ரணம்11
Ra11

11 ரண ரணமாய் !!
காலையில் காவ்யா கண்விழிக்கும்போது மாதவன் கிளம்பி சட்டையை இன் பண்ணிக் கொண்டு நின்றான் .. அவனை அப்படி பார்த்ததும் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டவள்..
"என்ன சார் கிளம்பிட்டீங்க போல இருக்கு
"பின்ன மணி பத்து.. மீட்டிங் இருக்கு அதான் கிளம்பிட்டேன் "
"என்னது மணி பத்தா, அய்யோ, ஏன் சார் எழுப்பல வேலைக்கு போகணுமே .. பத்து நிமிஷம் லேட்டா போனா கூட சம்பளத்தில் கை வச்சிடுவார் அந்த ஆளு , போச்சு போச்சு என தலையில் அடித்துக் கொண்டு காவ்யா எழும்பி அமர..
"அதெல்லாம் உன் முதலாளி கிட்ட பேசிட்டேன், லீவு வாங்கியாச்சு ரொம்ப பீல் பண்ணாம படுத்து தூங்கு...
லீவா எப்ப வாங்குனீங்க?
காலையிலேயே போய் வாங்கிட்டேன் நீ நல்ல தூக்கம்...
ஹிஹி தூங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்இஇ என்று அசடு வழிந்தாள்.. காலை நேர இதமான காற்றில் அவள் கூந்தல் புரண்டு முன் உச்சியில் விழ அதை அவள் கைகள் கோதி எடுத்து கொண்டையிட
அடடா!! கழுத்துக்கு கீழே சொர்க்கம் இல்லை அவள் விரல் கோதி எடுக்கும் அந்த கார் கூந்தல் தான் சொர்க்கத்தின் திறவுகோல்!!
ஒப்பனை இல்லாத முகத்தில் தடம் மாறிய அவள் ஒற்றை பொட்டு இன்னும் பேரழகு, முகம் கூட கழுவாத அவள் முகம் கலவியை விட சுகமாய் மனதில் மணம் பரப்பியது..
"என்ன சார் அப்படி பார்க்கிறீங்க
"ம்ம் நத்திங், மதியம் டான்னு 12 மணிக்கு வந்துடுறேன்.
சரி சார்
அந்த லைட் பக்கத்துல பணம் வச்சிருக்கேன்... ஏதாவது அவசரம்னா போய் வாங்கிக்க காவ்யா ..சாப்பாடு கொண்டு வர சொல்லி இருக்கேன் சாப்பாடு வந்துடும், வேற ஏதாவது வேணுமா என்று கிளம்பும் அவசரத்தில் அவளையும் யோசித்து நிற்கும் மாதவனை அப்படியே கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை... ஆனால் முடியவில்லை ..
கண்ணாடி பார்த்து தலையை சீவிக் கொண்டிருந்தவன் அவள் சத்தம் இல்லை என்றதும் தலையை திருப்பி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவை என்ன என்று புருவம் தூக்கி கேட்க
"ரொம்ப அழகா இருக்கீங்க சார் "
"அப்படியா எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே என்று தன்னை முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டான்..
உங்களுக்கு தெரியாது சார், இது அக அழகு எனக்கு மட்டும் தான் தெரியுது ..
உண்மையா சொல்லவா இந்த உலகத்திலேயே நான் முதல் முதல்ல ஒரு ஆம்பளைய பாக்குறேன்
"சரிதான் காலையிலேயே குவாட்டர் அடிச்சிட்ட போல இருக்கு .."
"அட போங்க சார் குவாட்டர் அடிச்சா இப்படி நின்னுகிட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா அப்பவே உங்க மேல ஏறி உட்கார்ந்து, நாலு லிப் கிஸ் கொடுத்து இருப்பேன் தெரியுமா??? என்றதும் மாதவன் முகம் சிரிப்பை சுருக்கிக் கொள்ள.. தன் மடத்தனம் உணர்ந்த காவ்யா உதட்டில் சுண்டி கொண்டு
"அய்யோ சாரி சார் , சாரி சார் ஏதோ வாய் தவறி பேசிட்டேன் நான் ஒரு மடச்சி, வாயில வந்ததை எல்லாம் பேசிடுறேன் என்று தலையில் அடிக்க..
"அப்போ இதுக்காகவே குவாட்டர் வாங்கி ஊத்தணும் போல இருக்கு" என்ற முணுமுணுத்துக் கொண்டு மாதவன் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டவன்
ஏதாவது அவசரம்னா போன் போடு , நேத்து வாங்கிக் கொண்டு வந்த கவர்ல போனும் இருக்கு யூஸ் பண்ண தெரியும் தானே??
"அதெல்லாம் தெரியும் சார் சீக்கிரம் வாங்க என்று வாசல் வரை மனைவி போல் வந்து வழி அனுப்பும் அவளுக்கு இந்த உணர்வு மிகப் பிடித்துப் போனது..
கதவை பூட்டிக்க என்று அவள் அருகே நின்று மாதவன் கிசுகிசுக்க...
அய்யய்யோ காதல் அவஸ்தை தந்தானே...
ம்ம் சரி சார்..
வரட்டா
ம்ம்
வரட்டாடி இஇஇ
என்ன சார் ??அவள் அதிர்ந்து பார்க்க
வரட்டான்னு கேட்டேன் ஏன் என்னாச்சு?ஊமையாக சிரித்தான்...
இல்லை டி போட்ட மாதிரி இருந்தது
இல்லையேடி
ஹான் இப்ப கூட போட்ட மாதிரி இருந்தது
சரிதான் காது போச்சு போல மேடம் , உள்ளார போங்க என்று சிரித்து கொண்டே போனவனை அவள் ஆர்வமாக எட்டி பார்க்க அவன் மறைந்து விட்டான் ..
ம்ம் திரும்பி பார்க்கவே இல்லை என்று சலிப்பாக திரும்ப போனவள் .. கீழ் இருந்து மேலே எட்டி பார்த்து கையசைத்த அவன் செயலில்
அய்இஇஇஇஇஇஇஇஇஇஇ என்று துள்ளி குதித்து
சார் டாட்டா ஆஆஆஆஆஆஆ என்று சந்தோஷமாக கத்த
ஏன்டி என்று வாயசைத்தவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்து
போயிட்டு வாங்க என்று அவளும் வாயசைக்க
ம்ம் என்று கண்ணால் விடைபெற்று போனான்...
ஒரு வருடம் அவள் மீது உண்டான காதல் எவ்வளவு ஆழமானது என்று அறிய அவன் எடுத்துக் கொண்ட அவகாசம்.. அவளுக்கு அவனை புரிய வைக்க தேட வைக்க, அவன் கொடுத்த அவகாசம்.. அவன் காதலிக்கிறான் என அறிந்து கொண்டான், இரவுகளை எல்லாம் ரணமாக்கிக் கொண்டிருந்தாள்.. நினைத்து நினைத்து சாக வைத்தாள், தேடித்தேடி ஓய வைத்தாள்..
இதே தேடல், இதே ரணம் , இதே ஆசை அவளுக்கும் வந்த அடுத்த நொடி அவன் கைக்குள் அவள் இருப்பாள்.. ஆனால் அதற்கு அவன், அவள் அருகே வேண்டும்... ஒரு நாள் அவள் மறுபடியும் அவனைப் பார்த்து விட்டாலும் .. அவள் வைத்திருக்கும் ரகசிய பெட்டகம் உடைந்து காதல் வெளியேறிவிடும்.. காத்திருந்து காதல் இரைப் பிடிக்க தேடி வந்து விட்டான் ... நாயகியை காதல் இரையாக கொத்தி தின்னாமல் இனி போக மாட்டான்....
அவனை ஒரு சணம் கூட மறக்க தோணாது வந்து கட்டிலில் படுக்கப் போனவள், மாதவன் படுக்கையில் கழட்டி போட்டு விட்டுப் போன உள் பனியன் கட்டிலில் கிடக்க,. அதை அப்படியே தூக்கி தன் முகத்தோடு வைத்து மூடிக்கொண்டவளுக்கு
அய்யோ இதன் பெயர் காதலா?? அது எப்படி காதல் எனக்கு வரும் ... காமத்தில் கரை கண்ட என் உடலுக்கு காதலில் சிலிர்க்க தெரியுமா? உடல் முழுவதும் எத்தனையோ காமக் கொடூரர்களுக்கு ஈடு கொடுத்த இந்த இதழும் உடலும் நடுங்குகிறதே அவன் அழுக்குத் துணி செய்யும் மாயாஜாலத்தில்..அவனையே கட்டி அணைப்பது போல ஒரு மாயை தந்தது ,
அந்த பனியன் கட்டிக்கொண்டு அந்த படுக்கையில் உருண்ட அவள் கண்கள் கிறங்கியது, உதடுகள் என்னென்னவோ கேட்டது... தான் யார் என்பதையே மறக்க வைத்தது அவன் ஒற்றை வியர்வை வாசம் என்று சொன்னால் மிகையாகாது ..
உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது... அவன் விட்டுப் போன மணம் உள்ளே போக போக.. அவனை சுமக்கும் இதயம் கனத்தது ..
'காவ்யா நீ ஓவரா பேராசைப்படற, காதலிக்கவோ காதலிக்கப்படவோ நீ தகுதி கிடையாது.. அதனால இந்த ஆசை எல்லாம் விட்டுட்டு , உன் வேலைய பாக்குறது தான் உனக்கு நல்லது என்று சகுனியாக அவள் மனசாட்சி வந்து குத்த.. சட்டென கையில் இருந்த அவன் பனியன் நழுவி கீழே விழுந்தது....
காய்வா உண்மை சுட்டு எச்சில் விழுங்க .. மனசாட்சி சொன்னதை யோசித்தாள்
சரிதான் சரியான முடிவதானே எடுத்தேன்... ஏன் மறுபடியும் அவரை கண்ட பிறகு மனம் தடுமாறுகிறேன்...
இந்த ஆசை எல்லாம் உனக்கு வரலாமா?? வந்தா அது தகுமா?? ஒழுங்கா இந்த ஒரு நாள் மட்டும் சந்தோஷமா அவர் கூட சுத்திட்டு, மறுபடியும் உன் வேலையை பார் அதுதான் நல்லது என்று ஆசையில் கொப்பளித்து நின்ற தன் இதயத்தை குத்தி உள்ளே அமுக்கி விட்டு, கண்களை இறுக மூடி படுத்துக் கொண்டாள்.. கனவில் வந்த கள்வனை எப்படி விரட்ட அங்கும் அவனே !!
"காவ்யா நான் 12:00 மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு தானே போனேன் ... இன்னும் தூங்கிக்கிட்டு இருக்க என்ற மாதவன் குரலில் படபடவென்று எழும்பி அமர்ந்தவள்
"சாரி சார் ரொம்ப நாள் தூங்கவே இல்லையா அதனால இப்ப எல்லாம் அதிகமா தூக்கம் வருது மன்னிச்சிடுங்க .."
"அதுக்கு எதுக்கு சாரில்லாம்.. சரி சரி சீக்கிரம் கிளம்பி வா , வெளியே எங்கேயாவது சாப்பிட்டுக்கலாம் எனக்கு எட்டு மணிக்கு பஸ் இருக்கு... அதுக்கு முன்னாடி ரிட்டர்ன் ஆகணும்ல"
அவன் போகணும் என்று சொல்லும் போதே இவளுக்கு வயிற்றுக்குள் பிள்ளை பெக்க போகும் தாயின் பரிதவிப்பு போயிடுவாரே, என்ன விட்டுட்டு போயிடுவாரே என்ற வருத்தம் நெஞ்சை முட்ட வைத்தது அவள் மட்டுமே அறிவாள்...
"சீக்கரம் ஓடி வா காவ்யா "
"ம்ம் என்று பாவாடையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்த காவ்யா குளித்து விட்டு தலையில் அடித்தாள் மாற்று துணி இல்லை ...
"ச்சை இப்ப சார் முன்ன இப்படி போனா என்ன நினைப்பார் நீ மானங்கெட்டவதான் ஆனா அவர் அப்படி இல்லையே.. என்ன மதிக்கிற மனுசன் தப்பா நினைச்சிட்டா என்ன பண்றது? என்று வெகு நேரம் யோசனையாக அவள் உள்ளேயே நிற்க
"காவ்யா வாட் ஹேப்பன்?"
"அது பாவாடை மட்டும் தான் கட்டி இருக்கேன் சார் மறதியாக வேற எதுவும் கொண்டு வரல அதான் ..என்று இழுக்க "
பாவாடை கட்டி இருக்க தான வா ..இல்லை எதுவும் எடுத்து தரணுமா ? அவன் குரல் வர
"இல்ல சார் நானே வரவா
"ம்ம் வா நோ ப்ராப்ளம்" என்றதும் அவள் வெளியே வர படுக்கையில் முதுகு காட்டி உட்கார்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த மாதவன் தலையை திருப்பி அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு ..
"ஒரு போன் பேசணும் நீ சேலை கட்டிட்டு கிளம்பு என்று போனை பேச ஆரம்பித்து விட..
சத்தியமாக அவளுக்கு பிரமிப்புதான்.. ஒரு ஆணால் இப்படி இருக்க முடியுமா? கண்ணாடி முன் நின்று சேலையை கட்ட கையில் எடுத்தவளுக்கு கை நடுங்கியது தன் அரைகுறை உடலை கண்டு ...
இதை அவர் அருவருக்கிறானா, அதனால் ஈர்க்க வில்லையா.. இல்லை உண்மையாகவே அவர் சொல்வது போல காமம் காதலோடு பிண்ணி பிணைந்த உணர்வுதானா??
அவன்,முன் சேலை மாற்றும் அவளுக்கு தான் நடுக்கம் வந்தது ... அவன் என்னவோ போனை பேசி கொண்டே அவளை நோக்கி வர.... அவள் கைக்கு பழக்கப்பட்ட சேலை கூட பல முறை தடுமாறியது.. கண்ணாடி வழியே தொண்டை ஏறி இறங்க மாதவனை பார்க்க ...
"ஓகே ஓகே நைட் வருவேன் காயத்திரி, அப்ப பேசுறேன் ச்சே ச்சே அப்படி இல்லை "என்று பேசியபடி அவள் பின்னால் வந்து நின்றவன்.. அவள் கழுத்து பக்கம் கையை நீட்டி ஹேங்கரில் மேல் புறம் கிடந்த சட்டையை எடுத்து மாட்டி கொண்டே போனை தொடர..
அவன் தன் பின்னே நிற்பதே அவளுக்கு என்னவோ செய்ய ..அவன் மூச்சு பலமாக அவள் முதுகில் அடிக்க.. காற்று இல்லாத கிணற்றுக்குள் கிடந்தது போல உணர்வு மூச்சு விட சிரம பட்டாள்
அய்யோ !! இவ் அவஸ்தை தாங்க முடியவில்லை பெண்ணுக்கு.. இது என்ன மானம் கெட்ட உடல் இப்படி தவிக்கிறது என்று புரியாது விழித்தாள்.. காமம் காணும் போது கூட மரத்து கட்டையாக கிடந்த உடல் அவன் மூச்சு காற்றுக்கே உயிர் பெற்றது ... உணர்வு கொண்டு தகித்தது காதல் கொண்டு அல்லாடியது.. அவயம் அத்தனையும் சொல் பேச்சு கேட்க மறுத்தது..
விசிறி மடிப்பு எடுப்பதும் விடுவதுமாக காவ்யா தடுமாறிட....
என்ன ஆச்சு? என்றான் மாதவன் அவள் பின்னே நின்று மெல்லிய குரலில் ...
"இல்லை சேலை வழுகுது சார் அதான்
ஓஓஓஓ எதாவது ஹெல்ப் வேணுமா... ஒருபக்கம் காயத்திரியோடு போனில் பேச்சு.. இவளிடம் வாயசைத்து மெளன பேச்சும் நடந்தது ..
ம்ம் பின் எடுத்து தர்றிங்களா? என்றதும் அவன் பின்னை எடுத்து அவளுக்கு கொடுக்க கொடுக்க எப்படியோ சேலையை கட்டி முடித்து திரும்ப போனை பேசி கொண்டே அவளை தோளில் கை வைத்து தடுத்து நிறுத்தியவன் ஏதோ வாயசைக்க ..
ஹான் என்று அவள் புரியாது பார்க்க ...
ப்ச் என்று சலித்து கண்ணாடி மீது அவள் ஒட்டி வைத்துவிட்டு போன ஸ்டிக்கர் பொட்டை எடுத்து காவ்யா நெற்றியில் ஒட்டி விட ... காவ்யா அதிர்ந்து போய் அவனை பார்க்க அவனோ போனில் கவனமாக இருந்தான் .... ஆனால் அவன் கையால் பொட்டை வாங்கிய அவளுக்கோ உடல் சில்லிட்டு போனது அறிவானா ??
இந்த உணர்வுக்கு பெயர்தான் காதலா?? அம்மாடி அடிவயிறு முழுக்க தடதடவென ஆடி , உடலே கூசி என்னவோ செய்ய வைத்து விட்டானே ..
"ஓகே காயத்திரி வந்த பிறகு பேசுறேன் என்று ராகவ் மனைவியிடம் பேசிவிட்டு போனை வைத்தவன்
"போவோமா காவ்யா...
ம்ம் போகலாம் சார் என்று அவன் பின்னால் நடந்த அவள் கையை இழுத்து தன் கையோடு பிடித்து கொண்டு
காதலிக்க கல்யாணம் பண்ணிக்க தான் மாட்டேன்னு சொல்லிட்ட, நட்பா இருக்கவும் தயக்கமா ?என்ற அவனிடம் எப்படி சொல்வாள்??
நட்பு புனிதமானது , அதில் களங்கம் விதைக்க நான் தயார் இல்ல என்று ...
அவனை காதலிப்பதை எப்படி மறைத்து நட்பு என்று பொய் மூலாம் பூச அவன் கைக்குள் தன் பிஞ்சு கைகள் விரும்பி அகப்பட , இந்த பயணம் அழகிலும் அழகு தான் ...
ஆசை வர வைக்கிறானே
வாழ ஆசை
அவனோடு குடும்பம் நடத்த ஆசை
அவன் பிள்ளைகளை சுமக்க ஆசை
காலம் எல்லாம் அவன் மனைவியாக வாழ ஆசை வர வைத்தே விட்டானே...