மெய் பேசும் மித்தியமே-7

மெய் பேசும் மித்தியமே-7
ரோஜா லீவில் இருந்த இரண்டுநாளும் யாரோடும் பேசாது தனது அறைக்குள்ளயே முடங்கிவிட்டாள்.
மல்லிகாதான் திட்டிக்கொண்டே சாப்பாடு எடுத்துட்டு வந்து அள்ளிக்கொடுத்து சாப்பிட வைத்தார்.
“ஏம்மா நான் இங்கயே இருக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“நீ நம்ம வீட்டுல இருக்கறதுல எங்களுக்கு என்ன பட்டு பிரச்சனை இருக்கப்போகுது.நீ எங்க செல்லப்பொண்ணு. மூணாவதா பொண்ணு வேண்ம்னு வேண்டிக்கிட்டுப் பெறந்தவ.ஆனால் பொம்பளை பிள்ளையை வீட்டுல வைச்சிக்கிட்டு வைச்சு வைச்சு பார்த்துட்டா இருக்க முடியுமா?இப்படி நீ வாழ்க்கையில்லாமல் இருந்தா அதைப்பார்த்துட்டு நாங்க நிம்மதியா இருக்க முடியுமா?”
“ப்ச்ச்.ஏன்மா இப்படி?நான் இப்படியே இங்கயே இருந்துக்கிறேன்.யாரையும் தொந்தரவு பண்ணாமல் நான் வேலைக்குப்போயிட்டு அண்ணன் பிள்ளைங்களைப் பார்த்துக்கிட்டு வளர்த்துக்கிட்டு அப்படியே உங்களோடவே இருந்திடுறனே”
“இதெல்லாம் என்ன பேச்சுன்னு பேசுற.ஒரு ஸ்கூல்ல போய் வேலைப்பார்க்கிற அளவுக்கு வளர்ந்திருக்க.நீயே யோசிச்சு பாரு.அது சரியாவருமா?”
“வராதுதான்”
“அப்போ நாங்க யோசிக்கிறதுல என்ன தப்பு?உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்.உன் குழந்தைகளையும் நாங்க பார்க்கணும் கொஞ்சணும்னு.உனக்காக ஒரு துணை எங்களுக்கு அப்புறம் இருக்குங்குற நம்பிக்கையில நாங்க கண்ணமூடிருவோம்.வேற எதுல எங்களுக்கு இப்படியான நிம்மதி கிடைக்கும்னு சொல்லு? ”
“அதெல்லாம் தப்புன்னு சொல்லலையே.ஆனால் ஒவ்வொருவாட்டியும் எனக்குத்தானே மனவுளைச்சல் வருது.அதை யோசிக்கமாட்டீங்களா?”
“அப்படியெல்லாம் யோசிக்காத.அப்பா உன்னை நினைச்சு நினைச்சு தினமும் மனசுக்குள்ளாடியே மறுகுறாரு.அப்புறம் நீ வேற வேலைக்குப்போற அன்னைக்கு என்கிட்ட மனசு உடைஞ்சுப் பேசினியா?அதையும் சொன்னேனா உடனே வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு”
“அதைத்தான் இத்தனை வருஷமா பார்த்திட்டிருக்கீங்களே.ஏதே நேத்துதான் வரன் பார்த்தமாதிரியே பேசுறியேம்மா.கருப்பசாமிக்க பொண்டாட்டின்னு நிருபிக்கிறே போ”
“அதுசரி அப்படி நிரூபிக்கணும்ல.நீ கண்டதையும் மனசுக்குள்ள போட்டுக் குழப்பிக்காத புரியுதா?”
“நான் எங்கக் குழப்பிக்கிறேன்.என் வாழ்க்கையை நினைச்சுதான் நீங்கெல்லாம் குழம்பிப்போய் திரியுறீங்க என்னமோ செய்யுங்க.ஆனா மறுபடியும் இந்த வரன் இல்லை வேற வரன்னு ஏதாவது கொண்டு வந்தீங்க.நான் அப்படியே லெட்டர் எழுதி வைச்சுட்டு கிணத்துல குதிச்சிடுவேன்”
“ஐயோ என்ன பேச்சுன்னு இதைப்பேசுற ரோசா.அப்படியே செவுட்டுல அடிச்சிருவேன்.இந்தப்பேச்சுக்கெல்லாம் செல்லம் கிடையாது”என்றவர் வேதனையில் சட்டென்று வடிந்தக் கண்ணீரை தனது சேலை முந்தியை எடுத்து துடைத்தார்.
அதைப் பார்த்தவளுக்கு சட்டென்று மனம்கலங்கி அப்படியே அவரது இடுப்பைக் கட்டிக்கொண்டு, கொஞ்சம் நேரம் அவரது வயிற்றில் தனது முகத்தைப் புதைத்து ஏங்கி ஏங்கி தனது மனதின் ரணத்ததையும் கண்ணீராக கரைத்தாள்.
அவள் அழுகிறதைத் தாங்கிக்க முடியாத மல்லிகாவும் அவளது தலையைக் கோதிக்கொடுத்தவர்”இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி அழற.உனக்குன்னு கடவுள் இனி தனியாவா தலையெழுத்தை எழுதுவாரு.ஏற்கனவே எழுதி வைச்சிருப்பாரு அதுபடி நடக்கும்.நீ எதுக்கு அழுத?நீ அழுததை அண்ணனுங்களும் அப்பாவும் பார்த்தாங்கன்னா அவங்களுக்கும் கஷ்டமா போகும்.இப்போதான் கொஞ்சமாச்சும் அவங்க எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு உனக்கான வாழ்க்கையை பார்க்கலாம்னு தெளிஞ்சு வந்திருக்காங்க.அவங்களுக்கு மீண்டும் கஷ்டம் கொடுக்கவேண்டாம்”
உடனே வேக வேகாமக கண்ணீரைத் துடைத்தவள் எழுந்துப்போய் முகம் கழுவிட்டு வந்தாள்.
அண்ணன் அப்பான்னு சொன்னா போதும் உடனே எல்லாத்தையும் உள்ளுக்குள்ள மறைச்சிக்குவா! என்று மகளைத்தான் பாசமாகப் பார்த்தார்.
இதுக்குமேல அவள் சாப்பிடமாட்டாள்னு தெரியும்.அதானால் ஊடாடிவிடாது தட்டை எடுத்துட்டுப்போய்விட்டார்.
தன்னை நினைத்து தன் வாழ்க்கையை நினைத்துதான் இளைய அண்ணன் கல்யாணத்தையே தள்ளிப்போட்டுட்டிருக்கான்.இப்போ இந்த வரனையும் நான் வேண்டாம்னு சொன்னா அவனும் வேண்டாம்னு சொல்லிடுவான்.அப்பாவுக்கு எதுசரின்னு படுதோ அதைச் செய்யட்டும் என்று முடிவெடுத்தாலும் மனதோ படபடவென்று அடித்துக்கொண்டது.
“ஒருவேளை டாக்டருக்கு என்னை உண்மையாகவே பிடிச்சிருந்தாள்?அவரு எனக்கு வரன் பார்த்திருக்குன்னு தெரிஞ்சு வருத்தப்படுவாருல்ல?”
‘க்கும் வருத்தப்பட்டுட்டாலும்.அவரெல்லாம் நம்மளை மாதிரி பட்டிக்காட்டுல இருக்க பொண்ணைய பிடிக்கப்போகுது?பதினாறுவயதினிலே படத்துல வர்ற டாக்டரு மாதிரியே இவரும் கண்ணைக் கணணைக் காட்டி பேசுறாரு.நீ அந்த மயிலு மாதிரி ஏமாந்திடாத ரோஜா.அப்பும் ரோஜாவை கசக்கிப்பிழிஞ்சி போட்டிருவாரு’என்று யோசித்தவள் ச்சை இது என்னமாதிரி யோசனைன்னு யோசிக்கிற.அவரைப் பார்த்தா அப்படியெல்லாம் தெரியல.நல்லவராதானா தெரியுது.ஒருவேளை அவரு உண்ணையிலயே என்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா?’
“சொன்னா என்ன பண்ணுவ?”என்று உள் மனசு கேட்டது.
“அது அது அவருக்கிட்ட எல்லாத்தையும் பேசி சம்மதம்னா வீட்டுல சொல்லுவேன்”
“அதுசரி அந்தளவுக்குப் போயாச்சா?அவரும் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?” என்று மனசு இடித்ததும்.அப்படியே நடுங்கிவிட்டாள்.மீண்டும் பதட்டத்தில் கைகால் நடுங்க அப்படியே மயங்கிசரிந்தாள்.
நெடுநேரமாகியும் வெளியேக்கூட வராமல் என்ன பண்றா? என்று மல்லிகா வந்துப்பார்த்தார்.
மகள் மயங்கிக்கிடப்பதைக் கண்டதும் ஐயோ பட்டு பட்டுமா என்று வேகவேகமாகக் கன்னங்களைத் தட்டி எழுப்பிப்பார்த்தார்.
அவ்வளவுதான் அவரது அழுகையின் சத்தத்தில் வீடே களேபரமாகிவிட்டது.கருணாகரன் ஓடிவந்துப்பார்த்துவிட்டு அவளை உடனே தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் ஓடினார்கள்.
பக்கத்து டவுணில் இருக்கும் ஹாஸ்பிட்டலில் அவளைச் சேர்த்துவிட்டு வெளியே உட்கார்ந்திருந்தனர்.
எப்போதும்போல டாக்டர் இப்பவும் அதே பதட்டம் பயத்துல வர்ற மயக்கம்தான்,வேறொன்னுமில்லை.ஒருநாள் இருந்துட்டுப்போங்க”என்று சொல்லிவிட்டார்.
மல்லிகாதான் ரொம்ப பயந்துட்டார்.கல்யாணம்னு பேச்சை எடுத்ததும் எதுவும் சாப்பிட்டு தற்கொலை முயற்சி பண்ணிட்டாளோ?என்றுதான் பயந்து அழுதார்.
“கருணா இவா ஏதோ செய்துட்டாளோன்னு பயந்துட்டேன்பா.இவளை எப்படி கரைச் சேர்க்கப்போறோம்னே தெரியலை.பயமா இருக்கு?”என்னு அவனது கையைப்பிடித்துக்கொண்டு அழுதார்.
மல்லிகாவாது வாய்விட்டு மகன்களிடம் புலம்பிவிட்டார்.ஆனால் கருப்பசாமிதான் பாவம்.யாரிடமும் தனது வேதனையைச் சொல்லமுடியாது அமைதியாக உள்ளுக்குள்ளயே வைத்து மறுகினார்.
என் மகளுக்கு என்ன குறைச்சல்?அழகில்லையா?பணமில்லையா?படிப்பில்லையா?ஏன் இந்தளவுக்கு கடவுள் சோதிச்சார்?அப்படி என்மேலயும் என் மகள்மேலயும் இந்தக் கடவுளுக்கு என்ன கோபம்?இப்போதான் நல்லவரான வந்திருக்கேன்னு பேச்சைத்தானே ஆரம்பிச்சோம் அதுக்குள்ள இப்படி அச்சாணியமா மயங்கி ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்காளே!என்று வேதனையில் கண்ணை மூடியவருக்கு கண்களின் ஓரம் யாரும் காணாதளவுக்கு சோகத்தின் ஈரம் படர்ந்தது.
மகளது வாழ்வு,எதிர்காலம் என்னகுமோ? என்ற நினைவே ஒரு தகப்பனாக அவருக்கு பயத்தைக் கொடுக்கிறது.எப்படியாவது சரியாகும் என்ற சிறு நம்பிக்கையோடு உட்கார்ந்திருந்தார்.
மொத்த குடும்பமும் பட்டுரோஜாவுக்கு துணையாக ஹாஸ்பிட்டலில் இருந்தனர்.
இங்கு சென்னையில் தனது அம்மா லலிதாவோடு காரில் ஏறிய சூர்யபிரகாஷுக்கு முகமெல்லாம் பிரகாஷமாக இருந்தது.
அவனைப் பார்த்த லலிதா”உனக்கு அந்த சின்ன கிராமத்து ஹாஸ்பிட்டல்தான் பிடிச்சிருக்கா?ஏன் இப்படி?இங்கதானே எப்பவும் பிடிக்கும் சென்னைவிட்டுப்போகமாட்டேன்னுதானே பிடிவாதம் பிடிப்ப?”என்று ஒரு கேள்விக்குறியோடே கேட்டார்.
“அது தெரியலம்மா.அந்த ஊரு தண்ணியும் காத்தும் ஏதோ சிலுசிலுன்னு நெஞ்சுக்குள்ள ஒட்டிக்கிட்டு.அப்புறம் டாக்டருன்னு அவங்க காட்டுற அன்பும் மரியாதையும் நமக்குள்ளயே நிறைய மாற்றங்களைக் கொண்டுவருதும்மா.அங்க வாழக்கூடியவங்களாம் வரம் பெற்றவங்க”
“ஆமா தென்காசி சாரலும் அந்த ஊரு குளுமையும் கேள்விப்பட்டிருக்கேன்.இப்போதான் உன் மூலமா அங்க வர்றேன்.உங்கப்பாக்கிட்ட எப்பவும் கேட்பேன்.ஒருதடவையாவது குற்றாலும் பார்க்கணும் குற்றாலம் பார்க்கணும்னு கேட்டேன்.எங்க கூட்டிட்டு வந்தாரு.இப்போ அவரு மட்டும் உங்க அக்கா வீட்டுவ கனாடலா போய் உட்கார்ந்திருக்காரு.நான் இங்க இருக்கேன்.நமக்கு வாய்ச்ச புருஷன் சரியில்லை,உங்களுக்கு அப்படி எனக்கு இப்படி அவ்வளவுதான்.இதுல நம்ம என்ன செய்யமுடியும்?”
“அதுசரி வரவர நிறைய தத்துவம்லா பேச ஆரம்பிச்சிட்ட சூர்யா.அதென்னாட இடம் மாறினா சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவ.என்னைத் தேடுவன்னு நினைச்சேன்.ஆனா நீ அப்படியெல்லாம் தேடுன மாதிரியே தெரியலையே”
“அம்மாஆஆ உன்னைப் பிரிஞ்சிருக்கிறயு எனக்கென்ன புதுசாம்மா தேடுறதுக்கு.நீ வேற.பேசமா வா.டிரைவர் வைச்சுத்தான் வண்டி ஒட்டிட்டுப்போறோம் பேசாம படுத்துத் தூங்குங்க.நம்ம பொருட்கள் எல்லாம் நமக்கு முன்னாடியே போய் சேர்ந்திடும் நான் இன்னும் ஒரு விசயத்துக்கு போன் பண்ணல காலையில உனக்கு போன் பண்ணி கருப்பசாமி ஐயா உதவியோட மேலே எடுத்து வைக்க சொல்லணும்”
“அது முதல்லயே சொல்லாலம்ல இப்போதான் ஞாபகம் வந்துச்சா.நீ நேரடியாகவே அநதக் கருப்பசாமிக்கிட்டயே சொல்லிருக்கலாம்”
“என்னது கருப்பசாமியா?கருப்பசாமி அந்த ஊரு பெரிய மனுஷன்மா.உன்னைவிடவும் பெரியவரு.நீ அவரு பேரைமட்டும் சொன்னது அவரு பொண்ணுக்குக் கேட்டிருந்திச்சோ அவ்வளவுதான்” என்று சொன்னவன் சத்தமாகச் சிரித்தான்.
அவன் சிரிப்பதையே யோசனையோடு பார்த்தவர் மெதுவாக”அந்தப்பொண்ணு நல்ல அழகா இருக்குமா?”
“ஆமா ஆமா உள்ளுர் உலக அழகி.அவா அப்படித்தான் சொன்னா”என்றவன் மறுபடியும் சொல்லிவிட்டுச் சிரித்தான்.
இதுக்குமேல அவன்கிட்ட கேட்கவேண்டாம்.எப்படியும் பார்க்கத்தானே போறோம் என்று அமைதியாகிவிட்டார்.
அடுத்தநாள் காலையிலயே பொருட்களோடு வண்டி வீட்டிற்கு முன் வந்து நிற்கவும் கருப்பசாமிதான்”என்ன முருகேசா டாக்டரு எப்போ வர்றாரு.சாமான்லாம் வந்திருக்கு”
“அவரா பின்னாடியே வந்திட்டிருக்காருங்கய்யா.எப்படியும் மத்தியானம் ஆகிடும்னு சொன்னாரு”
“ஓஓஓ இரு நம்ம ஆட்களை வரச்சொல்லுறேன்.அவனுங்க வந்து மெதுவா தூக்கி வைப்பானுங்க”முத்தவைக் கூப்பிட்டு அங்கு வேலை செய்வர்களை வரச்சொல்லி பொருட்களை மாடிக்கு ஏத்தி வைக்கச்சொன்னார்.
அப்போது வெளியே வந்த “ரோஜா என்னப்பா?வீட்டுப்பொருட்கள் எல்லாம் வந்து இறங்கியிருக்கு டாக்டரு குடும்பம் வந்துட்டா?” என்று நிதானமாகக் கேட்டாள்.
ஆனால் அவளது கண்களோ அவளை அறியாது அவனைத் தேடியாது.அவங்கக் குடும்பத்துல யாரு யாரு இருக்கா என்று பார்க்கும் ஆவலும் அவனைப் பார்க்கும் ஆவலும் கண்களில் தெரிந்தது.
அதுக்குள்ளாக கருணாகரன் வெளியே”ஏன் பட்டுமா இன்னைக்கே ஸ்கூலுக்குப்போகணுமா?இரணடு நாள் கழிச்சிப்போகலாம்ல?”
“ஆமா இந்த வீட்டுக்குள்ளயே விட்டத்தைப் பார்த்துட்டேவா படுத்திருக்க முடியும்.அங்க என் பிள்ளைங்க என்னைத் தேடுவாங்க.நான் வர்றேன்”என்றவள் ஸ்கூலுக்குத் தினேஷோடு கிளம்பிவிட்டாள்.
கருப்பசாமிதான் “விடு கருணா அவளை இப்போதைக்கு எதுவும் சொல்லாது.அங்கேயாவது சந்தோசமா இருக்கட்டும்”என்று சொஸ்லிவிட்டார்.
சரிப்பா என்றவன் முருகேசனைப் பார்த்து”ஏன்டா உங்க டாக்டருக்கு வந்து பொருட்களை ஏத்தி வைக்கச்சொல்லவேண்டியதுதானே.அதுக்கும் எங்க வீட்டு ஆட்களை வைச்சுத்தான் ஏத்துவீங்களோ.மரியாதை அவங்களுக்கு இன்னைக்குள்ள கூலியை குடுக்கச்சொல்லு”
“சரிங்க”என்று அமைதியாக தலையாட்டிவிட்டான்.
இல்லைன்னா அடுத்து அவன்கிட்ட யாரு அடிவாங்குறது.பெரியவனாவது பேசிட்டு அடிப்பான்.இவன் அடிச்சிட்டுத்தான் பேசுவான்.எதுக்கு வம்புன்னு அமைதியாக போய்விட்டான்.
ஸ்கூலுக்குப்போனது ரோஜா கொஞ்சம் வீட்டையும் பிரச்சனைகளையும் மறந்து அப்படியே பிள்ளைங்களோடு பாடம் நடத்துறது பேசுறதுன்னு நேரம் போனதே தெரியாது போனது.
இப்போது பிரின்ஸிபால் கூப்பிட்டுவிடவும் சிரித்த முகத்தோடு உள்ளேபோனாள்.அங்கே சூர்யபிராகஷ் உட்கார்ந்திருந்தான்.அவனது மடியில் இரண்டரை மூன்று வயதிருக்கும் பெண் குழந்தை இருந்தது.
அதைப்பார்த்ததும் ‘இதுயாரோட பொண்ணா இருக்கும்?’என்று யோசித்தவாறே குழந்தையையும் அவனையும் பார்த்தாள்.
அவளைப் பார்த்து அவன் சிரிக்கவேயில்லை.
அதற்குள் பிரின்சிபால்”ரோஜா இவரு உங்க ஊரு டாக்டருதான்.சென்னையில் இருந்து இங்க வந்திருக்காங்க.அவரு பொண்ணு பூஜாவுக்கு நர்சரி அட்மிஷன் போட வந்திருக்காரு.உன் கிளாஸ்தான்.பூஜாவை ஆயா தூக்கிட்டு வருவாங்க கொஞ்சம் பார்த்துக்காங்க”என்று பேசிக்கொண்டிருந்தார்.
அதைக்கேட்ட ரோஜாவுக்கோ நெஞ்சே வெடித்திவிடும் அளவிற்கு அதிர்ச்சி அப்படியே கண்களை இமைக்காது குழந்தையையும் சூர்யபிரகாஷையும் மாத்தி மாத்திப் பார்த்தாள்.
அவ்வளவதான் அடுத்த நொடியே அங்கயே மயங்கிச் சரிந்துவிட்டாள்.சூர்யா இதை எதிர்பார்க்கவில்லை சட்டென்று அவளைத் தாங்கிப்பிடித்திருந்தான்!