மெய் பேசும் மித்தியமே-27

மெய் பேசும் மித்தியமே-27

மெய் பேசும் மித்தியமே-27

திருமணம் முடிந்த அன்றிரவு தங்களது அறையில் உட்கார்ந்திருந்த சூர்யா நிகிதாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன அத்தான் இப்படி பார்த்திட்டிருக்கீங்க.என்கிட்ட எதுவும் பேசணுமா?”

“இப்போ என்கிட்ட எதுவும் பேசணுமான்னு கேட்கிறவ.கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட பேசணும்னு சொன்னதுக்கு ஏன் வேண்டாம் முடியாதுன்னு சொன்ன?போன்லகூட பேசாம இருந்த?எங்க அக்காவை வைச்சு உங்கக்குடும்பமே கார்னர் பண்ணினதும் இல்லாமல் எங்கப்பாவும் என்னைக் கார்னர் பண்ணினாரு.எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு உனக்கு மெசேஜ் பண்ணிருந்தேன்.நீ பார்த்துட்டும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தாம என் கையால தாலி வாங்கிருக்க. உனக்கு எவ்வளவு தைரியாம்?”என்று சீறினான்.

“எதுக்கு அத்தான் என்கிட்ட கோபப்படுறீங்க.உங்களை மாதிரிதான் நானும் எங்கப்பா அம்மா சொன்னாங்கன்னு உங்களை நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.நான் என்ன கோபமாவா இருக்கேன்.இல்லல்ல.இதுதான் வாழ்க்கைன்னு ஏத்துக்கலையா?”

“யாரு நீ உங்கப்பா அம்மா சொன்னதைக் கேட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அதை நான் நம்பணும்?அதெப்படி எந்தவித உறுத்தலும் இல்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட.எனக்கு உன்னைப்பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இவ்வளவு தூரம் இழுத்து வைச்சிருக்க.உடனே உன்கூட எப்படி வாழ்வேன்னு நினைச்ச?”

“ஆமா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்த்தான்.அதுதான் அப்பா சொன்னதும் ஒத்துக்கிட்டேன்.இதுல என்ன தப்பிருக்கு.மாமா பையன் அத்தைப்பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிறது புதுசா என்ன?உலகத்துல நடக்குறதுதானே”

“ஆமா அதெல்லாம் யாரு இல்லைன்னு சொன்னா.பட் நான் இன்னும் கல்யாணத்துக்கு மனசளவுல தயாராகவேயில்லை.எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுது நிகிதா.இப்போதைக்கு எல்லாம் என்னால் உன்கூட வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது”

“என்னத்தான் சொல்றீங்க?”கொஞ்சம் படபடப்போடு கேட்டாள்.

“ப்ச்ச் உனக்கு எல்லாமே புரியும் நிகிதா.புரியாத மாதிரி நடிக்காத.எனக்கு கொஞ்சம் டைம் வேணும் உன்கூட வாழ்றதுக்கு அவ்வளவுதான்.ஆனால் அந்த டைம் எவ்வளவு நாள்னு எனக்குத் தெரியாது.உனக்குப் பொறுமை இருந்தால் பொறுமையா இரு.எனக்கு இப்போ தூக்கம் வருது.இந்த கல்யாணத்துல வந்த ஸ்ட்ரெஸ் டென்சன்ல தூக்கமே இல்லை.குட்நைட்”என்றவன் தலையணையை எடுத்துப்போட்டு படுத்துக்கொண்டான்.

நிகிதா இதை எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ந்து அப்படியே நின்றிருந்தாள்.ஆனாலும் அதை அவனிடம் காண்பிக்காது அப்படியே போய் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அவ்வளவுதான் அதற்குமேல் இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் என்பது தனியாக இல்லை.

வீட்டில் எல்லோரும் இருக்கும்போது சாப்பிட்டியா?சாப்பாடு வேணுமா அத்தை கேட்கச்சொன்னாங்க?என்ற ரீதியில் நிகிதா கேட்டால் வேணும் வேண்டாம் நானே சாப்பிட்டுக்கிறேன் என்று அவன் பதில் சொல்வான் அவ்வளவுதான்.

அதற்குமேல் பேச இருவருக்கும் இடையில் எதுவுமே இல்லை!அவர்களாக அந்த சுவாரசியத்தை உருவாக்கவும் முயற்சிக்கவும் இல்லை!

ஆறுமதம்வரைக்கும் இப்படியே போக நிகிதா தங்களது பிரச்சனையை அண்ணன் பிரசாந்திடம் சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான் இரண்டேநாளில் நிகிதாவின் அம்மா அப்பா அண்ணன் அண்ணி என்று எல்லோருமே அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிவிட்டனர்.

அப்போதான் ட்யூட்டிக்குப்போயிட்டு வந்து சூர்யாவைப் பார்த்ததும் நிகிதாவின் அம்மா சௌந்தரி திட்டினார்.

“என்ன சூர்யா நீ உன்னை நம்பி என் பொண்ணைக் கட்டிக்குடுத்தால் அவக்கூட வாழாமல் இருக்கன்னு இப்போதான் சொல்லுறா.ஏன் உனக்கு நிகிதாவைப் பிடிக்கலைன்னு முதல்லயே சொல்லித் தொலையவேண்டியதுதானே. என் மகளோட தகுதிக்குத் தகுந்த மாதிரி மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டி வைச்சிருப்பனே.போயும் போயும் சாதாரண கவர்மெண்ட் டாக்டர் உனக்கு அவளை கட்டி வைச்சிருக்கமாட்டேன்”என்று எகிறினார்.

ராஜசேகர் தனது அக்கா பேசுவதைக் கேட்டும் ஒன்றும் சொல்லாமல் சூர்யாவைத்தான் பார்த்தார்.

அவனுக்கு வந்தக் கோபத்தில் வீட்டில் இருந்த பெரிய பூந்தொட்டியை எடுத்து அப்படியே கோபத்தில் அத்தையின் மீது போடவந்தவன் கிளாஸ்டேபிளில் போட்டான்.அது உடைந்து தெறித்ததில் அப்படியே பயந்து உறைந்து நின்றுவிட்டனர்.

“இங்கப்பாருங்க வார்த்தைகளை கவனமா பேசணும்.நான் கேட்டனா உன்கிட்ட வந்து நான் பொண்ணு கேட்டனா?தம்பி மகன் அழகா இருக்கான் நமக்கு அடங்கியிருப்பான்.ஏற்கனவே அவன் அக்கா வேற நம்ம வீட்டுக்கு வாழவந்திருக்கா அதனால் நமக்கு அடிமையா இருப்பான்னு நினைச்சு கல்யாணம் பண்ணி வைச்சீங்க.அதுக்கு நானா பொறுப்பாவேன்.நான் டாக்டருக்கு படிக்கிறேன்னு தெரிஞ்சதுல இருந்து உன் தம்பிக்கிட்டப் பேசிப்பேசி என் தலையில உன் பொண்ணைக் கட்டி வைச்சிட்ட இப்போ உடனே வாழணுமா?அப்படியெல்லாம் ஒருமயிரும் வாழமுடியாது.எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் வாழமுடியும்.உன் பொண்ணுக்கு உடனே ஆம்பளை பக்கத்துல படுக்கணும்னா டிவோர்ஸ் வாங்கிட்டு வேறோருத்தனை கட்டிக்கச் சொல்லு”என்றவன் அதுக்குமேல அங்கு நின்று பேசாது காரை எடுத்துக்கொண்டு பீச்சிற்கு வந்துவிட்டான்.

ஆனால் அவன் பேசிய வார்த்தையின் வீரியம் நிகிதாவின் இதயத்தை தாக்கியிருந்தது.

“அவன் ஏன் இப்படி பேசினான்.நான் என்ன ஆம்பிளைக்கு ஆசைப்பட்டா அத்தானைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.எனக்கு அவனைப் பிடிச்சதுனாலதானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.இதுல என்ன தப்பிருக்கு?எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத்தானே செய்திருப்பாரு.இதுல நானா இருக்கிறதுல என்ன வந்துச்சு.இதுக்குமேல இங்க இருக்கக்கூடாது”- என்று கோபத்தில் அப்பா அம்மாக்கூடவே கிளம்பிப் போய்விட்டாள்.

நான் போறேன்னு ஒரு வார்த்தைக்கூட அவன்கிட்ட கேட்கவும் இல்லை பேசவும் இல்லை.உடனே கிளம்பிப் போயாச்சு.

நள்ளிரவில் கடற்கரை மணலில் படுத்திருந்த சூர்யாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது.அவன் கண்களை மூடிக் கல்யாணம் நடந்ததைப் பத்தி யோசிக்கும்போதே கோவில்பட்டியில் பார்த்த ரோஜாவின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

அவள்பெயர்கூட அவனுக்கு ஞாபகமில்லை.ஆனால் அவளது முகம் மனதில் நீங்காதிருந்தது.அப்படியே கண்ணைமூடிப்படுத்திருந்தவன்”யாரோ செத்துப் போனவளுக்காக நான் ஏன் உயிரோடு இருப்பவளை வதைக்கணும்?நிகிதாவோடு வாழ ஆரம்பிக்கலாமா?”என்று யோசனை செய்தான்.

ஏனோ நிகிதாவோடு உடல்ரீதியான தொடுகை, வாழ்க்கை என்று யோசிக்கும்போதே அவனால் அதை அடுத்த நிலைக்குக் கொண்டுப்போகமுடியாது என்று பட்டென்று கண்களைத் திறந்தான்.

இதென்னடா நமக்கு வந்த சோதனை?தாலிக்கட்டிட்டேன் வாழணும்னு முயற்சி பண்றேன். ஆனா எனக்கு அவக்கிட்ட நெருங்கவே முடியலையே.சின்னவயசிலிருந்தே அவளைப்பிடிக்காது.அவங்கக் குடும்பத்தைப் பிடிக்காது.இதுல நம்ம அப்பா பிடிவாதம் பிடிச்சு கட்டிவைச்சா எப்படி வாழ்றது?இன்னைக்கு அத்தையை வேற இப்படித் திட்டிட்டு வந்துட்டமே?”என்று அதற்கும் மனவருத்தப்பட்டவன் விடியகாலையில் எழுந்து வீட்டிற்கு வந்தான்.

அவன் வரும்போது ராஜசேகர் முழித்துதான் இருந்தார்.மகனைக் கண்டதும்”இங்கப்பாரு என் அக்கா மகளோடு வாழ்றதா இருந்தா மட்டும் இந்த வீட்டுக்குள்ள வா இல்லையா வெளியப்போயிரு.இதுக்குமேல உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.

அவரையே சிறிது நேரம் பார்த்தவன்”நீங்கதான் கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்தை நடத்தி வைச்சீங்க.நானும் வாழத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.எனக்கு இன்னும் டைம் தேவை.இதுக்குப்பிறகும் வந்து என்னையும் என் செல்ப் ரெஸ்பெக்ட்டையும் சீண்டுனா நான் சும்மா இருக்கமாட்டேன் அவ்வளவுதான்.அப்புறம் இந்த வீட்டுல இருக்கக்கூடாது வெளியப்போ அப்படி இப்படின்னு மிரட்டினீங்கன்னா அதுக்குப் பயப்படுற ஆளு நானில்லை.உங்க மேலயே கேஸைப்போட்டு மொத்த சொத்தையும் பிடுங்கிடுவேன்.இனி யாருக்கும் பயப்படமாட்டேன்.நான் இப்போ லாங் லீவு போட்டுட்டு கார்டியாலஜி படிக்கப்போறேன்.இரண்டு வருஷம் படிப்பு.இனி என் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம்தான் என் கல்யாண வாழ்கையை யோசிக்கணும்.அதுவரைக்கும் என்னைத் தொந்தரவு செய்யாதிங்க”என்று முடித்துவிட்டான்.

அவனை மறக்கமுடியாது தவித்தது நிகிதாதான்.அவளால் சூர்யாவை விட்டுக்கொடுக்க முடியாது என்று நினைத்து நினைத்து வேதனையோடு அம்மா வீட்டில் இருந்தாள்.

அங்கயே வேலைக்குப்போக ஆரம்பித்தாள்.அவர்களுக்குள் இரண்டுவருடம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை.

சூர்யபிராகஷ் தனது மேற்படிப்பை முடித்துவிட்டுத்தான் ஓரளவு வாழ்க்கையை வாழலாம் என்று யோசித்தான்.

ஆனாலும் ஏனோ இந்த பிரிவில்கூட நிகிதாவைப் பார்க்கணும் அவளோடு பேசணும் என்று எந்த எண்ணமும் வரவில்லை.அவளை நினைத்தால் அவள் உடலிலும் உள்ளத்திலும் எந்தப்பரவசமும் வரவில்லை.அது ஏனென்று அவனுக்கும் புரியாத புதிராக இருந்தது.

மகன் படிப்பை முடித்ததும் ராஜசேகர் சூர்யாவையும் லலிதாவை தன்னோடு அமெரிக்காவுக்கு அழைத்தார்.

தனது அப்பாவுடைய திட்டம் என்னவென்று தெரிந்தும் தனது வாழ்க்கையை சரிப்பண்ணவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே போனான்.

அவ்வளவுதான் நிகிதாவுக்கு கைகால் எதுவும் ஓடவில்லை.அவள் உண்மையாகவே அவனுக்காக காத்திருந்தாள்தான்.அதனால் ஒருவிதமான சந்தோசம் சூர்யாவைப் பார்த்ததும் வந்தது.

நிகிதா அம்மா சௌந்தரிக்கு நிகிதாவுக்கு இனியும் சூர்யாவோடன வாழ்க்கை மகளுக்கு சரியாக வராது என்று புரிந்துக்கொண்டதால் மீண்டும் இரண்டுபேரும் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை.

அவர் நேரடியாகவே குடும்பத்தாரை எல்லோரையும் அழைத்து தனது தம்பியின் முன்பாகவே தனது முடிவை சொல்லிவிட்டார்.

“இன்னும் மூணு மாசமோ இல்லை ஆறுமாசமோ இரண்டுபேரும் தனி வீட்டுல வாழட்டும்.அதுக்கப்புறமும் வாழ்க்கையைத் தொடங்கலன்னா டைவோர்ஸ் வாங்கிட்டு இரண்டுபேரும் பிரிஞ்சு அவங்க அவங்க வாழ்க்கையை பார்த்துக்கட்டும்.இதுக்குமேலயும் என் மகள் வாழ்க்கைக்காக காத்திருக்கமுடியாது”

சூர்யா ராஜசேகரைப் பார்த்தான்.அவரோ அதெல்லாம் அவன் வாழ்வான் என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டார்.

சூர்யாவோ “நான் சொன்னமாதிரி இப்பவும் நிகிதாவோடு வாழலாம்னு வந்திருக்கேன்.முடிஞ்சா வாழ்றேன் இல்லைன்னா நானே விலகிப்போயிடுவேன்.உங்கப்பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ணிக்கங்க”என்று தனது முடிவைச் சொல்லிவிட்டான்.

அதைக்கேட்ட நிகிதா தீர்க்கமாக சூர்யாவைப் பார்த்தாள்.அதின் அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை.

அவர்களுக்கான தனி வீட்டில் முதல்நாளில் இருக்கும்போதே சூர்யா நிகிதாவிடம் பேசினான்.

“நான் முதல் முதல் ஒரு பொண்ணைப் பார்த்தேன்.அந்தப்பொண்ணுக்கு அப்போ பதினாறு வயசு இருக்கும்.ஆனால் அந்தப்பொண்ணு உயிரோட இல்லை.அந்தப்பொண்ணைத் தவிற வேற எந்தப்பொண்ணையும் ஆசையோடு பார்த்ததில்லை.இனியும் அப்படி பார்ப்பனான்னு தெரியலை.உன்னையுமே எனக்குப் பிடிக்காதுதான்.அது உனக்கும் தெரியும்.ஆனால் நீயே தெரிஞ்சும் இப்படி வந்து என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?நான் முயற்சிப் பண்றேன்.இல்லைன்னா பிரிஞ்சிடுவோம்”

“என்ன அத்தான் இப்படி பேசுறீங்க?”என்று அதிர்ந்துக் கேட்டாள்.

“இது நீயா ஏற்படுத்தி வைச்சிருக்க வாழ்க்கை பிரச்சனை.அதை சரிப்பண்ண முடிஞ்சளவு முயற்சிப் பண்றேன்.அவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்”என்று முடித்துவிட்டான்.

அவனது மனதும்சரி உடலும்சரி எந்தவிதத்திலும் நிகிதாவோடு வாழ்வதற்கு ஒத்துழைக்கவேயில்லை.

நிகிதாவுக்கு முழுவதுமாகப் புரிந்துவிட்டது.

இதற்குமேலும் சூர்யா அத்தான் நார்மலா நம்மளோடு வாழபபோறதில்லை என்று முடிவாக உணர்ந்துக்கொண்டாள்.

அதற்கு என்ன தீர்வு என்று யோசித்தவள் தானாக ஒரு முடிவை தனது வாழ்க்கையில் எழுதிக்கொண்டாள்.அதனுடைய விளைவுதான் இப்போது மூன்றுபேருடைய வாழ்க்கையை சிதைத்துக்கொண்டிருக்கிறது.

ஒருநாள் திடீரென்று ஹாஸ்பிட்டலில் இருந்து சூர்யாவுக்கு நிகிதா போன் பண்ணினாள்.

“என்ன சொல்லு?”

“ஒரு உதவி?”

“என்ன உதவி?”

“இங்க நம்ம இந்தியன் பேரண்ட்ஸ் ஒருத்தங்க ஐ.வி.எப் பண்ண டோனர் தேடுறாங்க.ஸ்பெர்ம் டோனர் இங்க உள்ளவங்கதான் இருக்காங்க.நீங்க ஸ்பெர்ம் டோனேட் பண்ணமுடியுமா?”என்று நேரடியாகக் கேட்டாள்.

“என்ன?”

“ஸ்பெர்ம் டொணேட் பண்ணனும் டோனரா வர்றீங்களாத்தான்.வேற யாருக்கிட்டயும் கேட்கமுடியாது அதுதான் சாரி”என்று வைத்துவிட்டாள்.

“சரி பர்ஸ்ட் டைம் ஒரு உதவி கேட்கிறா.போவோம் வீணாப்போறது யாருக்காவது பயன்படட்டுமே!” என்று கெத்தாகப்போனான்.

தானும் ஆம்பளைத்தான் எனக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கிறது.ஆனால் அது உன்கிட்டதான் எனக்கு வரமாட்டுக்கு வரவும் செய்யாது என்பதை நிருபித்து அப்படியே நல்ல ஸ்பெர்ம் டோனராக மாறி தானத்தை வாரிவழங்கிவிட்டு வந்தான்.

அதுக்கப்புறம் ஒரே மாசத்துல நிகிதா கர்பமாகியிருக்கேன்.உன் குழந்தைதான் என் வயிற்றில் இருக்கிறது என்பதைச் சொல்லி அவனை தலைமுடியைப் பிச்சிக்கிட்டு நிற்க வைத்தாள்.

நிகிதா வாந்தியெடுக்கவும் சாப்பாடு ஏதாவது சாப்பிட்டிருப்பா என்று தனது அறையில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் போர்வையை போத்திக்கொண்டு தூங்கினான்.

ஆனால் அவனது போர்வையை விலக்கி பிரக்னன்சி கிட்டினைக் காண்பித்து “கர்ப்பம் உறுதியாகிடுச்சு.நான் கர்ப்பமாக இருக்கேத்தான்.நீங்க கொடுத்த ஸ்பெர்ம் மூலமா எனக்கு நானே ஐ.வி.எப் மெத்தடுல பண்ணிக்கிட்டேன்”என்று பெரிய குண்டைத்தூக்கி அவனது தலையில் போட்டாள்.

அதைக்கேட்டு முதலில் அதிர்ந்தவன் அவளது எண்ணத்தைப் புரிந்துக்கொண்டவன்”தேவையில்லாத ரிஸ்க் எடுத்திருக்க நிகிதா?எப்போதுமே யாருக்கிட்டயும் எதையும் போர்ஸ் பண்ணித் திணிக்கக்கூடாது.அதுமேல வெறுப்புத்தான் வரும்.நீ என்மேல ஆசைப்படுறன்னு தெரியும்.ஆனால் உன் காதலையும் ஆசையையும் எனக்குள்ள திணிக்கபார்த்த பார்த்தியா அங்கதான் நீ தப்பு பண்ணிட்ட.எனிவே வாழ்த்துகள்”என்றுவிட்டு இன்னும் போர்வையை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

இதுலயும் நிகிதா முற்றிலுமா தோற்று உடைந்துப்போனாள்.அதனுடையை வெளிப்பாடு எப்படி இருந்துச்சுன்னா ‘குழந்தையைப் பெத்து இவன் குழந்தைன்னு சொல்லி இவனை நம்மளைவிட்டு போகவிடாதபடி செய்யணும்’ என்ற வெறி அவளுக்கு அப்போதுதான் வந்தது.

அதை நடத்தியும் காட்டினாள்.ஆனால் சூர்யா அவளிடமிருந்து நிரந்தரமாக பிரிந்துவந்துவிட்டான்.

அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதுதான் அவனை காயப்படுத்த ஒவ்வொன்றாக செய்துக்கொண்டிருக்கிறாள்.

பாவம் அவளும் அவனை உண்மையாகத்தானே நேசித்தாள்!