மெய் பேசும் மித்தியமே-31

மெய் பேசும் மித்தியமே-31

மெய் பேசும் மித்தியமே-31

சூர்யாவால் ரோஜாவை சமாதானப்படுத்த முடியவில்லை.அவளால் பூஜா அடுத்து நம்மக்கிட்ட வர்றதுக்கு எந்த ஒரு வாய்ப்புமே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது திணறினாள்.

அவள் அழுவதைத் தாங்க முடியாது சூர்யா கோபத்தில் கத்தினான்.

“ஏன்டி அழற?இப்போ என்ன நடந்துட்டுன்னு அழற?என்னைக்கா இருந்தாலும் அவ நம்ம பூஜாதான்.அவளா புரிஞ்சிக்கிட்டு வருவா.என்ன கொஞ்சம் வருஷமாகும் அவ்வளவுதான்.இதுக்கு எதுக்கு அழுதுகிட்டிருக்க.நம்ம குழந்தை தூரமா அவங்க அம்மாவோடு இருக்கான்னு நினைச்சிக்க அவ்வளவுதான் விடு.நமக்குன்னு என்ன விதிச்சிருக்கோ அதை ஏத்துக்க பழகு”என்று சத்தம்போட்டான்.

அவனது கையைப்பிடித்தவள்”அதில்ல மச்சான் எனக்கு குழந்தையே பிறக்காதுன்னு நான் நினைச்சிட்டிருந்த நேரம் எனக்கு குழந்தையா வந்தவ அவ.அவதான் என் முதக்குழந்தை.அவள்மூலமாதான் அந்த தாய்மையை நான் உணர்ந்தேன்.இப்போ நான் கர்ப்பமாக இருக்கிறதுக்கு அதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்.அவ எனக்குப் பிறக்கலைன்னாலும் அவதான் என் முதல் குழந்தை.எனக்கு அவ வேணும் மச்சான்”என்று சத்தமாக உடைந்து அழுதாள்.

“பூஜாவை அவங்கக்கிட்ட இருந்து வாங்கிட்டு வாங்க மச்சான்”என்று கதறினாள்.

நிகிதா குழந்தையை எடுத்துட்டுப்போயிட்டாளே! என்று வேகமாக பூஜாவை பார்க்கும் ஆசையில் எழுந்து ஓடிவந்தாள்.

அவள் ஓடுவதைப் பார்த்து சூர்யா பயந்து அவளைப் பிடித்து நிறுத்த பின்னாடியே போனான்.அங்கே கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டான்.

ரோஜாவினை நோக்கி பூஜா காரிலிருந்து இறங்கி ஓடிவந்தாள்.இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பாசத்தை அந்த நொடியே வெளிப்படுத்தினர்.

ரோஜா தானிருக்கும் நிலையிலும் ஓடிவந்த பூஜாவைக் குனிந்துத் தூக்கியவள் பூஜாவை வாரியணைத்து முத்தமிட்டாள்.

பூஜா ரோஜாம்மா என்று ஓடிவந்ததைப் பார்த்த சூர்யாவுக்கு அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது.

ரோஜா அவளைத் தூக்கியதும் அவளது கன்னத்தில் முத்தமிட பூஜா பதிலும் அவளது முகமெங்கும் முத்தமிட்டாள்.

இருவரும் முத்தமிடுவதை நிகிதாவின் அம்மா சௌந்தரி பார்த்தவர் அவர்களிடம் போக காலெடுத்து வைத்தார்.

நிகிதா அவருடைய கையைப் பிடித்து போகவிடாது தடுத்தாள்.

“ஏன்டி தடுக்குற.கார்ல இருந்த பூஜா கீழிறங்கி ஓடுறா உன்னால பிடிக்க முடியல.இப்போ அந்த பட்டிக்காடு அவளைத் தூக்கிக் கொஞ்சிட்டிருக்கா நீ சும்மா பார்த்திட்டிருக்க.விடுடி நம்ம குழந்தையைத் தூக்க அவ யாரு?”

“அவதான் அவங்கப்பனோட பொண்டாட்டி. அவளுக்கு உரிமையிருக்கு”

“என்னடி உனக்கு பைத்தியம் கீத்தியம் பிடிச்சிட்டா என்ன?இப்படி உளறிட்டிருக்க?நம்ம பூஜாடி.நம்மக் கொண்டுபோகணுமே”

“நம்ம பூஜா இல்லம்மா. அவங்கப்பனை மாதிரியே பாசத்துக்காக அவகிட்ட ஓடிட்டுப் பாரேன்”

“அப்போ நம்ம பாசமா பார்க்கலைங்கிறியா நிக்கி?”

“அப்படியில்லமா நான்தான் அவளைப் பெத்தேன்.எனக்கு குழந்தை வேணும்.இந்தக் குழந்தையை வைச்சு வாழ்க்கை வேணும்னு திட்டம்போட்டு பெத்துக்கிட்டேன். ஆனாலும் அந்த வாழ்க்கை எனக்கு வரலையே.இந்த பட்டிக்காட்டுக்காரிக்கிட்ட ஏதோ மாயம் மந்திரமான அன்பு இருக்குப்போல. இவளைத்தான் என் கல்யாணத்துக்கு முன்னாடியே சூர்யா அத்தான் பார்த்து ஆசைப்பட்டிருக்காரு. ஆனா அந்தப்பொண்ணு செத்துப்போயிட்டுன்னு சொல்லிருக்காங்க. அதை அப்படியே விட்டுட்டாரு. ஆனா வேற எந்தப்பொண்ணையும் அவரு காதலிக்கலை.என்கொட வாழவும் இல்லை.அவளுக்கு மட்டும் சூர்யாபிரகாஷ் முழுசா போய் கிடைச்சிருக்காரு. நான் மாங்கு மாங்குன்னு எல்லாம் செய்துட்டு காத்திருந்தேன் எனக்குக் கிடைக்கலையே.நான் பெத்த மகளே என்னைவிடவும் அவக்கிட்ட ஒட்டுறா பாருங்க”

“இப்போ நீ என்னடி சொல்லவர்ற?”

“சூர்யா அத்தானோ அவரு மூலமா வந்த எதுவுமே என் வாழ்க்கையில நிக்காது நிலைக்காது.பதிணெட்டு வருஷம் கழிச்சும் பூஜா அவங்க அப்பாகிட்டதான் போவா.அதுமட்டும் எனக்கு இப்பவே உறுதியா தெரியுது.இந்தக் கல்யாணத்துல என்கிட்ட வந்த எதுவுமே நிலைக்காது.அது தெரிஞ்சும் ஆசைப்பட்டது என் தப்புத்தான்.அந்த சொந்தமே எனக்கு வேண்டாம்

பூஜா உட்பட எதுவுமே வேண்டாம்.மொத்தமா என் மனசளவில் சூர்யா அத்தான் பூஜா என்று எல்லோரையுமே விலக்கி வைக்கிறேன்.அதுதான் அடுத்து வர்ற என் வாழ்க்கைக்கும் மன நிம்மதிக்கும் நல்லது” 

“அப்போ அந்த சூர்யா முன்னாடி நீ தோத்துப்போய் உன் குழந்தையை அவனுக்குக் குடுத்திட்டு நீ சும்மா போகப்போறீயா?”

“ஏன்மா இப்படி கேட்கிற?முன்னாடியெல்லாம் பூஜாவை பார்க்க முடியாது.உனக்கு ஒரு வாழ்க்கை வேணும்னா அவளை விட்டுட்டு வான்னு சொன்ன.அதனால்தான் பூஜாவை குடுத்தேன்.அவரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்காருன்னு தெரிஞ்சதும் நீயும்தான பூஜாவைத் தூக்கிட்டு வர வந்த.இப்போ எல்லாமே தலைகீழ பேசுற?

“அவன் உன்னைவிட்டுட்டு இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பூஜாவையும் சந்தோசமா பார்த்துக்கிறான்.அதுதான் அப்படி அவன் சந்தோசமா வாழவேண்டாம்னு பூஜாவைத் தூக்கிட்டு வந்தோம்.இப்போ அவன் அழறான்ல அதுதானே நமக்கு வேணும் அழட்டுமே.எதுக்கு பூஜாவை திரும்பி இறக்கிவிட்ட?”

“நான் அழக்கூடாதுன்னுதான். அவங்க மேல எந்த கருணையும் இல்லை.அவ்வளவு நல்லவளாம் நான் இல்லை.எனக்கும் கோபம் வரும்.சூர்யாத்தானை பிடிச்சிருந்துச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனால் காதலும் பிடித்தமும் இரண்டுபக்கமும் இருக்கணும்னு புரிஞ்சிது.என் முன்னாடியே அந்தப்பொண்ணுக்கிட்ட எவ்வளவு காதலோடு இருக்காங்க.அதைவிட அவளோடு வாழ்ந்து அவ கர்ப்பமா இருக்காம்மா.நான்தான் வாழாத வாழ்க்கையையும் வாழமுடியாத வாழ்க்கையையும் பிடிச்சு வைச்சு என்னை நானே ஏமாத்திட்டிருந்திருக்கேன்.என்மூலமா வந்த குழந்தை மேல இருக்கபாசம்கூட என்மேல வரலையே.அது புரியறதுக்கு கிட்டதட்ட ஆறு வருஷமாகிருக்கு”என்றவளுக்கு தன்னை அறியாது கண்ணீர் வந்தது.

அதைப்பார்த்த சௌந்தரிக்கு முதன்முறையாக வேதனையை வந்தது.தனது மகள் எந்த சூழ்நிலையிலும் கலங்கிப் பார்த்ததேயில்லை.இப்போது கண்ணீர் வந்ததும் அவருக்கு என்ன சொல்ல என்று தெரியாது திணறினான்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் கண்டுக்காது அது சமாளிப்பவளையே இந்த கல்யாண வாழ்க்கை இப்படி திணறவைச்சிட்டே என்று ஆதங்கம் வந்தது.

“நீ எதுக்குடி அழற. அவனைத்தானே நீ அழவைச்சிருக்கணும்?”

“அத்தானை எதுக்குமா அழ வைக்கணும்.அவருதான் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு ஆயிரமட்டம் சொன்னாரே.நம்மதானே பிடிவாதமா மாமாக்கிட்ட சொல்லி நடத்திக்கிட்டோம்.அதுக்கான வினையா இதை நான் எடுத்துக்குறேன்”

“இப்போ என்ன பண்ண போற?குழந்தையையும் அவன்கிட்டக் குடுத்துட்டு நீ என்ன பண்ணப்போற?”

“குழந்தையை வைச்சு நான் என்ன பண்ணுவேன்?”

“நிக்கிமா?”

“அவ்வளவுதான்மா வாழ்க்கை.பூஜாவை நான் விரும்பி ஒன்னும் பெத்துக்கலையே.அது எனக்கு தோள்மேல இருக்கும் பாரம்தான்.தந்தவன்கிட்டயே இறக்கிக் குடுத்துட்டேன்.அவ்வளவுதான் போகலாம் வாம்மா”என்று காரில் ஏறினாள்.

சௌந்தரிதான் மனசு கேட்காமல் வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரோஜாவின் கழுத்தை இறுக்கிக்கட்டிக்கொண்டு பூஜா அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்.ரோஜா அந்த பெரிய வயிற்றையும் வைத்துக்கொண்டு குனிந்து பூஜாவிடம் முத்தம் வாங்கிக்கொண்டிருந்தாள்.

அவர்களுக்குள் இருக்கும் அந்த பிணைப்பினைப் பார்த்து மூக்குல மூச்சுகாத்தை புஸ்ஸு புஸ்ஸுன்னு அடிச்சவரு நிகிதாவிடம்”ஏன்டி அப்படி என்னடி அந்த பட்டிக்காட்டுக்கிட்ட இருக்குன்னு இப்படி பாசத்துல முத்தம் கொடுக்குறா?இப்படிக் கொஞ்சுறா?என்னடி நடக்குது இங்க?”என்று ஆச்சர்யபட்டார்.

“அதுதான் எனக்குத் தெரியலம்மா?பெத்தவ நானு மூணு வருஷம் காட்டின அன்பைவிடவும் மூணே மாசத்துல பாசத்தை ஊட்டியிருக்காம்மா.என்கிட்ட வந்திருந்த இந்த ஆறுமாசமும் எதுக்கெடுத்தாலும் ரோஜாம்மா ரோஜாம்மான்னுதான்மா சொல்லுவா?எனக்கே பொறாமையாகிடுச்சு.இப்போவரைக்கும் பொறாமையாகுது.சூர்யா அத்தான் அதைவிடமேல மகளை அப்படிப் பார்த்திருக்காரு.நான் எங்கம்மா தப்பு பண்ணினேன்?ஒன்னுமே புரியலை?”

“இவா கிடக்குறாடி உனக்கு என் தம்பி மகனைவிடவும் நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கட்டிக்குடுக்கிறேன்டி.உன் வாழ்க்கையும் நல்லாயிருக்கும்டி.உன் பொண்ணு உனக்கு வேண்டாம்னு அவங்ககிட்ட விட்டுட்டல்ல இனி நமக்கு எதுவும் வேண்டாம்.வா நம்ம போகலாம்.இதைப் பார்த்துப் பார்த்து அழாத” என்று மகளுக்காக வருத்தப்பட்டு ஆறுதல் சொன்னார்.

அடுத்த நொடியே நிகிதா இறங்கி நேராக சூர்யா ரோஜாவிடம் போய் நின்றாள்.

ரோஜா அவளை நிமிர்ந்துப்பார்த்தாள்.அந்தக் கண்களில் பூஜாவை எடுத்துட்டுப் போயிடுவாளோ? என்ற கலக்கம் வந்து வேகமாக அவளைத் தூக்கி தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

சூர்யா ரோஜாவையும் பூஜாவையும் சேர்த்து தன் நெஞ்சோடு பிடித்து வைத்துக்கொண்டான்.அவனது கண்களில் நிகிதா மீது பெருங்கோபம் தெரிந்தது.

“உன்னால்தான்டி நான் இத்தனை வருஷமும் கஷ்டப்பட்டுட்டிருக்கேன்.இனியாவது என்னை நிம்மதியா இருக்கவிடும்மா தாயே.தயவு செய்து என் கண்ணுக்கு முன்னாடி வராத.உங்கம்மாவுக்குத்தான் அறிவு கிடையாதுன்னா படிச்ச நீயே பெரும் முட்டாளா இருக்க.எங்கப்பா உங்கம்மாவுக்குத் தம்பியானாலும் எந்தளவுக்கு உரிமை எடுக்கணும்னு தெரியாத தற்குறி முண்டம்டி உங்கம்மா.எங்கம்மாவையும் வாழவிடல என்னையும் வாழவிடல.இப்போவரைக்கும் எங்கம்மாவோட வாழ்க்கையில மூக்கை நுழைக்கிற இராட்சஷி உங்கம்மாதான்.அவளை மாதிரி ஒருத்தி பெத்த உன்னை எப்படி எனக்குப் பிடிக்கும்னு நினைச்ச?”என்று இத்தனை நாள் கோபத்தையும் மொத்தமாக வார்த்தை எனும் முள்ளாக கொட்டினான்.

அதைக்கேட்டவள் என்ன பதில் சொல்ல என்று தெரியாது முழித்தாள்.

“ஒரு ஹஸ்பண்ட் வொய்ப்க்குள்ள எவ்வளவோ ரகசியங்கள் இருக்கும்.எங்கம்மாகிட்ட கேளு ஒரு மயிரும் இருக்காது.அவங்க படுக்கை அறைக்குள்ளவரைக்கும் உங்கம்மா மூக்கை நுழைச்சிட்டிருந்தா.எங்கம்மா அழுத அழுகை எல்லாம் எனக்கும் எங்கக்காவுக்கும் தெரியும்.ஆனாலும் எங்க அக்காவை உங்க வீட்டுக்கு மருமகளா கொண்டுப்போயிட்டா.அவ்வளவையும் வாழ்க்கையில பார்த்தவன் நான்.எனக்கு எப்படிடி உன் மேல ஆசைவரும்.உன்கூட வாழறதுக்கான எண்ணம் வரும்?உங்கம்மா மாதிரி நீயும் ஒரு இராட்சஷி,பிசாசு.யாரையும் நிம்மதியாக வாழவிடாத கேடுகெட்ட ஜென்மம்.இதுக்குமேலயும் என் வாழ்க்கையில் உன் மூஞ்சைப் பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன்.ச்சை”என்று மொத்த மனபாரத்தையும் கொட்டிவிட்டான்.

நம்ம இவனுக்கு பூஜாவை குடுத்து பெரியாளாகளாம்னு நினைச்சனே. அவனை ஏளனமா பேச வந்தா இவன் நம்மளை நாக்கப் பிடுங்குற மாதிரி கேட்கிறானே? என்று யோசித்தாலும் அவன் பேசினது எல்லாமே உண்மைதானே!அதனால் அமைதியாக நின்றிருந்தாள்.

அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சௌந்தரிதான் ஓடிவந்து ஏதோ பேச வந்தார்.

அவரைப்பார்த்து கையை நீட்டி எச்சரித்தவன் “உங்களை எங்கப்பாவோட அக்கான்னு மட்டும்தான் விட்டு வைச்சிருக்கேன்.இல்லைன்னா நடு ரோட்டுல செருப்பால அடிச்சி விரட்டிருப்பேன்.இதுக்குமேலேதாவது பேசுனீங்க காரை விட்டு ஏத்தி கொன்றுவேன்.ஜாக்கிரதை என்று அவ்வளவு கோபத்தில் திட்டினான்.

அரண்டுவிட்டார்.லலிதா அங்கே வந்திருந்தார்.மகன் பேசியதைக் கேட்டு கண்கலங்கிவிட்டார்.இப்போது தைரியமாக வந்து சௌந்தரியின் முன் வந்து நின்றார்.

“என்னடி உன் பிள்ளைங்க மூலமா என்னை பழிவாங்குறியா?”

“ஆமாடி இப்போ என்ன செய்வ?”என்று எதிர்த்து நின்றார்.

“என் தம்பிக்கிட்ட சொல்றேன் இருடி”

“உன் தம்பிக்கு நான் விவாகரத்து நோட்டிஸ் அனுப்புவேன்டி.இதுவரைக்கும் சகிச்சிக்கிட்டது போதும்னு முடிவு பண்ணிட்டேன்.யாரும் எனக்கு வேண்டாம்”என்று தைரியமாக நின்றார்.இதற்குமேல் இனி இங்க நம்ம ராஜ்ஜியம் நடக்காது என்று தெரிந்து வேகமாகக் காரில் போய் ஏறிக்கொண்டார்.

அதைப்பார்த்த லலிதா நிகிதாவிடம் தயவு செய்து இனி என் மகன் விசயத்தில் தலையிடாது.வராது நீங்க செத்துப்போயிட்டாக்கூட சந்தோசம்தான் என்றதும் ஆடிப்போய்விட்டாள்.

நம்ம செத்தாதான் இவங்க வாழமுடியுங்கிறளவுக்கா நம்ம பிரச்சனையை கொடுக்குறோம்னு ஒருமாதிரி யோசித்தவள் பூஜாவைத் தூக்க கை நீட்டினாள்.

அவ்வளவுதான் பூஜாபயந்து ரோஜாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இதற்குமேலும் அங்க நிற்க தனக்குத் தகுதியில்லை என்று நினைத்தவள் பூஜாவை பார்த்துக்கங்க அத்தான் என்றவள் வேகமாக ஓடிப்பபய் காரில் ஏறிக்கொண்டாள்.

சூர்யாவுக்கு வருத்தம்தான் ஆனாலும் இதைச் செய்தால்தான் நான் நிம்மதியாக இருக்கமுடியும்.எத்தனை நாள்தான் தியாகியா இருக்கமுடியும் என்று சுயநலமாக தன் மனைவி மகள் என்று பாதுகாத்து அவனது கைவளைவில் அணைத்துக்கொண்டான்.

நிகிதாவைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.அவளும் இவனை நான் வெறுக்கிறேன்.இனி இந்தக்குடும்பத்தின் ஞாபகம்கூட எனக்கு வரக்கூடாது என்று கண்களை மூடி தன்னைத்தானே திடப்படுத்திக்கொண்டாள்.

ரோஜா மட்டும்தான் போகும் அவளை நன்றியோடு பார்த்தாள்!பெற்றவள் பிள்ளையை விட்டுக்கொடுப்பது என்பது சுலபமான விசயமில்லை என்று கர்ப்பமாக இருக்கும் அவளுக்குத் தெரியுமே!

தான் சுமக்காது கிடைத்த வரத்தையும், தான் சுமக்கின்ற வரத்தையும் தாங்கிக்கொண்டிருந்தவள் அப்படியே நிம்மதியாக தனது கணவனின் தோளில் தலை சாய்ந்தாள்!

சூர்யா அவளது தலையை ஆதுரமாகத் தாங்கிக்கொண்டான்!