பகலவன் 6

Pani4

பகலவன் 6

6 பகலவனின் பனிமலர் அவளோ!!

"ம்மா தடியன் வந்துட்டான் ...

"இந்தா ஆர்த்தி தட்டை எடுத்து போ, குலசாமி கண்ணை திறந்துட்டார் சுவாதி வந்துதான் இவன் திருந்தணும்னு இருக்கு.. "தாயும் மகளும் வரும் மகனை ஆவலாக எட்டி பார்த்தனர்.

ஆமா இத்தனை வருஷம் நீ சொல்லி திருந்தாதவன்தான் அண்ணி சொல்லி திருந்த போறானா, போம்மா ஆடி போய் கோடிவந்தாலும் உன் மகன் திருந்த மாட்டான் ..

"உனக்கும், உன் அப்பனுக்கும் என் மகனை கரிச்சி கொட்டிகிட்டே இருக்கணும் போய் ஆர்த்தி சுத்துடி.. "

"சுத்து சுத்துங்கிற யாருக்கு சுத்த, அவன் மட்டும் தான் வர்றான்

"ஏதே" என்று சிவகாமி ஓடி வந்து பார்க்க.. ஸ்ரீ தம்மில் கடைசி வரியை இழுத்து முடித்து, துர போட்டுவிட்டு உள்ளே வர .. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை சுவாதியை காணல...

வழியில் தட்டோடு நின்ற தங்கையை லூசா என்பது போல் பார்த்த ஸ்ரீ..

"வீட்டுல பிச்சை எடுத்தா, பத்து பைசா கூட மில்ட்ரி போட மாட்டான் .. போய் தெரு முக்குல உட்கார் ... வீட்டுல மட்டன் போல, நான் இல்லைன்னா மட்டும் குடும்பமா ஆக்கி திங்க வேண்டியது , இருக்கா சட்டியை வழிச்சாச்சா.."என ஸ்ரீ உள்ளே வர மகேந்திரன் நீயே உன் மகனை மேய் எனும் விதமாக கையை கட்டி நின்று பார்க்க 

"ஸ்ரீ மருமகள எங்கடா? 

"எந்த மருமக ?

"ப்ச் சுவாதி எங்கடா ?

"ஓஓஓ ஸ்வீட்டியா அவ வீட்டுல இருப்பா" 

"என்னடா இப்படி சொல்ற , உனக்கும் சுவாதிக்கும் கல்யாணம் முடிச்சிடுச்சின்னு தகவல் வந்தது 

"தகவல் கொடுத்தவன்கிட்ட போய் ஸ்வீட்டி எங்கேன்னு கேளு, எங்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் .. ஏய் குள்ளச்சி ரிமோட்டை எங்க , எடுத்து கொடு" என்று டீப்பாய் மீது அமர்ந்தான் 

"விளையாடாத ஸ்ரீ உனக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சுன்னு நாளைக்கு வீட்டுல நாம சொந்தகாரவுங்களுக்கு சின்னதா விருந்து வச்சிடலாம்னு போட்ட சீட்டை முறிச்சி வாங்கி வச்சிருக்கேன்.. நீ காமெடி பண்ணிட்டு இருக்க ஒருவேளை சுவாதி ஸ்டீபன் அண்ணன் கூட கார்ல வர்றாளா,"

"எந்த மோர்லையும் வரல ..

" கல்யாணம் முடிஞ்சா நீங்க இரண்டு பேரும் சேர்ந்துதான்டா இருக்கணும் ..

"அப்படி சட்டம் போட்டது யாரு ? பிடிக்காதவளை பிடிச்சி வச்சி தாலிதான் கட்ட முடியும், வாழ எல்லாம் முடியாது உனக்கு தேவன்னா போய் அவகூட இரு..."

"என்னடா உன் ஆட்டம் அளவுக்கு மீறி போகுது ,உன்ன கேட்க ஆளில்லைங்கிற திமிரா" என்று இவ்வளவு நேரம் பொறுத்து பார்த்தவர், பொங்கி எழு மனோகரா!! என பொங்கிவிட , சோபா அடியில் இருந்து பஞ்சை எடுத்து வழககம் போல காதில் சொருகி கொண்டு ,கேப்டன் அடித்த சிக்சருக்கு விசில் அடிக்க ... டிவி சில்லு சில்லாக உடைந்து போனது மகேந்திரன் பட்ட கோபத்தில் ..ஸ்ரீ தோளை உலுக்கி கொண்டு எழும்பியவன், ரிமோட்டை தூக்கி அவரிடம் கொடுத்து விட்டு ..

"அதையும் உடைச்சிருங்க என்று வெளியே போக போனவனை ..அவர் வார்த்தை தடுத்தது 

"அந்த பொண்ணு உள்ள வராம ,நீ உள்ள வர கூடாது .அப்படி நீ வந்த உன் அம்மா நெத்தியில பொட்டு இருக்காது என்று கூற பல்லை கடித்து திரும்பியவன் ..

"லூசாய்யா நீ என்ன வார்த்தை பேசுற ..

"குத்துதா,வலிக்குதா, உன் அம்மா வாழாம நின்னா வலிக்குதா அந்த பிள்ளையையும் நீ அப்படிதான்டா ஆக்கி வச்சிருக்க .. எங்கேயோ நிம்மதியா இருந்திருக்கும்.. உன் கண்ணுல சிக்கி ,இப்படி நீ கட்டின தாலியோட சீரழியுது நீ தருதலையா இரு ,குடி, நாசமா போ ,ஆனா கட்டின பொண்டாட்டியை தனியா விடாத.. ஒரு அப்பனா உனக்கு நல்லது கெட்டது சொல்லி சொல்லி சலிச்சி போச்சி.. பொண்ணு சாபத்தை வாங்கிட்டு நிற்காத ,உன் வீடடுலையும் பொண்ணு இருக்கு, அவளுக்கும் கல்யாணம் ஆகணும்.. அதை மனசுல வச்சி பண்ணு இதுக்கு மேல உன் இஷ்டம் .. சிவா பிரசர் டேப்லெட் எடு , இவனால ஒரு நாள் ஹாட் அட்டாக் வந்து சாவதான் போறேன், அப்ப தெரியும் இந்த அப்பா அருமை .குடும்பத்தை சுமக்கிற வலி" என்று ஓய்ந்து போய் அமர. ஸ்ரீ கதவில் ஓங்கி அடித்தான்.. தந்தை பேச்சு எரிச்சல்தான் கொடுத்தது, அதற்குள் இருக்கும் சாராம்சம் புரிய அவனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை போலும்.. 

"என்ன பிடிக்கலைன்னு சொன்னவள, போய் கூட்டிட்டு வந்து வாழ்வேன்னு மட்டும் நினைக்காதீங்க "என்று கதவை ஓங்கி மிதித்த ஸ்ரீ ,கொடியில் தொங்கிய தன் துணியை எடுத்து ஒரு பையில் திணித்து கொண்டு பைக்கில் பறந்து விட்டான்..

சரி திருந்தி அவளை கூட்டுட்டு வருவான்னு எதிர்பார்க்க.. அவன் கூட்டை விட்டே பறந்து போயிட்டான்.. ஸ்ரீ அந்த தெருவை தாண்டி வெளியே போக , அந்த வீட்டு மகாலட்சுமி வந்து காரில் இறங்கினாள் ...

ஆம் !!சுவாதிதான் தன் புகுந்த வீட்டில் வந்து நின்றாள்.. 

திருமண மண்டபத்தில் தனியாக நின்ற சுவாதியை பார்க்க ஸ்டிபனுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை ,, அவளின் கடந்த காலம் அனைத்தும் தெரிந்தவர் வேதனையில் வாடிப்போய் அமர்ந்திருந்த ஸ்வாதியை பார்த்து மனம் கலங்கித்தான் போனார்.. அப்படி அவள் என்ன எதிர்பார்த்தாள்.. அன்பு கொடுக்க யாரவாது ஒருவர்.. அதற்கு கூடவா இந்த சிறுபெண் தகுதியற்று போனாள்.. ஏன் இந்த பெண்ணிற்கு மட்டும் இத்தனை அடுக்கடுக்கான சோதனை.. அமைதியாக அமர்ந்திருந்த ஸ்வாதி தோளை ஸ்டீபன் தொட 

ஆங்கிள் எனக்கு ஒரு உதவி மட்டும் செய்றீங்களா."

"என்னம்மா, நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உறுதுணையா இருப்பேன்.. பிடிக்காத தாலியை கட்டிக்கிட்டு கஷ்டப்படணும்னு அவசியம் இல்ல.. நீ வேணும்னா சொல்லு, இத லீகல்படி நான் பார்த்துக்கிறேன் ..

"வேண்டாம் ஆங்கிள், நான் எதிர்பார்த்தது எதுவும் எனக்கு எப்பவும் நடந்தது இல்லை .. இது வேண்டாம்னு விலகி போகப் போக மறுபடியும் என்னோட வாழ்க்கைக்குள்ள வம்படியா வருதுன்னா , கடவுளோட சித்தம் இதுவாதான் இருக்குமோ என்னமோ தெரியல, என்ன கொண்டு போய் மகி ஆங்கிள் வீட்டில் விட்டுருங்க ,நான் சமாளிச்சிக்கிறேன் எனக்கு இவ்வளவு தூரம் உதவினதுக்கு நன்றி ஆங்கிள்.. 

"ம்ம் அவசரப்பட்டு முடிவு எடுக்காதம்மா.."

"நான் இனி முடிவே எடுக்கல ஆங்கிள், நாம எடுத்தா அது வேற விதமா போகுது ,கடவுள் எங்க நடத்திட்டு ம்ஹூம் இழுத்துட்டு போய் போடுறாரோ எல்லாத்தையும் தாங்கிக்கிறேன் போவோமா ஆங்கிள் ..

"சரிம்மா என்று பெருமூச்சு விட்டார் .. இத்தனை கோர புயலில் நடுவிலும் மூங்கில் போல நின்ற பெண்ணை அதிசயிக்க பார்த்தார் .. 

வாசலில் நின்ற சுவாதியை மூவரும் கண்கள் விரித்து பார்க்க.. அவள் என்ன பேச என்று தெரியாது சூட்கேஸ் விளிம்பை இறுக்கி பிடித்தாள் 

"ஏய் ராதிகா, அண்ணி வந்திருக்கா பாரு , ஓடி போய் அந்த ஆர்த்தி தட்டை எடுத்துட்டு ஓடிவா .. அம்மாடி சுவாதி கிழக்க பார்க்க நில்லுடா" ... என்று சிவகாமி மருமகளை நெட்டி முறித்து .. 

"நான் சொன்னேன்ல எங்க ஸ்ரீ பொண்டாட்டி இதுதான் "என்று அவர்கள் தெருவில் போகிறவர் வருகிறவர்கள் அனைவரிடமும் கூறி சிலிர்த்து போனவர் ராதிகா ஆர்த்தி சுற்றி.. உள்ளே அழைத்து வரவும் .சுவாதி ஓரத்தில் தயங்கி நின்று கொள்ள ஸ்டீபன் மகேந்தரிடம் அமர்ந்து பேச தொடங்கினார்..

"பாரு மகி , அவளும் என் பொண்ணு போலதான்.. ஸ்ரீ மேல நம்பிக்கை இல்ல .. ஆனா என் நண்பன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீ அவளுக்கு பாதுகாப்பா, துணையா இருப்பன்னு நம்பிக்கையிலதான் அவள கூட்டிட்டு வந்து விடுறேன் பார்த்துக்க

"சாரி ஸ்டீபன் அந்த நாய் இப்படி எல்லாம் பண்ணுவான்னு தெரியாது, சுவாதிக்கு நான் பொறுப்பு '

"அவன் இருந்தாதான தொல்லை , தடியன் அப்பவே வீட்டைவிட்டு கோவிச்சிட்டு போயிட்டான் அண்ணி, நீங்க பயப்படாதீங்க ஓவரா ரோதனை பண்ணினான் , சோத்துல விஷத்தை வச்சிடுவோம் என்று ராதிகா கூற சிவகாமி மகளை முறைத்தார்.. 

"ஸ்ரீதான் மோசம் போல மத்தவங்க ஓகேதான், அவனும் இல்ல அப்ப தொல்லைசாமி பிரச்சனை இல்ல.. நீ வீட்டு பக்கமே வராத ராசா என்று நினைத்து கொண்டவள் , புதிதாக ஒரு குடும்பம் உறவுக்குள் போக தெரியாது தடுமாறி நிற்க..

"ம்மா ராதிகா அண்ணியை கூட்டிட்டு போய் ஸ்ரீ ரூமை காட்டு போம்மா என மகேந்திரன் கூறவும் பெட்டியை எடுத்து கொண்டு ..

ஸ்ரீராம் சரிபாதியாக முதலில் அவன் அறையை பங்கு போட்டாள்..  

"மச்சான் விஷயம் கேள்விப்பட்டியா ? "முகத்தை லுங்கியை வைத்து மூடி தூங்கி கொண்டிருந்த ஸ்ரீ அருகே காப்பியை வைத்து கொண்டு வினய் நின்றான் .. ஸ்ரீயை வீட்டை விட்டு அனுப்பியது எப்படி வினய் தந்தைக்கு தெரிந்தததோ, சோத்துக்கு வீட்டுக்கு போகும்போது பெட்டி வந்து காலடியில் விழ.. எடுத்துட்டு இதுக இரண்டும் தனிக்குடித்தனம் வந்தாச்சி .. இவன் காப்பியோடு நிற்க ,அவன் படுக்கையில் கிடக்க, புருஷன் பொண்டாட்டி போலவே இருந்தது ..

"டேய் ஸ்ரீ ..

"சொல்லு கேட்டுட்டுதான் இருக்கேன்.. 

"காப்பியை குடிச்சிட்டு கேளு..

"ம்ம் கையை துலாவி காப்பியை வாங்கி படுத்த மேனிக்கு வாயில் ஊற்றினான்..  

"மாப்பிள்ளை இல்லாம வரவேற்பு எந்த ஜில்லாவுலயாவது நடக்க பார்த்திருக்கியா.. ஸ்ரீ லுங்கியை எடுத்து விட்டு வினய்யை பார்க்க ..

"உன் வீட்டுல நடக்குது, சுவாதி உன் வீட்டுல தான் இருக்கா .. இன்னைக்கு வரவேற்பு போல ,ஊர் முழுக்க அழைப்பு போயிருக்கு ,உன்னையும் என்னையும் தவிர, ரொம்ப இன்சல்ட் பண்றான்டா மிலிட்டரி 

"பாரேன் இதுகளுக்கு திமிர.. இப்பவே போய் வீடு கட்டினாதான் சரியா வரும், யாரை கேட்டுட்டு என் வீட்டுக்குள்ள போய் உட்கார்ந்து இருக்கா" ... என்று ஸ்ரீ கோவமாக எழும்ப அவனை பிடித்து அமுக்கிய வினய் .

"ஸ்ரீ இந்த கல்யாண விஷயத்தில நம்ம பக்கம்தான் தப்பு .. நான் என்ன சொல்றேன்னா?

"உன் ஊத்த வாய மூடு, காலையில என்ன சாப்பாடு .

"நான் என்ன உன் பொண்டாட்டியாடா , வாய்க்கு வக்கனையா சமைச்சு போட , நானே இருந்த ஐந்நூறு ரூபாய் வச்சி பால் பாக்கெட் வாங்கி சமாளிச்சிட்டு இருக்கேன்.. குடும்ப தலைவி போலவே புலம்பித் தள்ள ..

"ச்சே காலையிலேயே எரிச்சல் பண்ணாத மச்சான், அங்க அதுக தொல்லை தாங்கலைன்னு இங்க வந்தா ,இங்க உன் தொல்லை தாங்கல ஆமா இது யார் வீடு.."

"திறந்து கிடந்தது வந்தாச்சு , வீட்டை இப்படி திறந்து போட்டுட்டு போகலாமா ?

"அதான .. வா தம் போட நாயர் கடை பக்கம் போவோம், இருவரும் வழக்கம் போல போய் தம்மை இழுத்து கொண்டு நிற்க 

"அண்ணா அந்த பஸ்ஸை நிறுத்துங்க "என்ற கீச் குரல் கேட்டு ஸ்ரீ பின்னாடி திரும்ப ... 

அவன் மனைவி வியர்க்க வியர்க்க ஓடி வந்தாள்... சிவப்பு நிற பட்டுச்சேலை , புதுக்கல்யாணம் முடிஞ்ச களையில் வகுட்டுகுங்குமம், நெஞ்சில் துள்ளிய தாலி, தலைநிறைய மல்லிகை பூ என இதுவரை அவளே தன்னை பார்க்காத ஒரு தேவதை கோலத்தில், முழுமதி நிறைவில் அவனை தாண்டி ஓட... வினய் விசிலடித்து பஸ்ஸை நிறுத்திட ..

"நன்றி!! என வினய்க்கு ஒரு நன்றியை பார்சல் போற போக்கில் கூரியர் பண்ணிவிட்டு , படிக்கட்டில் ஏறி உள்ளே நுழைய.. ஸ்ரீ தம்மை இழுத்து கொண்டே பஸ்ஸின் உள்ளே சற்று குனிந்து பார்க்க , அவளும் பின் கண்ணாடி வழியே குனிந்து ஸ்ரீயைதான் பார்த்தாள்.. ஸ்ரீ புருவத்தை ஏற்றி இறக்கி என்ன என்று கேட்க, அவள் இல்லை என்று தலையாட்டி திருப்பி கொண்டாள்.. 

என்ன ஆனாலும் என் துணை இவள், இவன் என தெளிவு மட்டும் இரண்டுக்கும் இருந்தது.. 

இந்த தெளிவு இரண்டையும் எங்கேயோ கொண்டு போயிடும்..