பகலவன் 3

Pani3

பகலவன் 3

3 பகலவனின் பனிமலர் அவளோ?

"ஏன் ஸ்ரீ அந்த பொண்ண உண்மையாவே கல்யாணம் கட்டிக்க போறீயா என்ன? .. வினய்தான் யோசனையாக கேட்டது.

எப்பா இவன் கண்ணை மறைச்சி தேத்தி வச்சிருக்க நாலுல , ஏதையாவது ஒன்னை தூக்கிட்டு போய் இவன் மனசு மாறுறதுக்கு முன்ன, ஐஞ்சு ரூபாய் மஞ்சள் கயிறு கட்டி உடனே கல்யாணத்தை முடிச்சிடணும் என்று மனம் பகல் கனவில் பறந்தது.. 

"ஏன் அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?

"இல்லை நாலைஞ்சு பேர பேசி கரெக்ட் பணணி வச்சிருக்கேன் மச்சான் அதான்

"யாரெல்லாம் ??"

"உன்ன நம்பி சொன்னா ஆட்டத்த கலைச்சி விட்டிற மாட்டியே

"ச்சீ சே நான் அப்படி எல்லாம் பண்ணுவேனடா ..

"நீ பண்ணுவ நாய, அதனால்தான் உன்கிட்ட சொல்ல பயமா இருக்கு "

"ப்ச் இந்த வாட்டி உன் மேல "என ஸ்ரீ வினய் தலையில் அடிக்க போக.. அதை அப்படியே பிடித்து கொண்ட வினய்..

"வேண்டாம் தங்கம், இதோட ஆயிரம் வாட்டி பொய் சத்தியம் பண்ணிட்ட, அதுக்கே நான் அல்பாசுல போயிடுவேன். ஏதா இருந்தாலும் உனக்கும் ஒரு தலை இருக்குல்ல அது மேலேயே அடி...

"சரி எதுவும் பண்ண மாட்டேன் ஆளு சொல்லு ..

"பஞ்சு , மஞ்சு ,அப்பறம் அந்த பொண்ணு பேர் என்ன ஹாங்

"கு...

"டேய் இஇஇஇஇ ஸ்ரீ அலற

"இல்லை மச்சான் குந்தவைன்னு சொல்ல வந்தேன் 

"ஓஓஓ மூணு பேரை ஒரு நேரத்தில மெயின்டெய்ன் பண்ணி இருக்க.."

"பின்ன கடுமையா உழைச்சாதானடா குடும்பஸ்தன் ஆக முடியும் .. இரு மச்சான் போன் வருது பேசிட்டு வர்றேன்" என பைக்கை ஓரம் கட்டி ஆன் பண்ண

"நீ கெட்ட கேட்டுக்கு மூணு பேர் வேணுமா, இனிமே எனக்கு போன் போடு மண்டையை இரண்டா வகுந்துபுடுறேன்" என்று ஒரு பெண் கத்தி விட்டு வைக்க ..வினய் பின்னாடி திரும்பி ஸ்ரீயை பார்க்க பால்வடியும் நோ குவாட்டர்வடியும் முகத்தோடு ஸ்ரீ அவன் தோளில் சாய்ந்து கிடந்தான்..

"ரைட்டு போட்டு விட்டுட்டான், போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வைக்கல , காது டமாரம் ஆகிடும் இவனுக்கு அப்படி என்ன சந்தோஷம் ,அடுத்தவன் லவ்வை கெடுத்து விடுறதுல ச்சை" என்று தோளை உலுக்கி..

"போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டேன், நம்பர் மாத்திடுறேன், மறுபடியும் முரட்டு சிங்கிள் ஸ்டேட்டஸ் வச்சிடுறேன் போதுமாடா..

"இது நல்ல புள்ளைக்கு அழகு 

"அப்ப இப்ப கல்யாணம் பண்ணுவேன்னு அந்த புள்ள கிட்ட சொல்லிட்டு வந்தியே.. அந்த பொண்ண என்ன பண்ணுவ..

"அது ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா, அதுக்காக அவளை கல்யாணம் பண்ண முடியுமா ? என்ன பிடிக்கலைன்னு சொல்றா, அதான் சும்மா மிரட்டி வச்சிட்டு வந்தேன் , அதோட என் குரங்கு குடும்பமும் இனி பொண்ணு பண்ணுன்னு அலையாதுல்ல"..

"அப்ப கடைசி வரை மொட்டை பயலாதான் இருக்க போறியா "

"ம்ஹூம் உனக்கு நான், எனக்கு நீ எப்படி. 

"மச்சான் உனக்கு என்ன பார்த்தா பாவமா இல்ல 

"இருக்கு மச்சான் டிராபிக் போலீஸ் நிக்குது, மாட்டி சாக போறியேன்னு பாவமா இருக்கு "

"எதுக்கு நான்தான் லைசன்ஸ் வச்சிருக்கேனே..

"வச்சிருந்தேன் இறந்த காலத்துல சொல்லு மச்சான்.. உன் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்ட் எல்லாத்தையும் கொடுத்துதான் குவாட்டர் வாங்கினேன் மச்சான் .. 

"அடேய்இஇஇஇஇஇஇ" என்று வினய் அலறியடித்து பைக்கை வேறு பக்கமாக திருப்பி ஓட்ட ஆரம்பித்தான்..  

இரவு ஸ்ரீ வீட்டுக்குள் வர மகேந்திரன் சத்தம் ஓங்கி ஒலித்தது 

"அங்கேயே நில்லுடா ..

"ப்ச் என தோளை உலுக்கி உள்ளே வர .. 

"ஒரு அப்பனா இதுவரை உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை "

"கேட்டாலும் கொடுக்க மாட்டேன்" என சாப்பாடு எதுவும் மீதம் இருக்கா என உருட்ட..

"இவனால நம்ம தூக்கம் டெய்லி போகுது" என தூக்கத்தில் ராதிகா சாமியாடி கொண்டே செகன்ட் ஷோ படத்துக்கு ரெடியாக இருக்க...

"உன்கிட்ட தான்டா பேசிட்டு இருக்கேன், நீ உன்பாட்டுக்கு உன் வேலையை பார்த்தா என்னடா அர்த்தம்"

"உங்ககிட்ட பேச விருப்பம் இல்லைன்னு அர்த்தம் , டெய்லி மீன் குழம்புதானா, மட்டன் வச்சா என்ன?" என அலுத்து கொண்டு ஆம்லெட் பொறிக்க முட்டையை எடுக்க.. சிவகாமி ஓடி வந்து..

"நீ போ ஸ்ரீ நான் பொறிச்சு தர்றேன் 

"இரண்டா பொறி "என இடையில் தூண் போல நின்ற மகேந்திரனை தாண்டி போய் சோபாவில் காலை நீட்டி படுத்து கொண்டு ,மேட்ச் பார்க்க ஆரம்பிக்க 

"சொல்லி வைடி அப்பன்னு ஒருத்தன் நான் இருக்கிறதுனால தான் இப்படி காலை ஆட்டிக்கிட்டு துரை திங்குறார் .. "

"அதுக்கும் காலாட்றதுக்கும் என்ன சம்மந்தம் "என்று கிராஸ் வர , அவருக்கு இந்தமூட்டைபூச்சு தொல்லை தாங்ல..

"பாருடி இவனால என் நண்பன் கிட்ட கெட்டபேர் ஆகி போச்சி... "

"அப்ப பேர மாத்த சொல்லு ...." அவர் பாவம் எதை உடைக்க எல்லாம் நம்ம சம்பாதிச்ச பொருளேன்னு பாவமா எதையும் உடைக்க முடியாது நின்றார்...

"சும்மா இரு ஸ்ரீ அப்பாகூட கூட கூட பேசாப்ப..

" நீ சோத்தை போடு ,சோதனை பண்ணாத என்று சோற்றை திங்க... 

"ப்பா இப்ப விட்டா இவன பிடிக்க முடியாது, பேசுங்க" என்று ராதிகா தகப்பன் காதை கடிக்க..

"அந்த பொண்ணு ஸ்டீபனுக்கு போன் போட்டு வருத்தபட்டிருக்கு, அதான் பிடிக்கல சொல்லுதுல்ல அவகிட்ட ராங்கா என்னத்தை பேசின அவமானமா ஆகி போச்சி.. இனிமே அந்த புள்ள பக்கம் இவன் போனான்னு வை.."

"போவேன் , நானா பொண்ணு பார்த்து கட்டி வைங்கன்னு சொன்னது நீங்கதான பார்த்தது.. இப்ப போகாத, பேசாதன்னா எப்படி? போவேன் பேசுவேன் , தள்ளு குள்ளச்சி, ஒருநாள் உன்ன போட்டு தள்ளுறேன் "என ராதிகாவை முறைத்து கொண்டே மாடியேறி போய்விட்டான் ..

"இதுக்குதான் சொன்னேன், நீர் சும்மா இரும் ,அவன் பாட்டுக்கு இரண்டு நாள்ல குட்டிச்சுவர், கட்டபஞ்சாயத்துன்னு அவள மறந்துட்டு வேற வேலைக்கு போயிடுவான்னு ..நான் சொன்னது யாருக்கு கேட்டுச்சு , வேணும்னே போய் அவகிட்ட வம்பு பண்ணுவான் .இரண்டு லட்சம் ரெடி பண்ணுங்க "

"எதுக்கு ??"

"ஹான் உங்க மகனை ஜாமீன் எடுக்க , வாச்ச புருஷனும் சரியில்லை, பிள்ளையும் சரியில்ல நீ ஏன்டி ஷோ பார்த்துட்டு நிற்கிற .. போ போய் படு என சிவகாமி போய்விட மகேந்திரன் நண்பன் முகத்தில் எப்படி முழிக்க என தெரியாது மாடியை பார்த்து கொண்டு நின்றார்..

இரவு ஹாஸ்டல் மாடியில் சுவாதி சற்று பயந்து போய் தான் நின்றாள்.. மாலை வந்தவுடன் ஸ்டிபனுக்கு போன் போட்டு விஷயம் கூறிவிட 

"சாரிம்மா பையன் கொஞ்சம் முன்கோபின்னு சொன்னான் ..இப்படி பண்ணுவான்னு தெரியாதும்மா..

"தயவு செஞ்சி மகி அங்கிள் கிட்ட சொல்லுங்க எனக்கு அவர பார்த்தாலே பயமா இருக்கு.. ஒரு ஸ்கூல் குள்ள போய் ச்சை 

வருத்தபடாத சுவாதிம்மா இனிமே உன்கிட்ட தொல்லை பண்ண மாட்டான்..."

"ம்ம் சரி என்று வைத்துவிட்டாள்.. இருந்தாலும் எங்கே தான் பேசியது தெரிந்து.. ஹாஸ்டல் வாசலில் வந்து நிற்பானோ? நல்ல ஹாஸ்டல் கிடைத்தது , அவள் செய்த பாக்கியம்.. இவன் எதுவும் தொல்லை பண்ணி வம்பா போகுமோ? என்று குளிரில் கையை கட்டி கொண்டு வெகுநேரம் வாசலை பார்க்க..

"ப்பா வரல அப்போ இனி தொல்லை பண்ணமாட்டான் பொறுக்கி, எப்படி பேசுறான் மேனஸ் இல்லாதவன்... கையில் போன் உதற..

"இந்த நேரத்தில யார் ??"என போனை பார்க்க புருஷன் என்று மினுங்க 

ஆஆஆஆ அலறியே விட்டாள்.. பிடிச்சது வேதாளம் இல்ல, குரங்கு என லேட்டாதான் புள்ளைக்கு புரிஞ்சிருக்கு... அவள் மறுபடி மறுபடி கட் பண்ண, ஸ்ரீ போட.. சுவாதி எடுத்தேனா பார் என கட் பண்ண, அவன் விட்டேனா பார் என ஓயாது அடிக்க... 

டிங் டிங் என மெசேஜ் வந்து விழ, பயந்து அதை டச் செய்ய..

"போனை எடுறி போனை எடுக்கல அடுத்த பத்தாவது நிமிசம் அங்க இருப்பேன்" என்று அடுத்த கால் வர,, சுவாதி நடுங்கிய விரல் கொண்டு போனை எடுத்தாள் ..

"எவனுக்குடா பாவம் செய்தேன் இவன்கிட்ட மாட்டிகிட்டு பாடு படுறேன்' என உள்ளம் அலறியது ... நமக்குதான தெரியும் முற்பகல் தெரியாம செஞ்சா கூட பிற்பகல் பட்டேக்ஸில் உதை விழும் என்று... 

"ஹலோ"

"என்ன ஹலோ, பெரிய இவளா நீ .. என் அப்பன் கிட்ட என்னவோ போட்டு கொடுத்திருக்க, அந்தாள் என்ன கத்துறான்.."

"நான் எதுவும் சொல்லல 

"நீ சொல்லாம உன் அப்பன் வந்து மிலிட்டரி கனவுல சொல்லிட்டு போனானா ஹான்.. என்ன பிடிக்கலைன்னு ஊர் ஊரா சொல்லிட்டு திரியுறியா... அப்ப சொன்னது தான் .. நீ என்னதான் கல்யாணம் பண்ணி ஆகணும் .. வேற எதாவது நினைப்பு இருந்திச்சி பொழி போட்டுபுடுவேன்.. ம்ம் இன்னைக்கு லவ் பண்ணியாச்சு, மீதியை நாளைக்கு பேசுவோம் வை, தூக்கம் வருது 

"ம்ம் 

"இனிமே போன் போட்டா ஒழுங்கா ஒரு ரிங்க்ல எடுக்கிற புரியுதா... புரியுதான்னு கேட்டேன் ..

"புரியுது ...

"ம்ம் லவ்வர்ஸ் எல்லாம் போனை வைக்கும் போது முத்தம் கொடுப்பாங்களே, அதை மாதிரி கொடு ..

"ம்ஹூம் 

"கொடிறி இல்ல பைக்கை ஸ்டார்ட் பண்ணிடுவேன்...

"இச் இச்" என்று முத்த சத்தம் வந்து விழ.. அவன் கட் பண்ணி வச்சாச்சி.. இதுக்கு பேர்தான் காதல், இப்படிதான் காதலிக்கணும் என அவனே ஒரு ரூட் போட்டு போக.. சுவாதி போனை பார்த்து கொண்டு நின்றாள்.

இவன்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க , முடியுமா. யாருக்கும் அடங்க மாட்டான் போலயே.. ஒருத்தனை பிடிக்கலை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்ல எனக்கு உரிமை இல்லையா ?மிரட்டியே காரியம் சாதிக்கிறான் , இது தப்பில்ல, என்று இவுக பண்ணிய கூத்து நியாபகம் இல்லாது ஸ்ரீயை குறை கூறினாள்... 

இவன் கல்யாணத்துக்கு ஓகே சொல்றானா இல்லையா என தெரியாது அத்தனை பேரும் முழிக்க சுவாதியோ யார் போன் போட்டாலும் எடுக்கிறது இல்லை.. 

"ஸ்ரீ அப்ப நாள் குறிப்போமா ? காலையிலேயே பைலோடு கிளம்பிய மகனை ஆச்சரியமாக சிவகாமி பார்த்து கொண்டே கேட்டார்.. இன்டர்வியூ எதுவும் போறான் போல முன்னேறிடுவான் எல்லா மருமக வந்த நேரம் என்று சிலாகித்து கொண்டு தூண்டில் போட..

"எதுக்கு??" என்றான் பைக்கை உதைத்து கொண்டே?

"கல்யாணத்துக்கு 

"யாருக்கு கல்யாணம்??" என கேட்டு வைக்க 

"இதுல யாருடா லூசு , நான் லூசு, நீ லூசு என எல்லாம் லூசாகவே இருந்தது.. 

"என்னடி இவன் இப்படி பேசிட்டு போறான் 

"ப்ச் அவனே வந்து கல்யாணத்துக்கு நாள் குறிங்கன்னு சொல்லுவான்.. அப்ப பார்த்துக்கலாம் நாம ஏதையாவது பண்ணி வச்சி உங்கள யார் பண்ண சொன்னான்னு குதிப்பான்..

"அதுவும் சரிதான் ஏதோ இண்டர்வியூ போறான் போல..

"அப்படிதான் போல பைல் எல்லாம் எடுத்துட்டு போறானே..

"உருப்பட்டா சரி" என்று மகேந்திரன் மகன் போன திசையை பார்த்து கொண்டு நிற்க 

"நான் உறுப்பட்டா பாருடா" என ஸ்ரீ அடகு கடையில் பைலை வைத்து நாலாயிரம் ரூபாய் வாங்கி எண்ணி கொண்டிருந்தான் ... 

எப்படி சுவாதிபுள்ள போய் சீக்கி இருக்கு பார்த்திங்களா மச்சீஸ்,