி லாரியில் போட்டபடி திரும்பினார்.. 

மருதுவின் தகப்பன் வீரபாண்டியனின் முதல் சம்சாரத்து மகளும் , வாய் பேசா மடந்தையான குழலியை பெற்ற லேடி ஹிட்லர்... இவனுக்கு குறையாத திமிருக்கு சொந்தக்காரியான, 

நாச்சியார் தேவி...

தம்பிக்கும், தமைக்கைக்கும் தீர்க்க படாத பல கணக்குகள் ... அத்தனையும் தீர்க்கப்படும் .. 

அவன் காதலும் சேர்ந்தே தீர்ந்து போகுமோ? 

என்ன போகுமோ ,போயிடும்னு சொல்லு அதானே!!