மீளா 10
Milla10

Suji James:
10 மீளா காதல் தீவிரவாதி!!
இனி இந்த பக்கமே வர மாட்டேன் என கூறி சென்ற விருமன் இரவே மின்னல் வீட்டில் போய் நின்றான் மருது வீட்டை விட்டு வெளியே வந்து , பசங்களோடு ஊர் எல்லையில் தங்கும் அறையில் போய் படுக்க தயாராக , அவன் போனுக்கு அழைப்பு வந்தது ..
"அண்ணன் தான் நம்மள தேடுற ஒரே ஆளு, அவரும் மதனி வந்த பொறவு நம்மள செட்டை பண்ண மாட்டாரு, அதுவும் ராவு அண்ணனுக்கு மாலைக்கண் நோய் வந்திடுமே, அவுக கண்ணு மட்டும்தான நியாபகம் வரும்.. இது யாரு நம்பர் புதுசா இருக்கு" என்று யோசனை பண்ணி கொண்டே போனை எடுத்து காதில் வைக்க விசும்பல் சத்தம் மட்டும் வந்தது ..
"அலோ யாரு? என்று கிணற்று திண்டில் ஏறி அமர்ந்தவன்...
"நான்தேன் ... பெண் குரல் வந்தது ..
"நான்தேன்னா யாரு?? , இதுல உன்ற முகரை ஒன்னும் தெரியல, எனக்கு பேசுற குரலை வச்சி முகத்தை பாக்கிற அற்புத சக்தியும் இல்லை ... யார் எவர்னு சொன்னாவே எனக்கு பாதி புரியாது , இதுல நான்தான்னா எவடி அவ , விளக்கு வச்ச நேரத்தில போனை போட்டு உசிர எடுக்கிறது .."
"ப்ச் நான்தான் மின்னல்
"நான் சூரியன் "
"யோவ் நான்தான் மருத்துவர் மக மின்னல்"..
"ஓஓஓஓ அந்த மின்னலா ?என்ன விஷயம் எனக்கு போன் போட்டிருக்க , காசு ரெடி பண்ணிட்டியோ, ராவு வர முடியாது.. நீ வேற ஊர் ஒதுக்கத்துல கிடக்க, நான் வந்து அது என்ற அண்ணன் காதுக்கு போச்சுது காது வாக்குல விட்டிருவார் ,காலமற யாரையாவது அனுப்பி விடுறேன் வை ... ஏய் ஏய் வச்சிடாத ஆமா நம்பர் யாரு தந்தா?..
"ப்ச் நீ என்ன இந்திய ஜனாதிபதியா , நம்பர் கிடைக்காம இருக்க, அதேன் மூத்திர சந்து அத்தனையிலும்தான் உன்ற பேரும் , நம்பரும் தான் கரிக்கட்டையில எழுதி போட்டிருக்கான்களே.."
"அய்யய்ய!! அவன்க பாசத்துக்கு அளவே இல்லாம போச்சி..."
"ம்க்கும் மெச்சிக்க , உன் அண்ணாத்த பண்ற அத்தனைக்கும் உன்னையதான் பொளக்க போறானுவ பார்த்துட்டு இரு..
"என்னையதான பிளக்க போறாங்க , பிளந்துட்டு போவட்டும் உனக்கு என்ன அக்கறை வந்தது ...
"அண்ணன் சாப்பிட வாரியலா??" என்று ஒருவன் வந்து விருமனை அழைக்க..
"இல்லைலே மதியம் மதனி கையால சாப்பிட்டேன் அது வயித்துல கிடக்கு , போதும் 'என்றவனுக்கு அவன் மதனி போட்ட சோத்தில் இருக்கவா சாகவா என்று வந்தது ... குழலி முகம் சுணங்கி விட கூடாது என தின்று விட்டான்.. ஆனால் வயிறு அது வேறு செக்ஷன்ல , நாயே என்னத்தடா தின்னு தொலைச்ச வயித்தை காந்துது என துடித்தது ....
"ம்க்கும் மதனி கவனிப்பு ஜாஸ்தியாதேன் இருக்கு அங்கே ஒன்னுக்கு எரிந்தது..
"ஆமா அதுக்கென்ன இப்ப , எதுக்குடி போன் போட்ட சொல்லி அழுத்துட்டு வை ..."
"கத்தாதைய்யா.. அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியல .."
"நான் ஒன்னும் வைத்தியர் இல்லையே ..
"ப்ச் ரொம்பதேன், டவுனுக்கு கூட்டிட்டு போவணும் ..
"கூட்டிட்டு போ .. அதுக்கு எதுக்கு என்னையே போன் போட்டு தொல்லை பண்ற.."
"துணைக்கு வாயேன்..
"ஏதே?? நானா, ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க நீ , உன் பார்வையை பார்த்தே நினைச்சேன்டி , என்ன சேலையில சொருகிட்டா.. என் அண்ணனை அடிச்சி சாச்சி புடலாம்னு ஊர்காரன்வ சொன்னானானுவலோ... என்ன அசைக்க எந்த மேனாமினுக்கியாலும் முடியாதுடி..."
"அய்ய!! ஆசைதேன் உன்ற முகரைக்கு அந்த எண்ணம் வேற இருக்கா .
"ஏன் என் முகரைக்கு என்ன? நல்லாதானா இருக்கு" என கிணற்று தண்ணீரில் தன் முகத்தை பார்த்தான் மாநிறம் , களையான முகம் , கட்டப்பஞ்சாயத்து பண்ணுபவன் மீசையை முறுக்கி ரஃப் அன் டஃப்பாக விரைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வளராத மீசைக்கு விளக்கெண்ணெய் தேய்த்து பல மாதம் மசாஜ் கொடுத்து முறுக்கி வளர்த்த மீசை , பச்சைபுள்ள போல லுக் விடும் பார்வையை கனபாடு பட்டு முறைத்த மேனியாக கொண்டு வந்து அக்மார்க் முரடன் போல மாற்றி கொண்ட ரவுடி உருவத்தில் அலையும் பால் டப்பா ...
"பொறவு எதுக்குடி நடுராத்திரி போன் போட்டு தொல்லை பண்ணிட்டு இருக்க ,வை" என்றான் சுள்ளென..
"நல்லா இல்லைன்றா, பின்ன என்ன சோலிக்கு நம்மள கூப்பிடுறா... என்று முணுமுணுத்து கொண்டே போனை கட் பண்ண போக..
"அலோ அலோ கட் பண்ணிடாத...
"என்னடி இப்ப உனக்கு வேணும்..
"அப்பாவை டவுனுக்கு கூட்டிட்டு போவணும் துணைக்கு வாயேன் ...
"ஹான் நானா, எதுக்கு? அதெல்லாம் வரமுடியாது உன் அப்பன சாவ சொல்லு.. இல்லை எவனையாவது கூட்டிட்டு போ, அவள் அமைதியாக இருக்க.. விருமன் கண்களை சுருக்கி கொண்டு
"ஏன் வேற யாரையாவது கூட்டிட்டு போக வேண்டியதுதான..
"யார கூட்டிட்டு போக சொல்ற ,
"ஏன் உனக்குதான் மாமே, அண்ணன், தம்பின்னு ஊருக்குள்ள நிறைய பேர் இருப்பான்களே, எவனையாவது கூட்டிட்டு போக வேண்டியதுதானே , அவங்கள விட்டுட்டு எனக்கு எதுக்கு போன் போட்டு கூப்பிடுற.... "சந்தேகம் உதிக்கும் தானே சாதாரண பட்டவனுக்கு... மருதுவை சார்ந்தவர்களுக்கு எங்கிருந்து அம்பு வரும், எப்போது எதிரி படை வரும் என தெரியாது கண்களை மூடினாலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அடியையும் பாதுகாப்பதத்தான் வைப்பார்கள் ..
அவன் உயிர் போனால் பரவாயில்லை ஆனால் அவனால் மருது பாண்டியனுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்று ஐயம் தான் அது ..
"யாரை கூப்பிட சொல்லுற அண்ணன்னு நம்பி கூட்டிட்டு போனா ஆள் இல்லாத இடமா தள்ளிட்டு போக பார்க்கிறான்.. தம்பின்னு அவனை உதவிக்கு கூப்பிட்டா எங்க இடம் கிடைக்கும் தடவலான்னு நினைக்கிறான் .. சரி விடலை பயதான் அப்படி இருக்காங்கன்னு நினைச்சு வயசானவங்கள கூப்பிட்டா மொத்தமா விழுங்கி ஏப்பம் விட்டுவிடலாமான்னு பணத்த காட்டி வான்னு கூப்பிடுறானுவ, நம்ம ஊர பத்தி தெரியாதா?? ஒத்த பொட்ட புள்ளையா ஊருக்கு ஒதுக்குப்புறமா கிடக்குறேன்னு எப்போ வகையா மாட்டுவேன்னு காத்துகிட்டு கிடக்கானுங்க .. இப்போ அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லையா, அது யாருக்காவது தெரிஞ்சு உள்ளாரா வந்துடுவான்கன்னு தினமும் பதக் பதக்னு இருக்கு.. யாரையும் நம்பி வாயை திறக்க முடியல... அதேன் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு உனக்கு போன் போட்டேன்.. நீ என்னன்னா சாக சொல்ற , சரி வேற என்ன பண்றது மானம் போய் சாகறதுக்கு, அரளி விதைய அரைச்சி குடிச்சிட்டு சாகிறோம் "என்ற மின்னல் கரகரத்த குரல் இவன் மனதை பிசைய.. ஆனாலும் யோசனையாக தாடியை தடவியவன்..
"வை அதெல்லாம் வர முடியாது" என்று போனை கட் பண்ணி வைத்து விட்டான்.. மின்னலுக்கு விக்கிக் கொண்டு வந்தது.. அங்காளி பங்காளி என்று எத்தனை பேர் இருந்தாலும் ,அவர்கள் நோக்கம் பெண்ணொருத்தி ஒத்தையாக இருக்கிறாள் என்று நோட்டம் விட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.. தகப்பன் உடம்பிற்கு இயலாதவர் ஓங்கி தள்ளினால் மூச்சுப் பேச்சு இல்லாமல் போய்விடுவார் ...
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே துடுக்கு பேச்சும் திமிர் பார்வையும் கொண்டு அலைய வேண்டிய நிலை ..அவ பக்கத்துல போனா பிராண்டி வச்சிடுவா என்று ஒரு பயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறாள்.. மின்னல் கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே..
"இனி கடவுள் விட்ட வழி "என உணர்வற்றுக்கிடந்த தன் தகப்பன் அருகே போய் அமர்ந்து அவர் கைகளை பிடித்துக் கொண்டிருந்தாள்.. அவருக்கு மூடிய கண்கள் வழியாக கண்ணீர் வடிந்தது .. தன் மகளின் தனியாக விட்டு விட்டு போகிறோமே என்று வதைத்து கொண்டிருந்தார்..
"அப்பா நீ போன பின்னாடி நான் மட்டும் இருப்பேன்னு நினைக்காத, நானும் பின்னாடியே வந்துடுவேன், எனக்கு இங்கன யாருமே கிடையாது" என்று முணுமுணுத்துக் கொண்டு இருந்தவள் காதை கீங் கீங் புல்லட் ஹாரன் வந்து அடைய கண்கள் அப்படியே விரிந்து போனது .. மின்னல் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்க்க... விருமன் பைக்கில் நின்று கொண்டிருந்தான்.. அவ்வளவுதான் ஏன் சந்தோஷம், ஏன் மகிழ்ச்சி மின்னலுக்கு தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு அவளுக்கு இருக்க தோணவில்லை ... எழும்பி அவனை நோக்கி ஓடினாள்..
"வரமாட்டேன்னு சொன்ன" அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள் .. அவசரமாக வந்திருக்கிறான் என்பது தெரிந்தது முகத்தில் குட்டி குட்டி வியர்வை அரும்பியிருந்தது.. அவள் கைகள் தாவணியை எடுத்து அவன் வியர்வையை துடைக்க போய்விட்டது.. அவன் என்ன என்று அதிர்ந்து முகத்தை விலக்கவும்.. இவள் தான் செய்யும் செயல் புரிந்து பதறி கையை கீழே விட்டுவிட்டு..
" முகத்தில் ஏதோ பூச்சி இருந்த மாதிரி இருந்தது அதேன் "என சமாளித்து வைத்தவள் .
" வர மாட்டேன்னு சொல்லிட்டு அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ள இங்க வந்துட்ட..
"ஹான் , ஒரு உயிர் சாவக்கிடக்குதுன்னு சொன்ன பிறகு இருக்க மனசு இல்ல , எங்க உன் அப்பன் இழுத்துகிட்டு வா ..விடியுறதுக்கு முன்னாடி பார்த்து கொண்டு வந்து விட்டுடுறேன்... அண்ணே காதுக்கு போச்சுன்னா ஏன் எதுக்குன்னு ஆயிரம் கேள்வி கேட்பார் ..எதுக்கும் என்கிட்ட பதில் கிடையாது" அவள் விக்கித்த குரல் கேட்டு விருமனுக்கு அதன் பிறகு படுக்கவும் தோணவில்லை, இருக்கவும் தோணவில்லை யாரையும் நம்ப முடியல அதனாலதான் உனக்கு போன் போட்டேன் என்றால் உன்னை நம்புகிறேன் என்றுதானே அர்த்தம் .. அந்த நம்பிக்கையை அவனால் கெடுக்க முடியவில்லை உடனே கிளம்பி வந்து விட்டான் ... அவன் பக்கத்தில் இருந்தவர்கள் எங்கே என்று கேட்டதற்கு அண்ணன் கூப்பிட்டு விட்டார் என்று ஒரு பொய்யை பார்சல் பண்ணி விட்டு வந்து விட்டான்..
" ஒரு கை வந்து தாங்கி புடியேன். நான் மட்டும் எப்படி கூட்டிக்கிட்டு வர்றது. உணர்வே இல்லாம கிடக்கிறார்.. "
"பார்த்தியா உதவி செய்ய வந்த உடனே பல்ல பிடிச்சு பாக்குற, தள்ளு "என அவளை விலக்கிவிட்டு உள்ளே வந்து வரை அலேக்காக தூக்கி பைக்கில் அமர வைத்தவன் ..
"பின்னாடி உட்கார்ந்து வலுவா பிடிச்சுக்கோடி, கீழே விழுந்திடப் போறார்.. பிறகு எங்க அப்பன கொன்னுட்டான்னு உட்கார்ந்து பொலம்ப கூடாது..
ம்ம்
"உன் அப்பனை மட்டும் பிடி. என் மேல உன் விரல் பட்டுச்சு கொன்றே புடுவேன்" என விரல் நீட்டு எச்சரிக்கை செய்ய..
" ஆமா இவுங்கள தொட்டு தடவி கொஞ்சலைன்னா எனக்கு தூக்கம் வராது .. வேற வழி இல்லாமதான் உன்னய கூப்பிட்டேன்.. ரொம்பத்தான் பண்ற" என அவளும் ஏறி அமர்ந்து அவன் பிடிக்காதே என்று கூறியதற்காகவே , அவனுடைய தோளிலே இறுக்கிப்பிடிக்க ..விருமன் பின்னால் திரும்பிப் பார்க்க.. அவள் புருவத்தை தூக்கி என்ன என்று கேட்டாள்.. தானாக அவன் தலை இல்லை என்று ஆடியது, விரல்கள் தடுமாறி பைக்கை பிடித்தது.. அவன் அறியும் முதல் பெண் ஸ்பரிசம் உடலை அங்கமங்கமாக அதிர செய்தது...
மருத்துவமனை வாசலில் இவன் ஆட்கள் நிற்க...
"அச்சச்சோ இவன்களா... என்று முகத்தை மறைத்தவன்...
"நீ கூட்டிட்டு போ நான் வந்தா ஏன்னு கேள்வி வரும் ..
பதில் சொல்லு ...
"உனக்காக எல்லாம் பதில் பேச முடியாதுடி ..
"ஏன் எனக்காக பதில் சொன்னா துரை குறைஞ்சு போவீங்களா ,"தகப்பனை இருவராக இறக்கி உள்ளே மருத்தவன் அறையில் அமர வைத்துவிட்டு வெளியே வந்தனர்..
"நீ யாருடி?? உனக்காக நான் எதுக்குடி பதில் சொல்லணும் .."
"ம்க்கும் பின்ன எதுக்கு இத்தனை டி வருது ,யோசி பதில் கிடைக்கும், ரூபாய் வச்சிருந்தா கொஞ்சம் செலவுக்கு தந்துட்டு போ" கட்டிய மனைவி போல மல்லுக்கு நிற்க ..
"ஏன் கட்டின வேட்டியையும் உருவி எடுத்திடேன்" என வாய் வைதாலும் , வேட்டியை விலக்கி பட்டாபட்டி டவுசரிலில் ஒரு கட்டு பணத்தை எடுத்து எண்ண..
"ப்ச் கஞ்சப்பய எண்ணி அசிங்கம் பண்ணாத கொண்டா" என புடுங்கி ஜாக்கெட் உள்ளே சொருகி கொண்டாள்..
"ஏய் அங்கன ஏன்டி வைக்கிற...
"பத்திரமா இருக்கணும்ல...
"எந்த உரிமையில நீ என்கிட்ட விளையாடுற ... கூச்சம் இல்லாம காசு புடுங்கிற "
"எல்லாம் நல்ல முறைதேன் , அதோடு உன் காசுக்கு உரிமைக்காரிதேன் , எங்கேயும் போயிடாத தேவைன்னா கூப்பிடுவேன்..? ப்ச் உள்ள இடம் காணல போல குத்துது, கொஞ்சம் மறைச்ச மேனிக்கு நில்லு, சரியா வச்சிடுறேன்" என விருமன் கையை பிடித்து தன்னை மறைக்க முதுகு காட்டி நிறுத்தி, இரண்டு கொக்கி கழட்டி பணக்கட்டை சரி பண்ணிட...
"முடிஞ்சுதாடி...
"இருய்யா வச்சிட்டு இருக்கேன் ... கொக்கி போட முடியல"" என்று ஏக்கி அவன் காதில் கிசுகிசுக்க...
"எந்த கொக்கிடி...
"ப்ச் ரவிக்கை கொக்கிய்யா, ஏற்கனேவே பெருசா, பணக்கட்டை வச்சவுடனே உள்ள அடங்க மாட்டைக்குது "உள்ளே போட்டு கொக்கியை போட திணறி ...
"ப்ச் போகல இதை பிடி "என எட்டி காசை அவன் கையில் கொடுக்க .. அவன் வாசமும் அவள் வாசமும் சேர்ந்தே பணத்தின் மீது அடிக்க , வேகாத இடம் வேக துணிந்து துணி மறைவில் தூணாக நின்றது அவன் அறிந்து கால்களை இடுக்கினான்...
"முடிஞ்சுதா....
"ம்ம் பண்ணிட்டே இருக்கேன் .. என்ன அவசரம் அவள் கைகள் மாட்டும் வேகத்தில் அவன் முதுகில் பட்டு பட்டு மீள ....
"ம்ம் பாதகத்தி வச்சி செய்றாளே". கை நடுங்கியது அவனுக்கு .. அண்ணன் எவ்வழியோ அவ்வழியே பிரம்மச்சரியம் மேறுகொண்டவன் ... இவளில் ஆழ்ந்து போய் கொண்டிருந்தான் ... ஆசை வர வைத்து கொண்டிருந்தாள் ...
"என்னதான்டி பண்ற எவனும் பார்த்துட போறான்" என திரும்பி விட ..
"கொக்கி அத்துடுச்சே எங்கே போச்சுன்னு தெரியலையே" என தாவணியை சற்று விலக்கி வைத்து மின்னல் ரவிக்கையை அங்கும் இங்கும் இழுத்து கொண்டிருந்தவள், இவன் தீடிரென திரும்பி விடவும் தாவணியை இழுத்து மறைக்க மறைத்தாலும் கண்ணாடி மறைவில் பிதுங்கி நின்ற சிறு மலர் அவன் கண்ணுக்கு படத்தான் செய்ததது ...
"என்ன ஆச்சு ??"என்றான் பார்வை வெட்ட வெளிச்சமாக அவள் அங்கம் மேய்ந்தது...
"கொக்கி அந்துடுச்சு போல "குரல் நடுங்கி வந்தது அவன் பார்வை விரல்களை மணலில் கோலம் போட வைத்தது உதடு தானாக கடித்தது ...
"அதெல்லாம் வீட்டுல இருந்து வரும் போது பார்க்கிறது இல்லையாடி" என்றவன் ஒரு மருத்துவர் இவர்களை தாண்டி போக சட்டென்று அவளை இழுத்து சுவற்றில் சாய்த்து அவளை மறைத்தது போல நின்று ...
"மாட்டு" என்றான் மீசையை தடவி கொண்டே ..
"திரும்பு ..
"என்னவோ ஏகப்பட்ட உரிமை இருக்குன்னு சொன்ன.."
உனக்கு அந்த உரிமையை எடுத்துக்க சம்மதம்னா இப்படியே நில்லு ... "என்றவள் அவன் முகம் பார்க்க முடியாது தடுமாற..
"யாராவது வந்துட போறாங்க, மாட்டு" என்று அவள் இருபக்கம் கைவைத்து மறைத்து கொள்ள .. தாவணி மறைவில் கையை விட்டு அவள் தவித்து தடுமாற , விருமன் பார்வை கொல்லாது கொன்றது அவளை...
"ஏன் அப்படி பார்க்கிற "அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ஏதோ வாயசைக்க,, மின்னல் மாட்டேன் என்று தலையசைக்க ... அவனே சட்டென்று அவள் தாவணி விலக்கி செயினில் கிடந்த ஊக்கை எடுத்து குத்தி விட்டவன்.. கரங்கள் செய்யும் செய்கை தாளாது அவள் விரல்கள் அவன் சட்டையை பிடிக்க...
"முடிச்சிட்டு கூப்பிடு ,வெளியே நிற்கிறேன்" என்றவன் மீசை அவள் காதில் உரசியது... அவள் கைகள் அவனை விடாது பிடிக்க...
"சோதிக்காதடி தப்பு பண்ண தோணுது ..."
"எனக்கும்" என்றவள் உதடு துடிப்பு அவனை கண் மூட வைத்தது ... சுற்றி நோட்டம் விட்டான் விடியற்காலை , தூரத்தில் இவன் ஆட்கள் நின்றனர்.. தலையை கோதி கொண்டே அவளை பார்த்தவன்..
"உரிமையை எடுத்துகிட்டா??"..
"இன்னும் எடுக்க தயக்கமா??" என்றவளை சட்டென்று தூண் மறைவில் இழுத்து சாய்த்து, அவள் என்ன என உணரும் முன்பு இதழை கவ்வி கொண்டான்...
ஹக் ம்மா என முனங்கிய அவள் கால் கட்டை விரல் அவன் உயரத்துக்கு தானாக உயர்ந்து, கைகள் அவன் பிடிறி பிடித்து இழுத்து, தன் இதழை அவனுக்கு கொடுக்க,, கவ்வி கவ்வி சுவைத்தவன் கண்கள் அவள் மூடிய கண்களை ரசித்து கொண்டே இதழில் தேன் குடிக்க.. மின்னல் விரல்கள் அவன் முடியை வலிக்க பற்றி உணர்வு அடக்க.... ஈரம் குறைய குறைய இதழ் சுவைத்து விலகினான்..
"கண்ணை தொறடி முடிஞ்சிடுச்சு" என்றான் சட்டையை நீவி கொண்டே... மின்னல் அவனை பார்க்க முடியாது திரும்ப....
"உள்ள கூப்பிடுறாங்க ஒன்னும் ஆகாது போ காத்திருக்கேன்... "
"ம்ம் "என்றவள் தாண்டி போகும் போது அவள் கரத்தை பிடித்து இழுத்தவன்...
"என்ன மறுபடியும் அனாதையா மாத்திட மாட்டியே" என்று தவித்து போய் வார்த்தை வெளியே வர...
"அப்படி ஒரு நிலை வந்தா உன் கண்ணுல தண்ணீ வர்ற நேரம் என் ஜீவன் இருக்காது" என்று கூறி போக ....
"அண்ணன் நானும் வாழ போறேன்"" என்று மானசீகமாக அண்ணனிடம் வாழ்த்து வாங்கினான்...
"வாழ விட்டிருவனாலே உங்க இரண்டு பேரையும் ... காதல் பண்றியா ,,தரம் கெட்டவனே, எண்ணி ஏழாவது நாள் உன்ற காதலை காணாம ஆக்கிபுடுதேன் "என்று மருத்தவர் அறையில் இருந்து வெளியே வந்த நாச்சி சபதம் இட்டு போனதை அவன் காணவில்லை ...
நாச்சி தன் அண்ணனுக்கு தானே எதிரி என நினைத்து அஜாக்கிரதையாக நின்று விட்டான்... மருதுவை சாய்க்க வேண்டும் என்றால் முதலில் இவனை சாய்க்க வேண்டும் என்ற சூட்சமம் தெரிந்தவள் ஆயிற்றே நாச்சி .. மருதுவை சுற்றி உள்ள அத்தனை பேரையும் உடைத்து அவனை தனிமரமாக மாற்ற துடித்தது அவள் பொல்லா இருதயம் ...
நினைத்ததை செய்யும் ...
கொஞ்சம் கிளுகிளுப்பா சீன் வந்திட கூடாது சீட்டுக்கு அடியில கொளுத்திப் போட்டிரு ... அதானே....