மெய் பேசும் மித்தியமே-16

மெய் பேசும் மித்தியமே-16
கருப்பசாமி அடுத்தநாள் காலையில் கண்முழித்துவிட்டார்.அவருக்கு கண்முழித்ததுமே மகளைத்தான் பார்க்கவேண்டும் என்று நர்ஸினைக்கூப்பிட்டு கையைக் காண்பித்தார்.
அவரும் புரிந்துக்கொண்டு வெளியே உட்கார்ந்து ‘அப்பா எப்போ கண்முழிப்பார்’ என்று காத்திருந்த குணசேகரனிடம் வந்து அவர் சொன்னார்.
உடனே உள்ளே ஓடியவன் “அப்பாஆஆஆ”என்ற கதறியவன் அப்படியே அவரது கையைப்பிடிக்கொண்டான்.
அவருக்கு கண்கள் கண்ணீர் கட்டி நிற்க மகனைப் பார்த்தவாறே இருந்தார்.குணசேகரனுக்கு அவரை அப்படி பார்க்கையிலயே உள்ளுக்குள் வேதனைப் பெருகியது.
‘எப்படி இருந்த மனுஷனை இப்படி ஒரேடியாகப் படுக்கவைத்துவிட்டதே!’என்று நினைத்தவன் அவரிடம்வேறு எதுவும் சொல்லாது கையைப் பிடித்துக்கொண்டு நின்றான்.
அவரோ கண்களைச் சுழற்றி ‘பட்டுமா இருக்காளா?’என்று பார்த்தார்.
“அவ தூங்கிட்டிருக்காப்பா.இராத்திரி முழுக்க தூங்கவேயில்லை.இப்போதான் கண்ணசந்தா.அவ முழிச்சதும் கூட்டிட்டு வர்றேன்.நீங்க கவலைப்படாதிங்க.நாங்க இருக்கோம்.பார்த்துக்கிறோம்”என்று அவரது கையைத் தட்டிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.
அவ்வளவுதான் அவனால் முடியாது சேரில் உட்கார்ந்து அழுதுவிட்டான்.அவன் அழுகிறதைப் பார்த்ததும் மீனா ஓடிவந்து அவனது தலையை தன் வயிற்றோடு பிடித்து வைத்துக்கொண்டாள்.
அவள் இந்த வீட்டிற்கு வாழவந்த நேரத்தில்தான் அடுக்கடுக்கான பிரச்சனைகள் முன்வந்து நின்றது.அத்தனையும் பொறுமையாக நின்று சமாளித்தாள்.குணசேகரன் நொறுங்கிப்போகும்போதெல்லாம் அவள்தான் தாங்கி நின்றாள்.இப்போதும் நிற்கிறாள்.
“என்னாச்சுங்க மாமா நல்லா இருக்கங்கள்ல”என்று கொஞ்சம் பயம் கலந்தக்குரலில் கேட்டாள்.
அவளும் பயப்படுகிறாள் என்றதும்தான் கொஞ்சம் தெளிந்தவன்”அப்பா கண்ணுமுழிச்சிட்டாரு.பட்டுமாவைத்தான் தேடுனாரு.பாவம் உடைஞ்சிப்போயிட்டாரு.எங்க அத்தை என்னைக்கு எங்க வீட்டுக்குள்ள வந்து பொண்ணுக் கேட்டுச்சோ அன்னைக்கே எங்க வீட்டுக்கு வினை வந்திடுச்சுப்போல.இது தெரியாம எங்கப்பா அவங்களுக்கு பொண்ணுக் குடுத்து இப்போ இப்படியாகிட்டாரு”என்று வேதனைப்பட்டான்.
அவன் அழுதுகொண்டிருக்க மீனா சாமாதானப்படுத்துவதைப் பார்த்தவாறே வந்த கருணாகரன்”ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு!” என்று பதறிக்கேட்டான்.
“அவருக்கு ஒன்னுமில்ல கருணா அப்பா கண்ணு முழிச்சிட்டார்.கண்ணு முழிச்சதும் பட்டுவைத்தான் தேடுனாரு.அம்மாவும் பட்டுவும் இப்போதான் தூங்குறாங்க.அதுதான் எழுப்பலை”
“கண்ணுமுழிச்சிட்டாரா?” என்று கேட்டவாறே ஐ.சி.யூவிற்குள் நுழைந்தான்.
இவன் குணசேகரன் மாதிரி கிடையாது.அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்தவன்”எதுக்கு இப்போ இவ்வளவு அழுத்தமெடுத்து இங்க படுக்கிறளவுக்கு வந்திருக்கீங்க?நம்ம பட்டுமாவை காலம் முழுசும் நம்ம வைச்சுப் பார்த்துக்க மாட்டோமா?அந்தளவுக்கு நமக்கு வசதியில்லையா என்ன?எவனாவது வீட்டோடு மாப்பிள்ளையா பார்த்து அவளைக் கட்டிக்குடுத்து நம்மக்கூடவே வைச்சிருப்போம்.எவன் என்னத்தைக் கேட்பான்?நாங்க இருக்கோம் அவளுக்கு.சும்மா சும்மா இனி மனசுக்குள்ள அழுத்தத்தை ஏத்தக்கூடாது.நீங்கதானே எங்க தூணே.நீங்க இல்லாமல் நாங்க என்ன பண்ணைவோம்னு யோசிச்சீங்களா?உங்களுக்கு ஒன்னுமில்லை நல்லாயிருக்கீங்க.இன்னும் என் பிள்ளைங்கள பார்க்கணும் பட்டுவோட பிள்ளைங்கள கொஞ்சணும்.இப்படி எவ்வளவோ இருக்கு.தெம்பா வாங்க”என்று அவரைத் தைரியப்படுத்தினான்.
“சரிப்பா”என்று தலையாட்டியவர் அவனது கையைப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
அவ்வளவுதான் இவ்வளவு நேரம் இருந்த மொத்த தைரியமும் பலகீனமாகிஉடைந்துவிட்டான்.அவனது கண்களிலும் கண்ணீர்.அதை அவருக்குத் தெரியாது மறைத்தவாறே வந்துவிட்டான்.
என்னமோ ஆகிடுமோ என்று பயந்தவர்களுக்கு அவர் கண்முழித்ததும் ஒரு தைரியம் வத்துவிட்டது.அப்பா குணமாகி நல்லபடியாக வீட்டுக்கு வந்திடுவார் என்ற தைரியம் வந்துவிட்டது.
இங்கு காலையில் எழுந்த சூர்யா ட்யூட்டிக்கு கிளம்பியவன் லலிதாவிடம்”பூஜாவை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம் அவ தூங்கட்டும்.இரண்டுமூணு நாள் கழிச்சு அனுப்பலாம்.நான் ஹாஸ்பிட்டல் போறேன்னு”கிளம்பி போய்விட்டான்.
லலிதாவுக்கு கோபமாக வந்தது.ஆனாலும் மகனாச்சே என்று அமைதியாக பார்த்திருந்தார்.நேத்து அவ்வளவு பேசிருக்கான் ஒரு சாரிக்கூட சொல்லாமல் போறான்.இப்போ ரொம்ப மாறிட்டான்.இவன் மாறிட்டானா? இல்லை அந்த ரோஜா மேல இருக்கிற ஆசை மாத்திட்டான்னு தெரியலையே?எவ்வளது தூரம்தான் போறான்னு பார்ப்போம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.
சூர்யா ட்யூட்டி முடிந்து பேஷன்ட்ஸ் இல்லை என்றதும் முருகேசனைப் பார்த்து “முருகேசா கருப்பசாமி ஐயா வீட்டுல இருந்து ஏதாவது தகவல் தெரியுமா?போய் பார்த்தியா?”
“என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி டாக்டர் தெரியும்? நேத்து ராத்திரி உங்க கூட தான் வந்தேன். இன்னைக்கு காலைல உங்கக்கூடவே இருக்கேன்.இதுக்கு இடையில எனக்கு எப்படி டாக்டர் அவங்களைப் பத்தித் தெரியும்?இராவோடு இராவா நான் தென்காசி போய் யாரையும் பார்க்கல டாக்டர்.அதனால எனக்கு எதுவும் தெரியாது டாக்டர்” என்று நக்கலாக சொன்னான்.
“அதுசரி உனக்கு கொஞ்சம் தென்காசிகாரன் குசும்பு ஒளிஞ்சிருந்திருக்கு அப்படித்தான முருகேசா?ம்ம்ம் நான் அங்கப்போறேன் என்கூட வர்றியா?”
“எனக்கென்ன பொண்டாட்டியா? புள்ளையா?கேட்கிறதுக்கு அம்மாவைத் தவிற யாரும் கிடையாது.நீங்க எங்கக்கூப்பிட்டாலும் வர்றேன் டாக்டரு”
“ஏன் முருகேசா நீ இரண்டாவது வேற கல்யாணம் முடிக்கலை”
“முதக்கல்யாணத்துக்கே விடைத்தெரியலை இதுல இரண்டாவது கல்யாணமா டாக்டரு.அடப்போங்க டாக்டர் சிலசமயம் மனிதங்க மாதிரி கொடூர மிருகம் யாரும் இருக்கமாட்டாங்கன்னு நினைக்க வைச்சிட்டாங்க”
“முதல்லயே உன்னை அவங்களுக்குப் பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுத்தானே கல்யாணம் பண்ணிருப்ப”
“நாங்க சொந்தக்காரங்க டாக்டர்.அவளுக்கும் என்னை பிடிச்சிருந்தது எனக்கும் அவளைப் பிடிச்சிருந்தது.ஆனா கல்யாணமாகி ஒரு மாசத்துலயே அவளுக்கு வேற ஒருத்தனை என்னைவிட அதிகமா பிடிச்சிருந்திருக்கும்போல அதுதான் ஓடிப்போயிட்டா”
“அப்படியெல்லாம் இருக்காது முருகேசா பிடிச்சிருக்கிங்கிறது வேற.காதல் அப்படிங்கிறது வேற.அவ எதிர்பார்த்த காதல் உன்கிட்ட கிடைக்கலைன்னு போயிருக்கலாம்ல”
“அப்படித்தான் நானும் அவளை ஒன்னுமே சொல்லாமல் எங்கேயாவது போய் நல்லாயிருன்னு விட்டுட்டேன்”
“உனக்கு ரொம்ப நல்ல மனசு முருகேசா”என்றவன் அவனை இழுத்து முதுகில் தட்டிக்கொடுத்தான்.
“அப்புறம் என்ன முருகேசா.வேற பொண்ணைப் பார்த்து கட்டிக்கலாம்ல.எத்தனை நாள்தான் தனியா இருப்ப?”
“கட்டிக்க ஆசைதான்,ஆனால் கரண்டுவிசயம் தடுத்துச்சு.ஒன்னு இரண்டாந்தாரம்னு எனக்கு யாரும் பொண்ணு தரலை.அப்படியே தந்தாலும் இவளும் போயிடுவாளோன்னு சந்தேகத்தோடு வாழமுடியாதுன்னு நானே வேண்டாம்னு இருந்துட்டேன்”
அவன் அப்படிச் சொன்னதும் எவ்வளவு பெரிய விசயத்தை சிம்பிளா சொல்லிட்டான் என்று அவனை அத்தனை அன்பாகப் பார்த்தான்.
“என்ன டாக்டர் இப்படி பார்க்கீங்க.எனக்கு கூச்சமா இருக்கு”என்று சொல்லிட்டு நெளிந்தான்.
அவனை இழுத்துக்கொண்டு தென்காசிக்கு கருப்பசாமி இருக்கும் ஹாஸ்பிட்டலுக்குப் போனான்.
அது தனியார் ஹாஸ்பிட்டல்தான்.அதுவும் கொஞ்சம் வசதிவாய்ப்புகள் இருந்தால்தான் உள்ளயே போகமுடியும்.
இப்போது சூர்யா உள்ளே போகவும் கருப்பசாமி ஓரளவு கண்முழித்து தெளிவாக இருந்தார்.
அவரருகில் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்தவன் நர்ஸிடம் அவரது ரிப்போர்ட்டை வாங்கிப்பார்த்துவிட்டு அவரிடமும் பேச்சுக்கொடுத்தான்.
சூர்யாபிரகாஷ் ஐ.சி.யூவிற்குள் வரும்போது குணசேகரன் பார்த்துவிட்டான்.அவனுக்கு ஏனோ சூர்யாவை இப்போதும் பிடிக்கவில்லைதான்.ஆனாலும் அப்பாவைக் காப்பாற்றியவன் என்ற நன்றியோடு வணக்கம் வைத்தான்.
சூர்யாபிரகாஷ் அதுக்குமேல சிறு தலையசைப்புடன் உள்ளே போயிட்டான்.
“எதுக்குண்ணே இவனுக்குப்போய் வணக்கம் வைக்க.பாரு தலையை மட்டுற் ஆட்டிட்டுப் போறான்.எனக்கு இவனைப் பிடிக்கவேயில்லைண்ணே”
“எனக்கும்தான்டா.ஆனா அப்பாதான் டாக்டரு டாக்டருன்னு உருகுவாரு”
“நம்ம பட்டுவும் இந்தாளுக்கிட்ட பேசுவான்னே.இவன் பார்வையே சரியில்லை.கல்யாணம் முடிஞ்சு ஒரு பிள்ளை இருக்கிறமாதிரியா பார்கக்குறான்.இவன்கிட்ட இருந்து பட்டுவை ஒதுங்கியே இருக்கச்சொல்லணும்”
“விடுடா அவன் பொண்டாட்டியும் அங்க டாக்டராம்ல.அம்மா சொன்னாங்க.இவன் அம்மா நம்ம அம்மாகிட்ட சொல்லிருக்காங்க”
“படிச்சவன்கிற திமிருண்ணே இவனுக்கு”
“அது நம்மகிட்ட செல்லாதுல.நம்மக்கிட்டயேவா”என்று பேசிக்கொண்டிருக்கும்போது சூர்யா வெளியே வந்தான்.
அப்போதுதான் மல்லிகாவும் ரோஜாவும் ரூமுக்குள்ளிருந்நு வீட்டுக்குப் போக வெளியே வந்தனர்.
“உங்க அப்பா ஹெல்த் ஸ்டேபிலா இருக்கு.ப்ளாக் எதுவும் இல்லாததால் தப்பிச்சிட்டாரு.இனி அவருக்கு ரொம்ப டென்சன்குடுக்கிற மாதிரி வேலையெல்லாம் குடுக்காதிங்க.இரண்டுமூணு நாளையில் வீட்டு வந்திடலாம்.இங்கவுள்ள டாக்டருங்க ஏதாவது சொன்னாங்களா?”
“இல்ல”
“ஓகே நான் பேசிக்கிறேன்”என்று போய் பேசிட்டு வந்தான்.
“யாராவது ஒருத்தங்க இங்க இருந்தா போதும். எல்லாரையும் வீட்டுக்கு போக சொல்லிடுங்க எதுக்கு போட்டு உங்களுக்கு அலைச்சல்?” என்று சொன்னான்.
“சரி”என்று தலையாட்டினார்கள்
ஒரே நாளில் ரோஜா மொத்தமாக ஓய்ந்து போனார் அழுது அழுது முகமெல்லாம் வீங்கி சிவந்து போயிருந்தது.
அவளுக்கு இப்பொழுது குற்ற உணர்வாக இருந்தது தன்னால்தான் குடும்பம் முழுவதும் கஷ்டப்படுகிறது என்று வேதனைப்படுகிறாள் அது அவளது முகத்தில் நன்றாக தெரிந்தது
இப்போது அவளிடம் பேசவும் முடியாது ரெண்டு கரடிகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு எப்படி அவர்கிட்ட பேச முடியும்? அதுவும் இந்த கரடிகள் அவக்கிட்ட பேசவும்விடாதுங்க என்று அவனுக்குத் தெரியும். அதனால் எதுவும் பேசாது வெளியே வந்துவிட்டான்.
அதற்குப்பிறகுதான் யோசனையோடு மீண்டும் உள்ளே போனவன் மல்லிகாவைப் பார்த்து”நான் வீட்டுக்குத்தான் போறேன் வாங்கக் கொண்டுவிடுறேன்”என்றழைத்தான்.
அதைப்பார்த்த கருணாகரன் “இந்த டாக்டருக்கு இருக்கக் கொழுப்பைப் பார்த்தியா?நம்ம இங்க குத்துக்கல்லு மாதிரி நிக்கோம்.இவன் நம்ம அம்மாகிட்டயே வாங்க வீட்டுலகொண்டுவிடுறேன்னு கேட்கிறான்.இவன் என்ன நினைச்சிட்டு இருக்கான்?”என்று குணசேகரனிடம் கோபத்தில் சொன்னான்.
“விடு தம்பி உதவி செய்யலாம்னு நினைச்சிருப்பான்”
“ம்ம்ம்”
“மல்லிகாவோ இல்லதம்பி நீங்க போங்க.நானும் பட்டுவும் அவங்கப்பாவைப் பார்த்துட்டு நாளைக்குத்தான் வீட்டுக்கு வரலாம்னு இருக்கோம்”என்று சொல்லிவிட்டார்.
ரோஜா டாக்டரை நிமிர்ந்துக்கூட பார்க்கலை.அவளது எண்ணமெல்லாம் அவங்கப்பாவைப்பத்தியே இருக்கவும் வேறெதுவும் கருத்தில் படவும் இல்லை.மூளையில் உதிக்கவுமில்லை.
சூர்யாவுக்கும் அது புரியத்தான் செய்தது,அதனால் முருகேசனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.
லலிதா சூர்யவோடு பேசாது முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தார்.பூஜாவுக்கு ரோஜா இல்லை என்றதும் கொஞ்சம் முகம் வாடியிருக்க அவளைத் தனதுமடியில் சூராயா தூக்கி வைத்திருந்தான்.
“பூஜா” என்று மெதுவாக அழைத்தான்.
அவள் உடனே நிமிர்ந்து அவன்முகத்தைப் பார்த்தாள்.
அவளது கண்களைப் பார்த்தவனுக்கு அப்படியே தூக்கி முத்தமிடத் தோன்றியதும் மகளுக்கு முத்தம் கொடுத்தான்.
அவளுக்கு முத்தம் கொடுத்தால்போதும் அதுவும் சூர்யா முத்தம் கொடுத்தால் அப்படியே கழுத்தைக் கட்டிக்கொள்ளுவாள்.இப்போதும் அதேபோன்று கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்,
கன்னத்தில் முத்தமிட்டால்
இந்த பாலை நெஞ்சிலும் அமுதூருமே!
கன்னத்தில் முத்தமிட்டால் தகப்பனும்
தாயாக உருமாறுவானே!
அவ்வளவுதான் எல்லா கவலையும்,சஞ்சலமும், ஓரு நொடிப்பொழுதில் சூர்யாவுக்கு நெஞ்சிலிருந்து மறைந்துப்போயிற்று.
இருவரும் கொஞ்ச நேரமாகச் சிரித்துவிளொயாடிக்கொண்டிருக்க சூர்யா மெதுவாக”பூஜாமா நம்ம ரோஜா மிஸ்ஸ உனக்குரொம்ப பிடிக்குமா?”
“ம்ம்ம் ஆமா” என்று கண்கள் விரிந்து சந்தோசத்தில் சொன்னாள்,
“ரோஜா மிஸ்ஸை நம்ம வீட்டுக்கு உனக்கு அம்மாவ கூட்டிட்டு வரலாமா?”
“ஆஹ்ன் ஆஹ்ன்” என்று எழுந்தவள் வாங்க டாடீ.இப்பதே போய் கூப்ட்துவோம்”என்று அவனது கையைப்பிடித்து இழுத்தாள்.
அதைப்பார்த்த லலிதாதான் “பூஜா!₹ என்று அதட்டினார்.
அவ்வளவுதான் பயந்து அவனது தோளைப்பிடித்துக்கொண்டு முகத்தைச் சாய்த்து அழ ஆரம்பித்தாள்.
“அம்மாஆஆஆஆ.எதுக்கு இப்போ அவக்கிட்ட சத்தம் போடுறீங்க?”அதுக்கு அவர் பதில் சொல்லாமல் நின்றிருந்தார்.
ஒரு சின்ன குழப்பத்துல நான் ரோஜாவைப் பத்தி விசாரிக்காம போயிட்டேன்.இல்லைன்னா உங்க வீட்டுக்காரர் போட்ட திட்டத்தை அப்பவே இல்லாமலாக்கி, ரோஜாவை நான் கல்யாணம் பண்ணிக்கூட்டிட்டு வந்திருப்பேன்.இது நானோ நீங்களோ போட்ட முடிச்சு இல்லை.கடவுள் எனக்கும் அவளுக்கு கோவில்பட்டி ஹாஸ்பிட்டல்ல வைச்ச போட்ட முடிச்சு.இத்தனை வருஷத்துல என்னென்னமோ நடந்தாலும் எனக்கு துணையாக ரோஜாதான் வருவான்னு கடவுள் அப்பவே சொந்தம்னு எழுதிவைச்சுட்டார்”
“என்ன உளறிட்டிருக்க சூர்யா?உனக்கு அவமேல ஆசைன்னு சொல்லு.அதுக்கு இப்படி ஏதாவது கதையைச் சொல்லாத”
“ஆமா எனக்கு ரோஜா மேல கொள்ளை ஆசை.அவளைத்தான் நான்கட்டிட்டு வாழப்போறேன்.இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்” என்று சத்தமாக சொன்னான்.
அப்போது அங்கே வந்த முருகேசன் அதைகேட்டுவிட்டு அதிர்ச்சியில் ஐயோ என்று நின்றிருந்தான்.
டேய் முருகேசா இதைப்போய் இரண்டு ஹிப்போபொட்டமாஸ்கிட்ட சொல்லிடாதடா!என்பதுபோல் சூர்யா கண்களை உருட்டி அதிர்ச்சியில் பார்த்திருந்தான்!
இப்படி மாட்டிக்கிட்டியே டாக்டரு?