ரணம்8

Ra8

ரணம்8

8 ரண ரணமாய்!! 

கவிதா இந்த நேரம் வீட்டிற்கு வருவாள் என்று தெரியாமல் கணவனும் மனைவியும் அவளுக்கு வலை விரிக்க காத்துக் கொண்டிருந்தார்கள்

" இவ பாட்டுக்கு போய் எங்கேயோ ஹோட்டல்ல வேலை பார்க்கிறாளாம்.. இவள நம்பி தான் பிரிட்ஜ் பெட்னு வாங்கி போட்டு இருக்கோம்.. இதுக்கெல்லாம் இஎம்ஐ கட்ட வேண்டாம்.. பேசாம இரண்டாவது காரியையும் , டார்ச் லைட் பிடிக்க வச்சிட்டா என்னய்யா...என்ற தாயின் பேச்சில் நெஞ்சை பிடித்துக் கொண்டு கவி நின்றாள்..

"இதைத்தான் நான் முதல்ல இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன் .. நல்லா அழகா வேற இருக்கா நல்ல கிராக்கி போவா , அதுவும் புத்தம் புதுசா இருக்கிற பொண்ணுக்கு நல்ல விலை உண்டு .. நான் வேணும்னா ஆளை பார்க்கவா என்றதும் தான் தாமதம் அந்த இடத்தில் நிற்கவில்லை ... காவ்யா போன் நம்பரை மட்டும் கையில் அழுத்தி பிடித்துக் கொண்டு தன் அக்காவிடம் பேச ஓடி வந்து விட்டாள்

ஒன்னும் இல்ல கவிம்மா , நான் உனக்கு இருக்கேன் நான் பாத்துக்குறேன் ..

"மன்னிச்சிடுக்கா உன்ன நான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்ல

"விடு கவிம்மா நான் பாக்காததா, கேட்காததா ஹாஸ்டல்ல தங்கி படி நான் உன்னை பார்த்துக்கிறேன் என்று கூறிவிட ... கவி ஹாஸ்டலில் தங்கி படிக்க ஆரம்பித்தாள்... மாதவன் பற்றி அவளும் வாய் திறக்கவில்லை...

ஒரு வருடங்கள் கடந்து விட்டது காவ்யா வேண்டுமானால் மறைந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கலாம் .. ஆனால் மாதவன் அவள் நலமாக இருக்கிறாளா என்பதை பார்க்க தவறியது இல்லை அவள் வழியில் குறுக்கே போகவும்..

இல்லை ...

மழை சொரென பெய்து கொண்டிருந்தது.. ஹோட்டலில் கூட்டம் குறைவு தான் இவளுக்கு வேலை சமையல் கட்டில் சமையல் செய்வது ... 

காவ்யா "

"என்ன அண்ணன் ?? "

"இட்லி எல்லாம் அவிச்சாச்சா?

"ஆமா அண்ணன் , வடைக்கு மாவு எவ்வளவு போடணும்னு சொன்னீங்கன்னா , போட்டுடலாம் கூட்டம் வருமானு பாத்துக்கோங்க "என்று முந்தானை சேலையில் கையை துடைத்துக் கொண்டு வெளியே வந்த காவ்யா வேலை இல்லை என்றதும் சிறுது நேரம் வெளியே நின்று மழையை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க.... வெளுத்து வாங்கிய மழையில் ஒரு உருவம் கடை நோக்கி வர 

ஏன் சார் மழை நின்னதும் வர கூடாதா ? யாரோ என்று நினைத்து மழையில் மங்கலாக தெரிந்த உருவத்தை பார்க்க ...

மாதவன் அவன் !!!

டாக்டர் சாரா???என்று அவள் உதடுகள் முணுமுணுத்தது.. 

கடைக்குள் மழையில் நனைந்து தலையை உதறிக் கொண்டே வந்த மாதவனை பார்த்து அதிர்ந்து போய் அப்படியே கண்கள் கூட தட்டு முழிக்காது பார்த்துக் கொண்டு நின்றாள் ....அவனை நேருக்கு நேர் கண்டு தொண்டையில் எச்சில் இறங்க மறுத்தது..  

காதல்தான் பெரிய ரணம் என்று அவள் அறிவாளே?? 

"அடடே டாக்டர் சார் , நீங்களா? இங்க எப்படி வந்தீங்க...கடைக்குள் நுழைந்த மாதவனை கண்டு சாதாரண புன்னகையோடு வரவேற்றாள் 

"இதுவும் மேப்புக்குள்ள இருக்கிற ஒரு ஊர்தானே வரக்கூடாதா என்ன" என்று மாதவனும் இயல்பாக சிரிக்க 

அவனை இங்கே பார்த்த காவ்யாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை 

சார் நான் இந்த கடையில தான் சமையல் வேலை பண்றேன்... மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் உழைச்சி சம்பாதிக்கிறேன் .. விபச்சாரம் எல்லாம் இப்ப பண்றது இல்ல என்று அவள் சத்தமில்லாமல் அவனிடம் கூற ...

ஓஓஓ என்று தலையாட்டியவன், கையை கழுவிக் கொண்டு வந்து மேஜையில் அமர..

அண்ணே இது எனக்கு தெரிஞ்ச டாக்டர் சார் தான் நானே சாப்பாடு பரிமாறவா.... உங்களுக்கு என்ன வேணும் பூரி சுட சுட இருக்கும், நல்லா இருக்கும்..

அதையே கொண்டு வா அவள் பரபரப்பாக நின்றாள் சுட சுட பூரியை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னே வைத்தவள்

"இருங்க சார், உங்க கிட்ட நிறைய பேசணும், நான் முதலாளி கிட்ட ஒரு மணி நேரம் பெர்மிஷன் வாங்கிட்டு வாரேன் "என்று குடுகுடுவென ஓடிய காவ்யா முதலாளியிடம் கெஞ்சி கெஞ்சி ஏதோ கேட்டு விட்டு, ஓடி வந்து அவன் முன்னால் மூச்சு திணற அமர்ந்தவள்..

 எப்படி இருக்கீங்க சார் ?"

எனக்கு என்ன, எப்படி இருக்கேன் சொல்லு சாப்பிட்டபடியே புருவத்தை உயர்த்தி கேட்டான்..

உங்களுக்கு என்ன சார், எப்பவும் நீங்க ராஜா போல அழகாத்தான இருப்பீங்க ..

"ஓஓஓ அழகா இருக்கேன்னு நீ சொல்லிதான் தெரியுது 

"அட போங்க சார், நீங்க அம்புட்டு அழகா இருப்பிங்க தெரியுமா..

"ம்ம் சரி சாப்பிட்டியா??" அவளை சாப்பிட்டியா என்று கேட்க இந்த உலகத்தில் ஒருவன் உண்டு என்றால் அது அவனாக மட்டும் தானே இருக்கும் ...

பல நாட்கள் கேட்காத இந்த வார்த்தை இன்று காதுகளில் கேட்டு, இப்போதுதான் பசி அவள் வயிறு அறிந்ததோ?

"இல்ல சார் மதிய சாப்பாடு தான் சாப்பிடணும்.. காலையில சாப்பிட்டா கணக்குல பிடிச்சுக்குவாங்க, மதிய சாப்பாடு ஓசி .. அதனால மதியம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்றவள் வேதனை , எப்போது தான் தீரும் என யோசித்தானோ .. சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கைகள் தடுமாறி நின்றது ..

தம்பி ஒரு செட்டு பூரி கொண்டு வாங்க "

சொன்னேன்ல பூரி எல்லாம் நல்லா இருக்கும்னு இன்னும் வாங்கி சாப்பிடுங்க சார்.."

"எனக்கு இல்ல உனக்கு என்று பூரியை அவள் பக்கத்தில் நகர்த்தி வைத்தவன்

"சாப்பிடு அதுக்கு பிறகு பேசுவோம்" என்றதும் அவளுக்கும் பசித்ததோ, வேக வேகமாக பூரியை நாலாக மடித்து காவ்யா வாய்க்குள் திணிக்க இன்னும் இரண்டு என்று வாங்கி அவள் தட்டு காலியாக காலியாக வைத்தான்... அவள் மனதை அறிந்தவனும் வயிற்றை அறிந்தவனும் இவனையின்றி வேறு யார் இரூந்து விட முடியும்?

உங்க கிட்ட சொல்லாம கொள்ளாம வரணும்னு எல்லாம் நினைக்கல மாதவன் சார் .யோசித்து பார்த்தேன் உடம்ப வித்து பொழைக்கிறதும் எத்தனை நாளைக்கு , இந்த உடம்புல தெம்பும் அழகும் இருக்கிற வரைக்கும்தான் எனக்கு கிராக்கி.. அதுக்கு பிறகு ? பயம் வந்துடுச்சு, அதோட ஏன் வேலை செஞ்சு உழைச்சு சம்பாதிக்க கூடாதுன்னு ஒரு ஆசை . அம்மா அப்பா கிட்ட போய் சொன்னேன் அடி வெளுத்து எடுத்துட்டாங்க.. மாசம் 20,000 ரூபாய் வீட்டுக்கு வரலைன்னா.. உன் தங்கச்சியை இந்த தொழிலுக்கு அனுப்பிடுவேன்னு எப்பவும் போல மெரட்ட..

 20,000 ரூபா தான வேணும் அத நான் சம்பாதித்து கொண்டுவரேன். என் தங்கச்சியை எதுவும் பண்ணிடாதீங்கன்னு அவளை பொத்துனாப்ப கொண்டு போயி ஹாஸ்டல்ல சேர்த்துட்டு , கால் போன போக்கில் இங்கு வந்துட்டேன் மாதவன் சார்.. 

காலையில இங்க சமையல் வேலை செஞ்சா பத்தாயிரம் ரூபா தருவாங்க. ராத்திரி பெட்ரோல் பங்க் ஒன்னுல வேலை பாக்குறேன்.. அதுல ஒரு பத்தாயிரம் ரூபாய் வரும் ... ஏதோ ஓடுது.. நீங்க எப்படி இருக்கீங்க என்று ஆர்வமாக மாதவன் முகத்தை பார்த்தாள் 

அப்படியேதான் இருக்கேன் அதே வேலை அதே ஹாஸ்பிட்டல் .. அதே இடம் , அதே வீடு, அதே டாக்டர் கோட் வாரத்துக்கு ஒரு தடவை துவைச்சுன்னு லைப் போகுது ... புதுசா ஒரு வெள்ளை முடி மட்டும் வந்திருக்கு 

"ஹாஹா சார் நீங்க மாறவே இல்லை" என்று மனம் விட்டு சிரித்தவள்..

சார் 

ம்ம்  

"காவ்யா நேரம் ஆகிடுச்சு வேலையை போய் பாரு என்று முதலாளி கூறவும் காவ்யா பாவமாக மாதவனை பார்த்தவள். ..

"மாதவன் சார் இன்னைக்கு ஊருக்கு போயிடுவீங்களோ? வருத்தமாக அவள் கேட்க 

"இல்ல இங்க டாக்டர்ஸ் மீட்டிங் ஒன்னுக்கு வந்தேன் ரெண்டு நாள் இங்க தான் இருக்க போறேன்.. பக்கத்துல உள்ள ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன்.. ஒன்னும் பிரச்சனை இல்ல நீ வேலைய முடிச்சுட்டு நைட் ஹோட்டல் வா பேசலாம் 

இல்ல ஹோட்டலுக்கு நான் வந்தா யாராவது 

"உன்னை தப்பா நினைச்சுருவாங்கன்னு நினைக்கிறியா? 

ம்க்கும், என்ன தப்பா நினைச்சா எனக்கு என்ன சார் வருத்தம். நான் என்ன உத்தமியா பத்தினியா.. உங்கள ஏதாவது சொல்லிடுவாங்களோனுதான் 

யார் பேசுறது பத்தி நான் காதுல வாங்குனது இல்லன்னு உனக்கு தெரியாதா.

"அது சரிதான் மாதவன் சார் பத்தி எனக்கு தெரியாதா என்ன.. அப்போ தூங்கிடாதீங்க சார் இங்க வேலை முடிச்சுட்டு வர்றதுக்கு எப்படியும் பத்து மணிக்கு மேல ஆயிடும் வந்துடுறேன் "என்று சொல்லிக்கொண்டே காவ்யா வேலை செய்யும் இடத்திற்குள் அவனுக்கு கையாட்டியபடி ஓட மாதவன் நெஞ்சை தடவிக் கொண்டே பணத்தை எடுத்து சாப்பிட்டதற்கு பில்லை வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான்...

இவளுக்கோ கை கால் ஓடவில்லை

"ஐயோ மாதவன் சார மறுபடியும் பாத்துட்டேன்..

காதல் என்றால் ஒருவகை உணர்வு , நட்பு என்றால் ஒரு வகை உணர்வு ஆனால் மாதவன் மீது வந்திருக்கும் உணர்வு என்பது அதை சொல்லவும் முடியாது வெளிப்படுத்தவும் முடியாத ஒரு வகையான புது உணர்வு!!

அவனை பிரிந்து வந்து விட்டாள் , ஆனால் ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாள்.. அவன் நிழலில் மனைவியாக அந்தஸ்து அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.. ஆனால் அவன் நிழலில் இருந்தால் கூட போதுமே என்ற பேராசை!! ஆனால் அதற்கு கூட அவளுக்கு தகுதி இல்லை என்ற தரம் தெரிந்ததினால் என் மேல பட்ட அசிங்கம் அவர் மேல பட்டிடக் கூடாது..

அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்னா, அவர விட்டு நான் விலகி நின்னு அவரை ரசிப்பது தான் எனக்கும் அவருக்கும் நல்லது. என்று அவன் நன்மைக்காக அவனுடைய கௌரவத்திற்காக மரியாதைக்காக மட்டுமே அவனை விட்டு வெகு தூரம் ஓடி வந்தாள்... 

அவளுக்கு கிடைத்தது பொக்கிஷமான வாழ்க்கை!! உனக்கு நான் வாழ்க்கை தருகிறேன் என்று அவன் கூறும் போது இவளுக்கு அழுகை தான் வந்தது..

அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் என்னை ஏன் கடவுளே வைத்தார்.. இந்த உத்தமனின் மனைவியாக கைபிடிக்க முடியாத அவல நிலையை ஏன் கடவுளே எனக்கு கொடுத்தாய் ஏன் இவ்வளவு நல்ல ஆண் மகனை படைத்து வெகு தாமதமாக என் முன்னே கொண்டு வந்து நிப்பாட்டினாய் .... பல ஆண்களினால் சிதைந்த நான் எப்படி ஒரு உத்தமன் கையால் தாலியை நான் எப்படி வாங்குவேன் .. வாழ்ந்துவிட முடியுமா? இல்லை வாழ்ந்துவிடத் தான் இந்த சமுதாயம் என்னை விட்டுவிடுமா? என்னை கல்லெறிந்த இந்த சமுதாயம் அவரை பழி சொல்லாது விடுமா? அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு மனிதருக்கு என்னால் தலை இறக்கம் வேண்டுமா? என்னை ஒரு மனுசியாக மதித்த அவனுக்கு என்னையும் ஒரு பெண்ணாக மதித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்ட அவனுக்கு... நான் கொடுக்கும் பிரதி உபகாரம் , 

உன்னை விட்டு பிரிந்து போய் உன் வாழ்க்கையை கெடுக்காமல் இருப்பது தான் என்ற ஒன்றே ஒன்று மட்டும் தான் காவ்யா அவன் கண்ணை விட்டு மறைந்து ஓடி வர காரணம்..

ஆனால் மறுபடியும் அவனை பார்த்த அந்த நொடி கடவுளை நேரில் பார்த்த நொடி!!

தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை எழுப்பி கடவுள் எதிரே நின்றால் எப்படி இருக்கும்..

சாவதற்கு முன் மறுபடியும் ஒருமுறையாவது மாதவன் சார பார்த்துடனும் என்ற ஆசையில் இருந்தவளுக்கு அவனே கண் முன்னால் வந்து தோன்றியது போல சந்தோஷம் 

"நிறைய பேசணும் அவர் கூட பேசினா போதும் இன்னும் பத்து வருஷத்துக்கு இதை நினைச்சுக்கிட்டே வாழ்ந்திடலாம் என்று பூரிப்பில் எப்படி வேலை ஓடியது என்றே தெரியாத அளவிற்கு வேலை செய்து முடித்துவிட்டு இரவு காவ்யா அவன் தங்கி இருக்கும் ஹோட்டல் நோக்கி ஓட ஆரம்பித்தாள்..

இவ்வுலகம் அழகானது, அவன் அருகே இருக்கும் போது .. இவ்வுலகம் கொடுமையானது அவனை விட்டு விலகி போகும் போது!! 

அன்றும் ரணம் தான் அது வலித்தது .. இன்றும் காதல் ரணம் தான் ஆனால் சுகமாக அல்லவா இருக்கிறது.. 

ரணங்கள் மாறும் !!