மீளா11

Milla11

மீளா11

11

 மீளா காதல் தீவிரவாதி!!

காதல் ரசவாதி, காதலிக்கு தீவிரவாதி .. இரவு முழுவதும் ஓயாமல் பெய்த மழையில் அடித்து போட்டது போல் இருவரும் அந்த மணல் பரப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர்.. மருது அவளை மொத்தமாக தூக்கி தன்மேல் போட்டு அணைவாக பிடித்துக் கொண்டவன், குளிர் அவளுக்கு அண்டாமல் தன் மேனியை அவளுக்கு போர்வையாக போர்த்தி, தன் நெஞ்சுக்குழியில் அவளை பாதுகாப்பாக படுக்க வைத்திருந்தான்.. 

விடியற்காலை சூரியன் உதிக்கும் நேரம் கோழிக்குஞ்சுகளின் சத்தம் காதில் கேட்டு , தூக்கம் கலைந்த மருது பாண்டி வாயை பிளந்துகொண்டு தூங்கும் மனைவியை மெல்ல முத்தமிட்டு அவளை அலுங்காமல் கையில் தூக்கிக் கொண்டு அறையில் படுக்க வைத்து , அவளோடு மறுபடியும் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டான்.. காலை சுள் வெயில் முகத்தில் பட ,, குழலி கொட்டாவி விட்டுக் கொண்டு எழும்பியவள் .. பார்த்தது மருதுபாண்டியன் முகத்தைத்தான் .. 

அம்மே என பயந்து போனவளுக்கு இரவின் சமாச்சாரம் நியாபகம் வந்து ஆடையை தேட அது எங்க இருக்கோ, அவன் விரல் பட்டு சிவந்து கன்றி கிடந்த மேனியை போர்வையில் மூடி அவனை விட்டு நகர போக .. 

ப்ச் படு கண்ணு அவளை தட்டிக் கொடுத்து தன் பக்கத்தில் இழுத்து படுக்க வைத்துக் கொண்டு அவள் கழுத்தில் முகத்தை புதைத்தவன்... கைகள் தூக்கத்திலேயே அவள் இளம் சதைகளை தடவி பார்த்தது.. கடுகு விதைகள் இரு விரலில் நசுங்கிட தூக்கத்தில் கூட போர் தொடுக்கும் போர்வாள் கண்டு அய்ய என்றாகி போனது ...ஆனால் அவளுடல் சிலிர்த்து அடங்கி கணவன் கையில் நெளிந்தது...முதல் தடவை பிடித்தமின்மை மறுமுறை ஓகே லெவல், விடியலில் அவள் காதில் கிசுகிசுத்து ஆழ ஊழும் போது நல்லாதான் இருக்கு அந்தரங்கம் நினைச்ச அளவுக்கு மோசம் இல்ல சாஃப்டா ஹேண்டில் பண்றான் என்று தேற்றி கொண்டாள் 

 மருதுவின் கையை மெல்ல விலக்கி அவளுக்கு பதிலாக தலையணைகள் போட்டுவிட்டு எழும்பி போய் குளிக்க போனாள்.. ஓடையில் இரவு கூடிய இடத்தை பார்த்து உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் பரவி மறைந்தது ... இன்னும் அவர்கள் கழட்டிப் போட்ட ஆடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் கூடலை ஞாபகப்படுத்த.. மெல்ல அதை குனிந்து எடுத்து ஓடை நீரில் துவைத்து காய போட்டு கொண்டிருக்க ..அவள் இடையில் சூடான கரங்கள் பதிந்து உன் கணவன் பின்னாடி வந்து விட்டான் என்று கூறியது... 

துணியை காய போட்டு கொண்டிருந்தவள் கைகள் அப்படியே நின்று விட்டது ..

எப்போடி முழிச்ச , என்னை எழுப்பியிருக்க வேண்டியதுதானே காலமே ஒரு ரவுண்டு போய் இருக்கலாம்ல , இப்போ ஒன்னும் கெட்டு போகல வா போவோம் என்று அவளை தூக்க போக..

அது ,, காலையிலேயே தம்பி வந்தாப்ல .. ஏதோ சோலி இருக்குன்னு சொன்னீங்களாமே உங்க கிட்ட ஞாபகப்படுத்த சொன்னார் .. விருமன் வந்து சொல்லிவிட்டு போனதை வாய்ப்பாடு போல கடகடவென ஒப்பித்து விட்டாள்...

அந்த சோலி கிடக்குது , அதை பொறவு பார்ப்போம் இதுதான் முதல்ல,

 குளிச்சிட்டேன் .... நாடி கிடுகிடுவென ஆடியது .... பல்லை பெயர்க்க போகிறான் என்று அவனை பார்க்க அந்த காட்டுமிராண்டி பயலும் அதற்கு தான் ரெடியாவது போல 

ஏன் திருப்பி குளிக்க மாட்டியோ? என்ற சத்தத்தில் மஞ்சள் தண்ணீர் தெளித்த ஆடு போல ...

குளிப்பேன் என்று தலையாட்டி மருது விரித்த கைக்குள் பதுங்கிக் கொண்டாள்...

என்னடி, நீயா வந்து கட்டிக்கிட்டு மாமான்னு என் காதை கடிச்சு உசுப்பி விட்டு ஓய்யாரமா மேல உட்கார்ந்து என் கண்ண திறக்க விடாம பண்ணுடி இப்படி ஓடி ஓடி ஒளிஞ்சா சப்புன்னு போடத்தேன் தோணுது ..வீட்டை , அவனை ஆளும் ராணியாக அவன் மனைவி வேண்டும் .. வெளியே அவன் ராஜாவாக , வீட்டில் அவள் ராஜ்ஜியம் வேண்டும் குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரி அலையணும் .. அண்ணாந்து குழலி அவனை பார்க்க..

மாமாவை பார்க்க பயமா இருக்கா ...

ம்ம் 

ஹான் ..

ம்ஹூம் 

திருந்த மாட்ட, கண்ணுக்குள்ள குண்டூசி வச்சி குத்த போறேன்டி , 

இனிமே அப்படி பார்க்கல ..நீங்க சொல்றது செய்றேன் திட்டாதீங்க என்ற மனைவியை அவ்வளவு பிடித்தது .. அவள் பின் மேட்டில் கைகொடுத்து தூக்கிய மருது ...

சரி திட்டாம இருக்கணும்னா எனக்கு காலையில ஒரு ஆட்டம் வேணும் ..

ம்ம் உடனே சம்மதம் வர ... மையல் பார்வை கூட அவளை மிரட்டி ஐயம்தான் வர வைத்தது.. அவன் பார்வையே அதுதான்.. அவன் என்ன செய்வான் வந்தா ரொமான்டிகு லுக் கொடுக்க மாட்டானா... 

அதற்குள் மேட்னி ஷோவில் கட்டையைப் போட விருமன் உள்ளே வந்த விடவும்... நழுவி குழலி இறங்கி விட

முதல்ல இவன்க அத்தனை பேரையும் வெட்டிவிடணும் அப்பதான், நான் அப்பாவாக முடியும் போலிருக்கு.. புது கல்யாணம் முடிஞ்சவன் அப்படி இப்படி இருப்பான்.. ஒரு நாலு நாளைக்கு வீட்டு பக்கம் வரக்கூடாதுன்னு தோணல் இல்ல.. பொசுக்கு பொசுக்குன்னு வந்து அண்ணே அதை பண்ணவா இத பண்ணவான்னு, இப்பதான் சந்தேகம் கேட்பான்க .. அந்த போனை என்ன _யித்துக்குடா வச்சிருக்கீங்க ..அதுல போன் போட்டு கேட்டா ஆகாதா என்று விருமனிடம் கேட்க,

அட போன் இருந்தா மட்டும் காணாது அண்ணே அது ஆன்ல இருக்குதா , இல்ல செத்துப் போய் கிடைக்குதான்னு பாக்கணும்.. நேத்து ராவுலயிருந்து உனக்கு போன் போட்டு பார்த்துகிட்டே இருக்கேன் .. போன் எடுக்கல.. அதேன் உன்னை தேடி வந்தேன்.. காலையில நீ தூங்குறன்னு மதனி சொன்னாங்க போயிட்டு இப்ப வர்றேன் ..

என்னடா சீக்கிரம் வந்த வேலையை முடிச்சுட்டு போ..ஆசையில் ஊத காற்று , உப்பு காற்றாக மாற அசைந்தது .. 

நாச்சி தொல்லைதேன்..  

சரிதேன், இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்ற, அதுக்காக விடிய காலை வந்து தொல்லை பண்ற 

ஏன் நீங்க சொல்ல மாட்டீங்க, வெயிலு மண்டையை பொளக்குது.. மணி ஒன்னு தாண்டிருச்சு .. இது உங்களுக்கு காலையிலேயா..

ஏன்டி எழுப்பி விட மாட்டியா.. எட்டி கடிகாரம் பார்த்து விட்டு மனைவியை கடிந்தான் 

இல்லை நான் எழுப்பினேன்..

எப்படி, இதே குரல்ல பூச்சி ராகம் பாடுனியோ.. முதல்ல பேசி பழகுடி .. என்னைக்கு கன்னம் கன்னம்னு அப்பு வாங்க போறியோ, தெரியல.. இந்த வீடுதேன் உனக்கு நிரந்தரம் .. முதல்ல அதை உன் தலையில ஏத்து .. ஏதோ விருந்தாளி போல சுத்திட்டு இருக்காத.. உன் ஆத்தா, அப்பன் எவன் வந்தாலும் நீ இந்த மருது எல்லைவிட்டு தாண்ட முடியாது புரியுதா? ..

ம்ம்.. 

அட எதுக்கெடுத்தாலும் உம் போடாதீக மதனி... சரி என்ன சமையல் இன்னைக்கு? நைசாக அண்ணனிடம் இருந்து அவளை நகட்டிவிட்டான்.. 

இப்பதான் தம்பி உலை வச்சிருக்கேன் .. மீன் குழம்புதான் வைக்கணும்.. 

குழம்பு நீ வை, பேர் நாங்க வைக்கிறோம் என்று மருது வேப்பங்குச்சி உடைத்து பல்லை விளக்க 

அதெல்லாம் மதனி டாப் டக்கராதேன் சமைக்கிறாவ ... எப்போ மதனி சாப்பாடு ஆகும் ... 

ரொம்ப பசிக்குதோ ,உக்காருங்க இப்போ செஞ்சு கொண்டாந்துறேன்... லென்த்தாக பேசிய மனைவியை பார்த்து பொசு பொசு என்று வந்தது மருது பாண்டியனுக்கு .. அவனிடம் ம்ம் ம்ஹூம் தவிர அடுத்த வார்த்தை பேசி யோசிப்பாள் விருமனிடம் சரளமாக பேச ..

ஆமா அப்படியே சோறு பொங்கி கிழிச்சிடுற மாதிரிதான்.. எப்படியும் கரிச்சி கரிக்கட்டையாதான் தர போற.. எங்கள நின்னு வாயை பார்க்காத உள்ளாற போ..

ம்ம் என்று அதற்கும் ம்ம் பாட்டு பாடி விட்டு சென்று விட்டாள்...

என்னடா இவ, இவள வச்சி என்னத்த காலம் தள்ள என ஓடையில் குளிப்பதற்கு மருது சட்டையை கழற்றி விட்டு உள்ளே இறங்க விருமன் கரையில் நின்று கதை பேசிக்கொண்டிருந்தான்.. குழலி மீனை அவர்களுக்கு சற்று தொலைவில் நின்று கழுவிக் கொண்டிருந்தாள்..

அண்ணே ஊர்ல ஒரு பய குத்தகை காசு தர மாட்டேங்கிறான்..

ஏனாம்?

எல்லாம் நாச்சியாலதான் , யாரை கேட்டாலும் எங்க தேவிம்மா வந்துட்டாங்க, இனி அவங்க சொன்னதுதான் செய்வோம்னு ராங்கா பேசுறாங்கன்னு... அதேன் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு என்ன பண்ணலாம்னு கேட்டுட்டு போக வந்தேன்.. இப்படியே போனா நம்ம மேல பயம் இல்லாம போயிடும் அண்ணே ... 

கேள்விப்பட்டேன் மறுபடியும் அவ ஆட்டத்தை தொடங்கலாம்னு நினைக்கிறா. அதுக்கு இந்த மருதுபாண்டி விடனும்ல... எவன் காசு கொடுக்க மாட்டேன்னு சொல்றானோ, அவன்கள தூக்கிட்டு வந்து இந்த மரத்துல தலைகீழாக கட்டி தொங்க போட்டு அடிக்கிற அடியில, வடியிற ரத்தத்துல அலறி ,தானே கொண்டு வந்து காசு கொடுப்பான்க.. நாம கொடுக்கிற அடியில இனிமே எதிர்த்து ஒரு வாய் பேசக்கூடாது , நாலு பேர மிதிச்சா, தானா 40 பேரும் திருந்துவான்.. 

சரி அண்ணே, அப்போ நம்ம பயல்கள கூட்டிட்டு போயி தட்டி தூக்கிட்டு வந்துடுறேன் ... 

அது போகட்டும் உன்ற புல்லட் டவுன் ஆஸ்பத்திரியில் நின்னிச்சு , என்ன சோலி அங்குட்டு ..எதுக்கு போன? என்றதும் தலையை சொரிந்து கொண்டே.. காரணம் யோசித்த விருமன்

இல்ல நம்ம கூட இருப்பானே அவன்..

பலர் இருக்கான் நீ எவன சொல்லுற... இந்தாடி சோப்பு எடுத்துட்டு வாடி, என மனைவிக்கு ஒரு சத்தம் கொடுக்க, இவள் மீனை அப்படியே போட்டுவிட்டு வள்ளுவர் பொண்டாட்டி வாசுகியாக சோப்பை எடுக்க ஓடிவிட்டாள்.. மீனை காக்கா தூக்கிட்டு போயிடுச்சு..

 பாரு உன் மதனி கூறுகெட்ட வேலையை.. மீனை போட்டுட்டு உள்ள போயிட்டா..

ஏம்ணே எப்ப பாத்தாலும் மதனிய குறை சொல்லிக்கிட்டே இருக்க... 

அவளுக்கு என்கிட்ட பேச வரல , உன்கிட்ட பேச வருது.. சிறுபிள்ளை போல புகார் கூறினான் 

ம்க்கும் பின்ன இப்படி ஏய் ஓய்னா யாருக்கு பிடிக்கும் .. உனக்கு தான் மதனியை புடிக்குதுல்ல ஆசையா கொஞ்சினாதான் என்னவாம்..

அது வந்தா நான் கொஞ்ச மாட்டேனா இவ்வளவு தான் வருது,, என்னவோ வீராப்பாவே திரிஞ்சிட்டோமா இந்த காதல் பார்வை வசனம் எல்லாம் நமக்கு அப்பேர்பட்டதாக இருக்கு, ஏதோ அலர்ஜியா தோணுது என்றவன் இரவெல்லாம் ,உன் கண்ணு அப்படி இருக்கு, உன் உதடு இப்படி இருக்கு என்று புலம்பி தள்ளியதை மறந்துவிட்டான் போல ...

அவள் சோப்பை எடுத்துக் கொண்டு வந்து புருஷனிடம் நீட்ட..

ஏன் அப்படியே தூரத்திலயிருந்து என் மேல வீச வேண்டியது தானே.. வந்து முதுகுல போட்டு விடுடி அதுக்கு தான் உன்ன கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்திருக்கிறது.. சும்மா வீட்ல வச்சு சோத்த வடிச்சு கொட்ட கிடையாது.. எத்தனை நேரம் சொன்னாலும் இப்படி கல்லு உருண்டை மாதிரி நிற்காத .ஃ இவன் விருப்பம் சொன்னவன் அவள் விருப்பம் கேட்கும் மதியற்று போனான் ... அவளுக்கும் விருப்பங்கள் இருக்கும் அதை நிறைவேற்றி கொடுத்தால் தன் விருப்பம் தன்னால் ஈடுடேறும் என தெரியாது போனான் .... 

 சரி அண்ணன் நீ குளிச்சுட்டு வா அதுக்குள்ள நான் பயல்கள கூட்டிட்டு ஊருக்குள்ள போய் , ஒரு திரை திரைச்சிட்டு வந்துடுறேன..  

போ போ வேற ஏதாவது விஷயம் கேள்விப்பட்டேன் வச்சுக்கோ மவனே என்ன பத்தி தெரியும்தானே என்று தம்பியை மிரட்டவும் மறக்கவில்லை..

அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா சும்மாதான் அந்த பக்கம் போனேன்.. ஏதாவது விஷயம்னா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா இதற்கு மேல் நின்றால் தன் வாயை தோண்டி விஷயத்தை எடுத்து விடுவான் என்று விறு விறுவென வெளியே கிளம்பி விட்டான்..

ஏன்டி உனக்கு ப்ளக்ஸ் கட்டவுட் எல்லாம் வச்சி கூப்பிட்டாதான் வந்து முதுகு தேச்சி விடுவியா... வாயேண்டி..

இல்ல மீனு..

அது அப்பவே காக்கா வயித்துக்குள்ள போயிடுச்சு நீ இங்க உன் புருஷனை பாரு என அவன் கிளுகிளுப்பா ஒரு குளியல் போட்டு வர ... விருமன் நாலு பேரை தூக்கி கொண்டு வந்து தலைகீழா தொங்க போட்டிருக்க , மடிப்பு கலையாத மருதுவின் வெள்ளை சட்டையில் அவர்கள் இரத்தம் தெறிக்க மருது அடிக்க ஆரம்பிக்க...  

அமைதியாக பார்த்து கொண்டிருந்த மனைவியின் கண்களில் அவன் அரக்க குலத்தின் தலைவனாகவே பதிந்து கொண்டிருந்தான்... 

மெளனம் திறக்காத , மருதுவின் காதல் மடை திறந்தால் மட்டுமே அவன் காதல் வாழ்க்கைக்கு காற்புள்ளி விழும் இல்லை முற்று புள்ளிதான்...

முற்று புள்ளி வைக்கிற தொழில்தான் உன் கைவசம் இருக்கே சீக்கிரம் முடிச்சு வுடு அதானே!!