மெய் பேசும் மித்தியமே-13

மெய் பேசும் மித்தியமே-13

மெய் பேசும் மித்தியமே-13

கருப்பசாமியை அந்த சோபாவில் படுக்கவைத்துவிட்டு சூர்யாபிரகாஷ் அவரை பரிசோதித்தான்.அதற்குள் முருகேசன் ஓடிப்போய் அவனது மெடிக்கல் கிட்டினை கொண்டு வந்திருந்தான்.

அவருக்கு எமெர்ஜென்சிக்கான ஊசியெல்லாம் போட்டவன் குணசேகரனிடம்”காரை எடு உடனே பெரிய ஹாஸ்பிட்டல் கொண்டுப்போகணும்.க்விக்”என்று விரட்டினான்.

அதற்குள் ரோஜாவும் குணசேகரனும் “அப்பாவுக்கு என்னாச்சு?” என்று ஓடிவந்து பார்த்துவிட்டுக் கதறி அழுதாள்.

ஆளாளுக்கு வண்டியை எடுக்க அவ்வளவு பெரிய மனிதரை ஒற்றையாளாக டாகடர் தூக்கிட்டுப் போய் காரில் படுக்கவைத்தவன் அருகில் உட்கார்ந்தான்.

தென்காசியில் இருக்கும் ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்த்துவிட்டு அவனும் உள்ளேபோனான்.

அவனது ஐடிகார்ட் எல்லாம் காண்பித்ததும் அவர்களே பார்த்துவிட்டு உள்ளே அழைத்துவிட்டனர்.

கருப்பசாமிக்கு அதிர்ச்சியிலும் பதட்டத்திலும் ஹார்ட் அட்டக் வந்திருந்தது.

ஒருவழியாக அவரது அபாயக்கட்டதில் சூர்யா சரியான ட்ரீட்மெண்ட் கொடுத்து இங்கே கொண்ணுவந்துச் சேர்த்துவிட்டான்.

ரோஜாவைத்தான் சமாதானப்படுத்த முடியாது எல்லோரும் திணறினார்கள்.அழுதுகொண்டே இருந்தாள்.

அவரை ஐ.சி.யூவுக்குள் கொண்டு செல்லும்போதே அவரது காலைப்பிடித்துக்கொண்டு அழுதாள்.

“அப்பாஆஆஆ சீக்கிரம் எழுந்திருச்சு வந்திருங்கப்பா.நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்கச்சொன்னாலும் பண்ணிக்கிறேன்பா.என்னலாதானப்பா உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்?”என்று அழுதாள்.

அண்ணனுங்க இரண்டுபேரும் அவளைப் பிடித்து இழுத்தும் பிடிக்கமுடியவில்லை.

அருகிலே நின்றிருந்த சூர்யாதான்”எப்படி உங்கப்பா பொழைக்கணும்னு நினைக்கியா? இல்லை சீக்கிரம் போகட்டும்னு பிடிச்சி வைச்சிருக்கியா?கையை எடு அவசம் புரியாம அழுதிட்டிருக்க”என்று அவளை இழுத்து குணசேகரனிடம் தள்ளிவிட்டு இந்தா உன் தங்கச்சியைப்பிடிச்சிக்க என்றவாறே கருப்பசாமியோடு உள்ளே போய்விட்டான்.

குணசேகரன் ரோஜாவைப் பிடித்தவன் அங்கே இருந்த பென்ஞ்சில் அவளை இருக்கச்சொல்லிவிட்டுத் தானும் அதில் உட்கார்ந்துக்கொண்டான்.

மல்லிகாதான் பாவம் “என் புருஷனுக்கு என்னச்சோ?எப்படி குணமாகி வருவாரு” என்றுதொரு அங்கலாய்ப்பில் கண்ணீரோடு உட்கார்ந்திருந்தார்.

காலையில் அந்தக் குடும்பம் இருந்த சந்தோசமான மனநிலைக்கு அவர்கள் அதைவிட பத்துமடங்கு வேதனையில் இருக்கிறார்கள்.

அப்பாவுக்கு ஒன்னுமாகக்கூடாது எல்லோரும் பயந்துப்போய் வேண்டிக்கொண்டிருந்தனர்.

அவருக்கான ட்ரீட்மெண்ட் எல்லாம் முடிந்து ஒருமணி நேரத்துல டாக்டர்ஸ் வெளியே வந்தனர்.

சூர்யவும் கூடவே வந்தான்.

“பயப்பட ஒன்னுமில்லை ஒரு ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்ல இருக்கட்டும்.ஐ.சி.யூவில் அப்சர்வ்ல வைச்சிருப்பாங்க”என்று சொன்னான்.

அதற்குள் அந்த ஹாஸ்பிட்டல்ல உள்ள டாக்டர்ஸ் இரண்டுபேரும் அவனிடம் வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ரோஜாதான் ஓடிப்போய் ஐ.சி.யூ கதவின் வழியாக அவளது அப்பாவைப் பார்த்தாள்.

அவ்வளவுதான் அவரைப் பார்த்து சத்தமாகக் கதறி அழுதாள்.

சூர்யா திரும்பி வந்தவன்” அவரு காதுக்குள்ள போய் அழு.உடனே போய் சேர்ந்திடுவாரு.ஆளப்பாரு போய் அங்க உட்காரு.அவரு முன்னாடி போய் யாரும் அழுதிடாதிங்க.பார்க்க விட்டாங்கன்னா ஒருத்தர் மட்டும் உள்ளபோய் பாருங்க”என்னு சத்தம்போட்டான்.

‘ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எவ்வளவு தெளிவா ஆளுமையா நிக்கிறானே இந்த டாக்டருன்னு’ குணசேகரன் இப்போது தான் கொஞ்சம் நிதானமாக அவனையே பார்த்து இருந்தான்.

அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்று தெரிந்ததும் சூர்யா “என்ன ஆச்சு குணசேகரன் என்கிட்ட எதுவும் பேசணுமா? ஏதாவது சொல்லனுமா?” என்று கேட்டான்.

“ஒன்னுமில்ல டாக்டர் அப்பா பத்தி கேக்குறதுக்குத்தான் பார்த்தேன். நான் போய் இப்ப உள்ள போய் பாக்கலாமா?”

 “இப்போதைக்கு நீங்க மட்டும் உள்ளபோய் பார்த்துட்டு வாங்க.ஒரு ஆள் இங்க இருந்தா போதும்.மீதி எல்லோரும் வீட்டுக்குப்போங்க.அப்புறம் அவர் கண்ணு முழிச்சா எதையும் பேசக்கூடது.யாரும் அழவுக்கூடாது.அவருக்குப் பாதிக்கப்பட்டிருக்கது இதயம் புரியுதா?உங்க எமோஷனலா அவருக்கு முன்னாடி காண்பிக்காதிங்க”என்றவன் ஒரு முறை உள்ளபோய் பார்த்துவிட்டு வந்தான்.

“நான் கிளம்புறோன்.நீங்களும் வீட்டுக்குக் கிளம்புங்க.குணசேகரன் நீங்க சாப்பிடாம நிக்ககறீங்க.ஏதாவது வாங்கித் தந்துட்டுப் போறேன்.இப்படியே இருந்தா உங்களையும் உள்ள வைக்கிறமாதிரி ஆகிடும்”என்றவன் முருகேசனை அழைத்துக்கொண்டு வெளியே போனான்.

அண்ணன் தம்பி இரண்டுபேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்துக்குடுத்துட்டு மல்லிகாவையும் ரோஜாவையும் முதலில் வீட்டுக்கு கிளப்பினான்.

அவர்கள்இரண்டுபேரும் வீட்டுக்குப் போகமாட்டோம் அப்பாக்கூடவேதான் இருப்போம்னு அழுது ஆர்ப்பாட்டம் செய்ய வேறு வழியின்றி அங்கயே பேசி ரூம் எடுத்து அங்கே இருக்க வைத்தான்.

குணசேசரனிடம்”இப்படியே உடைஞ்சுப்போய் இருந்தால் எதையும் சரிபண்ணமுடியாது.அவரு நீங்க இருக்கத் தைரியத்துலதான் உள்ள படுத்திருப்பாரு.எல்லோரையும் தேற்றி எடுத்து வீட்டுக்கு வாங்க.நான் நைட்டு வந்துப் பார்க்கிறேன்”என்று வீட்டுக்குக் கிளம்பினான்.

அவனுக்கு அதுக்கு மேல அங்கிருக்க கஷ்டமாக இருந்தது.அதைவிடவும் அவனுக்கு இப்போது ஒரு சிகரட் தேவைப்பட்டது அதுதான் வெளிறே வந்தான்.

அவன் சிகரட் வாங்கி தனியாகப்போய் நின்று ஊதிக்கொண்டிருக்க முருகேசன்” டாக்டருக்கு இந்தப்பழக்கமெல்லாம் இருக்கா?”என்று அவன் சிகரட் பிடிக்கிறது பிடிக்காது கேட்டான்.

“ஏன் உனக்கு பிடிக்காதா?”

“இதெல்லாம் ஒரு காலத்துல நான் ஊதித்தள்ளினது டாக்டர்.நம்ம ஒரு கெத்துன்னு நினைச்சு பண்றதெல்லாம் ஒத்தைக் கல்யாணத்துல முடிஞ்சிப்போயிடும்.என் பொண்டாட்டி என்னைப் பிடிக்காம ஒரே மாசத்துல ஓடிப்போயிட்டா.அத்தோட எல்லாத்தையும் விட்டுட்டான்”

“உனக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சா?”

“ஏன் டாக்டரு உங்களைவிடவும் வயசுக்கு மூத்தவன் கல்யாணம் முடியாமலா இருக்கும்”

“அதுசரி”என்று புகையை ஊதித்தள்ளியவன் இதுபோதுமென்று அணைத்துவிட்டு காருக்கு நடந்தான்.

ஹாஸ்பிட்டல் உள்ளே ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு காரை எடுத்தான்.அவனருகில் இருந்த முருகேசன்தான்”பாவம் கருப்பசாமி ஐயா.இந்த ஊரே மெச்சும்படி ரோஜாவுக்குக் கால்யாணம் பண்ணி வைச்சாரு.ஊரு கண்ணே அவமேல பட்டுட்டுப் போல. மாப்பிள்ளை வீட்டுக்கு கோவில்படடிக்குப் போகும்போது அன்னைக்கு இராத்திரியே ஆக்ஸிடெண்டாகி ஆறேழு பேரு செத்துப்போயிட்டாங்க,அதுல ரோஜாவோட புருஷனும் மாமனார் மாமியார் குடும்பத்துல நாலுபேரும்னு மொத்தமாக போய் சேர்ந்துட்டாங்க”

மொத்தக் குடும்பமுமா?இவா வயசுலயே இன்னொரு பொண்ணும் இருந்துச்சுல்ல.அந்தப்பொண்ணுதான் அப்போ செத்ததா?”

“உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்?”என்று முருகேசன் ஆச்சர்யமாகக் கேட்டான்.

“நான் டாக்டர் படிப்பை முடிச்சுட்டு கோவில்பட்டி ஹாஸ்பிட்டல்ல ஒரு வருஷம் வேலைபார்த்தேன்.அப்போதான் இந்த ஆக்ஸிடெண்ட் கேஸ் வந்துச்சு”

“ஓஓ அப்படியா பாவம் சார் ரோஜா.அது கருப்பசாமி ஐயாவோட சொந்த அக்கா குடும்பம்தான்.அவங்களும் கோவில்பட்டுக்கு பக்கத்துல உள்ள ஊர்க்காரங்கதான்.மகனுக்கு ஜாதகத்துல இதுக்கு அப்புறம் கல்யாணமே நடக்காதுன்னு சொல்லிட்டாங்கன்னு தம்பி மகளையே பொண்ணுக்கேட்டுக் கல்யாணம் பண்ணி வைச்சாங்க.அவ்வளவுதான் மொத்தமா போய் சேர்ந்துட்டாங்க.இப்போ ரோஜா பொண்ணுதான் உயிரோட செத்திட்டிருக்கு” என்றவனுக்கு கண்கள் கலங்கினது.

எட்டு வருடங்களுக்கு முன்பு…

கருப்பசாமியின் வீட்டிற்கு அவரது அக்கா பவானி அவரது கணவர் அழகர்சாமியும் வந்திருந்தனர்.

“என்னபண்ணையாரே உங்க ஊருவிட்டு எங்க ஊருக்கு விஜயம் செய்திருக்கியலே என்ன விசயம்?”

“பொண்ணெடுத்த ஊருக்கு சும்மாக்கூட வரக்கூடாதா? என்ன விசயம்னு கேட்க மாப்ள.வீட்டு மருமகனுக்கு தலைவாழ இலை விருந்து வைக்க வேண்டாமா?”

“அதெல்லாம் சிறப்பா செய்திடலாம்.வந்த விசயத்தை சொல்லுங்க.யக்கா பவானி நீ அப்படியெல்லாம் சும்மா என் வீட்டுக்கு வரமாட்டியே என்ன தயங்கித் தயங்கி நிக்க.பட்டுன்னு விசயத்தை போட்டு உடைச்சிடு”

“அதில்ல மாப்பிள்ளை நீயே இப்போதான் மூத்த மகனுக்குக் கல்யாணத்தை முடிச்சிருக்க.அடுத்தும் ஒரு கல்யாணம் சட்டுன்னு பண்ணுவியான்னுதான் யோசிக்கேன்”

“கருணாவுக்குலாம் இப்போ முடிக்கிறாதா இல்லையே மச்சான்”

“யோவ் மாப்ளே நம்ம பட்டு மருமகளுக்கு கல்யாணம் முடிக்கிற எண்ணமேயில்வையா? உம்ம மருகனுக்கு அவளைத்தான் கேட்டு வந்திருக்கோம்.நீரு என்னடான்னா கருணா மருமகனை யோசிக்கீரு”என்னு சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார்.

“பட்டுமாவை கேட்டுக் கல்யாணம் பேச வந்தீங்களா?”என்று கருப்பசாமி அதிர்ச்சியானார்.

“ஏன் மாப்ள எங்க வீட்டுக்கு அவ வர்றதுக்கு இவ்வளவு யோசிக்க?”

“ஏன் தம்பி பட்டுரோசாவை என் மகன் பழனிக்குத்தான்னு கேட்க வநுதேன்.கேட்கக்கூடாதா என்ன? இப்படி வாயைப்பொளக்க?”

“ஐயோ அதில்லக்கா.அவளுக்கு இப்போதான் பதினாறு வாயசு ஆகிருக்கு.பனிரெண்டு படிக்கா.அவளுக்கு எப்படி கல்யாணத்தை முடிக்கன்னு யோசிக்கேன்.சின்னபிள்ளைக்கா”

“ஆமா எனக்குமட்டும் இருபத்தாறுலயா கல்யாணம் பண்ணிக்குடுத்துங்க பதினேழு வயசுலதான இவருக்குப் பிடிச்சுக்குடுத்தீங்க மூத்தவளுங்க இரண்டு பேருக்கும் அப்பவே கல்யாணம் முடிச்சுக் குடுத்துட்டேன்.இப்போ மூணாவது உள்ளவனுக்கு வரன் பார்க்கலாம்னு பார்த்தா ஜோசியர் இப்போ கல்யாணம் முடிச்சாதான் உண்டுன்னு இல்லைன்னா முடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு”

“அப்படியா?”என்று கருப்பசாமி யோசித்தார்.

பவானி மகனும் நல்லபையன்தான்.என்ன படிப்பு கொஞ்சம் குறைவு ஐ.டி.ஐ முடிச்சிட்டு தோட்டத்தைத்தான் பார்த்துக்கிறான்.ஒரே மகன் மூணு பெண்பி

ள்ளைங்க.

கருப்பசாமி தனது மனைவியையும் மகன்களையும் பார்த்தார்.

உடனே குணசேகரன்”பழனி நல்லபையன்தான்.பொறுப்பான பையன்தான்.ஆனா நம்ம பட்டுமாவுக்கும் அவனுக்கும் பத்து பதினோரு வயசு வித்தியாசம் வருமே மாமா.அதுவும் பட்டு சின்னபிள்ளை.இன்னும் இரண்டுவருஷம் கழிச்சி வேணும்னா பேசலாமா மாமா”என்று தன்மையாகக் கேட்டான்.

“இன்னும் இரண்டுவருஷமா?” என்று பவானி யோசித்தார்.

கருப்பசாமிக்கோ ‘மகளை அக்கா வீட்டுலயே கட்டிக்குடுத்தா நல்லாயிருப்பா.அக்கா மச்சான் குணம் தெரியும் தங்கமான குணம்.அதனால் பட்டுமாவுக்கு எந்த பிரச்சனையும் வராது.மருமகனும் குணத்துல தங்கம்.எந்தக் குறையும் சொல்லமுடியாது.சொந்தக் குடும்பம்வேற’ என்று யோசனைக்குத் தாவினார்.

இங்க வயசுதான் இடிச்சது.

குணசேகரனுக்கு இதில் விருப்பமில்லை”பழனி நல்லவன்,சொந்தக்காரன் என்பதற்காக சும்மா சின்னபுள்ளையைப் பிடிச்சு அவனுக்குக் கட்டி வைக்கமுடியுமா?”என்றுதான் யோசித்தான்.

கருணாகாரனுக்கும் அதே எண்ணம்தான்’தங்கச்சி சின்னபிள்ள பதினாறு வயசுப்பொண்ணை கிட்டதட்ட என்னைவிட மூத்தவனுக்குக் கட்டி வைக்க முடியுமா.அவனுக்கும் அண்ணனுக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம்’ என்று எரிச்சல்தான் வந்தது.

மல்லிகா இதையெல்லாம் அதிகம் யோசிக்கமாட்டார்.நம்ம வீட்டுக்காரரு எதுனாலும் யோசிச்சுதான் செய்வாங்கன்னு அவருக்கு கருப்பசாமி மேல ரொம்ப நம்பிக்கை உண்டு.அதனால் சும்மாவே உட்கார்ந்திருந்தார்.

“மச்சான் நீங்க பொண்ணுக்கேட்டது சரிதான்.ஆனா அவ படிச்சிட்டிருக்கா.இப்போ எப்படிக் கல்யாணம் பண்றது?”

“கல்யாணத்தைப் பண்ணிட்டு படிக்கட்டும் மாப்ளே.நம்ம வீட்டுப்பிள்ளைங்க படிக்கணும்னுகூட இல்லை.ஆனாலும் நீ சொன்னதுக்காக மருமகளைப் படிக்க வைக்கேன்.பழனிக்கு இளையவள காலம்போன கடைசில பெத்துப்போட்டிருக்கேன்.அவளை வேணும்னா நம்ம கருணாவுக்குக் கட்டிக்குடுத்திடுறேன்.இதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கிற?”என்று அவரே தொடங்கி அவரே சகலத்தையும் பேசிமுடித்துவிட்டார்.

அரைகுறை மனசோட யோசிச்சிட்டிருந்த கருப்பசாமி பொண்ணு தர்றேன் உன் மகனுக்கென்று அழகர்சாமி சொன்னதும் மனது நிறைந்து “பட்டுவை உன் மகனக்குக் கட்டித்தர்றேன்.ஜாதகத்தை நாளைக்குக் கொண்டுவாங்க மச்சான்.உடனே பார்த்து முடிச்சிடுவோம்”என்று தலையாட்டிவிட்டார்.

அவ்வளவுதான் குணுசேகரனும் கருணாகரனும் ‘என்ன அப்பா இப்படி சட்டுன்னு முடிவெடுத்துட்டாரு’ என்று யோசித்தனர்.

அப்பாகிட்ட இப்போதைக்கு எதையும் கேட்கமுடியாது.எதுனாலும் அத்தை போனபிறகு கேட்டுக்கலாம்னு விட்டுவிட்டனர்.

“எதுக்கு மாப்ளே நாளைக்கு ஜாதகத்தைக் கொண்டுவந்திட்டு,நான் வரும்போதே ஜோசியரைப் பார்த்துட்டு அப்பபடியேதான இங்க வந்தோம்.அதனால் ஜாதகம் கார்லதான் இருக்கு உடனே இரண்டுபேரு ஜாதகத்தையும் சேர்த்து பொருத்தம் பார்த்திடலாம்” என்று அழகர்சாமி சொல்ல கருப்பசாமி தலையாட்டா அன்னைக்கு ஜோசியரைபா பார்த்துப் பொருத்தமும் பார்த்துட்டாங்க.

பள்ளியில் இருந்து வந்த பட்டுரோஜாவுக்கு வீட்ல நடந்தது எதுவுமே தெரியாது வந்ததும்”யம்ம்ஆஆ நான் பிரன்டுங்ககூட குளத்துக்குக் குளிக்கப்போறேன்”என்று கிளம்பினாள்.

அவளை உடனே தடுத்துக் கையைப்பிடித்த மல்லிகா”உனக்கு உங்கப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டிருக்காரு.நீ என்னடான்னா வெளிய பிரண்டுங்ககூட தண்ணில ஆடப்போறன்னு போற.இனி வெளியெல்லாம் போகக்கூடாது”என்று பிடித்தை வைத்தார்.

“லூசா மல்லிகா நீ?நானே பன்னண்டாவதுதான் படிக்கேன்.எனக்கு கல்யாணம் பண்ணப்போறார உன் மீசைக்கார கருப்பசாமி.என்னைத்தாயவது உளறாதம்மா”என்றவள் அம்மாவுக்கு டிமிக்குக் குடுத்துட்டு குளத்துக்கு ஓடிவிட்டாள்.

இந்த வெள்ளந்தி பட்டுரோஜாவைத்தான் கல்யாணம் என்ற பெயரில் அவளது வாழ்க்கையை மொத்தமாக காவுவாங்கிருக்கிறது!