மெய் பேசும் மித்தியமே-26

மெய் பேசும் மித்தியமே-26
ரோஜா மயங்கியதும் பிரின்ஸிபால் பயந்து உடனே டாக்டருக்கு போன் பண்ணிட்டார்.
“சூர்யா சார் உங்கப்பொண்ணை யாரோ நிக்கிதான்னு ஒருத்தவங்க போலீஸோடு வந்து என் பொண்ணுன்து தூக்கிட்டுப் போயிட்டாங்க.ரோஜா மயங்கிவிழுந்துட்டாங்க.எங்களால ஒன்னும் செய்யமுடியல”
“என்ன என் மகளைத் தூக்கிட்டுப்போயிட்டாங்காளா?ரோஜா மயங்கிட்டாளா?ஏய் லூசு பிரின்ஸிபாலே இப்போ போன் பண்ணிருக்கு.போலீஸ் வந்ததுமே போன் பண்ணிருக்க வேண்டியதுதானே”என்றவாறே ஹாஸ்பிட்டலில் இருந்து ஓடிவந்தான்.
அவன் வரும்போதே அங்கே ரோஜாவை குணசேகரனும் கருணாகரனும் தங்களது காரில் தூக்கி படுக்க வைத்துக்கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்ததும் சூர்யா”என் பொண்டாட்டிய எங்கத் தூக்கிட்டுப்போறீங்க?அவ மயக்கமா இருக்கான்னு தெரியாதா?”என்று காருக்குள் ஏறப்போனான்.
கருணாகரனோ “நீ இதுவரைக்கும் செய்தது போதும்.எங்க தங்கச்சியை நாங்க பார்த்துக்கிறோம்.உன் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துதான் உன் மகளைத் தூக்கிட்டுப் போயிருக்கா.என் தங்கச்சியை நீ பார்த்துக்கிட்டவரைக்கும் போதும்.முதல்ல உன் பிரச்சனையை சரிப்பண்ணிட்டு வந்து என் தங்கச்சியைப் பாரு”என்றவன் அவனைத் தள்ளிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர்.
சூர்யாவைத் தள்ளிவிட்டதும் இதுவரைக்கும் பொறுமையாக இருந்தவன்,இப்போது கோபத்தில் தனது வண்டியை எடுத்துக்கொண்டு நேராக ரோஜாவின் வீட்டிற்கு வந்தவன் “ரோஜா! ரோஜா!”என்று அழைய்தவாறே உள்ளே ஏறிப்போனான்.
அவன் உள்ளே வருவதைப் பார்த்த கருணாகரன் அவனை வழிமறித்து “எங்க வந்த?வெளியப்போ”என்று அவனது நெஞ்சில் கைவைத்துத் தள்ளினான்.
அதில் சூர்யா கோப்பட்டு அவனை வேகமாக அறைந்துவிட்டான்.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
குணசேகரன் உடனே ஓடிவந்து அவனது சட்டையைப்பிடித்யு இழுக்க,கருணாகரன் அவனை அடிக்கப்போனான்.
அவ்வளவுதான் இரண்டுபேரையும் எதிர்த்துப்பிடித்து சூர்யா அவர்களை அடிக்கப்போனான்.
அதற்குள் கருப்பசாமி ஓடிவந்து “லேய் நிறுத்துங்கல நம்ம வீட்டு மருகனை இப்படியா அடிக்கப்போவீங்க.அறிவுக்கெட்டவனுங்களா.அவரை விடுங்கல”என்று இடையில் வந்து நின்று பிரித்துவிட்டார்.
மூவரும் ஒருவரையொருவர் அடித்துவிடும் கோபத்தில்தான் இப்போதும் நின்றிருந்தனர்.
“மாமா உங்களுக்காகத்தான் இவங்களைச் சும்மா விடுறேன்.ரோஜாவுக்கு என்னாச்சுன்னு ஓடிவந்தா இவருங்கவேற இடைஞ்சல் பண்ணிக்கிட்டு நிக்கிறாங்க.ஏற்கனவே நான் உங்கக்கிட்ட சொன்னதுதான் இன்னைக்கு நடந்திருக்கு.நிக்கிதா வந்து பூஜாவை போலீஸ் துணையோடு தூக்கிட்டுப்போயிட்டா. அதை நான் போலீஸ் வைச்சு கோர்ட் மூலமா பர்த்துக்கிறேன். இவனுங்க எதுக்கு என் பொண்டாட்டிக்கும் எனக்கும் இடையில் வர்றானுங்க?இதுக்குமேலயும் இவங்க எங்க வாழ்க்கையில் பிரச்சனை பண்ண வந்தா நான் சும்மா இருக்கமாட்டேன்.மச்சான்கன்னும் பார்க்கமாட்டேன்” என்று கோபத்தில் கொந்தளித்துக் கேட்டான்.
நாங்க ஏன் உங்க வாழ்க்கைக்கு இடையில் வர்றோம்னு உனக்குத் தெரியாதா டாக்டரே?என் தங்கச்சியை அசிங்கமா திட்டிட்டுப்போயிருக்கா உன் முதல் பொண்டாட்டிட்டின்னு சொல்லுறவ.அதுவும் ஸ்கூல்ல எல்லார் முன்னாடியும் வைச்சு கேவலப்படுத்தி பேசிட்டு உன் மகளைத் தூக்கிட்டுப்போயிருக்கா. இது என்தங்கச்சிக்குத் தேவையா?அதோட என் தங்கச்சிக்கு இரண்டாவது பொண்டாட்டிங்கிற பெயர் வேற. இப்போ ஊரெல்லாம் தெரிஞ்சுதுன்னா எவ்வளவு கேவலமா இருக்கும்? இனி என் தங்கச்சி உன் கூட வாழவும் வேண்டாம் உன் கூட இருக்கவும் வேண்டாம் என்று தூக்கிட்டு வந்தோம்.இதுல என்னல தப்பிருக்கு?”
“என் கூட வாழனுமா? வாழ வேண்டாமா? அப்படின்னு யோசிக்க வேண்டியது ரோஜா மட்டும்தான். நீங்க இல்ல.நான் அவ இழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி உங்க அப்பாகிட்டயே எல்லா விஷயத்தையும் சொல்லி அவரோட சம்மதத்தோடுதான் உங்க தங்கச்சிக் கழுத்துல தாலியே கட்டினேன். உங்க அப்பாகிட்ட கேட்டு பாருங்க. என்ன மாமா உங்க மகனுங்ககிட்ட உணாமையை இன்னும் சொல்லலையே?” என்று வேதனையோடு கேட்டான்.
“எதுக்கு மருமகனே அவங்களுக்கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லி அவங்க மனசையும் கஷ்டப்படுத்தணும்,எல்லாரும் வேதனைப்படுத்தணும்னுதான் நான் எதையுமே சொல்லல. இப்போ இவ்வளவு பிரச்சனை வந்ததுக்கப்புறம் அவங்களுக்கும் தெரியட்டுமே”
நீங்க சொல்லுறதும் வாஸ்தவம்தான்.அவங்களுக்கு இந்த பிரச்சினைகள் எல்லாம் தெரிவதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்ல. அதுக்கு முன்னாடி ரோஜாவை நான் பார்க்கணும். அவ மயங்கி விழுந்துட்டான்னு கேள்விப்பட்டதும் உடனே ஓடி வந்தேன்.நான் அவளை பார்க்க முடியாமல் தவிச்சிட்டிருக்கேன்.இப்போ வந்து இவ்வளவு பிரச்சனை உங்க மகனுங்க செய்திட்டிருக்காங்க. என் சொந்த பொண்டாட்டியை பார்க்கிறதுக்கு உங்ககிட்ட எல்லாம் போராட வேண்டியதிருக்கு” என்றவன் அவர்களை தள்ளி கொண்டு ரோஜாவின் அறைக்குள் சென்றான்.
அவனுக்கு பூஜாவை நிக்கிதா அழைத்துக்கொண்டு போனது அதிர்ச்சில்லை. ஏற்கனவே எதிர்பார்த்து இருந்த ஒன்றுதான். அம்மா இங்கே இருந்து போனதுமே அவன் இதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்தான்.
ஆனால் ரோஜா மயங்கி விழுந்ததுதான் இப்போது அவனால் தாங்கிக்க முடியவில்லை. ஓடி வந்து அவளது கையை தொட்டுப்பார்த்து ஒரு மருத்துவனாக பரிசோதித்தவனுக்கு ஒரு நிமிடம் அப்படியே தனது இருதயமே நின்றுவிடும் போல இருந்தது.
இப்போது இருக்கும் இந்த நிலைமையில் இதை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை வேண்டாமா?என்று புரியாது அமைதியாக மனைவியையே பார்த்திருந்தான். எனக்கு ஏன் இவ்வளவு சோதனை? என்று வருத்தப்பட்டான்.
என்ன செய்யவென்று தெரியாது அப்படியே ரோஜாவின் கையை எடுத்து தனது நெஞ்சில் வைத்துக் கொண்டு கண்களை மூடி உட்கார்ந்திருந்தான்.
ஒன்றை நம்மிடமிருந்து பிரித்துவிட்டு இன்னொன்றை தருவதுதான் இந்தக் கடவுளின் விளையாட்டா? என்று நினைத்தவாறே உட்கார்ந்திருந்தவன் கண்ணீர் அவளது கையில் விழுந்தது.
அந்தக் கண்ணீருக்கு வீரியம் அதிகம்போல சட்டென்று ரோஜாவை மயங்கியநிலையை உயிர்ப்பித்திருந்தது.
ரோஜா சட்டென்று கண்களை திறந்து பார்த்தாள்.சூர்யா தனது கையை பிடித்துக் கொண்டு கண்ணீரோடு உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் மச்சான் என்று கூப்பிட்டு கதறியவள் எழுந்திருக்க முயன்றாள்.
அவனோ வேண்டாம் என்று தடுக்க அதைக்கேட்காது எழுந்தவள் அவனை ஆவேசமாக கட்டிக்கொண்டாள்.
“பூஜாவை தூக்கிட்டு போயிட்டாங்க மச்சான். பூஜாவை தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பூஜா பாக்கணும் எனக்கு பூஜா வேணும்.அந்தப்பொம்பளை என்னை ரொம்ப மோசமா பேசிட்டா மச்சான்.அவக்கிட்டயிருந்து பூஜாவைக்கூட்டிட்டு வாங்க.பாவம் நம்ம பூஜா.அவளைப் பார்த்து பூஜா பயந்து அழுதா தெரியுமா?அவளை இப்பவே போய் தூக்கிட்டுவாங்க”என்று அழ ஆரம்பித்தாள்.
அதைக்கேட்டவனுக்கு பூஜாவை நினைத்து அழுகையும் வேதனையும்தான் வந்தது.அதை வெளிக்காட்டிக்காது அவளது முதுகைத் தடவி கொடுத்து சமாதானப்படுத்தினான்.
உங்கப்பாக்கிட்டயும் உன்கிட்டயும் பூஜா என் குழந்தைதான் அது எப்படி வந்தது என்று எல்லாத்தையுமே சொல்லி இருக்கேன். அவளுக்கு அம்மாவும் இருக்காங்க அப்பாவும் இருக்காங்க. ஆனா அது யாருகிட்ட வளரனும் அப்படின்னு இனி முடிவு பண்ண வேண்டியது நீயும் நானும் இல்லை. கடவுளும் அந்த கோர்ட்டும்தான். பூஜா விஷயத்தில் நான் இப்போ எதுவும் செய்ய முடியாது .அதற்கு பதிலா கடவுள் உனக்கு உனக்கென்று குழந்தையை தந்து ஆசீர்வதித்திச்சிருக்கார்.எவ்வளவு பெரிய விசயம் எப்போ தெரியுது பாரு”என்று வருத்தப்பட்டான்.
“என்ன?என்று நம்ப முடியாது ரோஜா அதிர்ச்சியில் முழித்தாள்.
சூர்யா அவளது வயிற்றை தொட்டு காண்பித்து “நீ கர்ப்பமா இருக்கடி. இது என்னாலயே நம்ப முடியல எவ்வளவு பெரிய ஆச்சரியமான விஷயம் தெரியுமா? ஆனால் இந்த நேரத்தில் பூஜா நம்மளை விட்டு பிரியணும்னு அதே கடவுள் விதிச்சு வச்சிருக்கதுதான் கொடுமையான விஷயம்டி.என் மகள் பூஜா கண்டிப்பா என்கிட்ட வருவா.என்னோட அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவள் நம்மகிட்ட வந்திடுவாடி” என்றவனை அவள் கட்டிக் கொண்டாள்.
ரோஜாவுக்கும் அதை நம்பவும் முடியாது நம்பவும்வேண்டும் என்பதால் தனது வயிற்மில் கைவைத்துப் பார்த்தாள்.
தனது கணவன் டாக்டர் என்பதால் நம்பித்தான் ஆக வேண்டும் என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு தோளில் அப்படியே சாய்ந்திருந்தாள்.அவளது கண்முன்னே பூஜை அழுது கொண்டு போனது தான் வந்து நின்றது.
உடனே சூர்யாவின் முகத்தைத் தனது கையில் ஏந்தியவள் “எனக்கு கடவுள் கல்யாண வாழ்க்கை தந்தார். இப்போ நடக்கவே நடக்காது கிடைக்கவே கிடைக்காது என்கிற குழந்தை பாக்கியத்தையும் தந்திருக்கிறார். இதே மாதிரி கண்டிப்பா பூஜாவையும் என்கிட்ட கொண்டு வருவார்” என்றுநம்பிக்கை வார்த்தை சொன்னாள்.
நானும் இதை நம்புறேன். ஆனால் அதற்கு செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு. நம்ம இன்னைக்கே சென்னைப் போகணும் உடனே கிளம்பு என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
கருணாகரனின் குணசேகரனை பார்த்து மச்சான் உங்ககிட்ட சண்டை போடணும் அடிக்கணும் என்கிறது எல்லாம் என்னோட நோக்கமில்லை. நீங்க செய்ததைத் தடுத்தேன் அவ்வளவுதான். ஆனாலும் என் வாழ்க்கையில என்ன நடந்தது என்று உங்களுக்கு ஒரு தெளிவு கொடுத்துட்டா நமக்குள்ள இந்த பிரச்சனைகள் இனி திரும்ப வராதுபாருங்க என்று தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தான்.
எட்டு வருடங்களுக்கு முன்பு…
கோவில்பட்டியிலிருந்து ட்ரான்ஸ்பராகி சென்னைக்கு வந்து வேலைப்பார்த்துக்கொண்டிருந்தான்.
லலிதா வந்து சூர்யா”இன்னைக்கு அப்பா கனடாவுல இருந்து வர்றாரு.அவருக்கூடவே நிக்கிதாவும் இங்க வர்றாளாம்.உங்க அக்கா தகவல் சொன்னா”
“யாரு அந்த அமெரிக்கா பீத்தல் நிக்கிதாவா சரிதான்.எனக்கு தலைவலி ஆரம்பம்னு சொல்லுங்க”
“ப்ச்ச் என்ன பேசுற சூர்யா.அவ உன் அத்தை மக,அதைவிட உன் அக்காவுக்கு நாத்தனார். அவளுக்கும் உனக்கும்தான் கல்யாணம் பண்ண பேசிட்டிருக்கோம். இதையெல்லாம் தெரிஞ்சுதான் இப்படி சொல்லுறியா?”
“அம்மா நீங்க பேசுறீங்கன்னு சொல்லுங்க. நான் இதுல தலையிட்டதே கிடையாது. கடவுள் யாருக்கு யாருன்னு முடிச்சு போட்டு வச்சிருக்காரோ அதுதான் நடக்கும்.நீங்களா பேசினீங்களா நீங்களா பேசி முடிச்சிடுங்க. என்கிட்ட கொண்டு வராதீங்க. எனக்கு இதுக்கும் எந்த சம்பந்தம் கிடையாது”என்றவன் எழுந்து தனது டூட்டியை பார்க்க போய்விட்டான்.
லலிதாதான் இவனை எந்தவகையில சேர்க்கன்னுத் தெரியலையே.இவனுக்கு நிக்கிதாவைப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கட்டிவைக்கப் பார்க்கிற நம்ம வீட்டுக்காரரை என்ன செய்ய என்று தலையில் அடித்துக்கொண்டார்.
அதுமட்டும்தான் அவரால் முடியும்.அவரால் தனது கணவரிடம் எந்த விசயத்தையும் சுலபமாகப் பேசிடமுடியாது.எது பேசினாலும் சண்டையில்தான் முடியும்.
ஏற்கனவே மகள் ராகினியை நிகிதாவின் அண்ணன் பிரசாந்திற்குத்தான் கல்யாணம் பண்ணிக் குடுத்திருக்காங்க.அவளுக்கு இரண்டு ஆண்குழந்தைங்க இருக்காங்க.
ராகினியும் டாக்டர்தான் பிரசாந்தும் டாக்டர்தான்.அவங்க அங்கயே செட்டிலாகிட்டாங்க.இந்தியாவுக்கு விருந்தினராகத்தான் வந்துட்டுப்போவாங்க.இப்போ நிக்கிதா அவளது படிப்பு விசயமாகத்தான் வருகிறாள்.
அமெரிக்காவில் வேலையை பார்க்கலாம் என்றால் அதற்கு எக்ஸ்பீரியன்ஸ் தேவை.அதனால் மீண்டும் இந்தியா வந்து தனது மேற்படிப்பை முடித்உதவிட்டு, ஒரு இரண்டு மூன்று வருட வேலை பார்த்துவிட்டு,அமெரிக்கிவிலயே செட்டிலாக வேண்டும் என்று திட்டத்தோடுதான் வருகிறாள்.
நிகிதா எம்.பி.பி.எஸ் இங்கதான் படித்தாள்.மேற்படிப்பிற்கும் இங்கதான் வருகிறாள் என்றதும் உண்மையிலேயே சூரிய பிரகாசுக்கு எரிச்சல்தான் வந்தது.
அதுதான் லலிதா நிகிதா இங்கே வருவதைப் பற்றி சொன்னதும் கண்டுக்காது தனது வேலைக்கு போய் விட்டான்.
ஏற்கனவே ரோஜாவின் முகம் அவனது மனதில் பதிந்திருக்க எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் ரசிக்கக்கூடிய மனநிலையில் அவனில்லை.
ஆனால் அவனது வாழ்க்கை அவனது கையில் இல்லை என்பதை அவன் அப்போது உணரவில்லை.
அவனது அப்பா ராஜசேகரோடு நிகிதா வந்ததைப் பார்த்தவன் ஒரு சிறிய புன்னகையோடு போய்விட்டான்.
அவன் தன்னை ஒரு புன்னகையோடு தவிர்க்கிறதே உள்ளத்தில் ஒரு மாதிரியான ஒரு தாக்கத்தை உருவாக்கி இருந்தது.
அதைவிடவும் தன்னை மதிக்க மாட்டேங்கிறான் என்பதும் ஒரு மாதிரியான ஈகோவையும் தட்டி எழுப்பியிருந்தது.அப்போதைக்கு அதை நிகிதா பெருசாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
நிகிதா வந்து ஒரு வாரம் சூர்யாவின் வீட்டில்தான் தங்கி இருந்தாள்.
அந்த ஒரு வாரத்திலும் சூர்யாவை அவள் நன்கு கவனித்தாள்.அவனோ அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. ஒரு வாரத்திற்கு பின்பு அவள் காலேஜ் ஹாஸ்டலுக்கே சென்று விட்டாள். ராஜசேகர்தான் சூர்யாவை அழைத்துப் பேசினார்.
சூர்யா நீ மேற்படிப்பு படிக்கிறியா என்று அவனதுபடிப்பது பற்றி கேட்டார். சூர்யாவுக்கு அப்பொழுது மேற்படிப்பு பற்றி எந்த விதமான யோசனையும் இல்லை என்பதால் நான் அடுத்து படிக்கிற ஐடியால இல்லப்பா என்று சொல்லி முடித்து விட்டான்.
அதைக் கேட்டவர் சிறிது யோசனையோடு லலிதாவை பார்த்துவிட்டு சூர்யாவிடம் பேசினார்.
“உனக்கும் நிகிதாவுக்கும்தான் கல்யாணம் பேசி முடித்திருக்கிறோம். அவள் அடுத்து படிச்சு முடிச்சதும் வேலைக்குப்போவா. எக்ஸ்பீரியன்ஸ் ஆகிட்டான்னா உடனே உங்க கல்யாணத்தை முடிச்சுவைச்சிடுவேன். நீயும் அவளும் அமெரிக்காவுல செட்டில் ஆகுற மாதிரிதான் இருக்கும். அதனால் இப்பவே உன் படிப்பை பத்தியும்கொஞ்சம் யோசி”என்று அவரது முடிவைச் சொன்னார்.
சூர்யா கொஞ்சம் யோசனையோடு நான் மேல்படிப்பு படிக்கிறதைப் பத்தி இப்போதைக்கு யோசிக்கல.அதே மாதிரி நிகிதாவ கல்யாணம் பண்றதுக்கும் நான் விரும்பல. எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு என்ன யாருக்கும் எதையும் சொல்ல முடியாது. அதனால் அவ படிப்பை முடிக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம்” என்று தனது முடிவை சொன்னான்.
உன்னோட மேற்படிப்பு பற்றி யோசிக்கிறதோட முடிச்சுக்க சூர்யா. உன்னோட கல்யாண விஷயம்அது என் கையிலதான் இருக்கு.நான் எங்க அக்காவுக்கு வாக்கு கொடுத்தது கொடுத்ததுதான்.நிகிதாதான் உனக்கு மனைவியா வரப்போறாள்.நீதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க போற. உன்னோட வாழ்க்கை எதிர்காலம் எல்லாத்தையும் யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்கேன். அதுவும் இல்லாமல் உங்க அக்கா ராகினியோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு. அதனால் நீ நிகிதாவோடு வாழ்றதுக்கு இப்பவே மெண்டலி பிரிப்பார் ஆகிடு.நிகிதாவை நீதான் கல்யாணம் பண்ணிக்கணும்.இதுதான் குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு.இதுல எந்த மாற்றமும் இல்லை” என்று தனது முடிவை தீர்க்கமாக சொல்லிவிட்டார்.
அப்பொழுது இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சூரியாவுக்கு இரண்டு வருடங்கள் கழித்து நிகிதாவோடான தனது திருமணம்தான் பெரிய இடியாக அவன் தலையில் விழுந்தது தனக்கு விருப்பம் இல்லாத ஒரு திருமணத்தை தனது தந்தை செய்து வைக்கிறார் என்று தெரிந்தும், தானாக தலையை கொடுத்தது அவனுடைய பெரிய தவறாகப் போயிற்றூ.
அந்த தவறின் பலனை இப்போது வரைக்கும் அவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்!
கண்முடித்தனமா மாடாடிக்கிட்டியே சூர்யா!
அவனுக்கு தான் உன் கழுத்தில் மூன்று முடிச்சு போடும் பொழுது இந்த கல்யாணம் நிலைக்காது என்று தெரிந்தேதான் தாலிகட்டினான்.
தனது தந்தைக்காகவும் அக்காவின் வாழ்க்கைக்காகவும் இன்னைக்கு தான் கழுத்தை தாலி கட்டி தனது வாழ்க்கையை மொத்தமாக பணையும் வைத்து விட்டான்!