யுகம் 6

Yu6

யுகம்  6

6 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா??

வெயிலுக்காக தலையில் ஷாலை கொண்டு முக்காடு போட்டு இருக்க...  யாரும் அவளை கூர்ந்து பார்த்திருக்கவே முடியாது ... தான் கட்டிய தாலியோடு நின்ற அவளை ஒரு நிமிடம் புலவன் அசையாது நின்று பார்க்க ...அருகே இருந்த பெண் பாவமாக புலவனை பார்க்க  ...

சாரிங்க அவர நான் லவ் பண்றேன் வேற வழி இல்லாம உங்கள தள்ளி விட்டுட்டு தாலிய வாங்கிகிட்டேன்...  மன்னிச்சிடுங்க  "

"அட, போம்மா இப்போ மாப்பிள்ளைக்கு நான் எங்க போறது ?என்ற அப்பெண்  தலையை சொரிய..

"வெளியே ஒருத்தர் பொண்ணு ஓடிப் போயிடுச்சுன்னு பொழம்பிக்கிட்டு இருந்தார்...  போய் பார்த்தீங்கர்னா,   ஜோடி சேர்ந்திடுவீங்க என்றதும் அப்பெண் வெளியே போக...

சுரீர் என்று அவள் கன்னம் தீப்பிடித்து எரிந்தது...  புலவன் தான் பொறி பறக்க அவள் கன்னத்தில் உரிமையாக அடியை இறக்கியது...  

அவளோ கன்னத்தை கண் மூடி தடவினாள் அவளை முறைத்து விட்டு வேகமாக புலவன் நகர  ... அவன் பின்னாடி ஓடிய மிலா

ஏங்க 

ஏங்க  புலவன் தலையை திருப்பி பார்க்க 

"நான் தான் அன்னைக்கே உங்க கிட்ட சொன்னேனேங்க , உங்கள காதலிக்கிறேன்னு , இப்படி யாரையோ ஒருத்தர கல்யாணம் கட்டிக்க வந்தா எப்படி அதான்?? என்றவளை புலவன் திரும்பி பார்க்க ..மிலா , சட்டென்று பயந்து பின்னால் நகர புலவன் அவள் தாலியை அத்து எறிய கையை தூக்கிட... 

"ஸடாப் இட்   , தாலி மேல கை வச்சிங்க அவ்வளவு தான்  சொல்லிட்டேன்...  தாலி கட்டுனது கட்டியதுதான்...  நான் உங்க பொண்டாட்டி ஆனது ஆனது தான் ... 

"அறிவு இல்லை உனக்கு "

"இல்லை ஒத்துக்கிறேன் .. இப்ப என்ன பண்ண சொல்றீங்க 

 "அந்த கயிறை கழட்டி தூர போட்டுட்டு போய் வேலையை பார் ... 

"முடியாதுன்னு சொன்னா மறுபடி அடிப்பீங்களா அடிச்சாலும் ஓகே புருஷன் கையால அடி வாங்குறது  தப்பு இல்லை ... 

ப்ச் ... 

நீங்க தாலி கட்டினதுனால, என்ன உடனே அக்செப்ட் பண்ணிக்கனுங்ககிற அவசியம் இல்லங்க... ஆனா,  இனிமேல் உங்களுக்கு கல்யாணம் கிடையாது அவ்வளவுதான்... நீங்க எப்போ என்ன ஏத்துக்கிறீங்களோ,  அப்போ இந்த கல்யாணத்தை பத்தி அண்ணன் கிட்ட பேசுறேன் .. இப்போ ,   வீட்டுக்கு போறேன் சீக்கிரம் வாங்க ... காலேஜுக்கு போகணும்...  அண்ணா ரெண்டுபேரும் என்ன  தேடுவாங்க என்று தாலியை எடுத்து சுடிதாருக்குள் மறைத்து  போட்டுக் கொண்ட மிலா  வெறுங்காலோடு மீண்டும் வீடு நோக்கி  விறுவிறுவென நடக்க ஆரம்பிக்க ...

அவன் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டு போகும் அவளை என்ன செய்ய என தெரியாது புலவன் பார்த்து கொண்டு நின்றான் ... 

அவன் அழுத்தக்காரன் என்றால்,  அவள் அவனினும் மேலான அழுத்தக்காரியாக இருந்தாள்...

எங்க போன மிலா .. ரூம்ல நீ இல்லையே என்று உள்ளே வந்த மிலாவை எழில் எதிர்கொள்ள...

தன் அண்ணனை பார்த்ததும் எச்சில் விழுங்கிய மிலா,  தன் தாலியை இன்னும் ஒரு முறை உள்ளே மறைத்து போட்டுக்கொண்டு...

இல்ல அண்ணா, வெளியே தான் நின்னுகிட்டு இருந்தேன்..."

"எதுக்கு வெளியே போன??  என்று அனல் கண்ணைச் சுருக்கி தங்கையை பார்க்க

ஹான் அது ,  குருவிக் கூட்டில இருந்து ஒரு குருவி மட்டும் கீழ விழுந்துடுச்சு,  ஆண்குருவி மேலே இருந்து கத்துக்கிட்டே இருந்தது...  அதான் குருவியைக் கொண்டு போய் அது இடத்துல சேர்த்துட்டு வந்தேன் அண்ணா" தட்டு தடுமாறி எதையோ ஒன்றை உலர...

ஏது குருவியா ??

"ஏன் அக்கா இவ  இப்ப எல்லாம் கொஞ்சம் ஓவர் மினுமினுப்பா தெரியிறாளே என்னவா இருக்கும்..என்று சைந்தவி மாதுரியை இடிக்க 

"ஆமாடி , எனக்கும் அப்படித்தான் தோணுது காதல் கீதல்னு எங்கேயும் விழுந்துட்டாளோ

"இருக்குமோ,  அட அவ அண்ணமார் பத்தி அவளுக்கு தெரியாதா என்ன,  இருந்தாலும் ஏதோ முன்ன பின்ன உதைக்குதே அக்கா 

"நல்லா திரும்பி பாரு உன் புருஷன் கழுதையா இருக்க போகுது" என்று மாதுரி சிரிக்க..  சைந்தவி முறைத்துக் கொண்டே

"அதுதான் டெய்லி உதைக்கிதே,  இது புது கழுதையா இருக்கு"

'சரி விடுடி எத்தனை நாள் பூசணிக்காயை சோத்துல மூடி மறைக்க போறாங்கன்னு பார்ப்போம்,  எனக்கும் இவ போறப்போக்கு சரியாவே இல்ல , அடிக்கடி தனியா சிரிக்கிறா,  காதல் மேட்டரா தான் இருக்கும்னு  நினைக்கிறேன் ..

ம்ம் நம்ம தலைக்கு ஆபத்து வராம இருந்தா சரிதான் அக்கா  என்று இருவரும் குசுகுசுத்துக் கொண்டனர்..

மிலானி யாரையும் பார்க்காது  தன் அறைக்குள் வேகமாக ஓடி ஒளிந்து கொள்ள...தன் தங்கை பதட்டத்தை கவனித்த எழில் ... 

"அனல் எதுக்கும் இவளை கொஞ்சம் ஜாக்கிரதையா வாட்ச் பண்ணு...  காலேஜ்ல என்ன நடக்குதுன்னு பாரு.  நமக்குன்னு கவுரவம் இருக்கு கௌரவ கொலைச்சல் ஆயிட்டா,  அதுக்கு பிறகு தலை நிமிர்ந்து நடக்க முடியாது" என்று எழில் தம்பியிடம் போட்டு வைக்க..

ம்ம்  நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எழில் கொஞ்சம் கவனமா பாத்துக்கலாம் ... அதான் புலவன அனுப்பி விடுறோம்ல,  அவன்கிட்ட சொல்லி வைப்போம் ... யார் கூடேயும் பழக்க வழக்கம் இருந்ததுன்னா , ஆரம்பத்திலேயே ஒட்ட நறுக்கிடுவோம் "என்று கருவாட்டுக்கு காவலாக பூனையை நியமித்தனர்.... 

பூனை சும்மா தான் இருக்கும்..  கருவாடுதான் பூனையை திங்கும் என்று அறியாத சில்லி பெல்லோஸ்.. 

அறையில் வந்து கட்டிலில் விழுந்த மிலா முன் புலவன் கட்டிய தாலி தொங்க.. அவளால் இதை நம்பவே முடியவில்லை.... 

சத்தியமாக இந்த காதல்,  திருமணம் வர எல்லாம் போகும் என்று அவள் நினைக்கவே இல்லை..  கடைசி வரை அவனை மனதில் சுமந்து கொண்டே வாழ்ந்து விட வேண்டும் .... இன்னொருவன் தாலி தன் கழுத்தில் ஏற விட்டுவிடவே கூடாது என்று நினைத்தவள்,  இவ்வளவு துரிதமாக புலவனின் மனைவியாக மாறி நிற்பாள்  என்று கனவிலும் அவள் காணவில்லை..  எப்படி அவ்வளவு தைரியமாக அவன் தாலியை வாங்கினாள்,  எல்லாம் அவன் மீது இருக்கும் காதலின் அடம்தான்!!  

இன்னும் சிறிது நேரம் புலவன் முன்னால் நின்றுருந்தால் அடுத்த அடி விழுந்திருக்கும்..

"அப்பா என்ன அடி, எவ்வளவு கோபம் பின்ன  நம்மள தூக்கி மடியில வச்சு கொஞ்சுவாரா ... அடாவடியால்ல தாலி வாங்கி வச்சிருக்கேன்....  பத்து நாளைக்கு அவர் இருக்கிற திசை பக்கவே திரும்பி பார்க்க கூடாது சாமி , ஒரு அறைக்கே காது கொய்ங்குது...  "அவன் முரட்டு விரல்கள் தொட்ட  கன்னத்தை  தடவி பார்த்தவர்களுக்கு பயத்தை விட வெட்கம் தான் அதிகமாக இருந்தது..

அவள் தான் இந்த காதலுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம் என்று முடிவெடுத்து விட்டாளே...  காதலுக்காகவே அவ்வளவு துணிந்தவள் , வாழ துணிய மாட்டாளா என்ன?

தன் அண்ணன்கள் பார்வை அவளை சந்தேகமாக நோக்குவதையும் அறிந்துவிட்டாள்

"இனிமேல் புலவனை அடிக்கடி பார்க்கக்கூடாது நம்மாள அவருக்கு எந்த பிரச்சனையும் வந்துரக்கூடாது....  நார்மலா கேஷுவலா இருக்கிற மாதிரி இருந்துக்கணும் .. அண்ணன்களுக்கு  சந்தேகம் வந்துடுச்சு புலவனை கொன்னாலும் கொன்றுடுவாங்க   என்று அண்ணன்களை பற்றியும் அவளுக்கு நன்றாக தெரிந்தது.... 

புலவன் சிகரெட்டை ஊதி தள்ளி கொண்டு அவள் அறை ஜன்னலை பார்த்து கொண்டு நின்றான் ...

இப்படி நடக்கும் என்று கனவா கண்டான்,  இவள் அவ்வளவு எளிதில் தன்னை விட மாட்டாள் என மிலானி தூரத்தும் பார்வை தெரிந்து தான் விலகியது... அவள் விடாது  பின்னாலேயே தூரத்த  , உரிமை இல்லாம ஒரு பொருளை சீண்ட மாட்டாள் என நினைத்து  கல்யாணம் என்ற  வார்த்தையையே வெறுக்கும் அவன் திருமணத்துக்கும் ஓகே என போய் நிற்க .. அங்கேயே வந்து குண்டுகட்டாக தாலியை வாங்கிட்டு ஓடி விட்டாளே....  

தாலி கட்டினா அது கல்யாணமா ?அதை அத்து எறிய இவன் காத்திருக்க ..கையில கிடைச்சா தான அத்து போடுவ என அவள் டிமிக்கி கொடுத்து .. அனல் காரில் போய் ஏறி காலேஜ் ஓடியே விட்டாள்... 

மிலானி,  வகுப்பில் கடைசி பெஞ்சில் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து ஜன்னல் வழியாக மரத்தில் கொஞ்சம் கிளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..

மெல்ல அவள் கைகள் நெஞ்சில் உறவாடும் புலவன் கட்டிய  தாலியை தொட்டுப் பார்த்தது ... இதயத்தின் அருகே அந்த குண்டுமணி தங்கம் உரசி என்னவோ செய்தது .. வெறும் ஒற்றை சவரன் குண்டுமணி தங்கம் அதில் சிவப்பு கல் இதுதான் தாலி ... ஆனால் அது தந்த நிறைவு அப்பப்பா!!  சொல்லி மாளாது ... தாலியை உள்ளே போட்டு பதுக்கி வைத்திருக்க அவள் வெற்று உடல் தொட்டு உரசும் பாக்கியம்  பெற்றது புது தாலி ... அதன் முகப்பு முத்து முகப்பில்  உரச உரச அவன் மீசையே உரசும் கூச்சம் ...  

அவள் உடல் முழுவதும் சிலிர்த்து புல்லரித்து அடங்கியது தானாக உதட்டை கடித்தாள்..  அதில் காமம்  இல்லை.. காதல் கைகூடிய நிறைவு....  அவன் நினைவாகவே இருந்தது,  அந்த முரட்டுப் பார்வை முரட்டு அடி அத்தனையும் அவளை ஏதோ செய்தது

மிலானி

மிலானி என்று பேராசிரியர் அழைப்பில் கனவில் இருந்த மிலானி பதறி எழும்ப ..

"உன் வீட்டில் இருந்து உன்னை தேடி யாரோ வந்திருக்காங்களாம் போய் என்னன்னு பாத்துட்டு வா என்றதும் 

"வீட்ல இருந்தா,  யாரா இருக்கும் , கல்யாணம் முடிஞ்சது தெரிஞ்சிருக்குமோ... சற்று  பயம் பதட்டம் எல்லாம் சேர்ந்து தன் பையை எடுத்துக் கொண்டு அவள் வெளியே போக....  காலேஜ் விளையாட்டு மைதானத்தில் கிடந்த நெஞ்சில் புலவன் அமர்ந்திருந்தான் ... 

இவரா?? 

அவர்தான் உன்னை கூப்பிட்டு விட்டது , வீட்ல ஏதோ நோட்டை மறந்து வச்சிட்டு வந்துட்டியாமே ,கொடுக்க வந்துருக்கார் போல என்று அட்டெண்டர் கூறவும் வாயெல்லாம் புன்னகையாக அவனை நோக்கி நடக்கப்போனவள்

அச்சச்சோ !! மறுபடியும் தாலியை கழட்டி கொடுன்னு வம்பு பண்ணுவாரோ,  ப்ச் பார்த்துக்கலாம் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கிறார்...  மிஸ் பண்ண கூடாது அப்படி என்னதான் பேசுகிறார்னு  பார்ப்போமே போ,  போகாதே என்று மனம் இரண்டு பக்கமும் அவளை இழுக்க...  புலவன் யோசனையின் நடுவே  சட்டென தலையை தூக்கி அவளை பார்த்து பார்வையில் ... அவளை தேடி வந்த அவனை விடுவாளா??

ஒரே ஓட்டமாக  மூச்சு வாங்க அவன் அருகே போய் நின்றாள் ... அவன் அவளை தலையை தூக்கி பார்க்க 

"இங்க அண்ணனுக்கு தெரிஞ்சவங்க பசங்க படிக்கிறாங்க...  இங்க பேச வேண்டாம் வாங்க என்று மிலானி வேகமாக முன்னால் நடக்க பெஞ்சில் கையை அடித்து புலவன் எழும்பி,  அவள் பின்னால் நடந்து போக...

ஆள் அரவம் இல்லாத பின் பக்க டென்னிஸ் கோர்ட்டில் பார்வையாளர்கள் பெஞ்சில் மிலா அமர அவள் முன்னே மரத்தில் சாய்ந்து புலவன் நின்றான் ...

என்ன பேசணும்?  .... 

தாலியை கொடு நான் ஊருக்கு போகணும் ... ஆத்தா வையும் போல கூற ,இவளுக்கு சிரிப்பு வந்து  உதட்டை மூடி சிரிக்க புலவன் முறைக்கவும் சிரிப்பை அடக்கி

கொடு..க்க முடியாது ...

ஏய்இஇஇஇஇஇஇஇஇ என்ற அவன் குரலில் குருவிகள் கூட்டை விட்டு பறக்க ... அவளோ பதட்டம் இல்லாது தாலியை பிடித்து கொண்டு , அவனை நேர்கொண்ட பார்வை பார்த்தவள்...

"தாலியிலேயா,  உங்க வாழ்க்கை இருக்கு ... தெரியாம கட்டிடீங்க...  உங்களுக்கு பிடிக்கலைன்னா அதை அப்படியே விட்டுட்டு போக வேண்டியது தானேங்க...  எதுக்கு தாலியை கொடுன்னு வம்பு பண்றீங்க .. இது வெறும் கயிறு தானே அத்து வீசுறதுக்கு,  சும்மா என் கழுத்துல கிடக்கட்டும்..  அது உங்களை என்ன பண்ணுச்சு... 

"தேவையில்லாம பேசி கோபப்படுத்தாதே அந்த தாலி என்  கைப்பட்டு  உன் கழுத்துக்கு வந்தது அது எனக்கு பிடிக்கலை 

"ஓஓஓ ,  உங்க கை பட்டு வந்த தாலி என்ன பொண்டாட்டின்னு உரிமை போர் நடந்ததோ??  அதெல்லாம் விரும்பி கட்டிக்கிறவங்களுக்கு தான் நீங்க தெரியாம தானே கட்டினீங்க..  சோ அதுக்கு எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை.. உங்கள லவ் பண்ணுங்கன்னு நான் கூப்பிடல , என் கூட வாழ வாங்கன்னு உங்களை கம்பல் பண்ணல,  எனக்கு தேவையானதை செய்யுங்கன்னு  உங்க கிட்ட நான் கேட்கல...  அவன் தாலியை முறைத்து  பார்க்க 

அதை தர முடியாது இந்த தாலி கட்டினது கட்டினது தான்...  நீங்க எனக்கு புருஷனா இருக்கணும் என்கிற அவசியம் கிடையாது.. ஆனா  , என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு,  என் புருஷன் புலவன்  நீங்கதான்..  வாழ்க்கை முழுக்க இந்த தாலிக்கு நீங்க தான் அடையாளம் ... என்ன மாத்த முடியாது வேணும்னா நீங்க மாறிக்கோங்க.. அவன் பரபரவென தலையை கோதிட மஞ்சனத்தி மலர் பட்டு வந்த தென்றல் அவன் மணத்தையும் அவளுக்கு நாசியில் கொண்டு வந்து கொட்ட

அப்பா தள்ளி இருந்தே  படுத்துறாரே  என்றவள் அவன் பார்கிறான் என்று தெரிந்தே புலவனை ரசித்தாள் ..  

"ஊருக்கு போகணும்னா போங்க அது உங்க இஷ்டம். ஆனா என் மனசுல நீங்கதான் இருப்பீங்க என் கழுத்துல நீங்க கட்டின தாலிதான் கடைசி வரைக்கும் இருக்கும் அப்படி இந்த தாலி என் கழுத்தை விட்டு இறங்கிச்சின்னா,  அன்னைக்கு இந்த மிலானி   உயிர் இல்லாத பிணமா தான் இருப்பா...  இது நான் உங்க மேல வச்சிருக்க காதல் மேல சத்தியம் ... வேற ஏதாவது பேசணுமா ? என்னத்த பேச ஆறடி உருவத்தையும் அசையாது நிறுத்திவிட்டாளே... அவன் தொண்டை ஏறி இறங்க அவளை முறைக்க 

ஐ லவ் யூ உங்க மனசை மறுபரிசீலனை பண்ணுங்க நான் மாற மாட்டேன் ..என்றவள் சட்டென்று அவன் சட்டையை பிடித்து இழுத்து புலவன் அசந்த நேரம் அவன் கன்னத்தில் நச் என முதல் திருமண பரிசை கொடுத்து விட்டு ஓடியே விட்டாள்... சற்று தூரம் போய் மிலா வெட்கத்தில் சிவந்த கன்ன கதுப்போடு அவனை திரும்பி  பார்க்க புலவனோ கன்னத்தில் பட்ட அவள் எச்சிலை பரபரவென துடைத்து  விட்டு நடக்க... மிலா முகம் வதங்கி போனது 

எப்படி இவனை காதல் வலையில் இழுக்க என புரியாது போகும் அவனை பார்த்து கொண்டு நின்றாள் ... 

இனி இந்த  காதலுக்கு காதல்தான் பதில் சொல்ல வேண்டும் ...

ஏன் உன் கையில என்ன இருக்கு,  நீ சொல்ல மாட்டியா அதான ??