மெய் பேசும் மித்தியமே-21

மெய் பேசும் மித்தியமே-21

மெய் பேசும் மித்தியமே-21

சூர்யா ஹாஸ்பிட்டல். எட்டு வருஷ லவ்வுன்னு சொன்னதும்தான் கருணாகரனுக்கு மண்டையில் ஞானோதயம்போல் நடந்தது ஞாபகத்துக்கு வந்தது.

“உடனே லேய் டாக்டரு நீதான அந்த டாக்டரு.கோயில்பட்டி ஆஸ்பத்திரியில் வைச்சு என்னை அடிச்சது?”

“சாட்சாத் நானேதான் மச்சான்ஸ்.அப்போ இருந்தக் கோபத்துக்கு கொலைப்பண்ணிருப்பேன்.போ பொழைச்சுப்போன்னு விட்டுட்டேன்.உன்னாலதான் எனக்கு சென்னைக்கு உடனே மாற்றல் கிடைச்சது.அதனால் சும்மா விட்டுட்டுப்போனேன்.இல்லை நானே உன்னை வகுந்திருப்பேன்.மனுஷங்களாடா நீங்கெல்லாம் ? பதினாறு வயசு சின்னபொண்ணுக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைச்சிருக்கீங்க.அதுக்கே அன்னைக்கு உங்கமேல நான் கேஸ் குடுத்திருக்கணும்.ஆனாப்பாருங்க ஒரு பொண்ணோட உயிரைக் காப்பத்தணும்னு ஓபிட்டிருந்தீங்க.அவமேல பாசமா இருக்கீங்க.எப்படியும் பணத்தைச் செலவுபண்ணி காப்பாத்துவீங்கன்னு நினைச்சித்தான் சும்மாவிட்டேன்.அதுக்கப்புறம் அவா செத்துப்போயிட்டான்னுதான் தகவல் வந்துச்சு.இதுக்கப்புறம் கேஸ் குடுத்து என்ன செஞ்சி என்ன பிரயோஜனம்? அந்தப்பொண்ணே செத்துட்டாளேன்னு மனசுநொந்துப்போனேன்.இல்லைன்னு வையேன் மவனே உங்களை அப்பவே தூக்கி உள்ள வைச்சிருப்பேன்”என்று கோபத்தில் பேசியவனை இவன் எந்தவகை கிறுக்கன்? என்று கருணாகரன் யோசிச்சிட்டிருந்தான்.

குணசேகரனோ “அப்பவே இவன் டாக்டரா அங்க இருந்தானா?அவனை நான் பார்க்கவேயில்லையே?இவனுக்கும் தம்பிக்கும் சண்டை வந்துச்சா?அதுதான் இரண்டும் எப்பவும் முட்டிக்கிட்டு நிக்கிறானுங்களா?இதுல நம்ம பட்டுமாவை வேறக் கல்யாணம் பண்ணிக்கிட்டானே.இதை எப்படி சமாளிக்கிறது?”என்னு தலையில் கைவைத்தவாறே பார்த்துக்கொண்டிருந்தான்.

ரோஜாவோ அப்படியே அவனையே கண்ணிமைக்காது ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

:என்னை அந்த உயிர்போகும் நிலையிலும் ஒருத்தனுக்குப் பிடிச்சிருக்கா?என்னையவே நினைச்சிட்டிருந்திருக்கானா?”என்று ஏற்கனவே அவன்மேல் காதல்கொண்ட மனம் இப்போது எந்த சூழ்நிலையிலும் அவனோடுதான் நிற்கணும்,அவனோடுதான் வாழணும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.அதனால் அவனை அவ்வளவு காதலோடு பார்த்தாள்.

அவ்வளவுதான் கருணாகரன் ஓடிப்போய் தனது தங்கச்சியை அப்படியே இழுத்துட்டு வந்து தனது பக்கம் நிறுத்தியவன்”இங்கப்பாரு என் தங்கச்சி உன்கூட வாழவரணும்னா நீ உன் கடந்தக்காலத்தை எங்கக்கிட்ட சொல்லணும்.அதுல எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இருந்தால்தான் பட்டுமா உன்கூட வாழ வருவா”

“அப்படியில்லைன்னா?”

“உன் நிழலைக்கூட மிதிக்கமாட்டா அப்படித்தானே பட்டுமா”என்று அவளது முகத்தையே பார்த்தான்.

அவளோ ஒன்றுமே சொல்லாது பூஜாவோடு உள்ளே சென்றவள் அப்பாவின் அருகில் போனாள்.

“என்னப்பா நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க?உங்க பங்குங்கு என் வாழ்க்கைக்காக ஏதாவது பேசலாம்ல.இப்படி அமைதியாக இருக்கீங்க?”

என்று கேட்டாள்.

“பேசினா மட்டும் நடந்தது இல்லைன்னு ஆகிடுமா?ஊர் மக்கள் முன்னாடி டாக்டரு தாலிகட்டினது மறைஞ்சுபோயிடுமா?எப்படி உன் வாழ்க்கை மறுபடியும் கொஞ்சநாளுக்குப் பேசப்படும்.நீ நல்லா வாழ்ந்தன்னா மறைச்சுப்போகும்.இல்லைன்னா மறுபடியும் பேசுவானுங்க.பேசுற எவனாவது வந்து என் மகனுக்கு உன் மகளைத்தான்னு கேட்டிருப்பானுங்களா?இல்லை அவள் எப்படி இருந்தாலும் நான் அவளைக் கட்டிக்கிறேன்னு வந்தானுங்களா?எவனும் வரலை.உன் வாழ்க்கைக்கான தீர்வும் தரலை.அப்போ பேசி மட்டும் என்னாகப்போகுது.ஒன்னும் மாறப்போறதில்லை.உன் தலையெழுத்தையும் வாழ்க்கையையும் மொத்தமாக மாத்த இந்த டாக்டர் தாலிக்கட்டியிருக்காருன்னா அதை ஏத்துக்கிறதுல தப்பில்லையே.ஒரு தகப்பனா உன் வாழ்க்கையைத்தான் நான் யோசிப்பேன்.உங்க அண்ணனுங்க என்ன வாலிப முறுக்குல வாழ்க்கையைப் பத்தின பக்குவம் இல்லாமால்,உன் மேல உள்ள பாசத்துல பேசுறானுங்க.இன்னும் கொஞ்சநாள் கழிச்சு அவன் குடும்பம் அவன் பிள்ளைங்க வாழ்க்கைன்னு உன்மேல உள்ள பாசமெல்லாம் தூரமா போயிடும்.அப்போ அவனுங்க நினைச்சாக்கூட உன் வாழ்க்கையை மாற்ற முடியாது.அதுதான் டாக்டரு செய்ததுக்கு சண்டைப்போடாமல் அமைதியாக இருக்கேன்”என்று வாழ்க்கையின் யதார்த்தை உள்வாங்கி நிதானித்து பேசினார்.

அதைக்கேட்டதும் கருணாகரனும் குணசேகரனும் “அப்பா என்னப்பா இப்படி பேசுறீங்க.நாங்க எப்படிப்பா பட்டுமாவை ஒதுக்கி வைப்போம்.அவதானேப்பா எங்களுக்கு எல்லாம்?”

“இப்போ அப்படித்தான் தங்கைப்பாசம் முன்னுக்கு நிக்கும்.காலப்போக்குல உங்க வாழ்க்கை உன் பிள்ளைங்க வாழ்க்கையாக மாறிடும்.அப்போ என்னை மாதிரியே உன் பிள்ளைங்களைப் பத்தின யோசனைகள்தான் முன்னுக்கு நிக்கும்.அதுதான் இயற்கை.அப்போ என் மகள் தனிமைப்பட்டுப்போவா.நாங்க எவ்வளவு நாள் உயிரோட இருப்போம்னு தெரியாது.அதுக்குள்ள எம்பொண்ணு வாழ்க்கை சரியாகாதான்னுதானே நான் யோசிப்பேன்”என்று மனம்நொந்துச்சொன்னார்.

அதைக்கேட்டதும் உள்ளே போக காலெடுத்து வைத்திருந்த ரோஜா திரும்பி வேகமாக நடந்துவந்து சூர்யாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

தனது கழுத்தில் கிடந்த தாலியை எடுத்தவள்”இந்த தாலிமேல சத்தியமா சொல்லுஃநீ என்னை உண்மையாகவே காதலிக்ககறேன்னும்,என்னைத் தவிற வேற யாருய் உன் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வரமாட்டாங்கன்னும் சத்தியம் பண்ணு.அதுல ஒன்னு தப்பாகப்போனாலும் உன்னை நானே கொன்றுவேன்.இல்லை நானும் செத்திருவேன்”

அவளது கண்களை அவனும் நேருக்கு நேர் எதிர்கொண்டு “உன் மேல நான் கட்டின இந்தத் தாலிமேல,இந்த உன் கையில் இருக்கிற பூஜாமேல மொத்தமா சேர்த்து சத்தியம் பண்றேன்.இந்த ஜென்மத்துல உடலளவிலும் மனசளவிலும் நீ மட்டும்தான்டி என் பொண்டாட்டி.இதுல வேற எந்தப்பொய்யும் இல்லை.இதுதான் சத்தியமான உண்மை”என்று சத்தியம் செய்தான்.

அவன் சத்தியம் செய்ததைத்தான் எல்லோரும் பார்த்தாங்களே தவிற அவன் சொல்லி சத்தியம் செய்த வார்த்தைகளை மண்டைக்குள்ள ஏத்திக்கலை.

அதுசரி முரட்டுபீசுங்களுக்கு இவ்வளவுதான் மண்டையில ஏறும்.மீதியெல்லாம் பட்டுத்தான் திருந்துவாங்க.அவங்க மேக்கு அப்படி!ஒன்னும் சொல்லுறதுக்கில்லை!

அதன் பிறகு ரோஜா எதுவுமே பேசாது சூர்யாவின் கையை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு மாடிக்கு நடந்தாள். அவள் பின்னாடியே ஓடியவன் அப்படியே அவளது தோளில் கையைப்போட்டு பிடித்துக்கொண்டான்.

ஆஆஆஆ என்று லலிதா மற்றும் இரண்டு ஹிப்போபொட்டமஸ் உட்பட வாயைப்பிளந்து ரோஜா இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

இப்போது சூர்யா மேலே வீட்டின் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தவன்”மச்சான்ஸ் புதுசா கல்யாணமாகி வீட்டுக்குள்ள போறோம் இந்த ஆரத்தி கீரத்தின்னு ஏதோ சொல்லுவாங்களே அதெல்லாம் எடுத்து உள்ளே விடமாட்டீங்களா.அதுக்கு ஏதும் ஏற்பாடு பண்ணலாம்ல.அப்படியே இந்த பர்ஸ்ட் நைட்டுக்கும் அலஙகாரம் பண்ணி வைக்கலாம்ல.எல்லாத்தையும் நானே செய்யமுடியுமா.மச்சான்ஸ் நீங்கதானே செய்யணும்.ரோஸ் இதை உங்க அண்ணனுங்ககிட்ட சொல்லலாம்ல”என்று கேட்டான்.

அவளோ ‘அர்த்த இராத்திரி திருவிழாவுல சாமிக்கும்பிட்டுட்டு இருந்தவக் கழுத்துல தாலிக்கட்டிட்டு கேட்கிற கேள்வியைப்பாரு?அதுவும் விடியாகலையில நாலு மணிக்கு பஞ்சாயத்து எல்லாம் முடிச்சிட்டு கேட்கிறான் பாரு ஆரத்தி எடுக்கலையா?முதல்ராத்திரிக்கு அலங்காரம் பண்ணலையான்னு.இவரு அலங்காரம் பண்ணலைன்னா மட்டும் இவன் அப்படியே சும்மா விட்றுவாரு பாரு என்று திட்டிக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

“உனக்கு ஆரத்தி ஒன்னுதான் குறை கட்டினது திருட்டுத்தாலி.இதுல ஆரத்தி ஒன்னுதான் குறைச்சல் இவனுக்கு இவனை என்ன செய்யலாம்?”என்று இருவரும் முறைத்தனர்.

“எதுக்கு மச்சான்ஸ் முறைக்கறீங்க.முடியும்னா முடியும்னு சொல்லுங்க இல்லைன்னா நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்.நமக்குள்ள என்ன இருக்கு?”என்று தோளைக்குலுக்கினான்.

அதற்குள் மல்லிகா “மருமகனே கொஞ்சம் இருங்க” என்று உள்ளே ஓடியவர் ஆரத்தித் தட்டோடு ஓடிவந்து வேகவேகமாக மூணுபேரையும் சேர்த்து நிற்கவைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

அவரே அவர்களை உட்காரவைத்துவிட்டு கிட்சனுக்குள் சென்று பால் இருக்கா என்று பார்த்து எடுத்து சூடுபண்ணி இருவருக்கும் கொண்டுவந்துக் கொடுத்தார்.

பூஜாவை சூர்யா அவள் கையிலிருந்து தூக்கிக்கொண்டுபோய், அவனது அறையில் படுக்கவைத்துவிட்டுவந்து அவளருகில் நெருக்கமாக உட்கார்ந்தான்.

அதற்குள் பாலும் கைக்கு வர அதை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.லலிதா வேறு வழியின்றி உள்ளே வந்தவர் எதுவும் பேசாது தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.

அதைக்கவனித்த மல்லிகாதான் பாவமாக மகளைப் பார்த்தார்.ரோஜாவோ அலட்டிக்காது அமைதியாக பாலைக் குடித்தாள்.

“ரொம்ப நன்றி அத்தை.உங்க மகன்ககிட்டப் பேசிப்பேசியே தொண்டையெல்லாம் வலிக்குது.அதுக்கு இதமா பால்ஹகாய்ச்சி தந்திருக்கீங்க”என்றான்.

மல்லிகாவுக்கே அப்படியே மருமகன் நன்றி சொன்னதில் பெருமைபிடிபடாது “இது என்ன இருக்கு.மருமகன்னா பார்த்துப் பார்த்து செய்துதான் குடுக்கணும்.எது எப்படியோ எங்க வீட்டு ஆம்பளைங்க இந்தமட்டும் தடியெடுக்காம பேசியே உங்களை சும்மா விட்றுக்காங்கன்னா பட்டுமா மேல உள்ள பாசம்தான்.அதை சரியா புரிஞ்சிப்பீங்கன்னுதான் சும்மா இருக்காங்க.அவளுக்கு ஏதாவது ஒன்னுன்னா சும்மாவிடமாட்டாங்க.அதை மட்டும் ஞாபகத்துல வைங்க மருமகனே.அதுபோதும்.அவளோட வாழ்கைதான் எங்களுக்கு முக்கியம்.அதைதான்டி எங்களுக்கு பெரிய விசயம் எதுவுமில்லை.உங்க வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா அதுவே எங்களுக்குப்போதும்”என்றவர் மகளின் கன்னத்தைப்பிடித்து முத்தம் வைத்தவர் அவளது தலையில் கையைவைத்து ஆசிர்வதித்தார்.

அதில் ரோஜா சட்டென்று அழுதவள் அவரைத் தாங்கிக் கட்டிக்கொண்டு குலுங்கி அழுதாள்.

“ஏய் எதுக்கு அழற?உன்னை நேசிக்கிற ஒருத்தர் தாலிக்கட்டியிருக்கார்.உன்னைப் பத்தி எல்லாம் தெரிந்தவர்.அதனால கண்டிப்பா உன்னைக் காயப்படுத்தமாட்டாருன்னு நம்பித்தான் அப்பா அமைதியா இருக்காரு.நானும் நம்புறேன்.அதைவிட உங்கப்பாவுக்கு டாக்டரைப் பத்தின எல்லாமே தெரிஞ்சிருக்கலாம்.அதுதான் அவ்வளவு அமைதியாக மருமகனை பேசவிட்டு வேடிக்கைப் பார்த்துட்டிருக்காரு.இல்லைன்னா உங்கண்ணனுங்க பேசுறதுக்கு முன்னாடியே உங்கப்பாவோட கையில முதல்ல மருமகன்மேல விழுந்திருக்கும்”

‘பரவாயில்லையே நம்ம மாமியார் பயங்கரா ஷார்ப்பா இருக்காங்களே.இரண்டு மச்சான்ஸும்தான் இன்னும் புத்தியை பொடனியில வைச்சிட்டே திரியுறானுங்க.அதுவும் சின்ன ஹிப்போ வெரி டேஞ்சர்’ என்று யோசித்தவன் மனைவியைப் பார்த்தான்.

அவளோ மல்லிகா பேசியதைக் கேட்டு “நீ என்னம்மா இப்படிப் பேசுற.அப்பாவுக்கெல்லாம் ஒன்னும் தெரிஞ்சிருக்காது.அவரு பாவம்மா.எல்லார் முன்னாடியும் அவருக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு இது.அவரோட மரியாதையே போச்சுதும்மா.எனக்காக எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு இருக்காரு.எல்லாம் இவராலதான்.நீயும் இவரு செய்தது நியாயம்னு பேசாதம்மா.இவரு செய்தது தப்புத்தான் தப்புத்தான்.இவருக்கட்டினதாலிக்காகவும் அவரு என்மேல செய்த சத்தியத்துக்காகவும் வாழவந்திருக்கேன்.நீ சும்மா அப்பா மேல பழியைப்போடதாம்மா.எங்கப்பா பாவம்மா”

‘அடியேய் உண்மையிலயே நான்தான்டி பாவம்.தாலியைக்கட்டிட்டு நான் ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்லிட்டிருக்கேன்.பதில் சொல்லியே நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்டி.நான்தான்டி இனி வாழ்நாளெல்லாம் உன்கூட இருக்கப்போறேன் என்னைக் கவனிடி’என்று பாவமாகப் பார்த்தான்.

இதற்குமேல் இங்கிருந்தால் சரியாகாது என்று மல்லிகா மகளின் கன்னத்தைப் பிடித்துத் தடவியவர் நாங்க உனக்கு எப்போதும் பக்கபலமா துணையாகத்தான் இருப்போம்.அதனால் தைரியமாக இரு”என்றவர் சூர்யாவிடம் கிளம்பறேன் என்று தலையாட்டிவிட்பு கீழே வந்தார்.

மல்லிகா கீழே வரவும் அவருக்கா குடும்பமே காத்திருந்தது.

“என்ன இன்னும் உள்ள போகாமால் என்ன இங்க வேடிக்கைப்பார்த்துட்டு இருக்கீங்க.உள்ளப்போங்க.எல்லா பஞ்சாயத்தும் முடிஞ்சது.போய் துங்குங்க நேரமாயிட்டு.எதுனாலும் காலையில பார்த்துக்கலாம்” என்று சத்தம்போட்டார்.

குணசேகரனோ “யம்மா நீயும் அப்பாக்கூட சேர்ந்துக்கிட்டப்போலம்மா.அவரும் அமைதியாக அந்த டாக்டருக்குத்தான் நியாயம் பேசுறதுமாதிரி அமைதியாக இருக்காரு.நீயும் அவருக்கு ஜால்ரா போடுறமாதிரியே தெரியுது.எனக்கென்னவோ இது சரியாப்படல.பட்டுமா வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது தில்லுமுல்லுமாதிரி ஆகிச்சு அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று மனைவி பிள்ளைகளோடு உள்ளே போய்விட்டான். 

அதைக்கேட்ட கருப்பசாமி “இவன் என்ன கிறுக்குமாதிரி பேசிட்டுப்போறான்”என்று கோபப்பட்டார்.

அதேக்கேட்டு நின்றிருந்த கருணாகரனோ”யப்பா உண்மையை சொல்லுங்க இது உங்க வேலைதான?எனக்கு என்னமோ உங்க இரண்டுபேரு மேலதான் சந்தேகமா இருக்கு.அண்ணனை ஏமாத்துன மாதிரி என்னை ஏமாத்தமுடியாது பார்த்துக்கங்க”

“ஆமா இவர் பெரிய சி.ஐ.டி சங்கருக்கு சொந்தக்காரன் போல,போய் உனக்கு அடுத்தது வாழ்க்கை எப்படி அமையணும்னு யோசிக்க வேலையைப்பாரு.எனக்கு நிறைய சோலிகிடக்கு” என்றவர் எழுந்துப் போய்விட்டார்.

கருப்பசாமி எழுந்துப்போனதும் மல்லிகா அவர் பின்னாடியே வால் பிடிச்சு போயிட்டார்.

ஆக்கக்டைசியாக கருணாகரன் வீட்டு முன் பக்கம் வராண்டாவில் ஒத்தையா உட்கார்ந்திருந்தான்.

“ச்சை நமக்கும் ஒருத்தியிருந்திருந்தா குடும்பம் நடத்தவாவது போயிருக்கலாம்.இன்னும் மொட்டப்பயலாவே சுத்தினா இப்படித்தான் போல” என்று நிலாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 உனக்கென்னப்பா நீ தனிகாட்டு ராஜா நிலாவை ரசிப்ப. எல்லாரும் அப்படி ரசிக்கமுடியுமா?

இங்க டாக்டரு ரோஜாவை கொஞ்சநேரம் பார்த்திருந்தான்.அவள் யோசனையிலயே இருக்கவும் அவனாக எழுந்துபோய் பூஜா பக்கத்துல படுத்துக்கொண்டான்.

அதைப்பார்த்த ரோஜாதான் தாலிக்கட்டிட்டு பெருசா சண்டைப்போட்டுக் கூட்டிட்டு வந்தான்.இங்க வந்துப்பார்த்தால் என்னை அம்போன்னு விட்டுட்டுப்போய் தூங்குறான்.என்னைப் பத்தி என்ன நினைச்சிட்டிருக்கான்?என்று வேகமாகப் போய் கட்டிலின் பக்கத்தில் நின்றாள்.

அவள் வருவதை உணர்ந்தும் கண்டுக்காது கண்களை மூடி படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு ஆத்திரமாக வந்தது.

பூஜா மட்டும் பக்கத்தில் இல்லை என்றால் அவ்வளவுதான் தண்ணியை குடுங்குடமாகத் தூக்கி ஊத்திருப்பாள்.

இப்போ ஒன்றும் செய்யமுடியாது நின்றிருந்தவள் கோபத்தில் அப்படியே திரும்பி நடக்க அவ்வளவுதான் அடுத்த நொடியே அவளைத் தூக்கித் தனது கைவளைவில் வைத்து சுவரோடு சாய்த்துப் பிடித்திருந்தான் டாக்டரு!