பகலவன் 5
Pani5

5 பகலவனின் பனிமலர் அவளோ??
"சுவாதிம்மா கண்ணுக்கு நிறைவா இருக்க, உன்ன இப்படி பார்க்க மைதிலி இல்லையே" .. அதற்கும் சிறு சிரிப்பு தான் கொடுத்தாள்..ஆனந்த் மணமேடைக்கு வந்துட்டான் ம்மா வா ..
"ஆங்கிள் எனக்கு ஏனோ மனசு இந்த கல்யாணத்துல ஒட்ட மாட்டைக்குது '"
"ஏன்டா ஆனந்த் பிடிக்கலையா?"
"ச்சே சே இல்ல ஆங்கிள் அவர் பேச்சு நடத்தை எல்லாம் ரொம்ப டிசென்ட் , பட் ஏனோ மனசு தயங்குது, ஏன்னு தான் புரியல.. "
"வேணும்னா கல்யாணத்தை நிறுத்திடுவோமா சுவாதிம்மா, உனக்கு பிடிக்காம எதுவும் எப்பவும் நான் பண்ண மாட்டேன் .."
" இல்ல அங்கிள் அரேஞ்ச் மேரேஜ் பண்ணுன எல்லாரும் இப்படித்தானே.. தெரியாத யாரையோ கல்யாணம் கட்டிக்கிட்டு அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுகிட்டுதான வாழ்கிறாங்க, எனக்கும் இந்த தனிமை ரொம்ப போர் அடிக்குது.. எனக்காக யாரு இருக்கான்னு நினைச்சு நினைச்சு ராத்திரி தூக்கம் வர மாட்டேங்குது, ஆனந்த் இரண்டு தடவை பேசியிருக்கார்.. அப்படி எதுவும் வித்தியாசமா தெரியல, அதுவும் உலகத்துல இருக்குற எந்த ஆம்பளையும் அவன் அளவுக்கு இருக்க மாட்டாங்க.. அப்பா இரண்டு நாள்ல கிறுக்கு பிடிக்க வச்சுட்டான்.. எப்படி இவரயெல்லாம் வீட்ல சமாளிக்கிறாங்க .."ஸ்ரீ விடாது துரத்தியது போல் பிரம்மை அவளுக்கு..
"உனக்கே இப்படி இருக்குதுன்னா, மகி நிலைமைய நெனச்சு பாரு.. ஒரு நாள் கூட வீட்ல சண்டை வராம இருந்ததே கிடையாதாம் எதுக்குடா மிலிட்டரில இருந்து வந்தோம்னு தினம்தினம் கவலைப்படுறான்.. இவனும் அதை எல்லாம் கணக்கிலேயே வைக்கிறது கிடையாது.. தான் போறதுதான் போக்குன்னு, யாரு பேச்சையும் கேட்க மாட்டான்."
" கொடைச்சல் சாமின்னுதான் பேர் வைக்கணும்..
" வச்சிட்டா போகுது சரி வா கல்யாணத்துக்கு நேரம் ஆகுது , சுவாதிம்மா ஆனந்த் வீட்டில முன்ன பின்ன இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போடா.. நீ இவ்வளவு நாள் ஒத்தையா இருந்த பொண்ணு குடும்பம்னு ஆகிப்போச்சுன்னா, நாலு பேர் நாலு விதமா இருப்பாங்க .. எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி போகணும் சரியா .. இதெல்லாம் உனக்கு உன் அம்மா இருந்து சொல்லி தந்திருக்கணும் என்ன செய்ய? எல்லாம் உன் விதி.."
இதுவே தப்புதான், சகிச்சி வாழ், பொறுத்து வாழ் என ஒரு பெண்ணை அனுப்பி வைக்க .. அவள் ஒன்னும் அடிமையாக எங்கேயும் போகலையே,
ஒரு வீட்டுக்கு வாழ போறா, வாழ்க்கை முக்கியம் தான் ஆனால் அதை விட அவளுக்காக வாழ்வதும் முக்கியம்தான்.. சம உரிமை என வாதம் பண்ணுவது இல்லை சமத்துவம் .. தனக்கான உணவை நினைத்த நேரத்தில் சாப்பிட முடியும், தலைசாய்க்க புகுந்த வீட்டில் ஒரு இடம் உனக்கு இருக்கிறது என்பதையாவது தெளிவுபடுத்தி அனுப்புங்கள் ... அவள் வாழ போனாளா, இல்லை வேலைக்கு போனாளா என்று கூட மறந்து, மிச்சத்தை தின்று எச்சத்தை பொறுக்கி என்று ஓடிவிடுகிறது அவள் இளமையும் கனவுகளும்...
"அமைதியையும் தனிமையையுமே சமாளிச்சுட்டேன் குடும்பத்தை சமாளிக்க மாட்டேனா அங்கிள்" என ஸ்டீபன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்ட ஸ்வாதி தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்..
அளவான நகை, அரக்கு சிகப்பு நிற பட்டுச்சேலை எல்லாம் நிறைவாகத்தான் இருந்தது.. ஆனால் முகத்தில் ஒரு தேஜஸ், திருமணமாகப் போகிறது என்ற களை சுத்தமாக இல்லை.. பெருமூச்சு விட்டுக் கொண்டவள்.. காலில் உள்ள முத்து கொலுசு சத்தம் கொடுக்க மணமேடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..
எல்லாத்தையும் சமாளிக்க முடியும் , ஸ்ரீயை தவிர என்று யார் சொல்லுவது? அவள் கிழக்க போனா அவன் பாதையே இல்லாத பரங்கி மலையில்தான் போய் நிற்க வைப்பான்.. இவள் வேண்டுவது அழகான வாழ்க்கை, அவன் கொடுக்க போவது அடிதடி வாழ்க்கை. . இவள் தேடுவது அன்பு அவன் கொடுக்க போவது அவதி, இவள் எதிர்நோக்கி இருப்பது பூஞ்சோலை, அவன் தர போவது பாலைவன முட்கள்..
ஆனந்த் வாட்டசாட்டமாக கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருக்க.. அவன் முகத்தில் ஒரு மெல்லிய பதட்டம் ஒன்று குடிகொண்டிருந்தது.. அடிக்கடி போனை பார்ப்பதும், கையில் உள்ள வாட்சைப் பார்ப்பதும் என்று வித்தியாசமாக பண்ணிக் கொண்டிருக்க.. சுவாதி போய் அவன் அருகில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்..
யாரையும் பார்க்காது குனிந்து அமர்ந்து எரிந்து கொண்டிருக்கும் ஹோம குண்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.. ஏதோ இந்த திருமணமே அவளுக்கு ஒட்டாத தன்மையைதான் கொடுத்துக் கொண்டிருந்தது .. அதோடு ஆனந்த் தன் இணை என்று ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு நெருடல் வேறு அவளை உதைத்து தள்ள..
"கல்யாணம் முடிஞ்சா சரியாகிவிடும் ,ஆல் இஸ் வெல்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அய்யர் சொன்ன மந்திரங்களை ஆனந்தோடு சேர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.
"மாப்பிள்ளை நல்ல நேரம் முடிய போகுது கெட்டிமேளம் கெட்டிமேளம் ,தாலிய கட்டுங்கோ" என்று தாலியை எடுத்து ஆனந்த் கையில் கொடுக்க தாலி அவள் நெஞ்சில் படும் முன்பு
ஆஆஆஆஆ என அலறி ஆனந்த் எரிந்து கொண்டிருந்த அக்னி உள்ளே விழுந்தான்...
"_______ தொங்கனா கொடுக்கா, அங்க ஒரு பொண்ணுக்கு பிள்ளையை கொடுத்துட்டு, இங்க இன்னொரு பொண்ணு கழுத்தில தாலி கட்ட போறியா" என்று அவன் முகத்தில் ஓங்கி மிதித்து தரையோடு தரையாக நசுக்கி கொண்டுநின்றான் ஸ்ரீராம் .....
"ஏன்டி கருவாட்டு கொண்டைகளா, வெள்ளை சட்டை போட்டு வந்து பொண்ணு கேட்டாலும் உடனே தலையாட்டி வந்து உட்கார்ந்திடுவியா" என காப்பை இழுத்து விட்டு கொண்டே ஸ்ரீ மணப்பெண் நோக்கி திரும்ப.. எச்சில் விழுங்கி கொண்டு சுவாதி மாலையை கசக்கி கொண்டிருந்தாள்..ஸ்ரீ அவளை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்த்து விட்டு
"நீயா? என்னடி நடக்குது இங்க .. எழும்புடி முதல்ல இவன்தான் பிராடுன்னு பார்த்தா, நீ அதுக்கு மேல பிராடா இருக்க .. என் கூட லவ்வுன்னு கமிட் ஆகிட்டு இவன் கூட கல்யாணம்னு பல்லை இளிச்சிகிட்டு இருக்க..." என்று சுவாதியை பார்த்த பார்வையில் அவளுக்கு அட்ரீனல், பிட்யூட்டரி சுரப்பி எல்லாம் தாறுமாறாக சுரக்க ஆரம்பித்து விட்டது ..
எப்பா ஸ்ரீ என்னாச்சி? என ஸ்டீபன் ஓடிவர
"நீதான் இது எல்லாத்துக்கும் காரணமா. என் லவ்வரை, தப்பு தப்பு என் பொண்டாட்டியை எப்படிடா இவனுக்கு பேசி முடிக்கலாம்.. "
இன்னொருவர் ஸ்ரீ பெரியவரை வயசு வித்தியாசம் இன்றி ஏக வசனத்தில் பேசுவதை கண்டித்து ..
"தம்பி மரியாதை கொடுத்து பேசு அவர் எவ்வளவு பெரிய மனுசன் வா போங்கிற
"நீ சும்மா இருடா சொம்பை ,போய் ஓரமா உட்கார் இல்லை ஸ்ரீ கையால அடி வாங்க வேணடிருக்கும்" என்று வினய் அவனை பிடித்து அமர வைக்க..
ஆனந்த் குந்தவையை ஏமாத்தி பிள்ளை உண்டாக்கிவிட்டு வந்து விட்டதாக வினய் ஆதாரத்தை கொடுக்க...
"சாரி சுவாதிம்மா மறுபடியும் தப்பா போச்சு..
"ப்ச் கல்யாணமே வேண்டாம் ஆங்கிள் , முதல்ல இடத்தை காலி பண்ணுவோம் ,"ஆனந்த் பெற்றவர்களோடு ஸ்ரீ ஏதோ வாக்குவாதத்தில் நிற்க .. சுவாதி மாலையை கழட்டி போட்டுவிட்டு ஸ்ரீயை தாண்டி போக முயல , பேசி கொண்டிருந்த ஸ்ரீ பின்னால் கையை விட்டு சுவாதியை பிடித்து நிறுத்தி
"நீ எங்க போற போய் உட்கார் உனக்கு தனியா பூசை இருக்கு" என்றுவிட்டு அங்கே சண்டைக்கு நாலு அறை போட்டு சுபம் போட்டுவிட்டு இங்கே வந்தவன்
"யோவ் ஐய்யரே மந்திரத்தை முதல்ல இருந்து சொல்லு ..அவர் என்ன இது? என பார்க்க
"என்ன மறந்து போச்சா ,மச்சான் அந்த கத்தியை எடு" என்றதும் அவர் பயந்து மந்திரன் சொல்ல ஆரம்பிக்க.. சுவாதிக்கு நடக்க போகும் அசம்பாவிதம் புரிந்து .. இவன் கூட வாழ்க்கையா என மனம் டிஸ்கோ ஆட..
"என்ன விடுங்க, நான் உங்கள லவ் பண்ணல, உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது ,என் வழி வேற உங்க வழி வேற, உங்கள எனக்கு பிடிக்கலை, ப்ளீஸ் என் வாழ்க்கை உள்ள குறுக்க வராதீங்க" என்று வாழ்க்கை போயிடும் என்ற பயத்தில் பேசி விட ..
"சும்மா பயம் காட்டலாம்னுதான் உன் பக்கத்தில வந்து உட்கார்ந்தேன்.. ஆனா எப்ப என்ன பிடிக்கலை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னியோ ஸ்ரீ முடிவை மாத்திகிட்டான்..
"உனக்கு என்னதான் பிடிக்கணும் , நீ என்னதான் கல்யாணம் பண்ணியாகணும்.. என்கூட தான் வாழணும், அடிறா கெட்டிமேளத்தை "என்று விசில் பறக்க விட்டவன்.. தாலியை எடுத்து அவள் துள்ள துடிக்க கட்டி அவளை விட்டான்..ஸ்டீபன் பதறி போக.
"யோவ் டாக்டர் நீதான் பெரிய ஆளாச்சே, இதையும் என் அப்பன்கிட்ட போட்டு கொடு.. நீ என்னடி என் முகத்தை அப்படி பார்த்துட்டு இருக்க .. ஓஓஓ பஸ்ட் நைட் எப்போன்னு கேட்க்கிறியா, வெரி சாரி கல்யாணம் பண்ண மட்டும்தான் இப்ப மூட் இருக்கு, முதலிரவு கொண்டாட ஆசை வரும் போது சொல்றேன் சரியா.. நீ என்ன பண்ற பந்தியில போய் இடத்தை போட்டு உட்கார்.. நான் இந்த கோஸ்டியை மேளம், சாப்பாடு எல்லாத்துக்கும் பைசா செட்டில் பண்ண வச்சிட்டு வர்றேன்.. அடுத்தவன் காசுல நோகாம கல்யாணத்தை நடத்தியாச்சு, இதை கேள்விபட்டா மிலிட்டரி நியாத்துக்கு சந்தோஷம்தான் படணும்.. ஆனா பட மாட்டானே" என ஆனந்த் குடும்பம் நோக்கி போய்விட.. சுவாதி விக்கி திணறி கழுத்தில் தொங்கிய ஸ்ரீ கட்டிய தாலியின் பாரம் தாங்க முடியாது, இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று கூட தெரியாது அமர்ந்திருந்தாள்..
"என்ன மச்சான் விளையாட்டுக்கு சொல்றன்னு நினைச்சேன் பட்டுன்னு தாலியை கட்டிட்ட..
"நேரம் போகல மச்சான் ,அதான் கட்டிட்டேன் இனிமே வேற எவன் கூடையும் கல்யாணம்னு உட்கார மாட்டால்ல...
"அதுசரி மச்சான் ,இப்ப அவள கூட்டிட்டு வீட்டுக்கு போனா மில்ட்ரி ரவுண்ட் கட்டுவானானே ..
"யாரு இவள கூட்டிட்டு போக போறா .
"பின்ன அவள என்ன பண்ண போற மச்சான்..
"அவளுக்குதான் என்ன பிடிக்கலையே..
"அதுக்கு..
"அதான் பாவம்ல மச்சான், பெண் பாவம் பொல்லாதது ,பொழச்சி போவட்டும்.. வா நல்லா இளம் கிடாவா போட்டிருக்கான்க, தின்னுட்டு போவோம் "என வினய்யை இழுத்து கொண்டு போய் ரகளை பண்ணி தின்னு முடிச்சிட்டு , வெளியே வர மண்டபமே காலி.. சுவாதி ஒரு சேரில் அமர்ந்திருக்க ஸ்டீபன் அவளுக்கு துணையாக இருக்க ...
"மச்சான் கர்சீப் வச்சிருக்க
"நாம என்னைக்குடா அதெல்லாம் யூஸ் பண்ணினோம் "
"அதான" என சுவாதி சேலையில் கையை துடைத்து கொண்டவன்..
"ஓகே ஸ்வீட்டி ஹேப்பி மேரேஜ் லைப் , வாடா போவோம் "என கிளம்ப
"தம்பி சுவாதியை விட்டுட்டு போறீங்களே"..அவன் நேக்கு போக்கு பிடிபடாது ஸ்டீபன் தலையை சொரிந்தார்.. ஓங்கி பேசி பல்லு உடைய தயார் இல்லை..
"அவள கூட்டிட்டு போய் நான் என்ன பண்ண போறேன் .."அசால்ட் பதில் எப்போதும் போல வந்தது ..
"இப்படி சொன்னா எப்படி ?கல்யாணம் பண்ணிட்டு விட்டுட்டு போனா அவ வாழ்க்கை" ...
"எவளோ ஒருத்தியை ஏமாத்திட்டு , இவள வந்து கல்யாணம் பண்ண உட்கார்ந்தானே, அவன் ஏமாத்திட்டு போன பின்ன எப்படி இருந்திருப்பாளோ, அப்படியே இருக்க சொல்லு... பொட்டை பொறுக்கியை நம்பி கல்யாணம் கட்ட வந்து உட்காருவா, என்ன பிடிக்காது உன்கூட வாழ முடியாதுன்னு சொல்றா, அவள கூட்டிட்டு போக நான் என்ன மானங்கெட்டவனா? பாரு மச்சான் தாலி கட்டிட்டேன்னு குடும்பம் நடத்தணும்னு ரூல்ஸ் போடுறதை.. "வினய் தலையை சொரிந்து கொண்டே..
"பாவமா இருக்குடா கூட்டிட்டு போகலாம்..
"அப்ப நீ இரு நான் போறேன் ..
"மச்சான் மச்சான் கோவப்படாத வர்றேன்" என வெளியேறிய ஸ்ரீ பின்னாடி போய்விட்டான்...
"இதுக்கு எதுக்குடா தாலி கட்டின??" என்று கட்டிய தாலியை கழட்டுவும் முடியாது ,போடவும் முடியாது தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்...
உள்ளவுறுதி இல்லாவிடின்
உயங்கல்(மனத்தளர்வு)வந்து சேரந்துவிடும்..
ஸ்ரீயை சமாளிக்க மனஉறுதிதான் அவசியம், இல்லை மண்டையை காய வச்சிடுவான்..
இவனை போல கமிட் ஆகவும் முடியாது , இவன போல கல்யாணம் பண்ணவும் முடியாது .. மெண்டல் பயல்க மொத்தத்தையும் மேய்ச்சி கொண்டு போற எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது யாராவது கொடுங்கப்பா ...