பகலவன் 9

Pani9

பகலவன் 9

9 பகலவனின் பனிமலர் அவளோ!!

"மச்சான் தயவு செஞ்சி தூங்க விடுடா , நாளைக்கு வேலைக்கு போகணும்" வினய் எந்த பிறவியில் என்ன தப்பு செஞ்சானோ ஸ்ரீக்கு நண்பனாகி அல்லும்பகலும் பாடுபட்டான்

ஹார்பரில் ஏதோ வேலையில் இரண்டும் சேர்ந்தாச்சி.. அங்க போயிட்டு வந்து சுவாதியை அழைக்க போகதான் லேட் .. இது எல்லாம் வாயை திறந்து சொன்னா அவர் கெப்பகுட்டி என்ன ஆகுறது அதனால சொல்லமாட்டான் ..

"மச்சான் கேளுடா..

"விடிய விடிய கேட்டுட்டுதான்டா இருக்கேன் போர்வைக்குள் வினய் முகத்தை மூட ,ஸ்ரீ அதை திறந்து விட..

"என்னடா வேணும்?" ..

"எழும்பி உட்கார் கதை பேசுவோம்.. உதடு குறுகுறுவென வந்தது... மனைவி சுவை இன்னும் உதட்டில் இருந்தது .. எங்கடா போயிட்டு வந்த என்று கேட்ட நண்பனுக்கு.. சுடுகாட்டுல பிணம் சரியா எரியுதுன்னா பார்த்துட்டு வந்தேன் என பதில் கூற அதுக்கு மேலும் கேட்பானா ..தூங்க போனவனை எழுப்பி வச்சி பல மணிநேரமா உயிரை வாங்குகிறான், ஒன்னும் உருப்படியா பேசியது போலவும் இல்லை .. 

"மச்சான் .. "

"ப்ச் எப்பா டேய் , உன் பொண்டாட்டியை தொல்லை பண்ண வேண்டியவன் என்ன போட்டு பாடா படுத்துறீயே.."

"அவதான் அங்க இருக்காளேடா..

"ப்ச் போனை போட்டு தொல்லை பண்ணுடா, என்ன தூங்க விடு..."

"ஓஓஓஓ ஆமால்ல இதுக்குதான் மச்சான்னு வேணும்னு சொல்றது ..."

"இதுக்கு பேர் மாமா வேலை நாய..

"எனக்கு மாமா வேலை பார்த்தா புண்ணியம்டா" வினய் தலையை தூக்கி முறைக்க .. 

"சரிசரி தூங்கு நான் ஸீவிட்டியை தொல்லை பண்றேன் "

"உனக்கு யாரையாவது தொல்லை பண்ணிட்டே இருக்கணும் அதுதானடா.."

"ஆமா அதேதான் "வினய் போர்வைக்குள் போய்விட ஸ்ரீ போனை எடுத்து மனைவிக்கு தட்டியாச்சி இப்ப மணி இரண்டு ... 

நடு இரவில் போன் அலற, அப்போதுதான் கண்ணை மூடிய சுவாதி அலறியடித்து எழும்பி போனை பார்க்க .. புருஷன் !! என மினுங்கயது போனை இவனுக்கு பயந்து மாத்தியாச்சு, எப்போ இந்த போன்ல பேர் எல்லாம் மாத்தினான்.. அந்த அளவா நான் கோமாவுல இருக்கேன் யோசனையில் போனை எடுக்க.. 

"என்னடி பண்ற??"..

"இந்த நேரத்தில என்னடா பண்ணுவாங்க, உன்ன மாதிரி எல்லாரும் பேய் ஜாகிங் போற நேரத்தில கடலை போடுவாங்களா??" வினய் போர்வையை எடுத்து விட்டு கூற... 

"மேனஸ் இல்ல, புருஷன் பொண்டாட்டி பேசும் போது ஒட்டு கேட்கிற.."இவர் கூடை நிறைய மேனஸ் வச்சிட்டு சுத்துற மாதிரிதான் பேச்சு எல்லாம் இருந்தது .. 

"மச்சான் இது உனக்கே அடுக்கல, நீ பேசினது ஊருக்கே கேட்கும்டா வாய்ஸ கம்மி பண்ணுடா..

"ஓஓஓ காதலுக்கு தத்து பிள்ளை, தவழும் பிள்ளை சீனியர் சொன்னது பிடிச்சிகிட்டு..

"ஸ்வீட்டி "குனுங் என்று பேச.. 

"ம்ம் இந்த தொல்லைசாமி தொல்லை எப்போ ஓயும்" அது அலைகள் ஓய்வதில்லை போல ஓயவே ஓயாது என உரக்க சொல்லுங்கள்.. 

"தூங்கிட்டியா ?"

"இனி எங்க தூங்க ?" மறுபடியும் வினய்தான்.. சுவாதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.. அவள் எதிரே கிடந்த ஸ்ரீ போட்டோவில் தன் முகம் தெரிய ..அது இதுவரை காணா அழகை கொடுத்தது ... 

"சனியனே!! அமைதியா பேசினாலும் உனக்கு ஏன்டா எடுக்குது.. மூடிட்டு படுறா..."

"கிரகம் பிடிச்சவனே குனுங்னு பேசினா வயசு பையன் மனசு அலைபாயாது, சத்தம் இல்லாம பேசி தொலை ... "

"அப்படி எல்லாம் பேச முடியாது .நீ பஞ்ச வச்சு மூடு .. என்று அங்கே குட்டி சண்டை நடக்க , சுவாதி சிரிப்பு விரிந்தது.. 

"மூடியாச்சு மூடியாச்சு பேசு.. கன்னிபய சாபம் உங்க இரண்டு பேரையும் சும்மா விடாது பார்த்துக்க, ஒன்னு சொல்றேன் மச்சான் .. உன் காதலுக்கு எதிரி வேற எந்த நாயும் இல்லை நீயேதான் "

"ஆஆஆஆஆ ஏன்டா தள்ளி விட்ட, வினய் பின்மேனி தடவி கொண்டே எழும்பி நிற்க..

"வெளியே போ .. 

"மச்சான் என்ன பார்த்தா வெளியே போக சொல்ற ..

"வெளிய போடா நாயே , போகும் போது கதவை பூட்டிட்டு போ.. வினய் புளுபுளுத்து கொண்டே போய் கொசுகடியில் திண்ணையில் அமர்ந்தான்.. 

"எலி காயுது எலி புழுக்கையை ஏன்டா காய விடுறீங்க .. ஒரு காதல் கூட அடுத்தவனுக்கு தொல்லை இல்லாம பண்ண மாட்டைக்கிறானே.. அந்த பொண்ண நினைச்சா பாவமாதான் இருக்கு ஆழ்ந்த இரங்கல் தவிர ஒன்னும் பண்ண முடியாது, இவன் கையில மாட்டுறதும் லாரிக்கு அடியில எலுமிச்சை பழமா நசுங்கிறதும் ஒன்னுதான்" என்று பரிதாபப்பட்டு கொண்டு படுத்து கொண்டான்...

"ஸ்வீட்டி "

ம்ம் இன்னைக்கு தூங்க விட போறது இல்லை என அறிந்து பெருமூச்சு விட்டு ,ஹெட் போனை காதில் போட்டு விட்டு சாய்ந்து அமர , தூக்கம் கண்ணை சொக்கியது... 

"என்ன ம்ம் ஆங்கிற பேசு.."

என்ன பேச?"

"ஏதாவது பேசு ஆனா காலையில வர பேசுற ..

"இது என்ன வன்கொடுமையா இருக்கு , இவன் ஏன் வித்யாச வித்யாசமா பண்றான் .. அடிக்கிற மாதிரி வர்றான் முத்தமும் கொடுக்கிறான்.. தாலி கட்டினான், ஆனா வீட்டுக்குள்ள வராம இருக்கான் என்ன நினைப்புல இப்படி பண்றான்... "தலையை சொரிய வைத்தான் ... 

"இல்ல காலையில காலேஜ் போகணும், கொஞ்சம் தூங்கினாதான் அங்க போய் வேலை பார்க்க முடியும் "அவள் பாடு அவளுக்கு..

"ஏன் இவ்வளவு நேரம் வீட்டை சுத்தி இருந்த புல்லை புடுங்கிட்டு இருந்தியோ, தூங்கிட்டுதான இருந்திருப்ப, என்கிட்ட பேசும் போது மட்டும் தூக்கம் வருதோ.". அமாவாசையில நாய் கடித்தவனுக்கு வெறி ஏறுவது போல லைட்டா ஏற ஆரம்பிக்க .. 

"பேசுங்க நான் எதுவும் சொல்லல .. 

"ஏன் நீ பேச மாட்டியா, நான்தான் பேசணுமா நானேதான் உன் பின்னாடி அலையணுமோ, நீ அலைஞ்சா ஆவாதா.. "ஜன்னல் வழியே இவன் காதல் பேச்சு வினய்க்கு கேட்டு 

"ஏன் சாமி இதுதான் உன்ற காதல் பேச்சா தூஊஊஊஊ .. உனக்கு அந்த கருமம்தான் வரலைல்ல, பிறகு எதுக்குடா காதலிச்சே தீருவேன்னு தொங்குற. கடுப்பேத்தாம போனை வச்சிட்டு தூங்கு.."

"__________________________ பொத்திட்டு போயிடு "... அவனுக்கு போட்ட அழகிய தமிழ் வார்த்தைகள் சுவாதியை முகத்தை சுழிக்க வைத்தது ...

"இவன யாருக்குதான் பிடிக்கும், ப்பா வாயா கூவமா ச்சை நல்லா வசமா வந்து மாட்டிகிட்டேன் போல" ... 

"எதுல விட்டேன் ஸ்வீட்டி" 

"எப்போடா விடுவ?" கதற கதற கற்பழிப்பு கேள்வி பட்டிருப்பாள், கதற கதற காதலிப்பு இப்பதான் கேள்வி படுகிறாள்.. இதுவரை ஏதேதோ மனதை போட்டு ஆக்கிரமிக்கும் ... இவன் என்று வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தானோ, இந்த காட்டெருமையை வைத்து காலம் தள்ளுவது மட்டுமே அவள் மிகப்பெரிய சவாலில் ஒன்றாகி போக எதையும் நினைக்க யோசிக்க நேரமே இல்லை ...  

"வரவேற்ப்பு நல்லா நடந்ததா ஸ்வீட்டி?" வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினான்.. அவனுக்கு காதல் பேச்சு எப்படி தொடங்க தெரியல, ஏதையாவது பேசுவோம்னு ஆரம்பிக்க ,அவளுக்கு உதடு துடித்தது ..

"அத்தை முகமே சரியில்லே .. 

"நீ ஏன் முகத்தை பார்த்த, அது கொஞ்சம் சுமாராதான் இருக்கும், மில்ட்ரி ரியாக்ஷன் என்ன ?"

"ப்ச் பாவம் ..முகம் தொங்கி போச்சி"

"அட அட கேட்கவே இன்பமா இருக்கே, ஒரு போட்டோ எடுத்து அனுப்பினா என்னடி போன் எல்லாம் நீ எதுக்கு வச்சிருக்க . "ஐடியா பிடிச்சிட்டான்..

"என் போன்ல காசு இல்ல ...

"எப்பா அப்போ வைக்கவா? "

"நீ போடு , வீடியோ கால் பண்ணு, காது வலிக்குது.." கட் பண்ணி வைத்துவிட்டான் ... அடுத்த செகண்ட் பொண்டாட்டி என வண்ணதிரையில் சுவாதி வந்தாள் , கன்னத்தில் கைவைத்து புத்தகம் வாசிப்பது போல போட்டோ மினுங்கியது ..காலையில் அவளை பார்க்கும் போது அப்படியே கிளுக்கி விட்டான்...ஸ்ரீ அதை பார்த்து கொண்டே இருக்க ..

"தூங்கிட்டாரா எடுக்க மாட்டைக்கிறானே" மறுபடி மறுபடி போட ஐஞ்சானது தடவை ஆள் எடுத்தது ... வெள்ளை நிற நைட்டி மேலே ஷால் போட்டு மறைத்து, சோர்வு மிகுதியில் அவன் படுக்கையில் சுவாதி சாய்ந்திருந்தாள்.. அவளும் அவனை பார்த்தாள் , சட்டை இல்லாத மேனி திரண்டு உருண்டு அவன் உடல் வலிமை சொல்ல.. சட்டென்று முகத்தை பாத்தாள் புருவம் உயர்த்தினான்...

"என்ன விஷயம் ?"

"ஏன் விஷயம் இருந்தாதான்.. உனக்கு போன் போடணுமா?? நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டிடி பேச எதுவுமே இருக்காதா ... உதடு ஏன்டி வீங்கி போய் இருக்கு .. "ஒருவழியா கடலை போட பழகிட்டான் இனி காது தீய தீய போடுவான்..   

அது தலையை குனிந்து கொண்டாள்.. முதல் இதழ் அணைப்பு சிவக்க வைத்து,இதழ் தடிக்க வைத்து விட்டதே... 

"ஓஓ முத்தம் கொடுத்தது வீங்கிடுச்சா..கிஸ் ஓகேவா? இடுப்பை கூட பிடிச்சி கடிச்சேனே அங்கேயும் வீங்கிடுச்சா "அக்கறை இல்லை, அடுத்த கிட்னி புடுங்கும் உத்தி என அறியாது ..

"இல்லை இங்க மட்டும்தான்" அவன் முகத்தை பார்க்க கூச்சம் வந்தது ..இன்னும் சகஜ பேச்சுவார்த்தை இல்லாத ஒருவனிடம் முத்தமும் வாங்கி ,அதை பற்றி பேசு என்றால் பெண் தயங்குவது இயல்புதான் .. அவன் ஓடும் வேகத்துக்கு காதல் ஓட்டத்தில் பின்னாடி ஓட முடியுமா ? 

"இல்லடி எனக்கு தெரியும் நான் நல்லா வலிக்க பிடிச்சு அங்கேயும் கடிச்சி வச்சேனே ,காட்டு.."

"அய்யய்யோ என்ன இது" அலறி..

"வலி இல்லை ..

" நீ காட்டு நான் பாக்கணும், என் பொண்டாட்டி இடுப்பை பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நான் என்ன அடுத்தவ இடுப்பையா பார்க்க கேட்டேன்.. காட்டு இல்லை, வீட்டுக்கு வந்து நேரா மேல பாஞ்சிடுவேன்.. என் ரூம் சாவி என்கிட்டையும் ஒன்னு இருக்கு , மொட்டை மாடி வழியா பிடிச்சு உள்ள வந்தா நேரா என் ரூம்தான் வரவா??" .. அவ தற்கொலை பண்ணிக்குவேன் என மிரட்டி விருமனை அலற விட்டாள்.. இவன் வரவா வரவா என கூறியே தெறிக்க விட்டான்

"வேண்டாம் வேண்டாம் நைட்டியில எப்படி காட்டுறது.."

"அது உன் கஷ்டம் எனக்கு பார்க்கணும் , காட்டு " சிகரெட்டை தடவி பற்ற வைத்தான்.. மோக பந்தல் இடை நடுவே கொடி வளர்க்க.. எதிரே இருந்த பொண்டாட்டி அதுக்கு நீர் வார்க்க , புகையை ஊதி தள்ளினான்.. உள்ளபுகை அதிகமானது, பொண்டாட்டியை அணைக்க , அவளோடு இணைய எந்த தடையும் இல்லை, ஆனால் அவன் எதிர்பார்ப்பு வேறு ஏதோ ?

"டிரெஸ் மாத்திட்டு வரவா? சேலையில நகட்டி காட்டிடலாம்.. " ரா பூஜை இதுதான் போல என்று இப்பதான் சிலர் பேச்சுக்கு அர்த்தம் புரிந்தது..   

"ம்ம், என் முன்னாடி சேலை மாத்தினா ஓகே, இல்ல இப்டியே காட்டு "ஆசையில் கண்கள் சிவக்க கூற.. ஸ்ரீயின் பார்வை அவள் கண்ணோடு கலந்தது.. 

"இது என்ன பார்வை ,இப்படி பாக்கிறான் கழட்டலைன்னா, சொன்ன மாதிரி ஏறி குதித்து உள்ள வந்து நின்னுடுவான், இப்படி ஒரு வாழ்க்கை அவசியமா?" என அவள் மூளை கேள்வி எழும்ப.. பெருமூச்சு வந்தது .... 

"ப்ச் என்னடி என்ன பண்ணிட்டு இருக்க, சீக்கிரம் ..." ஸ்ரீயின் ஆசைக்கு தூபம் போடும் விதமாக சுவாதி டவலால் மார் மறைத்து கொண்டே உள்ளே கைவிட்டு ஜிப்பை இழுத்து விஸ்தாரமாக ஆடையை மாற்றி பல்லில் நுனி பிடித்து வைத்து கொண்டு இடை வரை நகட்டினாள்.

ஸ்ரீயை பிடிக்குது பிடிக்கல விவாதம் பண்ண அவள் நினைக்கவில்லை .. அவன் கூட வாழ தயாராகிதான், இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தது.. அவனே அவகாசம் கொடுத்து தள்ளி இருப்பதே நிம்மதிதான்.. 

சிறுசிறு முடி கூட அவர் பார்வையில் சிலிர்த்து குத்தி நிற்க .

"உனக்கு எங்கிட்ட ஏதாவது தோணுதா ஸ்வீட்டி?? அவன் குரலில் வழிந்ததுதான் மோகமா.. சுவாதி குப்பென்று வியர்த்து ஸ்ரீயை பார்க்க..அவள் விழியில் ஏதோ தேடி அலைந்தவன்...

"ஏதாவது தோணுதா..ஏதாவது சொல்லணுமா? "

"இல்லை..."

"போனை வை "என்று கட் பண்ணி வைத்து விட்டான்... சுவாதி ஆப் ஆன போனையே பார்த்து கொண்டிருந்தாள் .... 

தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறான் ஏன் விலகி நிற்கிறான்.. அவன் பேச்சு செயல் தன்னை மனைவியாக பார்க்கிறது..அதைதாண்டி வேறு என்ன அவனுக்கு வேணும்? இதுக்கு மேல எப்படி நான் இறங்கி போக, சொன்னாதான புரியும் என்று குழம்பித்தவித்தாள் 

என் ஹீரோ எல்லாம் பேச மாட்டாங்க வாயில சுளுக்கு.. நாமளேதான் கண்டுபிடிக்கணும்..  

கண்டுபிடிச்சிடுவாளா? அவனுக்கு என்ன தேவைன்னு...