பகலவனின் பனிமலர் அவளோ1
Pani1

1 பகலவனின் பனிமலர் அவளோ??
ஆந்திரா
விஜயவாடா!!
___ சிபிஎஸ்இ பள்ளி வளாகம் , மாணவிகள் வெள்ளை நிற சீருடையில் வளையல் கலகலக்க பள்ளி பேருந்தில் வந்து ஏறினர்.. மெல்ல வண்டி குலுங்கி ஸ்டார்ட் ஆகியது ...
"அண்ணா மேடம் வரல
"ஓஓஓஓ அந்த மேடம் இருந்தாலும் சத்தம் இருக்காது, இல்லைன்னாலும் சத்தம் இருக்காது சீக்கரம் வர சொல்லும்மா" என்று டிரைவர் குரல் கொடுக்க
"மேடம் சீக்கிரம் வாங்க" என்று தொலைவில் அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணை அழைக்க .. வியரத்த முகத்தை காட்டன் புடவையில் துடைத்து கொண்டு வந்து பேருந்தில் வேகமாக ஏறினாள் ...
அவள் சுவாதி ...
இருக்கையில் அமர்ந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்தாள்...தனக்கென யாரும் இல்லாத பெண் .. அவளை யார் என அறிய? (சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் கதையை பார்க்க)..
ஆந்திராவின் பிரபல பள்ளியில் ஆங்கில ஆசிரியை, கண்களில் கனிவு , வேலை உண்டு , தான் உண்டு என எந்த பிரச்சனையும் இல்லாது இதோ இருபத்தி நான்கு வயது வரை கடந்துவிட்டது .. அவளுக்காக யார் இருக்கிறார்கள் என திரும்பி பார்த்தால், வெறுமை மட்டுமே சிரிக்கும் .. தோழிகள் கூட கிடையாது... அந்த தனிமையில் இனிமை காண துடிக்கிறாள்... நடந்திடுமா? அவள் அமைதி தனிமை குலைக்கவே ஒருவன் பிறந்து வளர்ந்திருக்கிறானே ..
பேருந்தில் டிரைவருக்கு பின் உள்ள சீட்டில் ஜன்னலோரம் கம்பியில் தலை சாய்த்து உட்கார்ந்தாள்.. பேருந்து நகர நகர அவள் கூந்தல் அசைந்தாடியது, முல்லை கொடியென அவற்றை ஓரம் ஒதுக்கிய தங்க நிற விரல்கள், உதட்டில் சிக்கும் முடியை நீக்க , அவள் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் அழகு, பன்னீர் சுரக்கும் ரோஜா மலர் போல இதழ் வண்ணம் சுண்டி இழுத்தது, கருமையான புருவம் அதன் கீழே துள்ளி ஓடும் மீனினங்கள், வளுவளுப்பான கழுத்தில் குட்டி தங்க செயின் , ஆரஞ்சு நிற எளிய புடவை, சாந்தம் குடிகொண்ட முகம் , இதுதான் சுவாதி..
நாளைய பாடவேளைக்கு ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்து கொண்டு வந்தாள்.. எதையும் ரசிக்கும் ஆர்வம் இல்லை ரசிக்க உலகில் பல இருந்தாலும் , அது ஏதும் தனக்கு கிட்டாது என்று ரசிப்பதை நிறுத்தி கொண்டது அவள் கண்கள்... சம்பளம் நிறைவாக வருகிறது.. தன் தேவை போக பேங்கில் அப்படியே கிடக்கும் எப்பவாவது நாலு சேலை, இது நல்லா இருக்குமா என்று எல்லாம் பார்க்க தோணாது, உடல் மறைக்க ஆடை அவ்வளவே! என சும்மா நாலு சேலையை எடுத்து கொண்டு வருவாள் .. பாடத்தில் மூழ்கி கொண்டிருந்த வேளை , தீடீரென பஸ் பிரேக் போட்டு நிறுத்தப்பட , சுவாதி கம்பியில் தலைமுட்டி நிமிர... வெளியே டிராப்பிக், சலசலப்பு ,
தலையை வெளியே விட்டுப்பார்க்க போலீஸை அடித்து வெளுத்து கொண்டிருந்தான் ஒருவன் அவனின் பின்புறம் மட்டுமே சுவாதிக்கு தெரிந்தது ...
"என்னாச்சி?" அதிசயமாக வாயை திறந்து கேட்டுவிட்டாள் .. ஏதோ உயர் அதிகாரி போல என்றுதான் நினைக்க வைத்தான் அவன்...
ஆறடிக்கு மேல் உயரம் , அவ்வப்போது கையில் உள்ள காப்பை தூக்கி விட்டபடி , காலை அந்த போலீஸ் கழுத்து வரை தூக்கி மிதிக்க, ரெகுலர் உடற்பயிற்சி செய்பவன் என்பது அவன் காலை தூக்கி கிக் பண்ணுவதிலேயே தெரிந்தது ..
"மேடம் அவரத் தெரியாதா??".. என்று அருகே அமர்ந்திருந்த பெண் கேட்கவும்
"அச்சோ!!" தெரிந்து கொள்ளாத அளவு அவ்வளவு பெரிய அதிகாரியா என வெட்கம் கொண்டு ..
"ஐபிஎஸ்ஸா?
இல்ல மேடம் ,
"கலெக்டரா அது லேடி இல்ல ...தனக்கு தெரிந்தவர்கள் பெயர் அனைத்தையும் கேட்டுவிட்டு..
"ப்ச் யாருன்னு தெரியல யார் அது ?
"அட என்ன மேடம் ஸ்ரீ அண்ணா தெரியாதா..
"ஸ்ரீயா?? எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு, பட் தெளிவா நியாபகம் வரல "என்று யோசித்து முடிக்கும் முன்பு ,அவன் தன் நெடிய காலை தூக்கி அடித்து கொண்டே சுவாதி நோக்கி திரும்பினான்...
ஸ்ரீ ராம்...
29 வயது , பிஇ மெக்கானிக்கல் இன்ஜியரிங் , பிறந்தது ஆந்திரா, படித்தது சென்னை .. தமிழ்நாட்டு வீரம் , ஆந்திரா கோவம், கேரளத்து நிறம் , பெங்களூர் லுக் , மகராஷ்டிரா ஸ்டைல் என ஆல் இந்தியா கலவை அவன்... அடர்ந்த கேசம், எப்போதும் கோபத்தில் சுருங்கியே இருக்கும் நெற்றி.. முரட்டு பார்வை அதில் இருக்கும் அலட்சியம் போடாங்க என்ற நக்கல், கருத்து போன உதடு நான் கெட்டவன்தான் தண்ணீ தம் உண்டு என்று பறைசாற்ற, மேலே முறுக்கி விட்ட அடர் மீசை முரட்டு,தாடி அழகன் போல காட்டியது.. மாநிறம் , கட்டம் போட்ட சட்டை ஜீன் பேண்ட் என்று தற்கால இளைஞன் கேட்டகிரி ஸ்ரீ.. எல்லாரும் அவனை ஆவென பார்க்க , சுவாதி மட்டும் ஆர்வம் இல்லாது பார்த்தாள்..
"ஸ்ரீ அண்ணா வந்தா மாஸ்தான்மேடம் .. இந்த போலீஸ் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்திருக்கான் போல யாரோ ஸ்ரீ அண்ணாகிட்ட போட்டு விட்டுட்டாங்க, அதான் வந்து இறங்கிட்டார் .. இனிமே பொளந்து எடுத்துட்டுதான் மறுவேலை "என ஆர்வமாக அந்த பெண் அடித்து கொண்டிருந்த ஸ்ரீயை பார்க்க..சுவாதி சலித்து கொண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்...
"இவனுக்காக ஐபிஎஸ் அளவு எல்லாம் யோசித்தோம் ரவுடிப்பய போல", என்றுதான் நினைக்க தோன்றியது..
மனித இனம் இப்படிதான் இருக்கணும் என பாடம் எடுப்பது மட்டும் இல்லாது, அப்படியே வாழ முயற்சி செய்யும் சுவாதிக்கு .. ரோட்டில் ரவுடி பயல் போல _த்தா என்று நாக்கு மடித்து சண்டை போடும் ஸ்ரீயை பிடிக்காமல் போக காரணம் வேறு வேண்டுமா? இவன் சண்டைக்கு எத்தனை பேர் நேரத்தை வீணடிக்கிறான் என்று அலுப்பு வந்தது ..எங்கையோ இவன பார்த்திருக்கோமே என யோசித்து கொண்டே , தான் தங்கும் பெண்கள் விடுதி வந்து சேர்ந்தாள் ...
"த்தா இனி எந்த பொண்ணு மேலையாவது கை வை, கையை வெட்டிடுறேன்" என ஓங்கி மிதிக்க , போலீஸை தொட்டா சும்மா விடுவார்களா மேலிடத்தில் இருந்து போலீஸ் வந்து குவிய,
"ஸ்ரீ பிரச்சனை பண்ணாம வந்து வண்டியில ஏறு" என்று அந்த பகுதி எஸ்ஐ வந்து அவன் சட்டை மீது கைவைக்க போக ..
"ப்ச் மேல கே வைக்காத ,போ வர்றேன்" என்று போகும் வழியில் பெட்டிக்கடையில் இரட்டை விரலால் உதட்டை தொட்டு காட்டி
"நாயர் தம்" என கேட்க.. அவர் அங்கிருந்தே தூக்கிபோட.. அதை சரியாக கேட்ச் பிடித்து கொண்டு, ஜீப்பில் தாவி ஏறி அமர்ந்து சிகரெட்டை இழுக்க .. எஸ்ஐ பல்லை கடித்து கொண்டு பார்த்தார் ..
இந்த ஏரியாவுக்கு அவர் ஆபிசரா இல்ல ஸ்ரீயான்னு டவுட் வரும்.. போலீஸ பார்த்தா கூட ஒரு பய ஒதுங்கி போக மாட்டான், டேய் நாங்க போலீஸ் பயப்படுங்கடா இல்ல பயப்படுற மாதிரியாவது நடிங்கடா என்று வாயவிட்டே கேட்டுவிட்டார்
"நீ என்ன ஸ்ரீ அண்ணனா பார்த்ததும் பயப்பட.. நீ சாதாரண போலீஸ்தான "என்று மீசை முளைக்காத சிறுசுகள் சிரிக்க .. அவருக்கு ஸ்ரீயை கண்டாலே ஆகாது.. எப்ப வகையா சிக்குவான் என பார்ப்பதே முழு நேர வேலையாக்கி கொண்டார்..
ஸ்ரீயை லாக்கப்பில் தள்ளி போலீஸ் வன்மத்தை விடாது கக்க.. ஒரு பொட்டு சத்தம் ஸ்ரீ வாயில் இருந்து வரவில்லை .. அடி எல்லாம் இடி மாதிரி தாங்கி தாங்கி இரும்பாக உருமாறி போன உடம்பு மீசை எப்போ முளைச்சதோ, அப்பவே அடிதடி என்றே சுற்றும் ரகம் .. வாரவாரம் ஒரு கேஸ் போட்டாதான் அவனுக்கு பெருமைபோல் உள்ள போவான் வருவான்.. சிறிது நேரத்தில் நாலு வக்கீல் வந்து ஸ்ரீயை ஜாமின் எடுக்க... வெளிய வந்தவனை அவன் நண்பன் வினய் முறைத்தபடி பார்த்து கொண்டு நின்றான்..
வினய் இவனோடவே குப்பை கொட்டும் ஒரே நண்பன் ..
"என்ன மச்சான் பாசமா பார்க்கிற ,வண்டியை வீட்டுக்கு விடு வயிறு பசிக்குது, தம் இருக்கா" வினய் சட்டையை தடவி தம்மை எடுத்து பற்ற வைத்து கொண்டு ஒரு இழு இழுத்துவிட்டு, வினய் வாயில் வைக்க அதையும் சுரணை இல்லாது வினய் இழுத்து கொண்டே
"நீ நாசமா போடா, என்னையும் ஏன்டா இழுத்து விடுற.. சும்மா போன என்மேலேயும் இரண்டு கேஸ போட்டு வச்சிருக்கான்கடா , வேலை போச்சு"
"ஆமா கவர்மென்ட் ஆபிஸ்ல கலெக்டர் வேலை பார்த்த ,கவலை பட, போனா போகுது மச்சான் நீ வண்டியை எடு"
"நீ என்ன சொல்லமாட்ட , ஏற்கனவே வீட்டுல எனக்கு நாயிக்கு போடுற தட்டுலதான்டா சோறு போடுவான்க, இதுல வேலையும் இல்லைன்னு தெரிஞ்சது "
"உனக்காவது தட்டுல போடுறாங்களே, நமக்கு அதுவும் கிடையாது.. ஆனா இதுக்கு எல்லாம் பயந்திட கூடாது மச்சான் ..நம்ம உரிமை ,நம்ம சோறு போடுறாங்களா பார்க்கணும் , போடல நாமளே போட்டு தின்னுட்டு போக வேண்டியதுதான் என்று ஒரு தம்மை இருவரும் இழுத்து கொண்டே தங்கள் தெரு நோக்கி வர ..ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று அவனை கண்டு பாசத்தில் பயத்தில் என்று கையை தூக்கி சலாம் போட... ஸ்ரீ கண்ணில் அப்படி ஒரு கர்வம் ..
ஆந்திராவின் நடுத்தர வர்கத்து வீடு .. ஒரளவு பெரிய வீடுதான் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மகேந்திரன் வீடு அது...ஸ்ரீயின் ஒரே ஒரு டேடி, எனிமி .. இவர் மட்டும்தான் அவனிடம் பேசிவிட்டு தப்பி கொண்டிருக்கிறார்..
"தறுதலை எத்தனை லாரி , கார் , ரோட்டுல ஓடுது எதுலையாவது விழுந்து செத்து தொலைய கூடாதுன்னு வந்து சேர்ந்திருக்கியே.. உன்னால என நிம்மதி போகுது , போலீஸ் ஸ்டேஷன் போனவனை அப்படியே உள்ளேயே வச்சி கொல்ல வேண்டியதுதான.. உன்ன எல்லாம் யார்டா ஜாமீன் எடுத்து அழைச்சிட்டு வர்றது" என மகேந்திரன் காட்டு கத்து கத்திக் கொண்டிருக்க.. தாய் சிவகாமி புடவையில் வாயை பொத்தி கொண்டு அடி வாங்கி, முகம் வீங்கி வந்த மகனை அழுது கொண்டு பார்க்க, தங்கை ராதிகா ஒருபுறம் அண்ணன் வாங்கும் திட்டை ரசித்து பார்க்க.. இத்தனை பேச்சுக்கு சொந்த்தக்காரன் ஸ்ரீயோ ,
குழம்பு சட்டியில் மீந்து கிடந்த குழம்பை, கரண்டி விட்டு மீனை தேடி கொண்டிருந்தான்..
"என் இரத்தத்தில் சம்பாதிச்ச காசுல சோறு திங்குறீயே ,வெட்கமா இல்ல தூஊஊஊ "என மகேந்திரன் துப்ப..
"சக்ஸஸ் !!!" என்று மீனை எடுத்து தட்டில் போட்டு கொண்டவன், ரசித்து அதன் தலையை உறிஞ்சி தின்றுவிட்டு ஏப்பம் விட்டு கொண்டே, மகேந்திரன் காலை தாண்டி குதித்து எழும்பி போனவனை பார்த்து மூன்று பேருக்கும் ...
"ஏன்டா இப்படி இருக்க?? என்றுதான் கேட்க தோணியது...
சுருக்கமாக ஸ்ரீ யாருன்னு கேட்டா ...
வேண்டாத வேலையில் தலையை கொடுத்து அடுத்தவனுக்கு நல்லது பண்றேன்னு தன் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் ரக்கட் பாய்ஸ் தலைவன் இவனே...
வாய் பேச்சு எல்லாம் ஓல்ட் ஸ்டைல் , வச்சா குடுமி அடிச்சா மொட்டை ஸ்டைலில் எவனா இருந்தாலும் நெஞ்சில் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான்.. நேத்து வரை பிரபல ஐடி கம்பெனியில் ஏதோ ஒரு வேலையில் இருந்தான்.. பல வருடமா வேலை பார்க்கிறான் என நினைத்தால் தவறு .. வேலைக்கு சேர்ந்ததே அதுக்கு முந்திய நாள்தான் .. மேனேஜர் ஏதோ ஒரு பொண்ண தப்பா பேச , நம்ம சிங்கம் போய் மூக்கை உடைக்க கெட்டவுட் சொல்லி விரட்டியாச்சி.. இப்ப வேலையில்லா பட்டதாரி, பாக்கெட்டில் பணம் நஹி, இருந்த ஐநூறு ரூபாயையும் போலீஸ் அபேஸ் பண்ணிடுச்சி .. வீட்டுல சுரணை பார்த்தா சோத்துக்கு வழியில்ல ,அப்பன்காரன் பேசும் பேச்சுக்கு எரிச்சல் கூந்தல் வந்து, அவர்கிட்ட மல்லுக்கு நிற்பான்.. தேவையா இது தேவையா? அதான் வீட்டுக்குள்ள வரும் போதே கிலோ பஞ்சை காதில் அடைத்து வைத்துவிட்டு உள்ளே வந்தாச்சி.. எவனும் என்னமும் பேசு ,நமக்கு சோறுதான் முக்கியம் என தின்று முடித்து விட்டு மறுபடியும் வெளியே கிளம்பி விட்டான்....
"ஏங்க இப்படியே அவன விட்டா யாருக்கும் நிம்மதி இருக்காது, என்ன பண்ணலாம்" என்று சிவகாமி புருஷன் அருகே தன் மகன் எதிர்காலம் குறித்து பேச..
"நேரே போனா ஒரு பாழுங்கிணறு வருதா??"..
"ஆமாங்க வருது"
"அது சும்மாதான் திறந்து கிடக்காம் ,உன் மகனை பிடிச்சி அதுல தள்ளிரு , நீ போடுற உலையில ஒரு உலக்கு அரிசி குறையும் .. எல்லாம் உன்னால மில்ட்ரி போயிட்டு வந்து பார்த்தா, இவன் தருதலை நாயா நிற்கிறான் "
"சரி நான்தான் தப்பு பண்ணிட்டேன் ஒத்துக்கிறேன் அதுக்கு பிள்ளையே இப்படியே விட்டா எப்படி" .
"இப்ப என்ன செய்ய சொல்ற?
"ஒரு பொண்ணு பார்த்து கட்டி வச்சிட்டா பொறுப்பு வந்திடும்ங்க அவனுக்கும் வயசு 29 ஆகுதே..
"வாயில வண்ண வண்ணமா வந்திடும், இவனுக்கு சோறே நாம போடுறோம், இவன நம்பி யாரு பொண்ணு கொடுப்பா"
"ஏன் எங்க அப்பாரு உங்கள நம்பி என்னை கொடுக்கலை, என் பையனுக்கு பொண்ணு பார்த்து கட்டி வைங்க அவனும் நல்லவிதமாக வருவான்"..
"அப்ப இந்த புள்ளையை என்னடி பண்ண" என்று ராதிகாவை காட்ட..
"அவ இப்பதான பள்ளிக்கூடம் முடிச்சிருக்கா இப்பவேவா கல்யாணம் கட்டி கொடுக்க போறீர்.. இதுக்குதான் சொன்னேன் .. காலம் கடந்து பிள்ள பெக்க வேண்டாம்னு, நீங்க மிலிட்டரியில இருந்து வந்து செஞ்ச பெரிய சாதனையே இது ஒன்னுதான்" என்று மகனை திட்டியதால் சிவகாமி புருஷனை நைய நறுங்க புடைக்க.. மனுசன் தலையை சொரிந்தார்.. பின்ன ஸ்ரீக்கும் , ராதிகாவுக்கு ஏகபட்ட வயது வித்யாசம் ..
"சரிடி இவனுக்கு யாரு பொண்ணு தருவா?
"தேடுங்க ஆனா என் மகனுக்கு கல்யாணம் நடந்தே ஆகணும்..
"கண்ணு உள்ளவன் உன் பையனுக்கு பொண்ணு தருவானா..சிவகாமி முறைக்க
"சரி போய் தொலை இவனுக்கு சீட்டு வாங்க, வேலை வாங்கன்னு எவன் எவன் கால்லையோ விழுந்த மாதிரி பொண்ணு தாங்கன்னு விழுறேன்""
"மகனுக்காக விழுந்தா தப்பில்லை" என்று மனைவி ஒரே போடாக போட்டுவிட்டு போய்விட .. தன் சென்னை நண்பனுக்கு போனை போட்டு மகன் பற்றி நல்லது கொஞ்சம், கெட்டது நிறைய சொல்லி
"பொண்ணு இருந்தா பார்த்து சொல்லுடா
"ம்ம் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு ..தாய் தகப்பன் இல்லை அந்த பொண்ணு ஓகேவா..
"யாரா இருந்தாலும் சரிடா ,முதல்ல அவனை இந்த வீட்டை விட்டு வெளிய அனுப்பணும், நிம்மதியா கண்ணு மூட விட மாட்டைக்கிறான்டா...
"ஹாஹா சரி மகி , அவகிட்ட பேசிட்டு சாயங்காலம் உனக்கு போன் பண்றேன்டா
"ம்ம் ஆண்டவா அந்த பொண்ண காப்பாத்து இந்த கிறுக்கன் கிட்ட இருந்து" என்று வேண்டிக்கொண்டார்..
இரவு உணவு முடிந்து படுக்கைக்கு போக போன சுவாதி போன் மணியடிக்க , எடுத்து பார்த்தாள் டாக்டர் ஸ்டீபன்
"ஆங்கிள்
" எப்படி இருக்க சுவாதிம்மா??
"நல்லா இருக்கேன் ஆங்கிள், என்ன விஷயம் ?
"எத்தனை நாள்தான்டா தனியா இருப்ப உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா?
"அது ..
"ஆங்கிள் ஒன்னு சொல்றேன் பிடிச்சா ஓகே சொல்லு ,இல்லைன்னாலும் சரிதான்..
"சொல்லுங்க ஆங்கிள்..
"உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன் சுவாதிம்மா..
"என்னது ??"
"ம்ம் உன் அப்பன் இருந்தா காலகாலத்துல உன்னை கரை சேர்த்திருக்க மாட்டானா... இது என் கடமைம்மா மாட்டேன்னு மறுக்காத ப்ளீஸ்டாம்மா ..
"சரி ஆங்கிள்...உடனே ஒத்து கொண்டாள் தனிமை அவளை கொன்றது போல
" தேங்க்ஸ் டா, மாப்பிள்ளை பேர் ராம் ..
"ஓஓஓ "
"இப்போதைக்கு வேலை இல்லை ,ஆனா நல்ல குடும்பம் அந்த குடும்பத்துக்காகவே அவன கட்டிக்கலாம் ..உன்ன ஒரு குடும்பத்துகூட சேர்த்து விட்ட நிம்மதி கிடைக்கும் .. அதான் வசதி கம்மியா இருந்தாலும் உனக்கு அந்த இடம் பார்த்தது"
"அது ஒன்னும் பிரச்சனை இல்லை ஆங்கிள், ஆனா அவரை பிடிக்கலைன்னா கட்டாயபடுத்த கூடாது
"ஓகேடா ஓகேடா, அப்போ நாளைக்கு வந்து உன்ன பார்க்க வர சொல்லவா "
"நாளைக்கேவா??
"நல்ல காரியத்தை தள்ளி போட கூடாதுடா
"சரி ஆங்கிள் "தனக்கு நல்லது நினைக்கும் மனிதர் பேச்சை மதித்து சரி என்று ஒத்துகொண்டாள்..
அவளுக்கு மணமகனாக பேசியது யாரு ?வேற யார்
சாட்சாத் நம்ம ஸ்ரீராம் தான்..
என் வேலை உண்டு என இருக்கும் அவளும், எல்லார் வேலையிலும் மூக்கை நுழைக்கும் அவனும் ஒரே கயிற்றில் மாட்டபட்டால் நிலை என்னவோ??
அவன் பகலில் மலரும் பகலவன் .. இவள் குளிரில் மலரும் பனிமலர் பத்து பொருத்தமும் இடித்தது …
2 பகலவனின் பனிமலர் அவளோ!!
"நாயர் இரண்டு டீ ,ஒரு தம் "என்று பைக்கில் ஸ்டண்ட் போட்டு வினய் அமர,ஒரு காலை திண்டின் மீது துக்கி வைத்து கொண்டு ,ஸ்ரீ ஏதோ யோசனையில் நின்றான்.. காலேஜ் பெண்கள் ஸ்ரீயை சைட் அடித்து கொண்டே கடந்து போக...அவன் இழுத்து புகை விட்டு கொண்டே
"என்னங்கடி இங்க பார்வை, கண்ணை கண்ணை உருட்ட வேண்டியது காதல்னு,நாங்களும் பின்னாடி வந்தா எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டாங்க, நீ வெட்டி பயதான்னு சொல்ல வேண்டியது போங்கடி மூஞ்சியும் முகரையும் .. "
"யாரு மச்சான் அப்படி சொன்னது .."வினய் அந்த தம்மை வாங்கி இழுத்து மீண்டும் அவன் கையில் கொடுக்க,
"பொதுவா சொல்றேன் வெண்ணை..
"நீ சொன்னா சரியாதான் இருக்கும், யூ கன்டினியூ , அந்த நடுவுல போற குந்தாணியை நல்லா திட்டு, ஒரு மாசமா நானும் நூல் விடுறேன், அவ உன்னையவே பார்த்து கடுப்பேத்துறாடா.. "ஸ்ரீ திரும்பி வினய்யை பார்க்க ..
"பின்ன என்னடா டக் இன் பண்ணி , அஜய் தேவரகோண்டா போல இல்லைன்னாலும், நம்மூர் சிவக்கார்திகேயன் போல இருக்கேன்ல , அது என்ன என்ன பார்க்காம, உன்னையே சைட் அடிக்கிறது வயிறு பர்ன் ஆகுதுல்ல.."
"தூஊஊ மூடிட்டு டீயை வாங்கிட்டு வா. எவ பின்னாடியாவது சுத்த பாத்தேன் பார்த்துக்க.." என்று விரல் நீட்டி எச்சரித்தான்.. ரக்கட் பாய்ஸ் சைட் அடிக்க மாட்டான் ,கடலை போட மாட்டான் ,பொண்ணுங்க பின்னாடி சுத்த மாட்டான் என்ற அத்தனை குவாலிட்டியும் ஸ்ரீக்கு உண்டு ... இவன் கண்ணை மறைத்து அத்தனையும் பண்ணுவதில் வினய் கில்லாடி , ஆனால் லவ் செட் ஆகும் நேரம் ஸ்ரீ போய் குழப்பி வினய்யை தூக்கிட்டு வந்து தன் கூடவே வச்சிக்குவான்..
"நீயும் கமிட் ஆகாத, என்னையும் ஆக விடாத, நாம கல்யாணத்துக்கு பொண்ணு தேடும் போது கிழவன் லிஸ்ட்ல சேர்ந்திடுவோம் , ஏற்கனவே என் கூட படிச்சவள்க மக எல்லாம் என் தோள் வளர்த்தி இருக்காள்க.."புளுபுளுத்து கொண்டே போக..
"இது இப்ப பெரிய கண்டுபிடிப்பா.. போறியா இல்லை "என்று சுற்றி முற்றி கல் தேட..
"உன் கூட சேர்ந்துதான் நான் கெட்டேன், ஆனா உன் அப்பன் ஏதோ உன்னையே நான் கெடுத்தமாதிரியே பார்ப்பான் பாரு, சொல்லி வை ஸ்ரீ அந்தாள்கிட்ட ..எனக்கு கோவம் வராது வந்தா தாங்க மாட்டார்..
"ஏன் நீயே மில்ட்ரி கிட்ட சொல்ல வேண்டியது தான..
"ஏன் மச்சான் சாக ஐடியா தர்ற, அந்தாள் கோவத்தில துப்பாக்கியை எடுத்து சுட்டுட்டா..
"போய் சேருடா, என்ன பிடிச்ச சனி போகும்..
"போடா நான் போறேன், என்னைய போய் எப்படி எல்லாம் பேசுற ப்ச்" என்று வினய் நகர.. ஸ்ரீ அவன் கழுத்தை பிடித்து தொங்கி முதுகில் ஏறியவன் ..
"மச்சான் வா டீ ஆறுது..
"உன் அக்கறை பத்தி எனக்கு தெரியும்டா பாக்கெட்ல காசு இல்ல அதான.."
"அதேதான் வா நாயர் கடை பாக்கி அடை..
"என்கிட்டையும் காசு இல்லைடா, வேலை போய் நானே நடுத்தெருவில நிற்கிறேன் , "வினய் அவனை சுமந்து கொண்டு வந்து பைக்கில் அமர வைத்தான்.. என்ன நட்புடா ? என்ன கருமம் பிடிச்ச நட்புடா இது, என்று சொல்லும் அளவு இருவரும் நகமும் சதையும்.. அவனுக்கு இவன் மட்டுமே, இவனுக்கு அவன் மட்டுமே என்று அடி உதை ஆனாலும் ஒன்றாகவே வாங்கி இரண்டு பேருமே நாசமாக போய் கொண்டிருக்கிறார்கள் ..
"வீட்டுல வேலை போனது தெரியுமா மச்சான்"..ஸ்ரீ ஒரு கடி தம் , ஒரு கடி டீ என இழுக்க..
"என் அண்ணிக்காரிக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு வை ஸ்ரீ, விளக்குமாறு அடி கன்பார்ம்.. "என போகும் பாவாடை தாவணிகளுக்கு நூல் விட ..
"ஓஓஓஓ இந்தா உனக்கு போன் "என்று போனை ஸ்ரீ அவன் கையில் கொடுக்க
"எனக்கு யார்டா மச்சான் உன் போன்ல போட்டது..
"போடல மச்சான்.. போட்டேன்.. நீதான என் அண்ணிக்கு தெரிய கூடாதுன்னு சொன்ன அதான் போட்டு விட்டுட்டேன் , இது உன் அண்ணி நம்பர்தான.. "என்ற சிறிது நேரத்தில் புழுதி புயலில் சிக்கியது போல இருவரும் நின்றனர் .. நல்ல நண்பன் கிடைப்பது ஒரு வரம், அது இருவருக்கும் கிடைத்திருக்கிறது...
தாய்கிழவி தாய்கிழவி!!! என்று ஸ்ரீ செல் வைப்ரேட் ஆக
"என்ன மச்சான் அதிசயமா உன் அம்மா போன் போடுறாங்க எடு" வினய் போனை எடுக்காது முறைத்து பார்த்து கொண்டு நின்ற ஸ்ரீயை தோளில தட்ட..
"எதுக்கு ரேசன் கடை போன்னு சொல்லும் , நம்ம ரேஞ்சுக்கு அங்க போய் நின்னா எப்படி .."
"தாய்க்குலம் பாவம்டா
"அப்போ நீ போ
"ப்ச் எடுடா எதாவது அவசரமா இருக்க போகுது, நான் நாயர் கணக்கு எழுதி வச்சிருக்க நோட்டை ஆட்டையை போட முடியுமான்னு பார்க்கிறேன்" வினய் நாயரிடம் பேச போய்விட. ஸ்ரீ போனை எடுத்து காதில் வைத்தான்..
"ம்மா இந்தா அந்த தடிமாடு போனை எடுத்துட்டான்" என்று ராதிகா கத்தி கொண்டே தாய் நோக்கி போக..பல்லை கடித்தான்.. என்னவோ இருவருக்கும் ஒத்து போகாது.. ஸ்ரீ அவளிடம் பேசியதே இல்லை.. லேட்டா பிறந்து என் மானத்தை வாங்கிட்டா என்று தங்கை மீது குழந்தை கோவம் உண்டு ..
"டேய் ஸ்ரீ எங்க இருக்க ?"
"அவன் என்ன ஐநா வட்ட மேசை மாநாட்டிலையா இருப்பான் ,கழுதை கெட்டா குட்டிச்சுவர் "என்று ராதிகா முணுமுணுக்க.. ஸ்ரீ நரநரத்து கொண்டே ,
"அங்கதான் இருக்கேன், எதுக்கு போன் போட்டீங்க..."
"என்னடா நீ, அம்மா எதுக்கு போன் போடுவேன்
"காரியம் எதாவது ஆகணும்னா போன் போடுவீங்க, என்ன விஷயம் , "மகன் அரிவாள் பேச்சு தெரியுமே..புருஷன் போல பையன் வேணும்னு அரசமரம் சுத்துறதுக்கு பதிலா சீமோடை மரம் சுத்திட்டார் போல, குத்திட்டே இருப்பான் ..
"உனக்கு அப்பா பொண்ணு பார்த்திருக்கார்டா.." உடனே பல்லை இளிச்சி அப்படியா என கேட்டுவிடுவான் மகன் என நினைத்து சொல்லி விட..
"ஏதேஏஏஏஏஏஏ பொண்ணா? "அவன் முகம் போன போக்கு இருக்கே .. நாங்க முரட்டு சிங்கிள் என ஸ்டேட்டஸ் பல வருடமா வச்சி அவன் சுத்தினாலும் பரவாயில்லை, வினய்யையும் ப்ளே பாய்னு வைக்க விடாம முரட்டு சிங்கிள் போடுறா, இல்லை கொன்ருவேன் என்று மிரட்டி போட வைத்தவனிடம் கல்யாண பேச்சு செல்லுமா?
"யார கேட்டுட்டு இதையெல்லாம் அந்தாள் பண்றான், சும்மா போற என்ன சீண்டி விடுறானா ?இப்ப யாரு உங்கிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க வலிக்குதுன்னு சொன்னேனா. எனக்கு அது தேவைன்னா நான் பண்ணிட்டு வருவேன், அவரவர் சோலியை பார்க்க சொல்லுங்க , குறிப்பா உன் புருஷனை அவர் வேலையை பார்க்க சொல்லு, என் விஷயத்தில பார்டர் தாண்டி வந்தார், அவ்வளவுதான் பார்த்துக்க, வை போனை" என்று வைத்துவிட்டான் ..
"ம்மா அந்த வள்ளு நாய் என்ன சொல்லிச்சு ,"ராதிகா தாய் முகம் போன வாட்டத்தில் நாய் கடிச்சி வச்சிருச்சு என அறிந்து கேட்க..
"முடியாதுங்கிறான்டி, இவன நம்பி அப்பாவை வேற நாளைக்கு பொண்ணு பார்க்க போகலாம்னு சொல்லிட்டேன் , இப்ப என்னடி பண்ண??" ..
"அவன் கூடவே ஒரு வெளவால் தொங்கிட்டு அலையுமே, அவனை பிடி உன் புத்திரன் தானா வருவான் .. "
"ஆமா இரு வினைக்கு இப்பவே போனை போடுறேன்.."
"அட, இப்ப இரண்டும் ஒன்னாதான் நிற்குறதா வட்டார தகவல் வந்திருக்கு , சிங்கமும் சிறுத்தையும் தனியா பிரிஞ்ச பிறகு அவனை பிடி..."
"உனக்கு எப்படிடி இதெல்லாம் தெரியும்
"ம்ம் உன் மொவன் பக்கத்து வீட்டு கனகா அக்கா மகளை பிடிச்சி திட்டி விட்டிருக்கான் .. இப்பதான் கனகா அக்கா வந்து கம்ப்ளைன்ட் பண்ணிட்டு போறாங்க .. ஒன்னு அவன ஹாஸ்டல்ல சேர்த்து விடு , இல்லை என்ன சேர்த்து விடு, பிள்ளையை பெக்க சொன்னா தொல்லையை பெத்து , அதுக்கு ஸ்ரீராம்னு பேரு வேற "என்று ஸ்ரீராம் போட்டோவில் ஒரு அடி போட்டு விட்டு ராதிகா உள்ளே போக...
"இரண்டு பிள்ளை பெத்தேன், இரண்டும் உதவிக்கு இல்லை, என்ன பொழப்போ , இப்ப இவன எப்படி இழுத்துட்டு போக இந்த மனுசனை வேற சமாளிக்ககணும் ... "வினய் தனியாக மாட்ட, சிவகாமி அவனை பிடித்து வெளுத்த வெளுப்பில்..
"இதை உங்க மகன் கிட்ட சொல்ல வேண்டியது தான
"சொன்னா கேட்டுட்டுதான் மறுவேலை பார்ப்பான்
"நான் சொன்னாலும் உன் மகன் அதையே தான் செய்வான் சிவாகுட்டி" என்று சிவகாமி தோளில் கை போட போக, மகேந்திரன் பார்த்த பார்வையில் ..
"ஈஈஈ மாமா , அதான் அடிச்சேன்" என்று பம்மி கொண்டான்..
"எப்படியாவது அதை இதை சொல்லி கூட்டிட்டு வந்திருடா.. என் தங்கம்ல அத்தை உனக்கு பிடிச்ச,
"நிறுத்து , நீ ஒன்னும் செஞ்சி தர மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும் .. ஐஸ் வைக்காத ,உன் மகன்கிட்ட மிதிப்பட்டுதான், எனக்கு பிள்ளை இல்லாம போகணும்னா யார் மாத்த முடியும்? ஜட்டியில இரும்பு கவசம் வச்சி தைச்சி போடணும் , அப்பதான் அடி கண்ட இடத்தில படாது .போலீஸ்காரனும் அங்கேயேதான் மிதிக்கிறான், இவனும் அங்க தான் மிதிக்கிறான். என்ன பொய் சொல்லி அங்க கூட்டிட்டு போக" என்று யோசனை பண்ணி ஐடியா கிடைத்து விட
"நீ கமிட் ஆனாதான்டா ,நான் ஆக முடியும் அதனால முதல்ல உன்ன கிணத்துல தள்ளுறேன் .. "
"யாரை தள்ள போற ??"என்று ஸ்ரீ லுங்கியை கட்டி கொண்டு சுவற்றில் ஏறி அமர..
"அதை விடு மச்சான் ____ ஸ்கூல் வாத்தியார் ஒருத்தன் பொண்ணுங்க கிட்ட ராங்கா பிஹேவ் பண்றான் போலடா.. இப்பதான் விசயம் வந்திச்சு நாளைக்கு போய் நாலு தட்டு தட்டிருவோம் "..
"வரல நீ போ..
"ப்ச் அப்படி சொல்லாத மச்சான், உன்ன நம்பிதான இந்த ஊர் பொண்ணுங்க இருக்காங்க
"உன் முழியே சரி இல்லை நான் வரல
"நீ வர்ற, நான் ஆயுதம் எல்லாம் எடுத்து வைக்கிறேன், போறோம் அவ்வளவு தான் குட் நைட்" என்று வினய் ஓடிவிட..தாடியை சொரிந்து கொண்டே ஸ்ரீ கண்ணை சுருக்கி யோசித்தவன் ..
"ஓஓஓஓ தாய்கிழவி வேலையா?? இனிமே பொண்ணு பார்க்க போறேன்னு வாயை திறக்கவே கூடாது" என்று தோளை உலுக்கி சிரித்து கொண்டான் ..
____ பள்ளி கேன்டீன் ..
ராதிகா , சிவகாமி, மகேந்திரன் மூவரும் அமர்ந்திருக்க..
"சாரி கிளாஸ் இருந்தது ,ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா??" என்று மணியை பார்த்து கொண்டே சுவாதி வர , அவள் பதட்டம் இல்லாத பேச்சு பார்வை மூவருக்கும் உடனே பிடித்து போனது ..
"இல்லம்மா இப்பதான் வந்தோம் உட்கார்" .. சிவகாமி தன் அருகே அமர வைத்து.. இயல்பாக வாங்கி வந்த பூவை அவள் தலையில் வைக்க, சுவாதி கண்கள் கலங்கிட, அதை மறைத்து கொண்டாள்..
"என் மகன் இப்ப வந்திருவான்.. உன்ன பத்தி சொல்லுடா என்ன பிடிக்கும் பிடிக்காது" என்று பேச தொடங்க..
"எவடி எனக்கு வாழ்கை ஹக் கொடுக்கிறேன்னு ஹக் கிளம்பி வந்தது , வெளியே வாடி "என்று குளறல் சத்தமும்.. வெளியே ஏதோ உடைபடும் சத்தமும் கேட்டு அனைவரும் வெளியே வர..
"சார் குடிச்சிட்டு உள்ள போக கூடாது" என தடுத்த கேன்டீன் முதலாளி மண்டை பிளந்த ஸ்ரீ ..
"அடிங்க!! என்ன நிப்பாட்டிறியா "என்று அடுத்த மிதி போட்டு கொண்டு புல் போதையில் ஸ்ரீ தள்ளாடி கண் தெரியாது தலையை இருபக்கமும் உதறி நிமிர..
"இவனா ராம் ???"என்று சுவாதி முகம் பிடித்தமின்மையில் சுருங்கி போனது..
சுவாதியை சிவகாமி வழிந்து கொண்டே பார்த்தார்
"இதுதான் உங்க மகன் ராமா??" ஒருவேளை பக்கத்தில நின்ன வினய்யா இருந்திட கூடாது என செக் செய்ய
" ஹிஹி இவன்தான் ஸ்ரீராம்.."
"ஸ்ரீ சேர்த்து சொல்றது இப்ப ரொம்ப அவசியம்" என்று மகேந்திரன் தலையில் அடித்து கொண்டார் ..
ஸ்ரீ போதையில் கூட தெளிவாக அவளை பார்த்தான்..
"டேய் ஸ்ரீ பொண்ணு அழகா இருக்குடா ஓகே சொல்லு" வினய் அவன் தோளில் இடிக்க .
"எந்த உலக அழகியா இருந்தாலும் வேண்டாம்னா வேண்டாம்தான், பிடி போதை சாஸ்தி போல நிற்க முடியல" என்று வினய் தோளில் சாய்ந்து கொள்ள. இப்படி ஒரு குடிகார நாயை வைத்து மட்டை அடிக்க அவள் என்ன லூசா??..
"சாரி ஆன்டி எனக்கு பீஸ்புல்லா ஒரு லைப் வேணும், உங்க மகன பார்த்தா அது..க்கு வாய்ப்பு இல்லேன்னு தோணுது, சோஓஓ தப்பா நினைக்காதீங்க, எனக்கு இந்த கல்யாணம் சரிவராது "போல்டாக சொல்லி விட்டாள்...
"ஏதே ஸ்ரீயை பிடிக்கலையா ? யார பார்த்துடி பிடிக்கல சொன்ன, என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்துறாங்க ..என்ன எப்படி பிடிக்கலை கட்ட மாட்டேன்னு சொல்லலாம் "என்று வினய் ஸ்ரீயை பிடிக்கும் முன்பு , திமிரி சுவாதி அருகே வந்து நின்றவன்..
"பிடிக்கல கட்ட மாட்டேன்னு, என் டையலாக் நீ எப்படி சொல்லலாம் , அதை நான்தான் சொல்லணும் "... அவள் மூக்கை சுருக்கி நகர, அவள் கையை வம்படியாக இழுத்து நிறுத்திய ஸ்ரீ
"பேர் என்னடி ?
"வாட் இஸ் திஸ், விடுங்க" என்று சுவாதி சிவகாமியை பார்க்க ..
"டேய் ஸ்ரீ விடுடா .. நீயும் கல்யாணம் வேண்டாம்தான சொன்ன பின்ன என்ன, வா வீட்டுக்கு போகலாம் சாரிம்மா தப்பா நினைக்காத, வாடா ,மானத்தை வாங்காத "
"யார் நான் வாங்கிறேனா, இந்த ஸ்ரீயை பிடிக்கலைன்னு அவ எப்படி சொல்லலாம் ??"என்று அவள் கையிலிருந்த புக்கை பிடிங்கி பெயரை பார்த்துவிட்டு ..
"இந்த பாரு ஸ்வீட்டி...
"சுவாதிடா தடியா என ராதிகா தப்பாக வாசித்த அண்ணனை கலாய்க்க
"உன் திருவாயை பொத்து ,அவளுக்கு நான் தான் பேர் வைப்பேன் ..
"பாரு உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்.. கமிட் ஆகிக்க.. இன்னையிலிருந்து நாம லவ்வர்ஸ் .. நைட் டெய்லி போன் போடுவேன், பிக் பண்ற , பண்ணணும் இல்லைன்னு வை உன் லேடீஸ் ஹாஸ்டல் கண்ணாடி உடையும் .. பேசல வாடன் பல்லு உடையும் புரியுதா ?
" நம்பர் கொடு " அவள் பே என்று முழிக்க.. அவள் பையை உருட்டி போனை எடுத்து, தன் நம்பரை போட்டு புருஷன் என பதிஞ்சி , ஒரு கால் தனக்கு அடித்து விட்டு ..
"இன்னையிலயிருந்து லவ் பண்றோம், அப்புறம் இரண்டு மாசம் கழிச்சு கல்யாணம் பண்றோம், ஆசையை பொறுத்து பிள்ளை பெக்குறோம், மாட்டேன், முடியாது ,உன்ன பிடிக்கலைன்னு ஏதாவது சொன்னேன்னு வை, பேனா கத்தி கேள்வி பட்டிருக்க.. ""
"ம்ஹூம்
"மச்சான் அதை எடு "என வினய்யிடம் கை நீட்ட அவன் பேனாவை தூக்கி போட..
"இதுதான் அது, கோடு போட்டிருவேன் .. நான் லவ்வர் பாயா இருக்கிறதும் , பொறுக்கி பயலா மாறுறதும் ஸ்வீட்டி கையிலதான் இருக்கு, ஓகே" அவள் முன்னால் காற்றை ஊதி கூற.. கப்பென்று மது வாடை அவளை முகத்தை சுருக்க செய்ய ...ஒரு தினுசாக சுவாதியை கதற விட்டான்
"ஓஓஓ இதுக்கேவா நீ மட்டும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லல , இதே வாடையோடு உன் வாய் மேல வாய் வச்சி, உறிஞ்சி எடுத்திடுவேன்" என அவளுக்கு மட்டும் கேட்க சொல்லி விட்டு ..
"தாய்கிழவி இப்ப உன் மருமககிட்ட கேளு என் மகனை கட்டிக்கறியான்னு..
"டேய் என்னடா இது..
"ப்ச் கேளுன்னு சொன்னேன் ..
"யம்மா சுவாதி அவனை கட்டிக்கிறியா.. சுவாதி ஸ்ரீயை பார்க்க அவன் உதட்டை குவித்து காட்ட
"கட்டிக்கிறேன்!!" என்று சம்மதம் சொல்ல..ஸ்ரீ சிரித்து கொண்டே
"பாய் ஸ்வீட்டி நைட் பேசுறேன்" என கையை ஆட்டி ப்ளைன் கிஸ் பண்ணிவிட்டு
"வா மச்சான் கமிட் ஆனதுக்கு போய் சரக்கு போடுவோம்" என்று வினய்யை இழுத்து கொண்டு போக.. சுவாதி அவன் குடும்பத்தை சுற்றி தேட அப்பவே ஓடிருச்சி...
இப்படி ஒரு கமிட் ஆன ஜோடி உலகிலேயே யாரும் பார்க்க முடியாது" என்பது போல இருவரும் கமிட் ஆகியாச்சி..
இதுவே இப்படி இருந்தா, இவன் லவ் பண்ணினா எப்படி இருக்கும்.. கருண கொடுரமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..