ரணம்9

Ra9

ரணம்9

9 ரண ரணமாய்!!

அலை பாய்ந்த நெஞ்சை அமைதி ஆக்கிய புண்ணியவான் அவன் மட்டுமே..

சாயம் போன அவள் வானவில்லில் ஏழ் வண்ணம் தெளிக்க வந்தவனும் அவனே அவனே!! 

காவ்யா , தயங்கி தயங்கி அவன் அறை நோக்கி போனவள் மெல்ல கதவை தட்ட.. அவளுக்காக காத்திருந்தானோ அவனும்.. உடனே கதவை திறந்தான்

"உள்ள வரவா இல்ல வெளியே எங்கேயாவது போய் பேசுவோமா சார் "என்று அவள் நெளிந்து கொண்டே கேட்க 

விபச்சாரம் செய்யும் பொழுது கூட இப்படி கூசி கூனி குறுகவில்லை...  

அவள் காதலிக்க கூடாதா என்ன? அவள் காதலித்தால் அந்த காதல் கோவித்துக் கொள்ளுமா என்ன? இல்லை அவள் காதலுக்கு தகுதி இல்லாதவளா என்ன ? 

அவளுக்கு காதலிக்க அத்தனை தகுதியும் உண்டு, அவள் உடல் வேண்டுமானால் அழுக்காய் இருக்கலாம் பலபேர் தொட்டதாய் இருக்கலாம் ஆனால் அவள் மனதிற்குள் காற்று கூட புகுந்தது இல்லை.. அவள் மனதிற்குள் இதுவரை யாரும் நுழைந்ததும் இல்லை.. அவள் நுழைய விட்டதும் இல்லை அவள் முதல் காதலுக்கு சொந்தக்காரன் இதோ இவன் மட்டுமே!! அவனோடு சேர்ந்து வாழ்ந்தால்தான் அந்த காதல் பரிபூரணமாகுமா??

இல்லையே, அவன் வேறு யாரோடு வாழ்ந்தாலும் கூட அந்த காதலை அவளிடம் இருந்து எடுத்து போட முடியாது .. அவனோடு வாழத்தான் அந்த காதலை அவள் வெளிக்காட்ட வேண்டும், அவனை விட்டு பிரிந்து தனித்து வாழ அந்த காதலை அவள் யாரிடமும் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை ... அவன் மீது வைத்திருக்கும் காதல் இறுதிவரை இளமையான காதலாக அவள் மனதோடவே இருந்து. மனதோடவே மடிந்து அவள் சாகும் பொழுது அந்த காதலும் மடிந்து போகுமே தவிர .... அந்த காதல் ஒரு நாளும் குறையாது.. இளமை மாறாது, 

"இப்ப எதுக்கு இந்த நெளி நெளியுற கால்ல ஏதாவது புண்ணா ??

"ம்ஹூம் ..

 பின்ன ஏதாவது பூச்சி உள்ள நுழைஞ்சிடுச்சா..

"அய்ய அதெல்லாம் ஒன்னும் இல்ல மாதவன் சார், திடீர்னு உங்களை பார்த்ததும், ஏதோ தடுமாறுது யாராவது பார்த்து ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு ஒரு மாதிரி இருக்கு" என்று அவள் இன்னும் நெளிய .., அவள் தலையை தட்டி சிரித்தவன் ..

"உள்ள வாங்க மேடம்" என்று அழைக்க.. உள்ளே தயங்கி தயங்கி போனாள் 

மாதவன் படுக்கையில் தன் அருகே தட்டி

"உட்கார் பேசலாம் என்றதும் அவன் அருகே வந்து அமர சிறிது நேரம் அங்கே பேச வார்த்தைகளே இல்லை 

எப்படி இருக்கும் வார்த்தைகள் இல்லாத காதல் அது அதில் மூச்சுக்காற்றுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.. பலத்த அமைதிக்குப் பிறகு

"சார் உங்க மனைவியை கூட்டிட்டு வரலையா

"இல்ல என்றான்

" ஓ அப்போ கல்யாணம் ஆயிடுச்சா? என்றவள் குரலில் சற்று சுதி குறைந்து இருந்தது

என்னதான் அவனை விட்டுக் கொடுக்க முழுமனதாக சம்மதித்தாலும், காதலன் தனக்கு பிடித்தவன் இன்னொருவரின் உரிமையாளன் என்று நினைக்கும் பொழுது சிறு வலி அந்த நெஞ்சத்திலும் பாய்ந்து தான் போனது. 

"எத்தனை குழந்தைங்க சார்?

"மூன்று என்பது போல் விரலை தூக்கி காட்ட ..

"ஒரு வருஷத்துக்குள்ள மூணு குழந்தையா?

"ம்ம் , 

"எப்படி பார்த்தாலும் கணக்கு உதைக்குது,, பரவாயில்லையே சார் காரியத்துல ரொம்ப விவரமா தான் இருந்திருப்பீங்க போல இருக்கு.. 

மேடமை தூங்கவிடவே இல்ல போல.. மூணு பெத்து இருக்கீங்க " என்று அவள் சிரித்தாலும் அந்த சிரிப்பில் பெருவலி ஒன்று வந்து போகாமல் இருந்திருக்காது... அவள் தான் சிரிப்பில் வலியை மறைக்கும் அழகியாயிற்றே..

"ஏன் நான் தான் வேலை செய்யனுமா என்ன, மேடம் என்ன விட படு விவரம்.. ராத்திரி தூங்கவே விட மாட்டாங்க என்று சிரித்தவன், தன் பக்கத்தில் இருந்த கவர்களை எல்லாம் எடுத்து அவள் கையில் கொடுக்க

"என்ன சார் இது?

"உனக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன் நானும் உன்னை இங்க பார்ப்பேன்னு சத்தியமா நினைக்கல... உன்னை பார்த்ததும் இப்படியே விட்டுட்டு போக முடியுமா ... ஏதாவது வாங்கி தந்துட்டு போகணும்னு நினைச்சேன்... அதான் கடைக்கு போய் உனக்கு சாப்பிட, உடுத்த அப்புறம் ஒரு போன் வேணும்னா வாங்கிக்க ... வேண்டாம்னா எப்பவும் போல கம்பெல் பண்ண மாட்டேன் கொடுத்துடு" என்று அவன் நீட்டிக் கொண்டே இருக்க ...காவ்யா சிறிது நேரம் தாமதித்து

" மேடம் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு தாங்க சார் வாங்கிக்கிறேன் எனக்கு செய்யிறதுக்கு யார் இருக்கா .. நீங்க செஞ்சா சந்தோஷமா வாங்கிப்பேன்... ஆனா இதனால உங்க குடும்பத்துல எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாது இல்ல.. மேடம் கிட்ட "என்று அவள் தலையை சொரிய 

"மேடம் கிட்ட தானே பேசிட்டா போச்சு என்று போனை போட்டவன் ரிங் போய்க்கொண்டே இருந்தது இவளுக்கு தலையை தூக்கி அவன் காதலாக மனைவியோடு பேச போகும் பேச்சை கேட்க தயக்கம் என்பதை விட ... இதுக்கு மேல எந்த வலியையும் தாங்கும் இதயம் அவளுக்கு இல்லை

அவன் நல்லா வாழ்கிறான் என்ற சந்தோஷ படவா இல்லை ,நான் இல்லாமல் வாழ்கிறான் என்று வருத்தப்படவா என்று தெரியவில்லை.. அப்படியே எந்த உணர்வையும் காட்டாமல் அவள் நகத்தை கடித்துக் கொண்டே குனிந்து அமர்ந்திருக்க ... ஒரு குட்டி குரல் கேட்டது 

"அப்பா எப்பப்பா வருவ ? போய் ரெண்டு நாள் ஆகுது உன்னை பார்த்து பார்த்து கண்ணெல்லாம் வலிக்குது ... நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டியா என்ன? 

"எல்லாம் வாங்கியாச்சு உனக்கு அண்ணனுக்கு எல்லாம் வாங்கி அப்பா வச்சிட்டேன்... இங்க ஒரு ஆள பார்த்தேன் யாருன்னு சொல்லு பாப்போம்

"வேற யாரா இருக்கும் காவ்யாஅம்மா பார்த்தியா என்ற குழந்தையின் பேச்சில், கேட்டுக் கொண்டிருந்த காவ்யா தலையை தூக்கி ஆர்வமாக அவர்கள் பேச்சை கேட்டாள்

ஆமா 

"அவ கூட ஏன் பேசுற, அதான் விட்டுட்டு போயிட்டாள்ல, போனவளை விட்ரு என்ற பெரிய மனுஷி போல் மகள் பேச .அட்டகாசமாக சிரித்த மாதவன் ...

"விட்டுட்டு வர முடியலையே .. பார்த்தேன் அதான் அவளுக்கு கொஞ்சம் டிரஸ் சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்துட்டு வரலாம்னு நெனச்சேன் வாங்கி கொடுத்துட்டு வரவா?

" தாராளமா செய் நாம செய்யாம அவளுக்கு யாரு செய்வா என்ற மகள் பேச்சில் எப்படி என்பது போல் புருவத்தை உயர்த்தி காவியாவிடம் கேட்க..

உங்க மகளா? என்பது போல் அவள் கேட்டாள் 

"ஆம் என்பது போல் தலையாட்டினான்...

 நான் கேட்டேன்னு சொல்லு சரியா 

சரி பெரிய மனுஷி என்றதும் தகப்பன் மகளும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைக்க 

"போதுமா இப்ப வாங்கிக்கிறியா? 

" இல்ல பெரிய மேடம் கிட்ட எதுவும் கேட்கலையே

"கேட்கிறதுக்கு மேடம் இல்லையே என்றான் மாதவன் உதட்டை பிதுக்கி..

"ஹான் , என்னாச்சு ?அவங்களுக்கு என்ன என்று அவள் பதறிப் போய் மாதவனை பார்க்க 

"மேடமே இன்னும் வரலையே, 

"புரியல என்று அவள் யோசனையாக அவனை நோக்கி கொண்டு இருக்க 

" எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல "என்றவன் தலையணையில் சாய்ந்து அமர இவளோ அப்படியே எழும்பி நின்று விட்டாள் 

மகிழ்ச்சியா, இல்லை வருத்தமா, என்ன வகையான உணர்வு இது ?!

சந்தோஷமாக இருந்தது, அதே சமயம் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையா? இன்னும் தனியாகத்தான் வாழ்கிறானா? என்ற வருத்தம் 

ஒருவேளை என்னால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாரோ என்ற நடுக்கம் இப்படி பலவிதமான உணர்வுகளில் அவள் எழும்பி நின்றுவிட

 என்னாச்சு ??

"ஏன் சார் கல்யாணம் கட்டிக்கல 

"பொண்ணு கிடைக்கல 

"நிஜமாவா இல்ல 

"ம்ம் சொல்லு இல்ல , அவளை பேச ஊக்கப்படுத்தினான்..

"இல்ல என்ன நெனச்சுக்கிட்டு "

"ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல காவ்யா .. அதான் நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேனே, கட்டாயப்படுத்தி காதலோ கல்யாணமோ பண்ணுனா அது ருசிக்காதுன்னு... உன் இஷ்டப்படி நீ போன்னு சொன்ன பிறகு, உன்ன நெனச்சுக்கிட்டு வாழ்க்கையை வலிக்க வைக்க முடியாதுல்ல .. சோ அதெல்லாம் காரணம் இல்லை.. கல்யாணம் வேண்டாம்னு தோணுச்சு , பண்ணிக்கல இனியும் பண்ணிக்கிற ஐடியா இல்லை...

"ஓஓஓஓ 

நாளைக்கு மீட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன் ... முடிஞ்சா பிரீயா இருந்தா நாளைக்கு மதியத்துக்கு மேல லீவ் போடுறியா காவ்யா? எனக்கும் ப்ரீ தான், எங்கேயாவது போயிட்டு அதுக்கு பிறகு பஸ் ஏறலான்னு இருக்கேன்.. 

இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை ... ஆனால், உனக்கு வாழ ஒரு நாள் தருகிறேன் என்று சாகப் போகும் நோயாளியிடம் கடவுள் வந்து சொன்னால் எப்படி இருக்கும்? ஒருநாள் அவளுக்கு ஆயுளில் கூடுகிறது என்றால் அது ஏன் விடுவானேன் என்பது போல் ஒரு மனநிலை இருக்கும் அல்லவா? அந்த மனநிலை தான் அவளுக்கு இப்போது..

மனைவி இருக்கும் ஒருவனை அபகரிப்பது பாவம்..இப்போது தயக்கம் இல்ல, அவனோடு ஒரு நாள் காதலியாக இருக்கவும் ஆசை, ஏக்கம்..

சிறிது நேரம் யோசித்து விட்டு..

 நாளைக்கு மதியம் போகலாம் மாதவன் சார், நேரம் ஆயிடுச்சு நான் கிளம்பவா ?? என்றவளுக்கு கிளம்ப ஆசை இல்லை என்பதை அவள் பார்வையே சொன்னது ..

எப்படியும் ஹாஸ்டல்ல தானே படுக்க போற? 

"எங்க சார் ஹாஸ்டல்ல போய் படுக்க .. பெட்ரோல் பங்க்ல வேலை முடிச்சிட்டு அங்கேயே ஒரு நியூஸ் பேப்பர் போட்டு சுருண்டுருவேன்.. என்கிட்ட பாதுகாக்க என்ன இருக்கு, அப்படியே யாராவது எதாவது செஞ்சாலும் ஏற்கனவே அடிபட்ட உடம்பு தானே, இன்னொரு நாள் அடிபடும் அவ்வளவுதான் என்று சிரித்தாள் 

"பழைய வாழ்க்கையை விட மாட்ட போல இருக்கு அப்பப்போ நான் பழைய முதலமைச்சிருங்குற மாதிரி நான் பழைய விபச்சாரின்னு நீயே சொல்லிக்கிற "

"அதுதானே சார் உண்மை, 

" சில சமயம் பழயதை மறக்கிறது நல்லது காவ்யா சோ நீயும் அதை மறக்க பழகு.. 

"ம்ம்

"நைட் பெட்ரோல் பல்க்ல , வேலை பார்க்கிற கூலியை , நான் உனக்கு தந்துடுறேன்.. இங்கேயே படுத்து தூங்கு 

"என்ன சார் உங்க கிட்ட போய் அதெல்லாம் கேட்பேனா, படுன்னு சொன்னா படுத்துக்க போறேன் "கீழே போர்வையை அவள் விரிக்க போக..

" ஏன் இவ்வளவு இடம் இருக்கே , சும்மா பெட்லேயே படு "என்று மாதவன் விளக்கை அணைத்து அவளுக்கு தலையணையை நகர்த்தி போட.. அவனுக்கு தயக்கமே இல்லை.. அவளோடு படுக்க.. 

அவளுக்குத்தான் தயக்கமாக இருந்தது.. முதல் முறை ஒரு ஆணோடு,மதிக்கத்தக்க ஒரு ஆணோடு உடலை தேடாத ஒரு ஆணோடு, மனதை தேடும் ஒரு ஆணோடு படுக்க வெட்கமாய் இருந்தது, கூச்சமாய் இருந்தது 

இதெல்லாம் எனக்கு இருக்கிறதா என்பதே இந்த இரவு தான் அவளுக்கு புரிந்தது ..நெளிந்து கொண்டே வந்து ஓரமாக அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.. அவளை சட்டென இழுத்து தன் அருகில் போட்டவன் 

"ஒழுங்கா படு பெட்டை விட்டு கீழே விழுந்துட போற அவன் தொடுகையில் காவ்யா உடல் சிலிர்த்து போனாள் 

இது காதலா , இல்லை இதுவும் காமமா ?

அவள் விலை ஒரு இரவுக்கு ஆயிரம் ரூபாய் இது எல்லா ஆண்களுக்கும் தெரிந்த உண்மை.. ஆனால் அவள் விலை மதிக்கத்தக்க பொக்கிஷம் அவளுக்கு விலையே இல்லை என்பது அவன் மட்டும் தெரிந்த ரகசியம் அல்லவா?? 

அவள் செத்து போன உணர்வை ஆட்டிவிக்க அவன் காதலுக்கு மட்டுமே தெரியும் ...