மெய் பேசும் மித்தியமே-25

மெய் பேசும் மித்தியமே-25

மெய் பேசும் மித்தியமே-25

மூன்று மாதம் கழித்து…

ரோஜாவும் பூஜாவும் ஸ்கூலுக்கு ரெடியாகி வெளியே வரவும் இருவரையும் சூர்யா கண்ணெடுக்காது பார்த்திருந்தான்.

அதை ரோஜாவும் பார்த்தாள்தான்.ஆனாலும் கண்டுக்காது அமைதியாக கிளம்பி இரண்டு எட்டுத்தான் எடுத்து வைத்திருந்தாள்.

“ஒத்தை ரோசா என்ன இந்த மச்சான கவனிக்காம போற?இந்த மச்சானுக்குக் கஞ்சிக் கிஞ்சி ஊத்துறது”என்று கேட்டவாறே எழுந்து அவளருகில் வந்தான்.

பூஜாதான் “அப்பாஆஆஆ சூலுக்கு நேரமாதிட்டு.போணும்”என்றவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஆமா ஆமா உங்க ஸ்கூலுக்கு நேமாகிட்டுத்தான்.அதுதான் இன்னைக்கு டாடீயே கொண்டுவிடட்டுமான்னு உங்க ரோஜாம்மாகிட்டக் கேளு”

“வேணாம்”

“என்ன பூஜா டக்குன்னு வேண்டாம்னு சொல்லிட்ட?அப்பா வர்றேன்டா உங்களை விடுறதுக்கு”

“வேணாம்”

“ஏன்டா?”

“ரோஜாம்மா சொன்னா நீ வேணாமாம்”

“ஏனாம்?”

“ரோஜமா ஏன்?”

“ம்ம் உங்கப்பாவோட கையும் காலும் சும்மாவே இருக்கமாட்டுக்கு அதனால வேண்டாம்.நாம நம்ம வண்டியிலயே போகலாம்”

“அப்போ நான் வேணாமா?”

“எழும்பி ஹாஸ்பிட்டல் போயா.நோயாளியை பார்க்கச் சொன்னா இங்க உட்கார்ந்து பொண்டாட்டிக்கு சேவகம் பண்ணவான்னு கேட்டுட்டு இருக்காரு”

அதைக்கேட்டதும் அப்படியே மெதுவாக எழுந்து ரோஜா பக்கம் வந்தவன்”ஏன்டி புருஷன்னா கையகால வைச்சுட்டு சும்மாவ இருப்பான்!அப்படி இப்படி கை படத்தான் செய்யும்.அதுக்காக என்னை வேண்டாம்னு சொல்லுவியா?”

“பூஜா இருக்கா இல்லைன்னா நல்ல சொல்லுவேன்.காலையில வரைக்கும் உன் கைகால் சும்மாவாய்யா இருந்துச்சு.உள்ள சேட்டையெல்லாம் செய்துட்டு இப்போ வந்து நல்லபிள்ளை மாதிரி பேசுறதப்பாரு”என்று எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டு கிளம்பினவளின் கையைப்பிடித்துப் உள்ளே இழுத்துப்போனான்.

“டாக்டரு கையைவிடு.நேரமாகிட்டு” என்று அவனிடமிருந்து விடுபட நினைக்க அவனோ உள்ளயே வைச்சு அழுத்திப்பிடித்திருந்தான்.

“இங்கப்பாரு அம்மா நேத்தே ஊருக்குக் கிளம்பி போயிருக்காங்க.எனக்கோன்னமோ அம்மா இப்படிப்போனதுல ஏதோ உள்குத்து இருக்கும்னு தோணுது.நீயும் பூஜாவும் கொஞ்சம் கவனமாகவே இருங்க”

“ஏன்?” முகத்தை சுருக்கி கொண்டு சந்தேகத்துடன் கேட்ட ரோஜாவின் கன்னத்தில் கை வைத்த கொஞ்ச நேரம் அமைதியாக நின்றிருந்தான்.

“டாக்டரு”என்று கொஞ்சம் பயத்தோடு ரோஜா அவனது கண்களைப் பார்த்தாள்.

“ஏன்டி பயந்துச் சாகுற?எந்த சூழ்நிலையிலும் நான் உனக்குத்தான்.அது இந்த ஜென்மத்துல மாறாது.என் மேல கொஞ்சம் நம்பிக்கை வையிடி”

“நம்பிக்கையில்லாமலா உன்கூட வாழ்ந்திட்டிருக்கேன் டாக்டரு.அதுல்ல ஏனோ பயமா இருக்கு.ஒருவேளை நீ என்னை பிரிஞ்சிருவியோன்னு பயமா இருக்கு?பூஜாவை என்னைவிட்டு பிரிச்சிருவெயோன்னு தோணுது?”

“அது அது பூஜா விசயத்துல என்னால ஒரு முடிவு சொல்லமுடிமாதுடி.என்விசயத்துலதான் நான் உறுதியாக இருக்கமுடியும்”

“அப்போ பூஜாவை என்கிட்ட இருந்து பிரிச்சிருவியா டாக்டரே?”நெஞ்சம் பதறக் கேட்டவளின் கண்ணீர் அவனை அப்படியே பதறவைத்தது.

“லூசாடி நீ?எதுக்கு அழற.அதுதான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருக்கனே.அதுக்கப்புறமும் இப்படி பதறினா என்ன அர்த்தம்?”

“அது அது தானா பதற்றம் வருதுங்க.நம்ம வேணும்னா வேற எந்த ஊருக்காவது போயிடலாமா?”என்று கண்களை உருட்டி கேள்விக்கேட்டவளைப் பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது.

“என்னை நேசிக்கிறதுவேற ஆனால் பூஜாவையும் சேர்த்து நேசிக்கிறாளே!இந்தக்காதலையும் அன்பையும் நம்பித்தானே என் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறேன்.இதுல எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

“ஏய் ஒத்தை ரோசா ஸ்கூலுக்கு கிளம்பு பூஜா வெளியே காத்திருக்கா பாரு”என்று அவளது நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கிவிட்டு போ என்றான்.

ரோஜாவுக்கு மனதே சரியில்லாது அமைதியாக திரும்பினாள்.அவளது கையை மீண்டும் பிடித்து இழுத்தவன் எதுவுமே பேசாது அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

அவளுக்கும் அந்தணைப்புத் தேவைப்பட்டது.அதனால் அவனது முதுகோடு தனது கையைப்போட்டுப் பிடித்துக்கொண்டாள்.

“ரோஜா”

“ம்ம்ம்”

“ரோஜாம்மா”

“சொல்லுய்யா”

“எந்த சூழ்நிலையிலும் என்னோடு நிப்பல்லடி”

“ம்ம்ம்”

“என்னடி ம்ம்ம்ங்குற?”

“வேற என்ன சொல்லணும்?”

“உன்கூடத்தான் எந்த சூழ்நிலையிலும் நிப்பேன்னு சொல்லுடி”

“இதைச்சொன்னாதான் நான் உன்னோடு நிப்பனா என்ன?உனக்கே தெரியும்,அப்புறம் எதுக்குக் கேட்கிற?”

“இல்லடி மனசுக்கு ஒருமாதிரி இருக்குல்ல அதுதான் கேட்டேன்”

அவனது முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.இதுசரிவராது என்று நினைத்தவள் எவ்வி அவனது நெற்றியில் முத்தம் வைத்தாள்.

அவள் குடுத்த முத்தத்தை வாங்கிக்கொண்டு கண்ணை மூடி அப்படியே நின்றிருந்தவனின உதட்டில் தனது உதட்டை வைத்தாள்.

அவளது உதட்டின் வெப்பம் அப்படியே அவனது உதட்டின் வழியே உள்ளேபரவியது. அவ்வளவுதான் அவளை வளைத்துப் பிடித்து உதட்டை வேகமாகக் கடித்து வயிற்குள் இழுத்தான்.

இந்த அதிரடியை அவள் எதிர்பார்க்கவில்லை.ஷ்ஷ்ஷ் என்று சத்தமிட்டாலும் அந்த வலி அவளுக்குப்பிடித்திருக்க அப்படியே நின்றிருந்தாள்.

அவன்தான் அவளது உதட்டின் சுவையில் எப்போதும்போல் தன்னை மறந்து அவளுக்குள் மூழ்கிடத் துடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜாவும் அவனில் நுழைந்து தன்னைத் தொலைக்கக் காத்திருந்தாள்.

சூர்யாவுக்கு அவளின் அருகாமையும் அவளும் தேவை என்றிருந்தது.

அப்படியே சுவரோடு அவளை சாய்த்து முத்தத்தை வன்மையாக அவளது உதட்டின் வழியாக வாயிற்குள் நுழைத்துக்கொண்டிருந்தான்.

அவளது உடல் நெகிழ்ந்து அவனோடு இழைந்தது. அப்படியே கண்களை மூடிக்கொண்டு நின்ற ரோஜாவிற்கு அடுத்த எதையுமே செய்யும் நிலையில் இல்லை.அவளது மூச்சு மேலும் கீழும் ஏறியிறங்கியது.

அவளது உடலின் அசைவை அவனது உடல் தெளிவாக உள்வாங்கியது.அதனால் இன்னும் கொஞ்சமாக சாய்ந்து அவள்மேல் சரிந்தான்.

ரோஜாவால் அவனது எடையைத் தாங்க முடியாது அப்படியே மூச்சுவாங்க அவனது நெஞ்சில் கைவைத்து போதும் என்று தள்ளினாள்.

சூர்யாவோ அவளது கையைப்பிடித்துக்கொண்டு தனது உதட்டில் வைத்து முத்தம் வைத்தான்.

“என்ன ஐயாவுக்கு இன்னைக்கு பீலிங்க்ஸோ பீலிங்க்ஸா இருக்கு.நான் ஸ்கூல் போகணும் விடுங்க”

“நான் கொண்டு வண்டியில விடுறேன்டி”

“வேண்டாம் சாமி வேண்டாம்.நாங்களே போயிக்கிறோம்”என்று அவனைப் பார்த்த பார்வையில் ‘உன்னை எனக்குத் தெரியாதாடா மூணு மாசமா உன்கூடத்தானடா குடும்பம் நடத்துறேன்’ என்ற நக்கல் சிரிப்பும் சேர்ந்திருந்தது.

“அதுசரி எப்படியும் சாயங்காலாம்என்கிட்டதானடி வந்து நிக்கணும்.நான் உன் புருஷன்டி”என்று மீசையைக் கடித்தவாறே அவளை பார்வையால் மேய்ந்தான்.

“என்ன பார்வையின்னு இப்படி பார்த்து வைக்கிற டாக்டரு?” என்று அவனிடமிருந்து வெட்கப்புன்னகையோடு நகர்ந்தவளை மீண்டும் இழுத்து முகத்தைத் தாங்கிப்பிடித்து அவளது நெற்றியில் முத்தம் வைத்தான்.

இருவரது மூச்சுக்காற்றும் உஷ்ணமாகி அப்படியே ஒன்றோடொன்று கலந்தது.இருவரது பார்வைகளும் கலந்து நெருங்கத் துடித்துக்கொண்டிருக்க, மெதுவாக சூர்யா தனது தலையைச் சாய்த்து அப்படியே தனது உதட்டை விரித்து அவளது உதட்டைக் கவ்விக்கொண்டான்.

அந்த முத்தம் அவ்வளவு ஆழமனாதாகவும் உணர்வுள்ளதாகவும் இருவருக்கும் இருந்தது.அதனால் அவனது கைகள் ரோஜாவின் முகத்தைத் தாங்கிப்பிடித்துக்கொண்டது.

உதடுகளோ அவளது இதழ்களைக் கவ்வி மீண்டும் மீண்டும் இழுத்துப் பற்கள் கொண்டு அழுத்திப்பிடித்துக் கடித்து முத்தம் வைத்தான்.

அதற்குள் “ரோஜாம்மா”என்று பூஜா கூப்பிடவும் இரண்டுபேரும் பதறி விலகி நின்றனர்.

ஆனால் அவர்களுக்குள்ளே அந்த வெட்கச்சிரிப்பு அப்படியே வெடித்து வந்தது.அதனால் இருவரும் அந்தச் சிரிப்போடு வெளியே வர பூஜா அவர்களைப் பார்த்து தலைசாய்த்து சிரித்தாள்.

அவ்வளவுதான் அந்தச் சிரிப்பில் இருவரும் மயங்கியவர்கள் ஓடிப்போய் அவளை சூர்யா தூக்கிக்கொள்ள, ரோஜா அவளது கையைப்பிடித்துக்கொண்டாள்.

இதுக்குமேல இங்க நின்னா சரியாகாதுன்னு ரோஜா அப்படியே பேக்கெல்லாம் தூக்கிக்கொண்டு கீழிறங்க சூர்யா மகளைத் தூக்கிட்டு வந்தான்.

சூர்யா தனது பைக்கின் முன் மகளை வைத்துவிட்டு வண்டியை எடுக்கவும் மல்லிகா வேகமாக வந்தார்.

ரோஜாவுக்கு கல்யாணம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே குணசேகரன் தனது மகன் தினேஷே அவனே பள்ளிக்கு அழைத்துச்செல்லத் தொடங்கினான்.

ரோஜாவுக்கு அது வருத்தமாக இருந்தாலும் அதைப் பழகிக்கொண்டாள்.இனி அவர்கள் குடும்பம் வேறு நம்ம குடும்பம் வேறுதானே.ஏற்கனவே அண்ணனுங்க இரண்டுபேரும் நம்ம மேல கோபத்துல இருக்காங்க.இதுல நம்ம என்ன செய்யமுடியும்?என்று அப்படியே அமைதியாக தனது குடும்பம் வாழ்க்கை என்று ஒதுங்கி இருக்கத் தொடங்கினாள்.

அண்ணனுங்க மட்டும்தான் பேசமாட்டாங்க மத்தபடி கருப்பசாமி மல்லிகா மகளையும் மருமகனையும் கொண்டாடத்தான் செய்கிறார்கள்.

“பட்டுமா”

அவர் கூப்பிட்டதும் பைக்கில் ஏறியவள் இறங்கி நின்றாள்.

“என்னம்மா?”

“நேத்தே சொன்னம்லா பட்டுமா இன்னைக்கு புது நெல்லு குத்தி சோறு பொங்குறேன்னு மறந்துட்டியோ?முதல்ல உனக்குத்தானே தருவேன்.இந்தா இதுல பாயசமும் வடையும் வைச்சிருக்கேன்.டாக்டருக்கு தனியா வைச்சிருக்கேன் உனக்கும் வைச்சிருக்கேன்.சாப்ட்ருங்க”என்று சாப்பாடு பையைக் கொடுத்தார்.

“யம்மா ஏன் இவ்வளவு செய்த?உன் மகனுங்க இப்போ பார்த்தா முறைப்பானுங்க பாரு”என்று அவளது அண்ணனுங்க அவளிடம் பேசாமல் இருக்கும் வருத்தத்தோடு சொன்னாள்.

“க்கும் உங்கண்ணனுங்களை உனக்குத் தெரியாத பட்டு”

“எது சொன்னாலும் இப்படி ஒன்னைச் சொல்லிடு.நான் கிளம்புறேன்”என்று வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

சூர்யா வண்டியை எடுத்து வெளியே வரவும் கருணாகரன் வண்டியில் உள்ளே வந்தான்.

அவனது பார்வை எல்லாம் தங்கைமேல்தான் இருந்தது.ஆனாலும் அன்று நம்ம சொன்னதையும் மீறி அந்த டாக்டருக்கூட வாழப்போயிட்டாளே? என்ற ஆதங்கம் இன்னும் அவனது மனதில் இருக்கிறது. 

ரோஜவடு பேசாமாட்டான் என்பதால் அந்தக்கோபத்தில் சூர்யாவைப் பார்த்து முறைத்துவிட்டுப்போனான்.

“ஏன்டி இவன் எதுக்குடி எப்பவும் என்னைய பார்த்தே முறைக்கிறான்.இப்போ நான் அவன் தங்கச்சி புருஷன்.அந்த மட்டு மரியாதை வேண்டாமா என்ன?”

“யோவ் டாக்டரு நீ செய்த வேலைக்கு எங்கண்ணனுங்க வெட்டிப்போடாமல் என்கூட வாழவிட்றுக்காங்களே அதுவே பெரிய விசயம்.இதுல மரியாதை குடுக்கலன்னு ஐயாவுக்கு ரோசம் வருதோ ரோசம் சரிதான்”

“அப்படி என்னடி தப்புச்செஞ்சேன்.எனக்குப் பிடிச்சவளுக்குத் தாலிகட்டினேன்.இது தப்பா?”

“தப்பேயில்ல ராசா தப்பேயில்ல நீங்க செய்தது எதுவுமே தப்பில்லை.தப்பெல்லாம் எங்க அண்ணனுங்க மேலதான் போதுமா.வண்டியை பார்த்து ஓட்டு”

“அப்படி புருஷனுக்காக எப்போதும் பேசுடி.அதுதான் நல்லது”

“யாருக்கு நல்லது?”

“எனக்கு நல்லது”

“அதானே பார்த்தேன்”என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்கூலும் வந்துவிட அவர்களை இறக்கிவிட்டான்.

“ஆமா நான்தான் உன்னைக் கொண்டுவிடவேண்டாம்னு சொன்னனே.அப்புறம் என்ன தைரியத்துல என்னை உன் வண்டியில ஏத்திட்டு வந்த?”என்று அப்போதுதான் யோசித்துக் கேட்டாள்.

“உன் புருஷன் வண்டியில் வந்ததுக்கு ஏன்டி இவ்வளவு யோசனை?எவன் என்ன சொல்லிடப்போறான்?”

“எவனும் எதுவும் சொல்லமாட்டான்.நீ ஒழுங்கா கூட்டிட்டு வரமாட்ட,அப்புறம் எதுக்குத் தேவையில்லாத அலப்பறை.பார்க்கிறவனெல்லாம் மனசுகுள்ளயே கறிச்சிக்கொட்டுறதுக்கா?பாரு ஊருக்கு வந்த டாக்டரையே வளைச்சுப்போட்டுட்டா.இவளுக்குக் கல்யாணமே ஆகாதுன்னு இருந்துச்சு இப்போ மிணுக்கிறான்னு சொல்லுறதுக்கா?”

“யம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன் போ ஸ்கூலுக்கு நேமாச்சு.பூஜாம்மா டாட்டா”

“டாட்டாப்பா”

“நீயும் டாட்டா சொல்லேன்டி” 

“போயா யோவ்”என்றவள் உள்ளே போகவும் கையைப்பிடித்து இழுத்தவன் சட்டென்று கன்னத்தில் முத்தம் வைத்தவிட்டு பறந்துவிட்டான்.

“ஐய்யோ!” என்று சொல்லி திரும்பிப் பார்ப்பதற்குள் போய்விட்டான்.

“இந்த டாக்டரை திருத்தவே முடியாது” என்று வெட்கச்சிரிப்போடு சந்தோசமாக உள்ளே போனாள்.

அவளுக்கு அந்த சந்தோசம் மத்தியானம் வரைக்கும்தான் நிலைத்தது.பூஜாவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு முகமெல்லாம் கழுவி துடைத்துவிட்டு நின்றவள் முன்பாக போலீஸ் வந்து நின்றிருந்தது.

“என்னாச்சு?என்ன பிரச்சனை?”என்னு அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவளின் முன்பாக ஒரு அழகான பொண்ணு வந்து நின்றாள்.

“சார் இவதான் என் பொண்ணு பூஜா.இவளைத்தான் என் ஹஸ்பண்ட் சூர்யபிரகாஷ் மறைச்சு வைச்சிருக்காரு.என்னைப் பார்க்கவிடாமல் இங்கவந்து ஒளிச்சு வைச்சிருக்காரு.எனக்கு என் குழந்தையை மீட்டுத்தாங்க”என்று அழுதாள்.

அவள் பேசுவதையெல்லாம் கேட்ட ரோஜாவுக்கு அப்படியே நெஞ்சமெல்லாம் நடுங்கியது.

“இதுதான் பூஜா அம்மாவா?பூஜாவைத் தூக்கிட்டுப்போக வந்திருக்காங்களா?அப்போ இனி பூஜா என்கிட்ட இருக்கமாட்டாளா?ஐயோ கடவுளே?”என்று நினைத்தவள் பூஜாவைத் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

பூஜாவும் அவளது தோளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு பூஜாம்மா நான் மம்மிக்கூட போகமாட்டேன் என்று அழவேத் தொடங்கிவிட்டாள்.

அவள் அழவும் ரோஜா அவளோடு கிளாஸ்ரூமுக்குள் போக இன்ஸ்பெக்டர் அவளது வழியை மறைத்து நின்றார்.

“இது அவங்கக் குழந்தைல மிஸ்.நீங்க எதுக்கு எடுத்து வைச்சிருக்கீங்க?அவங்கம்மா ஆதாரத்தோடு கேஸ் குடுத்து குழந்தையை மீட்டுத்தாங்கன்னு வந்திருக்காங்க.நீங்க குழந்தையை எடுத்து வைச்சிருக்கீங்க.அவங்கம்மாகிட்டக் குடுங்க”

“குடுக்கமுடியாது சார்.அவங்கப்பா வந்தப்பிறகு குழந்தையை யாருக்கிட்ட இருக்கணும்னு பார்த்துக்கலாம்.சும்மா அம்மான்னு யாராவது வந்தா எல்லாம் குழந்தையை தரமாட்டேன்” என்று பூஜாவை தன்தோளோடும் நெஞ்சோடும் சேர்த்துப்பிடித்துக்கொண்டாள்.

பூஜா நடுங்கியவாறே ரோஜாவின் நெஞ்சுக்குள் கண்களை மூடிக்கொண்டும்,தோளில் கையைப்போட்டுக்கொண்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தலைசாய்த்துப் படுத்திருந்தாள்.

அதைப்பார்த்த பூஜாவின் அம்மாவும் சூர்யாவின் முன்னாள் மனைவியுமான நிக்கிதா வெறுமையாகப் பார்த்து நின்றவள் மெதுவாக அடியெடுத்து வைத்து ரோஜாவின் அருகில் வந்து பூஜாவை வெடுக்கென்று பிடுங்கியவள்”அடுத்தவ புருஷனைத்தான் நீ எடுத்துக்கிட்ட,அடுத்தவ குழந்தையையுமா உனக்கு வேணும்?உனக்கு வேணும்னா நீ பெத்துக்க.அதுவும் முடியாதா?அப்போ எல்லாமே அடுத்தவக்கிட்டயிருந்துதான் திருடுவியா?உனக்குன்னு சொந்தமா ஒன்னுமே இல்லையா?என் உறவுகளை என்கிட்ட இருந்து திருடி வாழ்ற வெட்கமா இல்லை?”என்றவள் பூஜா கதறி அழ அழ தூக்கிக்கொண்டு போனவளின் கண்களில் ரோஜாவின் மீது அவ்வளவு குரூரம் தெறித்தது!

நிக்கிதா பேசிய வார்த்தைகளைக் கேட்ட ரோஜா அப்படியே துடித்துப்போனாள்.

நிக்கிதாவிடம் இருக்கும் பூஜாவைப் பார்த்தவாறே ரோஜா மயங்கிச் சரிந்தாள்!