மெய் பேசும் மித்தியமே-9

மெய் பேசும் மித்தியமே-9
கருணாகரன் தங்கையைத் தூக்கிட்டு வந்ததுமே எல்லோரும் பயந்து ஓடிவந்து அவளைச் சுற்றி நின்றனர்.
“என்னாச்சுடி?”என்று மல்லிகா கேட்டுக்கொண்டிருக்கும்போதே குணசேகரனும் உள்ளே வந்துவிட்டான்.
“என்ன பட்டுமா ஸ்கூல்ல வைச்சு மயங்கி விழுந்திட்டியாம்?என்னாச்சு?”என்று பதறி அவளது பக்கத்தில் உட்கார்ந்து கையைப்பிடித்துக்கொண்டுக் கேட்டான்.
“ஒன்னுமில்லண்ணே பிரின்சிபால் கூப்டாங்கன்னு வேகமாக போய் நின்னனா மறுபடியும் தலையை கிறக்கிடுச்சு.மயங்கிட்டேன்.மேல இருக்க டாக்டருதான் வந்து பார்த்துட்டு கூட்டிட்டு வந்தாரு”
“அவன் எதுக்கு அங்க வந்தான்?”
“அவரு பொண்ணை ஸ்கூல்ல சேர்க்க வந்திருந்தாரு”
“அவனுக்குப் பொண்ணு இருக்கா?”
“ஆமா இன்னைக்குத்தான் சென்னையில இருந்து வந்தாங்க.அவரோட பொண்டாட்டி வெளிநாட்டுல இருக்குதாம்.ஒரே ஒரு பொண்ணு இருக்கு மூணு வயசு இருக்கும்.அவங்கம்மாவும்கூட வந்திருக்காங்க.ஆனால் அவங்க எதுக்கு இவா ஸ்கூலுக்குப்போனாங்கன்னுதான் தெரியல”என்று மல்லிகா குழப்பத்தில் மகளைப் பார்த்தார்.
“அவருப்பொண்ணுக்கு என் ஸ்கூல்லதான் அட்மிஷன் போட்டிருக்காங்க.அதுக்காகத்தான் வந்திருந்தாங்க நான் மயங்கி விழவும் ட்ரீட்மெண்ட் பார்த்து அவரே கூட்டிக்கொண்டுவிட்டாரு”
“ஓஓ அப்படியா?அவரு பொண்டாட்டி இங்க இல்லையா?இனி அவரு கார்ல எல்லாம் வராத பட்டு”என்று அண்ணனுங்க இரண்டுபேரும் ஒன்னுபோல சொல்லவும் பதறி திருதிருன்னு முழித்தாள்.
“ஏன் பயந்துப் பார்க்குற?அது கல்யாணம் முடியாத பையன்னாக்கூட இந்த சமூகம் சும்மா இருக்கும். இந்த ஊருக்காரனுங்க வாய மூடிட்டு சும்மா இருக்கமாட்டானுங்க. கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டி இல்ல குழந்தை மட்டும்தான் இருக்கும்னா ஆயிரம் பேசுவானுங்க. நீ அவருகூட வந்தால் கண்ணு காது வைச்சுப் பேசிடுவானுங்க. அது நம்மளுக்கு சரியாவராது சரியா. ஏற்கனவே உனக்கு வரன் பார்த்து வச்சிருக்கோம். அதனால கொஞ்சம் கவனமாவே இரு.அப்புறம் அப்பாகிட்ட இதைச் சொல்லவேண்டாம்,பாவம் பயந்துடுவாரு”
“சரிங்கண்ணே”என்று சொல்லி தலையாட்டினாள்.
அவ்வளவுதான் அவளை “அறைக்குள் போய் சும்மா ரெஸ்ட் எடு” என்று சொல்லி அனுப்பிவிட்டு அண்ணனுங்க இரண்டுபேரும் தனியாக உட்கார்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
“அப்பா சொன்ன அந்த வரன் என்னாச்சு கருணா?”
“நான்போய் விசாரிச்சிட்டு வந்துட்டேண்ணே.குடும்பம் நல்லக்குடும்பம்தான் சொந்த ஊரு தென்காசிதான்.ஆனா இருக்கிறது சென்னையில.அந்தப்பொண்ணு ஏதோ படிச்சிட்டு பேங்க்ல வேலைப்பார்க்குதாம்.அந்தப் பையன் அவளுக்கு மூத்தவன்தான்.அவனும் பேங்கலதான் வேலைப் பார்க்குறான்.ஆனால் கவர்மெண்ட் பேங்கல்.அங்கேயும் போய் விசாரிச்சிட்டேன்.நம்ம பட்டுமாவுக்கு ஏத்த பையன்தான்.எந்த வம்பு தும்புக்கும் போகாத குடும்பம்.ஏற்கனவே நம்ம பால்ராஜ் மாமாவுக்கு சொந்தத்துல அண்ணன் பையன்தானாம் அதுதான் அவரே நேரடியா வந்து பேசிட்டுப்போயிருக்காரு”
“அப்படியா?அப்போ அவருதான் வரன்இருக்குன்னு துப்புக்குடுத்தாரா?”
“தெரியல ஆனா அப்பாக்கிட்ட அவருதான் பேசியிருக்காரு.அண்ணே பொண்ணு இருக்கா!உங்க இரண்டாவது பையனுக்குப் பார்க்கலாமான்னு கேட்டிருக்காரு.அதுல அப்பா விசாரிச்சு நம்ம பட்டுவுக்கும் அப்படியே முடிச்சிடலாம்னு பேசச்சொல்லிருக்காரு”
“அப்படியா?அப்பா இதை என்கிட்ட சொல்லலையே.விசாரிச்சு செய்யணும்லன்னு சொன்னாரு அவ்வளவுதான்”
“இது நானேதான் விசாரிச்சேன்.இநுக்குமேலயும் பட்டுவை சங்கடப்படுத்தக்கூடாதுன்னுதான்.பாவம் இத்தனை வருஷம் வேதனைப்பட்டுட்டா இனியும் அவ நல்லாயிருக்கணும்ல.அண்ணங்களா நம்மக்கூடவே வைச்சுப் பார்த்துக்கலாம்.அவளோட காலத்துக்கும் நம்ம தங்கச்சியாவே இருக்கலாம்.ஆனாலும் அவளும் மனுஷிதானே அவளுக்கும் வாழணும்னு ஆசையிருக்கும்ல.நமக்காக மறைச்சாலும் பழசை நினைச்சு பயந்தாலும் அவளுக்கு ஒரு வாழ்க்கை நம்ம ஏற்படுத்திக் குடுக்கணும்லண்ணே”
“ஆமா செய்யணும்ல.நம்ம இரண்டுபேரும் எதுக்கு இருக்கோம்.அவ கல்யாணத்தை சிறப்பா செய்திடலாம்”
“அதுக்கான வேலைகளைப் பார்ப்போம்”
“உனக்கு அந்தப்பொண்ணைப் பிடிச்சிருக்கா கருணா?”
“நல்ல படிச்சிருக்கு பேங்க்ல வேலைப்பார்க்கு.ஆனாலும் என்னைக் கட்டிக்க சம்மதிச்சிருக்கு.குணம் நல்லாயிருந்தா போதும்.மத்தபடி பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு எதுவும் சொல்லுறதுக்கில்லை”
“உனக்கும் என்னடா குறைச்சல்.பாலிடெக்னிக்ல சிவில் முடிச்ச.வேற எவன்கிட்டயும் வேலைக்குப் போகவேண்டாம்னு நம்ம விவசாயத்தைப் பார்த்திட்டிருக்க.இதைப் பார்க்கிறதுக்க நமக்கு இன்னும் இரண்டு தம்பிகளை அப்பா பெத்திருக்கலாமோன்னு யோசிக்கிறளவுக்கு இருக்கு.விடுறா உன்னை அவளுக்குப் பிடிச்சிருந்து அவதான் உனக்குன்னா இந்த வரன் எப்படியும் அமைஞ்சிரும்.நம்ம பட்டுக்கும் ஒரு நல்லவாழ்க்கை கிடைக்கும் அதுதான் வேண்டிக்கிறேன் எல்லாமே நல்லதா நடக்கட்டும்டா”
“நடக்கும்ண்ணே நம்ம பட்டுவுக்கு ஒரு நல்லது நடக்குதுன்னா நான் யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க தயார்தாண்ணே”
“விடுறா ரொம்ப யோசிக்காத அதுபாட்டுக்கு எல்லாம் சரியாக நடக்கும்”என்று பேசிக்கொண்டிருக்கும்போதே லலிதா பூஜாவை அழைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தார்.
அவரையும் குழந்தையையும் பார்த்ததும் இருவரும் அப்படியே பார்த்தவாறே நின்றிருந்தனர்.
பூஜா சட்டென்று அவர்களைப் பார்த்துப் பயந்து அவருக்குப் பின்னால் ஒளிந்துக்கொண்டாள்.அவள் சும்மாவே பயந்த சுபாவம் கொண்டவள்.அவளாக யாரிடமும் பேசவேமாட்டாள்.இப்போதுதான் சூர்யாவிடமும் லலிதாவிடமும் கொஞ்சமே கொஞ்சம் பேசுறகிறாள்.
இந்த நேரத்துல இரண்டுபேரும் அவளையே பார்த்திட்டிருந்தா பயப்படாமல் என்ன செய்வா?அவளது மைண்ட் வாய்ஸ் இப்போது எப்படி இருக்கும்?டேய் ஹிப்போபொட்டமஸ்ஸுங்களா போங்க அந்தப்பக்கம் நான் வாக்கிங் போறேன்னுதான் இருக்கும்.
அவள் பயப்படவும் லலிதாவை யாரென்று பார்த்துவிட்டு வெளியே போய்விட்டார்கள்.
அவர்கள் போனதும்தான் மெதுவாக தலையை நீட்டி“ஆச்சி கவ் பாருங்க”என்று லலிதாவிடம் சொன்னாள்.
அப்போது அங்கே வந்த குணசேகரனின் மூத்த மகன் தினேஷ் அவளைப் பார்த்ததும்”ஹய் பாப்பா.எங்க வீட்டுலயும் ஒரு குட்டி பாப்பாஇருக்காளே.எங்க வீட்டுக்கு வர்றியா?”என்று பாசமாகக் கேட்கவும் லலிதாவைப் பார்த்தாள்.
அவருக்கோ அவள் இப்படி யாருக்கூடவாவது விளையாடி பேசிச்சிருக்கட்டும் என்றுதான் ஆசைப்படுகிறார் என்பதால் சரியென்று தலையாட்டினார்.
அதற்குள் தினேஷ் அவளது கையைப்பிடித்து கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் போய்விட்டான்.
லலிதாதான் உள்ளே போகவா? வேண்டாமா? என்று யோசித்தவாறே நின்றிருந்தார்.
அதற்குள் தினேஷ் பூஜாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றதும் எல்லாரும் திரும்பி பார்த்து இந்த குட்டி பாப்பா எப்படி உள்ள கூட்டிட்டு வந்த உன்கிட்ட சேர்ந்துட்டாளா இருந்து ஆசையாக அவளைப் பார்த்தனர்.
பூஜாவோ மீனாவின் மடியில் இருக்கும் அவளது இரண்டுவயது மகளும் தினேஷின் தங்கச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த வயசுல துருதுருன்னு சேட்டை பண்ணும் குழந்தைகளை தான் பார்த்து இருக்கிறார்கள் ஆனால் அவன் அமைதியாக உட்கார்ந்து இருந்தால் அதை பார்த்ததும் மல்லிகாவுக்கு பாவமாக இருந்தது உடனே அவளை தூக்கி தனது இடுப்பில் வைத்துக் கொண்டவர்”உன் பேரென்ன தங்கம்?”என்று கன்னத்தைத் தடவி வாஞ்சையாகக் கேட்டார்.
அவளோ “பூத்ஜா”என்றாள்.
“பூத்ஜாவா புதுப்பெயரா இருக்கே?தினேஷு இவ எப்படில இங்க வந்தா.அவங்க பாட்டி வரலையா?தனியாவா வந்த?”
“இல்லை பாட்டி அவ அவங்க பாட்டிக்கூட வந்தா.நான்தான் உள்ளக் கூட்டிட்டு வந்தேன்”
“அப்படியா அவங்க வெளியவா நிக்கிறாங்க?”என்று கேட்டவாறே மல்லிகா வெளியேபோய் பார்த்தார்.
லலிதா உள்ளேசென்ற பூஜாவைக் காணலையே என்று பார்த்துக்கொண்டிருந்தார்.
மல்லிகாவைக் கண்டதும் புன்னகைக்க”ஏன் வெளிய நின்னுட்டீங்க?உள்ள வாங்க நம்ம வீடுதான் எதுக்கு வராம நிக்கிறீங்க?”என்று அழைத்தார்.
“இல்லை பூஜாவை விளையாடக் கூட்டிட்டு வந்தேன்.அவங்கப்பா தூங்குறான்.அதுதான் இவளைக் கீழே கூட்டிட்டு வந்தேன்”என்று உள்ளே போகாது பேசிக்கொண்டிருந்தார்.
“அவ உள்ளதான் சின்னவளைப் பார்த்திட்டிருக்கா.உள்ள வாங்க” என்று மறுபடியும் அழைத்ததும் லலிதா உள்ளே போனார்.
அவரை அழைத்தை உட்கார சொல்லிவிட்டு நீலாவிடம் காபி எடுத்துட்டுவா என்று சொன்னார்.
அவரும் லலிதாவுக்கு எதிராக உட்கார்ந்தவரு”உங்களுக்குச் சொந்த ஊரே சென்னைதானா?”
“ஆமாங்க”
“டாக்டரு மாட்டும்தான வேற பிள்ளைங்க இருக்காங்களா?”
“அவனுக்கு மூத்தது ஒரு பொண்ணு அவ அமெரிக்காவுல இருக்க.அவ இன்ஞ்சினியரு இவன் டாக்டரு.என் ஹஸ்பண்டும் டாக்டருதான்.அவரும் மகக்கூடதான் இருக்காரு.வருஷத்துக்கு ஒருதடவை வருவாங்க”
“அமெரிக்காவுலயா இருக்காங்க?” என்று கொஞ்சம் அதிசயமாகப்பார்த்துக் கேட்டார்
மல்லிகாவுக்கு தென்காசி போறதே பெரிய விசயம்.அதுதான் அப்படிக் கேட்டார்.
“அப்போ நீங்களும் அங்கப்போவீங்களா?”
“அடிக்கடி போயிட்டுதான் இருந்தோம்.சூர்யா கல்யாணாத்துக்கு அப்புறம் போகல”
‘ஓஓ”
இப்படியாக அவர்கள் பேச்சு வளர்ந்துக்கொண்டுப்போக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பூஜா மெதுவாக அங்குமிங்கும் நடந்து ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே போனாள்.தினேஷ் அவளோடுக்கூட நடந்தான்.
அவள் நேராக ரோஜாவின் அறைக்குள் நுழைந்தவள் அங்கிருந்த பொருட்கள் பொம்மை என்று எடுத்து எடுத்துப் பார்த்துவிட்டு அப்படியே கட்டிலில் ஏறி உட்கார்ந்துக்கொண்டாள்.
தனது அண்ணன் மகள்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்து படுத்திருந்த ரோஜா அப்படியே பின்னாடி உருண்டு பூஜாவைத் தூக்கி முத்தமிட்டு மடியில் வைக்கவும்தான் பார்த்த்தாள்.
அவள் முத்தம் கொடுத்ததும் வெட்கச்சிரிப்போடு அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பூஜா!
இது டாக்டரு பொண்ணுல்ல என்று அவளும் கண்ணை விரித்து அதிர்ச்சியில் பார்த்தாள்.
பூஜாவை உடனே மடியில் இருந்து இறக்கிவிடத் தூக்கியவளுக்கு மனதே வரவில்லை.அவளது கன்னத்தை நடுக்கத்தோடு தொட்டுப்பார்த்தாள்.
ரோஜா போன்ற மென்மையான அவளது கன்னங்களைத் தொட்டதும் அவள் லேசாகக் கிளுக்கிச் சிரித்தாள்.
அவள் மற்ற குழந்தைகளைப் போல எந்தவிதமான சேட்டைகளையோ இல்லை பரபரவென்று பொருட்களை எடுத்து அங்குமிங்கு ஆரயவோ எதுவுமே செய்யாது அமைதியாகவே இருந்தாள்.
அவ்வளவுதான் அந்த அமைதி ரோஜாவை என்னமோ செய்ய சட்டென்று அவளைத் தூக்கி தனது மடியில் வைத்தவள் அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து அப்படியே உட்க்ர்ந்திருந்தாள்.
அவளுக்கும் அந்த கதகதப்பான அணைப்புத் தேவைப்பட்டதோ இல்லை குழந்தைக்கு தாயன்பு தேவைப்பட்டதோ இரண்டுபேரும் வெகுநேரம் அப்படியே இருந்தனர்.
அதைப்பார்த்திருந்த தினேஷ் அருகில் வந்து உட்கார்ந்த தினேஷ் ரோஜாவின் தோளில் சாய்ந்துக்கொண்டான்.
பூஜாவை அவள் மடியில் தூக்கி வைத்திருந்தது அவனுக்குப் பொறாமையை லேசாகக் கிளப்பிவிட்டிருந்தது.அதனால்தான் ரோஜாவின் தோளில் அவன் சாய்ந்துக்கொண்டான்.
உள்ளே போன பிள்ளைகளைக் காணலையேன்னு மல்லிகா உள்ளே வந்து பார்த்துவிட்டு அப்படியே கதவில் சாய்ந்து மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவளுக்கும் ஆசை இருக்கும்ல தனக்கும் வாழ்க்கை வேணும் குழந்தை வேணும்னு.ஆனால் அந்தக் கடவுள் ஏன் இப்படியான சோதனையான வாழ்க்கையை என் மகளுக்குக் குடுத்துட்டாரு என்று ஏக்கப்பொருமூச்சு விட்டார்.
இதே போல அவளது சொந்தக் குழந்தைகளைக் கொஞ்சிகொண்டிருக்கிறதைப் பார்த்தாலே எனக்கு இந்த பிறவின் மொத்த சந்தோசமும் கிடைச்சிடுமே ஆண்டவா!என் மகளுக்கு ஒரு வழியைக் காட்டமாட்டாயா?என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டே கையை விரித்து மேல பார்த்து ஏதோ முணுமுணுத்தார்.
அதைப்பார்த்த தினேஷ்தான் “பாட்டி என்ன தனியா மேலப்பார்த்துப் பேசிட்டிருக்க?”என்று கேட்டதும்தான் ரோஜா திரும்பிப் பார்த்தாள்.மல்லிகா கண்கள் கலங்க மகளைப் பார்த்தார்.
“யம்மாஆஆ என்ன?”என்று ரோஜா கேட்டாள்.
“டாக்டரு மக வந்தாலே எங்கன்னு பார்க்க வந்தேன்.அவங்க பாட்டியும் இங்கதான் இருக்காங்க”
ஓஓ இங்க வந்தாங்களா?என்றவள் பூஜாவைத் தூக்கி கட்டிலில் வைக்க அவளோ மீண்டும் ரோஜாவின் மடியில் வந்து உட்கார்ந்துக்கொண்டாள்.
ரோஜா ஆச்சர்யமாகப் பார்த்தாள்’இன்னைக்குத்தான் இவளை முதன்முதல்லப் பார்க்குறேன்.இந்தப்பொண்ணு என்ன என்கிட்ட இப்படி ஒட்டுது?’ என்று ஆச்சர்யப்பட்டாள்.
“உன் பேரென்ன பாப்பா?”
“பூத்ஜா?”
“இதென்ன பேரு என்று முழித்த ரோஜாவைப் பார்த்து சிரித்த தினேஷ் அத்தை அது அவ பேரு பூஜாத்தை.அதைத்தான் அவள் அப்படிச் சொல்லுறா?”
“ஓஓ பூஜாவா.நல்லபேரு.யாரு வைச்சது?”
“தெரியாது” என்று கையை விரித்துக் காண்பித்தவளைப் பார்த்தவளுக்கு அவ்வளவு க்யூட்டா இருக்கவும் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“நீ கீழறங்கு உங்க பாட்டிக்கிட்டப் போவியாம்.நான் பின்னாடியே வருவேனாம்”என்று ஏதேதோ சமாதனாம் சொல்லியும் அவள் கீழிறங்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து உட்கார்ந்திருந்தாள்.
இதென்ன ரோஜா உனக்கு வந்த சோதனை.இவங்கப்பனை மாதிரியே அழிச்சாட்டியம் பண்ணுது.ஏற்கனவே இவங்க அப்பன் டாக்டரை உண்டு இல்லைன்னு பண்ற மனநிலையில் இருக்கேன்.இவா வேற இப்படிப் பண்றாளே என்று யோசனையோடு இருந்தாள்.
அதற்குள் லலிதாவும் பூஜாவைக்கூட்டிட்டுப்போக பேசிமுடித்துவிட்டு எழும்பிவிட்டு பூஜா என்று அழைத்தார்.
மல்லிகா உடனே பூஜாவைத் தூக்க வரவும் அவள் ஆஆஆஆஆஆஆஆ என்று உச்சஸ்தாயில் அழ ஆரம்பித்துவிட்டாள்.
ரோஜாவுக்கு ஒரு நிமிடத்தில் பதட்டமே வந்துட்டு.அவள் அழுத அழுகையைப் பார்த்து புரியாது பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதற்குள் லலிதா இன்னொரு முறை அழைக்கவும் அவளைத் தூக்கிக்கொண்டு ரோஜாவே வெளியே வந்தாள்.
ரோஜாவைப் பார்த்ததும் சிரித்தவர்”என்ன பூஜா உன்கிட்ட இப்படி ஒட்டிக்கிட்டா?இவா யாருக்கூடவும் சேரவேமாட்டாளே.அமெரிக்காவுல இருந்து அவங்கம்மாகிட்ட இருந்து எடுத்து வந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கா?அங்கயும் அவள் இப்படித்தான் இருந்திருக்கா.பேசி விளையாட யாரும் இல்லைன்னால இப்படி இருக்கா போல.அதுதான் இங்க வந்ததும் விளையாட கூட்டிட்டு வந்தேன்”
“அவங்கம்மாவைத் தேடுறாளோ?”
“அதெல்லாம் தேடமாட்டா.அவளைப் பார்த்தாலே பயந்துதான் ஓடுவா.அவ பக்கத்துல இருந்தாலே அழுவா”
“என்ன?”
ரோஜா புரியாது பார்த்தாள்.அதற்குள் சூர்யாவின் சத்தம் மேலிருந்துக் கேட்டது.அம்மாஆஆஆ பூஜா என்று அவன் அழைப்பது கேட்டது.
மகளைக் காணாமல் கொஞ்சநேரம்கூட இருந்துக்கிடமாட்டான் போல மன்மதன் டாக்டரு,இதுல நம்மக்கிட்ட உரசிக்கிட்டுவேற வர்றான் என்று கடுப்பாகிவிட்டாள் ரோஜா.
லலிதா சூர்யாவின்சத்தம் கேட்டதும் பூஜாவை தூக்க முற்பட அவளோ வரமாட்டேன்னு ரோஜாவின் தோளில் சாய்ந்தவள் கழுத்தைகா இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
மல்லிகாதான் “நீங்க போங்க டாக்டரம்மா.ரோஜா பாபாவை பிறகு அங்க கூட்டிட்டு வருவா.பாவம் புள்ளை வரமாட்டுக்கால்ல”என்று சொல்ல லலிதா வேறு வழியின்றி மேலே போய்விட்டார்.
ரோஜாதான் என்னடா நடக்குது இங்க?என்று ஒன்றும் புரியாது தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்திருக்கும் குழந்தையின் முதுகை ஆதூரமாகத் தடவிக்கொடுத்தாள்.
வாழ்க்கையில் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி தவிக்கும் யாசகர்கள் ஒருவருக்கொரு தாங்கிக்கொண்ட தருணமதுவாக இருந்தது!