மெய் பேசும் மித்தியமே-17

மெய் பேசும் மித்தியமே-17

மெய் பேசும் மித்தியமே-17

முருகேசனைப் பார்த்ததும் சூர்யபிராகஷ் கொஞ்சம் ஜெர்க்காகி அப்படியே உட்கார்ந்திருந்தான்.ஆனால் முருகேசனோ அமைதியாக அவன் கையில் இருந்த மெடிக்கல் கிட்டு, அவனோட ஸ்டெத்தஸ் என்று எல்லாத்தையும் டேபிளில் வைத்தான்.

 “நீங்க ஹாஸ்பிட்டல்லயே மறந்துவிட்டுட்டீங்க டாக்டர்.நம்ம அப்படியே தென்காசிக்கு போயிட்டோம்ல.இப்போதான் கிளின் பண்ணி ஹாஸ்பிட்டல்ல அடைச்சேன்.அதுதான் எடுத்துட்டு வந்தேன்.ஏதாவது எமர்ஜென்சிக்குத் தேடுவீங்களேன்னு கொண்டுவந்துட்டேன்”

“சரி முருகேசா.சாப்பிட்டியா?”

“இல்ல சார் இனிதான்.வீட்டுக்குபோய் சாப்டணும்”

“அப்போ இங்கேயே சாப்பிட்டு போக முருகேசா” என்று சூர்யா பிரகாஷ் அவனை சாப்பிட அழைத்தான்.

அவனோ ஒரு கசந்த புன்னகையோடு “வேண்டாம் டாக்டர்.அம்மா எனக்காக சாப்பிடாம காத்திருக்கும். நான் போறேன்” என்று கிளம்பிவிட்டான்.

சூர்யா உடனே எழுந்து வெளியே போனவன் “முருகேசா கொஞ்சம் நில்லு.உன்கிட்ட‌ பேசணும்” என்று அழைத்து நிற்கச் சொன்னான்.

“இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் டாக்டர். நாளைக்கு ஹாஸ்பிடல் வாங்க. அப்போ பேசிக்கலாம் டென்ஷன் ஆகாதீங்க. நான் இதை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க பயப்படாதீங்க”

“முருகேசா நீ சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்ல. ஆனால் நீ தப்பா நினைச்சாதான் எனக்கு பிரச்சனை. அதுக்காகதான் பேசணும்னு சொன்னேன் சரி நீ போ நாளைக்கு நானே உன் கிட்ட எல்லாம் விவரத்தையும் சொல்றேன்”

“என்னை மதித்து இவ்வளவு தூரம் சொன்னதே பெருசு டாக்டர். நீங்க எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. அதனால நீங்க எல்லாம் காரணத்தோடு தான் செய்வீங்க. இது உங்களோட வாழ்க்கையும்கூட அதனால் கண்டிப்பா நிறைய யோசித்து இருப்பீங்க. நீங்க ஏதாவது பார்த்து செய்யுங்க.இரண்டுபேரோட வாழ்க்கையும் நல்லா இருந்தால் சரிதான்” என்று சொன்னவன் அமைதியாக இறங்கி போய்விட்டான். 

இறங்கி அமைதியாக தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு போகும் முருகேசன் சூர்யா ஒரு சிறு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான். இருந்திருந்தான்.

தனது வாழ்க்கையே பறிபோனாலும் அந்த வாழ்க்கையை கெடுத்தவர்கள் கூட நன்றாக இருக்கவேண்டும் எனு நினைக்கும் முருகேசனை 

அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

இப்பொழுதும் நான் பேசியதை கேட்ட பின்பும் அதை யாரிடம் சொல்ல மாட்டேன் என்று நம்பிக்கை கொடுத்துட்டுப் போகும் இந்த மனிதர்கள்தான் நமது வாழ்க்கையில் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.வாழ்க்கை நமக்கு இன்னும் பல நன்மைகளை வைத்திருக்கும் என்கின்ற நம்பிக்கை கொடுத்துப் போகிறார்கள். 

இன்னும் மிச்சமிருக்கும் இந்த வாழ்க்கையை இப்படியான நல்ல மனிதர்களுடன் சந்தோசமாக வாழலாம் என்று நினைத்தவாறே வீட்டிற்குள் வந்தான்

லலிதாதான் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

சூர்யா கோபத்தில் “உங்களுக்கு என்னதான் பிரச்சனை?என் மகளுக்காக மட்டும்தான் அமைதியா போறேன்.இல்லைன்னா உங்க தயவே தேவையில்லைன்னு நானும் அவளும் எங்கேயாச்சும் போயிடுவோம்.நீங்க உங்க புருஷர்கூடபோய் சந்தோசமா இருங்க.எனக்காக யாரும் இங்க இருக்கவேண்டாம்”

“இப்போ வேற பிளான் போட்டுடல அதனால் உனக்கு நான் தேவையில்லாமல் இருக்கலாம்.அதுவும் உன் மகளை பார்த்துக்க ஆள் தேடிட்டல்ல அப்படித்தானே சூர்யா” என்று கொஞ்சம் காட்டமாகவே திட்டினார். 

இவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்த பூஜா அப்படியே சூர்யாவின் மடியில் இருந்து எழுந்து போய் சோபாவில் பாவம் போல் படுத்துக்கொண்டாள்.

அதைப் பார்த்த சூர்யாவோ உடனே பேச்சை நிறுத்திவிட்டு ஓடி சென்று பூஜாவை தூக்கி த்ன் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அவள் பிறந்ததில் இருந்தே அதிக சத்தம், சண்டை, சச்சரவு என்று பார்த்ததால், அவளுக்கு சத்தம், கூச்சல், சண்டையென்று வந்தால் பயந்து நடுங்க ஆரம்பித்து விடுவாள்.

இப்போது லலிதா ஏதோ பேசுவதற்கு தொடங்கவும் சூர்யா உடனே கையைக்காட்டி “அம்மா ப்ளீஸ் இதுக்கு மேல நான் எதுவும் உங்கக்கிட்ட பேச விரும்பல. ஆர்க்யூ பண்ணவும் விரும்பல. இதோட விட்ருங்க.இலைன்னா பழைய சூர்யாவாக என்னை மீண்டும் பாக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா? “என்று முடித்து விட்டான்.

அதில் லலிதா தனது வாயை மூடிக்கொண்டார்.

சூர்யாவும் பூஜாவின் தோளில் தடவி கொடுத்தவாறு அப்படியே அமைதியாகிவிட்டான்.

பூஜா இன்னும் அமைதியாக அவனது தோளில் படுத்திருந்தாள். அவள் அப்படித்தான் கொஞ்சம் நத்தையாக தனது ஓட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வாள் மீண்டும் சரியாகவே சிறிது நாட்கள் ஆகும். 

அதனால் அவளை தன் நெஞ்சிலயே படுக்க வைத்திருந்தான்.

‘நாளையில் இருந்து பூஜாவை ஸ்கூலுக்கு விட்றுவோமா?அங்க ரோஜா இல்லையே?ஒருவேளை வேற டீச்சர் இருந்து அவங்களை பார்த்து பயந்துட்டான்னா அப்புறம் ஸ்கூல் பக்கமே போகமாட்டாளே! அழுவாளே!” என்று மகளைப் பத்தி நிறைய யோசித்தான்.

அவளது முதுகை வருடியவாறே அப்படியே வெளியே நடந்தான்.பால்கனியில் நடந்தவன் மகளோடு மெதுவாக கீழே இறங்கி அங்கே இருக்கும் தோட்டத்தில் சிறு நிலவு வெளிச்சத்தில் நடந்துக்கொண்டிருந்தான்.

மீனாவும் குழந்தைகளும் அவங்க அம்மாவீட்டுல இருக்காங்க.இங்கே யாரும் இப்போதைக்கு இல்லை என்பதால் பாட்டு பாடியவாறே நடந்தான்.

அவனுக்கு உள்ளுணர்வு யாரோ நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ என்று உணர்த்த சுத்திப்பார்த்தான்.ஒருத்தரும் இல்லை என்றதும் மீண்டும் மெலிதான சத்தத்தில் இசைஞானியின் பாடலை பாடிக்கொண்டே நடந்தான்.

அவனது கால்கள் சட்டென்று நின்றுவிட்டது.அவனது கண்கள் கூர்மையாகி கீழ் வீட்டினுள் மெதுவாகத் திறந்திருந்த ஜன்னல் வழியாக ஊடுருவிப் பார்த்தது.

அவனையே இரு கண்கள் கவனித்துக்கொண்டிருந்தது.அவன் கூர்மையாக பார்க்கவும் தயங்கிப் பின் மெதுவாக ஜன்னல் கதவு அடைக்கப்பட்டது.

“இவ எப்போ வீட்டுக்கு வந்தா?வரமாட்டோம்னுதான சொன்னாங்க.இவமட்டும் வந்தாளா?இல்லை ஹிப்போபொட்டமஸ்ல எது வந்துச்சுன்னு தெரியலையே?தனியாக இருக்காளா?சாப்ட்டாளா?எதுவும் தெரியலையே?”என்று வேகமாக ஜன்னல் பக்கம் போனான்.

ஜன்னல் முழுசாக அடைப்படவில்லை என்பது தெரிந்தது.உடனே ஜன்னலை படாரென்று திறந்தான்.

உள்ளே ரோஜா உதட்டைக் கடித்துக்கொண்டு நம்மளைக் கண்டுக்கொண்டானே! என்று ஒருமாதிரி நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்து முறைத்தவன் “வெளிய வா” என்றான்.

“அம்மா உள்ள இருக்காங்க.அவங்களுக்கு கொஞ்சம் காய்ச்சல் வந்துட்டு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம்.நீங்க உங்க வீட்டுக்குப் போங்க.நான் ஜன்னலை அடைச்சிடுறேன்”என்று ஜன்னலை அடைக்கப்போனாள்.

அவன் வேகமாக கையை உள்ளே விட்டுத் தடுத்துப்பிடித்தவன்”உன்னை வெளிய வான்னு சொன்னேன்டி”என்று அடிக்குரலில் பூஜா எழுந்திரக்கூடாதே என்று அவள் மீது கோபத்தைக் காண்பித்தான்.

“யாராவது பார்த்திடுவாங்க.அண்ணன் தூங்கிட்டிருக்கு.பார்த்துட்டா வம்பாகிடும்”

“இப்போ நீ வெளிய வர்றீயா? கதைவைத் தட்டி எல்லோரையும் கூப்பிடட்டுமா?”

“யோவ் டாக்டரு லூசாயா நீ?”

“வெளிய வாடி”

“நான் என்ன உன் பொண்டாட்டியா வாடின்னு கூப்பிடுற?”

“இதுக்கு நான் ஆமான்னு சொன்னா என்னடி செய்வ?”

“என்ன?”

“வாடின்னா வா”என்று கோபத்தில் எகிறினான்.

உடனே உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு வேகமாக கதவைச் சத்தமில்லாது திறந்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“எதுக்கு வெளியே கூப்பிட்டிங்க?உங்களுக்கு அறிவிருக்கா?”என்று கீச்சுக்குரலில் எகிறியவளின் கையைப்பிடித்து இழுத்து தன்நெஞ்சோடுப் பிடித்துக்கொண்டான்.

“ஏய் ஏய் டாக்டரு என்ன பண்ற?இது தப்பு?”என்று எகிறவும் அவள் சத்தம் கேட்டு பூஜா முழித்து அவளைப் பார்த்ததும் அவளிடம் கையை நீட்டியவள் சட்டென்று அவளிடம் தாவி அவளு தோளில் சாய்ந்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

பூஜா அவளது தோளில் படுத்துக்கொள்ள சூர்யாவோ அவளை இன்னும் இரு கரத்தாலும் சேர்த்துப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவளுக்கு சத்தமாகப் பேச முடியவில்லை.பூஜா அரைத்தூகக்கத்துலகூட ரோஜாவின் வாசத்தை உணர்த்து அவள் தோளில் அழாது சாய்த்துக்கொண்டாள்.

இப்போ அவா முழிச்சிட்டான்னா அவ்வளவுதான்,ஒன்னும் பண்ணமுடியாது என்று கண்களை கோபத்தில் உருட்டி சூர்யாவை முறைத்தாள்.

அவனோ எதுவுமே சொல்லாது அவளது கண்கள் வழியாக அவளயு உள்ளத்திற்குள் ஊடுருவிக்கொண்டிருந்தான்.

அந்த ஒற்றைப் பார்வையில் தன்னைத் தொலைத்தவள் உடல் நடுங்க அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு அது ஏனென்று புரியாது வேதனையோடு பார்த்தாள்.அதைப் புரிந்துக்கொண்டவன்”பூஜாவைத் தா வீட்டுல படுக்க வைச்சிட்டு வர்றேன்”என்று மகளைத் தூக்கிப்போனான்.

“வேண்டாம் அவ என்கிட்ட இருக்கட்டுமே.நான் பார்த்துக்கிறேன்”

“எனக்கு உன்கிட்டப் பேசுணும்டி”

“நமக்குள்ள பேச ஒன்னுமேயில்லை.நான் பூஜாவைப் பார்த்துக்கிறேன்.நீங்க போய் தூங்குங்க”அவனிடமிருந்து விலகினாள்.

“இப்படி ஏதாவது பித்துக்குளிதனமா பேசுனன்னு வையேன் இப்பவே தூக்கிட்டுப் போய் மொத்தமா சோலியை முடிச்சிட்டுத்தான் விடுவேன்.இப்போதைக்கு அப்படி பண்ற உத்தேசமில்லை.எனக்கு உன்கிட்ட பேசணும்டி.நான் மொட்டை மாடியில் இருக்க.நீ பின்னாடியே வா”

“நீ போ நான் வரமாட்டேன்”என்றவள் அவனைப் பார்க்காது குனிந்துக்கொண்டாள்.

அவ்வளவுதான் கோபத்தில் அவளது முகத்தைப் பிடித்துத் தன்பக்கமாகத் திருப்பியவன்”வரமாட்டியா?”என்று ஒரு வார்த்தைத்தான் கேட்டான்.

அதற்குப் பதில் சொல்லாது பாவமாகப் பார்த்தவளிடம்”நான் மேல நிக்கிறேன்டி”என்றவன் வேகமாகப் போய்விட்டான்.

ரோஜா மெதுவாக பூனை நடை நடந்து பூஜாவை உள்ளேகொண்டு போய் தனது கட்டிலில் படுக்கவைத்தாள்.

அவளும் இவள் பக்கமாகச் சரிந்து அவளது புடவையைப் பிடித்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

அவள் விழுந்துவிடாது சுற்றிலும் தலையணைகளை அடுக்கி வைத்தவள் அவள் பாதுகாப்பாகத் தூங்குவாள் என்றநிலை வந்ததும் மெதுவாக கதவைத் திறந்துக்கொண்டு மாடிவழியாக மேலே சென்றாள்,

மகன் மேலே செல்லுவதையும் அடுத்து சிறிது நேரம் கழித்து ரோஜா மாடிக்குப் போவதையும் பார்ததவருக்கு இதுக்குமேல சூர்யாவை எதைச் சொல்லியும் தடுக்கமுடியாது என்னு முடிவாக உணர்ந்துக்கொண்டார்.

ரோஜாவை ஏனோ அவருக்குப் பிடிக்கவில்லை.ஆனால் மகனுக்குப் பிடித்திருக்கிறதே என்று அமைதியாகிவிட்டார்.

ரோஜா மாடியேறுவதைக் கவனித்தவன் அவள் அருகில் வந்ததும் அப்படியே வேகமாக இழுத்து பிடித்து அழுத்தமாகக் கட்டிக்கொண்டான்.

அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.அவளால் என்ன நடக்கிறது என்று உணர்ந்துக்கொள்ளுவதற்கு முன்பே அவனதுமுழு அணைப்பிற்குள் அடங்கியிருந்தாள்.

அவளது உடல் பயத்தில் நடுங்கியது.முதன்முதலாக ஒரு ஆணின் இவ்வளவு நெருக்கமான அணைப்பிற்குள் இருக்கிறாள்.அதுவும் தனக்கு உரிமையில்லாத,உரிமையாக்கிக்க முடியாத ஒருத்தனின் அணைப்பிற்குள் இருக்கிறாள் என்பதே பயத்தைக் கொடுத்தது.

அதைவிடவும் அந்த உரிமையில்லாதவன் தனது மனதிற்குப் பிடித்தவன் என்பதுஅதைவிட கொடுமையாக இருந்தது.

அவளது உடல் நடுங்குவதை உணர்ந்தவன் இன்னும் தனக்குள்ளாக அவளை நெருக்கி இறுக்கிப்பிடித்தான்.

இருவரது உடலுமே மற்றவரை அறிந்தது.

இது சரியில்லை என்று நினைத்தவள் அவனிடமிருந்து விலக முயன்றாள்.அவனோ அவளது முகத்தைப் பார்த்தான்.

அந்த இருளிலும் நிலவின் வெளிச்சத்தில் அவளது முகத்தின் வேதனையின் சாயலை உணர்ந்தவன்”என்னடி?”என்று உரிமையாகக் கேட்டான்.

“உன் பொண்டாட்டி பாரீன்ல இருக்குறாங்க.உன்னை நினைச்சிட்டிருப்பாங்க.இப்படி என்னை ஏன் கட்டிப்பிடிச்சிட்டு இருக்க.தப்பில்லையா?”

“என்னைப்பார்த்த பொண்டாட்டியை விட்டுட்டு ஊர்மேயுறவனா இருக்காடி?”

“அப்படியில்லை”

“அப்புறம் வேறெப்படியாம்?”

“தெரியல”

“இங்கப்பாரு என்னைப் பார்ததும் என்ன உணர்ந்தியோ அதுதான் உண்மை.உனக்கு என்னை பார்த்ததும் எந்த நிர்பந்ததுமும் இல்லாம வந்துச்சே அந்த அன்புதான் உண்மை.அந்த அன்பு மட்டும் உன்கிட்ட இருந்து எனக்கு வேணும்.கிடைக்கும்னு நம்புறேன்”

“எனக்கு ஒன்னுமே புரியலை.நான் நான் யாருன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.இப்படி இருக்கிறவா நம்ம எப்படி வளைச்சாலும் வந்திருவான்னு யோசிக்கிறீங்களா?உங்க மனைவிக்கு நீங்க துரோகம் பண்றீங்க.என்னையும் அப்படியாக்காதிங்க ப்ளீஸ்”என்று கண்கள் படபடக்க அவனைப் பார்க்காது பேசியவளின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.

“ப்ச்ச்.என்னடி உளறிட்டிருக்க.ஒருத்தி இருக்கும்போது இன்னொருத்தியை தேடுறதுக்கு பேரு வேற.நான் அதை என்னைக்கும்செய்யாமட்டேன்.என்மேல நம்பிக்கை இல்லையா?” 

“அப்போ பூஜா யாரு?”

“என் மகள்டீ?”

“ஐயோ குழப்பாதிங்க.எனக்கை பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு”

“எனக்கு இப்போதான் எல்லா பைத்தியம்மு தெளிஞ்சிருக்கு”

ஹ்ஹேன் என்று புரியாது முழித்தாள்.

அவளது இரு கன்னங்களையுமு தனது கைகளில் தாங்கியவன் ஹ்ஹேன்னு அதிர்ந்து பார்த்த அவளது விழிகளில் தன்னைத்தொலைத்தான்.

ஒருகையால் அவளயு முகத்தைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் இடையில் கையைக்கொடுத்து தன்பக்கமாக வேகமாக இழுத்தவன் கோபத்திலும் ஆற்றாமையிலும் துடிக்கும் அவளது உதடுகளை அப்படியே குனிந்து வேகமாகக் கவ்வ்யவன் இழுத்து தனது உதட்டிற்கும் பற்களுக்கும் இடையில் வைத்து அழுத்திப்பிடித்து தனது தலையை சாய்த்து லாவகமாக அவனது கன்னி முத்தத்தை அவளுக்குக்கொடுத்துக்கொண்டிருந்தான்.

தனது முதல் முத்த்தை தனக்குப் பிடித்தவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அதிர்ச்சியில் கண்களை திறந்து அதிர்ந்து அவனைப் பார்த்தாள் ரோஜா.

சூழ்நிலைகள் எதுவுமே அவர்களுக்கு சாதகமாக இல்லாதபோதும் இரு உயிர்களின் காதல் ஏக்கம் அந்த முத்தத்தில் கொஞ்ச்ம் அடங்கா திமிறில் உருமிக்கொண்டு வெளியே வந்திருந்தது!!