மீளா 7

Mila7

மீளா 7

மீளா காதல் தீவிரவாதி !,

மருது இடத்தை காலி பண்ணிய பிறகுதான் குழலிக்கு மூச்சு வந்தது போலிருந்தது.. இத்தனை நாள் நான்கு சுவரை பார்த்து பழக்கப்பட்டவளுக்கு இப்போது வானமே எல்லை என்பது போல் மருது திறந்து விட்டிருக்க.. புதிதாக உலகத்தை பார்க்கும் குழந்தை போல வீட்டை சுற்றி சுற்றி வந்தாள்.. எல்லாம் புதிதாக இருந்தது.. அவள் புருஷன் அந்த வினோத ஜந்து வந்தால் மட்டும்தான் சற்று பிடித்தமின்மை.. மற்றபடி இந்த வீட்டில் எல்லாம் அவளுக்கு பிடித்ததுதான்.. விலங்கு, பறவை, பூக்கள் ஓடை என வீட்டை சுற்றிவளுக்கு அத்தனையும் ஜாலியாக இருந்தது .. ஆனால் இந்த வீட்டை கட்டியவனை மட்டும் தான் அவளுக்கு பிடிக்கவில்லை .. அதை அவள் வெளிப்படுத்த வில்லை என்றாலும் மனதின் அடி ஆழத்தில் அது தங்கியே கிடந்தது , என்றாவது ஒருநாள் அதன் சுயரூபம் வெடித்து வெளியே வரத்தான் செய்யும்.. ஆர்வமாக ஒவ்வொன்றையாக பார்த்து செய்ய ஆரம்பித்தாள்.. பறவை விலங்கு அத்தனையும் அவளோடு ஒட்டி கொண்டு எப்படி மருது பின்னால் கொடி பிடிச்சு சுத்துமோ, அதேப்போல் குழலி பின்னால் பக் பக் என்று போகும் இடமெங்கும் போனது ...

"பசிக்குதா குட்டிகளுக்கு, அக்கா சோறாக்கி தர்றேன்" என அதோடு பேச்சு நடத்தி கொண்டே சமையல் நடந்தது.. சமையல் தெரியாது ஆனாலும் செய்ய பழகி , ஒரு காயை நறுக்கி, கருக்கி சமையலறையை நாத்தி, கையை சுட்டு முகமெங்கும் கரி பூசி, மேனி அழுக்காகி, வியர்வை வடிய சோத்தை பொங்கி கறிக்குழம்பு கேட்ட புருஷனுக்கு கரிக்குழம்பு வச்சி, அதில் நாலு கத்தரிக்காய் கரிஞ்சு கரும்பாக மிதக்க..

"அய் நல்லா மணமா இருக்கு" என அவளையே புகழ் பாடி கொண்டு அவன் அறைக்குள் போகவா வேணாமா என யோசித்து ..

"புது சீலை கட்டி இருக்கலன்னா, அதுக்கும் திட்டும் உங்க அண்ணன் , அதனால குளிச்சி கட்டுபுடுறேன்.." என வால் பிடித்து வந்த வாத்து குஞ்சிடம் பேசி கொண்டே அவன் அறையை திறந்து உள்ளேபோய் , அலமாரி திறக்க.. தங்க நகைகள் சறுக்கி கொத்து கொத்தாக குழலி காலடியில் விழுந்தது..

"ஆத்தாடி என்ன இது இம்புட்டு இருக்குது ... என்னவோ ஒன்னும் விளங்கல" என்று அதில் மெல்லிய ஒரு அட்டியல், சுமாரான ஒரு சேலை எடுத்து கட்டி கொண்டு, கோழிகளை மேய்த்து கொண்டு நிற்க சற்று நேரத்தில் விருமன் உள்ளே வரவும் .. குழலி யூஸ்வெல் லுக் ஒன்றை கொடுத்து நகத்தைக் கடித்துக் கொண்டே தூணோடு தூணாக நிற்க.. மதனியை பார்த்து சிரித்தவன் 

"மதனி நான் உங்க தம்பி மாதிரி, சும்மா என்னைய பார்த்து பயப்படாதீங்க.." என்றது சிறிய எருமை, மருதுவுக்கு ஏழு கழுதை வயது என்றால், இதுக்கு நாலு கழுதை வயது முப்பது தொட போகிறது இவளுக்கு தம்பியாகி வயதை குறைக்க பார்த்தான்... 

ம்ம்

"என்ன மதனி நீங்க ... அண்ணன்தேன் வீராப்பா திரிவார் நான் சாதாரண ஆளுதேன் .. உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க.. நான் கூட மாட இருந்து ஒத்தாசை பண்றேன் .. "

"ஒன்னும் வேண்டாம் தம்பி..."

"அப்படியா சொல்லுதீய" ..என திண்ணையில் அமர்ந்தவன் .. கையில் நீள மீனும், பலாப்பழமும் என சந்தையையே விலைக்கு வாங்கி வந்திருப்பான் போலிருந்தது..

"இந்தாங்க அண்ணி மதியம் இந்த மீனை வச்சு வைப்பீங்களாம், அண்ணனுக்கு பொரிச்ச மீனுன்னா ரொம்ப பிடிக்கும்.. அதையும் நல்லா நைசா வெட்டி பூண்டு நசுக்கி போட்டு வச்சிடுங்க ஒரு அருவாளை எடுத்துட்டு வாங்க, இந்த பலாப்பழத்தை வெட்டி வச்சிட்டு போறேன்.." இயல்பாக தன் மதனியிடம் ஒட்டிக்கொண்டான்... இவளும் உடனே தலையாட்டி உள்ளே போய் அருவாளை எடுத்துக்கொண்டு கொடுக்க..

"உட்காருங்க மதனி..

இல்லை அது ..

"ப்ச் அண்ணன் திட்டுவார்னு பயமா, அவர் பார்க்கத்தேன் அப்படி .. பழகி பாருங்க இந்த பலாப்பழம் போல அவருக்குள்ள ஒரு அழகான உருவம் ஒன்னு ஒளிஞ்சி கிடக்கு.. பேச்சு வாக்கில் சுளையை கீறி அவளிடம் நீட்ட ,மறுத்த மதனியிடம்....

"மதனி நான் தாயை பார்த்தது இல்லை , நீங்க எப்போ வருவீஙக்ன்னு அண்ணன் காத்து கிடந்தாரோ இல்லையோ , உங்க கையால ஒரு வா சோறு தின்ன நான் காத்து கிடக்கேன், நீங்க இப்படி பேசாம இருந்தா எப்படியோ இருக்கு மதனி" என்ற அவன் குரலில் என்ன கண்டாளோ உடனே கை நீட்டி வாங்கி கொண்ட குழலி..

"நீங்க சாப்பிடலயே..."

"உங்க கையால முதல்ல சோத்தை போடுங்க அப்புறவுதேன் மீதி..பிடிங்க மீனை ...

"நான் கத்திரிக்காய் குழம்பு வச்சிட்டேனே.."

"அப்படியா அதுவும் நல்லாதான் இருக்கும் இருங்க அண்ணன் வர்ற நேரம்தேன், சேர்ந்து தின்னுடுறோம்" என பேசி முடிக்கும் முன் முண்டகண்ணன் உள்ளே வந்து விட்டான்... மனைவி ஒத்த அட்டியலில் சாதாரண புடவையில் நிற்க தொடுக்கில் தீ எரிந்து விட்டது ...

"இவளுக்காக தேடி திரிஞ்சு சீலையும் நகையும் எடுத்து அடுக்கி வச்சா , உடுத்தியிருக்க சீலையை பாரு என்று முகம் கடுகடுக்க..

"ஏன்டி என்னடி சீலை இது, நகையை உன் அப்பனுக்கா போட்டு அழகு பார்க்க போற போ போய் அத்தனையும் அள்ளி போட்டுட்டு வா" என்றதும் ஏன்டா நீ வீட்டுக்கு வர்ற என்ற நிலையில் அவள் அலறி அடித்து ஓடி போய் நகைக்கடை விளம்பரம் போல் வந்து நின்றாள்... 

"மதனி குழம்பு வாசமே தூக்குதே சோத்தை போடுங்க .."

"அதுதான் தம்பி சோறு கொஞ்சம் குழைஞ்சி போச்சி போல ... "என வென்பொங்கல் ரேஞ்சில் ஒன்றை கரண்டி விட்டு கலக்க கரண்டி உடைஞ்சு போச்சு மக்களே...

"என்னது இது சோறா?? ... சரி சோத்துக்கு தண்ணீ நிறையா ஆகி போச்சு போல ,அண்ணன் சீக்கிரம் வா ஒரு பிடி பிடிப்போம் .. 

"

"இருலே லுங்கியை கெட்டிட்டு வர்றேன், அப்பதேன் வயித்துக்கு இடம் கிடைக்கும்" அவனும் அதே ஆவலில் கையை கழுவி கொண்டு வந்து அமர.. அவளையும் சோத்தையும் மாறி மாறி பார்க்க விருமன் மருது தொடையில் கிள்ளி..

"ஏசிபுடாத ண்ணே பாவம் "என்றதும் ..

"குழம்பை ஊத்து "என்று சோற்றை உதிரியாக்க அண்ணனும் தம்பியும் பட்ட பாடிருக்கே... 

"ஏன்டா அரிசி வச்சிதான் சோற்றை வடிச்சாளா, இல்லை சல்லிக்கல் விலை குறைன்னு, அதை போட்டு கிண்டி வச்சிட்டு தின்னுன்னு சொல்றாளா... "மனைவிக்கு கேட்கத்தான் அவன் ரகசியம் பேசினான் நாலு மைக் செட் விழுங்கிய வெண்கல குரல் அது கட்டுப்படாது கனைக்கத்தான் செய்யும் ...

"நல்லா பூ போல இருக்குது மதனி , அண்ணன் சும்மா எதையாவது சொல்லுவார் .. குழம்பு ஊத்துங்க ரசம் கடைசியா குடிக்கிறேன்..."

"இல்லை தம்பி இதுதான் குழம்பு.. என்று ஊற்ற அது யார் மீது கோவமோ எல்லா பக்கமும் சிதறி ஓட... மருது இவ்வளவு நேரம் அமைதியாக இருப்பதே பெருசு... 

விருமம் அவனை வாயை திறக்க விடாது அதையும் இதையும் சொல்லி சோத்தை திங்க வைக்க...அவன்தான் ஆத்திரம் டம்ளர் டம்ளராக குடிப்பவன் ஆயிற்றே .. 

"ச்சை மனுசன் தின்பானாடி இதை". என தட்டு பறந்து விட்டது .. அவள் வெவெடத்து ஜம்ப் பண்ணி போய் தூணை தேடி அதன் பின்னால் மறைந்து கொண்டு தலையை வெளியே விட்டு எட்டி பார்க்க .. விருமன் சோத்தை பாத்தி கட்டி குளம் போல ஓடிய ரசத்தை நடுவில் குழி தோண்டி ஊற்றி பரசி அடித்து கொண்டிருந்தான்... 

"மதனி செமையா இருக்கு , இன்னும் கொஞ்சம் ஊத்துங்க, அண்ணனுக்கு வேண்டாம்னு போவட்டும் .. குழம்புதேன் தண்ணியா இருக்கு ரூசி தூக்குது"...என்றதும் மருது ஒரு மாதிரி முழிக்க ...

"உனக்கு வேண்டாம்னா போ, எனக்கு பிடிச்சிருக்கு வாங்க மதனி" என்றதும் முதல் பாராட்டு புதுசா அவளை சுண்டிட... புருஷனை தாண்டி வந்து விருமனுக்கு சோத்தை போட்டு சோதிக்க தொடங்கி விட்டாள் ... 

"இது கூட்டு தம்பி" என்று அவளே எங்க வச்சேன் என கூட்டை தேட..

"இதுவா மதனி நான் ஏதோ விளையாட சுட்டிக்கல் எடுத்து வச்சிருக்கியன்னு நினைச்சேன் "என்று எடுத்து கொடுத்தான்... வயிறார சாப்பிட்டானோ இல்லையோ, மனதார சாப்பிட..

"என் புருஷன் மேக் தான் சரியில்ல தம்பி நல்லவர்தான்" அவன் உண்மையை உள்ளபடி சொன்னான், இவன் பூசி முழுகி சொன்னான் .. அவளுக்கு நேரடியா கடிந்த கணவனை விட தம்பியை பிடித்து போனது... 

"எட்டிக்கிட்டு மிதிக்க போறேன் ரெண்டு பேரையும், தின்னுட்டு இடத்தை காலி பண்ணு.. செத்த நேரம் தூங்க போறேன் "என்றான் சாப்பிடாது அறையை நோக்கி நடந்து கொண்டே...

"மதனி இனி ஒழுங்கா சமைக்கிறேன் வந்து சாப்பிடுங்கன்னு கூப்பிடுங்க ..."

"அய்யோ நானா? "

""அதுக்கு நாலு ஆளு வேலைக்கு போடுவோமா ?"

"எப்பதேன் பேசி பழக போறீக.. அண்ணனுக்கு சோறு உதிரியாக இருக்கணும், குழம்பு கட்டியா இருந்தாதான் பிடிக்கும் .. "

 "அப்போ நல்லா இருக்குன்னு சொன்னீக..." இவன்கிட்ட கொஞ்சம் கொஞ்சம் பேச வந்தது புருஷ்தான் எதிரி நாட்டு எனிமி பெல்லோ..  

"எனக்கு நீங்க என்னத்த வச்சி தந்தாலும் பிடிக்கும் மதனி அண்ணன் அப்படி கிடையாதுன்னு சொல்ல வர்றேன்..."

"இப்ப என்ன பண்ண??"..

""உள்ளாற போய் கூப்பிட்டுட்டு வாங்க வருவார்..

"பயமா இருக்கே , நீங்க போய் கூப்பிடுங்களேன் தம்பி .." அந்த காண்டாமிருகம் வேண்டாம் போக மாட்டேன் பயமா இருக்கு, எட்டியே இருக்கேன் என்ற நிலையில் அவள்.. எங்க எட்டி இருக்க இனி சிம்பன்சி போல மடியிலே தான் வைக்க போகிறான் என புரியாது அருகே போகவே அரண்டாள்...  

"போங்க மதனி" என்று இலையை எடுத்து கொண்டு வெளியே போட்டவன்.. திண்ணையில் படுத்து உண்ட மயக்கத்தில் படுத்தானோ இல்லை உணவு பாய்சன் ஆனதால் படுத்தானோ தூங்க ஆரம்பித்து விட்டான்.. 

குழலி அறைக்குள் போக கண்களை மூடி மருது படுத்திருந்தான் .. கால்களை ஆட்டி கொணடிருநதூன் கண்களை மூடியிருந்தது..அவள் வரும் சத்தம் நகை சலசலப்பில் தெரிந்தது ... 

"இனி ஒழுங்கா சமைக்கிறேன் சாப்பிட வாங்களேன்.. "

"இப்படி பேச அவன் சொல்லி தந்தானா?

"ம்ம் ம்ஹூம் , "மனைவி தலையாட்டல் பார்க்க கண்களை திறந்த மருது, வா என்று அருகே கண்காட்ட அவள் தயங்கி தயங்கி அவன் அருகே போய் நிற்க..

"உட்கார் "என்றவன் அவள் அமரவும் ,அவள் மடிக்கு உருண்டு போய் தலையை புதைத்த மருது , நகைகள் முகத்தை குத்தி கிழிக்க..

"ப்ச் எதுக்குடி இத்தனை போட்டு சிலை போல இருக்க," மோக நேரத்தில் சேலையும் நகையும் எரிச்சல் மூட்டியது ..

"இல்லை நீங்கதேன் "என்றவள் அண்ணாந்து மருது பார்க்கவும்..

"போடல" என்று முடித்து விட அவனோ புடவையை எந்த பக்கம் விலக்கி தலையை உள்ள திணிக்க புரியாது சேலையை அங்கும் இங்கும் உருட்டி இடம் தெரியாது..

"ப்ச் உள்ள போகணும், சேலையை நகட்டுடி" என்று வாசலில் படுத்து குறட்டை விடும் தம்பிக்கு கேளாது கிசுகிசுவென கூறினான்.. 

எதுக்கு? முடியாது போடா என்று ஓங்கி முகத்தில் குத்த ஆசைதான், ஆசை நடந்து விடுமா என்ன? சேலையை சற்று விலக்கி ஒற்றை கொன்றை மலர் தெரிய தரிசனம் கொடுத்த மனைவியை, கண்கள் சிவக்க பார்த்த மருது உதட்டை பிதுக்கி..

மதியம் போல கொடுடி" என்றவன் அவள் பின்னந்தலையில் கைகொடுத்து குனிய வைத்து அவள் இதழை சப்பி சுவைத்து கொண்டே விரல்கள் ரவிக்கை ஓரம் தேடி புகுந்து, இடம் கேட்டு இடைவெளி அமைத்து உள்ளே புகுந்து காற்றுபுகா கன்னி வெடி தேடி உள்ளங்கையில் பிடித்து கொள்ள ...அவள் உதறி விடுபட முடியாது கணவன் கிடுக்கிப்பிடியில் கிளிகள் சிவக்க , அவன் விரல் தழுவல் தாங்காது கால்கள் நடுங்கியது ... புதுசு புதுசா தப்பு பண்றானே என்றுதான் தோணல் வந்தது... அவனே தள்ளி எடுத்து பிதுக்கி பறவையை வெளியே பறக்க விட, வெகு போராட்டம் நடத்தி நத்தை ஓடு தாண்டி நகர்வலம் வந்த நட்சத்திர நுனியை மூக்கில் போட்டு நிரடி உரசி ,புழுவாக துடித்த மனைவியை கட்டிலில் சாய்த்து, துள்ளி அவள் மீது வந்த மருது அவள் முனகல் கூட வெளியே கேட்காது விரல் வைத்து உதட்டை மூடியவன்.. அவள் உணரும் முன் மொத்தமாக கையால் பிதுக்கி, உதட்டில் திணித்து சப்பு கொட்டி சுவைக்க ஆரம்பித்து விட்டான்... 

ஹ்க் ம்மா என்று அவள் முனகல், அவன் கையில் அடங்கி போனது . கண்கள் சொருகி மனைவியிடம் முதல் குழந்தை போல முட்டி முட்டி சுவை அரும்பு மலர உதட்டில் உறிஞ்சி எடுத்து , ஒவ்வொரு பக்கமாக அலுக்காது பாலாறு தேடி புரட்டி எடுத்து இனிமையை கசக்கி முகர்ந்து அவளை விட்டு விலகிய மருது ...

சாப்பாடு போடுடி என்று இன்னும் ஒரு முறை முகத்தை புரட்டி எடுத்துவிட்டு வெளியே எழும்பி போனான்.. குழலிக்கு அந்நிய தேசத்தில் அகதியாக வந்தது போலிருந்தது இந்த கட்டிலறை சமாச்சாரம் மட்டும் உவாக் பிடிக்கல .. 

அதே குழைஞ்ச சோறு தண்ணீ சாம்பார் அமிர்தமாக உள்ளே போனது .. 

சோத்தை போடு கண்ணு , குழம்பு நல்லா இருக்கு என்னலே என தூக்கத்தில் முழித்து நின்ற தம்பியிடம் கூற...

ஹான் !!என்று மதனியும் ,தம்பியும் முழித்தனர்...

என்னத்தடி, அப்படி பார்க்கிற போடு நல்லாதான் இருக்கு ... என்று விரலை நக்கி சப்பு கொட்டி சாப்பிட்டுவிட்டு ... 

கை கழுவ தண்ணீ ஊத்து வா என்று மனைவியை ஏவிவிட்டு பின்னால் போனவன்.. அவள் கை கழுவ தண்ணீ ஊத்த.. இவன் கழுவி அவள் முந்தானை இழுத்து கையை துடைத்து , குனிந்து வெளியே தெரிந்த இடையில் பல் பதிய காக்கா கடி கடித்துவைத்து மோகத்தை சேர்த்து வைத்தான்... 

லேய் _த்தியாளுக்கு பிறந்த ___ மகனே தேடினியாமே , இதோ வந்து நிற்கிறேன்ல உன் முன்ன .. உன் அருவா வெட்டுதா? என் அருவா வெட்டுதான்னு பார்ப்போம் என்று நாச்சி சத்தம் வெளியே கேட்டு, மருது முகம் மோகத்தை மறந்து சீறியது சிங்கமாக.. அவனும் ஒரு அருவாளை உருவி எடுத்து கொண்டு வெளியே போனான்...

நாச்சியின் தேவையை அவனை ஆத்திரமடைய வைத்து மகளின் பார்வையில் மருதுவை பொல்லாதவனாக காட்ட நினைப்பதுதானே... 

நிதானம் இல்லாத அவன் ஆத்திரமே , அவனுக்கு துரோகியாக மாறும் ...