மெய் பேசும் மித்தியமே-29

மெய் பேசும் மித்தியமே-29

மெய் பேசும் மித்தியமே-29

சூர்யா தனது வாழ்க்கையில் நடந்ததைச் சொன்னவன்”எனக்கான வாழ்க்கை இங்கதான் இருக்குன்னு கடவுள் வைச்சிருக்காரு.அதனால்தான் இவ்வளவு பிரச்சனைக்குப் பின்னும் இங்க வந்தேன்.ரோஜாவைப் பார்த்தேன்.என் வாழ்க்கையை நான் வாழ்ந்தேன்.இதுக்குமேல என் வாழ்கையை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது.விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்.என் குழந்தையை மீட்கத்தான் முயற்சிப்பண்ணுவேன்”

ரோஜா அதைக்கேட்டதும் அழுதாள்”எனக்கு பூஜா வேணும் எந்த சூழ்நிலையிலும் அவளை என்னால விட்டுக்கொடுக்கமுடியாது.அவளைக் கூட்டிட்டுவாங்க”என்று அழுதாள்.

அதைப்பார்த்த குணசேகரன் வந்து சூர்யாவின் கையைப்பிடித்து” நாங்களும் உங்கக்கூட வர்றோம்.நீங்க சந்தோசமா வாழ்ந்து குழந்தையைப் பெத்துக்கிட்டு வந்து என் தங்கச்சியை ஏமாத்திட்டீங்கன்னு நினைச்சேன்.அதுதான் கோபப்பட்டோம்.நீங்க கவலைப்படாதிங்க. உங்க மகள் உங்கக்கிட்ட திரும்ப வந்திடுவா.பட்டுமாவையும் வேணும்னா கூட்டிட்டுப்போங்க”என்று சாந்தமாகப் பேசினான்.

சூர்யா ரோஜாவின் அருகில் வந்து உட்கார்ந்தான்.அவளது கையைப் பிடித்துக்கொண்டான்.

“என்மேல உனக்கு நம்பிக்கை இருக்குல.நான் மட்டும் போயிட்டு வர்றேன்.இப்போ நீ இருக்கிற நிலமையில் அவ்வளவு தூரம் வரவேண்டாம்.அம்மா இப்படி போய் எங்க அக்காகிட்ட சொல்லுவாங்கன்னு நான் எதிர்பார்க்கல.நிகிதா தேடிவருவான்னு எதிர்பார்த்தேன்.நான் அவக்கூட வாழாமல் இருந்தாலும் வேறொருத்திக்கூட வாழ்ந்திடக்கூடாது அதுதான் அவளுக்கு வேணும்.சரி எதுவந்தாலும் சமாளிச்சித்தானே ஆகணும்”

“பூஜா உங்கப்பிள்ளைன்னு நிருப்பிச்சாலும், கோர்ட்ல உங்கக்கிட்ட தரமாட்டாங்களா?”என்று பாவமாகக் கேட்டாள்.

அவளருகில் உட்கார்ந்தவன் “உன் அன்பு கிடைக்கவும் உன்னை மாதிரி ஒரு அம்மா கிடைக்கவும் பூஜாவுக்கு கடவுள் வாய்ப்பு வைச்சிருந்தா நம்மளோடு இருப்பா.இல்லையா அவளோட அம்மாக்கூட இருப்பா அவ்வளவுதான்.அதுக்காக பூஜா நம்மைவிட்டு பிரிஞ்சிடுவான்னு இல்லை. நம் அன்பு உண்மையாக இருக்கும்போது தேடிவருவா.இப்போ இல்லன்னாலும் பின்னாடி வளர்ந்தப்பிறகு தேடிவருவா.அதை நிவர்த்திப் பண்ணதான் கடவுள் நமக்கு குழந்தைவரம் தந்திருக்காரோ என்னவோ”என்று அவளைச் சமாதானப்படுத்தச் சொன்னான்.

அப்போதுதான் மல்லிகா அதைக்கேட்டு “பட்டுமா”என்று அவளருகில் ஓடிவந்தார்.

அவளுமே அம்மாவைப் பார்த்து அழுதாள்.அவர் அருகில் வந்ததும் அவரது இடுப்போடுக் கையைப்போட்டுப் பிடித்து வயிற்மில் முகத்தை வைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

உண்மையில் எல்லோருக்குமே கண்கலங்கிவிட்டது.இதற்காகத்தானே இத்தனை வேண்டுதல்கள் வைத்தனர்.

அவளைக் கல்யாணம் பண்ணிக்க வந்தவங்க கேட்டக்கேள்விக் கணைகள் எல்லாம் கொடுத்த வலிகள் எத்தனை எத்தனை.

அத்தனையையும் பொய்யென்றாக்கி மகள் கர்ப்பமாகியிருக்கிறாள்.அதைக்கொண்டாடுவதைவிடவும் மனம் அப்படியே இளகி அழுகைதான் வருது.

எங்கே மகளோட வாழ்க்கை பட்டுப்போயிடுமோ அப்படியே தனிமரமாகவே நின்றிருவாளோ என்றிருந்தவர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்ததுபோன்று குளுமையான செய்தியாக சூர்யா சொல்லியது மகிழ்ச்சியை உண்டாக்கிருந்தது.

அதில் கருப்பசாமி நெகிழ்ந்து சூர்யாவின் கையைப்பிடித்துக்கொண்டார்.

“உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியல மருமகனே.நான் ஏதோ நீங்க என் மகளை விரும்பிக் கட்டிக்க கேட்கிறீங்கன்னுதான் கோவில்ல வைச்சுத் தாலிக்கட்டச் சொன்னேன்.ஆனால் நீங்க என் மகளுக்கு மறு வாழ்க்கையையே கொடுத்திருக்கீங்க.ரொம்ப நன்றி”என்று கண்கலங்கினார்.

அச்சச்சோ!அவசரத்துல உண்மையைச் சொல்லிட்டாரே.

குணசேகரனும் கருணாகரனும்”யப்பா என்ன சொல்லுதீங்க?நீங்கதான் டாக்டரை நம்ம பட்டுமா கழுத்துல தாலிக்கட்டச் சொன்னதா?ஏன்ப்பா இப்படி சொன்னீங்க?நம்ம பட்டுமாவுக்கு என்ன குறைச்சல்னு இப்படி கோவில்ல வைச்சுத் தாலிக்கட்ட திட்டம்போட்டீங்க?”

“இல்லைன்னா நீங்க தாலி எடுத்து தந்து கட்டச்சொல்லிருப்பீங்களா மச்சான்ஸ்?”என்று கோபத்தில் கேட்டான்.

“ஏன் ஏன் உனக்கு எதுக்கு என் தங்கச்சியைக் கட்டித்தரணும்?இப்போ பாரு உன் மகள் உன் முதல் பொண்டாட்டின்னு பிரச்சனை வந்து என் தங்கச்சியை அழவைச்சிட்டிருக்க.எப்படின்னாலும் இரண்டாந்தாரம்தானே அதுல எங்களுக்கு வருத்தம்தான்”

“நீங்க வருத்தப்பட்டுக்கங்க மச்சான்ஸ் நான் என் பொண்டாட்டியோட வாழ்ந்துக்கிறேன்.எங்க வாழ்க்கையில இந்த வருத்தத்தைக்கொண்டுட்டு குறுக்கால வராதிங்க”என்றுவிட்டு இப்போது ரோஜாவைப் பார்த்தான்.

அவளோ காதலோடு தனது கணவனைப் பார்த்தாள்.

“க்கும் இதுக்கு நம்ம பேசாமலயே இருந்திருக்கலாம்” என்று கருணாகரன் கோபப்பட்டான்.

உடனே ரோஜாவின் அருகில் வந்து உட்கார்ந்த சூர்யா அவளது கையைப்பிடித்துத் தன் நெஞ்சில் வைத்தவன்”நான் இப்போ சென்னைக்குப்போறேன்.திரும்ப அவள்மேல கேஸ் போடுறேன் நம்ம கேஸ்ல ஜெயிக்கிறளவுக்கு பாயிண்ட்ஸ் கிடையாதுதான்,பெண் குழந்தை வேறையா.ஆனாலும் நம்ம செய்யக்கூடியாதைச் செய்யணும்ல போயிட்டு இரண்டுமூணு நாள்ல திரும்பி வந்திடுறேன்”என்று அவளை சமாதானப்படுத்தினான்.

“அதைக்கேட்ட கருணாகரன் அப்படியெல்லாம் உன்னை நம்பி தனியா விமுடியாது.நீ போயிட்டு உன் மகளுக்காக அந்தப்பொண்ணுக்கூட போயிட்டன்னா என் தங்கச்சி வாழ்க்கைக்கு யாரு பதில் சொல்லுறது?”

அதைக்கேட்டதும் கோபத்தில் எழுந்தவனின் கையைப்பிடித்து இழுத்த ரோஜா தன் பக்கத்தில் உட்கார வைத்துவிட்டாள்.

“எனக்கு உங்கமேல நம்பிக்கை இருக்குங்க மச்சான்.நீங்க எந்த நாட்டுக்குப்போனாலும் என்னைத்தவிற எவளையும் திரும்பிப்பார்க்கமாட்டீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.நீங்க போயிட்டு பூஜாவைக் கூட்டிட்டு வந்திடுங்க”என்று அழுதாள்.

அந்த நம்பிக்கை போதுமே.எதை வேண்டுமானாலும் எதிர்த்து நிற்பானே!

“நான் கிளம்புறேன்டி.உங்கண்ணனுங்களை வேணும்னா என்கூட வரச்சொல்லு.அவங்க என் வீட்டையும் என் ஊரையும் பார்க்கட்டும்.நிகிதா குடும்பமும் அப்பா வீட்டுலதான் இருக்காங்களாம்.நான் அங்க போகமாட்டேன்.நான் எனக்காக வாங்கியிருக்க வீட்டுக்குத்தான் போவேன்.அங்க யாரும் உங்கண்ணனுங்களைக் கேள்விக் கேட்கமாட்டாங்க”

“எவன் கேள்விக் கேட்டாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.நான் என் தங்கச்சிக்காக வருவேன்.உன்னை கையோடக் கூட்டிட்டுத்தான் இங்க வருவேன்.வா கார்லயே போகலாம்”என்று கருணாகரன் கிளம்பினான்.

ரோஜா அதைக்கேட்டு “அண்ணே”என்று அழைத்து தனது கணவனுக்காக பேசப்போனாள்.

“ஆனால் சூர்யா அதைத்தடுத்து ரோஜா விடு.உங்கண்ணன் வரட்டும்.எனக்கும் கொஞ்சம் மாரல் சப்போர்ட்டா இருக்கும்.நான் பார்த்துக்கிறேன்”என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அவளுக்கும் சூர்யா சொல்லுவது புரிந்ததால் சரியென்று தலையாட்டி சம்மதம் சொன்னாள்.

உடனே சூர்யா கிளம்ப அவனோடு கருணாகரனும் கிளம்பினான்.ரோஜாவுக்கு மனது திக்திக்கென்றிருந்தது.

அடுத்த என்னவாகும் என்ற பயம் இருந்தது.எதுவந்தாலும் எநிர்கொள்ளணும் என்றுதான் நினைத்தாள்.ஆனால் பூஜாவை நினைக்கும்போது அவளால் பதற்றப்படாமல் இருக்கமுடியவில்லை.இங்க வந்து இத்தனை நாளும் அவளோடு ஒட்டிக்கொண்டே இருந்த பூஜா இல்லாமல் அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.

“யம்மா எனக்குப் பயமா இருக்குமா?பூஜா பாவம்மா.என் மாமியாருக்கிட்டக்கூட ஒட்டாது.எப்போதும் தூக்கத்துலக்கூட என்கிட்ட ஒட்டிக்கிட்டே இருப்பாம்மா.எப்படி அங்க இருக்காளோ?”

“உன்னைவிட அதிகபாசம் பெத்தவளுக்கு இருக்கும் பட்டுமா.பெத்தவளைவிட மத்தவங்க பாசம் வைச்சிடப்போறாங்க.அவங்கம்மா இல்லாத குறையா இருந்திருக்கும் உன்னைப் பார்த்ததும் ஒட்டிக்கிட்டா.அவங்கம்மாக்கிட்ட இருக்கும்போது உன்னை எப்படித் தேடுவா?விடு பட்டுமா.இப்போ நீயும் மாசமா இருக்க.ரொம்ப யோசிக்காத”என்று அவளிடம் பேசி புரியவைத்தார்.

அவளுக்கு மனசே இல்லை.ஆனாலும் தன்னையும் பார்த்துக்கொள்ளணுமே என்று சாப்பிட்டாள்.

சூர்யா எப்படியாவது பூஜாவோடு வருவான் என்று காத்திருந்தாள்.

இங்க கார்ல சென்னையை நோக்கிப் போய்கொண்டிருந்த கருணாகரன் தன்பக்கம் சாய்ந்துப் படுத்துத் தூங்கிட்டு வரும் சூர்யாவை முறைத்துப்பார்த்தான்.

அவன் இரண்டுமுறை திரும்பிப் பார்த்துவிட்டு மூணாவதுமுறை காரை நிறுத்திவிட்டான்.

அதைப்பார்த்துட்டு”என்ன மச்சான் காரை நிறுத்திட்டீங்க?அப்படியே போகவேண்டியதுதானே?”என்று கேட்டான்.

“நான் என்ன உனக்கு டிரைவரா?தூங்கிட்டு வர்ற?”என்று எரிச்சலில் கேட்டான்.

“டிரைவர் இல்ல.என் மச்சான்ல.எப்படியும் எங்கேயும் கொண்டுப்போய் இடிக்கமாட்டங்கிற தைரியம்தான் மச்சான்.மச்சான் துணையிருந்து மலையே ஏறாலாமாம்.இந்தா இருக்க சென்னைக்குப் போயிடயாட்டோமா?”என்று சொன்னான்.

அதைக்கேட்டதும் கருணாகரனின் கோபம் அப்படியே பொங்கும் பாலில் போட்ட மிக்சர் மாதிரி அடங்கிப்போச்சுது.உடனே காரை எடுத்தவன் எதுவும் பேசாது போய்கொண்டே இருந்தான்.

அதன்பின் அவர்கள் வழியில் சாப்பிடுவதற்காகத்தான் நிறுத்தினர்.

சூர்யா எதையுமே ஆர்டர் பண்ணலை.சும்மா வெறுமனே பார்த்திட்டிருந்தான்.

அவனுக்கும் சேர்த்து கருணாகரன் ஆர்டர் செய்துவிட்டு”எதுன்னாலும் போராடித்தானே பார்க்கணும்.போரடுறதுக்கு தெம்பு வேணும்ல மாப்ளே சாப்பிடுங்க.நம்மளால என்ன செய்யமுடியுமோ அதை செய்வோம் அப்புறம் எதுவேணும்னாலும் பார்த்துக்கலாம்”என்று சாப்பிடவைத்தான்.

சில நேரங்களில் மனதாலும் உடலாலும் தளர்ந்துப்போகும்போது இப்படியான சில உறவுகள் தாங்கிப்பிடிக்கும்போது நமக்கு இன்னும் போராட பலம் கிடைக்கும்.

சூர்யாவும் கருணாகரனும் சென்னை வந்து சூர்யாவின் வீட்டைப் பார்த்ததுமே அப்படியே நின்றுவிட்டான்.

“உள்ள வா மச்சான்.இதுதான் நானே எனக்காக வாங்கின வீடு.இனி ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு சென்னை வரலாம்னு பார்க்கேன்.இங்க கார்டியாலஜிஸ்டா இருந்தேன்.மகளுக்காகத்தான் பேசி மாறுதல் வேணும்னு சின்ன கிராமத்துக்கு யாரும் தெரியாத இடத்துக்கு வந்தேன்.அதுக்கப்புறம் நடந்ததுதான் உனக்குத் தெரியுமே”என்றவாறே உள்ளே அழைத்துச்சென்றான்.

கருணாகரனுக்கு இப்போதான் தங்கச்சி புருஷன்மேல கொஞ்சமாச்சும் மரியாதை வந்தது.அதனால் ஒன்னுமே சொல்லாமல் அவன்பின்னாடியே போனான்.

உள்ள போனதும் “நீங்க இந்த ரூம்ல தங்கிங்க மச்சான்.குளிச்சிட்டு வாங்க சாப்பிட்டு உடனே எங்கம்மா வீட்டுக்கு போகலாம்.அங்கதான் மொத்ணக்குடும்பமும் இருப்பாங்க.எங்கப்பவைப் பொறுத்தவரைக்கும் எங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.ஆனால் அவங்க அக்கா குடும்பத்துக்கு ஒரு பிரச்சனையும் வந்திடக்கூடாதுன்னு நினைக்கிற பாசமலர்”என்று சொன்னவனின் குரலில் அத்தனை வேதனை இருந்தது.

ஒரு அப்பாவா கருப்பசாமி செய்ததையும் தனது தங்கை வாழ்க்கைக்காக அவர் இன்றளவும் படும்பாட்டையும் நினைத்துப் பூரித்துப்போனான் கருணாகரன்.நமக்குக் கிடைச்சமாதிரி அப்பா மாப்ளைக்கும் கிடைச்சிருந்தா இப்படிக் கஷ்டப்படவேண்டாம்ல என்று யோசித்தான்.

சூர்யா அப்பா நல்லமாதிரி இருந்தா உன் தங்கச்சியை தேடிவந்து கட்டியிருப்பான் என்பது சந்தேகமே கருணா.இந்த ஜென்மத்துல சூர்யவுடைய அப்பா இப்படித்தான்.சில ஜென்மங்களையெல்லாம் மாத்தமுடியாது.

இருவரும் உடனே கிளம்பி சூர்யாவின் வீட்டுக்குப்போனார்கள்.அந்த வீட்டைப்பார்த்த கருணாகரன் என்னடா இவ்வளவு பெரிய வீடு ஒரு பையனுக்காக கட்டி வைச்சிருக்காங்க.பணம் இருக்குன்னு பகட்டுக் காட்டியிருக்கானுங்களே.இந்த வீட்டைக்கட்டினதுக்குப் பதிலா பாதி பணத்தை நிலமாவோ தோப்பாவோ வாங்கிப்போட்டிருந்தா வருமானமாவது வந்திட்டிருக்கும்.பணத்தோட அருமை தெரியாத மனுஷங்க என்றவாறே சூர்யாவோடு உள்ளே போனான்.

சூர்யா உள்ளே போகவும் அவனைப் பார்த்த லலிதா “சூர்யா”என்று பக்கத்தில் வந்தார்.

“கலக்ட்ரே அங்கயே அப்படியே தள்ளி நில்லுங்க.நீங்க செய்தவரைக்கும்போதும்.என்னையும் என் மகளையும் பிரிச்சது போதும்.நான் பூஜாவைக் கூட்டிட்டுப்போக வந்திருக்கேன்.நிகிதா உள்ழே இருந்தா என் மகளை என்கிட்ட தந்துட்டுப்போகச்சொல்லுங்க.இல்லையா நான் கேஸ்போடுவேன்”என்று சத்தம்போட்டான்.

சூர்யாவின் சத்தம்கேட்டு மேலிருந்து கீழ வந்த நிகிதா”என்னத்தான் நல்லாயிருக்கீங்களா?உங்க இரண்டாவது மனைவி சுகமா இருக்காளா?”

அதைக்கேட்டதும் சூர்யா “ரொம்ப நல்லாயிருக்கேன் என் அத்தை மகளே.உன்னாலயும் உன் தாய்மாமனாலயும் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கேன்.அப்புறம் நீ எப்படி இருக்க.என் மகளை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு வந்துட்டன்னு சந்தோசமா இருப்பியே?”என்று நக்கலாகக்கேட்டான்.

“அவ என் மகள்.நான் நீதான்னு டோனர்னு சொன்னதுனாலதான் உன் மகள்னு உனக்குத் தெரியவந்துச்சு.இல்லைன்னா அது வெளியத்தெரியாமலயே போயிருக்கும்”

“அதுசரி உண்மையிலயே டோனார் நான்தானா இல்லை நீ வேற யாருக்கூடவாவது இருந்து கர்ப்பமானதும் என் பேரை சொல்லிட்டியா?இதை வேணும்னா செக் பண்ணிடுவோமா என் ஆசை அத்தை மகளே?”என்று அவளுக்கு பதிலடிக்கொடுத்தான்.

அவள் சூர்யா இப்படி பேசுவான் என்று எதிர்பார்க்காததால் அதில் ஒரு நொடி ஒருமாதிரி அதிர்ச்சியில் நின்றிருந்தாள்.

அதன்பின் சுதாரித்து”ஏன் டீ.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கணுமாத்தான்?”

“நீ உண்மையிலயே அப்படித்தான் கர்ப்பமாகிருந்தாலும் எனக்கு அதைப்பத்திக் கவலையில்லை.பூஜா என் மகள்னு மனசுளவுல நானும் என் பொண்டாட்டியும் உணர்ந்துட்டோம்.அதனால்தான் அவளைத் திருப்பிகூட்டிட்டுப்போக வந்திருக்கேன்”

“அப்படியெல்லாம் தரமுடியாது.ஏற்கனவே நமக்கு டிவோர்ஸாகி அதுல என்ன தீர்ப்புக் கொடுத்தாங்கன்னு தெரிஞ்சும் குழந்தையை எடுத்துட்டு எனக்கு காண்பிக்காமல் ஒளிஞ்சிருந்திருக்கீங்க.அதுக்கான கேஸ் போட்டுத்தான் பூஜாவைத் தூக்கிட்டு வந்ததே.இனி அவளை உங்கக்கிட்ட தரமாட்டேன்.நாங்க இன்னைக்கு ஈவ்னிங் அமெரிக்கா போறோம்.தயவு செய்து பூஜா வேணும்னு என்கிட்ட வராதிங்க”

“வந்தா என்ன செய்வ?”

“கேஸ் குடுத்து உள்ள தள்ளுவேன்”

“அதைச்செய்” என்று அவளைத் தள்ளிவிட்டு உள்ளே போனானன்.கருணாகரனோ நிகிதாவை முறைத்துப்பார்த்தான்.அவனுக்கு வந்தக் கோபத்துல அவளை அடிக்கத்தான் தோணுச்சு.ஆனாலும் தன்னை அடக்கிக்கொண்டு சூர்யாவுக்காக சும்மா இருந்தான்.

சூர்யா உள்ளே போய் தூங்கும் பூஜாவைத் தூக்குவதற்கு போனான்.

அதற்குள் ஒரு போலீஸ்காரர் வந்து “சார் வெளிய போங்க.குழந்தைக்கு நான் பாதுகப்பு கொடுத்திட்டிருக்கேன்.மேடம் உங்கமேல கேஸ் குடுத்திருக்காங்க,நீங்க வக்கிலோடு வாங்க.இல்லைன்னா கோர்ட்ல பார்த்துக்காங்க” என்று சூர்யாவை வெளியே தள்ளினார்.

அவனால் ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிந்ததும் தவித்துப்போனான்.

அவனால் இப்போதைக்கு பூஜாவை பார்க்கவும் முடியாது அவளை மீட்கவும் முடியாது.இனி எல்லாமே கோர்ட்லதான் பார்த்துக்கணும் என்றதும் வேதனையோடு திரும்பினான்.

மகளை இனி பார்க்கமுடியாது என்ற வேதனையில் வெளியே வந்தவனை கருணாகரன்தான் தாங்கிக்கொண்டான்!