மீளா 15
Milka15

15 மீளா காதல் தீவிரவாதி !!
விருமன் , மின்னல் தகப்பனை சுகமாக்கி இருட்டோடு கொண்டு விட்டுவிட்டான் .. யார் கண்ணிலும் தன் காதல் படாமல் நேக்காக நகர்ந்தான்.. (உன் நேக்குல கொல்லி வைக்க )
ஊர் கண்ணில் மாட்டினால் என்ன நடக்கும் என அறிந்தவன் ஆயிற்றே...மருதுவிடம எப்படியும் கூறி கல்யாணத்தை அசப்பு இல்லாது முடித்து விட வேண்டும் .. நாலு நாள் முன்பு நடந்தது இன்னும் பயத்தை கொடுத்தது..
"இந்த நாச்சி கண்ணுல மட்டும் பட்டுற கூடாது அண்ணன் பார்துப்பார் ,ஆனால் மின்னல் பாவம்.. இந்த ஊரே நாச்சி சொன்னா தலையாட்டும் அதனால கவனமாதேன் இருக்கணும் என்று பெருசா ஸ்கெட்ச் போட்டு கொண்டான்..
"லேய் மதனி வீட்டை விட்டு வெளிய போறாவ" என ஒருவன் விருமனிடம் கூற...
"என்னன்னு தெரியலையே நீ அண்ணன் காதுல போட்டு வை எனக்கு வைத்தியர் வீட்டுல ஒரு வேலை கிடக்கு முடிச்சிட்டு வர்றேன்" மின்னலே பார்த்து இரண்டு நாள் ஆகிறது..
"ஒரு முத்தம் அது எப்படி போதும், வகையா மாட்ட மாட்டைக்கிறாளே, ஊர் கலவரம் அது இது என்று காதல் கிடப்பில் கிடக்க . லஞ்சம் கொடுத்தாவது லவ் பைலை நகர்த்தி விடணும் என்று விருமன் அவள் வீடு நோக்கி மாற்று வழியே போனான் .. ஊருக்குள்ளோடி போனால், விஷயம் கசிந்து விடும் மின்னல் வீடு ஊர் ஒதுக்கத்தில் இருந்தது.. அதை தாண்டி சீமைஉடை காடுகள்தான்.. போனை எடுத்து மின்னலுக்கு தட்டினான்..
அலோ யாரு?? என்றாள் அருகே அமர்ந்திருந்த தகப்பனுக்கு சந்தேகம் வராத படி ...
"ப்ச் நான்தான்டி...
"நீயாடி சொல்லு என்ன சேதி?..."
"என்னது டியா??.."
""ஆமா.. டி அப்பா பரவாயில்லை, இப்பதான் சாப்பிட்டார் , தூங்க நேரம் ஆவும் என்னடி "
"காட்டு எல்லை கோவில் பக்கம் ஆலமரம் இருக்குல்ல.."
"ஆமாடி.."
"அங்கன நிற்கிறேன் வா..
"எதுக்கு??"...
"ப்ச் பார்த்து நாளாகுதுடி பார்க்கணும் போல இருக்கு .."
"இப்பவா...
"அப்ப வைடி சும்மா போன என்ன, வாழ்க்கை தரவா மசாலா பூரி தரவான்னு கூட்டிட்டு வந்து கெடுத்துட்டு இப்ப பார்க்க கூட வர மாட்டேன்னா என்ன அர்த்தம் "..
"நான் எப்ப அப்படி சொன்னேன் ..
"அப்ப வா" என்றான் மரத்தின் மீது ஏறி அமர்ந்து காலை ஆட்டி கொண்டே
"ப்ச் சரி வைங்க அப்பாவுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வச்சிட்டு வர்றேன் .."
"ம்ம் வா வா வரும் போது மாமாவுக்கு என்ன கொண்டு வருவ..."
"என்ன வேணும்... "செவ்வானம் நிறம் கொண்டது முகம்...
"நிறைய வேணும் வா, வந்ததும் சொல்றேன்..
"ம்ம் என வைத்தவள் முகத்தை வித்யாசமாக பார்த்த அவள் தகப்பன் ....
"யாரும்மா மின்னல்??".. இரண்டு நாளாக மகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்..
யார் மருத்துவமனை அழைத்து சென்றது என கேட்க பதில் சொல்லாது விழுங்கும் மகள்.. ஊர் கலவரம் என்றதும் துடித்து போன மகள்.. போன் வந்தால் சிவக்கும் மகள் பார்த்து தகப்பனுக்கு அடிவயிற்றில் நெருப்பை கட்டியது போல பயம் வந்தது ..
"சிநேகிதிப்பா... "
"அது யாரு போன்ல பேசுற அளவு சிநேகிதி... "
"ஆங் நம்ம ராமசாமி மக சீதாதான், புதுசா அவ புருஷன் போன் வாங்கி கொடுத்தாராம் அதேன் வா காட்டுறேன்னு சொன்னா போய் வரவா என்று மழுப்ப.."
"கவனம் மின்னல், ஊர் நிலவரம் தெரியும்தான..." என்றதும் எச்சில் விழுங்கினாள்.. காதலுக்கு ஆபத்து தெரியவில்லையே, ஆசை மட்டும் தானே தெரிகிறது ...
"தெரியும் ப்பா ..."
"ம்ம் பொறவு ஏதாவது நடந்தா தலை முழுகிபுடுவேன் பார்த்துக்க.."
'ம்ம் .. என்றவளுக்கும் பயம்தான் ... எட்டி நடை போட்டு ஆலமரம் நோக்கி போனாள் ...
"இங்க தான இருக்கேன்னு சொன்னார், ஆள காணல.. என சுற்றி முற்றி தேட, மரத்திலிருந்து கைநீட்டி அவளை இடையோடு தூக்கி மேல் கொண்டு வந்த விருமன்..
"இங்கதான் இருக்கேன் ... "
"ஏன் இப்போ கூப்பிட்டு விட்டீங்க, அப்பாகிட்ட என்ன சொல்லன்னு தெரியாம பெரிய பாடா போச்சு "
"புருஷன பார்க்க வரவே உனக்கு இவ்வளவு கஷ்டமா , நாளைக்கு ஏதாவதுன்னா என் பக்கம் நிற்பியா இல்ல தெறிச்சு ஓடிருவியாடி.."
"ப்ச் நானே விசனப்பட்டு கிடக்கேன் நீ வேற ஏன் பயம் காட்டுற வேற ஏதாவது பேசேன்.. "
பேசவாடி இந்த நடு வெயில்ல ஓடி வந்தேன்..
""பிறகு எதுக்கு வந்தியாம்," அவன் பார்வை அவளை மேய,, அது தெரியாதா என்ன ..
"ஏன்னு தெரியாதா??" என்றவன் அவளை வாகாக மடியில் தூக்கி அமர வைக்க...
"எல்லாம் தெரியுது ஆனா ஒன்னும் கிடையாது ஓடிரு..."
"வா சேர்ந்து ஓடலாம்" சிலுசிலு தென்றல் காற்று போல அந்த கத்திரி வெயில் இருவருக்கும் குளுமை கொடுத்தது எல்லாம் காதல் படுத்தும் பாடுதேன்...
"ஏன் தூக்கிட்டு ஓட மாட்டியா," அவளை பார்க்க வெயிலில் வியர்த்து வந்து நின்ன விருமன் வியர்வை துளியை உரிமையாக துடைக்க போக.. அவன் இன்னும் உரிமை கேட்டு அவள் கையை பிடித்து கொண்டவன்..
"விரல் வச்சு தொடைச்சா அவ காதலி, உதடு வச்சி துடைச்சா அவ பொஞ்சாதி ..நீ என்னடி பண்ண போற??" அவன் குரலில் வழிந்த மோகத்தேன் அவளை நெளிய வைத்தது ...
""ப்ச் அதெல்லாம் முடியாது" என்றவள் விட்ட வெப்பக்காற்று அவனில் அடையாளம் தெரியாத கொம்பு ஒன்றை முளைக்கச் செய்ய, மடிதனில் அமர்ந்த அவன் கொண்டாள் சட்டென்று அதிர்ந்து அவனை நோக்கிட...
"இப்போதைக்கு முத்தம் மட்டும் போதும்டி .. அதை பார்த்து பயப்படாத.."
"யாருக்கு பயம்??" ..
"அப்போ காட்டவா??"..
"அய்ய போ ச்சீ "என்றவள் தாவணி மறைவில் கையை விட்ட விருமன் அவள் இடையை விரலில் மெல்ல வருட ...
"ப்ச் விடு இதுக்குத்தான் கூப்பிட்டு விட்டியா?" அவன் கைமேல் கை வைத்து விருமன் நெஞ்சில் சாய்ந்து அவன் கழுத்தில் உதட்டால் கோலம் போட்டு உசுப்பி உயிர் குடிக்க அழைத்தாள் ...
"ம்ம் இதுக்குத்தான்னு உனக்கு தெரியாதாடி, " என்றவன் கரம் இன்னும் மேல் நோக்கி நகர... அவள் துருத்தி கொடுக்க, இரண்டு கைகள் அடங்கா இளமை நிலவை கைநிறைய பிடிக்க..
"ம்ம்ஆஆஆ என்று முனங்கி , அவன் தோளில் மின்னல் சாய .. அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பி, நிதானமாக அவள் இதழை மின்னல் விழியில் மயங்கி கொண்டே, கீழ் உதட்டை கடித்து இழுக்க ,, அவளும் குறையாத ஆசையில் விருமன் மீசையோடு சேர்ந்து இதழ் புசிக்க. அவன் கைகள் கோபுர அழகை விட்டு விட்டு கசக்கி, உள்ளே விரல் தொட இடம் தேட.. மின்னல் நேக்காக அவன் கையை விலக்கி விட..
"கொஞ்சமாடி "என்றான் முத்தம் நடுவே அனுமதி கேட்டு...
"ம்ஹூம் முகத்தை மறைக்க...
"ஒரு தடவைடி...
"மாட்டேன் .. வெட்கமா இருக்கு"
"ப்ச் கண்ணை மூடிக்க ... கழட்டவா ..."
"ரொம்ப பண்ற இதெல்லாம் தப்பு ...
"உன்கிட்ட தானடி கேட்க முடியும்,, பண்ணவா??" என்று ஆடை தாண்டி அழகுப்பூ பிடிக்க வழி தேடி மோத...
"ம்மாஆஆஆ விடு" என்று நெளிந்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள்...
""சும்மா இரு எனக்கு பயமா இருக்கு..
"ஏன் தொட்டுட்டு போயிடுவேன்னா...
"ம்ஹூம் ..
"பின்ன?"
"தெரியல .. ஆனா சிலதை நினைச்சா உடம்பு பதறுது "
"ப்ச் அதை விடு அண்ணன் இருக்கார்.."
"நானும் அந்த நினைப்புலதேன் மூச்சு விடுறேன்.." அதற்குள் விருமன் போனுக்கு அழைப்பு வர..
"என்னடா என்ன ஆச்சு??"..
"என்னது அண்ணன் எங்கடா??" ...
"ப்ச் இரு வர்றேன் .. மின்னல் நீ வீட்டுக்கு பத்திரமா போ .."
"என்னாச்சி??"..
"எது ஆக கூடாதுன்னு நினைச்சேனோ,, அது ஆகி போச்சி.. ச்சை நான் அண்ணன் கூட இருந்திருக்கணும் .. "என்று புலம்ப அவளுக்கு ஒன்னும் புரியவில்லை, ஆனாலும் விருமனை பார்க்க பாவமாக இருந்தது ..
"சரிடி நீ போ நான் பார்த்துக்கிறேன்"... என்றவன் கன்னத்தில் இச் வைத்த மின்னலை இறுகி கட்டி கொண்ட விருமன் ..
"என்ன நிலை வந்தாலும் என் கூட இருப்பதானடி...
"செத்தாலும் சேர்ந்து சாகலாம் போதுமா ..
"இது போதும்டி "என்று அவள் இதழில் ஆசையில் முத்தம் கொடுத்தவன் அவள் வீட்டுக்குள் போய் சேரும் வரை நின்று அனுப்பி விட்டு மருதுவை நோக்கி ஓடினான் ..
செத்தாலும் சேர்ந்து சாக துணிந்தவள், அவன் சாக துணிவாளா?
***
தேவையான இடத்தில் பேசி விடுங்கள். தேவையற்ற இடத்தில் பேசுவதை நிறுத்தி விடுங்கள் மருது பாண்டியன் தேவையான இடத்தில் பேசவில்லை.. தேவையற்ற இடத்தில் தேவையற்றதை பேசி வைத்தான்..
அவளோடு கொஞ்சி குலாவும் நேரம், நீதான்டி எனக்கு எல்லாம்.. என் காதல் உன்னோடுதான் உனக்காக, உன் காதலுக்காகத்தான் நான் ஜனனம் எடுத்தது என்று கூறி அவளை கொண்டாடியிருந்தால் எவ்வளவுதான் அவன் தவறானவனாகவே இருந்திருந்தாலும்.. அந்த காதல் குழலியை அவனைவிட்டு வேலி தாண்ட வைத்திருக்காது..
ஆண் என்றால் மூன்று கொம்பு முளைத்திருக்கிறது என்று அவனுக்கு நினைப்பு.. எங்கே மனைவியிடம் இறங்கிப் போனால் , தன் கௌரவமும் தன் மணிக்கிரீடமும் விழுந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ? காதலை கூட கெத்தாகவே காட்ட நினைத்து, இப்பொழுது குப்புற விழுந்து மல்லாக்க கிடக்கிறான், ஓங்கி நெஞ்சு மேலயே மிதித்து வைத்து விட்டாள்.. இனி எழும்பி வருவது சாதாரண காரியமா?
மருது நேரடியாக தன் தாயின் கல்லறை நோக்கி ஓடி வந்தான்.. கை கால்கள் எல்லாம் மனது போலவே பலவீனமாக நடுங்கியது .. அப்படியே வந்து சோர்ந்து அந்த கல்லறையின் மீது சுருண்டு கொண்டான்..ஒரு பீல் கூட சோலாவா பண்ண விடாம பின்னாடியே விருமன் வந்து விட்டான் ..
விஷயம் அறிந்து தன் அண்ணன் இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தான்... மருது அனாதை பிள்ளை போல கல்லறை மீது கிடப்பதை பார்த்து அழுகை வந்து விட்டது ..தன்னால் தாங்க முடியாத பாரம் என்றால் மட்டுமே மருது இந்த கல்லறை மீது படுப்பான் .. தாயின் மடியில் படுத்த ஆறுதல் கிடைக்கும் .. எந்த அளவு வருத்தம் மனதில் இருக்கிறது என அறிந்து கொண்ட விருமன் , ஓடி வந்து..
"அண்ணே மதனி எங்க? ...தெரியும் ஆனாலும் இவன் வாயை புடுங்கினான்.. ஒரு ஓட்டை கிடைச்சாலும் நல்லதுதானே ... மனதை அமுக்கி பழகிய மருது வாய் திறப்பானா...
"செத்துப் போயிட்டா.. இன்னையோட மருதுவோட வாழ்க்கையில் இருந்து செத்துப் போயிட்டான்னு நினைச்சுக்கோ.. " எவ்வளவுதான் பட்டாலும் இந்த ராஸ்கலுக்கு வாய்க்கொழுப்பு அதிகம் மக்களே அந்தர் பல்டி அடித்து விழுந்ததை கூட யாரிடமும் காட்ட அவனுக்கு மனசு இடம் கொடுக்கவில்லை..
விடுறா விடுறா சூனாப்பானா இதெல்லாம் நமக்கு பழகி போனது என்று மீசை முறுக்கத்தான் வந்தது..
"என்ன அண்ணே நீங்க, மதனிக்குதான் ஒன்னுமே விவரம் தெரியாதுன்னு உங்களுக்கு தெரியும்தானே அந்த நாச்சி என்னத்தையாவது சொல்லி மதனிய கிளப்பி விட்டுருப்பா.. நீங்களும் அப்படியே விட்டுட்டு வந்துட்டீங்களா.. வாங்க போய் கூட்டிட்டு வருவோம் ..."
"இந்தாரு , இங்க வந்து நின்னு உன் மதனி பாட்டு பாடினன்னு வச்சுக்க அப்படியே அப்பி விட்டுடுவேன்.. உன் சோலி என்னவோ அதை போய் பாரு .. எனக்கு என்ற வீட்டு வேலை ஆயிரம் கிடக்கு .. போன அவ பின்னாடி தொடுக்கு பிடிச்சுகிட்டு போறது என் வேலை இல்லை.. போறேன்னு போனால்ல , போனவள அப்படியே விரட்டி விட்டாச்சு இனிமே அவளுக்கும் இந்த மருதுபாண்டியனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..
"என்ன அண்ணன் , இப்படி எல்லாம் பேசுற இதுக்காகவா இத்தனை வருஷம் காத்திருந்து மதனியை கல்யாணம் கட்டின..
" அது அந்த லூசு __ க்கு தெரியணும்ல, "
" நீங்க சொன்னாதானே அண்ணன் தெரியும்.. என்னைக்காவது உன்னை விரும்புறேன்னு நீங்க வாயை திறந்து சொல்லி இருக்கீங்களா .. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க..
"ஏன் சொல்லலைன்னா கண்டுபிடிக்க தெரியாதா? எனக்கு எப்போ ஆசை வரும் , எப்போ கோவம் வரும்னு இத்தனை நாள்ல அவளுக்கு அத்துப்படிடா, காதல் மட்டும் கண்டுபிடிக்க முடியலையா இதை நம்பணுமோ... "
""அது அப்படி இல்லை அண்ணன் வாழ்றது வேற காதல வேற .. "
"என்னடா ஒரே மதனிக்கு ஒத்து ஊதுற.. ஏன் தின்ன சோறு இன்னும் உள்ள கிடந்து கத்துதோ... இனி அவ பேர சொல்லிக்கிட்டு எங்கிட்ட வந்தேன்னு வச்சுக்கோ மொத வெட்டு உனக்குதான்லே விழும்.."
"சரிண்ணே பேசல ... மதனிகிட்ட பேசுறேன் ...
"என் வீட்டு காத்து கூட அவ வீட்டு திசை போவ கூடாது. போச்சி நான் உன் முகத்தை கூட பார்க்க மாட்டேன் .. பொய் சொல்லலைடா அண்ணன் வேணுமா, அவ வேணுமான்னு யோசிச்சிட்டு பண்ணு.." ஓர் உயிர், ஈருயிராக பிரிந்து நிற்க தொண்டை அடைத்தது விருமனுக்கு..
அண்ணன் மட்டும் போதும் என்று கூற முடியவில்லை.. தம்பி என்று சோறு போட்ட குழலியையும் வேண்டாம் என்று தள்ளி வைக்க முடியாது.. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் நிலைமையில் விருமன் நின்றான்...
ஆடு மாடு கோழி அத்தனையும் குழலியை தேடி அம்மா ஐயா என்று கத்த.. அத்தனைக்கும் அடி விழுந்தது..
" ஒரு பய எனக்கு வேண்டாம் அவ பின்னாடியே போங்க" என்று கத்தியவன்.. நேரே அறைக்குள் போய் அவள் புடவை , பொருட்கள் என எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு வந்து வீட்டு முன்னால் போஹி கொண்டாடிவிட்டான்... குபுகுவென அவன் மனது போலவே மனைவியின் பொருளும் எரிய ..விருமனுக்கு இதை எப்படி சமாளிக்க என்று தெரியவில்லை...
இக்கட்டான நிலையில் அண்ணன் பக்கத்தில் இல்லாமல் காதலியை தேடி போனது தவறு என்று மனம் குற்ற உணர்ச்சி கொண்டது.. தான் அருகில் இருந்திருந்தால் எப்படியாவது இவ்வளவு கலவரம் நடந்ததை தடுத்திருக்கலாம் .. எதையாவது சொல்லி இருவரையும் அழைத்து வந்திருக்கலாம் இப்போது விஷயம் முத்தி விட்டது.. காசை வெட்டிப்போட்டு விட்டு வந்து விட்டார்.. இனி இவர்களே நினைத்தாலும் ஊர் சேரவிடாது.. அது ஊர் கட்டு. .. எப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து செய்தால் இருவருக்கும் உறவு இல்லை என்று ஆகிவிடுமோ .. அது போல் ஊர் பஞ்சாயத்தில் காசை வெட்டி போட்டுவிட்டால்.. இவர்கள் குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் அத்தோடு அத்தனையும் முடிந்தது என்று எழுதி விடுவார்கள் ...
மருத்தவமனை வாசலில் திசை தெரியாது அன்னை முகத்தை குழலி பார்க்க ...
தாலி அறுத்து போனவனுக்காக நீ ஏன் ஆத்தா கலங்கி நிற்கிற உனக்கு அம்மா நான் இருக்கேன் வா என்று அணைத்து கொண்டு வீடு நோக்கி நடக்க ஏன் என்று புரியாது விருமன் போன பாதையை திரும்பி பார்த்தாள்....
கல்லறை மீது யாரும் காணா அவன் வைரத்தூளி விழ ...
"எய்யா பாண்டி" என்ற தாயின் குரல் காற்றில் ஒலிப்பது போல உணர ...
"ம்மாஆஆஆஆஆஆஆ மருது பாண்டியை வேரோட சாச்சிட்டு போயிட்டாம்மா ", என்று கலங்கிய மகனுக்கு காற்றாக ஆறுதல் வந்தது ....
யார் இவன்? இவனின் இறந்த காலம் என்ன?? இதோ அந்த காற்று பதில் சொல்லும் ...