பகலவன் 10

Pani10

பகலவன் 10

10 பகலவனின் பனிமலர் அவளோ??

பசங்களுக்கு பீஸ் கட்ட யூனிபார்ம் அளவு கொடுக்கன்னு அலைய வேண்டி இருந்நதால எபி போட இந்த பக்கம் வர முடியல சாரி காக்க வைத்தமைக்கு 

எல்லோரும் காதலித்தால்தான் தூக்கம் வராமல் திண்டாடுவார்கள்..

 இங்கே ஸ்ரீ கட்டிலை முழுவதாக ஆக்கிரமித்து நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்க, வெளியே வினய் கொசுக்கடியில் தூங்காமல் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருக்க.. சுவாதி போன் போட்டான், இடுப்பை காட்டு, அடுப்பை காட்டுன்னு மிரட்டினான் , கழட்டி காட்டுனா கண்ணை உத்து உத்து பார்த்துட்டு போன வைன்னு கட் பண்ணி வச்சுட்டான்.. என்ன விஷயமா இருக்கும் என்று அவள் இந்த கிறுக்கனை நினைத்து தூங்காமல் புலம்பி கொண்டிருக்க விடிஞ்சே போச்சு.. 

"அத்தை ஏதாவது செய்யவா??" சமையலறையில் சிவகாமி சமையல் செய்து கொண்டிருக்க ,,மெல்ல உள்ளே போனாள் ... 

"உன் புருஷனுக்கு என்ன வேணுமோ, அதை செய் எங்களுக்கு ஒன்னும் நீ செய்ய வேண்டாம் "என்று கூறிவிட ,முகம் கூம்பி போன சுவாதி .. 

இதுக்கு மேல என்ன பேச? அவன் பண்ணிய சதி செயலுக்கு நாம வாங்க வேண்டியிருக்கு தொல்லைசாமி தூங்க விடாம பண்ணி காலையிலையே சோம்பலா இருக்கு .. ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும் .. இவங்ககிட்ட கேட்டாலும் தப்பா போயிடும் .. போட்டு குடிச்சாலும் வேற ஏதாவது சொன்னா ..

"இந்தா காப்பி போய் உட்கார்ந்து குடி, மதியத்திக்கு என்ன வேணும் .."அதே கடுக்காய் பேஸ்.. 

"அத்தை ப்ளீஸ் இப்படி யாரோ போல பேசினா ஒருமாதிரி இருக்கு எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது, இனிமே கவனமா இருக்கேன்.. "கண்ணீர் கட்டி விட..

"என்ன சுவாதிம்மா நீ .. அழுவாத, வீடுன்னா எல்லாம் இருக்கும் அதுக்கு அதையே வச்சிட்டு இருப்பாங்களா? நான் எப்பவும் ஒரு போல உன்கிட்ட இருக்கணும்னா நடிக்கத்தான் வேணும்.. எனக்கு ஸ்ரீ எப்படியோ அப்படிதான் நீயும்.. கோவம் வந்தா கோவப்படுவேன் கொஞ்ச தோணினா கொஞ்சுவேன் .. ஏன் எனக்கு உன்கிட்ட உரிமை இல்லையா..

"ச்சே சே இருக்கு அத்தை" மனம் லேகுவான உணர்வு ராதிகா தூங்கி முழித்து உள்ளே வந்தவள் 

"குட் மார்னிங் அண்ணி என்ன தடியன் தூங்க விடலையா கண்ணு சிவந்து போய் இருக்கு.. ம்மா காப்பி தாங்க "

"போய் பல்லை விளக்கி தொலை .. 

"அண்ணி வாங்க, அம்மா கூட கூட்டணி போடாதீங்க அது ஓல்ட் பீஸ்,, நாம இரண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு ஈவினிங் ஷாப்பிங் போகலாம் "

" காசு" சிவகாமி கேள்வி எழுப்ப 

"ஹிஹி நான் என்ன ஸ்ரீயா?? பிழைக்க தெரியாம மில்ட்ரிகிட்ட அடியும் ,உதையும் வாங்க.. நான் ராதிகா அப்பாகிட்ட கேட்கிற விதமா கேட்டு வாங்கியாச்சி... அவ்வளவுதான் சண்டையா? என்பது போல் அனைத்தும் மறந்தும் சுமூகமாக ஏற்று கொள்ளும் உறவுகள் வியப்பைக் கொடுத்தது.. தொல்லைசாமி மட்டும் ஏன் வேற மாதிரி இருக்கான், எங்கு போனாலும் நினைவு அவள் குரங்கு பொம்மை மீதே போய் நின்றது..

"போகலாம்தான அண்ணி 

"போகலாம் ராதிகா, ஈவ்னிங் வேலை முடிச்சிட்டு அப்படியே போயிட்டு வந்திடலாம்.. போயிட்டு வரவா அத்தை ..

"உன் புருஷன் என்ன சொல்றான்னு பார்த்துக்க எதுக்கும் அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்க.."

" அவர்கிட்டையா,? என்று இழுத்த சுவாதி..

"சரி அத்தை "சிவகாமி குடும்ப மிக்ஸியை இத்தனை நாள் அரைச்சிருக்கார் .. நல்லது கெட்டது தெரியும் அவர் வழியை புடுச்சி அந்த தொல்லைசாமியை சமாளிப்போம் என அறைக்குள் வந்து போனை தேடி புருஷன் பெயரை ஸ்ரீ என மாத்த போனவள்.. 

"ப்ச் செக் பண்ணி தொலைஞ்சிட கூடாது , அவன் வச்ச மாதிரியே இருக்கட்டும் என ஸ்ரீக்கு போனை போட கட் பண்ணி விட்டான் ..

வேலையா இருப்பாரோ .. அவர்தான் வேலலைக்கே போகலைன்னு , அத்தை சொன்னாங்களே .. வேற என்ன நாயர் கடையில ஊதித் தள்ளி , ஒளிவட்டம் உண்டாக்கிட்டு இருப்பார்"..கிளம்பி கவனமாக சிவகாமி வைக்க வந்த மலர்சரத்தை தடுத்து 

"கொஞ்சம் போதும் அத்தை"

"பொண்ணு பூ வேணாம்னு சொல்ல கூடாது சுவாதிம்மா .. வச்சிக்க"

"வேணாம் சொல்லலை அத்தை, கொஞ்சமா போதும் , முடி கம்மியா இருக்கா, நிறையா வச்சா பாரமா இருக்குது" என ஸ்ரீக்கு பிடித்த மாதிரி கொஞ்சமா வைத்து கொண்டாள்.. சேலை எல்லாம் ஏனோ டல்லா தெரிய..

"என்ன சாயம் போயிடுச்சா, ஒன்னும் நல்லா இல்லை" இப்பதான் கண்ணுக்கு கலர் நோய் வந்திருக்கு .. இது ஓகேவா இருக்குமா? மேலே போட்டு பார்த்தாள்.. இதெல்லாம் அவள் வாழ்நாளில் பண்ணியது இல்லையே.. பல மணிநேரம் தன்னை திருத்தி, பூவும் வைத்து மாங்கல்யம் எடுத்து ஸ்ரீராம் என மூணுமுறை கூறி அதில் பொட்டு வைத்தவள்.. தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க சர்வலட்சணமாக தெரிந்தாள்.. மனதில் மாயவன் பதுங்க ஆரம்பித்தானோ? அவன் தாலி சுமந்த அவளும் நிறைவை முகத்தில் பிரதிபலித்தாள்..

"அத்தை கொஞ்சம் அதிகமா சாப்பாடு வைங்க" ஸ்ரீ வருவான் பாவம் வயிறு நிறைய தின்னட்டும் ஈவு சுரந்தது அவன்பால்... 

"என் சாப்பாடு பிடிச்சு போச்சு பார்த்தியா, நல்லா தின்னு அப்பதான் உடம்பு போடும்.. பாரு ஓஞ்சான் ஒட்டகம் போல இருக்க , இந்தா சாப்பிடு "

"இல்ல அத்தை காலையில சாப்பாடும் கொண்டு போய் சாப்பிட்டுக்கிறேன் லேட்டாகி போச்சி" என்று ஒன்பது மணி பஸ்ஸூக்கு, எட்டு மணிக்கே மருமகள் தொடை நடுங்க வித்தியாசமாக பார்த்து கொண்டே கட்டி உள்ளே வைத்தார் .. 

காதல் நோய் பரவுதலுக்கு முதல் அறிகுறி ... பொய் தொற்று , தன்னை ஒப்பனை செய்யும் தொற்று, அடிக்கடி கண்ணாடி பார்க்கும் தொற்று.. சம்மந்தம் இல்லாது பொருளை எடுப்பதும், வைப்பதும் மறப்பதும் இது எல்லாம் நோயின் கூறே.. தொல்லைசாமி அவள் எல்லையில் லைட்டா கால் மிதிச்சிட்டான்.. சுவாதிக்கும் இவை எல்லாம் நடந்தது.. மறுமுறை கண்ணாடி பார்த்து தன்னை திருத்தி வேகவேகமாக நடை போட்டவள்..ஸ்ரீ வருவான் என நினைத்து அங்கும் இங்கும் தேட, ஆள் வரல ..  

"நிம்மதி தொல்லைசாமிகிட்ட இருந்து இன்னைக்கு விடுதலை" என உதடு கூற , இன்னும் ஒருமுறை தேட சொல்லி அவள் மனது பறக்க பேருந்து நகர ஆரம்பிக்க ஸ்வாதி தலையை வெளியே விட்டு பார்க்க... பைக்கில் சாய்ந்து நின்று என்ன என்று புருவம் உயர்த்தினான் அவள் நினைவின் நாயகன் ஸ்ரீ .. 

"அச்சோ நிற்கிறார்" என உதட்டை கடித்து உடனே திரும்பி கொண்டாலும், அந்த ஒரு விசை கண்கள் பரிமாற்றம் நகத்தை கடிக்க வைத்தது.. அது தந்த இதத்தோடு வேலைக்கு போய்விட்டாள்..

சுவாதி மாலை கல்லூரி வாசலில் பேருந்துக்கு காத்திருக்க .. அவள் முன்னால் வந்து போலீஸ் ஜீப் நின்றது ..சுவாதிக்கு ஏற்கனவே சண்டை சச்சரவு ஆகாது ..போலீஸ் பாரதால் சிறு பிள்ளைபோல பிடிச்சு உள்ள போடட்டிருவான் என பயப்படும் ரகம் .. வாட்டசாட்டமாக நாலு போலீஸ் இறங்க.. 

"ஒருவேளை ஸ்ரீ போலீஸா இருக்குமோ??" என நம்மை போலவே அந்த பக்கியும் பார்த்து வைக்க 

" நீ ஸ்ரீ பொண்டாட்டிதான ?எடுத்ததும் மிரட்டலாக அவர் கேட்க

"ஆமா சார் .."

"உன் புருஷனுக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பா எங்க சண்டை நடந்தாலும் போய் முன்னாடி நின்னு பஞ்சாயத்து பண்றான்.. பிறகு போலீஸ்னு நாங்கெஎல்லாம் எதுக்கு இருக்கோம்.. "

சுவாதி சற்று அரண்டு போய் சுற்றி முற்றி பார்த்தாள்.. ஊரே அவளைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.. 

"எதா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கோங்க, இல்ல என் மாமா கிட்ட பேசுங்க .. இப்படி ஒத்தையா நிக்கிற பொண்ணுகிட்ட வந்து விசாரிச்சா எப்படி??"

"நீதான அவன் பொண்டாட்டி பின்ன உன்கிட்ட விசாரிக்காம வேற யார்கிட்ட விசாரிப்பாங்க.. "என்று வண்டியை விட்டு இறங்கினான் 

தயா ..விஜயவாடா பி7 போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ..புதிதாக மாறுதல் ஆகி வந்திருக்கிறான்..காம்ப்ளான் எல்லாம் அண்டாவுல கரைச்சி குடிப்பான் போல.. என்றளவு உயரம்.. போலீஸ் முடிவெட்டு, முரட்டு உடற்கட்டு என்று அவளை நோக்கி வர, சுவாதி கால்கள் தானாக தெண்ணி பின் நகர்ந்தாள் .. அவன் பார்வை அவள் அங்கம் மேய பேக்கை வைத்து மார்பை மறைத்தபடி நின்றாள்.. 

 இவனுக்கு ரவுடி கூட பரவாயில்லை என்னும் அளவுக்கு கேடுகெட்டவன்.. ஜீப்பில் வந்து கொண்டிருந்தவன் அழகான பெண்களை நோட்டம் விட்டுக் கொண்டே சுவாதியை கிராஸ் பண்ணிட . அவள் சாந்த அழகு சுண்டி இழுக்க, வண்டியை நிறுத்த சொல்லிவிட்டான்..

"யார் அவ??" என்று விசாரிக்க.. அருகே நின்ற கான்ஸ்டபிள் .. 

"காலையில அடிதடி கேஸ்ல உள்ள தூக்கி போட்டோம்ல ஸ்ரீ.. அவன் பொண்டாட்டி சார்" 

தயா நக்கலாக சிரித்துக் கொண்டான்.. 

 ஸ்ரீ இவளை பார்த்துவிட்டு நின்ற அடுத்த செகண்ட்டே அதே இடத்தில் ஏதோ அடிதடியாகி போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டு , இப்போதுதான் வெளியே வந்தான்.. போலீஸ் ஸ்டேஷன்லையே தயாவுக்கும் , ஸ்ரீக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது.. 

ஸ்ரீயை லாக்கப்பில் வைத்து மிதித்துக் கொல்ல வேண்டும் என்ற யோசனையில் இருக்க .. நான்கு வக்கீல் வழக்கம் போல வந்து ஸ்ரீயை வெளியே எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள் .. 

"அவனுக்கு இவ்வளவு அழகான பொண்டாட்டியா??" 

"சார் அவன் இன்ஜினியரிங் கோல்ட் மெடலிஸ்ட்.. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. "

"கல்யாணம் முடிஞ்சா என்ன? தயா கண்ணுல விழுந்துட்டால்ல.. இனிமே அவனுக்கு பொண்டாட்டி, எனக்கு வப்பாட்டி, பேசி பார்ப்போம்.. ஆள் நம்ம பேச்சுக்கு மயங்கினா, சத்தம் இல்லாம ஊருக்கு ஒதுக்குபுறமா கூத்தியாளா வச்சிக்க வேண்டியதுதான்.. முரண்டுபிடிச்சா இவ புருஷனை தூக்கி போட்டு மிதிக்கிற மிதியில தானா வழிக்கு வருவா.. அவக்கிட்ட கொண்டுபோய் ஜீப்பை நிப்பாட்டு , ஆளு பயப்படுதா இல்லையான்னு பார்ப்போம் .. நாடித்துடிப்பு வச்சித்தான் பொண்ணுக்கு வலை போடணும்" என்று சுவாதி நோக்கி தன் கோர கண்களை திருப்பினான் .,

ஏற்கனவே அவளுக்கு ஏழரை நாட்டு சனி டங்கு டங்குன்னு ஆடிக்கிட்டு கிடக்கு , அதை கடந்து இப்பதான் புள்ள முகத்தை கண்ணாடியில பார்த்து லவ் பீலுக்கு தாவினாள் .. அதுக்குள்ள இந்த வெறுவாகெட்ட பய வந்து இடையில விழுந்து.. ஸ்ரீ மேல் வந்த ஈர்ப்பை சல்லி சல்லியா உடைச்சிட்டான் ... 

"எல்லாம் அவனால ஊரே அசிங்கமா பார்க்குது" என்று பின்னோக்கி போய் மரத்தில் மோதி நிற்க.. 

"உன் புருஷன் பெருசா பருப்பு போல சீன் போடுறான் .. ஊரில அநியாயம் நடந்தா பொங்குவானாம், இப்ப இங்க உன் மேல கை வைக்க போறேன், எங்க உன் புருஷன வந்து பொங்க சொல்லு பார்ப்போம் .."

"கிட்ட வராதீங்க அவருக்கூட பிரச்சினைன்னா அவர்கூட பேசுங்க ,ஒரு பொண்ணுகிட்ட தப்பா பிஹேவ் பண்ணாதீங்க "பயத்தில் உதடு நடுங்கினாலும் , தன்னை காக்க யாரும் வர மாட்டார்கள் என தெரியும்.. காரணம் ஒன்னு இவன் கெட்டவன், மற்றொன்று இது ஸ்ரீ பிரச்சனை தப்பா போனா நம்மள மிதிப்பான்... அமைதியா நிற்போம் என கண்டுகொள்ளாது அமைதியாக நிற்க, சுவாதி கால் தள்ளாடி மரத்தில் கோழியாக பதுங்கினாள்..

"இங்கயே உன் சேலையை அவுத்து ____மா நிற்க விட்டா உன் புருஷன் என்ன __கிறான்னு பார்கிறேன்" என்று என்று சிரித்து கொண்டே சுவாதி சேலையை பிடித்து இழுக்க போக , அவளை தாண்டி போய் முகம் குப்புற விழுந்தான் தயா..

"________ என் பொண்டாட்டி மேல கை வைக்கிறியா, ஊரான் பொண்ணு மேல கை வச்சாலே பொளந்து எடுப்பேன் , என் ஸ்வீட்டி , என் ஸீவிட்டி மேல கை வைக்கிற" என்று தயா முகத்தை மணலில் போட்டு காலை வைத்து நசுக்கி அடித்து துவைக்க அவனுக்கு உதவிக்கு வந்த போலீஸ் அத்தனை பேரையும் கண்மண் தெரியாது அடித்தான்..

சுவாதி மரண அடி என்பதை கேள்வி பட்டிருப்பாள் கண் எதிரே பார்க்க வைத்தான்.. கையில் சொட்டு சொட்டாக தயா ரத்தம் வடிய , கையை உதறி கொண்டு சுவாதி நோக்கி திரும்பி , கையை விரித்து வா என்று அழைக்க ...ஒரு நொடி அவள் கால் தயங்கி ..

"பாவாஆஆஆஆஆஆஆஆஆ" என கதறி கொண்டு காற்றை போல் ஓடி போய் அவனை அணைக்க.. அவளை இழுத்து அணைத்து கொண்ட ஸ்ரீ..

"நம்புடி உனக்காக இந்த ஸ்ரீ இருக்கான், அப்பவும் இப்பவும் எப்பவும் இந்த ஸ்ரீ இருப்பான்" என்று முணுமுணுத்து அவள் தலையை உயர்த்த.. அவன் நெஞ்சை பிடித்து தள்ளியவள் 

"பொறுக்கி !!பொறுக்கி!!ஏன்டா இப்படி பண்ற .. உன்ன பிடிக்கவும் வைக்கிற, வெறுக்கவும் வைக்கிற ..நெருங்க வைக்கிற , நீயே விலகவும் வைக்கிற.. ஏன்டா என்ன கொல்ற .. ஐ ஹேட் யூ!! ஐ ஹேட் யூ !! எனக்கு உன்ன பிடிக்கலை.. பட் பிடிச்சிருமோன்னு பயமா இருக்கு பாவா... யார்டா நீ ? ஏன்டா என் வாழ்க்கையில புயல் மாதிரி வந்து புரட்டி போட்டுட்ட, நான் தேடுற அமைதி ,உன்கிட்ட கிடைக்காதுன்னு தெரிஞ்சும், உன் பக்கத்தில நிற்க தோணுது.. என்னையே நான் இழந்திட்டு இருக்கேனோன்னு பயமா இருக்கு " என்று அழுத சுவாதியை ஒரு ரியாக்ஷனும் காட்டாது மேலிருந்து கீழாக பார்த்தவன்..

"முடிஞ்சதா ஸ்வீட்டி போவோமா?" அவள் ஏன்டா இப்படி என பார்க்க ..

"நீ ஏதோ ஹெவியா ஸ்ரீகிட்ட எதிர்பார்க்கிறன்னு நினைக்கிறேன் .. எனக்கு உன்ன மாதிரி பெர்பாமென்ஸ் எல்லாம் பண்ண தெரியாது.. தம் வச்சிருக்கியா ஸ்வீட்டி? கோவம் வந்தா அதை அடிச்சாதான் கை நடுக்கம் குறையும் இருக்காடி" என்று கேட்டு அவள் பைக்குள் கைவிட.. 

சுவாதி ரோட்டிலேயே தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்..

நாமளும் ஒரு துண்டை வாங்கி மூச்சு காட்டாம தலையில போட்டு அமர்ந்திட வேண்டியதுதான் ... 

நீ இப்படி இருந்தா, நான் இப்படி இருப்பேன்.. எனக்காக உன்ன மாத்து, நான் உனக்காக மாறுகிறேன்.. அதை செய், இது செய்யாது என்பது வியாபாரம் .. ஏற்றுமதி இறக்குமதி.. நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நீதான் வேணும் என்று ஒருவரை அவர் போலவே ஏற்று கொள்வது காதல்!! 

ஏற்றுகொள்ளுதலில் இனிமையை விட ,வலிகள் கொஞ்சம் அதிகம் இருக்கும் ... எல்லாம் கடந்து போக காதல் கைகொடுக்கும் ...