மீளா27

Mila27

மீளா27

27

மீளா காதல் தீவிரவாதி!!

மின்னல் பேச்சை எப்பவும் விருமன் ரசிப்பான்.. யாரெல்லாமோ அனாதை என்ற போது வலித்தது இல்லை.. இனி அவள்தான் என் சொந்தம் என்று நினைத்தவள் கூறும் போது அந்த வார்த்தை ஊன் ஊடூருவி இதயம் தாக்கியது ... 

"என்னம்மா நீ, பழகிட்டு இப்படி பேசுத " என சித்தப்பா மின்னலை கண்டிக்க ..

"ஆமாய்யா பழகினேன் .. பழகினாதான இவன்க பலம் எது பலவீனம் எதுன்னு தெரிஞ்சு , சாய்க்க முடியும்.. இந்தா சாச்சிட்டேன்ல இனி இவன் எட்டு வச்சி நடக்க பல வருடம் ஆகும் ".... என்று தடுமாறி நின்ற விருமனை பார்த்து கேலியாக இதழ் வளைத்தாள்...அஞ்சாது போரில் முன் வரிசையில் நின்று போரிடும் வீரன் கால் தளர்ந்து போனான்.. 

"ஒழுங்கா ஊர் போய் சேருங்க, எங்க ஊர் ஆகாது, எங்க கொள்கை பிடிக்காது, பொண்ணு மட்டும் பிடிக்குமோ ... நான் நாச்சி வளர்ப்புடா ,இரத்தம் சதம் அத்தனையிலும், என் சாதி பெருமை ஓடுதுடா ... கீழ் சாதி காரணுக்கு தங்க இடம் கொடுத்தான்னு என் ஆத்தாள விஷம் வச்சி கொன்ன, வீர பரம்பரைடா எங்களது.. அப்படி பட்ட நான் உன்ற தாலியை கழுத்தில வாங்குவேன்னு நினைச்சியா?" என்று ஆவேசம் கொண்டு குலப்பெருமை பேசும் அவளை ஆளாளப்பட்ட மருதுவே பேச்சற்று நின்று பார்த்தான்...இதற்காகவா இத்தனை வருடம் பாடு பட்டான், இன்னும் மாறவில்லையே.. சாதிக்காக இதோ அடுத்த தலைமுறை வரை தலையெடுத்து விட்டதே என்று உள்ளம் உலைகலனாக கொதித்தது .. 

"உங்கள இவ்வளவு பேசுற நான் ஏன் உன் கூட கொஞ்ச குலாவணும்னு உனக்கு தெரியுமா?, வந்துட்டல்ல அதையும் தெரிஞ்சிட்டு திருப்தியா போ ... உங்க ரெண்டு பேரையும் பிரிச்சா சுலபமா இரண்டு பேரையும் அழிச்சிடலாம்னு நெனச்சுதான் உன்கிட்ட பாசத்தையும், நேசத்தையும் காட்டுற மாதிரி நடிச்சேன்.. "

"ஆனா நீ வேற இல்ல, அவர் வேற இல்லன்னு ஒவ்வொரு நிமிஷமும் காட்டுன.. எங்கேயும் உங்க ரெண்டு பேரையும் பிரிக்கிறதுக்கு எனக்கு இடமே கிடைக்கல.. ஆனா நீ அழுதா, அவரும் சேர்ந்து அழுவாருன்னு நேத்து ராவு நீ சொன்னியே ஒரு கதை.. அவர் சாப்பிடலன்னா நான் சாப்பிட மாட்டேன்.. எனக்கு வலிச்சா அவருக்கும் வலிக்கும்ன்னு சொன்ன பார்.. அங்க புடிச்சேன் உனக்கான வெட்டை" என்று சொல்லி சிரித்தவள்..

"உன் வாழ்க்கையை நான் அழிச்சிட்டேன் .. இப்போ உன் கூட நான் வாழலைன்னா உன்னால நிம்மதியா சந்தோஷமா இருக்கவே முடியாது .. உன் நிம்மதியும் சந்தோஷமும் போன பிறகு உன்ன பார்த்துகிட்டு இருக்கிற அவரும் அதே வேதனைப்படுவார்.. அவரால் பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழ முடியாதுல்ல.. அது தான் எனக்கு வேணும்.. ஒன்னு நீங்க இரண்டு பேரும் சாகனும்.. இல்ல சாவுக்கு நிகரான ஒரு வாழ்க்கை வாழணும் .. என்னால உங்கள கொல்ல முடியாது .. கொன்னா நான் சந்தோஷமா வாழ முடியாதே.. அதனால சாவை விட கொடுமையான ஒன்ன கொடுக்க நினைச்சேன் ... அத காட்டுறதுக்குதான் உன் கூட இப்படி ஒரு நடிப்பு நடிச்சேன்.. வலிக்குதுல.. உன் கண்ணு அதை காட்டி கொடுக்குது ..

"ஒரு பொண்ணுகிட்ட தோத்த வலி , ஏமாந்த வலி காதல் வலி, மரண வலி அட !! அட!! அருமை அற்புதம் .. அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. இந்த ஊரே சாய்க்க முடியாத உங்க ரெண்டு பேரையும் நான் சாச்சுட்டேன் ... ஜாதிக்காக எத்தனை உயிர் வேணும்னாலும் நாங்க எடுப்போம்டா, திருத்த நீ யாருடா? போ எல்லாம் இழந்து மூலையில் உட்கார்ந்து ஓஓஓன்னு கதறி அழு " என்றவள் காலில் நேற்று இரவு அவன் போட்டுவிட்ட கொலுசை கழட்டி விருமன் முகத்தில் வீச அவன்தான் ஐவகை நிலமும் அதிர நின்றானே கல்லாக ..

"போஓஓஓஓ!! போய் தொலை , இன்னையோடு என் காலை சுத்தின பீடை ஒழிஞ்சது.. அனாதை பயலுக்கு காதல் வேணுமாம், குடும்பம் வேணுமாம் ஆசையை பாருஆஆஆஆஆ ..."

பளார் !!!!! என்று அறை விழுந்தது.. மின்னல் கன்னம் அதிர...

"ம்ம்ஆஆஆஆ" என்று கன்னத்தை பிடித்து கொண்டு நிமிர ....பொன்னிதான் கையை உதறி கொண்டு நின்றாள்... அவளையும் பிரவாகம் எடுக்க வைத்தது இவளின் பேச்சு.....

" என்ன மாமா பார்த்துட்டு இருக்கீங்க , இவள இந்த இடத்திலேயே வெட்டி போடுங்க ..ஜாதியாம் ஜாதி என்ற தம்பியை , கலங்க வச்சிட்டு பேசிட்டு இருக்கா எல்லாரும் கல்லு போல நிற்குறீய... "

"மதனிஇஇஇஇஇ வேண்டாம் வாங்க போகலாம்.. விருமன் ஓடிவந்து குழலியை தடுத்தான்.. 

"நீங்க சும்மா இருங்க தம்பி ... ஏம்மா புண்ணியவதி உனக்கு குளுகுளுன்னு இருக்குதா? வயிறு எரிஞ்சு சொல்லுதேன் கேட்டுக்க ."

"மதனி சாபம் விட்டுடாதீங்க .. அவ பொய்யா காதலிச்சாலும் , நான் நிசமாதேன், அவளை காதலிச்சேன் , நானும் அவள போல பேசுனா அதுக்கு பேர் காதல் இல்ல மதனி, அதோட, கண்ணை கட்டி அலைஞ்சது நான்தானே, முன்னாடி நிற்கிறவ என்ன நினைப்புல இருக்கான்னு தெரியாம ஆசையை வளர்த்தது, என்ற தப்புதேன் போதும் மதனி போயிடலாம்..." 

"தம்பி இஇஇஇ ....

"என்னால என்ற அண்ணனுக்கும் வருத்தம் ஆகி போச்சு மன்னிடு அண்ணன் "என்று மருது முகம் பார்க்க...

"இந்தாருடி அடுத்தவங்களுக்குன்னு வாங்கிட்டு வந்ததை கொண்டு போற பழக்கம் மனுச சாதி நமக்கு கிடையாது , அவ கல்யாண சீரா கொடுத்துட்டு வா போவோம் "என்று மருது மனைவிக்கு கண் காட்ட .. விருமன், தன் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அதன் மீது வைத்து..

"இனி இது எனக்கு தேவைப்படாது மதனி ..என்றவன் கையை கட்டி கொண்டு திமிர் பார்வை பார்த்து நின்ற மின்னலை ஏமாத்திட்டியேடி!!! என்பது போல் பார்த்தவன் கண்களை திருப்பி கொண்டான்,., குழலி புருஷன் சொல்லுக்கு இணங்கி அதை மின்னல் கையில் கொடுக்க போக , அதை தட்டிவிட்ட மின்னல் 

"உங்க பிச்சை எவனுக்கு வேணும், அவன் கைப்பட்ட தீட்டையே எங்கன போய் தொலைக்கன்னு தெரியல, இதுல இது வேற ப்ச்" என்று தோளை உலுக்கி கொண்டு உல்லாசமாக குதித்து கொண்டே ஊர் நோக்கி போக...

உடைந்து போன விருமனை ஒன்றும் பேசாது தோளோடு அணைத்து கொண்ட மருது...

"என்னடா...

"அண்ணன்!!!"....அந்த அண்ணனின் ஏகப்பட்ட வலி இருந்தது.. மருது முகத்தை திருப்பி கொண்டான் தம்பி முகத்தை பார்க்க முடியவில்லை.. காதல் வலி அத்தனை பேருக்கும் சமம்தானே அன்று அவனுக்கு இன்று இவனுக்கு...

நாச்சிஇஇஇஇ, உன் சாதி வெறிக்கு தீனி போட்டுட்டு சந்தோசமா இருக்க நினைக்கிறியா.. இவன் கண்ணீருக்கு கணக்கு உங்ககிட்ட வாங்காம விட மாட்டேன் இது என்ற தாய் மேல ஆணை!!" என்று தம்பிக்கு தோள் கொடுத்து நின்றான்.... 

ஊர் எல்லை தாண்ட விடாது விரட்டி அவர்களை அடித்த மின்னல்.. அவர்கள் தலை மறையவும் மரத்துக்கு பின்னிருந்து ஓஓஓ என்று கதறி அழுது கொண்டு விருமம் நின்ற இடத்தில் கிடந்த மணலை வாரி தன் தலைவழியே, போட்டு கொண்டு கதறினாள் கானகம் கண்ணீர் விட....

அய்யோ!! என் சாமி!! உனக்கு துணையா வருவேன்னு சொன்ன நானே உன்ன ஒரு அனாதைன்னு தகாத வார்த்த பேசி நிற்க வச்சி செருப்பால அடிச்சி புட்டனே, அய்யோ!! என்று மார் மீது அடித்து கொண்டு அழுதாள்.. அவள் கையில் அவன் தாலி தட்டுபட.... 

"ஆஆஆஆஆஆஆஆஆஆ உன்ன கலங்க வைக்க மாட்டேன் , உன்ற கூட கடைசி வரை வருவேன்னு சொன்னேனே . இன்னைக்கு உங்கள அனுப்பி விடலைன்னா இந்த நாள் உங்களுக்கு கடைசி நாளா ஆகிடும்னுதான் இப்படி பண்ணினேன், அந்த நாச்சி உங்களுக்கு சவக்குழி தோண்டி வச்சி காத்துகிட்டு கிடக்கா, உண்மைக்கு பலம் குறைவு சாமிகளா , உங்களால போராட முடியாது, அதுவும் அவ கோட்டைக்குள்ள முடியவே முடியாது.. உன் கூட வாழதேன் முடியல , உனக்காக சாகவாவது செய்றேன்" என்று அவன் போட்டுவிட்ட தாலியை நெஞ்சில் பொத்தி வைத்து கொண்டு ஓஓஓ வென கதறி அழுதாள்.. 

காலையில் மின்னல் வீட்டுக்கு வந்த நாச்சி.. 

"எப்படியும் அவன்க வருவான்க அவனுக கல்யாண சேதி பேச வரும் போது ஆயுதம் கொண்டு வர மாட்டாணுவ, இதுதான் நமக்கு சமயம் .. கத்தி அருவாள்ல விஷத்தை தடவி ஆயத்தமா வைங்கலே ஒரு கீறல் போட்டாலும் , உசுரு அங்கேயே போகணும் என்று அடியாட்களுக்கு நாச்சி வகுப்பெடுக்க அறையில் விருமம் வருவான் என ஆசையாக தயார் ஆகி கொண்டிருந்த மின்னல் காதில் இவை விழுந்து விட..

"கடவுளே!!! என்ன ஒரு கொலை வெறி எப்படி இந்த செய்தியை விருமனுக்கு கடத்த என்று அலைப்பாய்ந்த மின்னலுக்கு மின்னல் வெட்டியது ..

"ஆக அவர்கள் ஊருக்குள் வந்தால்தானே வரவில்லை என்றால் அசம்பாவிதம் நடக்காது என்றில்லை , ஆனால் குறையுமே அது போதும்.. என்று பின்வாசல் வழியே ஏறி குதித்து ஊர் எல்லை நோக்கி ஓட ஆரம்பித்தாள் ..

உண்மையை கூறினால் விருமனும் மருதுவும் ப்ச் அதுக்கென்ன சண்டைக்கு சண்டை வா என்று நிற்பார்கள்.. நான்தான் அவர்கள் உள்ளே வர இணைப்பு பாலம்.. பாலம் அறுந்து போனால் உள்ள வர மாட்டார்கள் எனவே விருமன் தன் மேல் வைத்திருக்கும் காதலை கொன்று போட துணிந்தாள்... 

உயிர் போனால் என்ன காதல் போனால் என்ன இரண்டும் ஒன்றே என்ற வேரற்ற கொடியாக கிடந்த மின்னல் முடியை கொத்தாக இழுத்த நாச்சி 

'__ நாயே அவன்க தப்பிக்க விட்டுட்டு நிம்மதியா இருக்கியா.. நீ செத்தாலும் அவன் வருவான்டி "என்று தரதரவென அவள் முடியை பிடித்து இழுத்து கொண்டு போன நாச்சி, எல்லைக்கல்லில் மின்னல் தலையை நச் என்று கல்லில் மோதினாள்... 

ம்ம் சொல்லல, யாரும் கிடைக்கலைன்னா செகண்ட் ஹீரோ ஹீரோயின் தான் நமக்கு கிடைச்ச பலி ஆடுன்னு ...

கல்லில் சிதறு தேங்காய் போல உடைய வேண்டிய அவள் தலை.. மெத்தென்ற ஒரு கையில் மோதியது ....

"ஆஆஆஆ" என அலறி மின்னல் இன்னும் சாகல என கண்களை திறக்க மருது பாண்டியன் மீசையை திருகி கொண்டு நின்றான்.... 

"லேய் நீங்க போயிட்டு இருங்க எனக்கு ஒரு சோலி கிடக்கு இப்ப வர்றேன் "என மருது அவர்களை அனுப்பி வைத்து விட்டு மறுபடியும் மின்னல் ஊர் நோக்கி வந்தான்...

அவனை சாய்க்க இவ்வளவு பண்ண வேண்டிய தேவை இல்லையே , அவளோடு தனியாக எத்தனையோ நாள் இருந்திருக்கிறான் சத்தம் இல்லாது கழுத்தை வெட்டி போட்டிருக்கலாம் அவன் செத்தாலும் எனக்கு இழுப்பு தானே ஏன் இன்று இதை செய்ய வேண்டும் யோசனையில் நெற்றி சுருங்கி பின்னால் திரும்பி பார்க்க மரத்திற்கு பின்னால் மின்னல் அவர்களை பார்த்து கொண்டு நின்றது தெரிய .. தாடியை தடவியவன்... 

"அண்ணன் எங்க போற.."

"உன்னைய போன்னு சொன்னேன் போ" என்றவன் இங்கே வர.. மின்னல் தாலியை வைத்து கொண்டு கதறுவதை பெருமூச்சு விட்டு பார்த்தான் .. பொய்யாக நம்பிக்கையை உடைத்தாளோ மெய்யாக உடைத்தாளோ , ஆனால் விருமன் நம்பிக்கையை உடைத்து விட்டாள் .. அவன்தான் முடிவு எடுக்க வேண்டும் ... உண்மை காதல் தோற்காது கண்டிப்பா இவள் காதல் புரிந்து கொள்வான் என நினைத்து அவளிடம் பேச போகும் முன்பு நாச்சி , அவளை இழுத்து கொண்டு போக சடுதியாக வந்து தாங்கி கொண்டான்... 

"அண்ணன்" என்ற சத்தம் கேட்டு மருது திரும்ப 

பின்னால் விருமனும், குழலியும் நின்றனர்...

அவன் எவ்வழியோ, அவ்வழியே இவர்கள் வழியும் ..

சாவிலும் வாழ்விலும் சேர்ந்தே தான் இருப்பார்கள் ...

அங்கே ஆயுதம், இங்கே அன்பு ..

எது ஜெயிக்கும்? ...   

யாரையாவது போட்டு தள்ளணும்.. உங்க ஆப்சன் யாரு மச்சீஸ் ?