ரண ரணமாய்6
Ra6

6 ரண ரணமாய்!
என்ன மச்சான் சொல்ற பொண்ணு பாத்திட்டியா? அதுவும் ப்ரொபோஸ் பண்ணி இருக்கியா? போனில் ராகவ் கத்தியது ஊருக்கே கேட்டிருக்கும்.. அவன் வாழ வேண்டும் என்று நினைக்கும் உறவுகளிடம் உண்மையை மறைக்க முடியாது மாதவன் கூறி விட்டான்..
"ப்ரொபோஸ் எல்லாம் பண்ணல கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டிருக்கேன்' அவனுக்கே ஆச்சரியம் தான் அது எப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் கட்டிக்கிறியான்னு கேட்டுட்டேன்... அவள் போன பிறகு வேலை ஓடாமல் மாதவன் தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.. ஆனால் மனம் மிக மிக லேசாக இருந்தது..
"அடேய் மட சாம்பிராணி பயலே! இரண்டுக்கும் ஒரு அர்த்தம் தான்டா"
" ஓ அப்படியா அப்ப ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன் .."
"யாருடா அந்த பொண்ணு , சாமியாரையே திரும்பி பார்க்க வச்ச பொண்ண கண்டிப்பா பார்த்தாகணுமே "என்று ராகவ் வாயை பிளக்க..
"அவ சம்மதம் சொன்னா , வீட்டுக்கே கூட்டிட்டு வரேன் "
உன்ன யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா மாதவா
"அவ சொல்லுவா?
"ஹான் , பொண்ணு என்ன பண்றா .
மாதவன் தயக்கமே இல்லாமல் விபச்சாரம் என்று கூறிட, மாதவன் பேச்சில் லவ்ட் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த காயத்ரி முதற்கொண்டு அத்தனை பேரும் அதிர்ந்து, சில நொடிகள் அமைதியாக கடத்த..
"எனக்கு அவளை புடிச்சிருக்கா ,இல்ல ஒருவேளை அந்த காவ்யா மாதிரி இவளும் இருக்கிறதுனால என்னால இவள கடந்து போக முடியலையா.. இல்ல இவ மேல எனக்கு தனி அக்கறை, அன்பு வந்துடுச்சான்னு புரியல ... ஆனா சில நாட்களா இவ என்ன ஏதோ பண்றா ராகவ்
வாழ்ந்தா, இவ கூட வாழலாம் அப்படிங்கற ஒரு விருப்பம் எனக்குள்ள வர்றது தடுக்க முடியல...
அவ கஷ்டப்படும் போது , என்னவோ செய்யுது ராகவ் என்றவன் குரல் தடுமாற
"புரியுது மாதவன் , உங்களுக்கு புடிச்சிருந்தா அது யாராயிருந்தாலும் எங்களுக்கும் பிடிக்கும் என்ற காயத்ரி குரலில் பெருமூச்சு விட்டவன்...
அவளதான் விட்டுட்டேன் , இவளையாவது விட கூடாதுன்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருக்குது ..
"ம்ம்
"பாவம் காயத்ரி அவளுக்கு அழக்கூட, அவகிட்ட தெம்பு இல்ல... நான் அவளை பத்திரமா பாத்துக்குவேன் அவ மட்டும் ஓகேன்னு சொன்னா அவ இழுந்தது எல்லாத்தையும், என்னால மீட்டுக் கொடுக்க முடியாது.. ஆனா இனி எதையுமே இழக்காத மாதிரி அவளுக்கு நான் பக்கபலமா இருப்பேன்...
" நாங்க வேணும்னா வந்து பேசவா மாதவன்
ச்சேசே , இதுல கட்டாயப்படுத்தவோ... இல்ல அவளை வற்புறுத்துறதோ தப்பு காயத்திரி... அவ வேண்டாம்னு சொன்னா , நான் அவளை வற்புறுத்த மாட்டேன் அவ போக்குல விட்டுடுவேன்..
"உங்களுக்கு புடிச்சிருக்குல்ல மாதவன்
"எனக்கு பிடிச்சிருக்கு அவளுக்கு பிடிக்க வேண்டாமா? எனக்கு வேணும்னு தோணுது அவளுக்கு வேணும்னு தோண வேண்டாமா? நம்மளோட ஆசையை அவகிட்ட திணிக்க கூடாது இல்ல. அவளும் பலதை யோசிப்பா.. இன்னைக்கு ராத்திரி முழுக்க யோசிச்சிட்டு காலையில வந்து சொல்லுன்னு சொல்லி இருக்கேன்... அவ என்ன பதில் சொன்னாலும் சரிதான்..
" கண்டிப்பா உங்களுக்கு ஓகே தான் சொல்லுவாங்க மாதவன்
"ஹா ஹா கண்டிப்பா மாட்டேன்னு சொல்லுவா
"ஓஹோ அப்போ உங்க மிஸஸ் பத்தி அவ்வளவு அதிகமா தெரிஞ்சி வச்சிருக்கீங்க போல இருக்கு
"தெரிஞ்சுக்க ட்ரை பண்றேன்.. அவ ஓகேன்னு சொன்னா சந்தோஷம் , ஓகே இல்லைன்னு சொன்னாலும் சந்தோஷம்தான் காயத்ரி
"ஏன்டா ஞானி மாதிரி பேசுற , எனக்கு ஒழுங்கா பேசினாலே ஒன்னும் புரியாது.. அது என்ன ஓகே சொன்னாலும் சந்தோஷம் , ஓகே சொல்லலனாலும் சந்தோஷம் என்ற ராகவ் பக்கத்தில் இருந்து புலம்ப
"ஓகே சொன்னா எனக்கு சந்தோஷம் , ஓகே சொல்லலன்னா அவளோட சந்தோஷம் ,அதுல தான் இருக்குன்னு எனக்கு ஒரு சந்தோஷம் ...
ம்க்கும், ஆனா ஒன்னுடா அதிகம் படிச்சவங்க கூட பிரண்ட்ஷிப் வைக்க கூடாதுன்னு சொல்றது உண்மைதான் போல இருக்கு.. பேசுறதும் புரிய மாட்டேங்குது , செய்கிறதும் புரிய மாட்டேங்குது..
"ஆமா இவன் செய்றது எல்லாருக்கும் புரிஞ்சுகிட்டு தான் இருக்கு .. நீ அரை பைத்தியம், நான் குறை பைத்தியம் ஒத்துக்கடா" என்று மாதவன் கேலி செய்ய ..
"அது என்னவோ உண்மை தாண்டா காதலிச்சாலே பைத்தியமாகுறது ஆண்களோட சாபம்.. நீயும் எப்படியோ எங்க கூட சேர்ந்து நாசமா போக போற அதுக்கு வாழ்த்துக்கள் நண்பா" என்று ராகவ் அவனை வாரிவிட ...
"நானும் அந்த கூட்டணியில் சேர காத்துகிட்டு இருக்கேன் காவ்யா மனசு வச்சா...
"வைப்பா இல்ல தூக்கிடலாம் மச்சான்
"ம்ம் உன் உதவியே வேண்டாம் சாமி , வைக்கிறேன்..
என்ன கனவு காண போறியோ?
"கனவிலேயாவது அவ சிரிப்பாடா... அத பாக்கலாம் என்று மாதவன் போனை வைத்துவிட்டு அன்று அவள் உதட்டுச் சாயம் பட்ட சட்டையை எடுத்து படுக்கையில் போட்டான்..
"எப்படியும் நீ மாட்டேன்னு தான் சொல்ல போற, எல்லாத்தையும் தாண்டி போக பழகுன எனக்கு உன்னையும் தாண்டி போக கடவுள் பலத்தை கொடுக்கட்டும்... நீ என் கூட தான் இருக்கணும்னு அவசியம் இல்ல.. இந்த வலி, வேதனை இல்லாம சந்தோஷமா இருந்தா போதும் என்றவன் ... அந்த சட்டையை வெகு நேரம் பார்த்துக் கொண்டே இரவை கழித்துக் கொண்டிருந்தான்...
அங்கே காவ்யா வழக்கம் போல தொழிலுக்கு மரத்தின் பக்கத்தில் போய் நின்றவள் .அருகே வந்து கார் ஒன்று நின்றது.. வெள்ளி இரவு அவளும் மறைந்து நின்று மாதவனை பார்க்கதான் செய்து இருக்கிறாள் ..
அவன் வந்து நின்று யாரையோ தேடுவான் பின்பு காரை எடுத்து கொண்டு போவான் ... காவ்யா அவன் கார் போனதும் தான் வெளியே வருவாம் ...நம்மாள அவருக்கு எதுக்கு கெட்ட பேர், தொல்லை .. விலகி நின்று கொள்வது நல்லது என்ற எண்ணம் தான் .. ஆனால் , இன்று தான் புரிகிறது அவளைத்தான் தேடி தேடி வந்து இருக்கிறான் என்று ...
வந்து நின்ற காரில் இருந்தவன் காவ்யாவை மேலிருந்து கீழ் வரை நோட்டம் விட்டு கொண்டே
ரேட் என்ன, ஐந்நூறா ஆயிரமா , வேலைக்கு கிளம்பி வந்து விட்டாள்... ஆனால் வழி எங்கும் நடக்க நடக்க மாதவன் பேசியதுதான் அவள் ஞாபகத்தில் இருந்தது..
"என்கிட்ட விளையாடி பார்க்கிறாரா என்ன?அது எப்படி என்கிட்ட போய் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்டாரு.... இல்லையே , அவர் முகத்தை பார்க்கும் போது விளையாட்டு மாதிரி சத்தியமா இல்லையே ... அவருக்கு நான் என்ன பண்றேன் எப்படிப்பட்டவன்னு எல்லாம் தெரிஞ்சும் என்ன போய் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு ஏன் கேட்டார் ... மலைப்பாக இருந்தது ..
"ப்ச் அவருக்கு ஏதாவது குறை இருக்குமோ, ச்சே சே ஆளு அவ்வளவு கட்டுமஸ்தா , கெட்ட பழக்கம் இல்லாம இருக்கார்.. அது எல்லாம் ஒன்னும் இருக்காது ஒருவேளை பைத்தியமா இருக்குமோ மூளை இருக்கிறவன் என்ன போய் கல்யாணம் கட்டி வாழ நினைப்பானா? அப்படி அவரு எனக்கு வாழ்க்கை தர நினைச்சாலும் .. அதுல எப்படி சந்தோஷமா வாழ முடியும்னு நினைச்சார்...அவர் நல்லவர் தான் இல்லன்னு சொல்லல... ஆனா என்னால அவர் வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா? நான் சாக்கடை அழுக்கு என் கூட சேர்ந்தா அவர் வாழ்க்கை என்னாகிறது?? நெஞ்சு முட்டி முட்டி ஏதோ செய்தது ...காமம் பல கண்டவள், முதல் காதல் காண்கிறாள் திணறினாள்...
"கொஞ்சம் கூட அறிவே இல்ல ,எவ்வளவு பெரிய இடத்துல இருக்குற மனுஷன் ...போயும் போயும் என்ன போய் விரும்புறேன்னு சொல்றார் ... அவர் ஏதோ மனிதாபிமானத்தோட கேட்கிறார்...நாமளும் கல்யாணம் கட்டிக்கங்கன்னு சொன்னோம்னா, நம்மள மாதிரி சுயநலம் பிடிச்சவ வேற எவளுமே இருக்க மாட்டா.. ஐயோ பாவம் எங்கேயோ சந்தோசமா வாழ்ந்துட்டு போறாரு ... நாம வாழ்க்கை இந்த சாக்கடைதான்னு ஆகிப்போச்சு, அவர் வாழ்க்கையை ஏன் அதுக்குள்ள இழுப்பானேன் என்று வேலைக்கு வந்து நின்றுவிட்டாள்
"உன்கிட்ட தான் கேட்கிறேன் ரேட் என்ன ?
1000 ரூபாய் 500 ரூபா இப்ப கொடு, மீதி 500 காலையில கொடு என்று கையை நீட்டினாள்
என்னது ஆயிரம் ரூபாயா.. பாக்க அப்படி ஒன்னும் வொர்த்தா இல்லையே
ம்க்கும் , ஓசியா வரணும்னா உன் பொண்டாட்டி கிட்ட போ... எதுக்கு இங்க வந்து நிக்கிற ... ஆளையும் முகரையும் பாரு என்று திட்டிவிட்டு காவ்யா அடுத்த காருக்கு கை போட நகர.. மாருதி காரில் சாய்ந்து மாதவன் நின்று கொண்டிருந்தான்..
"இவர் இந்த ராத்திரி இங்க என்ன பண்றாரு.. விடமாட்டார் போல இருக்கே" என்று யோசித்துக்கொண்டே அவனை பார்க்காதது போல தலையை திருப்பிக் கொள்ள ... மாதவன் அவளை நோக்கி தான் நடந்து வந்து கொண்டிருந்தான் ...
சார் வர்றீங்களா? என்று இன்னொரு பெண் அவனை அழைக்க
"ம்ஹூம் அவங்க வேணும் என்று காவ்யாவை கை காட்ட
"பாருடா தோலு வெளுப்பா இருந்தாதான் கல்யாணமும் பண்ணிக்கிறாங்க, படுக்கவும் செய்றானுக.. ஏன் சார் இருட்டுல எல்லாம் ஒரே போல தான் இருக்க போகுது என்று அவள் திட்டி கொண்டே போக
இந்தா காவ்யா ரெண்டாயிரம் ரூபாய் .. வா என்ற மாதவனை பார்க்காது திரும்பி கொண்டாள்
வரல சார்
"ஏன் ...
"உடம்பு முடியல நான் வீட்டுக்கு போறேன் ..
"உடம்பு முடியலையா இல்லை என் கூட வர கூடாதுன்னு நினைக்கிறியா.. மாதவன் கையை நீட்டி அவளை தடுக்க
"இங்க பாருங்க டாக்ட்டர் சார், இந்த உடம்பு சுரணை கெட்டது ராத்திரி எவனாவது வெறியை தீர்த்தாதான் , அது திருப்தி அடையும்... ஐஞ்சு வருச பழக்கம், உடனே எல்லாம் மாத்த முடியாது... நீங்க நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல மரியாதையா வைக்கணும்னு நினைக்கிறீங்க ...சந்தோஷம்தான்... ஆனா அந்த நாய் எவ்வளவுதான் குளிப்பாட்டி பன்னீர் தெளிச்சு , நடு வீட்டுல வச்சாலும் மறுபடியும் நக்கத்தான் போகும்....
காவ்யா
"ரியாலிட்டி இதுதான் டாக்டர் சார், நான் நாய் மாதிரி தான் ... உங்களுக்கு என்ன சார் வந்தது , என்ன மாதிரி ஒரு அசிங்கத்தை கல்யாணம் கட்டிக்கிட்டு வாழனும்னு ... பேசாம போங்க சார் ,
நாளைக்கு வரை யோசி காவ்யா
"எதுக்கு நாளைக்கு வரைக்கும் யோசிக்கணும் இப்பவே சொல்றேன்... நீங்க தலைகீழா நின்னாலும் நான் உங்களை கல்யாணம் கட்டிக்க மாட்டேன்.... எனக்கு இந்த வாழ்க்கை தான் புடிச்சிருக்கு , இப்படியே வாழ்ந்துட்டு போறேன் என்று நாக்கு தடுமாற அவன் முகத்தையே பார்க்காமல் கையை கட்டிக் கொண்டு கடகடவென்று ஒப்பிப்பது போல் பேசினாள்
காலையில குட்டி தூக்கம் மதியம் கொஞ்சம் சாப்பாடு ,ராத்திரி ஒரு கட்டிங்... ஒன்னோ ரெண்டோ கிராக்கி , பணத்தை பார்த்தோமா அப்படியே போனோமான்னு வாழ்க்கை என்னைக்கோ ஒரு நாள் புழுத்து செத்து நடுரோட்டில கிடப்பேன்... யாராவது ஒருத்தன் தூக்கி போட்டுட்டு போவான் ... என் வாழ்க்கை இவ்வளவுதான் சார் , இந்த வாழ்க்கைக்குள்ள நான் யாரையும் அனுமதிக்க விரும்பல, அதுவும் நீங்க வேண்டவே வேண்டாம் ... தயவு செஞ்சு போங்க சார்.. என்ன இந்த அசிங்கத்துல இருந்து தூக்க நினைக்காதீங்க எதை பண்ண நினைச்சாலும் உங்க மேலயும் அந்த அசிங்கம் படும்..
"காவ்யா நான் "
"வேண்டாம் சார் , எதுவும் பேச வேண்டாம், நீங்க எனக்கு கடவுள் மாதிரி ... கணவனா எல்லாம் வேண்டாம் என்று காவ்யா தலைக்கு மேல் கும்பிடு போட ..
"நீ இதைத்தான் சொல்லுவேன்னு எனக்கு தெரியும் உன்னை சத்தியமா கம்பெல் பண்ண வரல.. இப்படி ஒரு எண்ணம் இருக்கு ஓகேவான்னு கேட்டேன்... எனக்கு நீ வலியில்லாம வேதனை இல்லாமல் இருந்தாலே போதும் காவ்யா .. எனக்காக ஒன்னே ஒன்னு பண்ணேன்
என்ன சார் ?
"இந்த தொழில்ல நீ சத்தியமா சந்தோஷமா இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் ..இத எனக்காக விட்டுவிடு இதுல சுயநலமில்லை.. நீ இனிமையாவது நிம்மதியா தூங்கணும்னு ஆசைப்படுறேன்... நீ நிம்மதியா இருந்தா அதுவே எனக்கு போதும் வரேன் என்று மாதவன் திரும்பி நடக்க ஆரம்பித்து விட ...அப்படியே பொத்தென்று எல்லைக்கல்லில் அமர்ந்தவளுக்கு .. ஓவென்று கத்தி அழ வேண்டும் போல் இருந்தது....அவன் வண்டியை எடுத்து கொண்டு நகர்ந்த அடுத்த நொடி
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள் ...
யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அரிய வாய்ப்பு??
கையில் கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் வைத்த அந்த கடவுளை சபிப்பதை தவிர அவளுக்கு வேறு எதுவும் சொல்ல முடியாத நிலை...
பெண் ஒன்றை இழக்க விரும்பாத போதுதான் கத்தி அழுவாள் அவளும் அவனை இழக்கவும் விரும்ப வில்லை அவனை காதலிக்கவும் முடியாது கத்தி அழுதாள்..