ஏகாந்தம் இனிது உன்னோடு 6-10

அத்தியாயம் - 6
சுடும் தீ குளிர் தென்றல்
இரண்டும் ஒன்றாய் கலந்தவள்
நீயோ?
அர்ஷாத்-அனிஷா மேரேஜ் சர்டிஃபிகேட் பார்த்ததும் ஜீவாவுக்கே அதிர்ச்சி எனும்போது . சாரதா,அனூராதா நிலைமைய சொல்லமுடியுமா.
சாரதா அப்படியே இடிந்துபோய் தரையில் மடிந்து அமர்ந்தார். ஏன் ஜீவா நமக்குமட்டும் இப்படிலாம் நடக்குது.
ஐஞ்சு வருஷம் தவமா தவமிருந்து பெத்ததுக்கா இப்படி என்ன கேவலப்படுத்தினா. நான் அப்பவே சொன்னேன் ஒரே பொம்பளை பிள்ள அவள சீக்கிரம் கல்யாணம் முடிச்சிக் குடுத்திருவோம்னு,யாராவது என் பேச்ச கேட்டீங்களா. இப்போ பாருங்க யாருக்குமே தெரியாம கல்யாணமே செய்திக்கிட்டா நான் பயந்தது போலவே நடந்த்திட்டு "அழுது தீர்த்தார்.
ஆனந்தராஜ் அந்த பேப்பரை எடுத்து பார்த்திட்டு என்னப்பா இது கல்யாணம் முடிஞ்சி நாலு வருஷத்துக்கு மேலாகிட்டுப்போல.
நம்ம பிள்ள எதையுமே நம்மக்கிட்ட காமிச்சிக்கலையே. இப்படி பண்ணிட்டாளே.
ஜெயராஜ் அமைதியாகவே இருந்தார். ஏற்கனவே பல அதிர்ச்சிகளை தாங்கியதால் என்னவோ இது அவ்வளவு அதிர்ச்சியில்ல போல அமைதியாக இருந்தார்.
அனுராதா ஒருபக்கம் " எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணிபார்க்க ஆசைப்பட்டேன். பார்த்து பார்த்து நகை,ட்ரஸ்னு எம்பிள்ளைக்கு சேர்த்துவச்சேன். என் பிள்ளைக்கு என்னாச்சோ இப்படி செஞ்சிட்டாளே ,கடவுளே " என அவரும் ஒருபக்கம் அழ வீட்டின் சூழ்நிலையே மாறிட்டுது.
ஆளாளுக்கு ஒருபக்கமாக உட்கார்ந்திருக்க. வீட்டின் மருகளான சுனிதாதான் வீட்டின் பொறுப்பை கையிலெடுத்தாள்.
கிட்சன்போய் எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு கொடுத்தாள்.
ஜீவாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவனின் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தினாள்.
மெல்லத்தெளிந்து எழுந்தவன் இரண்டு அம்மாக்களின் நிலையை பார்த்தவன்
நம்ம இப்படிருந்தா சரிவராது என நினைத்து அவசரமாக டீயைக் குடித்து முடித்து அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான் .
இப்படி ஒரு சிக்கல் வைத்துக்கொண்டு
ஜெய்ப்பா எப்படி பாப்பாக்கு கல்யாணம் பேசினாங்க என வருத்தப்பட்டான்.
இந்தக் கல்யாண விஷயம் ஜெபாக்குத் தெரியுமா என யோசித்தான். தெரிஞ்சிருந்தா அவ்வளவுதான் இப்படி விட்டுவச்சிருக்கமாட்டான். லவ் பண்ணது மட்டுந்தான் தெரியும்போல.
ஜீவா " சுனிதா நீ சாப்பாட்டுக்கு வெளிய ஆர்டர் செய்திடு. இப்போ இருக்கநிலைய கொஞ்சம் சமாளிக்கனும். "
பிள்ளைகள் இருவரையும் அழைத்து
" பாட்டிங்ககிட்ட போயி உட்காருங்க "என சொல்லவும். குட்டீஸ் இரண்டும் அவங்க மடியில உட்கார்ந்துகிட்டாங்க.
பிள்ளைகள் மடியில உட்காருவதை பார்த்து அனுராதா மெல்ல தெளிந்தவர் ஜீவாக்கிட்ட வந்து " தம்பி என்ன பண்ணலாம்னு இருக்க "
ஜீவா " யேசிக்குறேன் மா. அந்த பையன கூப்பிட்டு பேசனும். அவன்கிட்ட பேசினதுக்கு பிறகுதான் முடிவு பண்ணனும் " எனக்கூறவும்
அனுராதா "மக்களே என்ன இருந்தாலும் நம்ம பாப்பாதான, தப்பே பண்ணிருந்தாலும் அவள எப்படி அப்படியே விட முடியும் நம்மபோயி அவள கூட்டிட்டு வருவோமா. "
அவனும் தலைசைத்தான். ஆம் ,அன்பு எப்பொழுதும் மறக்கும்,மன்னிக்கும் இயல்புடையது.
அதுதான் நல்ல உறவுகள் நிலைநிற்பதற்கு அடிப்படை.
இதில் அனுராதாவும் ஜீவாவும் இந்த வகையை சார்ந்தவர்கள்.
அவன் எழுந்து சென்று ஜெயராஜிடம்.
" நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். சரியா வருமானு நீங்கதான் சொல்லனும் ஜெபாகிட்ட ஃபோன் பண்ணி பேசி முடிவு செய்வோம். உங்களுக்கு எதுவும் கருத்து இருக்கா."
ஜெயராஜ் " நீங்க இரண்டுபேரும் பேசி முடிவெடுங்க. இதுக்குமேல நான் என்ன செய்ய இருக்கு. ஏற்கனவே எடுத்துச்சாடி ஒரு முடிவெடுத்து அதனோட பலனத்தான் இப்போ அனுபவச்சிட்டுருக்கோம். எல்லாமே இனி யோசிச்சி யோசிச்சித்தான் செய்யனும்.குடும்பத்திற்குள்ள தெரிஞ்சா கேவலமா பேசவாங்க" எனச்சொல்லி பெருமூச்சுவிட்டு, இனிவரப்போற புயலுக்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டார்.
அனுராதா சாரதாவிடம் சென்று " சாரதா எழும்பு. இப்படியே அழுதுக்கிட்டிருந்தா ஒன்னும் நடக்காது. இன்னும் நினைத்து நினைத்துஅழுதார்.
எவ்வளவுக்கெவ்வளவு அனிஷா மேல பாசம் வைத்தாரோ அதே அளவு கண்டிப்பும் காட்டுவார். தப்புனா உடனே அனிஷாவ திருத்துவார்.
தவறுகளை மன்னிக்க தெரிந்தவர்கள் மட்டுமே மனக்காயங்களிலிருந்து சீக்கிரம் மீண்டுவிடுகின்றனர். அனுராதவைப்போல.
மன்னிக்க தெரியாத நியாயவாதிகள்தான் மனக்காயங்கள் எனும் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். சாரதாவைப்போல.
அக்கா தங்கையாக இருந்தாலும் எண்ணவோட்டங்கள் வேறுவேறாக இருந்தது.
அனுராதா சூழ்நிலையில் இருந்து வெளியேவந்துவிட்டார். தப்பு பண்ணினது நம்மபிள்ளைதான். அவள மன்னிக்காமா யார மன்னிக்கபோறேன் என்கிற மனநிலை.
ஆர்டர் செய்த சாப்பாடு வரவும் சுனிதாவுடன் சேர்ந்து எல்லோருக்கும் சாப்பாடுக் கொடுத்து சகஜநிலைக்கு கொண்டுவந்தார்.
ஜீவா போலிஸ்காரனுக்கு போன் போட்டு பேசினான் " தம்பி இப்போம் ஃப்ரியா இருக்கியா "
ஜெபா " என்ன ணா எதுவும் பிரச்சனையா."
ஜீவா " ஆமா கொஞ்சம்.நேத்து பாப்பாவ விரும்பின பையன் ஜெய்ப்பாவ பார்க்கவந்திருக்கான் "
ஜெபா " அவன் எப்படி ஜெய்ப்பாவ பார்க்க வந்தான் என எகிறவும். அவன்தான் ஒதுங்கிபோயிட்டானே "
ஜீவா" தம்பி இது எடுத்துசாடுற விசயம் இல்ல.இது நம்ம பாப்பா வாழ்க்கை போலிஸ்காரனா யேசிக்காத அண்ணனா யோசி."
" ம்ம் சொல்லு.”
ஜீவா சொல்ல ஆரம்பித்தான் அர்ஷாத் வந்ததும் அவன் மேரேஜ் சர்டிஃபிகேட் குடுத்திட்டுபேனது வரைக்கும் சொன்னான்.
ஜெபாக்கு கோபம் கோபம் மட்டுமே
" இதுக்காகத்தான அவள புனேக்கு படிக்க அனுப்பி வச்சோம். எப்படி எப்படி சாத்தியம். எனக்கே ஒருத்தன் தண்ணியகாட்டிட்டு நம்ம பாப்பாவ ரிஜிஷ்டர் மேரேஜ் பண்ணிருப்பான். எவ்வளவு திமிரு. எவ்வளவு வார்ன் பண்ணிருக்கோம்
அதையும் மீறி இதச்செய்திருக்கான். அவன் கோவமெல்லாம் அர்ஷாத் மேல திரும்பியது.
ஜீவா " இதுக்குத்தான் நான் சொன்னேன் கோவப்படாத.
நீ கோவப்படுறதுனால எதுவும் சரியாகது.
இது பாப்பாவோட வாழ்க்கை அவளோட சந்தோஷம் முக்கியம் அவ அழறது உனக்கு சந்தோஷமா இல்லல.
நான் அவ பிரச்சனைய சுமூகமா முடிக்கத்தான் ஆசைபடுறேன். நான் அந்தப்பையனக் கூப்பிட்டு பேசப்போறேன்அவ வாழ்கைய சரிசெய்ய நான் முயற்சி பண்றேன். நாங்க புனேக்கு போறோம் .நீ அங்க வர்றியா.
ஜெபா அவனுக்கு வேலையிருப்பதாகவும் நாளைக்கு வருவதாக சொல்லவும்." சரி நாளைக்கு வந்திரு நாங்க இன்னைக்கு மதியம் டிக்கட் புக் பணணிட்டேன். கிளம்பறோம் சரியா " வைக்கிறேன்.
" ம்ம் " என சொல்லி கால் கட் செய்தான்.
ஜீவா " ஜெய்ப்பா அந்த பையனோட நம்பர் தாங்க " எனக்கேட்கவும்.
அவர் ஃபோனை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் கால் ஹிஸ்டரியிலிருந்து அவன் நம்பருக்கு ஃபோன் செய்தான்.
அந்தப்பக்கம் ஃபோனெடுத்த அர்ஷாத் அனிஷாவின் அப்பா என நினைத்து
" என்ன சார் எதுவும் பேச இருக்கா " எனக்கேட்டான்
ஜீவா " ஹலோ நான் அனிஷாவோட அண்ணன் ஜீவா பேசுறேன்."
அர்ஷாத்" ஸாரி, நான் அவ அப்பானு நினைச்சேன் சொல்லுங்க சார் "
ஜீவா " எனக்கு என்ன இவ்வளவு மரியாதை தர்ற. அப்போ எங்க பாப்பா என்னயபத்தி உங்ககிட்ட சொல்லிருக்கா போல இல்லையா "
அர்ஷாத்" ஆமா "
ஜீவா " நீங்க இங்க எங்க வீட்டுக்கு கிளம்பி வாங்க கொஞ்சம் அவசரம்."
அர்ஷாத் பதட்டமாக " அனிஷா அப்பா நல்லயிருக்காங்கல்ல. வேற எதுவும் பிரச்சனையில்லயே. யாருக்கும் ஒன்னுமில்லையே "என கேட்கவும்
ஜீவா மனதினில் கணக்குப்போட்டான்.
இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் இவன் ஜெய்ப்பா நல்லயிருக்காங்களானு கேட்கிறன். என்ன மாதிரிப் பையன் இவன். அனிஷா மேல ரெம்ப லவ் பேல. பையன் நல்ல மாதிரித்தான் இருக்கனும்.
" இல்லயில்ல இங்க எல்லாரும் நல்லாயிருக்கோம் .இங்கவாங்க நான் நேர்ல சொல்றேன். உங்க வீட்ல சொல்லிட்டுவாங்க ஒரு இரண்டுநாள் தங்குறமாதிரி கிளம்பிவாங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லாயிருக்கும்."
அவன் சுனிதாவிடம் மணி பத்து. எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் வேணும் நான் தூங்குறேன் அந்தப்பையன் வந்த என்ன எழுப்பு. எனக்குத்தான் கால் பண்ணுவான். என்ன எழுப்பிடு " எனச்சொல்லி சென்றான்.
சாரதாவிற்கு அர்ஷாத் இங்க வர்றதுல உடன்பாடே இல்ல.
ஒரு ஒரு மணிநேரங்கழித்து ஜீவாவின் ஃபோன் அலறியது சுனிதா எடுத்து பார்த்தாள் அர்ஷாத் என பெயர் வரவும் ஜீவாவை எழுப்பினாள். ஜீவா அவசரமாக எழுந்து கீழே சென்றான்.
அர்ஷாத் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தான். என்ன பிரச்சனைனு தெரியல அதுதான் பதட்டம்
ஜீவா "நீங்கதான் அர்ஷாத்தா வாங்க உள்ளப்போகலாம் என அழைத்து சென்றான் "(இதுதான் மாப்பிள்ளை அழைப்புபோல).
அர்ஷாத் தயங்கவும் ஜீவா சொன்னான். ஏன் உங்க பொண்டாட்டி வீட்டுக்கு வர்றதுக்கு என்ன தயக்கம் .நேத்து அவ்வளவு பேசியிருக்கீங்க.
வீரதீர செயல்லாம் செய்திட்டு வீட்டுக்குள்ள வர பயமா. தைரியமா வாங்க உங்க இரண்டு மாமனாரும் உள்ளதான் இருக்காங்க.
ஜீவாவோடு சேர்ந்து அர்ஷாத்தும் உள்ளே சென்றான்.
அனூராதா " வாங்க தம்பி என அழைக்கவும்." சாரதா எழும்பி உள்ளே சென்றவிட்டார்.
ஜெயராஜ் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
ஆனந்தராஜ் ஒரு தலையசைப்போடு அவனை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
அமைதியா அர்ஷாத் உட்கார்ந்தவன் மெதுவா பிரேமிடம் உங்க அக்கா எங்க எனக் கேட்டுக்கொண்டிருந்தான்.
சிறிது கண்களை சுழற்றிப்பார்த்தான் வீடு நிசப்தமா இருக்கு. டீவிலாம் உடைஞ்சிருக்கு . இந்த அசாதாரண சூழ்நிலையப்பார்த்து எதுவோ பிரச்சனை பலமா இருக்கு. ஒருவேளை நம்ம பிரச்சனையோ என சிந்தித்துக் கொண்டிருக்கவும்.
அதுக்குள்ள அனுராதா காஃபி போட்டு எடுத்து வந்து அர்ஷாத் கிட்ட கொடுத்தார்.அவன் வேண்டாம் என தலையசைக்கவும்.
அனுராதா "எடுத்துக்குங்க தம்பி .ரெம்ப யோசிக்கதிங்க. "
அனுராதா அவனைத்தான் அளவிட்டுக்கொண்டிருந்தார் எங்க பாப்பாக்கு இவன் கரக்ட்டாதான் இருக்கான். அழகா இருந்தாபோதுமா குணம் எப்படி எனத்தெரியலையே.
மனதினிலே கணக்குப்போட்டார்.
ஜீவா வந்து அப்பா ஐஞ்சு டிக்கட் எடுத்திருக்கேன்.அனுமா,சாரும்மா,
ஜெய்ப்பா,நான்,அர்ஷாத் நாங்கதான் போறோம். நீங்க இங்க இருங்க சுனிதாவும் பிள்ளைகளும் இங்க இருக்காங்க. நீங்க பார்த்துக்கோங்க.
எனக்கு ஹாஸ்பிட்டல்ல லீவ் சொல்லிட்டேன். எமர்ஜென்ஸினா ஃபோன் பண்ணுவாங்க.
அர்ஷாத் வாங்களேன் தட்டுலபோய் பேசுவோம். இரண்டுபேருமே மேலே சென்று அங்கு மரநிழலில் போடப்பட்ட கல் பெஞ்சில் அமர்ந்ததும். ஜீவா பேசத்தொடங்கினான்.
" நேத்து அனிஷாவ பொண்ணு பார்த்திட்டு போனாங்க . அதுல இருந்து ஆரம்பிச்ச பிரச்சனை இன்னைக்கு வரைக்கும் போயிட்டிருக்கு.
பாப்பா திரும்பவும் புனே போயிட்டா.
அங்கயும் வேலைய ரிசைன் செய்திட்டாப்போல என வரிசையாக எல்லத்தையும் சொல்லிட்டு.இதுலவேற நீங்க பெரியகுண்டா தூக்கி தலையில போட்டீங்க. அதுதான் வீட்டுச்சூழலே மாறிப்போச்சிது."
அர்ஷாத் " நானும் விட்டுக்கொடுத்திட்டு நாலு வருஷமா இருந்திருக்கேன். நான் பிரச்சனை எதுவும் பண்றதுக்கு பேசல சுமூகமா பேசலாம்னுதான் சார் அனிஷாப்பாகிட்ட பேசினேன். ஆனா அவங்கதான் எதையும் கேட்கறமாதிரி இல்ல. இப்போ இல்ல முன்னாடியும் இப்படித்தான் செய்தாங்க.
அதனாலதான் சர்டிஃபிகேட் காமிச்சேன் பிரச்சனை பண்ணனும்னு இல்ல. "
ஜீவா " நான் யாரையும் தப்பு சொல்லல. அவங்க அவங்கப்பக்கம் நியாயம் இருக்கும். ஆனா பாதிக்கப்பட்டது எங்க பாப்பா. எனக்கு அவதான் முக்கியம். இவ்வளவு நாள் மனசுக்குள்ள என்ன வேதனைப்பட்டாளோ. போதும் இனி அவ வாழ்க்கை சந்தோஷமா இருக்கனும். அதுக்காகத்தான் இவ்வளவு பேசுறேன். நீங்க நேத்து எதுக்கு ஜெய்ப்பாவ பார்க்கவந்தீங்க "
அர்ஷாத் " அனிஷாவ நான் பங்கக்ஷன்ல பார்த்தேன். என்ன பேசவே விடல.எனக்கு அவதான் வேணும் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கற ஐடியா எனக்கில்ல.
அவள எனக்கே கல்யாணம் பண்ணிக்குடுங்கனு பேசத்தான் போனேன். "
ஜீவா " சரி முதல்ல அவள பார்க்கபோவோம். அதுக்கப்புறம் பேசலாம். வாங்க கீழப்போவோம் நேரமாயிட்டு "
இருவரும் கீழே வந்தார்கள். ஜீவா எல்லோரையும் கிளம்பி ரெடியாக சொல்லிட்டிருந்தான்.
ஜெயராஜ்க்கு " மக்களே ஜீவா நம்ம மட்டும் போவோமா. அம்மா வேண்டாம்பா நம்ம பேசி அவளக்கூட்டிட்டு வருவோம்பா."
ஜீவா " என்னப்பா நீங்க. எல்லாரும் போவோம். அதுதான் நல்லது.அம்மா இரண்டுபேரையும் பார்த்தா நம்ம கூப்பிட்டா வந்திருவாப்பா. நீங்க கிளம்புங்க " என சொல்லிவிட்டுச் சென்றான்.
எல்லோரும் கிளம்பி ரெடியாகவும்.
ஆனந்தராஜ் " எப்பா கார் யாரு ஓட்டுவா எப்படி ரிடர்ன் வரதுக்கு."
ஜீவா " அது நான் பேசிட்டேன் டிரைவர் ஒருத்தர ஏற்பாடு பண்ணிட்டேன்.நீங்க அவன்கூட திரும்பி வந்திருங்க "
எல்லோரும் கிளம்பி திருவனந்தபுரம் ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர்.
இப்போதைக்கு பிளைட்டுக்காக உள்ளே வெயிட்பண்ணிட்டு இருக்காங்க.
சாரதாதான் அர்ஷாத்த ஏதோ எதிரி மாதிரியே பார்த்தாங்க.( நம்ம பிள்ளை இப்படி செய்ததுக்கு காரணமே இவன்தான் என்கின்ற லெவல்ல யோசித்தார்).
அர்ஷாத் மனசுபூராவும் அனிஷாதான். இவ்வளவு வருஷம் கழிச்சி வந்திருக்கேன். அவள வேறபார்க்கமுடியாதோ. ஒரே அயர்ச்சியா இருந்தது அவனுக்கு என்னங்கடா வாழ்க்கையிது என நொந்துபோயிருந்தான்.
வேறெங்கயாவது போயிட்டா என்ன பண்றது.
ஜீவா "அவனத்தான் பார்த்திட்டிருந்தான்
பயபுள்ள ரெம்ப லவ் பண்ணிருப்பான் போல எங்க வீட்டு வில்லனுங்கள பத்தி தெரியாம " என யோசித்தவன்.அர்ஷாத் பக்கத்துல போயி அமர்ந்து தோளொடு சேர்த்து கைபோட்டுக்கொண்டான்.
அர்ஷாத்துக்கு என்ன செய்யவென தெரியவில்லை.
" ஏற்கனவே ஒருதடவை என் வாழ்க்கைய தொலைச்சிட்டேன். இப்போ கைகிட்ட இருந்தும் மறுபடியும் தொலைச்சிருவனோனு பயப்படுறேன் சார். உங்கப்பா தம்பிக்கு பயந்து இல்ல. நான்தான் எல்லாத்துக்கும் காரணம்.
கொஞ்சம் சமன்படுங்க எல்லாம் நல்லதுக்கே. வாங்க பிளைட்க்குபோவோம் எதுனாலும் பார்த்துக்கலாம்.
புனே போய்சேர கிட்டதட்ட ஆறுமணியாகிட்டு யாரும் யாருகிட்டயும் பேசவில்லை அமைதியாகவே.
ஜெயராஜ் மட்டும் கொஞ்சம் சஞ்சலத்தோடவே அமைதியில்லாம வந்தாரு. ஜீவா யோசிச்சான் ஜெய்ப்பா நடவடிக்கையே சரியில்ல வேற எதோ பெருசா பிரச்சனை உருவாக்கி வச்சிருப்பாரோ.
அவனுக்குமே பயந்தான் நான்கு வருடத்திற்கு முன்பாகவே மைல்ட் அட்டாக் வந்திருந்தது. இவன்தான மருத்துவம் பார்த்தான்.
" ஜெய்ப்பா உடம்புக்கு என்னவும் செய்யிதா ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு என்ன செய்து என கார்லயே செக் பண்ணிப்பார்த்தான்.
நார்மல்னு தெரிஞ்சதும்தான் அவனுக்கும் மனசு சமாதானமாச்சுது.
வீடு வந்ததும் இறங்கியவர்கள் அனுராதா,சாரதாவும் உள்ளே வேகவேகமாக சென்றனர்.
அர்ஷாத் கொஞ்சம் பின்தங்கி நின்றான். ஆனால் ஜெயராஜ் உள்ளே செல்லாமல் யோசித்து நின்றார்.
எல்லாரும் வந்து ஒரு அரைமணி நேரத்திற்குள்ளாக சாரதா மயங்கி விழுந்து அவருக்கு மருத்துவம் பார்த்துகொண்டிருந்தான் ஜீவா.
அர்ஷாத்திற்கு தான் எல்லோரையும் விட அதிர்ச்சி,குற்றவுணர்ச்சி,கொஞ்சம் சந்தோஷம் இந்த கலவையில் உட்கார்ந்திருந்தான்.
இழந்ததை மீட்டுக்கொண்டவனின் நிலை அவனுக்கு இப்பொழுது.
அத்தியாயம் - 7
பாலைவன கொடுஞ்சூட்டிலும்
ஒரு துளி நீராக
என் தாகம் தீர்க்கிறாய்
நீ!.
அனுராதா,சாரதா,ஜீவா என மூன்று பேரும் வேகமாக உள்ளே செல்லவும்
அங்கே இவர்களை எதிர்பார்த்து காத்திருந்த அனிஷாவின் அத்தை ரெமி(ஜெயராஜின் அக்கா) " வாங்க எப்படி இருக்கீங்க எல்லாரும் " என கேட்டார்.
ஜெயராஜ் வெளியவே இருந்துக்கொண்டார். அர்ஷாத் மெதுவாக உள்ளே வந்தான். ரெமி அவனைத்தான் பார்த்திருந்தார்.
சாரதா அவர்களின் கையை பிடித்து
நல்லாயிருக்கோம் அண்ணி நீங்க எப்படி இருக்கீங்க.
என கேட்டுக்கொண்டே அவள எங்க என கை சைகையில் கேட்டார்.
ரெமி " உள்ள இருக்கா எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ,கோவத்துல இருக்கா என்கிட்டயும் எதுவும் பேசவே இல்ல " என சொல்லவும் .
சாரதாவும்,அனுராதாவும் உள்ளே செல்லவும். அங்கு அனிஷா எல்லாப் பொருட்களையும் எடுத்துவைத்து கொண்டிருந்தாள் பக்கத்தில் கட்டிலில் ஒரு மூன்று வயதிருக்கும் ஒரு பெண் குழந்தை பொம்மைகள் சூழ விளையாடிக்கொண்டிருந்தது.
அந்தக் குழந்தைய பார்த்ததும் இருவருக்கும் மனதினில் ஒரு நெருடல் அனிஷா எப்படி சின்ன வயதில் இருந்தாளோ அப்படியே இருந்தது அந்த குழந்தை. அரவம் கேட்டு அனிஷா திரும்பி பார்த்தாள் இவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை.
அப்படியே எல்லாத்தையும் போட்டுவிட்டு எழும்பினவள் திகைத்து நின்றாள்.
அனுராதா " பாப்பா என்னடா இது இப்படி வந்திட்ட நாங்க பயந்துபோயி உன்ன பார்க்க இங்க வந்திட்டோம் "
சாரதா அந்த குழந்தையத்தான் பார்த்திருந்தார். பக்கத்து வீட்டுக்குழந்தையா இருக்கும் என
மெதுவா அந்த குழந்தைய தூக்க முற்படவும் அது அனிஷாவிடம் கைநீட்டி அவளிடம் சென்றது.
இது யாரோட பிள்ளை என சாரதா வினவவும் அனிஷா பிள்ளையை இன்னும் தன் பக்கமாக இறுக்கினாள். அதுவே சொன்னது அது யாரோட குழந்தையென்று.
சாரதா வெளியே வந்து ரெமியிடம்
" அந்த குழந்தை யாரோடது " எனக்கேட்டார்.
ரெமி பதில் சொல்லாமல் " தம்பி எங்க உங்ககூடத்தான வந்தான் " எனக்கேட்கவும் அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே நின்றார்.
சாரதா விறுவிறுவென வெளியே வந்தவர் ஜீவாவிடம் போய் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு படபடப்பு எங்கே அது அவ குழந்தைனு சொல்லாடுவளோ என.
அனுராதாவும் அனிஷாவும் குழந்தையுடன் வெளியே வந்தனர். ஜீவா குழந்தைய பார்த்ததும் நம்ம பாப்பா மாதிரியே இருக்கு யாருடா இது எனத்தோன்றியது. அதற்குள் அர்ஷாத் உள்ளே வரவும்,வந்தவனை பார்த்து " அய் டாடி" என சத்தம் போட்டு சொன்னது.
அர்ஷாத் ஒரு செகண்ட்ல என்னனு தெரியாம அப்படியே உறைந்து நின்றான்.
அவன் மட்டுமா ரெமி,ஜெயராஜ் தவிர எல்லோருக்குமே அதிர்ச்சி ஜீவா எழுந்தே நின்றுவிட்டான். இந்தளவுக்கு யாருமே யோசித்துக்கூட பார்க்கல.
திரும்பவும் அந்தக்குழந்தை அனிஷாவின் முகத்தைப்பிடித்து திருப்பி " மம்மி டாடி பாருங்க " என அர்ஷாத்தை கைகாட்டவும்.
அனைவருக்கும் புரிந்தது.
அர்ஷாத் உறைநிலையின் உட்சத்திற்கே சென்றான். ஆனால் அனிஷா இவன் எதற்கு இங்க வந்தான் என கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்.
சாரதா அனிஷாவின் அருகில் சென்று சத்தமாக கோபத்தில் கேட்டார் " இது யாரோட குழந்தையென மறுபடியுமாக கேட்டார் "
அனிஷா தலைகவிழ்ந்து நின்றாள் பிள்ளை அழத்தொடங்கியது சாரதாவின் சத்தத்தில். ரெமி அவசரமாக வந்து குழந்தையை தன் கையில் வாங்கிக்கொண்டார்.
சாரதா அனிஷாவின் இரு கன்னத்தில் படீர்படீரென அடித்தார்.
பின் சரமரியாக தன் கையால் அடிக்கத்தொடங்கினார். அனிஷா எந்த எதிர்ப்புமின்றி அடிகளை வாங்கிக்கொண்டு நின்றிருந்தாள். யாருக்குமே என்ன செயயவேண்டுமென மூளை ஓடவில்லை.
அர்ஷாத்துதான் ஓடிவந்து குறுக்கே நின்று அனிஷாவை தன்பக்கமா இழுத்துக்கொண்டான்.
சாரதா அடித்து ஓய்ந்தவர் அழ ஆரம்பித்தார். இவ்வளவு அடிவாங்கியும் அசையாமல் நின்றிருந்தாள் அனிஷா.
சாரதா பேசத்தொடங்கினார்.
" கல்யாணம் முடிஞ்சி ஐஞ்சு வருஷம் பிள்ளயில்லாம ஏச்சியும் பேச்சியும் வாங்கி காத்திருந்து இவள பெத்தேன்.
போறயிடமெல்லாம் பிள்ளை அழகாயிருக்கானு சொல்றாங்கனு பயந்து பயந்து கைக்குள்ளவே வச்சிருப்பேன்.
அப்படி பார்த்து பார்த்து வளர்த்தவ யாருக்கும் தெரியாம கல்யாணத்தையும் முடிச்சி பிள்ளையவும் பெத்துவச்சிருக்கா.
அவ்வளவு அவசரமா. நாங்க பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கமாட்டோமா.
பெத்தவங்களைவிட அப்படி என்ன இவன் உனக்கு பெருசா போயிட்டான். என சொல்லி தன் மொத்த பலத்தையும் கூட்டி அவளை தள்ளிவிட்டு " நீ எனக்கு வேண்டாம். இப்படி ஒரு பிள்ளை எனக்கு இல்லனு நினச்சிக்குறேன்.
எங்கயாவது போயித்தொலை எனக்கு நீ வேண்டாம் " என சொன்னவர் அப்படியே மயங்கி சரிந்தார்.
ஜீவா பின்னால் இருந்து தாங்கிக்கொண்டான்,அனிஷாவும் தாயை பிடித்துக்கொண்டாள்.
சாரதாவை மெதுவாக சோஃபாவில் படுக்கவைத்து ஜீவா சோதித்திக்கொண்டிருந்தான்.
அவருக்கு அதிர்ச்சி மற்றும் அயர்ச்சியினால் வந்த மயக்கம்.
காலையில இருந்து அனிஷாவ காணவில்லை. அந்த பதட்டம் வேறு எல்லாம் சேர்த்து அவரை மயக்கத்தில தள்ளியிருந்தது.
அனிஷாவின் பிள்ளையும் இங்கு நடந்த கலவரத்தில் அழுதுகொண்டே அவளைவிட்டு அங்குமெங்கும் நகரவில்லை.
கோவப்படாத அனுராதவே " நீ இப்படி செய்வனு நான் கனவுலக்கூட நினைச்சிப் பார்த்தது இல்ல.
எனக்கும் நீ வேண்டாம் எங்கயாவது போ " என சத்தம்போட்டார்.
இதற்கெல்லாம் சேர்த்து இவள் அர்ஷாத்ததான்
பார்த்துக்கொண்டிருந்தாள்(கொலவெறியில்).
அவனுக்கு மனைவிய பார்க்க வந்த இடத்தில் பிள்ளையும் வரமாய் கிடைத்த சந்தோஷமும், இப்படியொரு அழகான குடும்பம் மொத்தமும் என்னால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறது எனும் வேதனையும் எல்லாம் சேர்ந்து கலவையான ஒரு உணர்வில் இருந்தான்.
ஜீவா எதையும் பேசல. தங்கைமேல வருத்தம் இருந்தாலும். எதாவது பேசி தப்பா வார்த்தையவிட்டுட்டா பின்னாடி கஷ்டம் என அமைதியாக இருந்தான்.
ஜெய்ப்பாவ பார்த்தான் இவரு எதோ பண்ணிவச்சிருக்காரு. இல்லனா இவ்வளவு அமைதியா இருக்கமாட்டாரு.
அதனால உண்மை தெரியாமல் எதுவும் பேசக்கூடாது என இருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து சாரதா மெதுவாக கண்விழித்து அமர்ந்தார். ரெமி தான் கொஞ்சமா ஜூஸ் போட்டு எடுத்திட்டு வந்தார்.
சாரதா அதையும் குடிக்கமாட்டேன் என பிடிவாதம் செய்தார். ஜீவா " சாரும்மா எதுவா இருந்தாலும் குடிச்சிட்டு பேசுங்க. அடிக்க தெம்பு வேணும்ல குடிங்க என சொல்லவும் ஜூஸை குடித்தார். எல்லோருக்கும் இப்பதான் கொஞ்சம் நிம்மதியாகிட்டு.
சாரதா " வாங்க நாம ஊருக்குபோவோம். இவா நமக்கு வேண்டாம் . நம்ம வேண்டாம்னு தான இப்படியொரு அசிங்கமான காரியத்தை செய்திட்டு வந்து நிக்குறா, வேண்டாம்" என ஊருக்குபோகஆயத்தமானார்.
அனுராதாவும் அதை ஆமோதிப்பது போல ஊருக்கு போக கிளம்பினார்.
ஜீவா " கொஞ்சம் இரண்டுபேரும் அமைதியா இருங்க என்ன நடந்திச்சினு கேட்காம. நீங்களா ஒரு முடிவுகட்டி கிளம்புறீங்க. "
அர்ஷாத் " ஏன் எல்லாரும் அவளை அடிக்கீங்க,குற்றம் சொல்றீங்க. வாழ ஆரம்பிச்ச எங்களை முதல்ல பிரிச்சதே இவருதான் என ஜெயராஜை கைகாட்டினான். இவருக்கிட்டயும் உங்க போலிஸ்கார மகங்கிட்டயும் கேளுங்க."
அவ என்ன தப்பு பண்ணினா. லவ் பண்ணினோம் கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்.
இந்த பிள்ளை முறையா வந்த பிள்ளைதான். தகப்பன் நான் இருக்கேன் பின்ன எப்படி அசிங்கம்னு சொல்லுவீங்க. இத மறச்சதுக்கு பின்னாடியும் இவரு இருப்பாருன்னு எனக்குத் தோணுது. வேணா அவருகிட்டயே கேளுங்க "
என சொல்லவும்
அனிஷா " எதுக்கு நீ என்குடும்ப விஷயத்துக்குள்ள வர்ற. நான் பெரிய தப்பு செய்திருக்கேன் என் மேல வச்சிருந்த நம்பிக்கைய உடைச்சிட்டேன்.
என்ன தாங்குன என் குடும்பத்துக்கு துரேகம் பண்ணியிருக்கேன்.
தெரியாம கல்யாணம் பண்ணி .
குடும்ப நடத்தி ஒரு பிள்ளையவும் பெத்துவச்சிருக்கேன் எல்லாம் உன்னாலதான்.
இதுக்கு தண்டனையா நான் எல்லாத்தையும் தாங்கிப்பேன்.
எங்கம்மாதான என்ன அடிக்கட்டும் கொல்லட்டும் உனக்கு என்ன வந்திச்சி.
பாதியில விட்டுட்டு போனவன்தான நீ.
என அவன் சட்டைய பிடிச்சி இழுத்து நெஞ்சில அடிச்சா வேகமா அவளோட நகக்கீறல்கள் அவன் மார்பில் அடித்தாள்
நீதான் முதல் காரணம் "
அவன் ஒன்றுமே சொல்லாமல் அப்படியே நின்றான்.
ஜீவாதான் அவள பிடிச்சி இழுத்தான்
" விடு பாப்பா விடு அவன " பிரித்துவிட்டான்.
அர்ஷாத் சட்டை பட்டனெல்லாம் பிஞ்சி அவன பார்க்கவே பாவமா இருந்திச்சி.
இதப்பார்த்து பிள்ளையும் ஓங்கி அழ ஆரம்பிச்சிட்டு. அதை கேட்டுத்தான் அனிஷா நிதானமானாள்.
அர்ஷாத்துக்கு கஷ்டமா இருந்திச்சி வாழ்க்கைய இவ்வளவு சிக்கலாக்கி வச்சிருக்கேன் எனத்தோன்றியது.
ஜெயராஜ் பேசினார் " எங்க தப்பும் கொஞ்சம் இருக்கு கொஞ்சம் அவசரப்பட்டு தப்புசெய்திட்டோம்.
குழந்தை விஷயம் நான்தான் வெளிய தெரியக்கூடாதுன்னு மறைச்சி வைக்கச்சொன்னேன்.
அந்த நேரத்துல அவரு இங்க இல்லாததும் ஒரு காரணம் "
இப்போது எல்லாருமே கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தனர்.
அனிஷா " ம்மா நான் பிறக்கும்போது உங்ககூட யாரு இருந்தா "
அனுராதா சொன்னார் " நீ பிறக்கும்போது நானும் எங்கம்மா அதான் உங்க பாட்டியும் இருந்தாங்க. அவங்கதான் உன்ன கையில வாங்குனாங்க "
நான் என்னோட டெலிவரி சமயத்துல அநாதை மாதிரி கூட யாருமே துணைக்கு இல்லாம வலி சகிக்கமுடியாம தனியா கஷ்டப்பட்டேன். எனக்கு எல்லா சொந்தமும் இருந்தும் என் பிள்ளைய வாங்ககூட ஆளில்லாம பிறந்தாம்மா.
குழைந்தை பிறந்தப்புறந்தான் அப்பா வந்தாங்க " என சொல்லி அழவும் அனுராதா அனிஷாவை வாரி அணைச்சிக்கிட்டார்.
என் பிள்ளை நாங்க இல்லாம எவ்வளவு கஷ்டபட்டிருக்கா இது புரிஞ்சிக்காம நம்ம வேற பிள்ளைய காயப்படுத்திட்டோமே என வேதனைபடட்டார்.
அனிஷா " நான் தப்பு செய்துட்டேன் லவ் பண்ணேன் ஆனா உங்களுக்குத் தெரியாம கல்யாணம் செய்ய விரும்பல.ஆனாலும் நடந்துச்சி அத மட்டுந்தான் நான் மறைச்சேன். குழைந்தை விஷயத்தை அப்பாதான் சொல்லவேண்டாம்னு சொன்னாங்க. "
நான் பண்ணின தப்பிற்கு என்ன சபிக்கவோ திட்டவோ என்னவேணாலும் செய்ங்க. இதுக்குமேல என் வாழ்க்கையில என்ன இருக்கு என மடிந்து அமர்ந்தாள்.
இதைக்கேட்ட அர்ஷாத்துக்கு மூச்சுமுட்டுறமாதிரி இருந்தது. என்னோவ மாதிரி மனசுக்குள்ள ஃபீல் பண்ணினான்.
அவனுக்கு இப்போ வெளிக்காற்று வாங்கினா நல்லயிருக்கும்போல தோணவே சட்டென எழும்பி பிள்ளைய நோக்கி கைநீட்டவும் பிள்ளை அனிடம் தாவியது. எல்லோருக்கம் ஆச்சர்யம் பிறந்ததுல இருந்து பார்க்காத தகப்பனிடம் எவ்வளவு ஒட்டுதல் என.
பிள்ளையோடு வெளியே வந்தான்.
பிள்ளையின் கையெடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான்.
ஜீவாவும் வெளியே வந்தவன் அர்ஷாத்த பார்த்தான் அவன் கண்களில் கண்ணீர்.
வாழ்க்கை நமக்கு என்ன வச்சிருக்கு என யூகிக்ககூட முடியாது. அப்படித்தான் அர்ஷாத் வாழ்க்கையிலும்.
ஜீவா " உங்க இரண்டு பேரோட வாழ்க்கை இப்படி இருக்க ஜெய்ப்பாவும் தம்பியும் கொஞ்சம் காரணம். ஆனால் முழுக்க முழுக்க அவங்க காரணமில்ல நீங்க கொஞ்சம் திடமா இருந்திருக்கனும். போனது போகட்டும் இனி உள்ளத பார்க்கலாம் "
ஜீவா பிள்ளைய எடுக்கபோனான். அது அர்ஷாத் தோள்ல சாஞ்சி ஜீவாவ ஓரக்கண்ணால் பார்த்ததும். அப்படியே உருகிட்டான் பாப்பாவ மாதிரியே இருக்கா. என்ன கலரு மட்டும் அவங்கப்பா கலரு. அர்ஷாத் வெள்ளகாக்கா மாதிரி இருப்பான்.
கொஞ்சநேரம் வெளியே இருந்திட்டு உள்ளே வரவும் அனிஷா பிள்ளையை வாங்கிக்கொண்டாள்.
எல்லாரும் அமைதியா இருந்தனர்.
அனிஷா அத்தை ஏற்கனவே சாப்பாடு ரெடியாக வைத்திருந்தார்.
எல்லாரையு சாப்பிடக்கூப்பிட்டார்.
ஒருத்தருக்கும் சப்பிட மனதில்லை.
அப்படியே அமர்ந்திருந்தனர்.
ஜீவா பார்த்தான் இது சரிப்படாது என எழும்பியவன் சாப்பாடு எல்லாத்தையும் ஹாலுக்கே எடுத்துவந்தான் .
அர்ஷாத்த ஜீவா சாப்பிடக் கூப்பிட்டான். பசியில்ல அப்பறமா சாப்பிட்டுக்குறேன் என சொல்லவும் கட்டாயப்படுத்தல வந்துட்டான். அனிஷாவும் சாப்பிடல.
எல்லோரும் சாப்பிட்டு முடிக்கவும்.
அவர்களுக்கான மாத்திரையை கொடுத்தான்.
சாரதா பிள்ளையவே பார்த்திருந்தார்.
அனிஷா மாதிரியே குண்டு கண்ணம்
குட்டி அனிஷா. என்ன கலரு அவன மாதிரி இருக்கு என இவரும் நினைத்துக்கொண்டார்.
அனுராதா அனிஷா பக்கத்துல வந்து உட்கார்ந்து பிள்ளையை அவர் மடியில் வாங்கிக்கொண்டார்.
குழந்தைய தடவித்தடவி பார்த்தார் மெதுவா சாரதாவும் அவர் பக்கத்துல வந்து பிள்ளையின் காலைப்பிடித்து வைத்துக்கொண்டார்.
எல்லா சொந்தமும் இருந்தும் யாருமில்லாம எங்கவீட்டு குட்டி பிறந்திருக்கா. இவங்க அம்மாக்கு என்ன குறைவச்சோம். ஒன்னுக்கு இரண்டு பாட்டி தாத்தா,மூன்று தாய்மாமா நினைக்க நினைக்க சாரதா அழுதவர் வாய்விட்டு அவ்வளவையும் சொல்லிவிட்டார்.
அனுராதா மெதுவா அனிஷாவின் காதில் " அந்த தம்பி காலையில சாப்பிட்டு வந்துச்சோ என்னவோ இப்பவரைக்கும் பட்டினியா இருக்கு.
போயி அவருக்கு சாப்பிடக் குடும்மா நல்லபிள்ளல போ. உனக்காகத்தான் ஓடி வந்திச்சி போடா " என சொல்லவும்.
பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவள்.
வெளியே இருந்த அவனிடம் சென்று நின்றவள் " சாப்பிடலையா "
அர்ஷாத் " வேண்டாம் " என தலையசைத்தான்.
அனிஷா" எனக்கு பசிக்குது வா சாப்பிடலாம் "
அர்ஷாத் மறுத்து பேச வாயெடுத்து
அவளை பார்த்தான். பின் அவள் முகத்தில் என்னக் கண்டானோ சரியென உள்ளே சென்றான்.
இரண்டுபேருமே மற்றவருக்காகவே சாப்பிட அமர்ந்தனரே தவிர சாப்பிடாமல் சாப்பாட்டை அலைந்து கொண்டிருந்தனர்.
உண்டு முடித்து எல்லோரும் ஹாலில் இருந்தனர்.
ஜீவாவக்கு ஃபோன், எடுத்துபார்த்தவன்
ஜெபா எனவும் பேசினான்.
நீ நாளைக்கு இங்க வர்றியா இல்ல டைரக்ட்டா ஊருக்கு வர்றியா எனக்கேட்டான் இங்கு புனே வருவதாகா சொல்லவும் போனை வைத்துவிட்டான்.
ஆனந்தராஜ்க்கு ஃபோன் செய்து எல்லா விவரத்தையும் சொல்லிவிட்டான்.
எல்லோரும் தூங்குவதற்காக ஆயத்தமாக அர்ஷாத் மறுபடியும் வெளியே சென்று அமர்ந்து கொண்டான்.
ஜீவா " ஏன் பாப்பா அடுத்து என்ன செய்யப்போற "
அனிஷா " டெல்லியில என் பிரண்ட்ஸ் இருக்காங்க அங்கபோறேன். "
எல்லாரும் ஒன்றாக " என்னது டெல்லிக்கா " என்க்கேட்கவும் அவளே கொஞ்சம் மிரண்டுத்தான் போனாள்.
சாரதா " இதுவரைக்கும் நீ எடுத்த முடிவு போதும். எங்கமேல பாசம்னு ஒன்னு இருந்தா இப்போ நாங்க சொல்றத கேளு "
எல்லோரும் தூங்கச்செல்லவும் அனிஷா பிள்ளைய எடுத்துகொண்டு சென்றாள்.
வெகுநேரம் கழித்து அனுராதா வெளியே வந்து பார்க்கவும் அர்ஷாத் வெளியே உள்ள பால்கனியின் சேரில் அமர்ந்தே தூங்கிக்கொண்டிருந்தான் தன்னையறியாமல். இரண்டு பேரும் பிரிஞ்சிருந்து என்ன கண்டாங்க ஒன்னுமில்லையே என பார்த்து நின்றவர்.
மெதுவாக அனிஷாவிடம் சென்றார் அவள் விழித்திருக்கவும் " பாப்பா அந்த தம்பிய உள்ள கூப்பிடுமா பாவம் வெளிய சேர்லயிருந்தே உறக்கம் அதுதான். நாங்க சொன்னா சரியா இருக்காதுடா.
போம்மா " என சொல்லவும்.
அனிஷா சென்று அர்ஷாத்தை எழுப்பி
உள்ளே வரச்சொன்னவள் கட்டிலில் போய் பிள்ளையின் பக்கத்தில படுத்துக்கொண்டாள்.
அர்ஷாத் " ரூமுக்குள் வந்தவன் சுற்றிலும் பார்த்தான் சட்டைய கழட்டி கீழே போட்டு அதன் மேல் படுத்துக்கொண்டான்.
நல்லத்தூக்கத்தில் நெஞ்சின் காயத்தில் வலி தெரிய மெதுவா கண்திறந்து பார்த்தான்.
கண்ணீரோடு அவனை நெஞ்சில் அடிக்கும்போது தன் நகங்களால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்டுக்கொண்டிருந்தாள் அனிஷா..
அத்தியாயம் - 8
அனலாய் உன் பேச்சு
ஒவ்வொரு முறையும்
வெந்து தணிகிறேனடி!
அனிஷா மருந்து போட்டுவிடும்போது ஏற்பட்ட சிறு வலியினால் விழித்தவன் அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
இரவின் அந்த சிறு வெளிச்சத்திலும் அவளுடைய கண்களின் கண்ணீரைக்
கண்டவன் மெதுவாக அவள் கரங்களை பற்றியவன் எழுந்தமர்ந்தான்.
அவள் மருந்திட்டு முடித்து சொன்னாள் இது என்னால வந்த காயம் அதான் மருந்துபோட்டேன் சீக்கிரம் ஆறிடும். என சொல்லி எழப்போகவும்
அர்ஷாத் பேசினான் " நான் ஏற்படுத்தின காயத்துக்கு மருந்துபோடனும்னு சொல்றியா. இல்ல மருந்துபோட்டாலும் அவ்வளவு சீக்கிரம் ஆறதென சொல்றீயா "
அனிஷா எதுவும் பேசாமல் அவள் கைகளை இழுத்தாள். அவன் அவள் கைகளை இன்னும் இறுக்கமா பிடித்திழுத்து கைகளில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான்.
தேங்க்ஸ்டா இப்படி அழகான தேவதைய பாதுகாத்து எனக்கு தந்ததுக்கு.
அவனுக்குத் தெரியும் ஜெயராஜ் குழந்தை விசயம் தெரிந்து கண்டிப்பா தன் மகள் வாழ்க்கைகாக வேறமாதிரிலாம் யோசிச்சிருப்பாரு .
அதையெல்லாம் செய்யாமல் இந்த குழந்தைய எப்படி பாதுகாத்து பெத்தெடுத்திருக்கிறாள்.
இதவிட வேறென்ன எனக்கு வேணும்
எவ்வளவு காதல் என்மேல இவளுக்கு.
அவ அன்புக்கு நான் தகுதியேயில்ல என ஏற்கனவே சிந்தித்திருந்தான்.
அனிஷா " அது என்னோட குழந்தை "
அர்ஷாத்" நம்ம குழந்தை "
அனிஷா" அப்படியா,யாரு சொன்னா "
அர்ஷாத் அவள பார்த்து லேசா சிரித்தான்.
அனிஷாவுக்கு கோவம் இன்னும் கூடிட்டு
"அவன் மேல தலையணை தூக்கி வீசிட்டுப்படுத்தாள் "
அர்ஷாத்" உனக்குத்தான் இப்படி பேசவரலையே அப்புறம் எதுக்கு ட்ரை பண்ற "
அனிஷா" எப்போ ஊருக்குபோற "
அர்ஷாத் " என்ன "
அனிஷா " நீ ஊருக்கு எப்போம் போவ "
அர்ஷாத் " நீ எப்போம் வருவியோ அப்போம் "
அனிஷா " அப்படியா ஏன் உன் பொண்டாட்டி அதுதான் உன் மாமா பொண்ணு உன்ன தேடமாட்டாளா "
அர்ஷாத் " கல்யாணமான பொண்ண தப்பா சொல்லாத. அவ எனக்கு மாமா பொண்ணு மட்டும் தான் "
அனிஷா " நா எங்க தப்பா சொன்னேன். நீதான சொன்ன எங்க மாமா நல்வரு வல்லவரு எனக்கு பொண்ணு தர்றாரு அவளத்தான கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்ன "
அர்ஷாத் கொஞ்சமா சரிஞ்சிபடுத்து கையை தலையில் ஊன்றி அவளைப்பார்த்து பேசினான் " அது பொய்யினு உனக்கே தெரியும். சண்டபோடனும்னா வேற எதாவது சொல்லி சாண்டைபோடு.
தேவையில்லாம இன்னோரு பொண்ண அதுவும் அடுத்தவன் பொண்டாட்டிய என்கூட இணைச்சி பேசாத. "
அனிஷா " ஆமா எனக்கு இதுதான் வேலையா யாரு பொய் சொல்றா உண்மைய சொல்றானு ஆராய்ச்சி பண்றதுக்கு "
அர்ஷாத் " ஓ அப்படியா ஆனா என் பொண்டாட்டி அப்படியில்ல. எது உண்மை பொய்யினு எல்லாம் ஆரய்ஞ்சி பார்ப்பா ஏன்னா இரண்டு கையையும் விரித்து அவளுக்கு என் மேல இவ்வளவு லவ்வாம் "
அவளைப்பார்த்து கண்ணடித்தான்.
அனிஷா ஒன்றும் சொல்லாமல் திரும்பி படுத்துவிட்டாள்.
அர்ஷாத் பேசினான் " அனி நான் மேலவந்து பிள்ள பக்கத்துல படுக்கட்டுமா " எனக்கேட்டான்.
அனிஷா " இவ்வளவு நாளும் என்ன பொண்டாட்டி பிள்ளைங்க கூடவா இருந்த. இல்லல.அப்படியே தூங்கு "
அர்ஷாத் "ஆமா உண்மைதான்
யாருமே இல்லாம. சாப்பிட்டியா தூங்குனியானு கூட கேட்க ஆளில்லமாதான் இருந்தேன்.
என்ன டபுள் சிஃப்ட் பார்த்திட்டு அந்த டயர்ட்ல சாப்பிடாமலேதூங்குவேன்.
தூக்கம் வரனுங்கறதுக்காகவே ரெம்பதூரம் நடப்பேன்,வெளியவே சுத்துவேன் அப்படியே வந்து தூங்கிருவேன். இன்னைக்கு என் பொண்டாட்டி பிள்ளைனு பக்கத்துல சந்தோஷத்துல தூக்கம் வரல "
அனிஷா அமைதியாகவே இருந்துவிட்டாள்.
கொஞ்சநேரம் கழித்து இரண்டு பிளாங்க்கட் எடுத்து விரித்து அதில் பிள்ளையை அர்ஷாத் அருகில் கிடத்திவிட்டு. தான் கட்டிலில் சென்று படுத்துவிட்டாள்.
அர்ஷாத் அவள் செய்வதை பார்த்திருந்தவனுக்கு அவ்வளவு நெகிழ்ச்சி. பிள்ளையை தெட்டு தொட்டு பார்த்தான்.பிள்ளையின் கால்களை எடுத்து தன்மீது போட்டுக்கொண்டான். கன்னத்தை தெட்டான், முடியை தடவிக்கொடுத்தான்.
கட்டிலில் ஒருக்கழித்து படுத்து இதையெல்லாம் பார்த்திருந்தவள்
ஊமையாய் கண்ணீர் வடித்தாள்.
இருவரும் எப்போது தூங்கினர் என்று தெரியாது.பிள்ளையின் அழுகை சத்தம் கேட்டுத்தான் அனிஷா எழும்பினாள்.
அங்கு பிள்ளையின் அழுகையை சமாளிக்க முடியாமல் அர்ஷாத் இருந்தான். படபடவென இறங்கி பிள்ளையை தூக்கிகொண்டாள்.
அதற்குள்ளாக சத்தம் கேட்டு அனுராதா கதவை தட்டியிருந்தார்.
அர்ஷாத் சென்று கதவை திறந்தான்.
மணி பார்த்தான் மணி ஒன்பதை தாண்டிற்று. இவ்வளவு நேரம் எப்படித்தூங்கினான் எனத்தெரியாது. ஆனால் ரெம்ப வருஷம் கழிச்சி நிம்மதியான உறக்கம் என நினைத்தான்.
பிரஷ்ஷப் ஆகிவரதுக்குள்ளாகவே
அனுராதா ரெமியுடன் சேர்ந்து கிட்சன் வேலை செய்துக் கொண்டிருந்தவர் அனிஷா பிள்ளையுடன் வெளியே வரவும் காஃபி கொடுத்தார்.
பிள்ளைக்கு பால் சிப்பர் கொடுத்து சாரதாவிடம் கொடுத்தவள் தானும் காஃபி எடுத்துக்கொண்டு ஜீவாவின் அருகில் அமர்ந்தாள் பழைய அனிஷா திரும்பியதுபோல உணர்வு எல்லோருக்கும்.
ஜீவா அவளது கன்னத்தை பார்த்து அது சிவந்து இன்னும் சாரதா அடித்ததின் தடம் பதிந்திருக்க
" வலிக்குதா பாப்பா " எனக்கேட்கவும் அடித்தபோது அழாத அழுகை இப்போது வந்தது அண்ணனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அனிஷா " இப்போ வலிக்கலண்ணா உங்க எல்லாரையும் விட்டு தனியா இருந்ததுதான் ரெம்ப ரெம்ப வலிச்சது.யாருமே இல்லாம இருந்ததுதான் கஷ்டமா இருந்தது. இதெல்லாம் ஒன்னுமில்லை " என முடிக்கவும்.
சாரதா ஓடிவந்து அவளைக் அணைத்துக்கொண்டார்.
அவளும் சலுகையா அவங்கம்மா தோளில் இப்போது சாய்ந்துக்கொண்டாள்.
அர்ஷாத் ரும்லதான் இருந்தான் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரங்கழித்து ஜெயராஜ் அர்ஷாத்துக்கு கொஞ்சம் உடைகள் வாங்கிவந்திருந்தார்.(என்ன இருந்தாலும் வீட்டின் ஒரே மாப்பிள்ளை.கவனிக்கனும்ல).
சாரதாதான் அனிஷா கையில குடுத்தார். அனிஷா சென்று அர்ஷாத்திடம் அந்த உடைகளை கொடுத்தாள்.
என்னது எனக்கேட்கவும் உன் மாமானார் உன்ன ஜெயிலுக்கு அனுப்பாம. மாப்பிள்ளை விருந்துதர்றாரு என சொல்லவும்.
அர்ஷாத் " அனி உண்மையாவே எனக்கு தண்டனை வேணும்னு நினைக்கியா "என வருத்தத்தோடு கேட்டான்.
அவள் பதிலேதுவும் சொல்லாமல் வெளியே சென்றாள்.
அனிஷாவுக்கு போன்வரவும் எடுத்து பேசினாள். பேசி முடித்து ரெடியாகி வந்தவளை பார்த்த சாரதா முறைத்துப் பார்த்தார்.
அனிஷா ஜீன்ஸ்ம் ஷர்ட்டும் போட்டிருந்தாள். அதுக்குத்தான் அந்த முறைப்பு . நான் வேலைப்பாக்கறது இங்கவுள்ள பெரிய இஞ்ஜினியர் காலேஜ்ல. இங்க அவுர்ட்வேர்ட் லுக் ரெம்ப முக்கியம்மா என சொன்னாள்.
அனிஷா மெதுவா " அனுமா நான் காலேஜ் வரைக்கும் போயிட்டு வர்றேன். எல்லாம் ஹேண்ட் ஓவர் பண்ணனும். நேத்து ரிசைன் போட்டேன் "என சொல்லி வெளியேவரவும் அர்ஷாத் ரெடியாகி வந்து நானும் உங்கூட வர்றேன் அவளுடன் சென்றான்.
அவ தனியா போனா ஸ்கூட்டில போவா. அர்ஷாத்கூட எப்படி அவன் இருக்க வளர்த்திக்கு அது சரிவராது என டேக்ஸியில் சென்றனர்.
அவள் அங்கு சென்றதும் அவளைத்தேடி அவளின் தோழி மோனல் வந்தாள். தமிழில் பேசவும் அர்ஷாத்துக்கு ஆச்சர்யம்.
பார்க்க அப்படியே வடஇந்திய சாயல் ஆனா தமிழ் பேசினதும் ஷாக்.
மோனல் " எப்படிண்ணா இருக்கீங்க
இப்போதான் மனைவி பிள்ளைங்கள பார்க்க வர்றதா. நீங்க போட்டால இருக்கறதவிட நேர்லதான் நல்லா அழகா இருக்கீங்க " என கேட்கவும் சிரிச்சே சமாளிச்சான்.
" குட்டிப்பொண்ணு எப்படி இருக்கா என்ன தேடுனால. காலேஜ் முடிஞ்சி வீட்டுக்கு வர்றேன்பா "என சொல்லிசென்றாள்.
உள்ளே செல்லவும் எல்லா லெக்ட்சரர்சும் அனிஷாவ பார்த்து பேசி, அர்ஷாத்கிட்டயும் பேசினாங்க.அவனுக்கு ஆச்சர்யம் எல்லாம் முடித்து வெளியே வரவும் அவளே பேசினாள்.
கல்யாணம் முடிஞ்சி ஹஸ்பண்ட் பாரின்ல இருக்கறதா சொல்லிருக்கேன்.
கல்யாணமாகாம வயித்துல பிள்ளைய வச்சிட்டு எப்படி இங்க வேலைய பார்க்கமுடியும். அதுதான் சொன்னேன்.
அதுதான் உண்மையுங்கூட அப்புறமென்ன என அவனிடமே கேள்விக்கேட்டாள்.
அர்ஷாத் ஒன்னுமே சொல்லாம அமைதியாக நடந்தான்.
எனக்கு கொஞ்சம் வெளிய எங்கயாவது இருக்கனும்போல இருக்கு இங்க எங்கயாவது பார்க் மாதிரி இருக்கா. போகலாமா எனக்கேட்டான்.
அவளுக்கும் வீட்டுச்சூழல்ல எதுவும் பேசமுடியாது இதுதான் நல்லது என அருகில் இருந்த பார்க்கிற்கு செல்லவும்.
ஒரு நிமிடம் என சொல்லி
வழியிலிருந்த கடையில் எதோ வாஙகினான்.
பார்க்கில் சென்று அமரவும் பாக்கெட்ல இருந்த சாக்லேட் எடுத்து அவளிடம் தந்தான்.
அனிஷா " நான் இதெல்லாம் இப்போ சாப்டுறதில்லை விட்டுட்டேன் "
அர்ஷாத் அதை அவள் கைகளில் கொடுத்தான்.அனிஷா அப்படியே உட்கார்ந்திருந்தாள்." சில ஆசைகள் கூட மறத்துபோச்சி எப்படி சாப்பிடுவேன் "
அர்ஷாத் " இப்போ நான் உன்கூடத்தான் இருக்கேன். இனி இருக்கப்போறேன். டெய்லி வாங்கிதர்றேன் எப்பவும்போல
சாப்பிடு என பிரித்துகொடுத்தான் "
அவர்கள் இருவருக்கும் முழுவதும் கல்லூரிக் காலத்திலும், அவர்கள் பழகிய நாட்களிலும் நடந்ததுதான் இப்போது ஞாபகத்தில் வந்தது.
அர்ஷாத்" பெரியவங்க என்ன செய்யனும்னு விரும்பறாங்களோ அப்படியே செய்யட்டும். ஆனால் நான் உங்க இரண்டுபேரையும் என்னோட நம்மவீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன். இனி உங்க இரண்டுபேரையும் விட்டுப்போகமுடியாது. எனக்குத் தெரியும் நீ வரவிரும்பல. என்மேல கோவமா இருக்க. எதுவா இருந்தாலும் எங்கூடவே இரு தயவு செய்து. இத மட்டும் உன்ன கெஞ்சிக்கேட்டுக்குறேன்.
வீட்லவச்சி இதக்கேட்டு நீ சத்தம்போட்ட சரியா இருக்காது அதான் " என நிறுத்தினான்.
அனைத்தையும் கேட்ட அனிஷ
" வீட்டுக்கு போகலாமா பிள்ளை தேடுவா ஏற்கனவே இரண்டு நாள் அவள விட்டு இருந்ததுக்கே ஃபீவர் வந்திட்டு "
எனக்கிளம்பினாள் அர்ஷாத் விழித்தான் நாம இவ்வளவு பேசிருக்கோம் ஒரு ரியாக்க்ஷனும் வரல என.
எழும்பி நடக்கும்போது அர்ஷாத் " கேட்டா தப்பாநினைக்காத நம்ம பிள்ளையோட நேம் என்ன " திரும்பி அவனைத்தீர்க்கமாக பார்த்தாள்.
அனிஷா " எனக்கொரு டவுட்டு ரிஜிஸ்டர் மேரஜ்ல கையெழுத்துப்போட்டா பிள்ளை பிறக்குமா ?இல்ல கேட்டேன் நீதான சொன்ன உனக்கு வேணும்னா ஒரு கையொழுத்துப்போட்டு தர்றேன்னு. எல்லாத்தையும் முடிச்சிட்டு போனியே அப்புறம் எப்படி நம்ம பிள்ளைனு சொல்ற "
அர்ஷாத் ஒன்னுமே சொல்லல இந்த சொர்னாக்கா நம்மள வச்சி செய்றானு மட்டும் தெரிஞ்சது. இன்னும் செய்வானும் தெரிஞ்சது.
வாயத்திறந்திறாத அர்ஷாத்னு மனசாட்சி சொல்லியது.
அனிஷா " இல்ல அம்மவும் மகனும் இததான சென்னீங்க அதான் கேட்டேன்.
உங்கம்மாவுக்குத்தான் ஒன்னும் தெரியாது. உனக்கு காதலிச்சி யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்து பொண்டாட்டிகூட வாழ்ந்ததுகூட மறந்துபோச்சிது இல்ல. அவ்வளவுதான் நான். நாலு வருஷம் கழிச்சி வந்து நம்ம பிள்ளையாம் நம்ம பிள்ள."
அவ்வளவு கோவம் இரண்டுபேரும் பேசாமலயே வீடுவந்து சேர்ந்தனர்.
அதுக்குள்ளாகவே பிள்ளை அம்மாவ எங்க எனக்கேட்டு அழுகை.
அனிஷா வந்ததும் அவள் மடியில் உட்கார்ந்துகொண்டாள்.
அவர்கள் இருவரும் தனியாக ஏதோ பேசி சிரிக்கவும் பார்த்துக்கொண்டிருந்த எல்லேருக்கும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு தடவையும் ஊருக்கு வந்து உடனே திரும்பிவருவதற்கான காரணம் புரிந்தது .அர்ஷாத்துக்கோ இழந்த இழப்பின் வீரியம் தெரிந்தது.
அனிஷா பிள்ளையிடம் ஏதொ சொல்ல அவள் எல்லோரையும் பார்த்து
" தன் நெஞ்சில் கைவைத்து பாப்பா நேம் ஹனி சாரா "
என சொன்னதுதான் சாரதா ஓடிவந்து சாராவை தூக்கி முத்தமிட்டார்.
அனிஷா அர்ஷாத்த பார்த்தாள் பிள்ளையோட பேரு கேட்டதான. அதான் சொல்ல சொன்னேன் என்ற பதில் அந்த பார்வையில் இருந்தது.
ஜீவா " ஜெய்ப்பா தம்பி வர்றேனு சொல்லிருக்கான். அவன் வந்தபிறகு நான் ஈவ்னிங்க் பிளைட்ல போறேன். நீங்க நாளைக்கு காலையில வாங்க சரியா "
ஜெயராஜ் " சரிப்பா " என சொல்லி அர்ஷாத்த கைய காமிச்சார்.
ஜீவா "அர்ஷாத் நீங்க உங்கவீட்ல பேசிட்டீங்கதான. மேரேஜ் மட்டும்னாக்கூட பரவாயில்ல. இப்போ குழந்தையும் இருக்கு சீக்கிரம் பேசுங்க "
நீங்க முடிவெடுங்க நான் அம்மாகிட்ட பேசிக்குறேன். ஆனா அனிஷாவும் குழந்தையும் என்கூட இருக்கறமாதிரியே பிளான்
பண்ணுங்க " என சொல்லவும் ஜீவா சிரித்து சரி என தலையசைத்தான்.
மதியம் இரண்டுமணிபோல மோனல் வந்தாள் காலேஜ்ல சிலதுவிட்டு வந்திருந்தாள் அதைக்கொடுத்துவிட்டு சாராவ பார்த்துவர வந்தாள்.
உள்ளே வந்து எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போதே புயலென உள்ள வந்தான் ஜெபா.
நேராக சென்று அனிஷாவிடம் நின்றான் .கொஞ்சமாவது உனக்கு மூளை புத்தி என எதாவது கடவுள் குடுத்திருக்காரா. இல்ல எப்படி செவர் ஏறி குதிச்சி வருவ நீ. அப்படி என்ன புதையல இங்க வச்சிருக்கனு வந்த எனக்கேட்டான்.(அவனுக்கு குழந்தை விசயம் இன்னும் சொல்லல)
அனிஷாவிடம் கைய காமி கையில ஏதோ அடின்னுசொன்னான்.
எனக்கையப்பிடித்து பார்த்தான்.
(கோவத்திலும் ஒரு பாசம்).
இதபார்திட்டிருந்த சாரா அழுதுகொண்டே ஓடிவந்து அனிஷாவ தூக்க சொன்னது.
அதப்பார்த்து ஜெர்க்கான ஜெபா எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான் .
அனைவரும் அவனைத்தான் கலவரமா பார்த்தாங்க அதில் மோனலும் ஒருத்தி.
ஜெபா போட்ட சத்தத்தில் சாரா அழவும் ஜெபா மோனலைப்பார்த்து உங்க பாப்பாவ வாங்குங்க என ஹிந்தியில் சொல்லவும் அவள் திருதிருத்தாள்.
மோனல்தான் அது என் பாப்பா இல்ல அனிஷிவோடது என சொல்லிவிட்டாள்.
இவன் கோபத்தில்போட்ட சத்தம் அப்படி.
ஜெபா இப்போது ருத்ரனான்
" என்ன "
இப்போது சாரதா தான் விஷயத்தை முழுவதுமாக அவனிடம் சொன்னார்
அனிஷா ஒரு அடி பின்னால் நகர்ந்தாள் .
அதற்குள்ளாக ஜெபா அர்ஷாத்திடம் சென்று உன்ன மாதிரி ஒருத்தன லவ் பணணதுக்கு எங்க பாப்பாவ என்ன நிலையில கொண்டுவந்திருக்க பாரு என அடிக்க கையோங்கவும் அனிஷா அர்ஷாத் முன்னாடி வந்து அவனை மறைத்து நின்றாள்.
அண்ணா நான் தப்பு பண்ணிருக்கேன்.
என்ன கண்டிக்கவோ அடிக்கவோ ஏன் கொல்லக்கூட உங்களுக்கு ஊரிமையிருக்கு. அவன எதுக்கு அடிக்கப்போறீங்க.
இதுக்கு முன்னாடி இப்படி செய்யும் போது எனக்கு இவ்வளவு விவரமும் இல்ல. அந்த சூழ்நிலையின் பயம் வேற.
இப்போ பேசுவேன் அவன அடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
ஓங்கிய கையை கீழபோட்டான் ஜெபா.
அன்னைக்கு என்ன உரிமையில அடிச்சீங்க. இப்பவும் அடிக்கபோறீங்க.
ஹான் தங்கச்சி மாப்பிள்ளைனு உரிமையா. அப்படின்னா நீங்க மரியாதைதான் குடுக்கனும்.
ஜெபா அப்படியே விலகிபோயி உட்கார்ந்திட்டான். அவனுக்கு எண்ணமெல்லாம் இப்பவும் அவனுக்குதான சப்போர்ட் பண்றா என நினைத்து அமைதியாக இருந்தான்..
அத்தியாயம் - 9
ஆயிரம் ஊசிமுனையாக
குத்துகிறது எனது நெஞ்சில்
உன் வார்த்தையெனும்
பேராயுதம்!
ஜெபா தலையில் கைவைத்து கோபத்தை அடக்கி கொண்டிருந்தான்.
எதிலோ தோற்றது போல இவ்வளவு பெரியவேலையில் இருக்கோம். நம்ம தங்கச்சி பாதுகாப்பா இருக்கானு நினச்சேன். எல்லாத்தையும் மறந்திருப்பானு பார்த்தா இதெல்லாத்தையும் மீறி நமக்குத்தெரியாம குழந்தை வேற இருக்கு.
படிக்கறவயசல காதல். அதுவும் வீட்டுக்கு தெரியாம மறைக்குறானு தெரிஞ்சதுல இருந்தே ரெம்ப கட்டுப்பாடு போட்டான் தங்கைக்கு.
அர்ஷாத்த பார்த்ததும் ஏன்னு புரியல பிடிக்கல தன் தங்கச்சிய பிரிக்கறானோ எனதான் அவனுக்குத்தோன்றியது.
தங்கச்சி விசயம் தெரிஞ்ச உடனே அர்ஷாத் குடும்பத்ததான் முதலில் விசாரித்திருந்தான். அது அவனுக்கு திருப்தியில்ல அண்ணனா முடிவெடுத்தான். இப்பவரைக்கும் அவங்க குடும்பத்து மேல நல்ல அபிப்பராயம் இல்ல.
அவளுக்கு எப்படியெல்லாம் மாப்பிள்ளை பார்த்தான்.( அவனும் ஒரு பொண்ணுகிட்ட விழும்போது தான் காதலின் ரணம் புரியும்).
அவன் இப்படி இருப்பதைப்பார்த்து அனிஷா அவன் முன் மண்டியிட்டு அவன் கைகளைப்பிடித்திருந்தாள்.
" இப்படி இருக்காதண்ணா வேணும்னா உன் கோவந்தீர என்னைய அடிச்சிக்க "என அவன் கைகளைப்பிடித்து தன் கன்னங்களில் வைத்தாள்.
ஜெபா தன் கைகளை உருவிக்கொண்டான். ஒன்றுமே பேசவில்லை.
இங்கப் பாருண்ணா படிக்கற வயதில காதல் அதுஇதுன்னு போனது என்னோட தப்புதான்.இருபத்தியோரு வயசுல உலகம் தெரியாம இருந்திருக்கலாம்,வாழ்க்கைனா என்னனு தெரியாம இருந்திருக்கலாம்
ஆனால் இதெல்லாம் தாண்டி இவன் இவன் மட்டுந்தான் எனக்கு எல்லாமாக இருப்பான் அப்படிங்கற உணர்வு உயிருக்குள்ள இருந்து வந்திச்சிண்ணா. எந்த சூழ்நிலையும் இவன்கூடத்தான் வாழனும் அப்படிங்கற எண்ணம் அதுக்கு நான் என்ன 'ண்ணா பண்ண.
நான் லவ் பண்றேனு தெரிஞ்ச நாளையிலயிருந்தே நீ என் அண்ணனா இல்ல. எல்லாத்துக்கும் கட்டுப்பாடு போட்டா எப்படி இருக்க முடியும்.
நீ என்கிட்ட இது விஷயமா பேசவேயில்ல. நீ புரியவச்சிருக்கனும்..
நீங்க என்னகூப்பிட்டு கேட்டிருக்கனும் என்கிட்ட பேசியிருந்தாலும் அவன விட்டு வந்திருக்கமாட்டேன் தான். ஆனா உங்க சம்மதத்திற்காக வெயிட் பண்ணிருப்பேன்
இப்படி அவசரகோலமா அள்ளித் தெளித்திருக்கமாட்டோம் எங்க வாழ்க்கைய.
பட்டாம்பூச்சிய பாதுகாக்குறேனு உன் உள்ளங்கைகுள்ள பொத்திவச்சிக்கிட்டா
மூச்சிமுட்டி செத்துபோயிடும் ணா.
நான் இப்போ அப்படித்தான் இருக்கேன் மூச்சிமுட்டுது' ண்ணா.
இப்போக்கூட நீ எங்கள பிரிச்சிவைக்கமுடியும். அதுதான் உன் இஷ்டம்னா நாங்க அப்படியே இருக்கோம். ஆனா இரண்டுபேருமே உயிருள்ள ஜடமாகத்தான் வாழ்வோம்.
நீயும் சாரும்மாவும் எப்போவும் இப்படித்தான். பாசத்தைக்கூட அதட்டி உருட்டித்தான் காமிப்பீங்க.
இனி உனக்கு என்ன தோணுதோ செய் "
ஜெபா " பாப்பா நாங்க பிரச்சனை செய்ததும் உன்ன விட்டுப்போயிட்டான். அப்படிப்பட்ட அவன்கூட வாழனும்னு நினைக்குற. இவன நம்பி எப்படி உன்ன அனுப்ப முடியும் "
அனிஷா " நீங்க மிரட்டினதுனால அவன் விட்டுப்போயிருக்க வாய்பில்ல. அவன் அப்படி பயப்படுற ஆளும் இல்ல.
எனக்காக மட்டுந்தான் உங்ககிட்ட எதுவும் எதிர்த்து பண்ணாம இருக்கான். அவனும் நம்ம ஜீவாண்ணா மாதிரிதான்.
அந்த நல்லவன் எனக்கு எதோ நல்லது செய்யறேனு கிறுக்குத்தனமா செய்திட்டு இப்போவந்து முழிக்கிறான் அவ்வளவுதான். " என அர்ஷாத்தையும் எங்கேயும் விட்டுக்குடுக்காம பேசினாள்.
ஜெபா அவ தலைய பிடிச்சி லேசா ஆட்டி " ரெம்ப பேசற பாப்பா நீ. இவ்வளவு நாள் நானும் எவ்வளவு பாதுகாத்தேன் ஆனால் அதையும் மீறி இப்படி வந்து நிக்குற. இதுதான் உன் வாழ்க்கை என கடவுள் இப்படித்தானுஎழுதிட்டாருப்போல.
ஆனால் இவ்வளவு நாள் இருந்த மாதிரி இனி இருக்கமாட்டேன். உனக்கு திரும்பவும் எதாவது பிரச்சனைனா விட்டு வைக்கமாட்டேன் " என பேச்சு தங்கிச்சிகிட்டயும் பார்வை அர்ஷாத்கிட்டயும் இருந்தது .
அர்ஷாத்துக்கு அவனப்பார்த்து அவ்வளவு கடுப்பு ஒன்னும்
பேசமுடியாம உட்கார்ந்திருந்தான்.
சாரதா ஜெபாக்கிட்ட வந்து அமர்ந்து
அவன்கிட்ட சமாதானம் பேசிட்டிருந்தார்.
ஜெபா இப்பதான் கொஞ்சம் தெளிஞ்சி சுத்திப்பார்த்தான் அங்க மோனல் உட்கார்ந்திருந்தா. அவ பக்கத்துல ரெமி மடியில சாரா இருந்தாள்.
இரண்டுபேரும் நார்த் இண்டியன் கலர்ல இருந்ததுல அவா பிள்ளைனு நினச்சி பேசிட்டனே. இப்படியா ஜெபா பல்ப் வாங்குவ யோசிச்சிட்டிருந்தான்.
ஜெபா "சாரி .கோவத்துல சத்தம் போட்டுட்டேன் "
அப்போதான் அனிஷா பார்த்து அண்ணா இது என் பிரண்ட் மோனல்ணா எம்.ஈ படிக்கும்போது ஒன்னா படிச்சோம். இரண்டு பேருமே அந்த காலேஜ்லதான் வேலைப்பார்த்தோம்.
அவளுக்கு இன்னும் கல்யாணமாகல என உதிரித்தகவலும் தந்தாள்.
மோனல் இவன் ஆராய்ச்சி பார்வைய பார்த்தவள் " அனிஷா நான் கிளம்புறேன் " என சென்றுவிட்டால்.
அனுராதாதான் " எப்பம் பாரு போலிஸ் பார்வை இவனுக்கெல்லாம் நான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்றதுக்குள்ள ஐயோனு இருக்கபோகுது " என சொல்ல அந்த சூழ்நிலையிலும் எல்லாரும் சிரித்துவிட்டனர்.
ஜீவா " நீ என்கூட ஊருக்கு வர்றியா எப்படி "
ஜெபா " இல்லண்ணா நான் டெல்லி போகனும் பாப்பா விசயமாகத்தான் இங்கவந்தேன் "
நான் உன்கூடவே ஏர்போர்ட் வந்திடுவேன். கொஞ்சநேரம் ஜெயராஜ்கிட்ட ரகசியம் பேசிட்டிருந்தான்.
அர்ஷாத் அவக்கிட்ட வந்து " அனி நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன் " என சொல்லவும்.
அனிஷா " என்கிட்ட ஏன் சொல்ற "
அர்ஷாத் " இங்க நீதான என் பொண்டாட்டி உன்கிட்டதான் சொல்ல முடியும். அப்புறம் நான் எங்கயோ ஓடிப்போயிட்டேன்னு அண்ணனும் தங்கச்சியும் சொல்லக்கூடாதுல அதான் " என சொல்லி வெளியே சென்றுவிட்டான்
அனிஷாக்கு புரிந்தது .ரெம்ப ஃபீல் பண்றான்னு.
அர்ஷாத் வெளிய போனபிறகுதான் ஜெபாவும் கொஞ்சம் நார்மலா இருந்தான். இப்போ சாரதாவும்,அனுராதாவும் வருத்தப்பட்டாங்க. இரண்டுபேரும் இனி காலம் முழுவதும் இப்படியே முட்டிக்கிட்டு இருந்தா என்ன செய்ய.
அனுராதா " நீ கவலைப்படாத பாப்பா எல்லாத்தையும் சரிபண்ணிக் கொண்டுவருவா " என சொல்லவும் ஓரளவு தெளிந்தார்கள்.
இப்போதான் ஜெபா சாராக்கிட்ட வந்து கைநீட்டி வா என சொல்ல. சாரா அழ ஆரம்பிச்சிட்டா. அதுக்கும் அனுராதா அவனதான் திட்டுனாங்க ". எப்போவும் முகத்தை இப்படி உர்ர்று வச்சிட்டு இரு பின்ன எப்படி சின்னபிள்ளைங்க உன்கிட்டவரும் "
அனுராதா "ஜெபா..இனி அந்த தம்பிக்கிட்ட எப்பவும் முறைச்சிகிட்டே இருக்காத. எங்க காலத்துக்கு அப்புறமும் நீங்கதான் சொந்தம்னு இருப்பீங்க அவள பார்த்துக்க இப்படி இருந்தா எப்படி"
அனிஷா " அம்மா நீங்க டென்சன் ஆகதிங்க. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்மா "
இரு அண்ணன்களும் கிளம்ப ஜீவாதான் அனிஷாகிட்ட பேசினான் " எங்ககிட்ட குழந்தை விசயம்சொல்லல அதுக்கு காரணம் இருக்கு அர்ஷாத்கிட்டவும் ஏன் சொல்லல "
அனிஷா " தியாகத்திற்கும் ஓரளவுதான் இருக்குது. நல்லது பண்றேனு பொண்டாட்டிய விட்டுபோயிட்டான்.
எனக்கும் ஒருமனசு இருக்கு அது வலிக்கும்னு ஏன் அவன் யோசிக்கல. நான் என்ன பொம்மையா போன்னு சொன்னா போறதுக்கும் வான்னு சொன்னா வர்றதுக்கும். அவன் இல்லாம எனக்கு என்ன நல்லது நடந்திடும்.. ம்ம்.அதான் சொல்லல.
குழந்தைக்காக வந்து வாழக்கூடாது.
எனக்காக வந்திருக்கனும்.
நான் இல்லாம அவனால வாழமுடியாதுன்னு அனுபவத்துல தெரிஞ்சிக்கனும். இனி எந்த நல்லதோ கெட்டதோ என்னையவிட்டு போகக்கூடாது என தோணும். கடைசிக்காலம் வரைக்கும் அதுதான்."
ஜீவா மனசுக்குள்ள நினச்சிக்கிட்டான். எல்லாரையும் மலையிறக்கிட்டு இவ மலையேறிட்டா..அர்ஷாத் உன்பாடு கஷ்டம்டா. என் தங்கச்சி உன்ன வச்சி செய்யப்போறா என நினைத்துக்கொண்டான்.
அனிஷா அர்ஷாத்த காணலையே எனத் தேடத்தான்செய்தாள். அதற்குள்ளாகவே அனுராதா அந்த தம்பி எங்க எங்கனுக்கேட்டு நச்சருச்சிட்டிருந்தார்.
ஜெபா கிளம்பிபோறதுக்கு முன்னாடி
அனிஷாகிட்ட வந்து " கவனம் பாப்பா இனி நீ எடுக்குற முடிவ சரியா எடு அவ்வளவுதான் சொல்வேன்.
நான் மன்னிப்புலாம் உங்கிட்ட கேட்கமாட்டேன். என்னோட தங்கச்சிக்கு நல்லது செய்யதான் இத்தன வருஷம் முயற்சி பண்ணேன். நீயே எல்லாத்தையும் முடிச்சிட்ட பார்த்துக்க "
ஜீவாவும் ஜெபாவும் கிளம்பி சென்ற பிறகுதான் அர்ஷாத் இரவு 8 மணிபோலத்தான் வீடு வந்தான்.
யாரும் எதுவுமே கேட்கல. அவன் முகமே வாடியிருந்தது. ஜெபா வந்திட்டுபோனபிறகுதான் அவன் அப்படியிருக்கான் என எல்லோருக்கும் தெரிந்தது.
அனிஷா சாப்பாடு எடுத்து வைக்கபோனாள். சாப்பாடு வேண்டாம் என சொல்லி அனிஷா ரூமிற்குள் சென்றவன் பிள்ளையத்தூக்கி வைத்துக்கொண்டான்.
சிறிது நேரங்கழித்து உள்ளே வந்தவள் அவனத்தான் பார்த்திட்டிருந்தா பிள்ளைய மடியில் வைத்து ஏதோ சிந்தனையில் இருந்தான்.
அவள் பிள்ளையை வாங்கப்போனாள் அதற்கு " அவ கொஞ்சநேரம் என்கிட்ட இருக்கட்டும் "
அனிஷா " நேத்து சாயங்கலந்தான் உனக்கு ஒரு பிள்ளைய இருக்குங்கறதே தெரியும் உன் பிள்ளைய இப்படி தோள்லபோட்டு பாத்துக்கறியே இப்படித்தான எங்கப்பாவும் என்ன வளர்த்திருப்பாங்க.
எங்கண்ணே பேசுறாங்கன்னு வருத்தப்படுற. அவன் போனதுக்கு அப்புறமா வீட்டுக்கு வந்திருக்க.ம்ம்ம் "
அர்ஷாத் " உங்க சின்ன நொன்னன் எப்பவுமே என்னைய குறைச்சித்தான் பேசுறான். இப்போ இல்ல நம்ம லவ் பண்றோம்னு தெரிஞ்சதுல இருந்தே இப்படித்தான். இன்னைக்கு என்ன சொல்றான் பிரச்சனைனா நான் சும்மாவிடமாட்டேனு. அப்படினா என்ன மீனிங்க் நான் என்ன பொண்டாட்டிய தண்ணியபோட்டு வந்து அடிக்கறவனா.
இல்ல வேறமாதிரியா. என்னடி நினைச்சிட்டுருக்கான் உங்க நொண்ணே .எனக்கு தன்மானம் எல்லாம் இருக்காதா. உங்கப்பா அன்னைக்கு கூட்டிட்டுப்போகாம இருந்தா கஷ்டமோ நஷ்டமோ என்கூடத்தான இருந்திருப்ப "
அனிஷாக்கு அவன் இப்படிலாம் வாடி போடினு பேசமாட்டானே என்னாச்சி என யோசித்தால்.
"அதுக்கு அப்பறமாவது என்ன கூட்டிட்டு போயிருக்கலாம்தான "
அர்ஷாத் " நீ வேற என்ன நடந்திச்சின்னு தெரியாம. உன்ன கூட்டிட்டுப்போயி பிளாட்பாரத்திலயாடி குடும்பம் நடத்த முடியும்.
அய்யோ நம்மளே ரோட்டுல நிக்குறோம்.அவளாவது நல்லாயிருக்கட்டும்னு சொன்னேன்…
எல்லாரும் இப்படி யோசிக்கறதுதான "
அனிஷா இப்போதான் கவனிச்சா "ரோட்டுலயா ஏன் என்னாச்சி..
உங்களுக்குதான் வீடு சொத்துலாம் உண்டுமே பிறகென்ன "
அனிஷா வீடளவுல இல்லனாலும் வீடு கொஞ்சம் சொத்து காரியங்கள் எல்லாம் அர்ஷாத்துக்கு உண்டுனாலும். சொல்லிக்கறமாதிரி இல்ல.
அர்ஷாத் சுதாரிச்சிட்டான்." ஒன்னும் இல்ல நீ பிள்ளைய படுக்கபோட்டு தூங்கு " என கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
அனிஷா " எங்க வீட்ட யோசிச்சி பார்த்தியா ஒரு அண்ணனும் தம்பியும் டாக்டர். ஒருத்தன் ஐ.பி.எஸ். அவங்க சர்க்கிள்ள நான் இப்படிப்போயி நின்னா யாரு அவங்கள மதிப்பா.
எங்கவீட்ல இருக்க எல்லாரையும் நினைச்சிப்பாரு.
அவங்க வீட்டுசெல்லப்பொண்ணு கல்யாணம் முடிஞ்சதே தெரியாம பிள்ளையோட பேயி நின்னா எவ்வளவு அசிங்கம் அவங்களுக்கு.
அதப்பத்தி கவலப்படாம என்னோட வாழ்க்கைக்காக பயப்படுற சிந்திக்கற எங்குடும்பத்த பத்தி யோசிச்சியா "
எல்லாரையும் விடு இப்படி 3 வயசு பிள்ளையோட நான் வீட்டுக்கு வரும்போது என்ன எவ்வளவு கேவலமா பார்ப்பாங்க பேசுவாங்கனு யோசிச்சியா "
அர்ஷாத் " திரும்ப திரும்ப அதே சொல்லாத. என்னோட சூழ்நிலை .இந்த விசயத்த எனக்கு தெரியப்படுத்திருக்கலாம்.
பழச விடு இப்போ இருக்கற பிரச்சனைய எப்படியும் சமாளிக்கனும் நாம பண்ணின தப்ப நம்மதான் சரி பண்ணனும்.
ஆனாலும் உங்க அண்ணங்கிட்ட நீ சொல்ற பிரிச்சி வச்சா அப்படியே இருந்துருவேன்னு .அப்போ நான் உனக்கு அவ்வளவுதானா "
அனிஷா அவனத்தான் பார்த்திருந்தாள்.
" இதே கேள்விய நான் கேட்டா உன்னோட பதில் என்னவா இருக்கும்..
ம்ம் சொல்லுங்க சார் "
எங்கப்பா பத்திதான் உனக்கு தெரியுமே பிள்ளை விசயம் தெரிஞ்சி என்ன பாடுபட்டிருப்பார்.எம்மேல இருக்குற பாசத்துலதான இவ்வளவையும் செய்தார்.
இருவரும் அமைதியா இருந்தனர் சிறிது நேரம். பிள்ளை லேசா சினுங்கவும்.அனிஷா பிள்ளைய வாங்கி படுக்க போட்டவளின் அருகாமை அர்ஷாத்த என்னவோ செய்தது.
அவளது வாசம் அவனை வேறொரு உலகத்திற்கு இட்டுச்சென்றது. அவள் கையின் மேல்பகுதியை இருக்க பிடித்து தன் பக்கமா இழுத்தான்.
அவள் எதிர்பார்க்காததால் தடுமாறி அவன் மேல் சய்ந்தாள் .
கட்டிலில் அவன் சாய்ந்திருக்க அவள் அவன்மேல் படுத்திருந்தாள்.
அவளுடைய கன்னத்தை மெதுவாக வருடி " அனிமா ". அவள் எதுவும் பதில் சொல்லாமல் அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள்.
மென்மையாக தன் உதடுகளை அவள் இதழ்களில் ஒற்றி எடுத்தான். எந்த எதிர்வினையும் அவளிடம் இல்லாமல் போகவும் இன்னும் கிறங்கி தன் கரங்களை அவள் இடையினிலிட்டு தன்னோடு இறுக்கிகொண்டவன் அவள் இதழ்களை மறுபடியுமாக முற்றுகையிட்டான். நான்கு வருட விரதத்தை இன்றோடு முடித்துவிட உத்தேசித்து தன் வலது கரத்தினால்
அவள் முடிகளுக்கிடையே தன் விரல்களை கொடுத்து இறுக்கிப்பிடித்துக்கொண்டான்.
அப்படியே அவளை கீழே தள்ளி மெதுவாக முன்னேறியவன் உணர்ந்தது இன்னும் அவளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாததை.
கண் திறந்து பார்த்து அவளிடம்
" என்னடா "அவள் தலையசைத்து ஒன்றுமில்லை எனவும். அர்ஷாத் நிதானித்தவன் அவளிடம்
" வேண்டாமா " எனக்கேட்கவும்.
அவளின் பதிலில் அவளை தள்ளிவிட்டு எழுந்து கதவைத்திறந்து வெளியே சென்றான்.
அனிஷா நான் என்னக்கேட்டேன் உண்மையதானக் கேட்டேன். அவளின் கேள்வி இதுதான் " வேறக்கல்யாணம் பண்ணிக்க சொன்ன அப்படி பண்ணியிருந்தா இப்படி இதே மாதிரி இழைஞ்சி குழைஞ்சி அவன்கூட குடும்பம் நடத்திருப்பேன் அப்போ நீ என்ன செய்திருப்ப "
அவன் சொன்னது குறையில்லையாம் .
நான் சொன்னதுக்கு வெளியே போயிட்டான்.
இப்படித்தான எனக்கும் வலிச்சிருக்கும் என திரும்பி படுத்துக்கொண்டாள்.
பாதிதூக்கத்தில் திரும்பி பார்த்தவள் அவன் இன்னும் உள்ள வராததை கண்டு வெளியே சென்றவள் அவன் பால்கனியின் சேரில் அமர்ந்து வானத்தை அளவிட்டுக் கொண்டிருந்தான்.
அனிஷா " உள்ள வா இங்க குளிர் அதிகமா இருக்கு "
அர்ஷாத் " பரவாயில்லை நா இங்கயே தூங்கிக்குறேன்."
அனிஷா " இங்க குளிர் ரெம்ப இன்னும் அதிகமாகும்..உள்ள வா. இல்லனா நான் இங்கயே இருக்கேன் "
அர்ஷாத் " பேசாம காலேஜ் டேய்ஸ்லயே குடிக்க பழகிருக்கனும் .சில விஷயங்களை அப்படியாவது மறக்க ட்ரை பண்ணிருக்கலாம் "எ ன சொல்லிக்கொண்டே உள்ளே சென்று படுத்தான்.
இருவருக்கும் தூக்கமில்லை. ஏன் எங்க வாழ்க்கை இப்படியானது என சிந்தனை தான். இருவருக்குமே பழைய நியபகங்கள்தான்
இருவருமே முந்தின சிலவருட வாழ்க்கையை அசைப்போட்டார்கள் தங்களுடைய மனதினில் ...
அத்தியாயம் - 10
இனிது இனிது
உன் பார்வை
அதிலும் இனிது நீ...
சாரதா- ஜெயராஜ் குடும்பம்
அனிஷா பிறக்குற வரைக்கும் ஒரளவுதான் வசதி.
ஆனால் அனுராதா -ஆனந்தராஜ் கொஞ்சம் வசதியாகத்தான் இருந்தாங்க.
சாரதாவுக்கு ஐந்து வருஷமா பிள்ளையில்லாம இருந்ததுனால ஜெபா எப்பவும் சாரதாகிட்டதான் இருப்பான்.
அனுராதா எப்பவும் பொருமையானவர் கொஞ்சம் அமைதியானருங்கூட.
அதனால் குடும்பத்தில் எந்தவித சச்சரவுகளுக்கும் இடங்கொடுக்கமாட்டார்..
அக்கா தங்கை எப்பவும் ஒற்றுமைதான் ஒருத்தொருத்தர் ரெம்ப பாசம் கூடபிறந்தது என அண்ணன் தம்பிங்க யாரும் கிடையாது.
ஆனந்தராஜ் மூத்த மருகன்றதுனால மகன்மாதிரி அதனால சாரதா கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்த்ததே அவர்தான். அதனால் அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவுவாரு.
அதுதான் அனிஷா பிறக்கும்போது ஜீவா ஜெபா இரண்டுபேருக்கும் அப்போதிருந்தே தங்கச்சி பாப்பானா அவ்வளவு இஷ்டம்.
அதுவும் ஜீவாவுக்கும் அனிஷாவுக்கும் 12 வயசுவித்தியாசம்.
பாப்பாவ முதல்ல அவன் கையில குடுக்கலன்னு அவங்க பாட்டிக்கிட்ட சண்டை போட்ட ஆளுதான் ஜீவா. கூடப்பிறந்தவளாகத்தான் அவளை நினைத்தனர். அப்படித்தான் சாரதாவும் ,அனுராதாவும் பிள்ளைகளை பழக்கியிருந்தனர். இரண்டு வீட்லயும் யார் என்ன வாங்கினாலும் நான்குபேருக்கும் சேர்த்துதான்.
இதுல அனிஷாவுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா அண்ணன்ங்க கிட்டயிருந்தும் கிடைக்கும். பொம்மை மாதிரி இருப்பா. குண்டும் இல்லாமா ஒல்லியாகவும் இல்லாம.
நாகர்கோவிலில் புகழ்பெற்ற பெண்கள் பள்ளியில் படித்தாள். கண்டிப்பிற்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்பெற்ற பள்ளி அதனால அம்மையாரு எப்பவும் அலர்ட் மோடுதான். வீட்லதான் தகிடுதத்தம் வேலையெல்லாம்.
ட்யூசன் போகுறதிற்கும் லஞ்சம் வேணும் (சாக்கலேட்ஸ் ஐஷ்கிரீம் இந்தளவுதான் இலஞ்சம்.சுவீட்ஸ் பைத்தியம்).
ஜெபா ட்யூசன் கூட்டிட்டுப்போனா ஒன்னும் கிடைக்காது. வேணும்னா கொஞ்சம் அட்வைஸ் இலவசமா வாங்கிக்கன்னு சொல்லுவான்.
அதனால ஆனந்தராஜ் இல்லனா ஜீவா இவங்கதான் அவளுக்கு கிடைச்ச பெஸ்ட் அடிமைங்க..
மற்ற பிள்ளைங்கள மாதிரி அங்க சுத்துறது இங்க சுத்தறதுலாம் கிடையாது. அவ சுத்துறதெல்லாம் அனுராதவ மட்டுந்தான்.
12ம் வகுப்பு முடித்தாயிற்று அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன படிக்கலாம் எங்க படிக்கலாம்னு பேச்சு நடந்தது.
எல்லாருக்கும் அவ மெடிக்கல் படிக்க ஆசை.
அனிஷா " நான் மெடிக்கல் போகல. இரத்தமும் சதையும் பார்க்கனும்.
எப்பவும் மெடிசின் வாடைதான்.வ்வே "
ஜீவா " பாப்பா அது என்னோட ப்ரஃபசன்"
அனிஷா "சாரிண்ணா நான் மெடிக்கல் படிக்கல"
எல்லோரும் ஆலோசித்தனர். சாரதா சொன்னார் ஹாஸ்ட்டல்ல இருந்து படிக்கறமாதிரினா வேண்டாம். இவா குணத்துக்கு சரிவராது. இங்கே எதாவது காலேஜ்ல சேர்த்துவிடுவோம்.
யாராவது அவளுக்கு எல்லாம் செய்ய பக்கத்துல இருக்கனும்.
ஜெபா சொன்னான் " நாகர்கோவில்லயிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இஞ்ஜினியரிங்க் காலேஜ் இருக்கு என்னோட பிரண்ட் அங்கதான் வேலை பாக்குறான்.அவனும் ஷேர்ஹோல்டர்தான் அந்த காலேஜ்ல சேர்ப்போமா "
கடைசியா ஒருமனதா எல்லாரும் சேர்ந்து அங்கயே சேர்க்கலாம் எனமுடிவு செய்து,சேர்த்தும் விட்டாச்சி.
காலேஜ்க்கு முதல் நாள் ஜெபாதான் கொண்டுவிட்டான்.
தங்கச்சிய தன்னோட நண்பனுக்கு அறிமுகப்படுத்திவிட்டு வெளியே நின்றான்.
அப்போது ஒருபையன் கொஞ்சம் அவசரமா வந்ததுல ஒரு பொண்ணு மேல மோதிட்டானா.
அந்தப்பொண்ணுவேற கீழவிழுந்திட்டு.
இதைப்பார்த்தவன் அந்த பையன் வேணும்னே செய்தமாதிரி ஃபீல் பண்ணிட்டான்( அந்த பீலிங்க்ஸ்தான் தப்பா போச்சுது).
அனிஷாவுக்கு இஞ்ஜீனியரிங்க்னு இல்ல எந்த காலேஜ்ல சேர்த்துவிட்டாலும் படிக்கனும் அப்படிங்கற எண்ணமே. அதனால படிப்புல எப்பவும் முதல்தான்.
சிட்டிலயிருந்து போறது இவா மட்டும்தான் மீதியெல்லாம் அவளோட கிளாஸ்ல அந்த பகுதிய சுற்றியிருக்குற பிள்ளைங்கதான்.
முதல் நாளே அனிஷா சென்டர் ஆஃப் அட்ராக்க்ஷன் தான். அனிஷா முதல் பெஞ்ச்ல இருந்தாள்.
உள்ள வர்றவங்களுக்கு அவள் இருப்பதுதான் முதலில் தெரியும்.
பசங்க உள்ள வரும்போதே ஒருத்தன் சொன்னான் " எல்லா குட்டியலும் அழகாதான் இருக்காவ. முதல்ல இருக்க அந்த குட்டி நல்லாருக்குலாடே "
அனிஷாஇதக்கேட்டு திரும்பி பார்த்தவள் முதல் பார்வையிலயே அவளுக்கு அவனபிடிக்காமல் போய்விட்டது.
முதல் நாள் வகுப்பு என்பதால் எல்லோரையும் அறிமுகப்படுத்தினாங்க.
அனிஷா தன்னை அறிமுகப்படுத்தி முடித்ததும். இவள் பெஞ்ச் முடிந்ததும் அடுத்தது ஆண்கள் பகுதியில இருந்த பையன் ஒருவன் எழுந்தான்
நல்ல கலரா நெத்தியில சின்னதா சந்தனம் தொட்டுருந்தான் எழும்பி நின்னான். பார்த்தாலே தெரியும் அக்மார்க் நல்லபையன். அனிஷா பார்த்தாள் யாருடா இந்த பழம்னு "
அவன் தன்னை அறிமுகப்படுத்தினான் என் பெயர் அர்ஷாத்....."
அவ்வளவுதான் அனிஷா அடுத்தடுத்து கவனிக்க ஆரம்பித்தாள். பெண்களை கேலிசெய்த அந்த பையன் பெயர் ரத்தீஷ். அப்போ பிடிக்காம போனது இன்று வரைக்கும் பிடிக்கல. அதுதான் அவள் பிரச்சனைக்கு ஆரம்பபுள்ளி.
அவளோட பக்கத்துல இருந்தது ரியாவும் பிருந்தாவும்.
பிருந்தா கொஞ்சம் அமைதியா இருந்ததுனால அனிஷாகிட்ட டக்குனு ஒட்டிக்கிட்டா பர்ஸ்டே காலேஜ் ராகிங்கலாம் இல்ல அதனால நம்ம அனிஷா நல்லபிள்ளையா திரும்பி வந்திட்டா.
அவளுக்கு அந்த காலேஜ் ரெம்ப பிடிச்சிது..எங்க பார்த்தாலும் மரங்கள்தான் கொன்றைமரங்களும் மாமரமும்தான்.
ஜெபா" காலேஜ் பிடிச்சிருக்கா உனக்கு இங்க ஓகேவா."
அனிஷா" ரெம்ப பிடிச்சிருக்கு ண்ணா"
ஜெபா" நெக்ஸ்ட் வீக்ல இருந்து காலேஜ் பஸ்ல போ சரியா அரைமணி நேரந்தான் "
அனிஷா " பஸ்லயா அதெப்படி முடியும் "
ஜெபா " ஏன் பஸ்ல போறவன்லான் மனுஷன் இல்லையா. உனக்கு பிள்ளைங்ககூட போயிட்டு வர்றது நல்லாயிருக்கும் பாப்பா "
அனிஷா " ம்ம் "
ஜெபா " காலையிலயே எழும்பனும்.பஸ்ஸ மிஸ் பண்ணிட்டா உன்ன யாரும் கூட்டிட்டு போகமாட்டோம் குறிப்பா ஜெய்ப்பாவும்,அப்பாவும்.
இங்க இருந்து தான் பஸ்ல போற அங்க சனி ஞாயிறு மட்டும் வர்ற "
அனிஷா" ம்ம் "
ஜெபா " நீ ரெம்ப புத்திசாலிடா. அதுமட்டுமே இனி உள்ள வாழ்க்கைக்கு உதவாது புரியுதா "
அனிஷா " ம்ம் "
ஜெபா " என்ன ம்ம்ம்"
அதுக்குள்ள வீடு வரவும் அனிஷா இறங்கி.
ஜெபாண்ணா எனக் கூப்பிடவும் எதோ சொல்லவரான்னு கிட்டவந்தான்
" நீங்க படிச்ச காலேஜ்ல போதி மரம் எதுவும் இருந்திச்சா .நாளைக்கு என்ன கூப்பிட வரும்போது பைக் வேண்டாம் கார் கொண்டுவாங்க..
நீங்க பேசும்போது பைக்ல தூங்கமுடில.கார்னா வசதிய தூங்கிருப்பேன் ". என சொல்லி அவ ரூமுகுள்ள ஓடி போயிட்டா.
இவன்தான் என்ன சொல்லனுத்தெரியாம. சாரதாகிட்ட பேசப்போனான்..
உள்ளபோயி மெதுவா சாரதா ஃபோன் எடுத்து கால் பண்ணா எடுத்தது ஜீவா ஜெபாவ பற்றிக் கம்ப்ளைண்ட்
" உன் சாமியார் தம்பி எனக்கு ஒரு சாக்லேட் கூட வாங்கித்தரல. என்ன பட்டினியா கூட்டிட்டு வந்திட்டான். அங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டான் "
ஜீவா " சாக்லேட்ஸ் நீ அவன்கிட்ட கேட்ருக்கமாட்ட பாப்பா. கேட்டா வாங்கித் தந்திருப்பாண்டா..இப்போம் என்ன நா வரும்போது வாங்கி ஜெய்ப்பாகிட்ட குடுத்துவிடுறேன் சரியா"
அனிஷா "சரி சரி பேஷண்ட்க்கு ஒழுங்கா ஊசியபோடு நான் வைக்கிறேன் "
அடுத்தபோன் அனுராதாவுக்கு " என்ன வீட்டுக்கு வரவேண்டாம்னு அண்ணே சொல்லிட்டான். ஒன்னுமே வாஙகிதரல " என ஜெபாகிட்ட படிச்ச அதே கம்ப்ளைண்ட்.
ஜெபா சாரதாக்கிட்ட பேசிட்டிருக்கும்போதே அவனுக்கு போன் வந்திச்சி அம்மா பேசுறாங்கன்னு உடனே
எடுத்தான். இந்த விஷயமா பேசவும். அவனுக்கு சிரிப்புத்தான் வந்திச்சி
" பாப்பா "
" என்னணா "
" சாரதம்மா ஃபோன் எங்க வச்ச "
அவா திரு திருன்னு முழிக்கவும் .கையபிடிச்சி பக்கத்துல இருக்க வச்சவன்.
பாக்கெட்ல இருந்த சாக்லேட்ஸ் எடுத்து அவ கையில குடுத்திட்டு. எங்க பாப்பா எதுக்கும் யாரையும் எதிர்பார்க்கம லைஃப்ல நல்லா இருக்கனும்னா. கொஞ்சமா குணத்தை மாத்திக்கனும் உங்களுக்கு எப்படி வசதி " எனக் கேட்டு நிறுத்தினான்.
அனிஷா " சரிண்ணா "( வீட்ல பெரியவங்க என்ன சொன்னாலும் கேட்டுப்பா)
அந்த வாரம் முழுவதும் அவளுடைய கல்லூரி வாழ்க்கை எந்தவித மாறுதலும் இல்லாமல் சென்றது.
கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா அடுத்தவாரத்தின் இறுதியில் இருந்தது.
இது எப்பவுமே வழக்கமான ஒன்றுதான் எல்லா கல்லூரியிலும் நடப்பதுதான்.
இதில் முதலாமாண்டு மாணவர்களின் சார்பாக பேசுவதற்கு அனிஷாவின் பெயர்தான் கொடுக்கப்பட்டது. ஜெபா பிரண்டின் உபயம் எல்லோருக்கும் அனிஷாவைத் தெரிந்திருந்தது.
அனிஷா எழுந்து செல்லும்போதே ரத்தீஷ் அவளைத்தான் வச்ச கண்ணு வாங்கம பார்த்திருந்தான்.
அவள் மேடையேறி பேசத்தொடங்கினாள்.
உண்மையில் யாருமே எதிர்பார்க்கல அவளோட பேச்சு ரெம்ப மெட்சூர்டா தெளிவான ஆங்கிலத்தில் இருந்தது. அவ்வளவு கைத்தட்டு அவளுக்குத்தான் கிடைத்தது.
வாலுத்தனம் எல்லாம் கொஞ்சம் குறைச்சிருந்தாள் அவ்வளவுதான் இல்லனு சொல்லமுடியாது.
காலேஜ் தொடங்கி ஒரு செமஸ்டர் , ஒரு வருடம் என முடிந்தது..அடுத்த வருடத்தொடக்கம் எல்லோருக்கும் வரும் பருவ வயதினருக்கான மாற்றம் இப்போது நன்றாக தெரிந்தது.
பசங்களின் பார்வை வித்தியாசம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
இரண்டாம் வருடம் என்பதால் ஒரு தைரியமும் வந்து ஒட்டிக்கொண்டது.
அனிஷாவுக்கு இப்போது ரியா பிருந்தா சந்தியா ,கீர்த்தனா என ஒரு பட்டாளமே சேர்த்து வைத்திருந்தாள்.
ரியா வாய் ஓயாமல் பேசுவா.
இரண்டாமாண்டு தொடக்கத்தில்
ரியா " யாருப்பா இன்னைக்கு பர்ஸ்ட் கிளாஸ்."
கீர்த்தனா "மறதி மன்னன் .ஐயோ சும்மாவே எனக்கு தூக்கம் வரும் .இதுல இவரு கிளஸ்ஸா பின்னாடி பெஞ்ச் போவமா "
ரியா" ரெடி ஜூட் "
அனிஷா " வா பின்னாடி இருந்து சாக்கலேட் சாப்பிடலாம் "
ரியா "சாக்லேட்ஸ் எப்படி கொண்டு வந்த.உங்கம்மா பார்க்கலையா"
அனிஷா " இது ஜீவாண்ணா பஸ் ஏறும்போது வந்துக்குடுத்தாங்க"
(அவளுக்கு சாக்லேட்ஸ் குடுக்கூடாதுன்னு சாரதா ஸ்ரிக்ட் ஆர்டர்.ஏற்கனவே கண்ணம் இரண்டும் பண்ணு மாதிரி இருக்கும்.
அதனால வெயிட் போட்ருவான்னு.ஆமா ஒரு சாக்லேட்னா பரவாயில்லை.அட் எ டைம் பத்து சாப்பிடுவோம்ல.ஆனாலும் டாக்டருகிட்ட அழுது வாங்கிடுவா )
பின்னாடி உட்கார்ந்து சாக்லேட்ஸ் சாப்பிடும்போதுதான்.
தேவா " ரியா லே அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் தாங்கடே"
மூன்று பேரும் அப்போதான் பார்த்தாங்க. கிளாஸ்ஸ விட்டுட்டு பசங்க இவங்களதான் பார்த்திட்டிருந்தாங்க.
இவங்க சத்தம் கேட்டு மோசஸ் சார்
" என்ன சத்தம் என கேட்டு , அனிஷாவ பார்த்து நீ படிக்கற பிள்ளை எப்படி பின்னாடி போன "
ரியா "சார் எச்.ஓ.டி. தான் இடம் மாத்தி வச்சாங்க. "
அனிஷா,கீர்த்தனா " ஏன்டி பொய்சொன்ன பிரச்சனை ஆகிடும் "
ரியா "இந்த மறதி மன்னன் வாசல் தாண்டுமபோதே மறந்திருவாரு நீ வேற" என சொல்லவும் இருவரும் சிரித்துவிட்டனர்.
தேவாவும் ரியாவும் ஒரே ஊரு. அதனால அவங்க இரண்டுபேரும் பேசிக்குவாங்க. தேவாவுக்கு சந்த்துரு அர்ஷாத் ரெம்ப நெருக்கம்.
பசங்க கிட்ட இரண்டு வருஷமா பேசினதே இல்ல. முதல் பென்ஞ்ச்லயிருந்த ஒரு பையன் அனிஷாவ ஏதோ அசிங்கமா கமேண்ட பண்ணிட்டான் .
என்னடா சொன்னனு அவன் சட்டையபிடிச்சி அறைஞ்சிட்டா( போலிஸ்காரன் தங்கச்சி எப்படி இருப்பா.ஜெபா அப்போதான் IPS பாஸாகி ட்ரையினிங்க் போயிருந்தான்).
அப்போதுதான் தேவா அவளுக்குத் தெரியாமலயே சொர்னாக்கா என பட்டப்பெயர் வைத்தான்
இரண்டாம் ஆண்டின் இறுதியில்தான்
வேலண்டைன்ஸ் டே அன்று கிளாஸ் தொடங்குவதற்கு முன்னாடி ரத்தீஷ் திடீர்னு ஒரு பெரிய சாக்கலேட் உடன் ஒரு சிகப்பு ரோஜா ஒன்றையும் வைத்து நேராக அனிஷாவின் முன் வந்து அவளிடம் நீட்டினான். எனக்கு உன்னை ரொம்பபிடிச்சிருக்கு உன்ன லவ் பண்றேன் " என சொல்லவும் செய்தான்
அனிஷா இத எதிர்பார்க்கல அந்தளவு அவள் யோசிக்கவுமில்லை. ஐம்பது பிள்ளைங்களும் பார்த்திட்டு இருந்ததும் அவமானமா போயிட்டு .
எச்.ஓ.டி வரவும் அவன் அதை அவள் பெஞ்ச்ல வச்சிட்டுப்போயிட்டான்.
சரியாக அந்தநேரம் எச்.ஓ.டி.ராமகிருஷ்ணன் உள்ளே வந்தவர் இவள் பெஞ்ச் முன்னாடி இருந்ததைப் பார்த்திட்டார்.
கிளாஸ் முடிஞ்சதும் எச்.ஓ.டி போயிட்டார். அவ்வளவுதான் கோவத்துல தூக்கி எறிந்துவிட்டாள் அவன் முன்பாக. அதற்குள்ளாகவே எச்.ஓ.டி அனிஷாவ கூப்பிடுவதாக அட்டண்டர் மணி வந்து சொன்னார்.
அவளுக்கு பயம் அவங்க அண்ணனை நினைத்துதான். எவ்வளவு சேட்டை பண்ணாலும் படிப்புலயும்,இந்த விசயத்திலும் கெட்டபெயர் வந்ததில்லை.
எச்.ஓ.டி. முன்பாக நின்றிருந்தவள் எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டாள். ஜெபா பிரண்ட்டும் வந்துவிட்டார். அவர்தான் போன் செய்து அழைத்திருந்தார் .அவர் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்.
இவள் ஈ.சி.ஈ டிபார்ட்மெண்ட்.
அனிஷாவ போகச்சொன்னார். கொஞ்சநேரத்தில் ரத்தீஷை மணி அழைத்து சென்றார். அவ்வளவுதான் தெரியும் .
ரியா " அனி என்ன ஒருமாதிரி இருக்க.
பயமா.உனக்கு அவன பிடிக்குமா "
அனிஷா " லூசா நீ இந்த விசயம் இதுக்குள்ள ஜெபாண்ணாவுக்கு போவும் .நல்லவேலை அவங்க இங்க இல்ல. அவன் கைய உடைச்சிருவாங்க
சாரதம்மா,அனும்மாவும் பயப்படுவாங்க "
வீட்டிற்கு போனவள் மனசுக்கு ஒருமாதிரி இருக்கவும்.
அனிஷா " ம்மா நான் அனுமாகிட்ட போகட்டா இன்னைக்கு, அங்கயிருந்தே காலேஜ்க்கு போறேன் " எனக்கேட்கவும் சரி எனச்சொன்னவர். ஆனந்தராஜ்க்கு போன் செய்து அவர் வந்து கூட்டிச்சென்றார்.
அனும்மா மடியில படுத்தவள். காலேஜ் போகும்போதெல்லாம் அவன் டார்ச்சர் பண்ணா என்ன செய்வது என யோசனை செய்தாள்.
அடுத்த நாள் காலேஜ் போக கிளம்பியவள் கூடவே ஜெயராஜ் ஜீவாவும் " பாப்பா இன்னைக்கு கார்ல போகலாம்டா,நானும் அண்ணனும் வர்றோம் என சொல்ல அவளுக்கு மனசுலாயிட்டு. பிரச்சனை ஐ.பி.எஸ் கிட்டபோயாச்சி என அமைதியாகவே வந்தாள்.
அனிஷாவ கிளாஸ்க்கு போக சொல்லிட்டு.இவங்க இரண்டுபேரும் எச்.ஓ.டி யை பார்க்க போனார்கள்
இவள் கிளாஸ்க்கு போகும்போதே வரண்டாவில நின்றிருந்த ரத்தீஷை பார்த்தாள் அவன் அப்பா கூட நின்றிருந்தார். அவனை அடிச்சிருப்பாங்கபோல.
அனிஷா நினைத்தாள் இந்ந சின்ன விசயத்தை இவ்வளவு பெருசாக்கனுமா என.
அனிஷா அமைதியாகவே இருந்தாள் அவங்க கேங்க் எல்லோரும் கொஞ்சம் சோகமாகவே இருந்தாங்க.
ரத்தீஷை ஒருவாரம் சஸ்பெண்ட செய்திருந்தார்கள். பேரெண்ட்ஸ்கிட்ட எழுதி வாங்கியிருந்தனர் இனி எந்த தொந்தரவும் தரமாட்டான் என.
அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. பருவங்கள் வரும்போது ஆணும் பெண்ணிற்குமான ஈர்ப்பு இயற்கையானது. அதை சொல்லிப்புரிய வச்சிருக்கலாம். இப்படி செய்யவும் ரத்தீஷின் மனதில் பழிவெறிதான் உண்டாகியது. என்ன செய்திட்டேன் எனக்கு பிடிச்சருந்தது எக்ஸ்பிரஸ் பண்ணேன். பிடிக்கலைனா சொல்லிருக்கலாமே என கோவப்பட்டான்.எல்லோர் முன்னாடியும் கேவலப்படுத்திட்டாங்க என எண்ணினான்.
இரண்டு மாதம் முழுதாக முடிந்த பின்பு ஒருநாள். காலையில் கிளாஸ்க்கு சென்றவள் பார்த்தது எல்லோரும் போர்டு பார்த்து நிற்கவும் அதில் எழுதியிருந்ததை பார்த்து அவ்வளவு கோவம்
ஹார்ட்டின் வரைந்து அதுக்குள்ளாக
அனிஷா-அர்ஷாத் என எழுதியிருந்தது.
அவ்வளவு கோவம் வந்துச்சி .
நம்மள இந்த கிளாஸ்ல காட்சிப்பொருளாக மாத்தப்பாக்குறாங்க யாரோ என குமைந்தாள்.