மீளா 14

Milla14

மீளா 14

14

மீளா காதல் தீவிரவாதி!!

பத்து வயது வரை நாச்சி முந்தானை தொட்டிலில் வளரவில்லை என்றாலும் மகளை அவள் ஒதுக்கியது இல்லை , முனியன் கையில் கொடுத்து போனாலும் பத்து வயது வரை பார்த்து பழகிய தன் அன்னையை மறக்க முடியுமா ஆனால் யாரிடம் எதுவும் கேட்க மாட்டாள்.. முனியன் நாச்சியை விடவும் சிறப்பாக பேணி காக்க மனதில் ஓரத்தில் தன் தாய் ஏக்கம் இருந்தாலும் தாயிக்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்க்கும் முனியன் அன்பில் தாய் வேலை முடிந்ததும் வருவார் என்று நினைத்து சாந்தி பட்டு கொள்வாள் ..ஆனால் இப்போது தானே தெரிகிறது தன் அத்தனை பிரச்சினைக்கு காரணம் மருது ...அது போதாது என்று மறுபடியும் தாயை கொல்ல பார்க்கும் அளவு என்ன அப்படி பழிவெறியும் , சண்டையும் ஒருவர் உயிரை எடுப்பது அத்துனை சுலபமா அவளுக்கே கோவம் வந்ததுன்னா பார்த்துக்கோங்க மக்கா... 

மருத்துவமனை நோக்கி ஓடியவள் முனியன் வாசலில் நிற்கவும் ...

அப்பா ஆஆஆஆஆ என்று ஓடிப்போய் அணைத்து கொள்ள ...

சாமி வந்துட்டியா, பார்த்து கனநாள் ஆச்சு , எப்படி சாமி வந்த ?

அது அது அம்மாவுக்கு என்னாச்சி எங்க அவங்க முனியன் பேசும் மகளை ஆச்சரியமாக பார்த்தான் தன்னிடம் இருக்கும் போது உள்ள அசட்டு தன்மை இல்லாது குழலி மருது மனைவியாக நிற்க மகிழ்ச்சி தான் ... 

யாரு தங்கம் சொன்னது ?...

அவுக பைக்கை கொண்டாந்த தம்பி சொன்னாக..

வ‌ந்தது மருதுவுக்கு தெரியுமா சாமி...

அச்சோச்சோ தெரியாது அப்பா, தெரிஞ்சா அடிப்பாரே... மருது என்றால் அவன் ஆத்திரக்காரன் என்று தான் அடையாளம் கூறுவாள் பொசுக்கு பொசுக்கு கையை நீட்டுவான் , திட்டுவான் அவன் செய்யிறது சொல்றது எல்லாத்துக்கும் ம்ம் போடல என்ன வேணும்னாலும் பண்ணுவான் ... குழலி மருதுவை அடிகோடிடுட்டு வைத்த குறிப்புகள் இவை ... 

ஏன் சாமி உன்னையே தேவிம்மா மேல உள்ள கோவத்தில ரொம்ப கொடுமை படுத்திட்டாறா. கூட வாழும் மனைவிக்கே அவன் அன்பு தெரியல மற்றவர்கள் கண் அதை காணுமா..  

கொடுமை என்றால் என்ன இரண்டு வரியில் மிகாது விடையளிக்க ?ஆமா திட்டுவார் அது கொடுமை வகையறாதான் , இரவு கசமூசா பண்ணுவது அதுவும் கொடுமை வகையறாதான் , முகத்தை கடுகடுவென வைத்து இவளை விரட்டுவது அதுவும் கொடுமைதானே ... அப்போ கொடுமைக்காரன்தான் விடை சரிதானே ... 

ஆமாப்பா ரொம்ப திட்டிட்டே இருப்பார் ... தனக்கு ஆதரவுக்கு ஆள் கிடைத்தவுடன் உதடு அழுகையில் துடித்தது ... தாயை போட்டு தள்ள ரெடியாகிட்டான் நமக்கு என்னைக்கு மண்டை போக போவுதோ, ஏதோ கடல் கொள்ளையன் போலவே மருதுவை பொல்லா ஆணாக நினைத்தாள் ... நேத்து இரவு அது நேத்தோடு போச்சி அவனுக்கு வலிக்கிறது போலத்தான எல்லாருக்கும் வலிக்கும் .. எப்படி இப்படி ஒரு காரியம் பண்ணலாம் தப்புல்ல சிறுபிள்ளை போல ஊடல் வந்தது ... 

"சரி சாமி உள்ளாற வா , என்ன நடக்க போவுதோ ஏற்கனவே நாலு நாளைக்கு முன்ன ஊரே கலவரம் ஆகி போச்சு , நீ வேற மருதுவுக்கு தெரியாம இங்கன வந்திருக்க.. அவன் காதுக்கு மட்டும் இந்த விஷயம் போச்சுன்னா இந்த ஆஸ்பத்திரியே இல்லாம போயிடும் .. "எல்லாருமே நாலு நாளைக்கு முன்னாடி பிரச்சனை என்று கூறினார்களே தவிர அதில் எப்பக்கம் தவறு என்பதை கூற மறுத்தனர்.. குழலிக்கு அந்த தம்பி பொய் சொன்னதாகவே இருக்கட்டும், அப்பாவும் பொய் சொல்வாரா அப்போ மருதுபாண்டியன் தான் ஏதோ செய்து விட்டான் உண்மை 100% புலப்பட்டு விட்டது ... 

"சரி சாமி சீக்கிரம் உன் அம்மாவ பாத்துட்டு வீடு போய் சேரு ,அவன் வர்றதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள போயிடு .."

"இல்லப்பா நான் இனிமே அங்க போக மாட்டேன் எனக்கு பயமா இருக்கு "என்று சொன்ன மகளை பார்த்து இவருக்கு கை கால் உதறிவிட்டது..

இருவருமாக மருத்துவமனைக்குள் செல்ல ஐசியூவில் கண்களை மூடி நாச்சியார் படுத்திருந்தாள்.. கையில் பெரிய கட்டு போட்டு வைத்திருந்தனர்.. கட்டிற்கு மேலேயே ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது... அவளுக்கு கண்ணீர் பொலபொலவென்று வடிய ஆரம்பித்தது....

"அம்மா என்று அழைக்கவும் கண்களைத் திறந்த நாச்சி..

"வந்துட்டியா ஆத்தா , நான் என்ன பாவம் செஞ்சேனோ தெரியல.. என் வயித்துல நீ வந்து பிறந்து உன்ன கண்ணாற நான் பார்க்க முடியாத பாவியாகி போனேன் .. இந்த ஊருக்கு நல்லது மட்டுமே செஞ்சேன் அவ்வளவு ஏன், அந்த பயல என் அப்பனுக்கு இரண்டாவது பொண்டாட்டி மகனாவா நினைச்சி பார்த்தேன்.. என் சொந்த தம்பியாதானே பார்த்தேன் .. அவனுக்கு அந்த பாசம் இல்லையே என்ன விரோதி மாதிரிதானே அப்பத்துல இருந்து இப்ப வரைக்கும் பண்றான்... என் அம்மாவை தாலி அறுக்க வச்சான் .. அப்ப கூட தகப்பன் மேல கோவம்னு பொறுத்து போனேன் ...அவன் ஆத்தா செத்து போனதுக்கு நான்தான் காரணமுன்னு என்ன ஓட ஓட விரட்டினான் ... மனசு செத்து போச்சு போ, ஆனாலும் நான் உன் கல்யாண விஷயம் கேள்விப்பட்டு ஆசையா உன் வீட்டுக்கு வந்த என்ன அடிச்சு விரட்டாத குறையா விரட்டிட்டான்...

கேட்க நாதி இல்லைன்னு , ஊர்க்காரவிக சொத்தை எல்லாம் அவன் பெயரில் பட்டா போட்டுக்கிட்டான், ஊருக்குள்ள ஒரு பள்ளிகூடம் கட்ட நினைச்சா தீ வச்சி எரிச்சு புட்டான் .. இதை கேள்விப்பட்டு இதெல்லாம் தப்பு இல்லையா தம்பின்னு கேட்டதுக்கு இந்தா வெட்டி போட்டுபுட்டான் , கெட்டது செஞ்ச அவனுக்கு ஒரு கேடு வரல , நான் இப்படி கிடக்கேன்... நல்லதுக்கு காலமே இல்லாம போச்சே.. நான் கெதியா இருக்கும்போதே இவ்வளவு பண்றானே... நான் செத்த கீத்து போயிட்டா உன்ற கதி என்ன, அதை நினைச்சுதான் மூச்சு முட்டுது ஆத்தா, என்ன பழிவாங்க என்ன வேணும்னாலும் பண்ணி இருக்கலாம், ஆனா உன்னைய கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டானே.. அவன் வயசு என்ன உன்ற வயசு என்ன ... உன் வாழ்க்கை போச்சே, இனி நான் இருந்தா என்ன செத்தா என்ன?" ... என்று பெருமூச்சு விட, குழலிக்கு யா ஐயம் பாவம் என்று விக்கி விக்கி அழகை வந்தது..

குழந்தைகள் விளையாடும் போது விழுந்துவாரி தானாக எழும்பி போகும்.. ஆனால் யாராவது அச்சோ என் புள்ளை விழுந்துட்டே என்று பரிதவித்தால்.. வலிக்கவே இல்லை என்றாலும் அழுது வைக்கும் அந்நிலையில் தான் குழலி நின்றாள் .. ஆளுக்காள் குழலி அவனோடு வாழ்ந்து கஷ்டப்படுறா என்று கூற ஆமா ஆமா என்று இவளுக்கும் அதை மறுக்க தோணவில்லை...   

"சரி ஆத்தா அழுவாத அம்மாவுக்கு ஒன்னும் இல்லை .... நீ வீட்டுக்கு போ ... மடியில் வைத்து புதிதாக செல்லம் கொஞ்சும் நாச்சியை விட்டு இனி போக துணிவு வருமா ... 

"இல்லை நான் போகல.... நான் உங்க கூடவே இருக்கேன் ம்மா 

 அட என்,ராஜாத்தி , ஆனா அந்த காட்டான் ஏதாவது பண்ணுவானே.. அவன் தாலி உன்ற கழுத்துல கிடக்கிற வரை நீ அவன் பொஞ்சாதிதானே" என்றதும் குழலி குனிந்து தன்,தாலியை பார்த்தாள்..

"அப்போ ஒன்னும் பண்ண முடியாதா?" அவள் உள்ளம் கேட்ட கேள்விக்கு பதில் நாச்சி அடுக்கினாள்.. 

 "நீ என்ன , எனக்கு என் அம்மா போதும், நீ வேண்டாம் உன் உறவும் வேண்டாம்னு ஊர் மத்தியில காசு வெட்டி போடவா செய்வ.. இல்லை தாலியை அறுத்து அவன் முகரையில விட்டு எறியத்தான் செய்வியா .. என்னதான் இருந்தாலும் அவன் உன் புருஷன், அவனுக்குதான உன் முதல் உரிமை ....நான் அனாதை பொணமா போறேன்.. கண்ணா ஒரு புள்ள பெத்தும் எனக்கு வாச்சது அவ்வளவுதான்.. அவனுக்கு இதுதான வேணும் உன்ன வாழ விட கூடாது, அதுக்காகதான இந்த கல்யாணம்.. " எல்லாரும் அவன்தான் முழு துரோகி என்பது போல மருதுவை உருவகப்படுத்த...குழலி யோசனை மிகுதியாக அவன் கட்டிய தாலியை பிடித்து கொண்டு நின்றாள் 

"என்ன ஆத்தா என்ன யோசனை..

"இல்ல ஊர் மத்தியில அவரை வேண்டாம்னு சொன்னா என்ன விட்டுடுவாரா ...

"அட்ரா சக்கை!! நான் பெத்த ராசாத்தி அறிவை குப்புற போட்டு தூங்க வச்சிருக்கா போல , எதையும் யோசிக்காம நாம சொல்றதுக்கு தலையாட்டுறா நான் கூட இவள வழிக்கு கொண்டு வர ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன்.. இவ இவ்வளவு சுலவா காரியத்தை முடிச்சிட்டா ... "

"அது என்னன்னா ..

"சொல்லுங்கம்மா நீங்க சொல்றது போல செஞ்சா அவர விட்டுட்டு உஙக்கூட வந்துடலாமா.. 

"ஆமா ஆனா உனக்கு அவனும் வேணும்ல ஆத்தா...."

"உங்கள, இந்த ஊரை இவ்வளவு கஷ்டப்படுத்தின அவர் எனக்கு வேண்.........ம்ம்.. அடுத்த வாரத்துக்கு பல்லும் இல்லை வாயும் இல்லை ..

"ம்மாஆஆஆஆஆ" கன்னம் கிழிய அறை விழ குழலி சுவற்றில் மோதி மறுபடியும் வந்து வாசலில் வேட்டியை மடித்து கட்டி கொண்டு நின்ற மருது மார்பில் விழ.. அவன் நெஞ்சில் கசிந்த குருதி அவள் இதழில் வடிந்த குருதியில் கலந்தது ...அவள் முடியை கொத்தாக பிடித்து தூக்கிய மருது...

"யாரடி வேண்டாம்னு சொன்ன" என்று துடித்த அவள் முகத்தை பற்கள் கடிக்க பார்க்க....

"ம்மாஆஆஆஆ ""என குழலி வலியில் அலற..

"____ நாய மறுபடி சொல்லுடி"... 

"டேய் மருது என்ற மக மேல இருந்து கையை எடுறா நாயே" என்று நாச்சி குளூக்கோஸ் ஏத்தியதை பிய்த்து போட்டுவிட்டு எழும்பி வர... 

"அடிங்க!!" என்று மருது எட்டி நாச்சியை மிதிக்க தள்ளாடி விழுந்த நாச்சி, கபாலம் பிளந்து ரத்தம் சரசரவென்று வர , அவள் இதழோ சிரிப்பை சிந்தியது ... இது போதுமே தன் இலக்கு அடைய .. 

தம்பிக்கு வேகம் அதிகம் விவேகம் கம்மி , என ரத்தத்தை துடைத்து கொண்ட நாச்சி...

"அய்யோ அம்மா" என்று லேட் பிக்கப் எடுத்து துடித்து நாச்சி சுருண்டு தரையில் விழ.. 

"அம்மா ஆஆஆஆஆஆஆ" என மருதுவை விட்டு துள்ளி குழலி இறங்க போக...

"உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்தான , என்ன விட்டு வர கூடாதுன்னு . ஹான் அவ்வளவு சொல்லியும் யார் கொடுத்த தைரியத்துல இங்க வந்தடி சொல்லு" என்று தாடையை அழுத்தி பிடிக்க... முனியன் ஓடி வந்தது ...

"அய்யோ பொன்னி"தன் மகளை காக்க போக.. 

"தள்ளி போயிடு ஆத்திரக் __யில இருக்கேன் கொன்றுவேன் ...

"அம்மா அப்பா என்று சிறுபிள்ளையாக, அழுத மனைவியை தரதரவென இழுத்து கொண்டு மருது வாசலை நோக்கி போக ..ஊரே அங்குதான் நின்றது ...

"இனி நீ பண்றது எல்லாத்தையும் நாங்க பொறுத்து போக மாட்டோம் மருது ... உன் பொண்டாட்டியா இருந்தாலும் ஊர் மத்தியில இப்படி அடிச்சி இழுத்து போனா எப்படி ..."

"லேய் என்னலே அத்தனை பேருக்கும் மருதுன்னா யாருன்னு மறந்து போச்சா, ஒழுங்கா தள்ளி போங்கலே, ஏய் வாடி" என்று தரையில் கிடந்த அவளை இழுத்தான் ....

"அவ வாயால உன்கூட வர்றேன்னு சொன்னா தாராளமா இழுத்துட்டு போ, இல்லை உன் கையால கொன்னு கூட போடு... இங்க யாரும் கேட்க மாட்டாங்க.. "என்று நாச்சி தலையை பிடித்து கொண்டு மகள் அருகே வந்து நிற்க. மருது சட்டையை முறுக்கி கொண்டு...

"அதெல்லாம் சொன்னாலும் சொல்லைன்னாலும் அவ என் பொஞ்சாதிதான் "என்றவன்

"வந்து வண்டியில ஏறு " என்று புல்லட்டை ஸ்டார்ட் செய்து மனைவி பின்னால் ஏற காத்திருக்க அவள் கால்கள் அசையாது நின்றாள்...

"வந்து ஏறுடி...

"மாட்டேன்" என்றாள் தரையை பார்த்து கொண்டே..

"சாவடி வாங்கிடாத வந்து ஏறு ..." ஏற்கனவே அவனை வேண்டாம் என்றதால் தாறுமாறாக கோவம் வந்து குடியேறி நின்றது ... 

"மதனி நாச்சி பார்க்க வந்திருக்காங்க " என ஒருவன் கூறவும் , அவசரமாக இங்கே ஓடி வந்தவன்.. அவன் கூட போக மாட்டேன் எனக்கு மருது வேண்டாம் என குழலி கூறவும் .. மனதில் கட்டிய காதல் மாளிகை உடைந்து புகையாக போனது போல் வலித்தது அவன் ஒருவனுக்குத்தான் தெரியும்.. ஆனாலும் அவளை விட்டு வைக்க முடியுமா? தூக்கிட்டு போய் சங்கலியில் கட்டி போட்டு வாழ்ந்தாலும் சரிதான் .. அவ வேணும் அவனுக்கு ...இப்போது ஊர் மத்தியில் மருதுவோடு வர மறுக்க , ஆண் என்று மார்தட்டி சொல்லும் அவன் கீரிடம் மண்ணில் விழுந்தது போல உணர்ந்தவன்.. எட்டி அவளை சங்கோடு தூக்கிய மருது...

"நான் வேண்டாம்னா என் கூட வாழ முடியாதுன்னா நீ உயிரோடவே இருக்க வேண்டாம், செத்துடு" என்று சங்கை நெறிக்க,, குழலி கால்கள் துடிக்க கண்கள் சொருக அவன் கையில் துடித்தவளை , கனபாடு பட்டு காப்பாற்றி விலக்கினர் ..

கொள் கொள் என இருமிய குழலி தன்னையே கணல் கண்களில் நோக்கி கொண்டு நின்ற மருதுவை எச்சில் விழுங்கி பார்க்க...

"ஆத்தா நீதேன் முடிவு எடுக்கணும் .. நீ ஒரு வா சொல்லு காசு வெட்டி போடுங்கன்னு ... எவன் உன் மேல கையை வைக்கிறான்னு பார்கிறேன் " .. நாச்சி சாமரம் வீச

"ஆமா பொன்னி இவன் கூட கிடந்து சாவுறதுக்கு காசை வெட்டி போட்டிரு" என்று ஆளுக்காள் கூற... தலை வெடித்தது குழலிக்கு... மருது வெளியே திடமாக திமிராக நின்றாலும் , உள்ளே உடைந்து போய் நின்றான் ... எனக்கு இருக்கும் நடுக்கம் ஆசை , அவளுக்கு இல்லையா ,, மாமா உன்ன நான் நம்புறேன் உன் கூட நான் இருக்கேன்னு சொல்ல ஏன் வாய் வரல" என்று மனதில் மடிந்து கொண்டிருந்தான்.. 

"அவனை மொத்தமாக கொல்ல துடித்த மணையாள்...

"காசை வெட்டி போட்டிருங்க, எனக்கு அவர் கூட வாழ விருப்பம் இல்லை" என்று முடிக்க.. புல்லட்டோடு மருது சரிந்தான் .. தடுமாறி தன்னை நிலைபடுத்தியவன்... அவளை புருவம் சுருக்கி பார்த்தான்.. அவன் இதுவரை சிந்தாத கண்ணீர் வர பார்த்தது 

பொட்டச்சிக்காக அழாதடா!! என மனதுக்கு தைரியம் கூறி தட்டி கொடுத்து கொண்டவன், மறுமுறை மனைவி முகம் நோக்க

அவள் முகத்தில் எந்த சலனமும் வருத்தமும் இல்லை ... காதல் பிரதிபலிப்பு பூஜ்ஜியம் .. அம்மாவா மருதுவா என்றால் , அம்மாதான் கம்யூட்டர் ஜி லாக் பண்ணிடுங்க என்று கூறி நிற்க குத்தி குதற தோன்றியது அவனுக்கு 

அவள் விலகலே மருது தோல்வியை கூற ... அப்பட்டமாக தோற்றுப் போனதை காட்ட விரும்பாதவன் .. 

"அந்த காசை நான் முதல்ல வெட்டி போடுறேன்.. அதுல கூட இந்த மருது தோற்க கூடாது.. நீ என்னடி என்ன வேண்டாம்னு சொல்றது இந்த மருதுவுக்கு இனி நீ வேண்டாம்டி ... இத்தோட எல்லாம் முடிஞ்சு" என காசை எடுத்து கையில் வளைக்க... அவன் இருதயம் போல இரண்டாக உடைந்து போனது... அதை கீழே அமர்ந்திருந்த குழலி முகத்தில் வீசியவன்... 

"உனக்காக துக்கம் கொண்டாடி, தாடி வளர்த்து வாழாம கிடப்பேன்னு நினைக்காத.. போனவள போடி ___ யிறு போல புடுங்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. என்று மீசையை திருகி விட்டவன் ....

"காசு வெட்டி போட்டா உனக்கும் ,எனக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு அர்த்தம் .. பின்ன எதுக்குடி நான் கட்டின தாலி "என்று எட்டி அவள் தாலியை பிடித்து இழுக்க ...அறுந்து மருது கையோடு போனது ..அவர்கள் சொந்தம் போலவே நிலையற்று உறுதியற்று வீழ்ந்து போனது... அவன் காலையில் ஆசையாக மனைவி வகட்டில் வைத்துவிட்ட குங்குமத்தை அழித்து விட்டவன்...

"அழிக்க முடியாத ஒன்னு வரும்டி, அப்போ என்ன தேடி வருவ... குறிச்சி வச்சிக்கோ, அன்னைக்கு இந்த மருது நிழல்கிட்ட கூட உன்னால வர முடியாது "... என்று புழுதி பறக்க போய்விட்டான் ....

நாச்சிக்கு சற்று அதிர்ச்சிதான் .. மகளை வைத்து ஜெயிக்கலாம் என பார்க்க... அவனோ அட போடி குந்தாணிகளா நான் புல்லட் பாடி என்று போய்விட சப்பென்று ஆகி போனது... 

அழிக்க முடியாத ஒன்று இல்லை இரண்டு வரும் ...

ஒன்று காதல், மற்றொன்று அவன் உயிரில் ஜனனம் எடுக்க போகும் அவன் குழந்தை ... 

பிரிவுகள் எப்போதும் நன்மை ,தீமை பிரித்து அறிய கூடிய பக்குவம் கொடுக்கும். .. இதுவரை பகுத்தறிய தெரியாதவைகளை தெளிவு பெற கற்று கொடுக்கும் ... 

ஆனால் இவளுக்கு இந்த பிரிவு கற்று கொடுக்குமா, இல்லை நிரந்தர முறிவை ஏற்படுத்துமா? 

ஏதோ ஒன்னு இப்போதைக்கு இஸ்க் எபி வராது அதான...

அது வேற டிபார்ட்மெண்ட் மக்காஸ்...