மீளா 21

Mula21

மீளா 21


21
மீளா காதல் தீவிரவாதி!!

தன்னிலை உணர ஒன்று பொறுமை தேவை இல்லை தனிமை தேவை , இது இரண்டும் நம்ம மருதுவுக்கு கிடையாது,. தனிமை தன்னை கொல்லும் ,  பொறுமை தன் இனத்தையே கொல்லும் என்று எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு ஏகப்பட்டதான் அவன் கொள்கை பிடிப்பு  ..

"எவன் என்ன சொன்னாலும் இவனுக்கு ஏற்று கொள்ள முடியவில்லை..  தன்னைவிட இன்னொருவர் முக்கியம் என தன்னை ஒதுக்கி வைத்து விட்டு போனதில் கர்வம் அடிபட்டதோ இல்லையோ? காதல் அடிபட்டு போனது.. " நான்தேன் லூசு போல அவளுக்காக காத்து கிடந்துருக்கேன் .. அவளுக்கு நான் தொல்லையாதேன் இருந்திருப்பேன் போல,  அப்படி ஒன்னும் கால்ல விழுந்து நான் வாழ தேவையில்லை" என்று போனவனுக்கு மருத்துவச்சி மகன் வந்து விஷயம் கூறவும் ...

"ஆத்தே என் புள்ள!!" என்று உடல் நடுங்கி போனது... அவன் என் புள்ள என்று விளித்தது குழந்தையை மட்டுமா??  அவன் குழந்தை மனைவியையும் சேர்த்தா,  அவன் இதயம்தான் திறந்து காட்ட வேண்டும் ..

"சாதி கெளரவத்துக்காக எவ்வளவு தூரம் போறா இந்த நாச்சி,  பொம்பள மேல கை வைக்க கூடாதுன்னு பொறுத்து,  பொறுத்து போனா .. இவ ஓவராதேன் போறா" என காற்றை விட வேகமாக புரவி செலுத்தி வந்தவன்..

"விஷத்தை கொடுத்தாலும் இந்த ஜூஸ் நல்லா இருக்குன்னு வாயில ஊத்துவா,  மனைவி பற்றிதான் தெரியுமே ஆனால் பாவமாக துடித்து நின்ற மனைவியை பார்த்து இன்னும் கோவம் வந்தது ...

"நாற்பது நாள் சொகுசா இருக்கும் போது புருஷன் என் நியாபகம் வரல .. இப்ப மட்டும் நான் வேணுமா?? உன் ஆத்திர அவசரத்துக்கு தூக்கி கொஞ்ச நான் என்ன உன்ற வீட்டு நாயா .. போடின்னா போடிதான்,   தீர்ப்பை மாத்தி சொல்ற வழக்கமே எனக்கு இல்லை... பாதுக்காப்பு அது நான் கொடுப்பேன்,  புள்ளைக்கு தகப்பன் அது நான்தேன் , அதை தவிர ஒன்னும் கிடையாது ஐயம் ஸ்டெடி பாய் "என்று கிளம்பி விட்டான்...   இவன் வீணா போறது இந்த வீராப்பை கட்டி அழுவதால்தான்... அவ எப்படி பேக்கு, என்று நன்றாக தெரியும் .. சரி மறப்போம் மன்னிப்போம்னு ஏத்துக்க தெரியல, ஏற்கனவே ரொமான்ஸூக்கு வழி இல்லை .. இதுல இவன் வேற வீஞ்சினா எப்படி  என ரைட்டர் புலம்பியது மருது காதில் கேட்குமா?

கீழூர் இன்று சகுந்தலபுரி என மாற்றப்பட்டு விட்டது ,நவநாகரிக ஊர் ஆல்சோ..  குட்டி பள்ளி,  மருத்துவமனை,  பேருந்து நிலையம் ,பூங்கா , குளம்,  என்று இல்லாத வசதியே இல்லை..  அன்று கிடைக்க கூடாது என்று நினைத்தது எல்லாம்..  இன்று ஒரு படி மேலேயே உண்டு..  எல்லாம் யாரால்? மருதுவால்!!  அங்கே குத்தகை அரட்டி உருட்டி வாங்கி இங்க கட்டியாச்சு .. அவர்கள் படிக்கணுமா இங்கதான் வரணும் , ஆஸ்பத்திரி போகணுமா இங்கதான் வரணும் அன்று அடிமையாக இருந்த ஜனங்கள் இன்று முதலாளி ஆக்கப்பட்டிருந்தனர் ..

"மதனி இதுதேன் அண்ணன் சொன்ன வூடு,  உள்ளாற வாங்க .." ஒரு அறை சேர்ந்தார் போல் குளியலறை இருந்தது .பின்னால் சமையல் தடுப்பு ... அவளை கண்டதும் ஊரே கூடி விட்டது ..

"நம்ம மருது பொஞ்சாதி தானே , ஏலேய் அதை கொண்டா,  இதை எடு அதை அங்கன வைங்க" என்று அனைவரும் அதையும் இதையும் கொண்டு வந்து டீலக்ஸ் ரூமாக ,  அந்த ஒற்றை அறையை மாற்றி விட்டனர் ..

"இதெல்லாம் வேணாம் தம்பி..."

"எங்க மருது சம்சாரம் நீ , அந்த புள்ளயாலதான் நாங்க வாழவே செய்றோம்" என்று பாதிபேர் முகம் கைகால்களில் தீக்காயத்தோடு வந்து நிற்க...

"என்ன தம்பி இதெல்லாம் ஏன் எல்லாருக்கும் இப்படி இருக்கு ..."

"இருக்காங்களேன்னு பாருங்க மதனி" என்று நடந்த உண்மையை கூற அதிர்ந்து போனாள் ..

"இப்படியும் ஒரு சாதிக்காக பண்ணுவாங்களா..."

"பண்றாங்களே  மதனி இதெல்லாம் உங்களுக்கு தெரிய கூடாதுன்னுதேன்,  உங்கள வெளி உலகம தெரியாம வளர்த்தது ..."பெருமூச்சு விட்டவள்...

"கொஞ்சம் சுயநலமும்,  சுதாரிப்பும் இலலைன்னா இந்த உலகத்தில வாழ முடியாது போல, இல்லை தம்பி...  அதான் என்ன வச்சி விளையாண்டு புட்டாக அந்த உத்தமரை போய் நான் கஷ்டப்படுத்திட்டேனே" முந்தானையில் கண்ணீரை துடைக்க...

"போனதை விடுங்க .. நம்ம ஹீரோயினுக்கு அழுவாச்சி சீன் வராது..  அதிரடியா செகண்ட் ஆப் தொடங்குங்க... அண்ணனே ஆடி போகணும்.."

"உங்க அண்ணனை பாத்தா நான்தேன் ஆடி போறேன்,  கண்ணை பார்க்கவே நடுங்குது தம்பி.  நாலு வார்த்தை பேசவே நாள் கணக்கு ஆச்சி..  இப்போ தப்பு பூரா என்ற பேர்ல எங்கன போய் பேச.."

"நல்லா இருக்கே..  நீங்க எனக்கு என்ன வந்ததுன்னு இங்க இருங்க,  அவர் நான் யாருக்கும் அடங்க மாட்டேன்னு அங்க இருக்கார், இப்படியே போனா எப்படி ?

"என்ன செய்யன்னு தெரியலையே ..

"லவ் பண்ணுங்க..

"லவ்வா , அதை எப்படி பண்ணணும்.."

"போங்க மதனி வெட்கமா இருக்கு  "என்று விருமன் போய்விட ... அவன் பின்னாடி போய் அந்த லவ் தெரபி என்ன என்று கேட்க ஆர்வம் கொண்டாள்..

"தம்பி உண்மையாவே அது எப்படி பண்ணணும்னு தெரியல , சொல்லி தந்தா ஒழுங்கா பண்ணிபுடுதேன் .. எனக்கு உங்க அண்ணன் வேணும் , அதுக்காக எத்தனை லவ் வேணும்னாலும் பண்ணுவேன் தம்பி.."

"சோலி சுத்தம் !!! கடையில நாலு லவ் வாங்கி தா தம்பின்னு கேட்காம விட்டியலே ... உங்களுக்கு அண்ணன்கிட்ட என்னெல்லாம் பண்ண தோணுதோ அதை எல்லாம் பண்ணுங்க அதுதான் லவ்.."

"புரிஞ்சது தம்பி ...

"என்ன புரிஞ்சது??...

"ஏதோ சொல்லுதீய,  அதுதான் புரியல தம்பி" என்றதும் தலையில் அடித்து கொண்ட விருமன் ..

"மதனி நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்..  அண்ணன் காலையில, ராவு இங்கன ஊரை பார்க்க பள்ளிகூட வேலை சரியா நடக்குதான்னு பார்க்க வருவாக.."

"சரி தம்பி கண்ணுல விழாம இருந்திக்கிறேன்.."

"சுத்தம் !!! அப்ப ஒளவையார் ஆகுற வரை அண்ணன் கூட சேர முடியாது "

என்ன தம்பி பயம் காட்டுறீங்க...

"பின்ன என்ன மதனி , அண்ணன் வரும் போது,  போகும் போது வேணும்னே அவர் கண்ணுல படுங்க..

"பட்டா ...

"பட்டா,  விட்ட குறை தொட்ட குறை அவரை இழுக்கும் ..."

"என்ன இழுக்கும் தம்பி..

"அய்யய்ய  என்ன  மதனி நீங்க இப்படி பெட்டர்மாஸ்க் லைட்டா இருக்கீங்க" ...

"அதுதான் தம்பி பிரச்சனையே,  யாருக்கிட்ட போய் விவரம் கேட்க .. எனக்கு தெரிஞ்சது நீங்க மட்டும்தானே தம்பி,  தப்பா நினைச்சுக்காம இந்த லவ்வுல மட்டும் என்னைய தேத்தி உங்க அண்ணன் கூட சேர்த்து வச்சிடுங்க" என்று கையெடுத்து கும்பிட...

"அட என்ன மதனி நீங்க..  அதை தவிர வேற வேலை என்ன இருக்க போவுது,  பிளான் போடுறோம் அண்ணனை தூக்குறோம்...நீங்க வருத்தப்படாம போய் நல்லா தூங்குங்க ..நான் இங்கன வெளியே தான் இருப்பேன் .. இது நம்ம பயலுவ உங்க பாதுகாப்புக்கு அண்ணன் விட சொல்லி இருக்கார்"..

"ம்ம் சரி தம்பி "" புதிதாக தெம்பு வந்தது...  அந்த லவ்வை பிடிச்சு கட்டி போட்டுறணும் என்ற புதுவேகத்தில் புயலாக காதல் தீவிரவாதி அவதாரம் எடுத்தாள்... என்ன சொல்லி கொடுத்தாலும் சொதப்ப மட்டுமே செய்ய போகிறோம் என தெரியாதுல்ல ...

"முடியும் முடியும்!!" என தனக்கு உத்வேகம் கொடுத்து கொண்டாள் ...

காலை அழகாக விடிந்தது ..

"மதனி மதனி..."குழலிக்கு புது காதல் , புது தேஜஸ் கொடுத்தது .. ஏனோதானோ வாழ்க்கை நேற்றிரவோடு முடிஞ்சி..  இனி மருதுவுக்காக மட்டும் அவனுக்கு பிடிச்சது போல வாழ்க்கை ...முழுதாக மதுவின் கண்ணுவாக மாறி நின்றாள்..

"என்ன தம்பி.. சிரித்த முகமாக வெளியே வந்த மதனியை பார்த்து விருமனுக்கு நிம்மதி 

"அண்ணன் வர்ற நேரம் வாங்க,  வந்து மாங்கு  மாங்குன்னு கிணத்துல தண்ணீ இறைங்க..அண்ணன் பார்த்து எவன்டா,  என் பொஞ்சாதியை தண்ணீ எடுக்க விட்டதுன்னு சண்டைக்கு வருவார் .. அப்படியே  ஏதாவது ரூட் கிடைக்கும் போயிடலாம்..."

"சரி தம்பி இந்தா வந்துட்டேன்".. என்று குழலியும் குடத்தை தூக்கி கொண்டு,  கிணறு நோக்கி வந்தாள். மருது  புல்லட் புடுபுடுவென ஊருக்குள் என்ட்ரி ஆக ..இங்கே அவன் பொண்டாட்டிக்கு பயத்தில் உற்பத்தி ஆகும் காதல் ஹார்மோனில் தடதடவென வயிறு உருண்டது ...

"சென்னி வாக்குல போட்டு புடுவாரே... லவ் ரொம்ப கஷ்டம் போலவே,  கை ஏன் இப்படி ஆடுது "என்று அவன் வரும் வழியில் இருந்த கிணற்றில் நீரை இறைக்க தெரியாது தடுமாறி கொண்டு நிற்க..  அவளை காணாது  தாண்டி வந்த மருது,, சட்டென்று ஏதோ தோன்றி காலை ஊன்றி நின்று,  பின்னால் திரும்பி பார்க்க அவன் மனைவிதான் ..

"அதான வாசம் அடிக்குதேன்னு பார்த்தேன்,  அவளோ ஆளு பார்த்துட்டான் என்று படபடத்து காலை ஒழுங்காக ஊன்றாது, கிணற்றுக்குள் தலையை விட ...  கால்கள் தள்ளாடி உள்ளே தலைகுப்புற விழ போனவளை , சட்டென்று அவள் இடையில் கைவிட்டு மருது தூக்கி நிறுத்தி....

"பைத்தியகாரி புள்ள உண்டாவன பண்ற வேலையா இது.."

"என்ன அண்ணன் என்ன ஆச்சு?" என்று விருமன் வர...

பளார் பளார் என்று இரண்டு கடவாப்பல் கழண்டு விழ அவனுக்கு அறை விழ....

"ஏன் அண்ணன் என்ன அடிச்ச??"..

"ஐடியா கொடுத்த உன்னையைத்தான் அடிக்கோணும்.,  நீதான் இந்த மாதிரி இத்து போன ஐடியா கொடுப்ப ..."

"கண்டுபிடிச்சிட்டாரே அவ்வளவு மொக்கையாவா ஐடியா இருந்தது ...."

"பொறவு தண்ணி இல்லாத கிணத்துல தண்ணீ இறைச்சிகிட்டு நிற்கிறா , இதுல வாலி கூட இல்லை என்னத்த போஓ" என்று குடத்தை எட்டி மிதிக்க... அவள் கோலி குண்டை  உருட்டியது போல கண்களை உருட்டினாள்..  புருஷன் கை பட்ட இடையில் புதிதாக குறுகுறுப்பு வந்தது..  இதுவரை சீறா பெண்மை பாகங்கள் முதல் முதல் ஆசையில்,  காதலில் அவன் எச்சில் கேட்டு துடித்து புடவைக்குள் விம்மி வெடித்தது ....

"ம்மாஆஆ இதுதான் ஆசையா.. இவர்  பேசினா, நின்னா ,நடந்தா கூட பார்க்க தோணுது .. அப்படியே இவர் வியர்வை வாசம் அடிக்க இறுக்கி கட்டிக்க தோணுது",  இந்த காதல் தொல்லை கண்ணை கிறங்கிட வைத்தது ...

"இனிமே இப்படி லூசுதனம் இரண்டுபேரும் பண்ணிக்கிட்டு திரிஞ்சிங்க,  கட்டி கிணத்துல இறக்கி புடுவேன் கூட்டிட்டு போ... "

"ஏன் அண்ணன் மதனி மேல பாசத்துலதான வந்து காப்பாத்துனீங்க.."

"ஒரு _யிரும் இல்லை,  என்ற பிள்ளைக்கு ஏதாவது ஆகி போச்சுன்னா , நான் என்ன செய்ய? அந்த ஒன்னுதான் பல்லு உடையாம இங்கன நின்னுட்டு இருக்கா..  இனிமே நான் வரும் போது இவ தலையைப் பார்தேன்,  அவள ஒன்னும் பண்ண மாட்டேன்..  நீ செத்த பார்த்துக்க,  தள்ளி நில்லு, என்று போக போனவன்..  அவனையே பார்த்து கொண்டிருந்த மனைவியை  உற்று பார்க்க.... அத்தனையும் காதல் வகையில் சேர்ந்தது .. நாணம் கொண்டு நிலம் தோண்டி,  இதழ் கடித்து , ஆசையில் வியர்த்து தனங்கள் ஏறி, இறங்க,  மையலாக அவனை பார்த்தபடி அவன் மனையாள் நின்றாள்...

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .. நான் நல்ல மாடு மறுபடி சூடு பட மாட்டேன் புள்ளையை பெத்து தந்துட்டு உன்ற வழியே போ..   நீ மயங்கி பார்க்க மாட்டியா,  பேச மாட்டியான்னு,  ஏங்கி கிடந்த மருது நான் இல்லை... கண்ணாடி போல சில்லு சில்லா என் இதயத்தை உடைச்சிபுட்டு, ஒட்ட வைக்க பார்க்காத, நீ எந்த நேரம் எங்க சாய்வியோன்னு தெரியாம,  மதில் மேல பூனையா வாழுறதுக்கு , ஒத்தைக்கட்டையா ஒருத்தரும் இல்லாம வாழ்றது வாசி... குழந்தை பத்திரம் "என்று புல்லட்டை எடுத்து கொண்டு போக... 

"அச்சோச்சோ!!  மதனி கிளிசரின் போடாம அழுவாங்களே,  அண்ணன் வேற இம்புட்டு பேசிட்டு போறாரே ""என விருமம் குழலி அருகே ஓடி வர குழலியோ புல்லட்டில் போகும் மருதுவை கண்ணில் சொட்டு விடாது பருகி கொண்டிருந்தாள்

"மதனி..

"தம்பி மாமா இப்ப எங்க போறார்??..

"மாமாவா?... என்று யோசனையாக பார்க்க ...

"அவருக்கு என் மேல வெறுப்பு இல்லை தம்பி,  கோவம் .. விட்டுட்டு போயிட்டேன்னு கோவம் மட்டும்தேன்,,   வெறுப்புன்னா நான் போராடி  வீண்..  கோவம்னா அதை குறைக்க போராடலாம் தம்பி.. இனி நானே பார்த்துக்கிறேன் .. "என்று போகும் மருது தடம் பிடித்து நடக்க ஆரம்பித்தாள்...

புருஷன் முகம் கண்டு அவன் உணர்வை படிக்க காதல் கற்று கொடுத்தது... பேசும் போது கண் கலங்கியதே, அவள் தவறி விழுந்து விடுவாளோ என பயந்து நடுங்கி பிடித்த அவன்  விரல் கூறியது..  இன்னும் நாயகன் உன்னை வெறுக்கவில்லை என்று  ...

குழந்தை பத்திரம் என்றவன் கண் சொன்னது பார்த்துடி கவனமா இருன்னு... போகும் போது கண்ணாடியில் அவள் முகம் பார்த்து போனானே அந்த பார்வை சொன்னது ...

விட்டாலும் விலகாது இந்த பந்தம் , இந்த ஒரு கரிசனை போதுமே , மருதுவின் மனதில் மறுபடி புகுந்து கொள்ள...

"தெரியுதோ தெரியலையோ,  தன் கையே தனக்கு உதவி நோ இடைத்தரகர் .. நானே காதலில் குப்புற குதித்துவிட்டேன் மன்னா .. " என்று குழலி காதல் கிணற்றில் நீச்சலடிக்க கிளம்பி விட்டாள்...

முங்கு நீச்சல் அடிச்சாவது அடுத்து யூடி ரொமான்ஸூக்கு ஏற்பாடு பண்ணு தாயி புண்ணியமா போகும் ..

இப்படிக்கு , எப்போ அடுத்து கஜகஜா வரும் என காத்திருப்போர் சங்கம்.. எழுதுவது சங்கத்தலைவி..