மீளா 5

Mill5

மீளா 5

5 மீளா காதல் தீவிரவாதி!!

நாச்சியார் தேவியின் முகத்தை பார்க்கவே முனியனுக்கு பயமாக இருந்தது.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மருதுபாண்டியன் கண்ணில் படாமல் இங்கே வந்து சேர்வதற்குள் அவர் பட்ட இன்னல்கள் அவருக்குதான் தெரியும்.. இத்தனை வருடமாக ஊரை விட்டு வெளியே வந்தது கிடையாது, எங்கே வெளியே வந்தால் தன்னை தொடர்ந்து வந்து நாச்சியார் தேவியை கண்டுபிடித்து விடுவானோ என்று மகளை கையில் கொடுத்து விட்டுப் போன நாச்சியார் தேவியை தேடி போகவும் இல்லை.. நாச்சியார் தன் மகளைத் தேடி வந்ததும் இல்லை .. அவளை வளர்த்து கொடு அவ்வளவுதான் என்பது போல் போனவர் இன்று தான் மறுபடியும் முனியனை பார்க்கிறார்.. 

"எப்படிலே அவனுக்கு அதுதான் என் பொண்ணுன்னு தெரியும்.. அதான் பத்து வயசுலேயே.. என் பொண்ணு செத்துப் போயிட்டான்னு இந்த ஊர் நடுவுலதானே காரியம் பண்ணினேன்.. பின்ன எப்படி அவனுக்கு உண்மை தெரிஞ்சது என கஞ்சா மூட்டைகளை கணக்கு பார்த்து கொண்டே முனியனிடம் கேட்க ..

"தெரியல தேவிம்மா, நானும் பத்து வயசுல பார்த்த பொண்ணுதானே எப்படியும் அவனுக்கு அடையாளம் தெரியாதுன்னு நினைச்சிட்டேன்.. அதான் என் மகளுக்கு சடங்குன்னு ஊரை கூட்டி செய்ய பார்த்தேன் .. எப்படி பொன்னிய அடையாளம் கண்டுபிடிச்சான்னு தெரியாது, வந்து தூக்கிபுட்டு போயிட்டான் .. கல்யாணமும் கட்டிப்புட்டான்" என்றதும்.. கழண்டு விழுந்த தன் முடியை கோதி கொண்டையாக போட்டவர் ,திரும்பி முனியனை பார்த்த பார்வையில் ஆள் அடிவரை ஆடிவிட்டான்.. அப்படியே அச்சு அசல் பெண் மருது பாண்டியன் பல்லை நரநர என கடித்துக்கொண்டு..

"அவனுக்கு பயந்து ஒன்னும் நான் இங்கன வந்து கிடைக்கலலே ,என்னைய பட்ட தீட்டிக்கிட்டு இருக்கேன்.. ஆள் அண்டாம வந்து இங்கன கிடக்கிறதுனால, நான் கோழை இல்லலே நேரத்துக்காக காத்துக்கிட்டு கிடக்கேன்.. ஊருக்கு வேணும்னா ஒதுக்குப்புறமா நான் இருக்கலாம், ஆனால் ஊருக்குள்ள என்ன நடக்குது, அவன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு ஒவ்வொரு விஷயமும் எனக்கு அத்துப்படிலே.. அருவாளை தீட்டி தயரா வச்சிருக்கேன் நாச்சியார் வருவா வரும் நேரம் நெருங்கிடுச்சி... "

"தேவிம்மா நீங்களாவது பொறுத்து போகலாமே அவர் உங்க தம்பி தானே??" என்றதும் அதுவரை மகளை வளர்த்த பாவத்திற்கு முனியனை ஒன்றும் செய்யாமல் இருந்தவர் .. மருது பாண்டியை தம்பி என்றதும் ஓங்கி முனியன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவர் ..

"கெட்ட வார்த்தை பேசாதலே, அவனை என் தம்பின்னு சொன்ன இந்த இடத்திலேயே கண்டதுண்டமா உன்ன வெட்டி போட்டுடுவேன், யாருக்கு யாருலே தம்பி?? .. கூத்தியாளுக்கு பிறந்தவனெல்லாம் எனக்கு தம்பின்னா, ஊர்ல அத்தனை பேரும் எனக்கு தம்பிதான் , என் அப்பன அறுத்து போடணும்.. தராதரம் இல்லாத எடத்துல கைய வச்சுகிட்டு, வச்சதுதான் வச்சான், விதைச்சோமா அறுத்தோமான்னு கூட தெரியாம கூவ போல வந்து நின்னுகிட்டு .. அவன் அம்மா பிள்ளையை சுமந்துகிட்டு வந்து இரண்டாவது சம்சாரம்னு உட்கார்ந்தா, அதை பார்த்துகிட்டு வழிச்சி நக்கிட்டு போக சொல்றியா என்ன?.. அவன் அம்மைய அறுத்து போட்டேன்ல, அவனையும், இவன் கூட்டாளி பயல்களையும் நாம் ஊர் முச்சந்தையில் விட்டு தலையை அறுக்கல, என் பேரு நாச்சியார் தேவி இல்லடா" என்று கொண்டையை ஏத்தி கட்டி, இடுப்பில் சேலையை சொருக, முனியனுக்கு வியர்த்து கொட்டியது.. 

 அரக்கனுக்கு குறையாத அரக்கி , அவனினும் ஒரு படி மேல்தான் இந்த நாச்சியார் தேவி என்பது அவருக்கு தெரியுமே.. 

ஏற்கனவே இது இரண்டும் போட்ட சண்டையில் ஒரு ஊரையே பஞ்சக்காடாய் மாற்றி விட்டார்கள், இன்னமும் அதே கோவத்திலேயே வெறிபிடித்து நிற்க .. எத்தனை தலை உருள போகிறதோ? என்று வந்த வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..

இங்கே விருமன் உட்கார்ந்து மொக்கையை போட்டுக் கொண்டிருந்தான்.. மருது தன்னவளை நோக்க ...குழலி முயலையும், புறாவையும் விடாமல் நெஞ்சோடு அணைத்து வைத்துக் கொண்டு, தானியங்களை எடுத்து பல்லில் அரைத்து நாவை நீட்டி குஞ்சின் அலகில் கொடுக்க .. இவனுக்கு இங்கே உடலில் புதுவிதமான அவஸ்தை உண்டானது .. அவள் குவித்த உதடுகள், நாவினை நீட்டி உணவினை அதன் அலகில் கொடுப்பது இவனை நிலையில்லாமல் நிமிரச் செய்தது சேதாரம் இல்லாது வைத்திருந்த ஆண்மை செக்கிழுக்க சிவந்து போனது... இயற்கையை சபித்தான், பெண்களுக்கு இந்த உபாதையை கொடுத்த கடவுளை சபித்தான் .. இந்த மூன்று தினங்களை சபித்தான்.. எப்போது மூன்று நாள் முடியும் என காத்திருந்தான்.. அண்ணனின் பார்வை மதனியை சுற்றி வட்டமடிக்க... 

'என்னதேன் வேற வேற வவுத்துல பிறந்தாலும், தான் அக்கா மகன்ற ரத்த ருசி இழுக்கத்தான் செய்யும் போலிருக்கு .. அக்கா ஆவாது, ஆனா அக்கா மவள மட்டும் ஆகும் போல , என்ற அக்கா மகன்னு சொன்னா தப்பு , அதையே என்ற பொண்டாட்டின்னு சொன்னா அது சரியாம், நாம ஏதாவது சொல்லப் போய், பிடரி வாக்குல அடிச்சிட்டா போச்சு , இவக வுடால நாம உட்கார்ந்து என்ன பண்றது அப்படியே இடத்தை காலி பண்ணுவோம் என விருமன் எழும்பி தன் வண்டி நோக்கி போக..

"ஏலே அப்படியே அந்த மருத்துவச்சி வீட்டுல குத்தக பணம் வாங்கிட்டு வந்துருலே.. போன மாசமும் தரல இந்த மாசமும் இழுத்தடிக்கிறான், கேட்டு பாரு இல்லன்னா நான் வாரேன்.". மனைவி பக்கத்தில் கண்ணிருந்தாலும் தம்பி எழும்பவும் அவனுக்கு வேலைகளை வரிசையாக கொடுத்தான்.. 

"ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவராதானே போயிட்டுருக்கு, நம்ம நிலத்துல அவன் விதைச்சா அவன் கிட்ட குத்தக பணம் வாங்குறதுல ஒரு முறை இருக்கு .. அவன் நிலத்துல அவன் விதைக்கிறதுக்கும் குத்தக வாங்குறோம் பாருங்க இதெல்லாம் எந்த கணக்குல சேர்க்கன்னு தெரியல அண்ணே.."

"காந்தி கணக்குல சேரு , என்னலே இப்போவெல்லாம் உனக்கு அடிக்கடி ஞானோதயம் வந்துருது.. விளக்கி கழுவி போட்ட மூளையை எடுத்து தலையில மாட்டிக்கிட்டியோ, "

ஹிஹி பல்லை காட்டினான்.. 

"இவங்க திங்கனுன்னா கூட எனக்கு கப்பம் கட்டணும்.. கட்டலைன்னா என்ன ஆகும்னு அவன்களுக்கு தெரியும்.. நீ எவனுக்காவது ஈவு இரக்கம் பார்க்கேன்னுட்டு பணத்தை விட்டுட்டு வந்தேன்னு வையி ,இந்த கல்லறை பக்கத்துல அடுத்து உனக்குதான்..

"அக்காவும் தம்பியும் இப்படி வரிசையா மரம் நடுறது மாதிரி கல்லறையா நட்டுகிட்டு இருங்க.. இங்க ஒன்னு போனா, அங்க ரெண்டு , அங்க ரெண்டு போனா இங்க நாலுன்னு மாத்தி மாத்தி கொல்றத ஒரு பொழுது போக்கா வச்சுக்கோங்க .. விளங்கிடும் ஊரு "என வக்கனை காட்டிவிட்டு போனவன், முதுகில் சுள்ளென்று ஒரு அடி விழ , தடவிக் கொண்டே விருமன் தன் அண்ணனை பார்த்தான்..

"தப்பு நடந்து போச்சுண்ணே இல்லன்னு சொல்லல உனக்கும் இழப்புதேன் , அதை யாரும் மாற்ற முடியாது அதுக்காக இப்படியே எத்தனை வருஷம்ணே ஒரு ஊர கைக்குள்ள வச்சிருப்ப.. பாவம் பொட்ட புள்ளைக படிச்சி வேலைக்கு போனாலே ஒரு குடும்பத்துக்குள்ள ஓட்ட முடியாது. நீ இத்தனை வருஷமா ஊரை விட்டு வெளியேவும் போக விடமாட்டேங்குற, படிப்பு, மருத்துவம் எதுவுமே இல்லாம ஊரை இருட்டடைய விட்டிருக்க.. யாரோ செஞ்ச தப்புக்கு அடுத்த சந்ததியை ஏன் அண்ணே இப்படி பாடா படுத்துற .. "மருதுவின் பார்வை தன் தம்பியை தீயாக முறைக்கவும்,, 

 "தெரியுதுண்ணே உன்ற கஷ்டம் .. அதை தப்புன்னு சொல்லல, ஆனா அந்த தப்புக்கு தண்டனை தப்புதான்னு ஏன் நினைக்கிற.. இப்ப நான் சொன்னா உனக்கு புரியாது.. ஒரு நாள் உனக்கு வரும் பாரு அப்ப தெரியும..

"அப்படி ஒன்னும் பல்ல கடிச்சுக்கிட்டு நீ ஒரு _யிரும் என் கூட இருக்க வேண்டாம் தப்புன்னு தெரியுதுல்ல பொட்டியை கட்டிக்கிட்டு கிளம்பு , நான் ஒத்தையில நின்னு பாத்துக்குறேன், மீசை முளைச்ச உடனே என்னையே எதிர்த்து பேச உனக்கு வக்கு வந்துட்டோ

 "அண்ணே கோவப்படாதீய, நீ செஞ்சது தப்புன்னுதான் சொன்னேனே தவிர உன்னை விட்டு நான் போவேன்னு சொன்னனா, இருந்தாலும் செத்தாலும் அது உன் கூடதாண்ணே, நீ தப்பே செஞ்சாலும் உன் தம்பியா உன் முன்னாடி நின்னு உனக்கு வர்ற அருவா வெட்ட நான் வாங்குவேனேத் தவிர , உன்னை விட்டு போக மாட்டேன் 

"பின்ன என்னதுக்குலே எனக்கு காது கேட்காதுன்னு தெரிஞ்சும் நிதமும் ராகம் பாடுத.."

"கூட இருக்கிறவன் மட்டும் நண்பனோ, உறவுகளோ இல்ல அண்ணே .. நீ தப்பு செஞ்சா, தப்பு செய்கிறன்னு சொல்றவன்தான் உண்மையான உறவுக்காரன், சொல்லாம விட்டுபுட்டு ஏன்டா என்கிட்ட நீ சொல்லலைன்னு, இன்னொரு நாள் கேட்டா .. அது என் மேல குத்தமா வந்து நிக்கும் அதனால சொன்னேன்.. அதுக்கு பிறகு உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை செய்.. "

"எல்லாம் எனக்கு தெரியும் குத்தகை வசூல் பண்ணிடு ..

"வேற அங்கனதேன் போறேன்.. இன்னொன்னு அண்ணன் , யாரு மேலையோ உள்ள கோபத்தை மதனி மேல காட்டிப்புடாத ..மதனிய உனக்கு எம்புட்டு பிடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும்... ஊருக்கே தண்ணீர் வரலேன்னாலும் மதனி வீட்டுக்கு ஆத்து தண்ணி போகும் .. ஊருக்குள்ள கட்டிப்பால் இல்லன்னு, வெளியூர்ல இருந்து பால்காரனை பிடிச்சு அண்ணி வீட்டுக்கு பால் அனுப்பிவிடுவ இதெல்லாம் மதனிக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் .. உன் தம்பி விருமன் கண்ணை விட்டு மறைக்க முடியாது.. அதனால வீராப்பு எல்லாத்தையும் கொஞ்சம் போல ஓரங்கட்டி வச்சிட்டு .. மதனிகிட்ட பேசி வாங்கி இரு.. பாவம் அது , ஸ்கூல் வாத்தியாரை பார்த்த மாதிரி உன்ன கண்டு அலறுறாங்க, எப்படித்தான் நாச்சிக்கு இது மகளா வந்து பிறந்துச்சோ, தெரியல.. அது என்னன்னா, அர்னால்டு தங்கச்சி போல சேலையை ஏத்தி கட்டிக்கிட்டு எவன்டா அங்க சத்தம் கொடுக்கிறதுன்னு ஏறி ஏறி மிதிக்கிது, இவங்க என்னன்னா ஓங்கி சத்தம் போட்டாலே மயங்கி விழுந்து கிடப்பாக போல , நாச்சி அருவாள் வெடிகுண்டு வச்சி விளையாடும் .. இவங்க பாருங்க புறாவையும் கோழி குஞ்சையும் வச்சி விளையாண்டுகிட்டு இருக்காங்க.. என்ன கணக்குன்னே புரியல, பிள்ளை பெக்க போன இடத்துல மாத்தி புள்ளையை எடுத்துட்டு வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்றதும் மருது மீசையை திருகிக்கொண்டே மனைவி திசை நோக்கி தலையை திருப்பினான் உண்மைதான் என்று மனம் ஒத்துக் கொண்டது...

அதனால்தான் என்னவோ தமக்கையை பிடிக்காது தமக்கை மகளை பிடிக்கும்... 

"சரிலே வேலையை போய் பாரு வெட்டி கதை பேசிக்கிட்டு" என்று அவனை விரட்டி விடும் 

நோக்கில் நின்றான் ... துள்ளி ஓடும் மனைவியை பிடித்து வேட்டையாட ஆசை இடம் கொள்ளாது வந்தது , நண்டு அடிவயிற்றை கிள்ளியது .... 

"ம்க்கும் இனிமே நின்னா எனக்கே கல்யாணம் பண்ண ஆசை வந்துரும் போல" என்று முணுமுணுத்த விருமன் ..

"மதினி போயாறன்" என்று குரல் கொடுக்க.. அவள் செம பிஸி அவள் உலகில்..

"இந்தாடி" என்றதும் புறாவை விட்டுவிட்டு வேடன் கையில் அகப்பட்ட புறா போல குழலி முழிக்க...

"உன்ற மதனி எதுக்கு அடி படுறாளோ என்னவோ இந்த முழிக்கு ஒரு நாள் அறை வாங்க போறா ... 

"யாரு நீங்க மதனியை அடிக்க போறிய...  

"ஏன் அடிக்க மாட்டேனா காலையில கூட கை நீட்டினேன்டா.."

"அடிச்சியளாக்கும்..

 அது ...

"ஹிஹி உங்களையே நீங்க அடிச்சிக்க வேண்டியதுதான், அவுக மேல உங்களால கை வைக்க முடியாது , அது என்ககு தெரியும் உங்களுக்குதேன் அது இன்னும் விளங்கல, விளங்கும் போது எதுவும் தப்பா நடந்திற புடாதுன்னுதேன் எனக்கு பக்குன்னு இருக்கு ..

"முடிச்சிட்டியான்ரா கிளம்பு" என விருமனை அனுப்பி வைத்த மருது மனைவியை நோக்கி நடை போட்டான் ..

காதலின் அர்த்தமே புரியாது காதலிப்பான்... காதல் இதுதான் என தெரியாமலே காதலிக்கப்படுவாள்...