மீளா 12
Mila12

Suji James:
12
மீளா காதல் தீவிரவாதி!!
எந்த சூழ்நிலைகளையும் விரும்பியே ஏற்றுக்கொண்டு கஷ்டமோ நஷ்டமோ அதை சிரித்தே பழகி கடந்து போகும் பக்குவம் குழலியிடம் இருக்கும் மிகப்பெரிய குணம் ...ஏன் எதற்காக என கேள்விகள் எழுப்ப தெரியாது இனி இந்த அறையில் தான் நீ இருக்க வேண்டும் என்று முனியன் சொல்ல சரி என்று அடைந்து கொண்டாள் ..நான் தான் உன் புருஷன் என்று மருதுபாண்டி வந்து அவளை ஆட்கொள்ள இதுதான் வாழ்க்கை என்று அதையும் ஏற்றுக்கொண்டாள்... ஒருவேளை தான் எழுப்பும் கேள்விகளுக்கு வலுவில்லை என்று நினைத்தாளோ என்னவோ .. வீரியம் குறைந்த காற்றைப் போல தன்னை எண்ணிக் கொண்டு அந்த வீட்டில் கணக்கச்சிதமாக மருது பாண்டியன் மனைவியாக கோலூச்சினாள்..அவள் தென்றல் அல்லவே புயல் ஓங்கி அடிக்கும் போது வலுவான தேக்கு மரம் கூட வேரோடு சரியும்
இருவரும் வாழ ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது.. இன்னும் மனைவி கசக்கவில்லை .. எவ்வளவு வேலையாக போனாலும் இரவு எந்த ஜாமத்தில் வந்தாலும் , மஞ்சனத்தி மரத்து நிழலில் படுத்து இளைப்பாறுவது போல குழலியை தேடுவது தினம் தினம் புதிதாக இருந்தது.. கட்டில் உடைந்து போகும் அளவிற்கு அவளில் மூழ்க தொடங்கினான்.. கிட்டத்தட்ட போதை போல மனைவி போதை அவனை தள்ளாட வைத்தது.. தலைக்கு பித்தம் ஏறி அந்த பித்தத்தை இத்தனை வருட கட்டுக்கோப்புக்கும் சேர்த்து மனைவியிடம் ஈடுகட்ட வேண்டும் என்று நின்றான் .. அவன் வேகமும் , தேவையும் நாளுக்கு நாள் கூடியது தவிர குறையவில்லை..
ஏழு நாட்களில் அவனோடு வாழ ஆரம்பித்து கண்டு கொண்டது இரவில் எந்த அளவிற்கு அவனிடம் இயைந்து போகிறாளோ அந்த அளவிற்கு பகலில் அவனிடமிருந்து வரும் கார சொற்கள் குறையும் அவன் தேவையை சிறப்பாக செய்து முடித்து விட்டால் காலையில் இவள் தவறையே செய்தாலும் கண்டுகொள்ளாமல் எருமைக் கடா போல பின் மேனியை கசக்கி விட்டுவிட்டு போவான்.. அவன் எதிர்பார்ப்பது அவளிடம் உடல் பசியை அல்ல, காதல் பசி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று உடலில் தேடிக் கொண்டு கிடந்தான்... அவனுக்கும் காதலிக்க தெரியவில்லை, அவள் காதல் இதுதான் என்று இவளுக்கும் புரிந்து கொள்ள முடியவில்லை முரண்பாடுகள் வந்து முட்டியது...
இந்தாடி இங்க வா என்று புருஷன் சத்தம் கேட்டு அடுக்களையில் அவனுக்கு ஆம்லெட்டுக்கு வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தவள் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள்.. அது என்னவோ கூப்பிட்ட குரலுக்கு அடுத்த நொடி அவன் முன்னால் நிற்கவில்லை என்றால் ஏதோ கொலை குற்றம் செய்தது போல வார்த்தை தர்க்கம் செய்ய ஆரம்பித்து விடுவான்..
கூப்பிட்டீங்களா இப்போது அந்த ம் போடுவது கொஞ்சம் குறைந்திருந்தது .. இரவு கூடும் போது அவன் கொஞ்சல் கேட்டு சற்று பயம் தூர தேசம் போக ஆரம்பித்தது.. வார்த்தைகள் பேசவும் கற்றுக் கொண்டாள்.. கொஞ்சம் தான் அவளை வச்சி பைட் சீன் எல்லாம் யோசிக்க வேண்டாம் ..
இந்தா ஆசாரி வந்திருக்கார் என்ன வேணும் மாடல் கொடு என்று வாசலில் நின்ற குழலி இடையை ஆசாரி கண் காணாது கிள்ளி கண்ணடித்துவிட்டு உள்ளே போக...
என்ன மாடல் கொடுக்கோணும்ங்க .. போகும் அவனை பார்த்து புரியாது, இடையை தடவி கொண்டே கேட்டாள்...
உனக்கு என்ன தேவைன்னு பார்த்து கொடுடி எல்லாத்துக்கும் என்ற முகரையை பார்க்காத என்று சட்டையை கழட்டி விட்டு காலை கழுவ...
நாலு அலமாரி வேணும் ,அப்புறம் ஒரு மேசை என்று முடிக்க .. மருது தலையில் அடித்து கொண்டு வந்தவன் ..
அவர் தங்க நகை ஆசாரிடி ..
அய்யய்யோ!! தெரியாதுங்க என்று நாக்கை கடிக்க அடேய் கொள்ள அழகுடா என்ற பொஞ்சாதி !!என்று கொஞ்சி கொண்டு ...அவள் காதில் ..
நைட் நகை போட்டுட்டு மேல படுத்தா குத்துதுடி ..
நேத்து சொன்னீங்கதான..
ம்ம் அதேன் சின்ன மாடல் பார்த்து வாங்கி , நிதமும் ஒன்னு போடு குத்தாத மாதிரி வாங்கு ... பாரு அடிவயிறுல தங்கச்சரடு குத்தி கிழிச்சிருக்கு ....நேற்று நவீன புரவி ஓட்ட கற்று கொண்ட போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் தடுமாறி அங்கு இங்கு சறுக்கி காயம் பண்ணியது பற்றி கூற குப்பென்று சிவந்து போனது அவள் வண்ணத்திருமேனி ...
உலகில் ரசிக்க லட்சம் இருந்தாலும் ,அவளை ரசிக்க மட்டும்தான் மீ விருப்பம் கொண்டான் ...
பார்த்து கொடு எனக்கு ஒரு போன் பேச வேண்டியது இருக்கு..என்று நகர போனவன் கையை பிடிக்க இது கூட விருப்ப பட்டியலில் சேர்ந்தது ...
என்னடி...
ஒத்தையா விட்டுட்டு போவாதிய பயமா இருக்கு நீங்களும் இருங்க ..
அங்கன தான்டி நிற்பேன் , விருமன் பயல இரண்டு நாளா ஆளைக் காணல எங்க போனான்னு கேட்டுட்டு வர்றேன்...
ம்ம்...என்று அவள் அஸ் யூஸ்வெல் டைலாக் டெலிவரி வர ... அவள் ஓண்டி வருவது மனதுக்கு ரம்யமாக இருக்க சரி போனா போவட்டும் என நினைத்து..
சரி பொறவு பேசுறேன் வா என்று வெளியே போக போக..
சட்டை போடல இருங்க எடுத்துட்டு வர்றேன் அவள் பார்த்த அவன் அழகு மேனி ஊர் பார்க்க கூடாது என ஏன் நினைத்தாள்?
ம்ம் இவன் ம்ம் போட்டான் மனைவி காதலியாக மாறும் தருணம் இவை.. இரு உடல் ஒட்டி பிணையும் கூடலை விட இது இன்பம் தந்தது உண்மை.. விரும்பினான் அவன் பலவீனப்புள்ளி காதல்..
எடுத்து வந்து போட்டு விடு ... குழலி போய் சட்டையை எடுத்து மாட்டி விட்டவள்...
நேத்து தோள்ல கடிச்சிட்டேன் போல, பல் தடம் கிடக்குது சத்தமே இல்லாமல் கூற தலையை திருப்பி பார்த்த மருதுவுக்கு காலடியில் பூனை உரசியது பாலும் தேனும் கேட்டு...
ம்ம்ஆஆஆஆ என்று சிணுங்கி உயரம் பறந்து விழுந்து அவன் தோளை பிடித்து கடித்து வைக்க அவனோ அவள் இடை பிடித்து இன்னும் துள்ள விட்டு தன்னை தூர்வார வைத்தது நியாபகம் வந்து இன்றும் பாழுங் கிணற்றில் தூசி மிதக்க ஆரம்பித்தது..
ஏன்டி அப்படி கடிச்ச வலிச்சது தெரியுமா , சுகத்தில் அல்லவா கண் சொருகி போனான் .. இரவுகள் சொர்க்கம் தான் இருவருக்கும் மறுக்க முடியாது அவளும் உதடு கடித்துதான் கிடப்பாள் ...குழலி கொஞ்சம் அவனை ரசிக்க ஆரம்பிக்க போகும்முன் இந்த எடர்வாடு பிடித்தவன் எவன் கையை காலையாவது உடைத்து கொண்டு நிற்க .. வரும் ரசனை பின்னங்கால் பிடிறியில் அடிக்க ஓடி விடும் ..
அவன் மீசையை திருகும் போது ஆசையும் கூடும் என அந்தரங்க மொழி அத்தனையும் கற்று கொண்டாள்...
என்னடி இன்னைக்கு ஒரு மாதிரி பார்க்கிற அவளும் இன்று ஒரு மார்கம் போல்தான் பார்த்தாள்... பின்ன இருக்காது ...
யாரையும் இங்கன வச்சி அடிக்காதீக, எனக்கு பயமா இருக்கு வியர்வை வடிந்து காலை கூடலில் விலகி விழுந்த மருது வியர்வையை தன் ரவிக்கை எடுத்து துடைத்து விட்டபடி கூற..
சரி அடிக்கல அடங்கியது சிங்கம் சிறு இடையில் அதுவே குழலிக்கு வெற்றிதானே ... அதனால் வந்த பார்வை சிலம்பம் அது ...சேலையை பிடித்து இழுத்து அவளை அணைக்க போக..
ஆசாரி என குழலி வாயசைக்க...
போன பிறகு ..
ம்ம் என்று இருவரும் ஊமை பாஷை பேசி முடித்து வெளியே வர மருது திண்ணையில் அமர்ந்து மாடல் பார்க்க அவன் அருகே தூணை பிடித்து கொண்டு வெறுமனே மனைவி சும்மா நிற்க..
நீதானடி போட போற நீயே பாரு...
நீங்க தான கழட்ட போறீங்க நீங்களே பாருங்க என்று அவன் காதில் கூறிவிட்டு நாக்கை கடிக்க, இவன் எங்கோ பறக்க ஆரம்பித்து விட்டான்..என் பொஞ்சாதிக்கு என்ன பிடிக்க ஆர்ம்பிச்சிடுச்சு.. ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் என்ற பீலில் புன்னகை விரிந்தது..( அடேய் புண்ணாக்கு தலையா விழுந்தா ஒரு எலும்பு மிஞ்சாது பக்கி, என்று நாம கத்துவது பயபுள்ளைக்கு கேட்கவே இல்லை.. )
இது குத்துமா இது, என ஆசாரியை குடைந்து , பத்து மாடல் ஆர்டர் போட ..( நமக்கெல்லாம் இப்படி புருஷன் கிடைக்க வாய்ப்பு இல்ல ராசா , )
போதுமாடி என்று அவனையே பார்த்து கொண்டிருந்த மனைவியிடம் கண்களால் காட்ட...
ஒரு இடுப்பு கொடி வேணும் என்று கிசுகிசுக்கும் அளவு தேறி விட்டாள் .. எலலாம் எதற்காக அவள் சொன்னாள் என அடிதடியை வெளியே தள்ளுபடி பண்ணியதுதான் காரணம்.. நான் பேசுறேன் நீ கேளு என்பது முதலாளித்துவம்.. காதல்துவம் என்பது நீயும் பேசு, நானும் பேசுறேன் .. பெஸ்ட் எதுவோ அது எடுத்துக்கலாம் என்பதுதானே, பய ராத்திரி கறி விருந்துக்கு ஆசைப்பட்டு ஓகே சொல்ல இவளுக்கு ஏக மகிழ்ச்சி பிரியாணி போடுறேன்டா, வித் லெக் பீஸோடு என கிறங்கும் பார்வை பார்த்து வைத்து அவனை கிறுகிறுக்க வைத்து கொண்டிருந்தாள் .. பல தடவை சோர்ந்து நிமிர்ந்த சோலை வன ஓட்டகம் நீர் அருந்த நெளிந்து படம் எடுத்து மேல் ஆடி வந்தது... ஆசாரிக்கு கட்டு பணத்தை கொடுத்து அனுப்பி வைத்து விட்டு மனைவியை கவ்வும் நோக்கில் அருகே வர,, விருமன் போன் வழி வந்து மண்ணை அள்ளி போட..
இரு வர்றேன் என வண்டியை எடுத்து கொண்டு ஓடினான் விஷேசமாக அவளுக்கு ஏமாற்றம் வந்தது .. அவன் கடித்து விளையாடும் மேக கூட்டம் கடுத்தது தடவினாள் வலி குறைய, உதட்டில் உள்ளேயே வைத்து சப்பி விளையாடுவான்.. குழலி அவன் தலையை கலைத்துவிட்டால் இன்னும் ரசனையாக ஊறிஞ்சு சப்புவான், அடி வயிற்றில் இன்பச் சேர்ப்பு கூடும் .. சலிப்பு கூட வந்தது .. இதுதான் தன் கூடு என்று உள்ளம் அறிந்தது, அவள் அறியாள்..
நடுயிரவு மருது பாண்டி உள்ளே வர ஒற்றை கையில் கட்டு போட்டிருத்தான்...
அய்யய்யோ என்னாச்சுங்க...என்று குழலி பதறி போய் கையை பிடிக்க, தட்டி விட்ட மருது
ப்ச் ஒன்னும் இல்லடி போய் குளிச்சிட்டு வர்றேன் சரியா போவும் என்று அவளிடம் கடுப்பை காட்டாது இருக்க கனபாடு பட்டு குளியலறை போக டவலை எடுத்து கொண்டு பரிதவித்து பின்னால் போன குழலி...
என்னாச்சி இவ்வளவு பெரிய காயம் வலிக்குதா ஏறிட்டு அவளை பார்த்தான்...
வலிக்குதா....
ம்ஹூம்...
நீ போ நான் குளிச்சிட்டு வர்றேன் ..
இல்லை நான் ..
போஓஓஓஓ
ம்ம் அவன் குளித்து உள்ளே வந்தவன், சட்டை அணிந்து கொண்டே படுக்கையில் படுக்க... யோசனையாக அவனை கண்டாள்..
என்னடி தூங்கு அவன் குரலில் வேறு ஏதோ இதுவரை காணா உணர்வு ....
ம்ம் இரவு அவளை சேராது அவனால் முடியாதே ஏன் இந்த விலகல் புரியவில்லை ஆனால் மனதில் பிசகல் வந்தது அவனை ஒட்டியே படுத்து கொண்டாள்....
இதயங்கள் உரசி சொல்லா காதல் உணர்வுக்கு வடிவம் கொடுத்து கொண்டுதான் இருந்தது ...