மெய் பேசும் மித்தியமே-32

மெய் பேசும் மித்தியமே-32
சூர்யா நெஞ்சில் சாய்ந்திருந்த ரோஜா தனது மடியில் தலைவைத்துப் படுத்திருக்கும் பூஜாவின் தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தாள்.
“எப்படிங்க அவங்க பூஜாவை விட்டுக்கொடுத்துட்டுப் போனாங்க?”
“அவ ஜெயிக்க நினைச்சது என்னையத்தான்.அது நடக்காததால் என்னலாமோ செய்துபார்த்துட்டு வேலைக்காலைன்னதும் பூஜாவை என்கிட்ட இருந்து பிரிச்சிப்பார்த்தாள்.பூஜாவை அவள் வளர்க்கணும்னா அவளது எதிர்காலம் கேள்விக்குறியாகுமே? அதுதான் காரணமாக இருக்கும்.மத்தபடி என்மேலுள்ள காதலோ ஆசையோ எல்லாம் கிடையாது”
“ஓஓஓ”
“என்னடி ஓஓஓன்னு சொல்லுற?”என்று அவளைத் திரும்பிப்பார்த்தான்.
அவளும் திரும்பிப் பார்க்க இவனது முகத்தோடு முகம் இடித்துக்கொண்டது.இருவரும் நெடுநாளைக்குப் பின் ஒரு சமாதானத்தோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பூஜாவை நிகிதா எடுத்துட்டுப்போனதிலிருந்தே இருவரின் வாழ்க்கையில் உணர்வுகள் புரிதலோடு இருந்தது.ஆனால் உள்ளான சந்தோசம் என்பது இல்லை.பூஜா நம்மளிடம் வருவாளா? என்ற தவிப்பு இருவருக்குமே இருந்தது.
அதெல்லாம் மாறி பூஜா அவர்கள் மடியில் இருக்கிறாள்.சந்தோஷம் மனதில் இருக்கிறது!அந்த சந்தோசம் கொடுத்த உற்சாகத்தில் இருவருக்கும் உடல் பூரிப்பில் காதல் பூத்துக்குலுங்க பார்த்துக்கொண்டனர்.
“நிகிதாவை நான் குறை செல்லமாட்டேன் மச்சான்.எது எப்படியிருந்தாலும் அவங்க உங்கக்கிட்ட எதிர்பார்த்தது முழுமையான வாழ்க்கையை.அது கிடைக்க அவங்க செய்தது தப்புன்னு சொல்லமுடியாது!அவங்களும் பாவம்தான்”என்று சக மனுஷிக்காக வருத்தப்பட்டாள்.
நிகிதாவுக்கா பேசும் அவளையே கண்ணெடுக்காது பார்த்திருந்தான்.
அதில் வெட்கம் வந்து “என்ன மச்சான் பேசிட்டிருக்கேன் இப்படிப் பார்த்திட்டிருக்கீங்க.ஒரு மாதிரியா இருக்குல்ல”
“ஒரு மாதிரின்னா என்ன மாதிரிடி?”என்று கேட்டவன் அவளது உதட்டை தனது விரல்லா நிமிண்டியான்.
“மச்சான் உங்கப் பார்வையும் சரியில்ல உங்க விரலும் சரியில்ல.ஒரு பிள்ளை மடியில இருக்கு ஒரு பிள்ள வயித்துல இருக்கு.இரண்டு பிள்ளைக்கு அப்பா மாதிரி நடந்துக்கவேண்டாமா?”
“இரண்டுபிள்ளைக்கு அப்பாவானாலும் உனக்கு நான் புருஷன்டி அந்த வேலையை சரியா பார்க்கணும்ல”
“அதுசரி வயித்துல ஏழு மாசத்துல உதைச்சிட்டிருக்கான் உங்க பையன்.இப்போ பொண்ட்டாட்டிக்கிட்ட நெருங்குனா எப்படி?”
“ஏன்டி பையன்னே முடிவு பண்ணிட்டியா என்ன?”
“மூத்தது பொண்ணு இருக்கா, இரண்டாவது பையன் பிறக்கணும்னு ஆசை.பையன்தான் பொறக்கும்”
அதைக்கேட்டதும் நெகிழ்ந்தவன் அவளது நெற்றியில் முத்தம் வைத்தவனின் கண்களின் ஓரம் ஈரம்.
“என்ன மச்சான்?” என்று அவனது முகத்தைப் பார்த்து பதறினாள்.
“சும்மாஆஆடி”என்று உதடுக்குவித்துச் சொன்னவன் அப்படியே முத்தமும் வைத்தான்.
“என்னாச்சு?எதுக்கு கண்கலங்குது மச்சான்”
“உண்மையிலயே பெத்தவளைவிடவும் அன்பான ஒருத்திக்கிட்ட பூஜா இருக்கான்னு சந்தோசத்துல வந்தக் கண்ணீருடி இது.உன்னைப் பார்த்ததும்தான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்தது.அர்த்தம் மட்டுமல்ல உயிர் வந்ததே உன்னால்தான்” என்றவன் அவளை தனது நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
அவனது கையைத் தூக்கித் தனது வயிற்றில் போட்டாள்
ஏறியிறங்கும் வயிற்றில் தனது குழந்தையின் அசைவை உணர்ந்தான்.அப்படியே கண்மூடி லயித்திருந்தவனிடம் ”ஏன் மச்சான் என்மேல உனக்கு இவ்வளவு காதல்?”
“அதுவா ஒரு மூக்குத்தி பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் நெஞ்சில பத்திக்கிச்சு.அவளுக்கு அப்போதான் கல்யாணம் முடிஞ்சிருந்துச்சு.உடனே வாழ்க்கையும் முடிஞ்சிருச்சு.அதுதான் பாவமாக இருந்துச்சுன்னு பார்த்துட்டே இருந்தேனா அப்படியே மனசுக்குள்ள வந்துட்டா.இன்னும் அவளை மட்டும்தான் மனசுக்குள்ள பச்சைக்குத்தி வைச்சிருக்கேன். அதனால் வந்த லவ்வு அது”
அதைக்கேட்டவள் அவனது கையைப்பிடித்து முத்தம் வைத்தாள்.
“என்னடி இது சும்மா நொச்சு நொச்சுன்னு கையில முத்தம் தர்ற?நச்சுன்னு வாயில தரவேண்டியதுதானே.மச்சான் உதடு ஆறுமாசமா காய்ச்சிப்போய் கிடக்குடி”
“ம்ம்ம் காய்ஞ்சிப்போச்சுன்னா தண்ணி ஊத்துங்க மச்சான்”
“தண்ணித்தானே ஊத்திருவோம்” என்று சொல்லிக்கொண்டிருந்தவன் அப்படியே அவளது முகத்தைத் தன்பக்கமாக திருப்பி உதட்டை கடித்து இழுத்து வாயிற்குள் வைத்து தேனுண்ணத் தொடங்கினான்.
ஷ்ஷ்ஷ்ஷ் என்று சத்தமிட்டவளை பதமாக கட்டிக்கொண்டான்.அவனது கைகள் அப்படியே அவளது வயிற்றில் இருந்து மேலாக நகர்த்தியவன் தனது கைக்கு வசதியாகக் கிடைத்ததையெல்லாம் பிடித்து அழுத்தினான்.
தனது உதட்டைக் கடித்தவள்,அப்படியே சுகமான வலியை தாங்கி கண்களை மூடிக்கொண்டு அவனது நெஞ்சிலயே சாய்ந்துவிட்டாள்.
அவளது நிலையை உணர்ந்தவன் மெதுவாக தூங்கும் பூஜாவைத் தூக்கி அப்படியே பக்கத்தில் இருந்த கட்டிலில் படுக்கவைத்தான்.கட்டிலில் இருந்து விழ்யு இருக்கு பக்கவாட்டு லாக்கெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டு ரோஜாவின் அருகில் வந்து உட்கார்ந்தான்.
அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவள்”இன்னும் இரண்டரை மாசத்துல அடுத்தபிள்ளையும் வந்திரும்.அப்போ எப்படி என்கிட்ட நெருங்குவீங்களாம்?” என்று நக்கலாகக் கேட்டாள்.
“ம்ம்ம் அதுவா என் பொண்டாட்டியை அடுத்த ரூமுக்குக் கடத்திட்டுப்போய் கண்டம் பண்ணுவேன்டி என் ஆசை ரோசா”என்று அவளை இழுத்துக் கட்டிக்கொண்டான்.
“மெதுவா மச்சான்”என்று சிணுங்கியவளின் வயிற்றில் இருந்த புடவையை நீக்கி முத்தம் வைத்தான்.அதில் அவளது உடல் சிலிர்க்க உள்ளே இருந்த குழந்தையும் நானும் இருக்கிறேன் அப்பான்னு துள்ளியது.
அப்படியே வயிற்றில் இருந்து உதடுகளை அவனுக்குப் பிடித்த எல்லா இடத்திற்கும் நகர்த்துக்கொண்டுப்போனான்.
“அச்சோ வேண்டாம் மச்சான்.அடுத்தவாரத்துல சீமந்தம் வைச்சிருக்கு நீங்க இப்படிப் பண்றீங்க.இடக்குமடக்கா ஏதாவது பண்ணிடாதிங்க”
“நானே டாக்டரு என்கிட்டயேவா”
“அதுதான்யா பயமே டாக்டரு.எல்லாந் தெரிஞ்சிக்கிட்டு இந்த நேரத்துலயும் புகுந்து விளையாடுறீயே.ச்ச்சீ ரொம்ப மோசம்”
“ம்ம்ம் நான் ரொம்ப மோசமா இருந்ததுனாலதான்டி நம்ம பிள்ளை உன் வயித்துல துள்ளுறான்”
“ஐய இதுல பெருமை வேறயா?”என்று அவனது மீசையைத் திருகினாள்.
“மீசையில கைவைக்காத அப்புறம் மூடு ஏறிடும்.அதுக்குப்பின்ன நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல”
“க்கும் எதுனாலும் நான்தான் தாங்கணும் டாக்டரே”
“இப்பவும் தாங்கிக்கடி ரோசா”என்றவன் அவளது உதட்டில் முத்தம் வைத்து தனது சேவையை மெதுவாக தொடங்கினான்.
அவளது உடலுக்குள்ளும் உள்ளத்துக்குள்ளும் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடியுமோ, அவ்வளவு ஊடுருவினவன் மொத்தமாக அவளிடம் தன்னைத் தொலைத்துவிட்டான்!
பட்டுரோஜாவின் இதழ்களில் தனது அடிமை சாசனத்தை எழுதி கையெழுத்துப்
போட்டுக்கொடுத்துவிட்டான்.
ஒருவாரம் கழித்து…
தெர்காசியிலிருந்து கருப்பசாமி குடும்பம் ஐஞ்சு பஸ் நிறைய ஆட்களை இறக்கி வளைகாப்பு நடத்துவதற்காக வந்துவிட்டனர்.
மகளைக் குறைசொல்லி ஒதுக்கிய அத்தனைபேரும் மகள் கர்ப்பாக இருப்பதை பார்க்கவேண்டும், எல்லோரிடத்திலும் சொல்லவேண்டும் என்றுதான் ஊரையே கூட்டிட்டு வந்திருந்தனர்.
ரோஜாவின் மடியில் பூஜா உட்கார்ந்திருக்க பக்கத்தில் சூர்யா இருந்தான்.
கருணாகரனுக்கு சூர்யா மேலக் கோபம் எல்லாம் இல்லை என்றாலும் இப்போது பூஜா தனது தங்கையின் மடியில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து வருத்தமாக இருந்தது.
என்னதான் நல்லவன் வல்லவன் டாக்டரு என்று சொன்னாலும் தங்கச்சி சூர்யாவுக்கு இரண்டாவது பொண்டாட்டின்னுதானேன்னு சொல்லுவாங்க என்று நினைத்தான்.
ஆனால் ரோஜாவுக்கு அவளுக்கு எந்தவித நெருடலும் இல்லை.அவளுக்கு சூர்யாவைப் பிடிக்கும் சூர்யாவின் மகள் பூஜா தன்னுடைய மகளா எண்ணுகிறாள்.அதைத்தாண்டி அவள் வேற எதையும் யோசிக்கவில்லை.
ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் இங்கே வளைகாப்பிற்கு வந்த லலிதா முதற்கொண்டு மூக்கில் விரலை வைத்து, ஆச்சர்யமாகப் பார்க்குமளவுக்கு விமரிசையாக வளைகாப்பினை நடத்தினார்கள்.
மல்லிகாவுக்கும் கருப்பசாமிக்கும் மனம் நிறைஞ்சிப்போச்சு.இதைத்தானே எதிர்பார்த்தார்கள்.மகள் சீரும் சிறப்புமாக எல்லாம் பெற்று வாழணும்னு அது தங்களது கண்முன்னே நடக்கும்போது பூரித்துதான் பார்த்தார்கள்.
வளைகாப்பு முடிந்து மல்லிகாவும் கருப்பசாமியும் இங்கயே இருந்துவிட்டனர்.
குணசேகரன் குடும்பமும் கருணாகரனும் தென்காசிக்கே கிளம்பிப் போய்விட்டனர்.
அன்று நிகிதா பேச்சை பேசியவளை திசைதிருப்பிய சூர்யா அதற்குப்பின் அவளைப்பத்தின எந்தப்பேச்சையும் வீட்டில் பேசவில்லை.பேசவும் விரும்பவில்லை.அதை ரோஜாவும் புரிந்துக்கொண்டாள்.
பூஜாவிடமும் நிகிதாவைப் பத்தி பேசாது தவிர்த்து தாங்கள்தான் அவளது அப்பா வும் அம்மாவும் என்பதை மனதில் பதிய வைத்திருந்தனர்.
வளைகாப்பு முடிந்து இரண்டு மாதம் முடிந்தவுடனயே ரோஜாவுக்கு பிரசவ வலி வர ஆஸ்பத்திரிக்கு கொண்டு ஓடினான்.
அவனுக்கு ரோஜாவின் முந்தைய ஆக்ஸிடெண்ட் அவளது ஹிஸ்டரி எல்லாம் தெரியும் என்பதால் பயந்தான்.
ஒரு மருத்துவனாக உள்ளே நிற்க பெர்மிஷன் கேட்டு அவளது கையைப்பிடித்துக்கொண்டான்.
அதுவே ரோஜாவுக்கு பலமாக இருந்தது.நார்மல் பிரசவத்துலயே அவள் ஆசைப்பட்டதுபோன்றே ஆண்குழுந்தை பிறத்திருந்தது.
தனது மகன் பிறக்கும் தருணத்தை அவ்வளவு உணர்வுகள் பொங்க சந்தோசத்தோடு எதிர்பார்த்திருந்தவனுக்கு மகன் கையில் கிடைத்ததும் உள்ளம் அப்படியே ஆகாசத்துக்குத் துள்ளியது.
இதுபோதுமே!அவனது வாழ்க்கை எங்கெங்கோ பயணித்து, கடைசியில் யார் கையில் கிடைக்கவேண்டுமோ அவளது கையில் போய் சேர்ந்து, மீண்டும் சரியான திசையை நோக்கிப் பறக்கிறது.
அதன் சந்தோசத்தை வாயின் வார்த்தையால் விவரிக்கமுடியாது.குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு வந்தவன் பூஜாவுக்கு தம்பியைக் காண்பித்தான்.
அவள் தனது கண்களை நட்சத்திரமாக விரித்து பார்த்தாள்.அவளது உதட்டில் புன்னகை விரிந்திருந்தது.அவள் தொட்டுப்பார்த்தாள்.உடனே சந்தோசத்தில் துள்ளினாள்.அதைப்பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருந்தாலும் அவள் பிறந்தபோது இருந்த சூழ்நிலை கண்ணுக்குமுன் வந்தது.உடனே சுதாரித்து மகனை மாமனார் மாமியாரிடமும் காண்பித்தான்.
இந்த வாழ்க்கைக்குத்தானே ஆசைப்பட்டாய் சூர்யபிராகஷ்?இப்போ சந்தோசமா?
பரமாசந்தோசம் என்று தன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டான்.
ரோஜாவோ மயக்கத்தில் இருக்க எப்போடா கண்ணுமுழிப்பாள் என்று காத்திருந்தவன் அவள் கண்முழித்துப் பார்த்ததும் குனிந்து உதட்டில் மென்மையாக முத்தம் வைத்தான்.
அவளோ அசதியில் புரியாது முழித்தாள். உன்னை மாதிரியே அழகா ஆண்குழந்தையை பெத்து தந்ததுக்கு பரிசா தந்த முத்தம்டி.அதை நீயே வைச்சுக்கோ இப்போ திருப்பித் தரவேண்டாம்”என்று கண்ணடித்தான்.
அதைப்பார்த்தவள் அந்த கலைப்பிலும் அசதியிலும் கண்ணசைத்துச் சிரித்தாள்.அவளது கையைப்பிடித்த்க்கொண்டாள்.
அப்போ பிடித்தக் கையை அவன் என்றும் விடப்போவதில்லை!அந்த உறுதியில் அவன் உறுதியாக இருந்தான்!
இருவரது வாழ்க்கையிலும் முதல் வாழ்க்கை கோணாலாயா போனாலும் இருவரும் சேர்ந்து அதை நேர்படுத்திக்கொண்டு உயிரோட்டமாக வாழ்க்கையை வாழத்தொடங்கிவிட்டனர்.
அவர்களது வாழ்க்கை பல்லாண்டு சீரும் சிறப்புமாக இருக்க வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்