மீளா 16,17

Mula16

மீளா 16,17

16

மீளா காதல் தீவிரவாதி!!

இவர்களின் பகை 40 வருடங்களுக்கும் முன்னால் தொடங்கியது.. அங்கிருந்தே கூறினால் தான் கிளைகள் ஒன்றாய் சேர்ந்து அடிமரத்தில் வந்து விடை தெரியும் ..

40 வருடங்களுக்கு முன் உசிலம்பட்டி(கற்பனை ஊர்) செல்வச் செழிப்பான கிராமங்களில் ஒன்று... என்னதான் விஞ்ஞானமும் வளர்ச்சியும் நாசா வரை சென்றிருந்தாலும்.. சில ஊர்களில் அறியாமை கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதான் இருந்தது... அந்த காலகட்டத்தில் தான் சாதித்தீ என்ற அகோர சக்தி ஆண்டு பல கிராமங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தது..

அப்படி ஒரு கிராமங்களில் ஒன்றுதான் மருதுபாண்டியன் ஊர் வீட்டிற்கு வீடு அருவாளும் கத்தியும் சமையலறைக்கு பயன்பட்டதோ இல்லையோ ஒருவர் தலையை ஒருவர் வெட்ட பயன்பட்டது.. கீழ் ஜாதி மக்கள் வாழும் இடம் கீழுர் என்றும், மேல் ஜாதி மக்கள் வாழும் இடம் மேலூர் என்றும் இரண்டாக பிரிவினை ஏற்படுத்தி .. கீழ் ஜாதி மக்கள் படிக்க , மருத்துவமனை செல்ல அவ்வளவு ஏன் ஒரு சொட்டு நீர் அருந்த வேண்டும் என்றாலும் மேலூரைச் சார்ந்தவர்களின் அனுமதி இருக்க வேண்டும்... அனுமதியில்லாமல் ஒருவன்கூட இவர்கள் எல்லைக்குள் கால் வைத்துவிட்டால் .. இரக்கம் இல்லாமல், கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொடுமை படுத்துவார்கள்.. ஏக்கங்கள் மட்டுமே அவர்களுடைய சொத்தாகி போனது... பள்ளிக்கூடங்களை ஆசையாக பார்ப்பார்கள். அதுகூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது .. எங்கே அறிவொளி அவர்களுக்கு வந்து விட்டால் .. தங்களை எதிர்த்து நிற்பார்கள் அடிமையாக அடிமை சாசனம் எழுதி தந்தவர்கள் அதை திருப்ப கேட்பார்களோ, தங்களை விட ஒரு படி மேல் போய்விடுவார்களோ என்று எந்த ஒரு வசதிகளும் அவர்களுக்கு கிடைக்காமல் செய்து கொண்டு இருந்தனர்.. தங்கள் வீட்டில் கடையாந்திர வேலைகள் செய்வது, சொர்ப்பமான கூலியை கொடுத்து அவர்களை விரட்டி அடிப்பது அவமானமான பேச்சு என்று அவர்கள் வாழ்க்கையை இருளை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது...

யாராவது எதிர்த்துப் பேசினால் எதிர்த்தவன் உயிரோடு இருக்க மாட்டான்.. பயத்தை விதைத்தனர் .. யார் தனக்காக போராட முடியும் போராடினால் இந்த அரை ஜான் வயிறு என்ன செய்யும் .. தன்னை நம்பி இருக்கும் குடும்பம் என்ன செய்யும் இந்த வினாக்கள் அவர்களை போராட விடவில்லை... போராடினால் மரணம் பரிசாக கிடைத்தது ...குடும்பம் அனாதை ஆனது..அதை கண்டவர்கள் போராட துணியவில்லை .. 

சந்தன பாண்டியன் அந்த ஊரில் ஊர் தலைவர் பண்ணையார், ஏன் அவர்தான் அந்த ஊருக்கு எல்லாம்... நாச்சியாரின் தந்தை .. அவருடைய மனைவி முத்துப்பேச்சி.. நாச்சியார் தேவி பிறந்தவுடன் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவர்கள் அவரை தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது அதற்கான வலு இல்லை என்று கூறி விட தன் கணவனை விட்டு விலகி இருந்தார் ... அதற்காக மனிதர் சைவம் எல்லாம் இல்லை வீட்டிற்கு பேச்சி மனைவி... ஆனால் வெளியே அங்கே இங்கே என்று தொடுப்புகள் வைத்துக் கொண்டு ராஜாவாகத்தான் வாழ்ந்தார்.. பேச்சிக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும் .. ஆனாலும் ஆம்பள முன்னால் தலை நிமிர்ந்து பேசக்கூடாது அவன் அப்படி இப்படி இருந்தாலும் சகித்து போகணும் என்ற அளவு நல்ல பொண்டாட்டி... புருஷன் செய்வதே சரி என்றும், தன்னால் அவருக்கு எந்த சுகமும் கிடைக்காது என்பதால் சண்டிலை கண்டும் காணாமல் அவர் விருப்பத்திற்கு போக சம்மதிக்க .. ஆசைக்கு இறங்கி வரும் பெண்களை அனுபவித்துக் கொண்டிருந்த பெரிய மனிதருக்கு தோட்டத்தில் புதிதாக வேலைக்கு வந்த சகுந்தலாவின் மீது கண்கள் ஆசையாக பாய ஆரம்பித்தது ...

சகுந்தலா தேவி... பதினேழு வயது....மருது பாண்டியனின் அன்னை சகுந்தலா இவரே...   

தன் தாய் தந்தை ஒரு சேர நோயில் விழ... வேறு வழியில்லாமல் குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக வயல் காட்டில் நாற்று நடுவதற்காக வந்தவர்... 

 

ஜொள்ளு சந்தன பாண்டி ஒரு வாரம் நைசாக சகுந்தலாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார் ... ஆனால் சகுந்தலாவோ வந்த வேலை முடிந்தது என்று கூலியை வாங்கிக்கொண்டு கொடுத்த தானியங்களையும் கொசுவ சேலையில் கட்டிக்கொண்டு தன் தாய் தகப்பனை நோக்கி ஓடிவிட .. இவருக்கு எப்படி இந்த பெண் மானை வளைக்க என்று தெரியவில்லை..

அன்று அமாவாசை இரவு..

"அக்கா எல்லாருக்கும் கூலி கொடுத்தாச்சு எனக்கு மட்டும் கூலி தரலையே.. முதலாளி ஏதாவது சொன்னாரா? " ஆற்று நீரில் தன் முகத்தை கழுவிக்கொண்டே சகுந்தலா பக்கத்தில் உள்ளவர்களிடம் விவரம் கேட்க..

"முதலாளி பம்பு செட் அறையில இருக்கார்டி நாங்களும் அங்க போய்தான் வாங்கிட்டு வந்தோம் நீயும் போய் வாங்கிட்டு சீக்கிரம் வீடு வந்து சேருடி, அமாவாசை இருட்டு ஆரம்பிக்க போவுது..."

"ஓ அப்படியா சரி இந்தா போய் வாங்கிட்டு வந்துடுறேன் கொஞ்ச நேரம் நில்லுங்களேன்.. எனக்கு ஒத்தையா வர பயமா இருக்கு .."

"அட நீ ஏண்டி என் புருஷன் தண்ணிய போட்டுட்டு வந்து சலம்பிக்கிட்டு கிடப்பான்.. ஏதாவது பேசினா எவன் கூட போயிட்டு வரேன்னு பச்சையா கேட்பான் நான் போறேன் .."

"ம்ம் சரிக்கா நான் நாளைக்கு வந்து கூலி வாங்கிக்கிறேன்..

"அட எவடி இவ, முதலாளி பத்தி தெரியும்தானே நாளைக்கு வந்து நின்னா கைய விரிச்சிடுவாரு.. ஒழுங்கா வேலை செஞ்சதுக்கு கூலி வாங்கிட்டு போனாதான் உன் வீட்டுல அடுப்பு எரியும்.. ஓடு ஓடு போய் வாங்கிட்டு வந்து சேரு "என அந்த பெண் விரைவாக தன் வழியை நோக்கி போய்விட..

சகுந்தலா தயங்கி தயங்கி பம்பு செட்டு ரூம் நோக்கி போனாள்..உள்ளே கட்டிலில் சரக்கை அடுக்கி வைத்து குடித்துக் கொண்டிருந்த பாண்டியன் சகுந்தலாவை பார்த்து சிரித்துக் கொண்டே..

" வந்து பக்கத்துல உட்காரு என்று அழைக்க

" முதலாளி கூலித் தந்தீங்கன்னா வீட்டுக்கு போவேன் அம்மாவுக்கு நாளைக்கு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்.."

" எந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக போற??" என்று பேச்சுவாக்கில் சகுந்தலா அருகில் வந்து அவள் தோள் மேல் கை வைக்கப் போக .. சட்டுன்னு விலகி நகர்ந்து நின்று கொண்டவள

" உங்க ஊரு தர்ம ஆஸ்பத்திரிதான் முதலாளி "

" நீ மட்டும் இன்னைக்கு ராவு அப்படியே இந்த பக்கமா ஒதுங்கு உன் அம்மா அப்பா எல்லாருக்கும் என்ன தேவையோ அதை நான் செஞ்சு தர்றேன்... நீ அப்பப்ப நான் விருப்பப்படும்போதெல்லாம், இந்த மாதிரி ராவு ஒதுங்கிட்டு போனேன்னு வச்சுக்கோ.. ராணி மாதிரி வச்சுக்கிறேன், என்ன சொல்ற?" என்று பல்லை இழித்துக் கொண்டு மறுபடியும் சகுந்தலாவை அணைக்க போக..

"முதலாளி நான் கீழூர் பொண்ணுங்க ,"எங்கே தன்னை பற்றி தெரியாதோ என்று கூறினாள் ஏனென்றால் அவர்களை தீட்டு போல் தான் கடந்து போவார்கள்..

"உடம்பு பசிக்கு கீழூர் மேலூர்ன்னு என்ன இருக்கு ஆசை வந்தா தணிச்சிட்டு போக வேண்டியதுதானே சகு... உன் மேல ஒரு வாரமா எனக்கு தீராத ஆசை.. நீ என் ஆசையை புரிஞ்சுகிட்டு நீயா வருவேன்னு நினைச்சா ., நீ என்னன்னா நாத்து எத்தனை இருக்குன்னு எண்ணிகிட்டுருக்க ... அதான் இன்னைக்கு உன்ற கூலியை பிடிச்சு வச்சுக்கிட்டேன் ..இதோ வந்துட்டல்ல.. என்ன சொல்ற பத்தோட ஒன்னா , என் கூட இருந்தேன்னு வச்சுக்கோ உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் சந்தோசமா வச்சுக்கிறேன்" என்றதும்... சகுந்தலா காரி அவர் முகத்தில் துப்பியவள்..

" நீ எல்லாம் ஒரு ஆம்பள, உனக்கு எல்லாம் ஒரு மீசை உன் பொண்ணு வயசு இருக்கிற பொண்ணு மேல ஆசை படுறியே, பெரிய மனுஷன்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள்ள அலையாத, உன் உடம்பு பசிக்குதான் பல பேர் இங்க இருக்காங்கல்ல ஏன் இப்படி அல்பத்தனமா அலையுற" என்றதும்..பாண்டி அவள் கொண்டை முடியை பிடித்து இழுத்து அறைந்து, சுவற்றில் வைத்து சகுந்தலாவின் தலையை மோத, நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது..

"_ நாயே யாரு மேல காரி துப்புற... நாளைக்கு ஊரே உன் மேல காரி துப்பும்டி, ஏதோ அந்த ஊர்ல பிறந்தாலும் கொஞ்சம் தழுக்குன்னு இருக்கியே வந்து படுன்னு கூப்பிட்டா.. ரொம்பதான் வாய் பேசுற" என்று அவரை தூக்கிக் கொண்டு போக.. பட்ட காயத்தில் பலகீனமாக கிடந்த சகுந்தலாவை வேட்டையாடி விட ... காலையில் எதுவுமே நடக்காதது போல் எழும்பி போய்விட்டார் ... கண்விழித்து கண்விழித்துப் பார்த்த சகுந்தலா.. கதறி அழுது பெற்றோரிடம் கூற..

"அவங்க எல்லாம் பெரிய மனுசங்க. யாருகிட்ட போய் என்ன சொல்ல.. இப்படி வந்து நிக்கிறியே வா ஊருக்கு விஷயம் தெரியுர முன்னாடி எங்கையாவது போயிடலாம்" என்று அவளை அழைக்க..

" நான் ஏன் போகணும் .. நான் என்ன தப்பு செஞ்சேன், அவன் பசிக்கு என்ன வேட்டையாடி தின்னதுக்காக நான் எதுக்கு இந்த ஊரை விட்டு போய் அவப்பெயர் வாங்கணும்.. நான் போக மாட்டேன் எனக்கு செஞ்சதுக்கு அந்த நாய் பதில் சொல்லியே ஆகணும்" என்று நிமிர்வாக நின்ற பெண்ணை பார்த்து பயம்தான் வந்தது..

"சொன்னா கேளு சகுந்தலா, நம்மளால அவங்கள எதிர்த்து போராட முடியாது..

"இப்படி சொல்லி சொல்லியேதான் இந்த ஊர் இப்படி கிடக்குது .. ஒரு வாய் கஞ்சிக்கு அவங்க கால நக்கி குடிக்க வேண்டியதிருக்கு.. எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அந்த ஊர்க்காரங்க கேள்விக்குறியாக்கி இருக்காங்க.. நம்ம ஊருக்கு ஒரு ஆஸ்பத்திரி உண்டா, இல்ல நோயில கிடக்குறவனுக்கு ஐயோ பாவமேன்னு மருந்தாவது கொடுக்கிறார்களா, நாமளும் இந்த உலகத்துல தானம்மா இருக்கோம் ... இப்படியே நாம கேட்காம விட்டுவிட்டுதான் இந்த நிலைமையில் வந்து நிற்கிறோம்... கேள்வியை தொடங்குவது நானாக இருக்கட்டும் முடிச்சு வைக்க ஒருத்தன் வருவான், விதை நான் போடுறேன்" என்றவள் கொண்டையை அள்ளி முடிந்து கட்டிக்கொண்டு மேலூர் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ..

நேராக பாண்டியனின் வீட்டில் முன்னால் போய் நின்றவள் பாண்டியன் தன்னை கெடுத்து விட்டதாகவும் அதற்கு நியாயம் வழங்குமாறு கூற இது நாள் வரை கெளரவமாக அலைந்தவர் சகுந்தலா இப்படி வந்து வாசலில் தர்க்கம் பண்ணவும்...அவர்மேல் பழி போட்டார

" என்ன தள்ளி விட்டுட்டு போக வேண்டியது தானே அவளுக்கும் ஆசை இருந்ததுனாலதான அசைஞ்சு போனா.. இப்போ ஊர் முன்னாடி கேவலப்படுத்தினா பணமோ இல்ல தாலியோ கட்டி பொண்டாட்டியா வைப்பேன்னு ,வந்து நின்னு பவுசு காட்டுறா" என்று கூசாமல் பொய் கூற..

" யாருக்குடா வேணும் உன் பணமும், தாலியும் நீ கெடுத்ததும் தூக்கி போட்டு சாவேன்னு நினைச்சியா , தொட்டதுக்கு பதில் சொல்லியே ஆவணும் ... நான் இப்பவே போலீசுக்கு போய் உன் பேர்ல கம்ப்ளைன்ட் கொடுக்கல, நான் சகுந்தலாதேவி இல்லை" என்று போகப் போனவளை மறைத்து நின்று கொண்டனர் ஊர் மக்கள்...

"ஐயா இதுவரைக்கும் நம்ம ஊருக்குள்ள போலீசு கேசுன்னு வந்ததில்ல இவளால போலீஸ் வந்துருச்சுன்னு வச்சுக்கோங்க .. அதுக்கு பிறகு நம்ம தலைமை இருக்காது.. அவங்க தான் எதுக்கெடுத்தாலும் உள்ள வந்துட்டு போவாங்க அதோட ஒருத்தி தலையெடுத்துட்டான்னு வச்சுக்கோங்க.. இனிமேல் ஒவ்வொருத்தனா நமக்கு எதிரா நிப்பானுவோ அதுக்கு பிறகு நம்ம மேல இருக்கிற மரியாதை, பயம் எல்லாம் போயிடும் ..

அதனால என்ன செய்ய சொல்லுத..""

" ஏன் பேசாம இவளுக்கு ஒரு தாலி கட்ட கூடாது 

இவ விஷயம் வெளிய போனாதானே பிரச்சனை அவ உங்க பொஞ்சாதின்னு ஆனா, ஒன்னும் பண்ண முடியாதுல்ல..

"அப்படியா சொல்லுத அதுக்கு அந்த ஊர் காரிக்கு தாலி கட்டணும்..

 

"வேற வழி இல்லை பண்ணை" என்று ஒருவர் ஆலோசனை வழங்க..

 தன் மனைவியை எட்டிப் பார்த்தார், அது தாலியோடு நின்று உனக்கு ஏத்த மனைவி நான் என்று மார்தட்டி நிற்க..

ஊர் பெண்கள் சகுந்தலாவை பிடித்து கொள்ள சந்தன பாண்டி சகுந்தலா தேவி கழுத்தில் தாலியை கட்ட..

"தாலி கட்டினா வாயை மூடிட்டு போவேன்னு நினைச்சியா.. என்ன ஏன்டா தொட்டோம்னு ஒவ்வொரு நாளும் கதற விடுறேன்டா "என்றவள் அவன் கட்டிய தாலியை அவன் முகத்தில் அப்போதே கழட்டி போட்டுவிட்டு வந்துவிட்டார் .. பெண் புரட்சி படை தலைவியாக மாறினாள் ...தங்கள் ஊரை திரட்டி மறுக்கும் உரிமையை வாங்க ஆரம்பித்தாள்.. ஒன் விமன் ஆர்மியாக செல்வி சகுந்தலா தேவி என்று நிமிர்ந்து நின்றாள்... 

சகுந்தலா குழந்தை உண்டானார்.. வருத்தம் எல்லாம் படவில்லை... மகிழ்ச்ச தான் முதல் முறை தந்தை என்ற இடத்தில் சகுந்தலாதேவி என்று போட்டு மகனை வாங்கினார்...

மருது பாண்டியன் என்று பேர் வைக்க ,

"ஏன்டி அவன் பேர் வைக்கிற அந்த ஆள் மேல விருப்பம் உண்டா என்று தோழி ஒருத்தி கேட்க...

"இந்த பேர் ஆசைக்கு வைக்கல, இந்த பேரை யாராவது சொல்லும் போதெல்லாம் அவன் செஞ்ச தப்பு என் மகனுக்கு மறக்கவே கூடாது ..வேட்டையாட வெறி வரணும்.. நம்ம ஊர் மக்களுக்காக போராட உத்வேகம் வரும் என்று கூறிட இப்படியும் ஒரு பெண்ணா ??என ஆச்சரிய பட வைத்தார்.. 

 பின் வந்த நாட்களில் .. ஆண்களால் செய்ய முடியாத புது மாற்றத்தை போராடி வெற்றி காண ஆரம்பித்தார் .. சொல்லு கேட்கல அடி தப்பு இல்லை ..நல்லதுக்கு நாலு பேர் சாகலாம் பாண்டி என்று மகனுக்கு தொட்டிலில் வீரம் ஊட்டினார்.. 

சகுந்தலாவின் மகனாகவே வளர்க்கப்பட்டான்...போர்க்களம் அவன் விளையாட்டு அரங்கம் ஆனது... சாதாரண அடிப்படை உரிமைக்கு கூட போராடி போராடி ஓயும் தாயை கண்டு வருந்தினான்.. 

"ம்மா...

"பாண்டி நான்,செத்தாலும் இந்த மக்கள நீ விட்டிருறாத...

"ஏன் ம்மா இப்படி சொல்றீங்க..

"பயமா இருக்குடா உன்ன விட்டுட்டு போக போறேன்னு தினமும் மனசு சொல்லுது ...

"ஒன்னும் இல்ல நான் இருக்கேன் நாம நல்லா இருப்போம் "என்று கூறியவன் அடுத்த பத்து நாளில் மார்பில் குத்தபட்டு கிடந்த தன் தாயை பார்த்து அழுது கொண்டு நின்றான்..

"அழாதடா இந்த கண்ணீர் நம்மள பலவீனமாக்கும்...சேர்த்து வை அதுக்கும் சேர்த்து கூலி கொடு, அம்மா உன் கூடவேதான் இருப்பேன் ... ஏனோ மருது மேல் கடவுள் இரக்கம் கொண்டு சகுந்தலாவை காப்பாற்றி விட்டார் ..

"இப்போ காப்பாத்தியாச்சு கவனமா பார்த்துக்கோங்க என்று கூற..

' யாரும்மா இப்படி பண்ணினா என்ன ஆச்சி .. தாயிக்கு பால் ஆற்றி கொடுத்து கொண்டே கேட்க 

"எப்பவும் போலதான்ய்யா, அம்மாவுக்கு ஒன்னும் இல்லை" என்று சிரிக்க.. அந்த சிரிப்புக்கு பின் இருக்கும் வேதனை வலியும், சந்தன பாண்டியனை அழிக்கும் வெறியை கொடுத்தது .. எங்கு போனாலும் தன் அன்னையை சீண்டுகிறான் வகையா மாட்டு ஆப்பு வைக்கிறேன் என தன் தந்தைக்கு ராவு காலம் குறித்து வைத்தான் ...

நான்கு நாள் மருத்துவமனை வாசம்.. அறை வாங்க கூட போராடதான் செய்தார்கள் என்பது தனி கதை.. தனது அறைக்கு அருகே லேபர் வார்ட் சதா குழந்தைகள் அழும் சத்தம் , அதில் ஒன்று மட்டும் இவனுக்கு பிடிக்கும் .. அது மட்டும் ஹே ஹே என விட்டுவிட்டு அழும் மருதுவுக்கு சிரிப்பு வரும் ..

"அழ கூட தெரியலைம்மா அந்த கண்ணுக்கு.. யாருன்னு பார்த்துட்டு வரவா ... பதில் அருகே நின்ற ஒருவர் மூலம வந்தது .. 

 "நாச்சிக்கு பெண் குழந்தைல்ல பிறந்திருக்காம் இந்த அறைதான் அது" என்று சத்தம் கேட்டு மருது தாயை பார்க்க...

"அந்த ஆள் செஞ்ச தப்புக்கு எல்லாரையும் வெறுக்கணும்னு இல்லைய்யா, மகன் விவரம் புரிந்ததும் தகப்பன் யார் என கேட்க இவன்தான் என்று உண்மையை கூறி...

உனக்கு இப்படி ஒரு தகப்பன் வேணுமா??""என்று கேட்க...

'எனக்கு அம்மா மட்டும் போதும்" என்ற மகனை அணைத்து கொண்டார்...

போகும் போது வரும் போது அந்த தொட்டிலில் குழலி குட்டி கால் விரல்கள் பார்த்து கொண்டே போவான் வருவான் ... ஒரு நாள் உள்ளே ஒருத்தரும் இல்லை என்றதும் ரொம்ப ஆசை, அந்த குட்டி கண்ணுவை பார்க்க... மருது நோட்டம் விட்டு ஆள் இல்லை என்றதும் மெல்ல உள்ளே போய் தொட்டிலில் கிடக்கும் குழலியை பார்க்க.. அவள் குட்டி விரல் வைத்து குனிந்து நின்று பார்த்த மருது சட்டையை பிடித்து விளையாட ..

"கண்ணு ஊஊஊஊ என்று அவள் நெற்றியில் குனிந்து முத்தமிட.. பாண்டியன் வந்து அவனை இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி....

"வேசிக்கு பிறந்த ____ பயல ... யார் வீட்டு புள்ள மேல கை வச்ச , உன்ற நிழல் கூட என் பேத்தி மேல பட கூடாதுல "என்று ஓங்கி மிதிக்க போக...

"பண்ணை ஆளு யாருன்னு தெரியலையா உங்க மகன்தேன் ..."

"எவனுக்கு பிறந்தானோ.. ஊர் மேஞ்ச கழுதை யாருக்கு முந்தி விரிச்சி பெத்தாளோ" என்று கூறியவர் குடல் சரிந்து விழுந்தது ... தள்ளியதால் ஏற்கனவே ஆத்திரம் அடைந்து நின்ற மருது.. தன் தாயை தரக்குறைவாக பேச அருகே கிடந்த கம்பியை ஒற்றே ஏத்து சொருகி விட்டான்...

"செத்து போ " என்றவன் அதிர்ந்து நின்ற தன் தாயை அணைத்து கொண்டு..

"வாம்மா இந்த ஊருக்கு எமன், கடவுள் எல்லாம் நான்தான் இத்தனை பேர் நின்னு வேடிக்கை பார்க்கிறீங்கல்ல, இதே போல ஒரு நாள் உங்களுக்கு திருப்பி வரும்.. வர வைப்பேன்.." என்றவன் தொட்டிலை திரும்பி பார்த்தவன்...

"என் நிழல் கூட பட கூடாதுன்னு சொன்னல்ல எழுதி வச்சுக்க... இவள தூக்கிட்டு போக வருவேன் என்னைக்கா இருந்தாலும் நீ இந்த மருது பாண்டிக்குத்தான்.. " என்று வலியில் அலறிய சந்தன பாண்டியன் பார்த்து கொண்டே கிளம்பினான்... நாச்சியோ தந்தையை தூக்கி கொண்டு முத்தம் பார்த்தவள்..

"அவனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா நாம கோழை ஆகிடுவோம் ப்பா .. அவனுக்கு சரிக்கு சரி செய்வோம்" என்று கழுகாக இருக்கு காத்திருந்தனர் 

 மருது தன் தாயோடு அந்த ஊரை விட்டு எல்லை வாசலில் கூடாரம் போட்டு அமர்ந்தான் ... அதுதான் மருதூர் ஆனது .... 

தெய்வத்தை கண்டது இல்லை, தன் தாயை தெய்வமாக காண ஆரம்பித்தான்..

அவள் தெய்வ திருமகள்!!

17 மீளா காதல் தீவிரவாதி 

பத்து வருடம் அன்னையின் போராட்டத்தை தானும் கையில் எடுத்து ஓரளவே ஊருக்கு அடிப்படை வசதி , கைநாட்டு நிலையில் இருந்து கையெழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர்.. மொத்தம் நூறு குடும்பம் அவர்கள் கீழுரில் ...  

"ஏன் சகுந்தலா இப்பதான் ஓரளவுக்கு எல்லாம் சரியாயிடுச்சு தானே, ஒரு கோவில் திருவிழா ஒன்னும் வைப்போமே" என்று அவர் ஊர் மக்கள் ஆசையாக கேட்கவும் ...

சகுந்தலாவிற்கும் செய்தால் என்ன நலமாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்..

"நல்லாதான் இருக்கும் ,ஆனா இப்ப அந்த ஊர் திருவிழாவும் நடக்குதே , நாம வச்சா ஏதும் பண்ண நினைப்பாங்களே.."

"நீ தான் சிங்கம் போல மகனை பெத்து வச்சிருக்கியே பின்ன என்ன ?

"எய்யா மருது நீ என்ன சொல்ற..

"சிறப்பா செஞ்சிடலாம்மா" என்றிட அவர்கள் ஊர் களைகட்ட ஆரம்பித்தது...

"ஏன் சகுந்தலா? நீ எதுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கிடக்குறீங்க.. நம்ம ஊர்ல வந்து இருக்க வேண்டியதுதானே என்று கேட்டாலும் ..

"அது என்னவோ எனக்கு என் மகன் அவனுக்கு நான்னு ஆகிப்போச்சு.. அதுதான் எங்களுக்கு பிடிக்கும்" என்று சகுந்தலா மறுத்து விட்டார்...

4 நாள் திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது ஏற்கனவே சந்தனபாண்டியனும், அந்த ஊர் மக்களும் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா இவர்களை மொத்தமாக சாய்க்க என்று வகை தேடிக் கொண்டிருந்த நேரம் ... 

எல்லாவற்றிலும் சகுந்தலா தேவியின் கூட்டம் உயர்ந்து வர ஆரம்பிக்க.. இப்படியே போனால் நம்முடைய அடுத்த தலைமுறை அவர்களுக்கு கைகட்டி நிற்க வேண்டியது இருக்கும் என்று ஊர் கூட்டம் போட்டு ஆலோசனைகள் நடத்த.. நாச்சியின் கணவர் நாகவேல் ஒரு பயங்கரமான திட்டத்தை கொடுத்தான்.

இரவு இரண்டு ஊரிலும் ஒருபோல திருவிழா ..அந்த ஊர் மக்கள் அனைவரும் கோவில் திருவிழாவில் நிற்கும்பொழுது.. மொத்தமாக தீ வைத்து கொளுத்தி விடுவோம் ... யாராவது பிழைத்தால்தானே நமக்கு எதிராக வருவார்கள் ஏதாவது பிரச்சனை வரும்.."

 "திட்டம் நல்லாதேன் இருக்கு ,ஆனா ஏதாவது பிரச்சனை வந்தா .."

"ஏன் வரப்போகுது அவங்க போராடி வாங்கி, புதுசா மாட்டின கரெண்ட் கம்பம் ஒழுங்கா இல்ல. அது மூலமா கரெண்ட் பாஸாகி ஃபயர் ஆகி இறந்துட்டாங்கன்னு சொல்லிடலாம்.. அப்படியே தோண்டி துருவி எவனாவது வந்தாலும் காசு கொடுத்து அவங்க வாய அடைச்சிடலாம்..

"எதுக்கு ஊர் மொத்தத்தையும் கொளுத்தணும் பேசாம அந்த சகுந்தலாவையும், அவ மகனையும் கொன்னுட்டா போதாது "என்று நாச்சியார் ஐடியா கொடுத்தாள் .. தகப்பன் உடல் நிலை மருது குத்தி போட்ட பிறகு சரியில்லை, எனவே அவளும் அவள் கணவனும்தான் ஊர் தலைவர்கள்.. தேவிம்மா என்றால் செய்வதற்கு சமம் ... "

" நீ சொல்றது சரிதான் நாச்சி.. ஆனா முன்ன மாதிரி இப்போ அந்த ஊர்க்கார பயல்க இல்லை சகுந்தலாவும் அவன் மகனும் கொடுக்கிற சப்போர்ட்ல நல்ல திமிரி போய் நிக்கிறானுவ.. இவ போனாலும் இன்னும் பல பேர் வந்துகிட்டேதான் இருப்பானுவ.. அதுக்கு மொத்தமா வேரோட சாய்ச்சுட்டா மறுபடியும் முளைக்க வாய்ப்பே இல்லை.."

 "ஆமா நாச்சி மருமகன் சொல்றது சரியாதான் இருக்கு.. அப்படியே பண்ணிடுவோம் நாம மேலே சந்தேகமே வராத மாதிரி ஊர் மொத்தத்தையும் சுடுகாடா மாத்திடுவோம்" என்று கூற .. இதற்கு அந்த ஊர் பெரிய தலைவர்களும் தலையாட்ட ... 

இரவோடு இரவாக திட்டங்கள் தீட்டி, ஆட்களை ரெடி பண்ணி திருவிழா நடக்கும் இடத்தை சுற்றி பெட்ரோலை ஊற்றி விட்டனர்... தப்பித்து வந்தாலும் பெட்ரோல் மீது நெருப்பு பட்டு எரியும் என்று கொடூர திட்டம் தீட்டினர்.. 

அதே சமயம் இங்கு சாமி ஊர்வலம் நடக்க தன் மகள் குழலியை வைரம் மின்ன பல்லக்கில் வைத்து பவனி அழைத்து வந்தனர்.. குழலி கண்ணை உருட்டி அத்தனையையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்... அவள் உலகை பார்ப்பது இதுவே கடைசி நாள் என்று அறியாது ஆனந்தம் கொண்டது கிள்ளை மனம்..  

திருவிழாவில் நின்று கொண்டிருந்த சகுந்தலாதேவி..

"எய்யா பாண்டி கல்வித்துறை மந்திரி இன்னைக்கு ஊர் பக்கம் வந்திருக்காராம்.. அவர் கிட்ட நம்ம ஊருக்கு தனியா ஒரு பள்ளிக்கூடம் கட்ட கேட்டிருந்தேன்.. சாயங்காலம் அதோட ஃபைல் எல்லாம் கேட்டிருந்தார்.. கொஞ்சம் போய் கொடுத்துட்டு ஓடி வந்துறேன்..நாளைக்கு ஆகி போச்சுன்னா நம்மள மறந்திட கூடாது என ஊர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த மருதுவை அழைத்து பைலை சகுந்தலா கொடுக்க ..

"என்னம்மா இந்த நடுராத்திரி போக சொல்றீங்க 

"நல்ல காரியத்தை தள்ளி போடக்கூடாது சாமி போயிட்டு வந்துரு"

"சரிம்மா" என மருது அந்த நடுயிரவு தூக்கிக் கொண்டு போக ...

யாருக்கு எந்த தீங்க செய்ய நினைத்தார்களோ சந்தன பாண்டியனும் அவர்கள் கூட்டமும்.. அவர்கள் திருவிழாவில் தீக்கசிந்து நெருப்பு பற்ற நல்லவேளை அதிக அசம்பாவிதம் இன்றி காத்து கொண்டனர்...  

மருது வேலை முடித்து வரும் பொழுது ஊரே கரிக்கட்டையாக கிடந்தது... என்ன நடந்தாலும் விடுறதா இல்லை என்று இங்கே வந்து காரியத்தை சாதித்து விட்டே போயிருந்தனர்...

சில குடும்பம் தவிர அத்தனை பேரும் சடலமும்தான் மருது கண்ணை மறைத்தது... கலங்காத அவன் இருதயம் கலங்கி, குலுங்கி இரத்தம் வடிந்தது...

அண்ணா அண்ணா என்று தப்பியவர்கள் அவனை அணைக்க....

நீ கடவுள் தானா ?இல்லை பணக்காரர்களுக்கு கூலியா.. ச்சை இனி உன்னை பார்க்கவும் மாட்டேன் உலகம் கூறும் நல்லது கெட்டதை கேடடவும் மாட்டேன் என்று கல்லாக நின்ற கடவுளை சபித்து தன் அன்னை சடலத்தை தேடினான்..அது மட்டும் இல்லை .. 

அம்மா என்று சுற்றி முற்றிப்பார்க்க... ஒரு மரத்திற்கு பின்னால் சகுந்தலா தேவியின் புடவை அசைந்தாடியது ..

"அம்மா ஆஆஆஆ" என்று தன் தாயை நோக்கி ஓடியவன் கண்டது நாச்சியார் கையிலிருந்த கத்தியையும் .. குத்தப்பட்டு சரிந்து விழுந்த தாயையும்தான் ... மருது ஓடிப்போய் தாயை தாங்கிக் கொண்டவன்... நாச்சியார் தேவியை வெறித்துப் பார்க்க .... அவள் எச்சில் விழுங்கி கத்தியை போட்டுவிட்டு ஓடிவிட்டாள்.. மருது தன் தாயை போட்டு விட்டு அவள் பின்னாடி போக நினைக்க பிடித்து தடுத்த சகுந்தலா..

"ஹக் பாண்டி ...

ம்ம்ஆஆஆஆ ...கண்கள் சொருகும் தாயை கண்ணீர் வடிய பார்த்தான் ... அவன் கண்ணீரை கண்ட ஒரு ஆள் சகுந்தலா மட்டுமே...

வலிக்குதாம்மா.. "

இது வலிக்கல பாண்டி.. என்ன தப்புடா பண்ணினோம் இப்படி அத்தனை பேரையும் ஹக் ஹக் என்றவர் தூரத்தில் அழுது கொண்டு நின்ற விருமனை கைகாட்டி..

உங்கிட்ட ஒரு உண்மை சொல்லணும்டா... அதோ நிற்கிறானே .."

"விருமனா ம்மா ... "

"ம்ம் அவன் அனாதை இல்லை " ... விருமன் சிறு பையனாக இருக்கும் போது சகுந்தலா குப்பை தொட்டி அருகே கிடந்தான் என அழைத்து கொண்டு வந்தார் ..

அவன் அந்த நாச்சி நாச்சி ம.....ஹக் ஹக் என்று தலை தொங்கி விழுந்தார்.... 

ம்மாஆஆஆஆஆஆஆஆ என்று கதறி துடித்தவன் அருகே கிடந்த அருவாளை எடுத்துக்கொண்டு போனவன் , தன் தந்தை, நாச்சியாரின் கணவர் இன்னும் கண்ணில் பட்டவர்கள் எல்லாரைம் வெட்டி கிழித்து கூறு போட்டவன் .. அதன் பிறகே தன் தாய்க்கு இறுதி காரியம் செய்தான் ..நாச்சி மட்டும் மிஸ்ஸிங் 

நாச்சியார் எப்படியும் தன்னையும் மருது கொன்று விடுவான் என்று பயந்து.. அந்த தீவிபத்தில் தன் மகள் இறந்து போனாள் என கூறி ஊரை நம்ப வைத்து விட்டு, முனியனிடம் மகளை ஒப்படைத்தவர் நான் வரும்வரை பார்த்துக்கொள்.. அதுவரை இவள் தலை கூட வெளியே தெரியக்கூடாது என்று கொடுத்துவிட்டு போய்விட்டாள்... மகளா பாசம் இல்லை நாளை இவள்தான் தன் குலம் கொண்ட வெறிக்கு தீனி போட வேண்டும் என்ற நினைப்பு அஃது.. 

எது தங்கள் ஊருக்கு மறுக்கப்பட்டதோ? எதனால் தங்கள் ஊரை ஒடுக்கி வைத்தார்களோ, எந்த கௌரவத்திற்காக தங்கள் ஊரை கொளுத்தினார்களோ, அது அத்தனையையும் பாரபட்சம் இல்லாமல், ஈவு இரக்கமில்லாமல் இவர்களுக்கு செய்தான் ... கொடுமையில் விலை என்ன? வலி என்ன என்பதை அவர்கள் நித்தம் நித்தம் அனுபவிக்க செய்தான்... பள்ளிக்கூடங்களை இடித்துப் போட்டான்.. விளக்குகள் கூட இல்லாத அளவிற்கு ஊரை இருட்டாக்கினான்.. மீறி விவசாயம் செய்தால் விவசாய பூமியை நெருப்பிட்டு கொளுத்தினார்கள் சோத்துக்கும் நீருக்கும் நாயாக அலைய விட்டான்.. கோவில் திருவிழா கொண்டாட்டம் என்று எந்த ஒரு சுகபோக நிகழ்ச்சியையும் கொண்டாட விடவில்லை அப்படியே கொண்டாடினாலும் அதில் நிம்மதி இருக்காது எப்போது இவன் ஆட்கள் வரும் என்று பயந்து கொண்டே இருக்க வைத்தான்..

 சில நாட்களிலேயே முனியன் வீட்டில் நாச்சியார் மகள் இருக்கிறாள் சாகவில்லை என்று அவன் உளவுத்துறை கூற..

"போட்டுருவோமாண்ணா, நாச்சி வருவா..

"ச்சே ச்சே வேண்டாம் என்று உடனே மறுத்தான் 

ஏனோ அத்தனை பேர் மீதும் வெறுப்பை கொட்டிய அவனால் அந்த பூச்சி கண்ணை உருட்டிக்கொண்டு பார்த்த பொன் குழலியை மட்டும் வெறுக்க தோன்றவில்லை ..

திருமண வயது கடந்து பிறகும் காதல் என்றாலும், ஆசை என்றாலும், உணர்வு என்றால்கூட குழலி ஒருத்திதான் மருதுவுக்கு நினைவில் வந்தாள்.. 

"கண்ணு எப்போடி சமைவ "என்று நிலவிடம் கொஞ்சுவான் அவ எல்லாத்துலயும் லேட் பிக்கப் மெதுவா ஆடி அசைஞ்சி இப்பதான் ஆகியிருக்கா.. 

மருது எப்போது தன் ஆசையும் விருப்பமும் அவளிடம் என்று அறிந்தானோ, அன்றிலிருந்து அவளுக்கு பார்த்து பார்த்து செய்ய ஆரம்பித்தான் ... ஊருக்கே மின்சாரம் வரவில்லை என்றாலும் அவள் வீட்டில் தடையில்லாத மின்சாரம் இருக்கும் .. எங்கு போனாலும் ஏதாகிலும் வாங்கி, யார் மூலமாவது குழலிக்கு அத்தனையும் போய்விடும்.. பார்க்க ஆசை உண்டு ஆனால் அவள் வயது இவனை தடை போட்டு நிறுத்து வைத்தது ... 

"பாவம் அறையிலேயே அடைச்சு கிடக்குது கண்ணு..ஆமா இந்த ஊர் கூட சேர்ந்து, கெட்ட புத்திதேன் வரும் .. அதுக்கு ஒத்தையா கிடக்கட்டும் நம்ம கிட்ட வந்த பொறவு .. பிரம்பு வச்சி நாலு அடி போட்டு திருத்திபுடலாம்.".. என ஆசையில் காத்து கிடந்தான் ... அவன் ரேஞ்ச் அந்த அடிதடி தான அது சுலபமாக வந்தது அவன் என்ன பண்ணுவான்.. 

நாச்சியார் ஒரே ஒரு விஷயத்தை தான் முனியனிடம் சொல்லி விட்டுப்போனாள்..

எக்காரணத்தைக் கொண்டும் அவளுக்கு ஊர் உலகம் தெரியக்கூடாது.. நல்லது கெட்டது அவள் அறிந்து விடக்கூடாது.. உலகத்தைப் பற்றி அவளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காதே.. அந்த இருட்டு அறையில் அடைந்து கொள்ளட்டும் அப்படி இருந்தால்தான் நம்மைப் பற்றிய விஷயங்கள் அவளுக்கு தெரியாமல் இருக்கும்..வருவேன் என்று போனவன் ஒரு நாள் அவளை தூக்கி போக வருவான் அப்போது அவள் ஒரு தத்தியாக இருக்க வேண்டும் .. அவளை வச்சி சாய்க்க முடியாத அவனை ஒரேயடியாக சாய்த்து விடுவேன் என்று கூறிய தாய் நாச்சியாகத்தான் இருக்கும் ... 

ஏனென்றால் குழலி பிறப்பிலிருந்தே நற்குணசாலி... யாருக்கும் தீங்கு செய்ய நினையாது தீமை என்பதின் அர்த்தம் கூட தெரியாது , சிறு அணிலுக்கும் , முயலுக்கும் இரக்கம் பார்க்கும் அவள் எப்படி தன் வயிற்றில் பிறந்தால் என்பதே இன்று வரை நாச்சிக்கு புரியாத புதிர்தான்... தன் வீட்டில் யாருமே அப்படி ஒரு கேட்டகிரி கிடையாது.. ஆனால் இவள் மட்டும் புள்ளபூச்சியாய் இருக்கவும் ... எங்கே இவளை வைத்து தனக்கு எதிராக மகளை மாற்றி அவள் கையால் தோல்வி காண வைத்து விடுவானோ என்று அவளுக்கு ஊர் உலகம் மறுக்கப்பட்டது...

மறுபடி வந்த நாச்சி மீண்டும் பழைய வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.. ஆட்களை சேர்த்து இவர்கள் ஆட்களை கட்டி போட்டு அடிப்பது, போன வாரம் கலப்பு காதல் திருமணம் செய்த தம்பதியரை குடிசையோடு போட்டு எரித்து கொன்று விட, அதை கேள்வி கேட்டு போன மருதுவுக்கும் ,அவர்கள் ஊர் ஆட்களுக்கும் கை கலப்பாகி ... ஒருவன் மருதுவை வெட்டி விட , இவன் பதிலுக்கு வெட்ட என்று போலீஸ் கேஸ் ஆகி போனது ... 

ஆண் சாதி பெண் சாதி என்று இரண்டை தவிர வேறு இல்லை ..அத்தனை பேர் இரத்தமும் சிவப்புதான், அத்தனை பேர் கண்ணரும் உவரப்புதான் ...யாரோ தங்கள் சுய லாபத்திற்காக இரண்டகம் செய்து வைத்திருக்க.. அதை பிடித்து கால காலமாக தொங்கி கொண்டிருக்கும் ,இவர்கள் சாதி வெளியே என்னவென்று கூற? 

தாயாலேயேதான் குழலி, அந்த இருட்டு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்ததை அவள் அறியாள்.. நாச்சியார்தான் அவளுடைய அத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்பதையும் அவளால் அறிய முடியாமல் போனது... 

வைரத்தில் விளைந்த விழுதை பாம்பு என்று விலக்கி விட்டிவிட்டு.. பாம்பை விழுதென்று பற்றிக் கொண்டாள் குழலி ... பாம்பு விஷத்தை கக்காது போகுமோ??