மீளா 22
Milla21

22
மீளா காதல் தீவிரவாதி !!
பின்னாலேயே புருஷனை தேடி வந்த குழலி
"இங்கன தான வந்தார் எங்க போனார் மாமா, என்று சுற்றும் முற்றும் தேட ..
பளார் பளார் என செவிப்பறை கிளியும் சத்தம் காற்றில் பறந்து வர ..
"ஹான் இந்தா சத்தம் வருதுல்ல அங்கன தான் இருப்பார், ஆனாலும் எதையும் என்ற மாமனுக்கு அமைதியா செய்யவே தெரியாது அது கூட அதிர அதிரதேன் பண்ணுவார் "என்று ஆசையில் இடுப்பை பிடித்தாள் .. பின்ன ஆசை வந்தால் பொறுமை போய்விடும் அவனுக்கு, மிஞ்சி போனால் சில நாள் தாம்பத்தியம் அத்தனையும் இடை அதிரத்தான் .... அந்த வேகம் சில நேரம் தானாக உதடு கடிக்க வைக்கும் , கண் சொருகும், இச்சை ஆசையே இல்லாது கூட அதை ரசிக்க வைத்து விட்டான்..
"ஏலேய் புள்ளைங்க நடமாடுற இடத்துக்குள்ள நாத்தம் பிடிச்ச பீடியை பிடிச்சிட்டு நிற்கிறிய வெளுத்துபுடுவேன்" என்று பள்ளிக்கூட வேலையில் நின்ற இருவரை அடித்து பொளக்க....
"தெரியாம பண்ணிபுட்டேன் அண்ணன்...
"மதி இல்லாத காட்டுவாசி நாய்களா ..நீங்க நாசமா போங்கடா அதுக்கு எதுக்கு அடுத்த தலைமுறைக்கு தப்பை கத்துகொடுத்துட்டு போற , ஒழுங்கா வேலையை பாரு என்று மீசையை முறுக்கி கொண்டு அடுத்த வேலையை பார்க்க உள்ளே போக பதுங்கி பதுங்கி அவன் மனைவியும் புருஷன் பின்னாடி நகர ஆரம்பித்தாள்..
"கண்டா நமக்கும் குறையாது விழும் என்று தெரியும்தானே...
"என்ன டீச்சர் எல்லா வசதியும் காணுதா, வேற எதுவும் பண்ணி தரணுமா??" என்று இளம் வயது ஆசிரியை ஒருவரோடு மருது பேசி கொண்டுநிற்க.. குழலிக்கு உதடு பிதுங்கியது .. நீட்டாக கட்டிய சேலையும் சிரித்த முகமும் களையாக நின்ற அந்த பெண்ணை கண்டு இங்கே ஒரு மங்கிக்கு அவிந்தது..
என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் கேட்கிரியில் சஸ்ட் நவ்தான் சேர்ந்தாள் , அதனால் சங்கத்துக்கு செம பொஸசிவ் வந்தது ...காதல் வந்ததும் அது கூட சேர்ந்த வயித்தெரிச்சல், லூசுதனம், எல்லா கிளை நோயும் தானாக வந்தது ..
விதிகளுக்கு அப்பாற் பட்டது காதல் , ஒரறிவு ஜீவன் முதல் ஆறறிவு ஜீவன் வரை ஏதோ ஒரு காதலில்தான் உலகை தினம் தினம் கடக்கின்றனர் .. காதலில்லா உலகு காற்று இல்லா உலகு போல.. நேயங்கள் மாறுபடலாம் ஆனால் அந்த நேயமின்றி நாட்கள் கடக்காது ..சிலருக்கு புரிதலாக காதல், பலருக்கு புரிதல் இல்லாமலேயே காதல் அவர்களோடு பயணித்து கொண்டு தான் இருக்கிறது ... குழலிக்கு இதுநாள் வரை புரியாத காதல் இப்போது கைவசம் ஆனால் துணிந்து கொடுக்க அச்சம் ...,
"சிரிச்சி சிரிச்சி வேற மாமா பேசுறார்.. எங்கிட்ட மட்டும் எப்பவும் உர்னு இருக்கார்... இந்த புள்ள கூட என்னத்த பேசுறார், ஒன்னும் கேட்கலையே," காதை கூர்தீட்டி கேட்க.. சிரிப்பு சத்தம் பேச்சை விட அதிகமாக கேட்டு .. அவளுக்கு உடலில் வேற ஏதோ உணர்வுகள் எல்லாம் வந்து தொலைத்தது .. க:ல்லை தூக்கி அந்த பொண்ணு மண்டையில போட்டா என்ன.. இல்லை நேரா போய், யோவ் மாமா உன் பல்லு என்ன பாத்தா காட்டாதா.. அவகிட்ட தான் காட்டுவியான்னு கேட்டா என்ன, கேட்டுதான் பாரேன்..
"எங்க? இப்பதான ஒரு போடு போட்டுட்டு போனார், இப்படி உதறினா நான் எப்படி அந்த லவ்வை பண்ண .." பக்கத்தில் குப்பென்று ஜவ்வாது மணம் அடிக்க யோசனையில் நின்ற குழலி சட்டென்று திரும்ப மருதுவின் முடி அடந்த நெஞ்சில் முட்டி நின்றாள்..
மாமாஆஆஆ அவள் கருவிழி கருமேகம் கண்ட மயிலாக தோகை விரிக்க , அருகே நின்ற மருதுவை காண காண தெவிட்டாத தீஞ்சுவை ஆகினான் ... கண்களை சுருக்கி மீசை முறுக்கி அவளை பார்த்து நின்ற தன் சொந்த பூமியை அண்ணாந்து பார்த்தாள் ..அவன் அழகு இன்றுதான் கண்களை மறைத்தது போல , நெடுநெடு உயரம் வெள்ளை சட்டை வேட்டி அதை ஒற்றை விரலில் பிடித்து லைட்டாக சேவ் செய்து தலையை கோதி மீசை முறுக்கி கொண்டு பார்த்த அவன் பேரழகில் நாளெல்லாம் மயங்கியே நிற்க தோணியது...
"இங்க என்ன பண்ணிட்டு இருக்க...என் பின்னாடி வேவு பார்க்கிறியா என்று மருது பல்லை கடிக்க... குழலி சட்டென்று அவன் முகம் விட்டு கவனத்தை மருது பேச்சுக்கு கொண்டு போனாள்.. எப்போ இருந்து இப்படி தன்னிலை மறந்து அவனை ரசிக்க ஆரம்பித்தோம் என்று அவளுக்கே வெட்கமாகி போனது... ஆனாலும் முகம் தாண்டி பார்க்க இன்னும் துணிவு இல்லை பழையது போல அவளை மடியில் போட்டு கொண்டாள் இப்போது சமத்தாக அவன் செயினை பிடித்து கொண்டு உதட்டோடு உதடு உரசியபடி பேசிக்கொண்டே இருக்கலாம் பேராசை அலை இளமை பெட்டகத்தில் உபரிநீர் கசிய வைத்தது ...
"இந்தா உன்கிட்ட தானா கேட்டுட்டு இருக்கேன்டி இங்கன என்ன பண்ற.. "
"ஆத்தாடி , இவர் எப்போ அங்கன இருந்து இங்கன வந்தார் .. சொல்ல பதில் கூட இல்லையே இருந்தா மட்டும் சொல்லிடுவியா?" என்று ஒரு மனம் கேவலப்படுத்த அண்ணாந்து அவனை பார்த்தவள்...
"தூணி காய போட வந்தேனுங்க மாமா..." பொய் கூட சொல்ல தெரியாது நின்றாள்
கண்களை சுருக்கி மருது அவள் புது விளியை யோசனையாக பார்த்தான்...
"காய போட்டாச்சா ..."
"ம்ம்...
"இடத்தை காலி பண்ணு , இங்கன வர்றது இதுதான் கடைசியா இருக்கோணும் .... "
"காலையில பூரியும் கிழங்கும் போட்டேன் மாமா எடுத்துட்டு வரவா, "குசுகுசுவென கேட்க..அவன் மரக்கொத்தி ஒன்று அந்த குரலில் வெளியே வர பார்த்தது ...
அருகே நின்ற மனைவியை பக்கவாட்டில் திரும்பி பார்த்தான்... அவன் பார்த்த வாகில் ஒற்றை பவளப்பாறை கிண்ணம் சேலை வழி தெரிந்தது.. அதன் கூர்மை இறுக்கி பிடித்த ஜாக்கெட் வழி அவள் கொண்ட மோகத்தில் கூராக அவன் கண்களை தாக்கியது... இரட்டை கொக்கி கழட்டி விட்டிருந்தாள் எடை கூடியது போல இருந்ததால் , ஆடை பற்றாக்குறை உள்ளதான கிடக்கு என கழட்டி விட்ட பால்வழி அண்டம்.. புருஷனுக்கு இன்று விருந்து படைத்தது வேலை செய்ததால் வந்த வியர்வை,, வயிற்றில் வடிந்து நாபியில் போய் தேங்கி நீச்சல் குளமானது .. அவன் நாவு பட்டால் சொர்க்கம் இருவரும் சேர்ந்தே போகலாம்.. இப்படி எல்லாம் புருஷனை மூடாக்கலாம் என கூட தெரியாது.. எப்படி மாமா பக்கம் போகன்னு தெரியலையே என்று அருகில் நின்று குழலி யோசனையில் நின்றாள் .. அவனோ மூச்சடைக்க மனைவி காட்டும் விதத்தில் வீரகத்தீ மூங்கில் காட்டை எரிக்க கொண்டை சிவந்து போனது... ஏதோ தோன்ற குழலி அவனை பார்க்க சட்டென்று பார்வையே பதுங்கு குழி விட்டு திருப்பி கொண்டு
"என்னடி நீ நினைச்சுகிட்டு இருக்க , உன்கிட்ட சோறு தண்ணீ வாங்கி திங்கதான் இங்கன வந்தேனா..." அவனும் அதே பூச்சி குரலில் சாடை போட்டான்.. ஏற்கனவே ஊர் சிரிச்சது போதாதா?? மறுபடியும் சந்தி சிரிக்க விரும்பாது ஊடலை கூட ராயலாக நடத்தினான்..
நாம ஊடல் நடத்த விட்டிருவோமா ,,ஊடலில் கூட ஊழலை திணித்து , லஞ்சம் கொடுத்து கூடலுக்கு விண்ணப்பம் போட்டிற மாட்டோம்...
காதலில் மட்டும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் சரியே