மீளா23
Milka23

23
மீளா காதல் தீவிரவாதி
மனைவி ஒரு கரையில் வித்யாசமாக பார்த்து மருதுவுக்கு மூணாவது ஒரு எலும்பு முளைக்க வைக்க அருகிலிருந்த போடு கருப்பட்டியோ..எய்யா மருது கேட்டியா என அவர் நொந்த கதையை கூற... குழலிக்கு முதல் முதலாக மூளை வேலை செய்தது ..
இவன்கிட்ட பேசினாதான் முறைப்பார் தாத்தாவை வச்சே இவர பக்கத்தில வர வச்சிடலாம் என நினைத்து
"தாத்தா நீங்களும் இருங்க , உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வர்றேன்".. சேர்ந்து சாப்பிடுங்க கூட்டுக்கு ஆளை சேர்ந்தாள் .. பரவாயில்லை தெறிவிட்டாள் ... வேற்றுஆள் இருந்தா அடியும் திட்டும் இருக்காது என கண்டு கொண்டாள் .. இதற்காகவே நாலு பேருக்கு அன்னதானம் போட்டாவது ஆள் செட் பண்ணிடமாட்டாள்...
"அப்படியா தாயி, அப்ப நீ போடு.. நாங்க திண்ணையில இருந்து பேசிட்டு இருக்கோம் "என்று அவர் டேரா போட்டுவிட, மருது அவளை பார்த்து நரநரவென பல்லை கடிக்க... குழலி உள்ளே ஓடி விட்டாள்...
"உட்காருப்பா மருது , நீ மறுபடியும் உன் பொஞசாதி கெட சேர்ந்தது ஊருக்கே சந்தோஷம், எங்க உன்ற வாழ்க்கை நாச்சியால வீணா போகுமோன்னு நாங்க வேண்டாத கடவுள் இல்லை , "
"நான் என்ற பொஞ்சாதி கூட சேர்ந்துட்டேன்னு சொன்னது யாரோ..." ஊருக்குள் வரும் போதே எல்லாரும் அதையேதான் கூறினர்
சின்ன பொண்ணு பொருத்து போடே உன் அம்மா இருந்தா இப்படி விடுவாளா..
காசை வெட்டி போடுற அளவுக்கு பண்ணி புட்டியே அவ அரக்கியா இருந்தாலும் அவளுக்கு தாய்ல பாசம் இருக்கும்ல என இன்னொருவர் கூற விஷயமே தெரியாது கூவுகிறார்களே என்று மண்டையை முட்டி கொண்டான்...
பாரு மருது ஊர்கார்னக நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செத்வானுவ ஆனா நீ இப்ப எடுத்த பாரு முடிவு அதுதேன் சரி இனிமே உன்ற பொஞ்சாதியை பிரிச்சி வைக்காத, புதுசா வீடு கட்டி குடி வைக்க போறியாமே அதான அவள கொண்டு இங்கன வச்சிருக்க அவர் வெற்றிலையை இடித்து வாயில் போட்டு கொண்டு கூற
"இந்த விளககம் எல்லாம் யார் சொன்னது?
"எல்லாம் உன்ற கூட்டாளி பய விருமன்தான்.. போஸ்டர் அடிச்சு ஊரு புல்லா ஒட்டி இருக்கான் பார்கலையா.."
"என்னது போஸ்டரா ??"மருது சுற்றி போஸ்டரை தேட..
"எத்தனை சூழ்ச்சி வந்தாலும் என் அண்ணன் மதனியை பிரிக்க முடியாது, அவர் போட போகும் குட்டிகளையும் தடுக்க முடியாது "என தம்பதிகள் படத்தோடு போஸ்டர் கிடக்க... மருதுவுக்கு சாதா தோசை போலிருந்த முகம் ஸ்பெஷல் தோசையாக போனது .. மொத்தமா பத்து தடவை மேஞ்சிருப்பான் அதுக்குள்ள ஏகப்பட்ட பஞ்சாயத்து.. இதுல இவன்க ரோதனை வேற தாங்கல என்று சலித்து கொண்டு
போனை எடுத்து பாசக்கார பயபுள்ளைக்கு அழைத்தான்..
"எங்கன இருக்கலே ..."
"இங்கதான் அண்ணன், நாச்சி வீட்டுக்கு எதிர்தாப்ப போஸ்டர் ஒட்டிகிட்டு இருக்கேன்..
"இங்க கொஞ்சம் வந்துட்டு போவேன்..
"ஏன் அண்ணன் ..
"வெகுமதி கொடுக்க..
"ச்ச அது எல்லாம் எதுக்கு அண்ணன்.. நீ நல்லா இருந்தா போதும் மதனி காலையில பூரி செய்யணும்னு சொன்னாவ , ஒத்தையா தின்னு புடாத நானும் வர்றேன்..
"வாவா சேர்ந்து தின்போம் "என உருளை கட்டை ஒன்றை ரெடி பணணி வைத்தான்..
"இவன் கொடுக்கிற எகத்தாளம்தேன், இந்த கழுதை ஆள் முன்னாடி பல்லை பிடிச்சி பார்க்குது.. உன்னைய போடுற போட்டுல இனி இவ என்ற பக்கத்துல வர புடாது.. பொண்டாட்டி புது குலச்சல் மண்டையில் அலாரம் அடித்தது.. சிரிக்கும் பெண்ணை நம்பாதே கவுந்து கிடைக்காதே , பட்டது போதும் அந்த காயமே இன்னும் ஆறல , "என்று தனக்கு பல பாதுக்காப்பு வளையம் போட்டு ஆடும் ஆண்மைக்கு ஆலகால விஷம் கொடுத்து சாகடித்தான் ...
ஏன் விழுது , எதுக்கு அடி விழுது என தெரியாது கன்னத்தை பிடித்து கொண்டு விருமன் நின்றான்..
"என்னடா அது?மருது போஸ்டரை கைகாட்ட...
"ஏன் அண்ணன், இரண்டு பேரும் கேப் விட்டாப்புல நிற்கிற மாதிரி போட்டோ போட்டுட்டேன்னு கோவமா...
"செருப்பு!! ஏன்டா உனக்கு தேவையில்லாத சோலி..
"எல்லாம் தேவையான சோலிதேன், உங்க கூட மதனி சேர்ந்துட்டாவன்னு தெரிஞ்சாதான் நாச்சி வால் ஆட்ட மாட்டா, இல்லை அதையும் இதையும் பண்ணி ஊருக்குள்ள புகுந்துபுடுவா ... அதேன் அப்படி ஒட்டினேன் .. நீ மதனிகிட்ட முறுக்கிகிட்டே திரி , ஆனா உலகத்துக்கு காட்டாத .. உன்ற புள்ள பத்திரமா இருக்கணும்னா, இதை செஞ்சிதான் ஆவணும்.. நிதமும் இங்க வந்து கொஞ்சம் நேரம் உட்கார்.. இல்லை மருதுவுக்கும் அவன் பொஞ்சாதிக்கும் இன்னும் எதுவும் சரியாகலைன்னு புரளி கிளம்பி .. அது நாச்சி காதுக்கு போய் மறுபடியும் மதனியை விடாம ஏதாவது பண்ணிபுட்டா, மதனி போனா போறாவ, உன்ற புள்ள யோசி யோசி"விருமன் குழப்பி விட...
"ப்ச் அதுக்கு என்னடா செய்ய சொல்ற".. புள்ளையை வச்சே லாக் பண்ணினான்..
"மதனிய பிடிக்குதோ பிடிக்கலையோ உன்ற புள்ளைக்கு உன் பாதுக்காப்பு தேவை.."
"அதுக்குத்தான் நீங்க இத்தனை பேர் இருக்கியலேடா.."
"இருக்கோம்,, ஆனா நீ இருந்தாதான் கூடுதல் பாதுகாப்பு .. உடையவன் செய்யா வேலை ஒரு முழ கட்டை... ஏற்கனவே ஊரை சுத்தி சுத்தி நாச்சி ஆட்கள் வர்றானுவ, அப்புறம் உன்ற இஷ்டம் ... பகல்ல நாங்க வெளியே போனா , மதனிக்கு பாதுக்காப்பு வண்டு மட்டும்தேன் ... அவனையும் ஒரு குவாட்டர் வாங்கி கொடுத்தா போதும்.. இதுதேன் வீட்டுச்சாவின்னு எடுத்து கொடுத்து புடுவான் அவ்வளவுதான் சொல்லுவேன் அப்புறம் உன்ற இஷ்டம் ... "
"ப்ச் ராவு என்னால இங்கன வர முடியாது" ... பகலுக்கு ஷிப்ட் வாங்க நினைத்தான்
"சரி போனா போவுது வா , இதே போல பகல்ல இரண்டு நேரம் வந்து உட்கார்ந்துட்டு போனா மருது கண்ணு எதிர்லதான் அவன் பொஞ்சாதி இருக்கான்னு.. அவனுகளுக்கு பயம் வரும்ல , ராவு நாங்க இருக்கோம் பாதுகாப்பு கொடுத்துகிடுதோம்..."விருமன் விளையாட்டாக கூறினாலும், மருதுவுக்கு அது உண்மை என பட ..
ராத்திரி வந்தாதான் பூனை கறியை திங்க உருடடும் பகல்ல வந்து இரண்டு நேரம் தலையை காட்டிட்டு வெளியேவே நின்னுட்டு ஓடிறலாம் , என்று தூரித முடிவு எடுத்தான்... பூனை கருவாடு எப்போ பார்த்தாலும் அது வாசத்துக்கு கள்ள பூனையாக மாறிவிடும் என அவனுக்கு தெரியாதுல்ல, புரட்டாசி மாதம் பற்றி பூனைக்கு கவலை ஏது ...
"தம்பி பூரி சுட்டாச்சு வாறியலா சாப்பிட" உள்ளே இருந்து குரல் வந்தது ...
"வா மருது ஒரு பிடி பிடிப்போம்" என அருகில் உள்ளவர் நேரம் காலம் இல்லாமல் சோத்துக்கு பறக்க...
"லேய் இங்கன கொண்டு வச்சிட்டு போவ சொல்லு" ... மருது படி தாண்டா பத்தினன் போல அங்கு போக மறுக்க
"புருஷனுக்கு நின்னு பறிமாறலைன்னா ஊர் நாலு விதமா பேசும், மதனி உனக்கு மருவாதை தரலைன்னு பேரா போவும், பொறவு நீ வெளியே தலைகாட்ட முடியாது பார்த்துக்க, நீயே எடுத்து போட்டு சாப்பிட போறியா, இல்லை மதனியை எடுத்து தர சொல்லவா.."
"ப்ச் வந்த தொலையை சொல்லு ."அவனின் ஆண்மை வீராப்பு வைத்துதான் அவனை சாய்க்க வேண்டும் என விருமனுக்கு தெரியுமே
"வீடு இருக்கும் போது திண்ணையில உட்கார்ந்து சாப்பிட்டா ஊர் என்ன சொல்லும்" .. ஜன்னல் வழி குயில் கூவியது விருமன் சொன்ன அதே டையலாக்கை மனப்பாடம் பண்ணிடால்ல...
"ச்சை ஒரு பூரிக்கு எத்தனை சோதனை" என்று கையை கழுவி கொண்டு மருது உள்ளே போக ... விருமன் ஆசையாக பூரி தின்ன உள்ளே நுழைய போன பெரியவரை கொத்தாக தூக்கி கொண்டு வெளியே போக..
"டேய் எங்கடா தூக்கிட்டு போற...
"பூரி எண்ணெயில சுட்டது ,நாம கஞ்சை குடிப்போம் வா" என்று பூரி கனவை கருக்கி ஆளை கடத்தி விட்டான்...
மருது தரையில் சம்மணம் போட்டு அமர குழலி பாத்திரங்களை எடுத்து கொண்டு வந்து வைத்து விட்டு சேலையை வாகாக இடுப்பில் சொருகி.. பரிமாற ரெடியானாள்...
"வை... க்க... வா மாமா" குழலி குனிந்து பாத்திரத்தில் பூரியை தேட , நிமிர்ந்த மருது கண்ணில் குழியில் கிடந்த தாலி தெரிய.. அவன் பார்வை போகும் இடம் பார்த்து மூட தோணவில்லை பாரு , உனக்கு தோணினா எது வேணும்னாலும் தர்றேன் மாமா என்ற முற்றும் இழக்கும் நிலையில் அவள்..
"தம்பிதான் தாலியை எடுத்து கொண்டு வந்து தந்தாக ... பூரி வைக்கவா..
"உள்ள போ நான் வச்சிக்கிறேன்..
"இல்ல நா...அவன் பார்த்த பார்வையில்....
"யாராவது சப்போர்டுக்கு வந்து முட்டு கொடுங்கடா என்று தனியாக நிற்க தில்லு இல்லாமல் பேக் அடித்து சமயலறை போனவளுக்கு இயற்கை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..
"ஹக் ஹக் "ஆசை மனைவி நினைப்பு புல்லா இவன்கிடடேயே இருக்க. பூரியை வாயில் வைத்த மருதுவுக்கு விக்கி கொண்டது... நிற்பாளா என்ன.. அடுத்த நொடி ஓடி வந்து
அச்சோ மாமா என்ன அவசரம் எதுலேயும் பொறுமை இல்ல ... இதை குடிங்க என அவனுக்கு ஒன்று என்றதும் வார்த்தைகள் சதிராட்டம் இல்லாது வந்தது ..விக்கிய மருதுவின் தலையை மெதுவடை மலையில் சாய்த்து வைத்து, அவனுக்கு நீரை அருந்த உதட்டில் வைத்து , முதுகில் தடவி கொடுத்தவள்
மாமா இப்போ பரவாயில்லையா என்றவள் சுவாசம் மருது முகத்தில் பட, அவள் உதடும் அவன் உதடும் உரசி போகும் தூரம்தான் ... இருக்கு ஆனா இல்லே பொண்டாட்டி இருக்கா ஆனா புசிக்க முடியல...
இதுக்கு விக்கிட்டு செத்திருக்கலாம் நிலைக்கு தள்ளப்பட்டான். அவள் கடைமையாக பொண்டாட்டி கடமை செய்யும் போதே, இவன் ஆசையில் கொதிப்பான் .. இப்போது தானாக பொண்டாட்டி உரிமையை கையில் எடுத்து வெளுத்து வாங்கும் மனைவி அருகாமை , கொண்ட வீராப்புக்கு இழுக்கு கொண்டு வந்தது ...
போதுமா மாமா என்று குனுக ... என்ன போதுமா என்று மருது எண்ணம் வேறெங்கோ போனது நாற்பது நாள் கொழுத்த கன்றுக்குட்டி அழகு, மருது உத்திர வாசலை தோரணை கட்டி கூடாரம் போட வைத்தது ...
ஒன்னும் தேவையில்லை எழும்பி போ , என்றவன் சாப்பிடாமல் எழும்ப எட்டி அவன் கையை பிடித்த குழலி...
"இனிமே நீங்க என்ன சொன்னாலும் செய்தேன் மாமா.. என்னையே விலக்கி வச்சுபுடாதீய,, எனக்கு எப்படி என் நிலை சொல்லன்னு தெரியல .. போகும் போது உங்கள உண்மையா பிடிக்காமதேன் போனேன்.. ஆனா இப்போ இந்த உலகத்தில உங்கள தவிர எதுவும் பிடிக்காது மாமா, நீங்க நம்பினாலும் நம்பலேன்னாலும் அதுதேன் நிசம் ... நீங்க சாப்பிடுங்க வயிறு வத்தி போய் கிடக்கு, நான் தொல்லை பண்ண மாட்டேன் "என்று குழலி அழுது கொண்டே உள்ளே போனவள்.. அங்கிருந்து மருதுவைப் பார்க்க . அவன் சாப்பிடாது எழும்பி கையை கழுவி விட்டு போய்விட , குழலிக்கு உப்பு தண்ணீர் பஞ்சம் இல்லாது சுரந்தது ..
அவன் தன்னை வெறுக்கிறானே அதற்கு காரணகர்த்தா நான்தானே இதுக்கு மேல என்ன பண்ணணும்னு தெரியலையே என்று அவளுக்கு மாரைடைத்து கொண்டு வந்தது
மருதுவோ எதை தின்றால் ஏறிய பித்தம் குறையும் தெரியலையே என்று ஓடினான், அது அவளுக்கு புரியணுமே.. ஒரு மாதமாவது முகத்தை காட்டணும், இன்னும் நல்லா மாமா மாமான்னு பின்னாடி சுத்து இது போதாது உனக்கு.. போனல்ல இனி போக மாட்டேன் உன் கூடவே கிடக்கேன் மாமான்னு கெஞ்சிகிட்டே திரி ,கொஞ்சாத மனைவி கொஞ்சணும், பேசா மனைவி பேசிட்டே இருக்கணும்.. பின்னால் சுத்தாத காதலி பின்னாடி சுத்திட்டே வரணும் .. இந்த வயசுல காதலிச்சா நல்லாவவா இருக்கும் என்று அன்று அதை விலக்கி வைத்தவன் ..இன்று காதல் செமையா இருக்கும் போலேய்யா.. நல்லா இருக்கு... இப்படியே போவட்டும் என்று காதலில் கட்டுண்டு கிடக்க அவா கொண்டான்...
சொல்லா நேசங்கள் நெஞ்சமெல்லாம் குவிந்து கிடக்க, எங்கனம் அதை உடைத்து உளம் திறக்க என்றுதான் குழலிக்கு தெரியவில்லை ...
இங்க ஒரு ஜோடி சண்டையே இல்லாமல் சண்டை என பாவ்லா காட்ட .. அங்க ஒரு ஜோடிக்கு நாச்சி சங்கு ஊத ப்ளான் பக்காவாக ரெடி பண்ணி மின்னல் வீட்டு வாசலில் நின்றாள்...
"அப்பா நான் சுள்ளி பொறுக்கிட்டு வர்றேன்" என மின்னல் வாசலுக்கு போக .. அவள் வீட்டு வாசலில் நாச்சியை கண்டு பக்கென்று ஆகி போனது ..
எங்க போற? ...நாச்சி அவளை இளக்கார கண்ணோடு பார்த்தாள்.. மகளை வைத்து காரியம் சாதிக்க முடியல ..விருமனை வச்சி மருவை சாய்க்க நினைத்தாள் விருமன் குடுமி இருக்கும் இடம் மின்னல்... இவளை வாரி சுருட்டினால் விருமன் கைக்குள் என அவளுக்கு தெரியாது ..
அது தேவிம்மா..
"அடடே தேவிம்மா நீங்களா, ஏழை குடிசை தேடி வர என்ன காரணம்?" என்று நாச்சிக்கு கூழை கும்பிடு போட்டு முதுகு வளைந்த மின்னல் தகப்பன் ஓடி வந்து தன் டவல் எடுத்து சேரை துடைத்து கொடுக்க..
"இருக்கட்டும் இங்கன உட்கார்ந்து பேச வரல , உன்ற பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை வீடு வந்திருக்கு முடிச்சிடலாமா?"... என்றதும் மின்னல் அதிர்ந்து போக..
"பார்த்தியாடி தேவிம்மாவுக்கு நம்ம மேல உள்ள பாசத்தை "என்று மெச்சி கொண்ட அவள் தகப்பன் ..
"தாராளமாக பண்ணி புடுவோம் தேவிம்மா ...
"மாப்பிள்ளை டிரைவரா இருக்கான்..
"அய்ய தேவிம்மா நீங்க எவன காட்டினாலும் எனக்கு சரிதேன் விவரமே சொல்ல வேண்டாம் ... முடிச்சிடுவோம் "என்று அவர் விசுவாசத்தை விளக்கெண்ணெய்யாக காட்ட ..
"இதுல என்ற மானப் பிரச்சனை அடங்கி இருக்கு அதனால உன்ற பொண்ணு கவனம் ..
"சரிம்மா "
"ஏதாவது செய்ய நினைச்ச தூக்கி உத்திரத்தில தொங்க போட்டிருவேன்" என மின்னல் கையிலிருந்த போனை.. அவள் தகப்பனுக்கு கை காட்ட .. அதை உடனே வாங்கி உடைத்து உலை கொதிக்கும் அடுப்பில் போட்டவர் அவளை அறைக்குள் தள்ளிட
"அப்பா ஒரு பத்து நிமிசம் வெளியே காத்து வாங்கிட்டு வர்றேன், வாந்தி வருது, தலை சுத்துது என பல டக்கால்டி வேலை பார்த்தாள்.. எப்படியாவது விருமனை பார்த்து விஷயம் கூறிவிட வேண்டும் என்று
"கல்லாணம் ஆகுற வரை வெளியே போக கூடாது போ உள்ளாற" என்று தகப்பன் கட்டிலை வாசலில் போட்டு உட்கார்ந்து கொள்ள .. நாச்சி கை பட்டால் நீரும் விஷம் ஆகுமே .. அவள் ஏன் தன்னை வைத்து விளையாடுகிறாள் , கடவுளே அவனுக்கு என்னால் எந்த கஷ்டமும் வந்து விட கூடாது என்று விருமன் நினைவில் சுருண்டு கிடந்தாள்..
பசலை நோய் உடலெல்லாம் பரவ மருது மனைவி வாசலில் அமர்ந்திருக்க ... விருமன் உள்ளே வந்தான்..
"என்ன மதனி தூங்க போகல??" இவள் தூங்கினாதான், அவன் ஆளை பார்க்க போக முடியும்..அந்த கூடுதல் அக்கறை
"இல்லை தம்பி தூக்கம் வரல...
"அண்ணன பார்க்கணும் போல இருக்கோ.." அவள் குனிந்து கொள்ள..
"இருங்க அவரை எப்படி வர வைக்கிறேன் பாருங்க"" என போனை மருதுவுக்கு போட ... அவன் முதல் கூடல் நடந்த ஓடைக்கரையில் மணலில் படுத்து கிடந்து ... நிலவை பார்த்து கொண்டிருந்நதவன்..போனை எடுத்து ..
"என்னடா??" என்றான் உடனே.. மனைவி ஒத்தையில கிடக்கிறாளே.. இவன் வேற பத்து மணிக்கு போன் போடுறானே கை உதறி விட்டது...
"அண்ணன் மதனி அறைக்குள்ள பாம்பு" .. என்று எடுத்த எடுப்பில் கத்த..
"பாம்பா???? அங்க எங்கடா பாம்பு வந்தது" அவசரமாக எழும்பி வண்டியை நோக்கி ஓடினான்...
"அவளுக்கு ஒன்னும் இல்லையே... அடிச்சாச்சா.."
"பாம்பை அடிக்கத்தான் உன்னைய கூப்பிடுறேன்..
"ஏன் நல்லநேரம் பார்த்து தான் அடிப்பியா , நீ அடிச்சா என்னடா "
"அது நல்ல பாம்பு அண்ணன் ..
"அதுக்கு ??"
"உன்னைய மாதிரி நல்லவன் அடிச்சாதான் சாகும் வா..பின் குறிப்பு நான் முக்கியமான வேலையா போறேன் என்ன அடிக்க தேட வேண்டாம் ".. என்று வைத்து விட்டு ..
"அண்ணன் இப்ப வருவார் மதனி ., இனி உங்க சூதானம், இதுக்கு மேல சொல்லி தர முடியாது சொல்லி தரவும் கூடாது" என்றவன் .
ராத்திரி நேரத்து பூஜையில் என பாடி கொண்டே தன் ராத்திரி நேர குயில் தேடி போனான்..
மருது வந்து எந்த பாம்பை அடிக்க போறானோ தெரியலையே மக்கா...
பாம்பு பாவம் !! இப்படிக்கு அப்பாவி ரைட்டர்