ஞாயிறு இரவு கதை நீக்க படும் மீளா காதல் 29,30

Mila30

ஞாயிறு இரவு கதை நீக்க படும் மீளா காதல் 29,30

29 

மீளா காதல் தீவிரவாதி!!

 

மருது மீசை திருகி கொண்டே விருமன் மீது சாய ,மூவரும் சேர்ந்து அவன் உடல் மண் தொடாது தாங்கி கொண்டனர்... 

மாமாஆஆஆஆஆஆஆஆ!! என்று குழலி கத்தி அவனை அழைத்தவள்..

"மதனிஇஇஇ" உறவில் எந்த மாற்றமும் இல்லை.. எப்போதும் அவர்கள் மருதுவின் சொந்தம்தான்

"தம்பி நான் அழ மாட்டேன் என்ற மாமனுக்கு நான் அழுதா பிடிக்காது.. எனக்காக திரும்பி வருவார் நம்பிக்கை இருக்கு.. ஏன்னா எனக்கு இந்த உலகத்தில வாழ தெரியாதுன்னு அவருக்கு தெரியும்தான..ஒத்தையில விட்டுட்டு என் மாமா போகவே மாட்டார், எல்லோருக்காகவும் அவருடைய கடமையை சிறப்பா செஞ்சவர்.. என் பிள்ளைக்கான கடமையை செய்யாம போக மாட்டார்.. ஓடி ஓடி ஓஞ்சு போயிட்டார் போல , கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வருவார்" என்று மூடிய மருது இமைகளில் முத்தம் கொடுத்து ..

"எனக்காக வருவீங்க தானே மாமா??" என்று அவன் காதில் கேட்க .. அவன் விரல் அசைந்தது... அதிர்வில் நின்ற விருமன்...

"காப்பாத்திடலாம் மதனி , என தன் அண்ணனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டவன்.. எதிரில் நின்ற நாச்சியை பார்த்து சொடுக்கிட்டவன்...

"அவரை சாச்சிட்டோம்னு சந்தோஷமா இருக்கியா ... இதோ, அவருக்கு பின்னாடி எத்தனை பேர் இருக்கோம் பார்த்தியா" ஒரு ஊரே நெஞ்சில் அடித்து கொண்டு அழுதது... 

"இதுதான் என் அண்ணன் சேர்த்து வச்ச சொத்து ...மரணம் வந்தாலும் கூடவே சேர்ந்தே போவோமே தவிர , அவரை தனியா எங்கேயும் விடமாட்டோம் .. ஆனா உனக்கு பின்னாடி எதுவுமில்லை... பெத்த புள்ளைங்க, புருஷன், தாய் தகப்பன் சந்தோஷம் நிம்மதி, எதுவுமே இல்லாம.. இத்தனை வருஷம் எதுக்காக வெறுமனே ஒத்தையாக ஓடினோம்னுகூட தெரியாம ஓடிக்கிட்டு இருக்க பாரு, உன்னைய நினைச்சி பாவமாதேன் இருக்கு ... நீ செஞ்ச பாவமே உன்னைய கொல்லும் " என்றவன் சுத்தி நின்ற அவள் ஊர் காரர்களை பார்த்து..

" நீங்க என்ன வேணும்னாலும் என் அண்ணனை செஞ்சி இருக்கலாம்... ஆனா என் அண்ணன் உங்களுக்கு செஞ்சது என்ன தெரியுமா? , என்னைக்காவது ஒரு நாள் இந்த ஊர் திருந்தி வரும்லே , அப்போ ஜனங்க எதுவுமே இல்லாம நின்னுறக்கூடாது விருமான்னு உங்களுக்காக, உங்க பிள்ளைகளுக்காக தன்னோட சொத்து மொத்தத்தையும் ஆஸ்பத்திரியா, பள்ளிக்கூடமா.. உங்க பிள்ளைகள் வாழ்வதற்கு தேவையான அத்தனை வசதியையும் செஞ்சு போட்டிருக்கார்.. ஆனா நீங்க அவருக்கு கொடுக்கிற பரிசு இதோ இதுதான் .. உங்கள திருந்துங்கன்னு சொல்ல மாட்டேன் .. ஆனால் இன்னமும் நீங்க இவ சொல்றத கேட்டுக்கிட்டு இருந்திங்கன்னா... காலத்துக்கும் உங்க வீட்டுல விதவையான தாயும், அண்ணன் இல்லாத தங்கச்சியும், குடும்ப தலைவன் இல்லாத வீடும்.. கை கால் வெட்டப்பட்ட மகனும், மகளும் இருந்துகிட்டேதான் இருப்பாங்க... நீங்க இப்படி அறிவு இல்லாமல் இருக்கிறதுனாலதான் உங்கள பகடையா வச்சி இந்த மாதிரி கூட்டம் வாழ்ந்துகிட்டே இருக்கு ... முடிவு உங்க கையில... நீங்க வாழனுமா?இல்ல அவ வாழணுமான்னு நீங்களே முடிவு எடுத்துக்கோங்க" என்று நாச்சியை கைகாட்டியவன்.

 மருதுவை தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி செல்ல ஆரம்பித்தான்...

"அவன் சொல்றது சரிதேன், நாம கண்ண மூடி கிடந்தா, இப்படி பல தலை உருண்டுகிட்டுதேன் இருக்கும், இதுக்கு ஒரே முடிவு இவ சாகணும்" என்று யாரோ சத்தமிட..

"ஆமா ஆமா!!" என்று துணை குரல்கள் வரவும்.. போகும் மூவரையும் பார்த்து கொண்டிருந்த நாச்சி ,அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க.. ஊரே அவளை சுற்றி வளைத்தது...

"என்னலே காமெடி பண்ணிட்டு இருக்கிய, போய் அவங்க மூணு பேரையும் வெட்டி போடுங்க "என்று ஆத்திரம் குறையாது நாச்சி அருவாளை கையில் எடுக்க குனிய.. ஒரு ஆறு வயது குழந்தை ஜாதி கலவரத்தில் தகப்பனை இழுந்து தவிக்கும் வேதனை அறிந்த பிஞ்சு உள்ளம் ... ஓடி வந்து அவள் முதுகில் மிதிக்க, தரையில் அப்படியே நாச்சி முகம் குப்புற விழ, மக்கள் மொத்தமும் அவள் மேல் ஏறி மிதிக்க ஆரம்பித்த விட்டனர் .. திடீரென தள்ளாடி விழுந்ததால்.. நிலை கொண்டு நாச்சி எழும்புவதற்கு முன்னாக ஊர் முழுவதும் அவளை தாக்க ஆரம்பிக்க.. உடலில் அத்தனை பாகங்களிலும் அவர்கள் காலால் மிதிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு எந்த ஊருக்கு போவது தீட்டு என்று கூறினாளோ, அதே ஊர் எல்லையில் வாயில் ரத்தம் வடிய கண்கள் நிலை குத்தி , வானம் பார்க்க சாதியை சுமந்து , சாதியை கட்டிக்கொண்டு , சாதியோடவே வாழ்ந்து அந்த சாதியோடவே மரித்தும் போனாள்...

தங்கள் ஊருக்கு நரகாசூரன் மருது அல்ல.. இந்த நாச்சியார் என்பதை அறிந்தவர்கள் அதே இடத்தில் அவளை கழுகு தின்ன போட்டு விட்டனர்... மாறுபவர்கள், மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டும்தான் மன்னிப்பும், தண்டனையும்.. மாறவே கூடாது என்பவர்களுக்கு மன்னிப்பும் தண்டனையும் வீண்.. அவர்களுக்கு தண்டனை மரணம் மட்டுமே இல்லையென்றால் என்றாவது ஒருநாள் மறுபடியும் கிளை விட்டு விஷ வேரை பரப்புவாள்...

வருத்தம் தொண்டை வரை இருந்தாலும் இப்படி ஒரு வீரனின் மனைவி கோழையாக அழுது நிற்க கூடாது என்ற ஒரே ஒரு எண்ணம் மட்டும் குழலிக்கு.. அவன் மனைவி என்று கூறவே அவளுக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது..மருது கட்டிய தாலி தன் கழுத்தில் தொங்க .. அதை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டவள் ..

"என்னை ஏமாத்திடாதீங்க மாமா, வந்துடுங்க "என்று ஓயாது அவன் காதில் கூறிக் கொண்டே வந்தாள்..அந்த மருத்துவமனையில் இருந்த அதிக மருத்துவர்கள் மருதுவால் படித்து பட்டம் பெற்றவர்கள்தான்..

" வெளியே சொல்ல கூடாதுலே நீங்க செய்ற தானமும் தர்மமும்.. அதுதேன் என் பெயர் சொல்லும்.. உங்க தொழில்ல சரியா இருங்க" என்று அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவன் இந்த மருது பாண்டியன்..இன்று தலைதொங்கி ஸ்ட்ரக்சரில் கிடக்க.. அவனைப் பார்த்து கலங்காத கண் இல்லை ,கண்ணீர்.. விஷம் உடல் உறவு பரவி இருந்தாலும் அஸ் யூசுவல் நாம ஹீரோ ஹீரோயினை போட்டுத் தள்ள மாட்டோம் என்ற கொள்கை உடையவர்கள், ஆதலால் ஒரு வாரம் கடுமையான போராட்டத்திற்கு பிறகு மருதுபாண்டியன் கண்களை விழித்தான்...

அத்தனை பேரின் பிரார்த்தனை பலனாக கண்களை முழித்த மருதுபாண்டியன்.. பார்த்தது இரண்டு ஊர் மக்கள் ஒன்றாக சேர்ந்து அவன் அறைக்கு வெளியே நின்றதைத்தான்.. 

இதற்காகத்தானே இந்த போராட்டம் தன் அன்னையின் கடைசி ஆசை நிறைவேறிவிட்டது என்பதில் மகிழ்ச்சி கொண்ட மருது தன் உடலை அசைக்க.. அவன் கைகள் அசைய மறுத்தது.. குனிந்து பார்க்க, அவன் மனைவி ஒரு கையில் ,விருமன் ஒரு கையில் சோர்வில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தனர்..மருது கையை மெல்ல அவர்கள் முழித்து விடாதபடி எடுத்தவன்.. இருவர் தலையையும் தன் கையால் கோதி விட்டவன் ..

" இந்த ரெண்டு ஊர் பத்தியும் எனக்கு கவலை இல்ல .. இனி உங்க ரெண்டு பேருக்காகவும் வாழ போறேன்.. என் பிள்ளைகளுக்காக உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் ... என் கடமையை சரியா செஞ்சி முடிச்சிட்டேன் .. நான் மறுஜென்மம் எடுத்தது உங்க ரெண்டு பேருக்காக மட்டும்தான்.." என மனதோடு சொல்லிக் கொண்டு 

"ம்க்கும்" என கனைக்க .. விருமம்தான் முதலில் தலையை தூக்கிப் பார்த்தது.. தன் அண்ணன் முழித்திருப்பதை பார்த்ததும்... ஏதோ சொல்ல வாயெடுக்க தலையாட்டி தடுத்தவன் ..தூங்கும் தன் மனைவியை காட்டினான்..

"தூங்கட்டும்" என்பது போல் தலையசைக்க .. விருமன் அவன் கைகளை தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டே, வெகு நேரம் குலுங்கி அழுதான்.. தன் தாய் ஊர் எல்லையில் செத்து கிடப்பதாக கேள்வி பட்டு , அனாதை பிணமா அடக்கம் பண்ணுங்க என்று கூறியது குழலிதான்... அதை விருமனும் ஆமோதிக்க அவ்விதம் ஆனது .. 

இந்த ஒரு வாரத்தில் அவர்கள் கொண்ட துக்கத்திற்கு அளவே இல்லையே.. எங்கே மறுபடியும் மருதுவை மீசை முறுக்கி லேய் என மிரட்டும் மருது சத்தம் கேட்க முடியாதோ, அவ்வளவுதானா இமயமலை சரிந்து விட்டதா? என்று எவ்வளவு வேதனை பட்டிருப்பான் ..

"ஏன்டா பொட்ட புள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க.. இப்போ உள்ள பொட்ட பிள்ளைக கூட அழ காசு கேக்குதுலே.. நீ என்னன்னா சின்ன புள்ள போல ஒப்பாரி வைக்கிற.. தொண்டை வறண்டு போய் கிடக்கு ஏதாவது வாங்கிட்டு வா.."

"டாக்டர்கிட்ட கேட்காம என்னத்த வாங்கிட்டு வர சொல்ற, எதுக்கும் டாக்டர் கிட்ட கேட்டுட்டு வரேன்..."

"அவங்க எதையாவது சொல்லுவானுக அதுக்காக திங்காம கிடந்தா , அதுவே எனக்கு நோயா மாறி போகும் ..போய் நாலு இட்லியும், கட்டி சட்னியும் வச்சு வாங்கிட்டு வா" என்று மனைவிக்கு கேட்காத குரலில் மிரட்டல் பறந்தது..

"நான் டாக்டர்கிட்ட..

"ப்ச் தள்ளு, நானே போய் வாங்கிக்கிறேன்" என மருது சட்டையை தேட...

"அங்கன ஏழு தையல் போட்டு கிட்டனியை ஆணியில தொங்க போட்டிருக்கு, இவருக்கு குசும்பு பார்த்தியா ..""

"இதுல்லாம் சப்படா..சட்டையை எங்க, கறை ஆகி போச்சோ ஆகுமா ஆகாதா.."

" இவரே ஆவாம கிடக்கிறார் , இந்த பேச்சு மட்டும் ப்பா பார்த்தாலும் பார்த்தேன் என் அண்ணன் போல ஒருத்தனை பார்க்கல... இன்னும் நாலு குத்து குத்தி இருக்கலாம்... உடம்பு புல்லா விஷம் பரவி கிடைக்குதுன்னு நாம பதறுனா, அவர் எழும்பி கட்டி சட்டினியும் இட்லிக்கும் சண்டை போடுறார்"...மருது கடைக்கு போக சட்டையை தேட...

"இருண்ணே நானே போய் வாங்கியாறேன்.. 

"அதை செய் , சீக்கிரம் போயிட்டு வா இட்லி சூடு ஆறிடாம" என்று கால்களை ஆட்டி கொண்டு மீசையை சீப்பு கொண்டு சீவ.. தன் அண்ணனை நெட்டி முறித்த விருமன்... 

"பயந்திட்டேன் ண்ணே...

"உன்ற தலையெழுத்து கடைசி வரை என்ற கிட்ட மிதி படணும்னு இருந்தா , யாரால மாத்த முடியும்" என்று கூறிய அண்ணனை சிறிதாக கட்டி அணைத்து விடுவித்த விருமன் .. இட்லியை தேடி போனான் எதிரில் மின்னல் வர அவள் நிழல் படாது விலகி போக 

"எத்தனை நாளைக்குன்னு பார்கிறேன் போடா" என்று இவளும் முகத்தை தூக்கி கொண்டாள்....

"பெட்டில் தலைசாய்த்து தூங்கி கொண்டிருந்த குழலியை சாய்ந்து அமர்ந்து மருது பார்த்து கொண்டிருந்தான்.. அவள் கண்ணின் கீழே கருவளையம் தெரிந்தது.. மருது உயிருக்கு சேதம் இல்ல என்ற பிறகே தூங்கி இருக்கிறாள் என அறிந்தவன்..

"மருதுவை சாய்க்க உன் விழிகளால மட்டும்தேன் முடியும் ... நான் காதல் தீவிரவாதி இல்லடி , நீதேன் என்னையை கட்டி போட்டிருக்கிற தீவிரவாதி.. காதல் தீவிரவாதி!!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட குனிய .. அவன் காயம் வலிக்கவும்..

"ஆஆஆஆவ்' என்று முனங்க சட்டென்று..குழலி  

"மாமாமா" என அலறி கொண்டு எழும்ப... மருது தன் இரண்டு கையையும் விரிக்க ...

"மாமாஆஆஆ "என உதடு துடிக்க அழுகை ,சிரிப்பு ஆச்சர்யம் ,சந்தோஷம் அனைத்தும் கலந்த ஒரு உணர்வை கொடுத்தவள் தாவி அவனை அணைக்க....

"கண்ணு!!!!" என்று மனைவி முகத்தை தூக்கி.... 

"உனக்காக வந்துட்டேன் போதுமா ???"என்றவன் அவள் இதழ் பிரித்து பதில் கூறும் முன்... தன் வரண்டு போன இதழை வற்றாத ஜீவ நதி இருக்கும் அவள் இதழோடு பொருத்தி கொண்டான் ..

ஹக் அவன் காயம் படாது, மருது கழுத்தை கட்டி கொண்ட குழலி ,,விரும்பி அவன் இதழ் உறிஞ்ச உறிஞ்ச தன் கீழுதட்டை பிதுக்கி கொடுத்தாள்... ஐந்து நாள் உணவை அவள் இரு இதழில் வாங்க நினைத்து , நாவினை உள்ளே விட்டு துலாவி நாவினை கொக்கி போட்டு இழுத்து சப்ப, அவளே அவன் நாவோடு உள்நாட்டு கலவரம் செய்து, அவன் உடல் முழுவதும் தன் விரல் வைத்து அவன் நலன் பார்க்க... அவனோ அவள் விரல் பிடித்து அவள் காணா நலன் சரியாக உள்ளதா? என காட்ட அதிர்ந்து கணவன் முகம் பார்த்தாள்..அவள் இதழை கடித்து விட்டவன் , அவளை தூக்கி மடியில் வைத்து கொண்டு ...

"கடைசி மூச்சு இருக்கும் வரை உன் மேல ஆசை குறையாம இப்படியே இருக்கும்டி" , என்றவன் மறுபடியும் அவள் கரம் பிடித்து ஆசை வேர் அணலாக அவள் கேட்டு துடிப்பது காட்ட... உதட்டை பிதுக்கியவள்...

"உடம்புக்கு முடியட்டும் மாமா ...

"ஏன் இப்ப எழும்ப முடியாம கிடக்கேனா, நான் உன் மேல கோவமாதான் இன்னும் இருக்கேன் தெரியுமா ..."

"அப்போ அந்த கோவம் இன்னும் குறையலையா மாமா.."

"அது எப்படி குறையும் , ஏகப்பட்ட நாள் அதுக்கு நீ உழைக்கணும் இப்ப இருந்தே உழைக்க தொடங்குடி "... அவள் சேலையை விலக்க மருது கைகள் போக.. 

மாமா டாக்டரு வந்துபுடுவாக.."

"அப்ப கதவை சாத்திட்டு வாடி, ஆனா வேணும் ஐஞ்சு நாள் கழிச்சு கண் முழிச்ச புருஷனுக்கு உன்ற கவனிப்பு இதுதானா...." என்று சட்டம் தலைகீழாக பேசிட...

"மாமா...

"என்னடி ஓமா போய் கதவை சாத்திட்டு வா ..."

"ம்ம் "தலையை சொரிந்து கொண்டே போன மனைவி பின்னழகில் ஆரஞ்சு பழத்தை தூக்கி வீசிய மருது...அவள் தடவி கொண்டே திரும்பி பார்க்க, மருது முழுதாக கூடலுக்கு தயாராக விழி சொக்கி போய் அவளை அழைத்தான்..

"சீக்கரம் வாடி,"மன வேதனைக்கும் , உடல் வேதனைக்கு மருந்து அவள் மட்டுமே....

"அச்சோ!! ஏதாவது ஒன்னுகடக்க ஆகி போச்சுன்னா என்ன செய்வேன், மாமா வேற ஒத்த கால்ல நிற்கிறாறே "என்றவள் முதுகில் அவன் உதடு ஊற .. 

"எழும்பிட்டாரா??" என்று தலையை திருப்பி பார்க்க..

"எழும்பிடுச்சுடி "என்று காந்தம் இரும்பு தேடுவதை அவள் பின்னழகில் உரசி காட்ட...அவளுக்கு கெதக்கென்றது.. கத்திக்குத்து வாங்கி வாரம் கழியல, அதுக்குள்ள இவன் கறி சோறு திங்க பார்க்கிறாறே , எதை பேசி மூடு விழா நடத்த புரியாது நின்றவள் ஏதோ தோன்ற... 

""மாமா உங்களுக்கு என்ன வேணும் ??என்று அவன் கண்களை பார்த்து கொண்டே கேட்க..

"ஆசை தீர கண் சொக்கி போகணும் , அதுவும் இப்பவே.." என்று அவள் புடவை கொசுவம் தேடி கை போக...

"இப்பவே வேணுமா??"...

"ம்ம் அதுக்குதானே அவன இட்லி வாங்க அனுப்பி விட்டது, எனக்கு தேவை அந்த உணவு இல்ல.. இந்த அசைவ உணவுடி "என்று அவள் இதழை இருவிரலில் நசுக்கி பிடிக்க... அவன் விரலை கடித்த குழலி , நின்ற மருதுவின் கால் நடுங்க செய்தாள் ...

அசைவம்தானடா வேணும் நீ நோகாம, நான் தர்றேன் .. ஆசை தான தீரணும் நான் தீர்த்து வைக்கிறேன்!! என்று நாக்கவிதை முரணாக படிக்க....

"ஆஆஆஆஆ கண்ணு" என்றவன் காயம் கூட அவள் எச்சில் பட்டு குளிர்ந்து போனது.. அவள் தலையை தடவியவன், கண்கள் சொருகி.. அப்படியே கதவில் சாய , மனைவி கேட்டது கேளாதது, அத்தனையும் செய்திட .. அவன் கண்ணை திறக்க முடியாது சுகத்தில் முனங்கி, கண்ணு கண்ணு என புலம்பி எழும்பிய மனைவியின் இதழை கவ்வி கொண்டான் ...வெகுநேரம் முத்தம் தொடர்ந்தது அவன் முடிக்க , இவள் தொடங்க என்று முற்றில்லாத கவிதையாக முத்த கவிதை தொடர ... மொட்டைப் பய ஒருத்தன் இருக்கானே ,வந்து கதவை தட்டி விட்டான் 

தட் தட் "அண்ணன் "என்று கத்த ....

அவர்கள் தேவலோகத்தில் மூணாவது அடுக்கில் சஞ்சரிக்க ..

தட்தட் என்று தட்டும் வேகம் கூட , மருதுவை விலக்கி நிறுத்திய குழலி..

"தம்பி வந்திருக்கு மாமா..."

"லேய் போயிட்டு ஒரு வாரம் கழிச்சி வா இதையே வேலையா வச்சிருக்கு நீ "

"அப்படி என்ன அண்ணன் உள்ள பண்ணுத ,கதவை தொற..."

""என் பொஞ்சாதி கூட என்னடா பண்ணுவேன் ஆஸ்பத்திரிக்குள்ள பாம்பு வந்திடுச்சாம் அதேன் அடிச்சிகிட்டு இருக்கேன், போயிட்டு பொறுமையா வா.."

"ஏதே பாம்பு இங்கேயும் வந்திடுச்சா.."

"உன்ற மதனி எங்க போனாலும் இந்த பாம்பு பின்னாடியே போகும்லே , போ போ" என்றவன் மறுபடி குழலி இதழை கவ்வி, ஸ்ஸ்இஇஇ இச் இச் மொச் என முத்தத்தை இருவரும் தொடர ஆரம்பிக்க..

"உண்மையாவே பாம்பு எதுவும் இவுகள தொடருதா என்ன???!!" என்று விருமன் யோசனையாக உள்ளிருந்து வந்த ஸ்ஸ் இச் சத்தத்தை கேட்டவன் ..

"அய்யய்ய அது அதுல்ல , போச்சு தையல் விட போகுது..."

"விட்டா தைச்சிட்டு அடுத்த ஆட்டம் போவேன் நீ இன்னும் இடத்தை காலி பண்ணலையாலே" என்று மருது வேக குரல் கொடுக்க...

"அய்யய்யோ !!!! டாக்டர் வந்து கதவை உடைங்க" என்று கத்தி கொண்டே போக.. மருது மீசையை முறுக்கி கொண்டே..

"பாம்பு அடிப்போமா கண்ணு..."

ம்ம் என்று வெட்கம் கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் ,தலையை தூக்கி நெற்றியில் முத்தம் கொடுத்தவன் ...

"என்ற பொஞ்சாதி எனக்கு அடங்கி இருக்கணும்னு நினைக்கிறதும் கூட ஒரு தீண்டாமைதேன். இனி உனக்கு என்ன தோணுதோ? அதை பேசு , செய் நான் உன் கூட இருப்பேன் ..." என்று கூறிய கணவனை ஆசையும், காதலும் போட்டியிட பார்த்தவள்...

"இன்னும் இன்னும் தீவிரவாதியா மாற வைக்கிறீங்க மாமா..."

"மாறு உன் தீவிரவாதம் தாங்க, நான் எப்பவும் தயார் என்று நெற்றியில் முட்டி சிரித்தான்...அவன் மீசையை வருடி விட்ட குழலி....

"அந்த நாலு வெள்ளை முடியை புடுங்கிக்கவா?"

"ஏதே அதெல்லாம் முடியாது ,அதுதேன் மருதுவுக்கு அழகு.."

"இப்பதான மாமா நான் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னு சொன்னீங்க" என்றவள் அவனை மயக்கும் விதித்தில் மயக்கி .. வெள்ளை முடியை பல்லில் கடித்து பிய்த்து போட்டவள் , அயர்ந்து தூங்கும் மருதுவை கட்டி கொண்டு அவன் நெஞ்சில் மட்டுமே தனக்கு பாதுக்காப்பு என பதுங்கி கொண்டாள்... 

30

மீளா காதல் தீவிரவாதி!!

கன நேரம் நித்திரை, முழித்து எழும்பிய மருதுவுக்கு விருமன் சாப்பாட்டை பிரித்து வைக்க..

"மாமா நான் அள்ளி தரவா??"...

"பாம்பு அடிக்க தெரிஞ்ச எனக்கு, அள்ளி திங்க தெரியாதா கொடு" என வாங்கி கொண்டவன்..

"சரிண்ணே நீ சாப்பிடு, நான் வீடு வரை போய் வர்றேன் "என கிளம்பிய விருமனை அருகே அமர வைத்தவன் ... வேலையாக நின்ற மனைவியையும் அருகில் உட்கார் என்று பிடித்து வைத்தவன்..

"சாப்பிட்டியளாலே ??"என்று கூற.. இருவரும் ஒருசேர இல்லை என தலையாட்ட.. சாப்பாட்டை உருண்டை பிடித்து இருவர் கையிலும் கொடுத்தவன்...

"சாப்பிடுங்க"" என்று கொடுத்தான்.. அவன் நல்ல ஆசான், அன்பன், தகப்பன் , காதலன் கணவன் எல்லாவற்றிலும் தீவிரவாதி.... அவனை நம்பி வந்த யாவருக்கும் அன்பின் தீவிரவாதி!!

ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வைக்கும் முன் விருமன், குழலி நாக்கு தள்ளி விட்டனர்....

'ஏன் அண்ணன் இப்படி பண்ணுத , இப்ப எதுக்கு அந்த புல்லட்டை எடுக்கிற , காயம் ஆறட்டும்.

"நான் என்ன நோயாளியாலே, உன்ற மதனிகிடட் கேட்டு பார் ,ராவு நின்னு விளையாண்டேன்"..என்று கூறி மீசை முறுக்க ..

"ச்சீ என்ன பேச்சு "என்று குழலி வெட்கப்பட்டு உள்ளே ஓடி விட்டாள்...

" அதுக்கு புல்லட்டை தூக்குவியா கொஞ்சம் தூங்கு போ..."

"அப்ப நீ ஓட்டு நான் பள்ளிகூட வேலை எப்படி நடந்திருக்குன்னு பார்க்கணும் "என்று பின்னால் அமர்ந்து கொண்டு ரவுசு பண்ண...

"உன்னைய போலவே உன்ற மகன் பொறந்தா கஷ்டம்."

"எனக்கு என் அம்மை மாதிரி பொண்ணு பிறக்கும்லே... அவள ஒரு கையில, என்ற கண்ணை ஒரு கையில தாங்குவேன்.."

"அப்ப நானு..

"நீ என் முதுகுல " என்று விருமன் தோளில் தட்ட.. மின்னல் கூடையில் கீரை கட்டோடு வந்து வண்டியை கைபோட்டு நிறுத்தினாள்..

"நிறுத்துலே.. 

"எதுக்கு அண்ணன் வீதியில போற வம்பை விலைக்கு வாங்குத போவோம்.."

"ப்ச் நிறுத்துன்னு சொன்னேன்..

"என்னம்மா எங்கன போற?.

"அக்கா பார்க்கத்தான் .."

"அவ தூங்குற நேரம் தொல்லை பண்ணாத என்ன விஷயமா போற.."

 " கீரை கேட்டாவ மருந்து போடாதது அதான் கொண்டாந்தேன்.."

"லேய் விருமா அதை வாங்கி உள்ளார வை ,நாம போகும் போது கொடுக்கலாம்..

"நான் வாங்க மாட்டேன்" என்றவன் முதுகில் சுரீரென்று அடி விழ..

"அடிச்சு அடிச்சே வரி விழுந்து போச்சி அண்ணே.. நீயே வாங்கி கொடு "என்று முகத்தை திருப்பி கொள்ள .. மின்னல் முகம் கருத்து போனது.. பத்து நாளாக அவளும் விருமன் போகும் இடம் எல்லாம் சாக்கு சொல்லி சுற்றத்தான் செய்கிறாள்.. மருது கூட அன்று நடந்ததை கூறத்தான் செய்தான் ..ஆனால் அவன் கூறிய ஒரே வார்த்தை...

ஆயிரம் வழி இருக்க, அவ அந்த வழி தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்.. வலிக்குதுண்ணே விடு... அவள பார்க்கும் போது அந்த நாள்தேன் நியாபகம் வருது .. உடைஞ்சதை ஒட்ட வச்சா என்னைக்காவது ஒரு நாள் காயம் ஆக்கிபுடும்.. கடைசி வரை எனக்கு நீ சோறு போட மாட்டியா அண்ணன் ..

முடியாதுன்னு சொல்லு உன்னைய தொல்லை பண்ணல" என்று கூறி முடிக்க...மருது புரிந்து கொள்ள நேரம் கொடுத்து அமைதி காத்தான் ... 

மருது உடல் நிலை தேறி சரியாகி ஒரு மாதம் கழித்து விருமன் பெட்டியை தூக்கி கொண்டு வந்து நின்றான் ,,

"என்ன தம்பி எங்க போறிய.."

"மெட்ராஸ் போறேன் மதனி..."

"லேய் என்னலே லூசு போல உளறுத..அங்க என்ன சோலி உனக்கு .." மருது சட்டையை முறுக்கி கொண்டு வந்தான் 

"வேலை கிடைச்சிருக்கு..."

"வேலையா?? ..

"ம்ம் 

"கலெக்டர் உத்தியோகமா?"

"தாரேன்னு தான் சொன்னாவ, நான்தேன் அது வேண்டாம்னுட்டு டிரைவர் வேலைக்கு சேர்ந்திருக்கேன்.. விருமனுக்கு பிடித்த மீனை வாங்கி கொண்டு உள்ளே வந்த மின்னல் அதிர்ந்து போய் நிற்க...

""இப்ப எதுக்குலே இந்த அவசரம்...எங்கையும் போவ கூடாது பொட்டியை கொண்டு உள்ளார வைலே..."

"இங்கன இருந்தா செத்து போவேன் பரவாயில்லையா??" என்று கேட்ட விருமனை தட்டி கொடுத்த மருது...

"போயிட்டு வா, எல்லாம் எப்பவும் ஒன்னு போல இருக்காது.. இன்னைக்கு பிடிக்காதது நாளைக்கு பிடிக்கும் .. இன்னைக்கு பிடித்தது, நாளை பிடிக்காம போகும் , அதுக்கு உன்ற மதனி சாட்சி ... மின்னலை பார்த்து பல்லை கடித்த விருமன்..

"நான் இங்கன இருந்தாதான சுத்தி சுத்தி வருவ.. உன்ற கண் காணாத இடத்துக்கு போறேன்.. அப்ப என்ன செய்வ? என்று மருது வண்டியில் பின்னால் அமர்ந்து விருமன் பேருந்து நிலையம் சென்று விட பஸ்ஸில் ஜன்னல் ஓரம் அமர்ந்து போகும் விருமனை தூரத்தில் நின்று கண்ணீர் வடிந்த கண்ணோடு மின்னல் பார்த்து கொண்டிருந்தாள்... 

"சொல்லால் வீழ்ந்து போன காதல் மறு சொல்லால் ஜனனம் எடுக்கும் ...

சொல்லாலே தொட்டு செல்லும் மின்னல் !! அவன் எங்கு போனாலும் தொடர்ந்து போகும் இந்த மின்னல்..

அழுது கொண்டு நின்ற மின்னல் அருகே வந்த மருது...

"அவன் நிலவுக்கு போனாலும் அங்கேயும் போ என்ன பண்றான்னு பாப்போம் எப்ப கிளப்புற "என்று கேட்க...

"இன்னைக்கு" என்று பளிச்சென்று சிரித்தாள்...

"அடி பலமா படுமே மின்னல்" என்று குழலி அவள் தலையில் பூவை சூடி விட...

"இரண்டு மடங்கு அவனுக்கு கொடுக்க தில்லு இருக்கு அக்கா ..."

"தம்பி பத்திரம் , போய் கிளம்பு அவன் என்ன விட்டுட்டு போறது .. பின்னாடியே போய் குடைச்சல் பண்ணி இழுத்துட்டு வந்து.. அவன் கையால தாலியை வாங்கு "என்று கூறிய மனைவியை பார்த்து மீசை முறுக்கிய மருது..

"என்ற பொஞ்சாதி பேசவெல்லாம் செய்றாளே..

"பின்ன உங்க பொஞ்சாதி பேச வேண்டாமா பஞ்சாயத்து கூட பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கேன்...

ஆம்!! தைரியமாக பேச பழக கற்று கொண்டிருக்கிறாள் , ஒரளவு தேறியும் விட்டாள்.... 

இன்று புது மேல்நிலைப் பள்ளிக்கூட திருப்பு விழா கலெக்டர் மந்திரிகள் வந்து தலைமை தாங்கிட..

"மருது வந்து திறந்து வைப்பா, இதுக்காக உயிரை கொடுத்தது நீயும், ,உன்ற அம்மா சகுந்தலாவும் தான்..."

"என்ற பொஞ்சாதி திறந்து வைப்பா, அவ வேற நான் வேற இல்லை.. கண்ணு திறந்து வை என்று பெண் சுதந்திரத்துக்கு விதை போட்டு மனைவி திறந்து வைத்து முன்னால் போக அவள் பின்னால் எட்டு வைத்தான்...

எங்கே கர்வம் தொலைகிறதோ, அங்கே பெண்ணுக்கு சுதந்திர கீற்று ஒளிர்விடுகிறது..

இனி சுதந்திர காற்று மண்ணில் மணம் வீசும் ஜாதியை வேரோடு அழித்து விட்டான் என்று கூற இயலாது.. ஆனால் அதுதான் உயிர் என்று நினைக்கும் நிலைபாட்டை ஒதுக்கி வைத்து.. மனிதமும் மாண்பும் தான் உயரியது என வாழ்ந்து காட்டினான்.. 

தங்கபஸ்பம் தின்று , வைர மாளிகையில் உறங்கி விலை உயர்ந்த ஆடம்பர காரில் பவனி வந்தாலும், இந்த உடலில் மூச்சு நின்ற பின் கிடைக்க போவது என்னவோ, அமரர் ஊர்தியும், கண்ணாடி பெட்டியும், ஆறடி நிலமும்தான் கிடைக்க போகிறது .. வாழ்வது சிறிய காலம் , அதில் நீ பெரியவன் , நான் சிறியவன் என பேசி ஏன் பாகுபாடு ... எல்லாரும் மனிதர்கள் ... நமக்கு வலிப்பது போல் அவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் வந்தால்... ஏற்ற தாழ்வு முற்றிலும் ஓழிய வில்லை என்றாலும் குறையுமே, அதுவே நல்ல மாற்றம் தானே .. 

தீவிரவாதம் செயலில் இருக்க வேண்டாம், அன்பில் இருக்கட்டும் அன்பை விதை , அதையே அறுவடை செய்வாய்...

மருது அன்பை விதைத்தான்.. அது பல நூறு மடங்காக விளைந்து நிற்கிறது ... அறுவடை கண்டிபாக செழிப்பை கொடுக்கும்.. 

அவன் மனம் போல செழித்து வாழட்டும் ....

நன்றி

வாழ்க வளமுடன் 

வாழ்க தமிழ்..

வளர்க தமிழ்நாடு !!