மீளா 20

Milla20

மீளா 20

20 

மீளா காதல் தீவிரவாதி !! 

சட்டையை மடக்கி தொடை தெரிய வேட்டி ஏத்தி கட்டி சண்டைக்கு வாங்கடா சுண்டைக்கா பயல்களா என முறுக்கி நின்ற, மருதுவை இங்கே எதிர்பாராத நாச்சி.. அருகே கிடந்த ராடை எடுத்து கொண்டு மருது நோக்கி ஓடி அவன் நெஞ்சை பிளக்க போக.. நாச்சி கழுத்து அருகே அவன் வீசிய அருவாள் சஸ்ட் மிஸ்ஸில் பறந்து போய் விழுந்தது..நாச்சி அதிர்ந்து போய் நின்று விட .. 

"அதுஊஊஊ காலை எடுத்து என்ற பக்கத்துல வச்ச இப்போ , மிஸ் ஆன அருவா மிஸ் ஆவாம உன்ற தலையை பதம் பார்திடும்... "

"டேய் மருது உன்ன என்ன பண்றேன் பார்லே" என நாச்சி கத்த ..

"ஸ்ஊஊஊஊ சங்க அறுத்துபுடுவேன், மூச் ..."

"காசை வெட்டி போட்ட நாயிக்கு , இங்க என்னலே வேலை வெளிய போ..."

'உன்ன பேசாதன்னு சொன்னேன்.. மூச்சி சத்தம் வந்திச்சு அன்னைக்கு விட்டேன். இன்னைக்கு விட மாட்டேன் ....."

"அவ என் பொண்ணு என்ன வேணும்னாலும் பண்ணுவேன் ..வெளியே போடா ..."

"பண்ணு பண்ணு தாராளமா உன்ற பெண்ணுக்கு கல்யாணம் பண்ணு, இல்ல கருமாதி பண்ணு.. அதை ஏன் நான் கேட்க போறேன் .. ஆனா என்ற புள்ள மேல கை வைக்க எந்த _ ளுக்கும் உரிமை இல்லை .. அது இவளையும் சேர்த்து "... என்று குழலியை சுட்டி காட்ட அவளுக்கு .. அப்பாடா!! என் புள்ள தப்பிச்சிட்டு, வந்துட்டான், காப்பாத்திடுவான் கூட்டிட்டு போயிடுவான்... இனி அவன் கூடையே பாதுக்காப்பா இருந்துக்கணும்.... அம்மா வேண்டாம்.. தெரியா காட்டேரிக்கு தெரிந்த பேயே ஓகேதான் தாய் கிட்ட அடி வாங்க முடியல சாமி புருஷன் கூட ஓடிரணும்... அவன் கூட இருந்தாதான் புள்ளையை காப்பாத்த முடியும் என்று மண்டை தெளிந்து விட்டது ...   

"நான்,என்ன வேணும்னாலும் பண்ணுவேன் அதை கேட்க நீ யாருலே, நீ என்ன அவ புருஷனா ?"

"நான் ஒன்னும் அவளுக்கு புருஷன்னு சொல்வவே இல்லையே, என்ற புள்ளைக்கு அப்பன் மட்டும்தான்.. அது என்ற குழந்தை .. அதுக்கு மட்டும்தான் நான் உரிமை கொண்டாடுறேன் .."நாச்சி கண்களை சுருக்க...குழலி உதடு பிதுங்கியது.. தாயிக்கு சாதி முக்கியம், மருதுவுக்கு பிள்ளை முக்கியம் , அப்போ நான் யாருக்கும் வேண்டாமா? என்று கண்கள் கரித்து கொண்டு வந்தது ... 

"என் புள்ளையை பெத்து கொடுத்துட்டு, எவன் கூடையும் அனுப்பி வை... ஆனா, என்ற பிள்ளை மேல எவன் விரலாவது பட்டுச்சு... மருது ஆட்டம் எப்படி இருக்கும்னு ஊருக்கே தெரியும் சுடுகாடாக்கிடுவேன் ... "

நாச்சி கேலியாக சிரித்தவர்..

 நீ சொல்லி நான் ஏம்லே கேட்கணும் .. நான் நினைச்சத செஞசுதான் தீருவேன்"... 

"ஆஹான் !!"என்று நாச்சியை கடந்து போய், மலங்க மலங்க விழித்த நின்ற குழலியை இழுத்து கொண்டு வெளியே போக..

"டேய் அவள விடுடா" என்று நாச்சி குறுக்காக நிற்க...

"என்ற புள்ள பிறக்கும் வரை என் கட்டுப்பாட்டுலதேன் உன்ற பொண்ணு இருப்பா என்ன செய்ய முடியும் செய்யி .. "புருஷன் வேகமாக முன்னால் நடக்க.. குழலி குடுகுடுவென ஓடி போய் அவன் விட்ட கையை இவள் பிடித்து கொண்டு மருது முதுகு பின்னால் . தன் குட்டி உடலை மறைத்து கொண்டாள்.... விருமன் அரக்கபறக்க வந்து நின்றான்.. 

"அண்ணன் சேதி கேட்டு எனக்கு இதயமே நின்னு போச்சிது , உங்களுக்கு எப்படி செய்தி தெரியும்" விருமன் மின்னல் விஷயத்தை கூறவும் மருதுவிடம் கூறிவிட எண்ணி ஆளை தேட.. போன் கூட அவுட் ஆப் கவரேஜ் வந்து காலை வார, அருவாளை எடுத்து சட்டை பின்னாடி சொருகியவன்..

"எப்பவோ போக போற உசுரு , என் அண்ணன் ,மதனிக்காக போயிட்டு போகட்டும் நானே இறங்கி ஒரு கை பார்த்து புடுதேன்" என்று கிளம்பி விட.. இங்கே மருதுவோ ஆக்சன் சீன் எல்லாத்தையும் ஒத்தையில் முடித்துவிட்டு வெளியே வர... யார் அண்ணனுக்கு சரியாக போட்டு கொடுத்தது என்று அனைவரும் யோசனையாக நிற்க ...

நாச்சி ஆட்கள் சுற்றி அடிதடிக்கு தயராக..

"ஏன்டா சண்டைக்குதான வந்த? என்றான் மருது விருமனை பார்த்து ..

"ஆமா அண்ணன் .

"உன் ஆசையை ஏன் கெடுப்பானேன் அடிச்சி போட்டுட்டு வா .. நான் அங்கன நிற்கிறேன்" என நடக்க, குழலி மரத்தில் சாய்ந்து போனில் பேசி கொண்டு நின்ற மருதுவை.. ஏன் என்று தெரியாது பார்த்தாள் ...ஒரு தடவை கூட எட்டி பார்க்க அவனுக்கு மனம் இல்லை.. இவளுக்கு அவன் அன்றி எதுவும் கண்ணில் பட வில்லை ...

மருத்துவச்சி மருதுவை பார்த்து விட்டு நைசாக ஆள் கண்ணில் படாது வந்தவர்..

"நல்லவேளை நான் சொன்னதை நம்பி, சரியான நேரத்தில் வந்தீங்க தம்பி .. ரொம்ப நன்றி "என்றதும் மருது அவர் கையை பிடித்து கொண்டவன் 

"நான் தான் நன்றி சொல்லணும் ஆயா, என் குலத்தை காத்திருக்க, இந்த மருதுவுக்கே உசுர் ஆடி போச்சி.... ரொம்ப நன்றி ஆயா" மருத்துவச்சிக்கு நாச்சி வேலையாள் வந்து விஷயம் கூறவும் , தன் மகனிடம் விஷயம் கூறி ,மருதவை அழைத்து வர வைத்து விட்டார் ...மருந்தை ஊத்தாது நேரத்தை கடத்திவிடணும் என்று நினைத்தார்...

"என்னய்யா நீ இது என் கடமை, என்ற புள்ள இவுக சாதி வெறிக்கு இரண்டு கையும் வெட்டப்பட்டு கிடக்கான்.. ஏன் என்னன்னு ஒரு நாள் கூட வந்து பார்த்து இல்லை நாச்சி. குடும்பம் கஷ்டப்படுது ஏதாவது உதவி செய்யிங்கன்னு வந்து கேட்டதுக்கு ..

"சண்டைக்கு வந்தா சேதாரம் ஆகதான் செய்யும் அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது.. பிஞச்சை எடுத்து தின்னுங்கன்னு இரக்கமே இல்லாம அவனை பிடிச்சி தள்ளினா.. ஆனா நீ இன்ன வரை சோறும் போட்டு, அவன் மருத்துவசெலவும் பார்த்து சாமிய்யா நீ.." என்று கண்ணீரில் அவனுக்கு நன்றி காணிககை செலுத்த..

"எனக்கு ஒரு தம்பி இருந்தா செய்ய மாட்டேனா ஆத்தா... அது போலதான் இது, நான் அன்னைக்கு உனக்கு செஞ்சேன்.. நீ எனக்கு செய்யல இதுதான் ஆத்தா உண்மையான அன்பு ... நான் நல்லவன் வல்லவன்னு உங்கிட்ட சொல்ல தேவையில்ல ,அது உனக்கே தெரியும்.. இது சிலருக்கு புரியாது ..இனி புரிய வைக்கவும் எனக்கு நேரம் கிடையாது.. "என்று கையை பிசைந்து கொண்டு நின்ற குழலிக்கு சூடு போட 

குற்றமுள்ள நெஞ்சாக குழலிக்கு குறுகுறுத்தது...

"சண்டையில சட்டையைத்தான் கிழிக்கணுமா, கோடி சட்டை போச்சி" என விருமன் சண்டை முடித்து கொண்டு வர, மின்னல் வழியில் நிற்க..

"ராவு ஆலமரம் பக்கம் வந்துடுடி" என்று குசுகுசுவென கூறிவிட்டு மருது நோக்கி வந்தான்...

"அண்ணன் முடிஞ்சு,மதனி போய் வண்டியில ஏறுங்க, ப்பா இவ்வளவு சீக்கிரம் இரண்டு பேரும் சேருவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல.. பெரிய பெரிய பஞ்சாயத்து வச்சி, அதுல பல தலை உருண்டு .. என் தலை போய், ரத்தக்களறி ஆகிதான் இரண்டுபேரும் ஒன்னாக போறீங்கன்னு நினைச்சேன் .. ஆனா அண்ணன் அண்ணன்தான் வந்தார்ல சரியான நேரத்துக்கு ..மதனின்னா அண்ணனுக்கு தனி பிரியம்தான்... "

"என்ன மதனி நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீங்க போயி அண்ணன் பைக்ல ஏறுங்க .. அப்படியே அவர் தோள் மேல கை போட்டுக்கிட்டு, ஊர் புல்லா ஊர்வலம் வாங்க , எதிரி பயலுக எல்லாம் வெந்து சாகட்டும்.. "குழலியோ பாவமாக ஒரு பக்கத்தில் கையை நீட்ட.. மருதுவின் புல்லட் ஒற்றையாக போய்க் கொண்டிருந்தது...

"அவ்வளவுதான் முடிஞ்சு "என்று வந்த வேகத்தில் மருது போய்விட .. நம்ம கொட்டை எடுத்து புலிக்குட்டி ஹே இங்கன விட்டுட்டு போயிட்டான் என போகும் மருதுவை அழைக்க வாய் வராது நின்றாள்... மருத்துவச்சி கூறிய கதை,,தாய் நடத்தை அத்தனையும் வைத்து எப்படியோ விடை கண்டுபிடிச்சாச்சி,, ஆஹா தப்பு பண்ணிட்டேனே என விஷயம் புரிந்து விட்டது ..   

"அண்ணன் மதனிய விட்டிட்டு போறீக "

"அவளை ஏத்தி கொண்டு போறதுக்கு அவ ஒன்னும் எனக்கு பொஞ்சாதியும் இல்ல, எனக்கு உறவுக்ககாரியும் இல்லை.. எப்படி போனாளோ அப்படியே வர சொல்லு.. " மருது பைக்கை நிறுத்திவிட்டு தலையை மட்டும் திருப்பி கூற

" மதனி அண்ணன் சொல்றதும் நியாயம் தானே என்னதான் உங்க மேல பாசம் இருந்தாலும், கோவம் இருக்கத்தானே செய்யும்..வாங்க போவோம் , போனதும் நாலு மன்னிப்பை கேட்டிருங்க விளங்குதா? "

"ம்ம் ... சரி தம்பி "

"பொடிநடையா நடந்து அண்ணன் வீட்டுக்கு போயிடலாம் "

"லேய் என்ற வீட்டு பக்கம் வரலாம்னு கனவு கினவு காணாத.."

"அப்போ எங்க அண்ணன் மதனியை விட சொல்லுதீய ??"

"நம்ம ஊருக்கு புதுசா தொடங்கியிருக்க பள்ளிக்கூடத்துல வாத்தியாருக்கு ஒரு ரூம் போட்டு இருக்கோம்ல , அதுல கொண்டு போய் அவங்கள உட்கார வை "என்று மறுபடியும் மருது புல்லட் விருமன் அருகிலேயே வந்து நின்றது ... 

குழலிக்கு எப்படி அவனிடம் மன்னிப்பு கேட்க என்று வார்த்தை வர மறுத்தது... ஏற்கனவே நாலு வார்த்தைதான் நறுக்கென்று தெரியும்... புதிது புதிதாக சூழ்நிலைகளை கையாள வராமல்..

" நான் தெரியாம பண்ணிட்டேன்" எப்படியோ வாயை திறந்து விட.. மருது பார்த்த ஒற்றை பார்வையில் உதடு அப்படியே கப் என்று மூடிக்கொண்டது...

"இந்த புள்ளைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மட்டும்தான் என்ற கடமை .. அதை சரியா செய்வேன்.. டேய் நான் சொன்னது மாதிரி அங்கன கொண்டு இவங்கள சேர்த்துடு.. அப்படியே காவலுக்கு வீட்டை சுத்தி ஆளையும் போடு ... குழந்தை பிறக்கிற வரைக்கும் கொஞ்சம் பல்ல கடிச்சுக்கிட்டு இங்க இருக்க சொல்லு ... அதுக்கு பிறகு எங்கேயும் , எப்படியும் போக சொல்லு... " என அவள் முகம் காட்டும் மன்னிப்பு தவிப்பு எதையும் பார்க்காமல் போய்விட..

"நீ வேண்டாம் என்று குழலி கூறி வரும் பொழுது வலிக்கவில்லை.. எனக்கும் நீ வேண்டாம் போடி என்று அவன் போகும்பொழுது குழலிக்கு வலித்தது... 

எவ்வளவு வலி இருந்தால் தன் முகத்தைக் கூட அவன் பார்க்க மறுக்கிறான்... எவ்வளவு நேசம் இருந்தால் தனக்காக எல்லாவற்றையும் மறந்து இதோ தன்னையும், தன் குழந்தையும் ,காப்பாற்றி விட்டு செல்கிறான் ... ஏன் எனக்கு இவனுடைய அன்பு புரியாமல் போனது.. ஏன் இவனுடைய காதலை இழந்து போனேன் ... எப்படி இவனுடைய நம்பிக்கையை மறுபடியும் பெறுவேன் ... அவன் அரவணைப்பு இல்லாமல் எப்படி என்னால் வாழ முடியும்..

தன்னை விட்டு விலகிப் போகும் கணவனை எட்டிப் பிடிக்க முடியாத துர்பாக்கியவதியாக துடித்துப் போய் நின்றாள்...

மதனி வாங்க..

"தம்பி நான் தப்பு பண்ணிட்டேனா? எனக்கு அவுகள பத்தி ஒன்னும் தெரியாம போச்சா, எனக்கு ஒன்னும் தெரியல , இப்ப கூட எனக்கு எங்கிட்டு போகணும், என்ன செய்யணும்னு கூட புரியல.. இதுதான் உன் அறைன்னு காட்டி உள்ளாற தள்ளுனாக, நான்தான் உன்ற புருஷன்னு வாழ சொன்னாக, வாழ்ந்தேன், அவன் செய்யிறது தப்பு அம்மா கூட வான்னு கூப்பிடும் போது அதுவும் சரியா பட்டது போயிட்டேன்.. சத்தியமா எனக்கு நீங்க சொல்ற துரோகம், கல்யாணம், காதல் , வாழ்க்கை இதோட அர்த்தம் எதுவும் புரியலைங்க தம்பி.. நான் கோழையா பிறந்தது நான் செஞ்ச தப்பா, இல்லை இவர் நேசம் புரியாத அளவுக்கு முட்டாளா இருந்தது தப்பா, இல்லை இவுகளுக்கு புள்ளையா பிறந்தது தப்பா என்று அழுத குழலியை பார்த்து பாவமாக , பாரமாகி போனது ...

" மதனி அதெல்லாம் ஒன்னும் இல்ல அழாதீக எல்லாம் சரியா போவும்..."

"ஒன்னே ஒன்னு தம்பி .. நீங்க பாம்பு விஷம்னு சொன்னீங்க ஆனா இதுதான் பாம்புன்னு சொல்லி தரலையே, எப்படி தம்பி எனக்கு வித்யாசம் தெரியும்... அவர் என் முகத்தை பார்க்காம போகும் போது இங்கன வலிக்குது" என இதயத்தை குத்தி காட்டியவள்...

"இந்த வலிக்கு பேர்தேன் காதல்னா.. நான் உங்க அண்ணனை காதலிக்கிறேன்போல உயிர் போகிற மாதிரி வலிக்குது , பேசவும் தெரியல, வாழவும் தெரியல நானெல்லாம் எதுக்கு உசுரோட இருக்கேன்னு எனக்கே தெரியல, " என்று விக்கி விக்கி அழ விருமன் கண்கள் கலங்கி போனது ....

"மதனி... 

"நான் செஞ்ச தப்புக்கு அவுக கால்ல செருப்பா கிடக்க கூட ஆசைதேன் ஆனா சேர்த்துக்க மாட்டாரே தம்பி.."

"என்ன மதனி, நீங்க சொல்லி புட்டிக, அண்ணன் சொல்லலை அவ்வளவுதான் வித்யாசம்,   

அப்போ அவுகளுக்கும் என்ன பிடிக்குமா என்று ஆச்சரியமாக பார்க்க..

சரிதான் கிழிஞ்சு போச்சி...உங்கள மட்டும்தேன் பிடிக்கும் அதேன் காத்து கிடந்து கட்டினாக என மருது காதலை சுருக்கமாக கூறிட..

அப்படியா என்று அழுகையிலும் சிரித்தாள் தனக்காக ஒருவன் அவளுக்காக மட்டுமே ஒருவன் இந்த முட்டாள் பெண்ணையும் நேசித்து ஒருவன் கிடந்திருக்கிறான் அவளுக்கு சொல்ல தெரியாத உணர்வின் ஆர்பாட்டம் ஒன்று உள்ளே நடந்தது அடி வயிற்றில் சுரீர் என்று சுக வலி மின்னி மறைந்தது ..

"அண்ணன் பிரியத்தை சொல்லாம வச்சதும் தப்புதான்.. உங்களக்கு தெரியலன்னா சொல்லி கொடுக்கிறது அவர் உரிமை, அப்போ அவரும் தப்புதான பண்ணியிருக்கார் அதனால கவலை படாதீங்க அவரா நாமளான்னு பார்த்து புடலாம் வாங்க..

ம்ம் இருவருமாக மருது சொன்ன வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..

நாச்சி அடிபட்ட பாம்பாக நஞ்சை கக்க காத்து கிடந்தாள்....

ஒரே கல்லுல ஐஞ்சு மாங்காய் அடிக்கிறேன் மருது என்னைய சுலவா நினைச்சிபுட்டு போறியா நேரம் வரும்லே அப்ப வச்சிருக்கேன் உனக்கு என்று தூங்காது உக்கிரம் குறையாது காத்து கிடந்தாள்.... 

அவன் காதல் தீவிரவாதி எனில் இனி அவளும் காதல் தீவிரவாதி தான் .. காதல் என்று தெரியாத வரை காலத்தை வீண் அடித்து விட்டாள்... இனி ஒவ்வொரு நெடியும் காதலில் தீவிரவாதம் புரிவாள்...