பகலவன்4

Pani

பகலவன்4

4 பகலவனின் பனிமலர் அவளோ!!

"என்ன மச்சான் வெறும் நாலாயிரம்தான் தந்தானா ,என் சர்டிபிகேட் கொடுக்கும் போது ஏழாயிரம் தந்தானேடா, வேர் கடலையை வானில் போட்டு வாயில் பிடிக்க போன ஸ்ரீக்கு, குறுக்கே கைவிட்டு வினய் அதை வாயில் போட்டு கொள்ள 

"தொழில் டல்லா போகுதாம் சரி போய் தொலைன்னு வாங்கிட்டு வந்துட்டேன்.."

"அப்போ வா சரக்கு போடலாம்.

"அதுக்கு வேற யாருகிட்டயாவது உசார் பண்ணுவோம், இது வேற வேலைக்கு" என்று யாரையோ எதிர்பார்த்து காத்திருந்த ஸ்ரீ ,, ஒரு காலில்லா சிறுவன் வெயிலில் தவிழந்து வருவதை பார்த்து விட்டு ..

"ஏன்டா உன்ன அங்கதான நிற்க சொன்னேன் எதுக்கு வெயில்ல வந்த" என உடனே போய் ஸ்ரீ அவனை தூக்கி பைல்கில் அமர வைத்தவன். 

"மச்சான் நீயும் பின்னாடி உட்கார்ந்து அவன பிடி.."

"எதுக்குடா??" 

"ஒரு வீல் வண்டி வாங்கி கொடுப்போம்.. இந்த சர்டிபிகேட் அலமாரியில இடத்தை அடைச்சிகிட்டு கிடக்கு அவனுக்காவது உதவட்டும் "

"அட !! பார்டா என் மச்சான் சமூக சேவை எல்லாம் செய்றான்.."

"மூடிட்டு"

"மூடியாச்சு, ஏறியாச்சி, போகலாம் ரைட்" என அந்த சிறுவனோடு வீல் வண்டி வாங்க வந்தா, விலை யானை விலை சொல்ல..

"என்ன மச்சான் நாலாயிரம்தான இருக்கு, என்ன பண்ண? என்று வினய் ஸ்ரீ தோளில் கைபோட, அந்த சிறுவன் வேறு ஆசையாக ஸ்ரீ முகத்தை பார்க்க.. தாடியை நீவிவிட்டு கொண்டே வெளியே பார்த்தவன் முகம் பளிச்சென்று ஆகி போனது .. 

"இருடா என் பொண்டாட்டி கிட்ட காசு வாங்கிட்டு வர்றேன், டேய் உனக்கு என்ன பிடிக்குதோ வாங்கு, காசோட வர்றேன்" என ரோட்டில் அனாமத்தா நின்ற பைக்கை ஒரு ஜம்ப் பண்ணி குதித்து , நிறுத்தம் விட்டு நகர்ந்து கொண்டிருந்த, பேருந்து பின்னால் ஸ்ரீ ஓட ஆரம்பிக்க .. 

"பொண்டாட்டியா?? யார் பொண்டாட்டியை சொல்றான்.. நம்மள நடுத்தெருவுல இப்படி புலம்ப விட்டுட்டு போறதே, அவனுக்கு வேலையா போச்சு" வினய் போனை எடுத்து ஸ்ரீக்கு போட..

பஸ்ஸின் பின்னால் ஓடிக்கொண்டே, பஸ் வாசலில் கம்பி பிடித்து படிக்கட்டில் ஏறியவன்.. ஃபோனை எடுத்து காதில் வைத்தான்..

" யாருடா உன் பொண்டாட்டி ?"

"வேற யாரு ஸ்வீட்டிதான்" கண்களை உள்ளே அலைய விட்டு ஆளை தேடினான் ..

"டேய் அவளதான் கல்யாணம் கட்ட மாட்டேன் ,சும்மா மிரட்டதான் அப்படி சொன்னேன்னு சொன்ன.."

" அது நேத்து ராத்திரி மச்சான்.. அதுக்கு பிறகு நிறைய மேட்டராகி போச்சு , அதனால ப்ளான் ஏ யை கேன்சல் பண்ணிட்டு , மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான் பி யிக்கு வந்துட்டேன்.. நீ ஸ்டேட்டஸ் பாக்கலையா.. நான் நேத்தே கமிட்டட்ன்னு வச்சுட்டேனே" என்றவுடன் வினய் வேகமாக அவன் வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ் எடுத்து பார்க்க.. கமிட்டட் வித் ஸ்வீட்டி என இருந்தது

"ஆமா கமிட் ஆகிட்டான் , இப்ப எதுக்குடா அவ பின்னாடி ஓடுற..காசு குறையுதுன்னு உன் ஆள பார்க்க போனா எப்படி ??"

"காசு வாங்கதான் போறேன்

"என்னது அவகிட்ட காசு வாங்க போறியா "

"ஆமா , பின்ன எவ்வளவு காலத்துக்குத்தான் புருஷன் சம்பாதிச்சு பொண்டாட்டி வீட்டுல உட்கார்ந்து சாப்பிடுறது .. நாம ஒரு ட்ரெண்ட் கிரியேட் பண்ணி விடுவோம் மச்சான் , பொண்டாட்டி வேலைக்கு போய் சம்பாதிக்கட்டும்.. நாம இதே மாதிரி வெட்டியா ஊர் சுத்துவோம்.. சும்மா சொல்ல கூடாதுடா அவளுக்கு நல்ல சம்பளம், நேத்தே விசாரிச்சிட்டேன் ..இனிமே என் அப்பன்கிட்ட தேவையில்லாம பேச்சு கேட்க வேண்டாம் பாரு.. யாரு சம்பாதிச்சா என்ன நமக்கு துட்டுதானடா முக்கியம் சரி வை. ஸ்வீட்டிகிட்ட காசு வாங்கிட்டு வரேன்" என அவளை நோக்கி நகர்ந்து கொண்டே போனை வைத்து விட்டான் ..

"இவனை நம்பி சிங்கிள் ஸ்டேட்டஸ் வெச்சது தப்பா போச்சே, சரி எப்படியும் ப்ளான் சி யின்னு ஒன்னு ஏதாவது வச்சிருப்பான்.. பொறுத்திருந்து பார்ப்போம் "என கடையில் குரங்கு பொம்மையோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டான்..

இரவு இவன் பண்ணிய அழிச்சாட்டியம் தாங்க முடியாது சுவாதி தூங்காமல் விடியற்காலை தூங்கி காலையில் முழிக்க லேட்டாகி, ஸ்கூல் பஸ் போயி, அவுட் பஸ் பிடிச்சு, இவனை பொறுக்கி பொறுக்கி என திட்டி கொண்டே, பஸ்ஸில் ஏறி அமர்ந்து ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து தலையை சாய்த்தாள்.. ஸ்ரீ கடையில் மீதி காசுக்கு பாக்கெட்டை தேடியவன் ஏதேர்ச்சையாக பஸ்ஸை பார்க்க.. சுவாதி அவன் கண்ணில் மாட்ட உடனே வந்தாச்சு தொல்லை கொடுக்க..

டங் டங் என கண்ணை மூடி அமர்ந்திருந்த சுவாதி அருகே கம்பி தட்டும் சத்தம் கேட்டு ..

ஆர்கே நகர் ஒரு டிக்கெட்" என காசை நீட்ட, அதையும் வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்ட ஸ்ரீ..

"கிழவி போய் அந்த சீட்டுல உட்கார், நான் என் பொண்டாட்டி கூட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு" எழும்ப மறுத்த கிழவியை குண்டுகட்டாக தூக்கி பக்கத்து இருக்கையில் போட்டு விட்டு ..

இவனை இங்கு எதிர்பாராத சுவாதிக்கு குளிரிலும் வியர்வை துளி அரும்பி போனது .... 

"அடுத்த ஸ்டாப்பல இறங்கிடு ஸ்வீட்டி "என்றான் அவள் அருகே அமர்ந்தபடி..

"எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறாங்க ,ப்ளீஸ் எழும்புங்க "அனைவரும் திரும்பி திரும்பி பார்க்க அவளுக்கு அவமானமாகி போனது.. 

"ப்ச் எவன் பார்க்கிறான் சொல்லு அடிச்சு மூஞ்சை உடைஞ்சிடலாம்.. "

"ப்ளீஸ் அடுத்த சீட்லையாவது தள்ளி உட்காருங்க

"ஓஓஓ அப்படி சொல்றியா ..

"ம்ம் எப்பா பொறுக்கிக்கு புரிஞ்சதே "என நினைத்து பெருமூச்சு விடும் முன் அவள் தோளில் ஸ்ரீ கை வந்து விழுந்தது ..

"என்ன பண்றீங்க ??"பதறி விலகிய சுவாதியை இழுத்து அமர வைத்த ஸ்ரீ

" நாம இரண்டு பேர் லவ்வர்ஸ், இப்படிதான் இருக்கணும் உட்கார், சேர்த்து டிக்கெட் எடு. ஏடிஎம் கொண்டு வந்தியா?" என அவள் பேக்கை உருட்ட.. பெருமூச்சு விட்டாள், ஏதாவது இவன பண்ணணும் ஆனா என்ன பண்ண? அதுதான் அவளுக்கு புரியல.. 

"ஏய் அந்தா ஏடிஎம் இருக்கு வா வா" என்று அவளை இழுத்து எழும்ப வைத்து, பஸ் ஓடும் போதே ஸ்ரீ இறங்கி விட சுவாதி படிக்கட்டில் பே என நிற்க .. 

"ப்ச் ஓடுற பஸ்ஸில இருந்து இறங்க தெரியாதா, இவ என்ன டீச்சர்" என மறுபடி ஓடி வந்து ஏறி, அவளை இடுப்போடு தூக்கி கொண்டு ஸ்ரீ கீழே குதிக்க"

"ம்மா" குரங்குகரணம் அடித்தது போலவே இருக்க சுவாதி பயந்து அவன் தோளில் புதைந்து கொண்டாள், விழுந்தா எலும்பு மிஞ்சாதே.. அவளை தன்னை விட்டு விலக்கி விட்ட ஸ்ரீ .

"ஆள் இருக்கும் போதுதான் கட்டிப்பிடிப்பியா, அறிவு இல்ல நட "என்று ஸ்ரீ முன்னால் போக 

"என்னவோ லவ்வு தாறுமாறாகி கட்டிபிடிச்ச மாதிரி பேசிட்டு போறான்.. இந்த பொறுக்கியை போலிஸ்ல தொல்லை பண்றான்னு பிடிச்சு கொடுத்திடலாமா" என யோசனையாக சுவாதி பின்னாடி போக..

"வணக்கம் ஸ்ரீ "என்று ஒரு போலீஸ் வணக்கம் போட..

"ம்ம் ம்ம் என கையசைத்து விட்டு , 

" ஏய் எட்டி வாடி எனக்கு நேரம் ஆகுது உன் பின்னாடியே சுத்திட்டு இருக்க முடியுமா" , வெட்டி வேலைக்கு போகும் ராசா அவசரம் வேறு பட்டுகொண்டார்.. 

"ஆக போலீஸ்கிட்ட போக முடியாது பேசியும் புரியவைக்க முடியல "என சிந்தையில் உள்ள போக..

"ஏடிஎம் நம்பர் சொல்லு ஸ்வீட்டி..

"2000" சிந்தனையில் உளறி விட 

"ஓஓஓ ஓகே என போட்டு பத்தாயிரம் ரூபாய் எடுத்து கொண்டவன் ..

"இந்தா கார்ட், நிறைய பேலன்ஸ் இருக்கு போல, இது என் ஜீ பே நம்பர் , நைட் பத்தாயிரம் ரூபாய் ஏத்தி விடு.. ஆட்டோ பிடிச்சு வேலைக்கு போயிடு , நைட் போன் போடுறேன் என நாலு எட்டு எடுத்து வைத்தவன்..யோசனையாக நெற்றி சுருக்கி 

"லவ் பண்ணினா ஏதோ சொல்லணும்ல , ஓய் ஸ்வீட்டி .. 

ஹான் 

"ஐ லவ் யூஊஊஊஊ ஓகேவா" என கத்தி கொண்டே வந்த பஸ்ஸில் ஏறி போய்விட..சுவாதி போகும் அவனை பார்த்து கொண்டு நடுரோட்டில் நின்றாள் 

"நல்லவேளை ஏடிஎம்ம தந்திட்டு போனானே, இது சரியே வராது, ஒன்னு இந்த ஊர்ல இவன் இருக்கணும் இல்ல நாம இருக்கணும் என்று ஸ்டீபனுக்கு போனை போட்டு ஸ்ரீ நடத்தை பத்தி கூட 

"ஒழுங்கா இருந்த உன் வாழ்க்கையை நானே சிக்கலாக்கிட்டேன் சுவாதிம்மா..

"அதை விடுங்க ஆங்கிள் , இவன்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம் ... அதை சொல்லுங்க டார்ச்சர் தாங்கல .. "கொலையா கொன்னு எடுத்தான் ..

"பேசாம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிடு சுவாதிம்மா, கல்யாணம் முடிஞ்சா உன்ன தொல்லை பண்ண மாட்டான்.."யோசனையில் தலையை தடவினாள் .. இவன விட்டு தள்ளி போனா போதும் சாமி டார்ச்சர் ஆசாமி என்று தலையை உதறி கொண்ட சுவாதி..

"சரி ஆங்கிள், அப்போ நான் இன்னைக்கே சென்னை கிளம்புறேன்.. நீங்க ஏதாவது நல்லா மாப்பிள்ளையா பார்த்து வைங்க , தயவுசெய்து இவன மாதிரி எல்லாம் வேண்டாம் ஆங்கிள் .."இவன் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு போதும்ப்பா ஓடிரணும் என நல்ல முடிவு தான் எடுத்தாள்.. ஆனால் இனி முடிவு என்ன மூச்சு கூட அந்த குடைச்சல் மன்னன் நினைத்தால்தான் முடியும் .. 

"புரியுதும்மா இனி ஜாக்கிரதையா செய்றேன் 

"ஓகே, மகி ஆங்கிள் கிட்ட கல்யாண விஷயம் பத்தி எதுவும் சொல்லாதீங்க ,கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்லிக்கலாம் 

"சரிம்மா நீ பார்த்து வந்து சேரு ..

"ம்ம் என வைத்தவள் இரவோடு இரவாக ஆந்திராவை காலி பண்ணி ஓடியேவிட்டாள்..   

இரண்டு நாள் டார்ச்சருக்கே, இந்த அல்லுவிட்டா லைப் லாங்க் அவன் டார்ச்சர் இதை விட கொடுமையா இருக்குமே , என்ன செய்வாள்... 

ஒரு மாதம் கடந்து விட்டது அவள் ஆந்திராவை காலி பண்ணி... 

"என்ன மச்சான் சோகமா இருக்க.."ஸ்ரீ இரவு பாலத்தின் மீது படுத்திருக்க .. அவன் காலில் தலைவைத்து வினய் படுத்திருந்தான்.. சுவாதி போன் நம்பர் முகவரி அத்தனையும் மாத்திட்டா எல்லாம் ஸ்ரீக்கு பயந்து தான்..  

"இல்லடா ஸ்வீட்டியை காணல.." தாடி நடுவே கொஞ்சூண்டு கவலை .. 

"அட மச்சான் லவ் பண்றியா?? என்கிட்டசொல்லவே இல்ல பார்த்தியா ?"

"ப்ச் அதெல்லாம் ஒரு இழவும் இல்ல, ஒரு ஐயாயிரம் ரூபாய் வேணும்" அவளுக்கு போன் போட்டா ஸ்வீச் ஆப்னு வருது

அதான பார்த்தேன் நான் கூட லவ்வு வந்துடுச்சோன்னு பயந்துட்டேன மச்சான் , உனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது, அந்த புள்ளையை பார்க்க நல்ல புள்ள போல இருக்கு ..பாவம் போயிட்டு போகுது..

"அதுக்கு என்ன பிடிக்கல சொல்லுவாளா".. 

"நீயும் தான்டா சொன்ன "

"நான் சொல்வேன், அவ சொல்ல கூடாது ,அந்த கோவமே எனக்கு போகல... இப்ப கமிட் ஆகிட்டு என்கிட்ட சொல்லாம ஓடி போயிட்டா, அதுக்கும் சேர்த்து இருக்கு இந்த பொண்ணுங்களே இப்படிதான்டா"

" சரி விடு , அவ ஹாஸ்டல்தான் தெரியும்ல அங்க போய் கேட்க வேண்டியதுதான ?

"பச் அது போன தடவை ரூபாய் தேவைப்படும் போது போனேன் காலி பண்ணிட்டா போல மச்சான்.. "

"அவ்வளவு தொல்லை கொடுத்திருக்க , ஓடி போயிட்டா சரி விடு நமக்கு எப்பவும் இந்த குவாட்டர் பாட்டல் தான் துணை "

"அது எப்படி விடுவேன்.. இவ என்ன ரொம்ப அசிங்கப்படுத்தி பார்க்கிறா மச்சான், என்னைக்கா இருந்தாலும் கையில மாட்டுவா கைமா போட்டுடுறேன் ..

"செய் ஸ்ரீ அப்பதான் பயம் வரும் . ஹான், உன்கிட்ட உன்ன சொல்லணும் நினைச்சேன், அந்த குந்தவை இருக்கால்ல நேத்து போன் போட்டா" என ஏதோ விஷயம் கூற..

'__ எப்படிடா போய் விழுவாள்க .. "

"என்ன செய்ய மாட்டிகிட்டா போல ஓன்னு அழுகிறா.."

"அப்ப சாவ சொல்லு ..."

"அட நீயே இப்படி சொன்னா எப்படி ஸ்ரீ , பாவம்டா போயிட்டு வந்திடலாம்.."

"காசு.....

"அவ வளையலை உருவிட்டு வந்திட்டேன், அள்ளி கொடுத்தாலும் நமக்குன்னு கிள்ளி வச்சிட்டு அள்ளி கொடுன்னு பாரதியார் சொல்லி இருக்கார் மச்சி "

"அப்படியா சொல்லி இருக்கார் "

"ஆமா மச்சி நம்பு , நீ நாலாப்புல அம்மை வந்து கிளாஸூக்கு வரலல்ல.. அப்ப நடத்தின பாடம் இது வா போவோம்" என்று ஒரு பஞ்சாயத்தை தீர்க்க இருவரும் சென்னை பேருந்தில் ஏறி அமர்ந்தனர் ... 

ஆனால் இங்கோ சுவாதிக்கும் பேராசிரியரா ஆனந்துக்கும் திருமணம் நடைபெற போகிறது .... 

இன்னும் சில வினாடியில் சாதா சுவாதி, சுவாதிஆனந்த் ஆக போகிறாள்.. 

நம்ம ஸ்ரீ வேற போயிட்டு இருக்கான், எத்தனை ஏழரை, எட்டரை எல்லாம் இழுக்க போறானோ?