மீளா8

Mikka8

மீளா8

மீளா காதல் தீவிரவாதி!!

எத்தனை வருடம் கழித்து இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கின்றனர் ஆனால் அதில் பொட்டளவு பாசம் இல்லையே மொத்தமும் வன்மம், பழி வெறி , நீயா நானா என்ற ஆடுபுலி ஆட்டம் , ஒன்னு நீ சாகணும் இல்லை நான் சாகணும் என்ற பகைதான் இருந்தது ...

"யாரு ____ மகன் வேலைக்கு வந்த பொண்ண கற்பழிச்ச உன் அப்பன் தான் அது , எவளையும் கூட்டி கொடுக்கிற உன் அம்மைதான் அது" , என்று விருமன் தான் மருதுவுக்கு முன்னால் வந்து நின்றான்...

"யாரலே சொன்ன அனாதை நாயே "என்று நாச்சி ஓங்கி விருமனை மிதிக்க போக.. அவர் காலுக்கும் அருவாளுக்கும் ஒரு இஞ்ச் இடைவெளி ரவிட்டு மருது வீசிய அருவாள் நின்றது.. விருமம் பிடித்திருந்தான் இல்லை நாச்சி கால் நார்வேக்கு போயிருக்கும்...

"அண்ணன் பொறுமை எடு...

"என்னலே பொறுமை, என் வீட்டுக்குள்ள கால் வச்ச இவள "என்று மருது காலால் வேட்டியை ஏத்தி கட்டி கொண்டு வர , விருமன் போய் அவனை பிடிக்க பளார் பளார் என செவிப்பறை கிழிந்தது ...

"பிச்சிடுவேன் பிச்சி தள்ளு போ".. வெளியே நின்ற தன் தாயை விழி சுருங்காது குழலி பார்த்தாள்... தன் தாய் தெரியுமே ... 

"என்னடா என்னவோ வெட்டி கிழிச்சிடுவேன்னு சொன்னியாம் , ஒத்த ஆம்பளைக்கு பிறந்தது உண்மைன்னா வெட்டுடா பார்க்கலாம்" என்று நாச்சி மருதுவை சீண்டி விட .. கீழே கிடந்த அருவாளை காலால் தெண்ணி எடுத்த மருது , நாச்சி கழுத்தில் அருவாளை வேகமாக வீச போக...

அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆ!!! என்று அலறி கொண்டே குழலி சுருண்டு விழுந்தாள் .....

"ஹாஹாஹா ஆடு பகை குட்டி உறவா?? என் மேல உன் சுண்டு விரல் பட்டா கூட உன்ற பொஞ்சாதி , உனக்கு இல்லடியோவ், இதே ஊர்ல உன் கண்ணு முன்னாடிதாம்லே இருப்பேன்.. முடிஞ்சத பாரு என்ன ஏதாவது பண்ண நினைச்ச , இதோ கிடக்காளே நான் பெத்த முட்டா கூவ ,இவ கழுத்தை சத்தமே இல்லாம அறுத்து போட்டிருவேன்.. உனக்குதேன் தெரியுமே ,அறுக்கிறதும், இரத்தமும் எனக்கு புதுசு இல்லைன்னு" என்று கல்லறையை பார்த்து இளக்காரமாக சிரித்தவர் ... மருதுவின் நடையை ஒரே வார்த்தையில் தடுத்துவிட்டார்..

"எனக்கு எவன் எப்படி போனாலும் கவலை கிடையாது உன்ற தாலிய வாங்கிட்டு ,உன் கூட வாழ்றவ என்ன பொறுத்த வரைக்கும், அவளும் ஒரு எதிரி தான் ..நீ எனக்கு ஏதாவது செய்ய நினைக்கும் முன்னமே அவ தலை கழுத்துல இருக்காது.. அவதான் உனக்கு உசுரே.. இப்போ என் மேல கை வைடா பாக்கலாம்" என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்க, மருது நாச்சியார் சங்கை பிடித்து தூக்கிட சற்றும் அதிராது அவனைப் பார்த்த தமக்கையை பல்லை கடித்து நோக்கியவன்..

"என் கண்ணு மேல உன்ற நிழல் பட்டுச்சு , இந்த மருதுபாண்டி யாருன்னு நீ பார்க்க வேண்டி இருக்கும் .."

"என்னலே பண்ணுடுவ , ஊரே நினைச்சுகிட்டு இருக்குது இவ வாழ்க்கை நரகமாகினது உன்னாலன்னு, ஆனா எனக்கும் உனக்கும்தான்லே தெரியும் .. இவ வாழ்க்கையை நரகமாக்கிக்கிட்டு இருக்கிறது நான்.. ஏன் தெரியுமா? ஏன்னா இவள உனக்கு பிடிக்கும்.. அந்த ஒரே காரணத்துக்காக நான் பெத்த மகன்னு கூட பாக்காம வன்மத்தை தேக்கி வைத்து அவளை உன்கிட்டயிருந்து பிரிச்சி வச்சிக்கிட்டே இருந்தேன் .. திமிருகிட்டு அலையிரியா, உன் கண்ணுல இருந்து கண்ணீர் வர வச்சு இந்த வாழ்க்கையே வேண்டாம்னு நாண்டுகிட்ட சாக வைக்க வேண்டாம்.. அது ஒன்னுக்கு தான் இவளை உயிரோடு விட்டு வச்சிருக்கேன்... இல்ல, எப்போ அவள உனக்கு பிடிக்கும்னு தெரிஞ்சதோ அப்பவே அவளை இல்லாமல் ஆக்கி இருப்பேன்.. " என்றதும் மருது பொத்தென்று நாச்சியை கீழே விட்டான்.. ச்சை என்றுதான் அவனுக்கு தோணியது திருந்தா ஜென்மம் எப்படி போனதோ,அப்படியே வந்திருக்கு இவள தொட்டு என் கை கூட பாவம் செய்து விட்டது என்று தான் நினைத்தான் ..

"எப்போ எப்படி உன்ன அழிக்கணும்னு எனக்கு தெரியும் இடத்தை காலி பண்ணு ... என்று மருது திரும்ப போக.. 

போ போ உன்ற பொண்டாட்டி கூட வாழ்ந்திடலாமம்னு ஆசையில இருக்க போல அதுவும் நல்லதுதேன், வாழ்ந்து ருசி கண்டுட்டா இன்னும் உனக்கு இழப்பு ஜாஸ்தில, உன் இழப்பு ஒவ்வொன்னுயும் சரக்கு அடிச்சு கொண்டாடப்போறேன.. பார்த்துட்டே இரு நாச்சி ஊருக்குள்ள வந்துட்டா ..இனி இந்த மருதுபாண்டிக்கு அடி சறுக்கிகிட்டேதான் இருக்கும் வரவா?" என்று புல்லட்டில் ஏறி அமர்ந்து ஓங்கி உதைத்து காற்றாக காற்றோடு காற்றாக கடந்து போன நாச்சியாரை அண்ணனும் ,தம்பியும் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தனர் ..

"மதினி மயங்கி கிடக்குது அண்ணே, நாம இருக்கும்போது மதனிக்கு என்ன ஆயிட போகுது என்னன்னு வந்து பாருங்க" என்றதும் மருது மூளை அப்போதுதான் வேலை செய்ய.. தன் மனைவியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.. 

அவளை தூக்கி தன் தொடையில் படுக்க வைத்து கன்னத்தை தட்டினான் .. பாவம் பல்லிக்கு பயந்து அலறும் அவளை ஆளுக்காள் அருவாளும் கத்தியும் வைத்து ஷோ காட்டினால், என்ன செய்வாள் இதுக்கு மேல முடியாது பக்கிகளா என்று படுத்தே விட்டாள் ...

"கண்ணு கண்ணு!! எழும்பு "தட்டியதில் , அணிலுக்கு ராமன் மூணு கோடு போட்டது போல அவள் கன்னத்தில் மூன்று கோடாக அவன் விரல் தடம் விழுந்தது .. அந்த ஆக்கத்தில் ஆள் எழுப்பியது 

"விலகி போண்ணே, எதையாவது மெதுவா பண்றியா.. பாவம் ஏற்கனவே மயங்கி கிடக்காவ, நீ அடிக்கிற அடியில மொத்தமா போய் சேர்ந்துடுவாக போல இருக்கு தள்ளிப்போ" என்று விருமன் தண்ணியை எடுத்து வந்து அருகே உட்கார்ந்தவன் குழலியின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப.. கண்களை முழித்த அவள் பார்த்தது என்னவோ அருவாளை கையில் வைத்து சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருந்த மருதுவைதான் ..

எங்க அம்மாவ கொன்னுட்டானா?? என்று பதற வைத்து விட்டான்...

"மதனி பயந்துட்டீங்களா ஒன்னும் நடக்கல , வாங்க கொஞ்ச நேரம் போய் படுத்து தூங்குங்க.. சரியா போயிடும்" என அவளுக்கு வழிகாட்டி விட்டுவிட்டு அண்ணனிடம் வந்து அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று கேட்க .. மருதுவுக்கு தான் ரகசியம் ரகசியமாக பேச தெரியாது அல்லவா , மனைவி உள்ளே படுத்து கிடந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது கூட மூளைக்கு உரைக்காதவன் உண்மையை உரக்க பேசு என நாலு ஊருக்கு கேட்க பிளான் போட்டான்...

"நாச்சியார் பின்னாடியே நம் ஆட்களை அனுப்பி விடுடா ,எப்போ வகையா கிடைக்கிறாளோ அப்போ போட்டுற சொல்லு ,அவளை விட்டு வைக்கிறது என்னைக்கா இருந்தாலும், நமக்கு ஆபத்துதேன் ஊருக்குள்ள இவ்வளவு திமிரா வந்து இருக்கான்னா, ஏதோ திட்டத்தோடதான் வந்திருக்கணும், இனி அவளை தலை எடுக்க விடக்கூடாது .. அவ நம்மளை எதிர்த்து நிற்கிறதுக்கு முன்னாடி.. நாம அவள முடிச்சுடணும் .."

"எனக்கு என்னவோ அவுக மதனியை வச்சி விளையாட போறாகன்னு தோணுது ... 

"அதெல்லாம் என்ற பொஞ்சாதி பக்கம் வர முடியாது இவள காட்டி திசை திருப்ப பார்க்கிறா, எதா இருந்தாலும் நான் சொல்லுறதை செய்லே..

"எனக்கு என்ன நீ சொல்ற, நான் செய்யுறேன் , சரி அண்ணே அப்படியே பண்ணிடுறேன் என்று விருமன் போய்விட்டான் ..

அவளுக்கு ஏற்கனவே மருது என்றால் ஆகாத விருந்தாளி , இவன் பேச்சைக் கேட்ட குழலிக்கு

பயத்தில் இரண்டு நாள் குளிர் காய்ச்சல்.. நம்ம ஆளுக்கு பாசமா கொஞ்ச வேற தெரியாதா?, நாயே பேய என சகட்டு மேனிக்கு திட்டி திட்டி வைக்க ..

யார் அங்கே இந்த சோதனை காரனை தூக்கி இருட்டு அறையில் போட்டு அன்னம், தண்ணி கொடுக்காமல் சாவடியுங்கள்!! குழலி மட்டும் ராணியாக இருந்திருந்தால் கட்டளை போட்டிருப்பாள் அந்த அளவிற்கு மருதுபாண்டி அருகாமையை வெறுத்தாள்..

விருமம் வந்து நாச்சியை அண்ணன் எதுவும் செய்யல என்று சொன்ன பிறகுதான் அவளுக்கு நிம்மதி பெரும் மூச்சே வந்தது..

என் அம்மாவை என்கிட்ட இருந்து இத்தனை வருஷம் பிரியிறதுக்கு காரணம் இவன்தான் .. நான் அந்த அறையில் வெளிச்சம் பாக்காமல் கிடந்ததற்கு காரணமும் இவன்தான்... ஊர் செழிப்பு இல்லாமல் செத்து கிடக்க காரணமும் இவன்தான்.. ஆக எல்லா காரணமும் தன் புருஷன் ஒருவன் தான் என்று மனதில் பதிய வைத்துவிட்டு போய்விட்டாள்.. 

நாச்சியார் தேவி வந்த காரியத்தை சிறப்பாக முடித்துவிட்டாள் மருது தன் பக்க நியாயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை .. அது அவளுக்காகதான் தெரிய வேண்டும் , அவளாக அறிந்து கொள்ளட்டும் என்று மருதுவும் கடந்த காலங்களை அட்டை பெட்டியில் அடைத்து பரண் மேல் போட்டாச்சு ..அது அலாவுதீன் பூதம் போல புகையோடு கிளம்பி வந்து ஊஊஊ ஊதும் என அறியவில்லையே...

இந்தா இப்படியே படுத்து படுத்து கிடக்காத எழும்பி கொஞ்சம் நட..

முடிஞ்சா எழும்ப மாட்டேனா, மூணு நேரமும் கூழ தந்து குடின்னு அடைச்சு.. அன்ன தளர்ச்சி ஆகி போனது... எழும்பி குளி , நட , உட்கார் என சோதனை பண்ணி அவளை உலாத்த வைத்து உடலை தேத்தி விட்டான்.. குழலி சின்னதுக்கு கூட சுருண்டு விடுவாள் அவன் விரட்டினால்தான் இவன் திட்டுவான் என பயந்து தலையை தூக்குவாள் என்றுதான் அவன் மிரட்டி ஓட விடுவது... அவன் கோவமும், கடிந்து கொள்ளுதலுக்கு பின்னே அவளின் மீது தீரா காதல் ஒன்று இருந்தது .. அவன் சிம்மாசனத்தில் முடிசூடா ராணி அவள் என்று அவள் அறிய போவதும் இல்லை இவன் அறிவிக்க போவணும் இல்லை .. மொத்தத்தில நாம ஒருத்தரையும் வாழ விட போறதும் இல்லை..  

 காய்ச்சல் சற்று குணமாகி , குழலி மாலை நேரம் தலைக்கு குளித்து துவட்டி கொண்டு நிற்க.. போனில் பேசி கொண்டே உள்ள வந்த மருது..

"ஏன்டி அறிவு கெட்டவளே எதுக்கு இப்ப குளிச்ச ஜன்னி வந்து தொலைக்க போகுது , நீ என்னடா, வை போன , பிறகு பேசுறேன்.. " அந்தப்பக்கம் அலோ அலோ போட்ட விருமனுக்கு ஒலோ கேப் புக் பண்ணி கொடுத்து விட்டு மனைவி நோக்கி வந்தான்..

"காச்ச சரியாகல எதுக்குடி குளிச்ச "டவலை வாங்கி பரபரவென தலை கழண்டு கையில் வந்து விடுவது போல அரக்கி துவட்டி விட..

"இன்னைக்கு நீங்க கேட்ட குளிச்சியா வந்துச்சு" இரண்டுபேரும் அதிகமா பேசிய வார்த்தை இந்த குளிச்சியா வார்த்தைதான் ..அவன் கைகள் இரத்த ஓட்டம் நின்று வேகம் குறைந்து மனைவி நோக்கி குனிந்து ..

"முடிஞ்சுதா?" என்றான் காதில்.. ஏதோ ஒரு அமாஷ்ய குரலில்.. இவ சொல்லாம இருந்திருந்தா அவன் பாட்டுக்கு போயிருப்பான்.. இவ எதை எப்போ சொல்லணும்னு தெரியாம..அவன் திட்டிலிருந்து காத்து கொள்ள.. சொல்லியாச்சு அவன் கசாப் போட இடம் தேடி விட்டான்.. குழலியை தன் பாதத்தின் மீது தூக்கி நிறுத்தி. தன் திண்ணிய மார்பு அவள் அழகு குவியலை தழுவ.. இடித்து நிற்க விட்டவன் உடலில் ஆசை அணுக்கள் எண்ணிக்கை நால் மடங்கு கூடி இடையில் எழுச்சி அவள் இடையை உரசியது .. குழலிக்கு இவருக்கு என்ன தொட்டாலே கீழே என்னவோ ஓடுது .. அது என்னவா இருக்கும் என்று கணவன் அணைப்பில் நின்று தீடிரென தோன்றும் வானவில் எதுவென தெரியாது பெருஞ் சந்தேகத்தில் நின்றாள்.. அவள் காய்ந்த முடி உள்ளே முகத்தை புதைத்த மருது 

காச்ச போச்சா?? என்றான் அவள் கழுத்தை தடவி பார்த்து கொண்டே..

கூழ் போதுமடா சாமி !!சோறு திங்கணும்!! என்ற ஆசையில் குழலி..

"ஆமா போச்சுதுங்க .. "

"கண்ணுஊஊஊஊஊஊ..

"இப்ப மட்டும் கண்ணு.. இல்ல கண்ணை நோண்டி எடுக்கிறான் என்றுதான் அவளுக்கு எண்ணம் வந்திருக்கும்..

"கண்ணு ஓடை பக்கம் வச்சு முதல் ராவு கொண்டாடுவோமா ??"என்று ஹஸ்கி வாய்ஸில் காட்டுவாசி பேச... பேய்கள் அது யாருடா நமக்கு டப் கொடுப்பது என்று அலறிவிடும்.. 

"எனக்கு இன்னும் காச்சல் போகல" என்று அலர்ட் ஆகி தப்பிக்கும் முன் குழலியை, கொத்தாக அள்ளி கொண்டு ஓடை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..