மீளா 28
Milla28

28
மீளா காதல் தீவிரவாதி!!
"ஆஹா வாங்கலே கூட்டமா வந்து சிக்கிக்கிட்டிய போல எங்க உங்க சோலியை முடிக்காம சாவு வந்திடுமோன்னு இந்த நாச்சியவே ஒரு நிமிஷம் கலங்க வச்சி புட்டியலே" என்று நாச்சி சேலையை இடுப்பில் தூக்கி சொருகி கொண்டு கண்ணை காட்ட அருவாள் பறந்து வர அதை துள்ளி பிடித்து கொண்ட நாச்சி...
"கொலை பண்றது என்ற நேரப்போக்குல ஆரம்பிப்போமா??" என்று சிரிக்க
"நீ கொல்ல துணிச்ச கூட்டம் , நாங்க சாகவும் துணிச்ச கூட்டம் ..லேய் வந்து உன்ற பொஞ்சாதிய கூட்டிட்டு போவே என்று விருமனை அழைக்க...அவன் அசையாது நிற்க...மருது திரும்பி ஒரு முறை முறைக்க..
"முறைச்சாலும் அவ எனக்கு வேண்டாம் மதனி அண்ணன்கிட்ட சொல்லிபுடுங்க...நான் இதுல மாற மாட்டேன் "
"என்ன தம்பி உங்க அண்ணன் பொஞ்சாதின்னு சொல்றார்னா ஏதாவது விவரம் இருக்கும் கூட்டிட்டு வாங்க ..
"இப்ப என்ன சொல்லுவார்னு தெரியுமா அவ தப்பே பண்ணல.. நாச்சிதான் தப்பு பண்ண வச்சிட்டான்னு சொல்லி , என்ன கல்யாணம் பண்ண சொல்லுவாக.."
அதுதான் உண்மைன்னா கட்டிக்க வேண்டியது தான "தம்பி...
"எப்படி முடியும்? அவ பேசினது இங்க கிடக்கு மதனி என்ன நடந்திருந்தாலும் என்னைய அவ அப்படி பேசலாமா ? "
"லேய் இஇஇஇஇ "என்று மருது மறுமுறை அழைக்க..
"அவளுக்கு கால் இருக்குதான வர சொல்லு இல்லை போக சொல்லு "என்று மின்னல் காது படவே கூறி விட்டு விருமன் வேறெங்கோ பார்க்க... மின்னல் முகத்தில் அப்படி ஒரு வேதனை ... என்ன சொன்னாலும் ஏற்று கொள்ள கூடிய வார்த்தையும் செய்கையுமா அது ... முகம் சுருங்கி போக ...குழலி வந்து மின்னலை அழைத்து கொண்டு வர வேண்டியதாகி போனது ...
"நான் எதுக்கு அப்படி "மின்னல் விருமனிடம் பேச போக...
"நான் தீட்டுங்க சாமி, உங்க காலை சுத்துன பீடை விலகியே இருங்க" என்று மருது நோக்கி போய்விட்டான்... எந்த கொம்பன் சொன்னாலும் இவ வேண்டாம் .. போங்கடா போக்கத்தவன் பண்ற வேலை காதல், இப்பதான அந்த கருமம் கண்டு பிடிச்சிருக்கேன் , நல்லவேளை தாலி கட்டுறதுக்கு முன்ன புரிஞ்சது.. இல்ல நான்ல தூக்கு மாட்டி இருக்கணும், மின்னல் அழுததை கண்டிருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டான் ..
"இவனுக்கு ஒன்னும் ஆக கூடாதுன்னு அப்படி பண்ணினா புரிஞ்சிக்காம பேசிட்டு போறான் ... " என்று மின்னல் உதட்டை பிதுக்கி கொண்டு நின்றாள்... சண்டை போட மூட் இல்லை என்று மருது பக்கத்தில் வந்து நின்ற விருமனை..
"லேய் கத்தியில விஷம் இருக்கு பார்த்து" என்று மருது சத்தம் கொடுக்க...
"குத்த சொல்லு அண்ணன் இந்த உலகத்தை பார்த்தாலே எரிச்சல் கூந்தலா வருது" என விருமன் வேட்டியை ஏத்தி கட்ட..
"ஏம்லே ஊர் சிரிக்க வைக்கிற கோட்டி பயல "
" ம்க்கும் இனி எவன் சிரிச்சா என்ன, அதான் ஊரே கை தட்டி சிரிக்க வச்சிட்டாளே" என்று முணுமுணுத்த விருமன் முகத்தை தொங்க போட்டு கொண்டு அவனும் சண்டைக்கு தயார் ஆனான் ..
விஷயம் கேள்வி பட்டு இரண்டு ஊர் ஆட்களும் கூடி விட்டனர்.. போலீஸ் சட்டம் அனைத்தும் ஒன்று மருது கையில், மற்றொன்று நாச்சி கையில் எனவே இவர்கள் சண்டைக்கு விலக்கு பிடிக்க ஒருவரும் கிடையாது செத்தா பயர் அக்ஸிடண்ட், பாம்பு கடிச்சிருச்சி என சப்பை காரணம் கூறுவார்கள் சாட்சி இருந்தால் தானே தண்டிக்க ...
மருது நாலு யானைக்கு சமம் என்றால், விருமனும் வீரத்தில் அவனுக்கு இணையே... பெண்கள் இருவரும் எல்லை கல்லில் உட்கார்ந்து கொள்ள.. திரும்பி பார்த்த விருமன் ...
"மதனி நீங்க முதல்ல கிளம்புங்க வேடிக்கை பார்க்க வேண்டிய இடமா இது போங்க..."மின்னலுக்கு கவனிப்பு என்ன, பார்வை கூட கிடையாது.. அவனை அசிங்கப்படுத்தியது கூட ஓகே என் அண்ணன் மதனியை நிற்க வச்சி பேச இவ யார் என்று கோவம்தான் இன்னும் அவனை உசுப்பி விட்டது ..
மாமா போகவா?? புருஷன் தலையசைக்க குழலி காத்து நிற்க
"இந்தாருடி எங்கையும் போகாத, இங்கன இரு ...அங்க இவன்க என்ன பண்ணி வச்சிருக்கானுவளோ, " என்று மனைவியை அதட்டி அமர வைத்து விட்டு ..மருது சண்டையை தொடர... நாச்சி பத்து பேய் ஏறியது போல அத்தனை பேரையும் குத்தி போட வெறி பிடித்து நின்றவள் கண்ணில் மகள் பொன்னி பட்டுவிட்டாள்...
"இவ ஒருத்தியை அழிச்சா போதும் ... மருதுவும் இல்லை , விருமனும் இல்லை "என்று சிரித்தவள் கூரான வாளை எடுத்து கொண்டு குழலி நோக்கி நடக்க ஆரம்பிக்க... சண்டையில் கவனமாக இருந்த மருதுவும், விருமனும் தன் எல்லைக்குள் நின்ற குழலியை மறந்து போக...
தன் கண்ணால் கலவர பூமி கண்டு பயந்த போன குழலி யாருக்கும் எதுவும் ஆகிட கூடாது ஆண்டவா என எல்லையில் நின்ற எல்லைச்சாமியை கண் மூடி வேண்டி கொண்டிருக்க, மின்னல் விருமனை எப்படி சமாளிக்க எனும் சொந்த கவலையில் கண்களை மூடி அவள் நிற்க... ஆவேசம் கொண்டு ஓடி வந்த நாச்சி கூர் வாளை சதக்கென்று குழலி முதுகில் சொருக போக ... இடையில் வந்து விருமன் விழ ..
ரத்தம் பீறிட்டு பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய குழலி நெற்றிப் பொட்டில் தெறித்து, அவள் சுமங்கலி என கூற ஒட்டியிருந்த குங்குமம் கரைந்து மூக்கு வழியே ஓடியது ....
"ஆஆஆஆஆஆஆ மாமாஆஆஆஆஆஆஆஆஆ"
"அண்ணா" என விருமன் ,குழலி அலற..
ஆம்!! குத்து வாங்கியது மருது பாண்டியன்.. நின்ற தலையில் நாச்சி தலை காணவில்லை என்றதும் மூளை மணியடிக்க தன் மனைவியை தேடியவன் நாச்சியின் கோர செயலை கண்டுகொண்டு சடுதியாக ஓடி வந்தான் ..அதற்குள் விருமன் இடை புக மருது இருவரையும் மறைத்து கொண்டு போய் விழுந்து விட்டான் , மருதுவின் இடுப்பின் ஓரத்தில் வாள் சொருக நின்றான்... ஒற்றை கையில் வாளை புடுங்கி போட்டவன் , தன் கையால் பின்னால் நின்ற குழலி விருமன் , மின்னல் மூவரையும் மறைத்து முதுகு பின்னால் விட்டவன்...
"என்னையை தாண்டி என் உசுருக மேல கை வை" என்றவன் கண்கள் சிவந்து போயிருந்தது ...வலி இல்லை தன் உயிர்களை காக்க வேண்டும் என்ற பாச பிணைப்பு அஃது..
"மாமாமாஆஆஆ" மாமா குழலிக்கு ரத்த சகதியாக நின்ற புருஷனை கண்டு வாயில் வார்த்தை பஞ்சம் ஆனது ...
"நாச்சிஇஇஇஇஇஇஇஇஇஇ உன்ன!!!" என்று விருமன் மருதுவை தாண்டி, மருது எடுத்து போட்ட வாளால் குத்த போக, அவனை கைநீட்டி தடுத்த மருது ...
"அண்ணன் கையை தாண்டி வர கூடாது போஓஓஓஓ..."
"அண்ணன் விடுண்ணே அவள, என்ற கையால கொன்னு போடுறேன் "என்று வாளை ஓங்க ....
"உன்ன பெத்த தாயா இருந்தாலும் கொல்லுவியாடா" என்ற கேள்வியில் விருமன் திரும்பி மருதுவை பார்க்க...
"நான் அனாதையா இருந்தாலும் என்னையும் யாரோ ஒருத்தர் சுமந்துதான பெத்துருப்பாங்கன்னு அடிக்கடி கேட்பியே.. அந்த யாரோ ஒருத்தர் இதோ உன் முன்னாடி ஜாதி பேய் பிடிச்சி நிற்கிறாளே இந்த நாச்சிதான்" என்றதும் விருமன் கைகள் வாளின் பிடியை தளர்த்தியது ...
அண்ணன் ...
"ம்ம் இதுதேன் உன்ன பெத்த தாய்!! அத்தனை சூழ்நிலை வந்தாலும் இவ மேல கை வைக்காம கடந்து போக அது ஒன்னுதேன் காரணம் .... உன்னய சுமந்துபுட்டாங்கிற காரணம்தேன்.. ஏன்னா நீயும் என் உசுருடா "
"புரியல அண்ணன்" குழந்தையாக முழித்தான் ரணம் வாங்கும் இதயம் என்று எழுதப்பட்டிருந்ததோ வரிசையாக ரணம் வாங்க தள்ளாடி மருதுவை பிடித்தான்..
"ஆமாலே!! குலம் செழிக்க , அவுக தலை நிமிர்ந்து இருக்க, குடும்பத்தோட தலைச்சம் பிள்ளையை இந்த எல்லை கோயிலிலே கருக்கல் அமாவாசையில் பலி கொடுத்தா.. இவங்க குடும்பம் என்றைக்கும் தலைகட்டா இருக்கும்னு, ஏதோ ஒரு நாதாரி சொன்னதைக் கேட்டு.. பத்து மாசப்பிள்ளையா இருந்த உன்னைய, கொஞ்சம் கூட கருணையே இல்லாம, அவ்வளவு ஏன் இதோ இந்த நாச்சிக்கு கூட தெரியாம, அந்த சந்தன பாண்டியனும் இவ புருஷனும் சேர்ந்து இந்த இடத்தில் கொண்டு வந்து வெட்டி போட நினைச்சானுங்க..."விருமனுக்கு தொடர் அதிர்வலை பலம் குறைய வைத்தது
" நீ செஞ்ச புண்ணியம் , என்ற அம்மை காதுல இந்த விஷயம் விழுந்து, ஆட்களோட வந்து உன்னைய காப்பாற்றி தூக்கிட்டு போயிட்டாங்க .. அதுக்குள்ள இதோ இவகிட்ட குழந்தை காணாமல் போயிடுச்சு, நகைக்காக யாரோ தூக்கிட்டு போயிட்டாங்கன்னு கதை அடிச்சு விட , அறிவே இல்லாத இந்த ஜென்மமும் அப்படியான்னு மண்டையை ஆட்டி உன்னைய தலை முழுகிட்டு அடுத்த வேலையை பார்த்துச்சு...
"எங்க மறுபடியும் உன்னைக் கொண்டு போய், இதே ஓநாய் கூட்டத்து கூட சேர்த்தா, இவங்களுடைய வெறிக்கு உன்னையே எதையும் செஞ்சுடுங்களோன்னு பயந்து.. எங்க கூட்டத்தோட கூட்டமா உன்னைய வளர்த்தாங்க ...
"எத்தனையோ தடவை உன்னை இந்த நாச்சி கூட சேர்த்துடனும்னு ஒரு தாயா போராடதான் செஞ்சாங்க .. உண்மை தெரிஞ்ச உன்ற அப்பனும், தாத்தனும் இவ பக்கத்துல போக விடாம என்ற அம்மை பத்தி இல்லாதது சொல்லி விஷத்தை விதைச்சு இவளும் அவங்க இரத்தம்னு காட்ட ஆரம்பிக்க , மந்தபுத்தி இருக்கிற இந்த ஜென்மங்கள் கூட நீ வளர்றதுக்கு அனாதைன்னு பட்டத்தோட என்ற தம்பியா இருப்பதுதான் உனக்கு நல்லது, நீயாவது மனுஷனா வளருவேன்னு நினைச்சு என் அம்மா அதற்கு பிறகு உன்னை இவங்க கூட சேர்க்க நினைக்கல... அம்மா சாகும்போது ஏதோ சொன்னாவ உன்ன பத்தி , அப்ப எனக்கு புரியல ஆனா" என்று விருமன் சட்டையை கிழித்து முதுகை காட்ட... நாச்சி முகம் வெளிரி போனது..
நாச்சிக்கு, குழலிக்கும் இருக்கும் அதே பிறை வடிவ மச்சம் விருமன் முதுகிலும் இருக்க நாச்சியின் கண்கள் அப்பட்டமாக அதிர்வை காட்டியது.. பெண் பிள்ளை மீது பிடித்தம் கிடையாது , ஆனால் ஆண் மகன் எப்போதும் பிடிக்கும்தான் ....தன் குலம் காக்க வந்தவன் என கர்வம் கூட உண்டு ... இப்படி தன் எதிரில் அதுவும் ,தான் வெறுக்கும் கூட்டத்தில் வளர்ந்திருக்கிறானே என்றுதான் இப்போது கூட நினைக்க தோணியது...
"இது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் மாமா" என்று குழலி அதிசியமாக கேள்வி கேட்க...
என் அம்மா இறந்து கொஞ்ச நாள் கழிச்சு சித்தப்பு ஒரு நாள் வந்து ஏதையோ மென்று முழுங்க... என்னன்னு கேட்க , இந்த உண்மை தெரிஞ்ச ஒரே ஆள் சித்தப்புதேன், விருமனுக்கு விவரம் தெரிஞ்ச பின்னாடி விஷயத்தை கூறிடும்னு சொல்லியிருக்காங்க .. நான்தேன் இவ வயித்திலையா பிறந்தோம்னு நொந்து போவானேன்னு சொல்ல விடல "என்று விருமனை காட்ட.. அவன் முகத்தில் அப்படி ஒரு அருவருப்பும் விரக்தியும்..
"என்னைய அந்த சாமிக்கே பலி கொடுத்திருக்கலாம்ணே, இவ ரத்தம் என் உடம்புல ஓடுதுன்னா எனக்கு இந்த ஜீவனே வேண்டாம்" என்று விருமன் வாழ விருப்பம் இன்றி, வாளால் தன் கழுத்தை அறுக்க போக , எக்கி மருது அவனை அணைத்து கொண்டவன்...
"எப்போ சகுந்தலாதேவி கை பட்டுச்சோ அப்பவே உன்ற ரத்தம் சுத்தமாகிடுச்சுலே ..சகுந்தலாதேவி மகன்கன்னுதான் அத்தனை இடத்திலேயும் பதிவாகி இருக்கும்... ஒன்னு நீ, ஒன்னு நான்.. நீ யாரு மகன்னு, நீயே முடிவு பண்ணி.. இதை எடு" என வாளை அவன் கையில் கொடுக்க .. தொண்டை குமுற நின்ற விருமன்...
"நான் சகுந்தலாதேவி மகனாதாதேன் இருக்க ஆசை படுதேன் அண்ணன், உன்ற தம்பியா மதனிக்கு தம்பியா கடைசி வரை இருந்திடுதேன் அண்ணன் ..வாண்ணே விஷம் ஏறிட போகுது ..ஆஸ்பத்திரி போவோம்.. ""
"எது விஷமா??? என்று குழலி அலறினாள் ....
"ஆமாக்கா, கத்தி அருவா அத்தனையிலும் விஷம் தடவி இருக்கு "... என்றதும் குழலி பரிதவித்து வந்து மருது தோளை தொட...
"செத்தாலும் உன்ற புருஷன் வீரமாதேன் சாவேன் அழாத கண்ணீரை சேர்த்து வை, ஒருவேளை நான் திரும்பி வரலேன்னா, ஊருக்கு காவல் நீதேன்" என்று பல்லை கடித்தவன்...
" கண்ணுஊஊஊ "காதலாக அவளை அழைக்க
"மாமாஆஆஆஆ" என்று தாவி அணைத்து கொண்ட மனைவியை ஒரு கையில், தம்பியை ஒரு கையில் பிடித்து கொண்டவன்....
"உன் ஜாதி வெறி என்னையை கொன்னா அடங்கும்னா தாராளமா கொல்லு , ஆனா உன் ஜாதி வெறிக்கு பழியாக போற கடைசி உயிர் நானாதேன் இருக்கணும் அது முடியும்னா, என்ன கொன்னு உன்ற வெறியை தீர்த்துக்க" என்று மார் காட்டி நின்ற வீரன் அவன் ..
"உன்ற பின்னாடி நீ யாரை எப்போ போடுவேன்னு அலைகிறது எங்க சோலி இல்லை ..எங்க கனவு பெருசு , என் ஜனங்களை வாழ வைக்கணும், உயர வைக்கணும் உன் பின்னாடி அலைஞ்சு அதுக எதிர்காலம் தடைபட்டு நிற்குது, அதுகளுக்காக அவுக ஒளிமயமான வாழ்க்கைக்கு, என் ஜீவன்தேன் காணிக்கைன்னா.. தாராளமா எடுத்துக்க" என்றவன் குருதி மண்ணில் வடிய ஆரம்பித்தது ...
"அண்ணா !! வந்திடுண்ணா ...
"நாலு பேரை கொன்னா வீரன் இல்லைலே, நாலு பேருக்காக செத்தாலும் அவன் வீரன்தேன்!!!".. என்று மீசை முறுக்கியவன் வாயிலிருந்து குபுகுபுவென விஷயத்தின் தாக்கத்தில் ரத்தம் பீறிட்டு கண்கள் மங்கி மனைவியை தேடி அவள் காதில் ....
"உனக்காக உனக்காக மட்டும் மட்டும் திரும்பி வர .... ஆசை படு.......றேன்........ஹக் "என்று ஆலமரம் சாய்ந்து விருமன் மீது சாய்ந்தது.....
என்னடா சுஜாம்மா அழ வச்சிட்டாங்கன்னு நினைக்க கூடாது.. கதை எவ்வளவு ஜாலியா கொண்டு போனாலும் அதில் சில உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டியது என் மேல் விழுந்த கடமை ..
உன்,கடமையில தீயை வைக்க ஆதானே....