பகலவன் 12, 13,
Pani12

12 பகலவனின் பனிமலர் அவளோ!!
"ஏங்க புளளையை போட்டு அடிக்கிறீங்க , அய்யோ வளர்ந்த புள்ளையை ரோட்டுல போட்டு அடிச்சா, அவனுக்கு அவமானமா இருக்காதா? என்று மகேந்திரனிடம் ரோட்டில் விழுந்து அடி வாங்கும் ஸ்ரீராமை அடிக்க விடாது சிவகாமி தடுத்தார் ...
"அவமானம் நாய்க்கு வந்தாதான் அடுத்த தடவை ஒழுங்கா புத்தி வரும்.. ச்சை உன்ன வச்சி என்ன கனவு எல்லாம் கண்டிருந்தேன், இப்படி நாசமாகி போகி நிற்கிற "என்று மிதிக்க .. முகத்தை மட்டும் மூடி கொண்டு அடியை அசால்டாக வாங்கிஎழும்பி சட்டையை உதறி கொண்ட ஸ்ரீ..
"தம் அடிச்சதை பார்த்துட்டுதான அடிக்கற, அப்போ உனக்கு தெரிஞ்சு போச்சு, இனி பயப்பட தேவையில்லை" என பேண்டில் ஒளித்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து மகேந்திரன் முகத்தில் புகையை ஊதி விட்டு ..
"இதுக்கும் வேணும்னா அடி என்று முதுகை காட்ட பெல்டை தூக்கி ஏறிந்து விட்டு போய் உட்கார்ந்தார் ..
மணலில் உட்கார்ந்து விளையாடி கொண்டிருந்த ராதிகா கொண்டையை இழுத்த ஸ்ரீ ..
"போய் வேற சட்டை எடுத்துட்டு வா "
"முடியாது" அம்மாஆஆஆஆஆஆ அண்ணன்..
"ஆஆஆஆஆஆஆ
"போ எடுத்துட்டு வா, தொலைச்சி புடுவேன் "என்று அடுத்த அடிக்கு கை ஓங்க , முதுகை தடவி கொண்டே ராதிகா ஓடினாள்.. சட்டையை எடுத்து வந்து அவன் கையில் கொடுக்க.. சிவகாமி போகும் மகனை கலங்கி போய் பார்த்தார் ..
பத்தாப்பில் முதல் மாணவனாக வந்தான்.. 12 பள்ளியில் மூணாவது மாணவனாக வந்தான் .. ஊரே கொண்டாட அவன்மட்டும் தந்தை முகம் பார்த்தான் .
"மூணாவது வந்திருக்க முதல் மார்க் எங்க போச்சு? என கூறி கூறி அடிக்க ..பல்லை கடித்து வாங்கினான்..
சாதாரண ஆசை, கனவுகள் கொண்டு ஓடும் அவன் பாலர் பருவம் பாடப்புத்தகம் விழுங்கி கொண்டது
படி படி படி படி என்று காலையும் மாலையும் ஸ்ரீ புக்கும் கையுமாக எதிரே விளையாடும் குழந்தைகளை ஏக்கமாக பார்ப்பான்.. போரில் மகேந்திரன் கால் ஒற்றை பக்கம் சேதமடைந்து போக விருப்ப ஓய்வு பெற்று ஸ்ரீ ஐந்தாவது படிக்கும் போது மகேந்திரன் வந்து விட்டார்.. அப்ப பிடிச்சது ஸ்ரீக்கு பீடை ..
படிச்சி டாக்டர் ஆகு , கலெக்டர் ஆகு அவன போல படி, இவன போல படி என ஸ்ரீயை புத்தக புழுவாக்க அவனும் படிச்சி படிச்சு முதல் மாணவனாக வந்தவன் ... 12 முடிஞ்சி அவர் அடிக்கும் போது முடிவு எடுத்து விட்டான்..
"நீ அடிக்கிறியா அடி.. உனக்கு தேவை படிப்பு, நான் படிக்கிறேன் ஆனா என் இஷ்டம்போலதான் இனி இருப்பேன் "என்று ஊர் சுற்று ஆரம்பித்து , இப்போ தம்மில் வந்து நிற்க .. இதோடு விடுவான் என பார்க்க.. இரவு பீரோடு லம்பி வர பெற்றவர்கள் அதிர்ந்து போய் நிற்க
"உனக்கு தேவை முதல் மார்க் , காலேஜ் டாப்பர் போதும்ல போ, நான் என்ன வேணும்னாலும் செய்வேன் "என்று குளற, தலையில் கை வைத்து விட்டார்.. இது ஆகாது அவன் எதிர்காலம் போய்விடும் என்று நினைத்த மகேந்திரன் அவன் படிப்பை சென்னைக்கு மாற்ற ..இன்னும் சுதந்திர பறவை ஆகினான் ,வீட்டு வாழ்க்கையை விட ஹாஸ்டல் வாழ்க்கை பிடித்தது .. அடிதடி ரவுடிஸம் என்று கெத்து காட்டி கன்னியர் மனதை கவர்ந்தான்.... படிப்பில் சூரப்புலி , ஸ்போட்ஸில் சேம்பியன் பின்ன அது போதாது? பெண்கள் கண்ணை கவர.. எப்பா என்ன பிரச்சனைனாலும் ஸ்ரீகிட்ட சொல்லுங்க என்று அவனை மாணவ தலைவன் ஆக்க .. முழு நேர ரவுடி ஆகினான் ..
"பாப்பா சாப்பிடுட்டு போ அம்மாவுக்கு நாங்க அப்டேட் பண்ணணும் "என்று இட்லியை அலைந்து கொண்டிருந்த சுவாதியை கேர் டேக்கர் தட்ட
"ஹான் வேண்டாம் அக்கா பசிக்கல "என தாயை தேடி வீட்டை அலசிட..
"அம்மா காலையிலையே கேஸ் இருக்குன்னு போயிட்டாங்கடா" தந்தையும் சில நாட்கள் முன்பே தவறினார்.. சுவாதிக்கு தனிமை செல்லறித்தது.. இதோ இப்போது 12 வகுப்பு இறுதியில் நின்றாள்.. வெள்ளை நிற சீருடை அவள் மனம் போல தூய்மையாக, போய் ஆடி காரில் அமர.. அந்த ஏசி கூட அவள் மனபுழுக்கத்தை குறைக்கவில்லை சிக்கனில் தலை சாய்ந்து அமர்ந்திருந்த சுவாதி
"தொங்கனா கொடுக்கா!! பளார் பளார்" என செவிடு கிழியும் சத்தத்தில் சட்டென்று திரும்ப..ஒரு நாய்குட்டி சாலையில் கால் ஒடிந்து கிடக்க .. அடித்து போட்ட பைக்காரன் சட்டையை ஒருவன் இழுத்து வைத்து கன்னத்தில் அறைந்து..
"வாயில்லா ஜீவனை தெரியாம அடிச்சாலே தப்பு, நீ அவன் கூட பெட் கட்டி அடிச்சு தூக்கியிருக்க" என்று எட்டி உதைக்க.. அவள் ஜன்னல் மேல் வந்து அடிவாங்கியவன் விழ... காப்பை திருகி கொண்டு குனிந்தவன் காலரை பிடித்து இழுத்து,அவன் நிமிர நிமிர சுவாதி கண்ணில் ஸ்ரீ விழுந்தான்..
ரெளத்திர பார்வை, சீறும் முகம், பாயும் பருவம் , எதற்கும் அஞ்சா திடம் என ஆணழகனாக மார் நிமிர்த்தி ஸ்ரீ நிற்க ...கண்கள் சிமிட்டாது பார்த்தாள்.. நாக்கை மடித்து குத்தும் போதும் அழகாக இருந்தது .. அதற்குள் வண்டி மூவ் ஆக..
"ஆறுமுகம் அண்ணா ஸ்லோ பண்ணுங்க
" ஏதோ ரவுடி பயல்க சண்டை போல ..
"ப்ச் நிறுத்துங்க அண்ணா" என்று திரும்பிப் பார்க்க. அடிபட்டு கிடந்த நாயை தூக்கி தன் சட்டையை கழட்டி அதற்கு கட்டு போட்டுக்கொண்டு நின்ற ஸ்ரீ அவள் கண்ணை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டான்.. மனதிலேயும் நுழைந்து விட்டான்..
ஒரு வாயில்லாத ஜீவனுக்காக எதிர்த்துப் போராடியவன் அன்பில் விழுந்தாள்..
"எனக்கும் யாரும் இல்லை, இந்த நாய்க்கு கொடுத்த அன்பும் அக்கறையும் தருவியா?" என்று மனதோடு கேட்டாள் .. கண்ணில் அன்பை தேடிய பயணம் முழுமை பெற்ற திருப்தி ..
அவன் நுழைந்த கல்லூரி வைத்து ஸ்ரீ காலேஜ் அறிந்து கொண்டவள் ..மாலையே அவன் கல்லூரி வாசலில் நகத்தைக் கடித்துக் கொண்டு, அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு செல்லும் அனைவரையும் பொறுப்பெடுத்தாமல் உத்து உத்து ஸ்ரீராம் வருகிறானா என்று தேட ஆரம்பித்தாள் ..
அங்கே தொடங்கியது அவர்களுக்கான அழகான இளமைக் காலத்துக்கான காதல்..
"யாரும்மா வேணும் ..
"ஸ்ரீராம், பைனல் இயர்" காசை கொடுத்து அவனை பற்றி அறிந்து கொண்டாள்.. பாசத்தில் தானே அவள் ஏழை, பணத்தில் இல்லையே..
"ஸ்ரீ உன்ன தேடி ஒரு சின்ன குழந்தை வந்திருக்கு ..
"ராதிகாவா அது ஏன் இங்க வர போகுது, அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு நினைக்கிற கேஸே அவ" என்று தாடியை சொரிந்து கொண்டு வெளியே வர பளீர் புன்னகையில் சுவாதி நின்றாள்..
குண்டு கன்னம், லட்டு போல உருண்டை உடல் ..
"தீபாவளி ஸ்வீட் மாதிரி இருக்கா ,எதுக்கு நம்மள உத்து உத்து பார்க்கிறா" என அவள் அருகே போன ஸ்ரீ
"யார் நீ ? என்ன வேணும்..
"ஒரு ஹெல்ப் வேணும் செஞ்சு தர்றீங்களா..
"ப்ச் அதெல்லாம் முடியாது போ ..உன் வீட்டுல சொல்லு
"ப்ளீஸ் ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க வீட்டுல இதை சொல்ல முடியாது ..
"அப்படி என்ன பிரச்சனை "நடந்து கொண்டே ஸ்ரீ சிகரெட் என பெட்டிகடையில் கை நீட்ட ..
"நீங்க இருங்க நான் வாங்கிட்டு வர்றேன்" என ஸ்கூல் யூனிபார்மில் குடுகுடுவென ஓடி போய் அவளே காசை எடுத்து .. பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி கொண்டு வந்து ஸ்ரீ கையில் கொடுக்க
"ப்ச் அதெல்லாம் வேண்டாம் நீ முதல்ல இடத்தை காலி பண்ணு" அவனோடு படிக்கும் சக மாணவர்கள் பார்வை பளபளவென நின்ற அவளையும் ,அவனையும் பார்க்க .. விரட்டினான்.. ஸ்ரீ ன்னா ஸ்ரீராம் பொண்ணுங்க பக்கம் அவன் தலை போகாது என்ற எண்ணத்தை உடைக்க வந்தவள் சுவாதி...
"போறியா இல்லையா ??"
"ப்ளீஸ் ஒரு நிமிசம் கெஞ்சி நிற்க
"நைட் அந்த ப்ஸ்ஸ்டாப் பக்கம் வா வர்றேன்" என்று உள்ளே போய்விட
"பாவா ஆஆஆஆ!!" என்று அழைக்க.. அதிர்ந்து ஸ்ரீ திரும்பினான். ஆந்திராவில் வளர்நதவனுக்கு அதன் அரத்தம் புரியுமே..
"ஏய் என்ன சொன்ன??..
"இல்லை பாவம் பார்த்து வந்திருங்கன்னு சொல்ல வந்தேன் "..இழுத்தாள்..
"ஓஓஓ ஓகே போ .
"இதை என்ன பண்ண "என்று சிகரெட்டை தூக்கி காட்ட அந்த குழந்தை குறும்பு முகம் மறுபடி அவனை பார்க்க வைத்தது ..
"வாங்கிக்கிறீங்களா .. என்று ஒன்றை எடுத்து அவனிடம் கொடுக்க .. வாங்கி இழுத்து கொண்டே வாசல் வரை போனவன் ..திரும்பி
"உன் பேர் என்ன ?
"ஸ்வீட்டி !!"அவள் தகப்பன் அழைக்கும் பெயரை கூற..
"அதான கரெக்டா வச்சிருக்கான்க "என்று நினைத்து கொண்டு போய்விடடான்.. மாலை வந்தது அவளை மறந்தே போனான் ..ஸ்ரீ இரவு ஹாஸ்டல் அறையில் சாப்பிட்டு கொண்டிருக்க ..
"ஸ்ரீ உன்ன தேடி காலையில வந்த பொண்ணு வந்திருக்கு "
"இங்கேயா? ப்ச் இவள "என பல்லை கடித்து கொண்டு வரவேற்பு அறை ஓட ... சோபாவில் உட்கார்ந்து நகத்தை கடித்து பயத்தில் அமர்ந்து சுற்றிமுற்றி பார்த்து கொண்டிருந்தாள் சுவாதி
"அறிவு இருக்கா ??
இல்ல என்று தலையாட்ட
"ப்ச் ஆம்பள பையன் ஹாஸ்டல் உள்ள இப்படிதான் ஒத்தையா வந்து உட்கார்ந்து இருப்பியா, ஏதாவது ஆகி போச்சின்னா என்னடி செய்வ கிளம்பு ".. என்று அவள் கையை இழுத்து கொண்டே வெளியே வர
"நீங்க வரல அதான் நான் வந்தேன் ..
"அடிச்சேன்னா , நான் வரலைன்னா காலையில வர வேண்டியதுதான..அப்படி என்ன தலைபோற விஷயம் ..
"தலை போற விஷயம்தான் ..
"என்ன ?
"என் வீட்டு தோட்டக்காரன் என்கிட்ட தப்பா நடக்க டிரை பண்றான்" என்றதும் சட்டென்று அதிர்ந்து ஸ்ரீ அவளை பார்க்க
"ம்ம் ரொம்ப நாளா.. அம்மாகிட்ட சொன்னா என்ன ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டுறான்.. நைட் ரூமுக்கு வருவானாம்.. அவன் கேட்டது தரணுமாம் ... தப்பா தொட வர்றான் "என்று அழ தயாரான சுவாதியை கண்டு, ஸ்ரீ பெருமூச்சு விட்டவன்
"ஏன் வீட்டுல அப்பா அம்மா இல்லை" .. சுவாதி தன்னை பற்றி சுருங்க கூற..அவன் கண்கள் கலங்கியது அவள் ஒருத்திக்குத்தான்..
"சரி ஏறு , எங்க இருப்பான் ??"நண்பனிடம் பைக்கை வாங்கி அவளை பின்னால் அமர சொல்ல..
"பைக்கில போறோமா பாவா??" என்று மறுபடியும் சொல்லி விட்டு நாக்கை கடித்தாள்..
"நீ உதை பட போற, அண்ணன் சொல்லு" ..
"அய்ய்யோ !! அதெல்லாம் முடியாது
"ஏன்?
"ஏன்னா நான் லவ் பண்றேன்..
"யார?
"உங்கள "என்று பட்டென்று துணிந்து காதல் சொன்னவள் அவள்..
"ஏய் என்ன பேசுற? என் வயசு என்ன ,உன் வயசு என்ன
"என்ன ?? நாலே வயசு கேப், அடுத்த வாரம் எக்ஸாம் முடிச்சா நானும் பிக் கேர்ள்.. உங்க காலேஜ் வந்துடுவேன்...
"விளங்கும் ..
"இப்ப உங்கள லவ் பண்ண சொன்னேனா.. நான் பண்றேன், உங்களுக்கு எப்போ தோணுதோ அப்ப என்ன பண்ணுங்க.. இப்ப என்ன பண்றீங்கன்னா, போய் அவன அடிச்சி துவைச்சு காய போடுறீங்க போகலாம் ரைட் ரைட்!" என்று பைக்கில் ஏறி அமர்ந்து அவன் இடுப்பை பிடித்து கொண்டாள் ..
"போங்க பாவா ....
"அடிங்க ,லவ்வாம் லவ்வாம், துவைச்சிடுவேன் இறங்கு .."அவளுக்கு அவனிடம் பிடித்ததே அந்த திமிரும், முறைப்பும்தான்
"மாட்டேன் அவன வந்து அடிங்க" .. அவனும் விடலைபருவம் சுவாதி விவரம் புரியாது அவனை பின்னிருந்து அணைக்க .. தடுமாறி பைக்கை பிடித்தான் .. கொழுப்பில் ஊறிய நெய் கட்டி அவன் முதுகில் அவஸ்தை பண்ண ..
"தள்ளி உட்கார் கூட்டிட்டு போறேன் ..
"ம்ம் ஓகே "என விலகி அமர்ந்தாள்.. சற்று நேரம்தான் , மறுபடியும் அவனை இடுப்போடு பிடித்து கொண்டு குழந்தை போல தூங்க ஆரம்பித்து விட ..
"இன்னும் வளரவே இல்லை, ல்வவு பண்றாளாம் லவ்வு" என்று ஒரு கை விட்டு அவளை பிடித்து கொண்டான் ...தோட்டக்காரன் மூஞ்சியை பஞ்சர் ஆககி விட்டு கையை உதறி ஸ்ரீ நிற்க
"அச்சோ காயம் " என்று சுவாதி தோடட்ககாரன் அடி வாங்கியதை ரித்து குதித்தவள் அவனுக்கு ரத்தம் வடியவும் ஸ்ரீ கையை பிடித்து ஊதி இச் இச் வைக்க..
கையை உதறினான்.. அவள் அருகாமை வேண்டும் வேண்டாம் நிலையில் மனதை கலைத்துவிட்டாள்..
"கொடுங்க கட்டு போட்டு, மருந்து போட்டு விடுறேன்" என அவன் நீட்டாத கையை பிடித்து இழுத்து, தன் ஷாலை கிழித்து கட்டுபோட்டு மறுபடியும் ஊதியவள் கண்ணீர் அவன் கையில் விழுந்தது ..
"எனக்காக யாருமே இல்லை பாவா, உங்கள தவிர ப்ளீஸ் காதலை பிச்சையா போடுங்களேன்" என்றவளை அணைக்க கை போய், அருகே இருந்த மரத்தில் அடித்து திரும்பி கொண்டவன்..
அவன் உணர்வுகளுக்கு சொந்தக்காரி அவள் ஆனாள்..
13 பகலவனின் பனிமலர் அவளோ?
காதலை யாசித்து நின்ற சுவாதியை திரும்பி பார்த்தான், முகம் முழுவதும் காதல் நிரம்பி தழும்பி கிடந்தாள் ...
"பாரு ஸ்வீட்டி உனக்கு சின்ன வயசு ... படிச்சு முடி அப்பவும் என் மேல இந்த காதல் இருந்தா கல்யாணம் கட்டிக்கலாம் ..""
""டேடி ப்ராமிஸ் ...
"அந்த மிலிட்டரி ப்ராமிஸ் எல்லாம் போட முடியாது ஆனா ஸ்வீட்டி ப்ராமிஸ் .."
"கல்யாணம் அப்புறம் பண்ணிக்கலாம் பாவா, இப்ப சும்மா ப்ரெண்டா கூட இருங்களேன்..
"ப்ச் படிக்கணும்னுடி..
"படிங்க டைம் கிடைக்கும் போது பேசுங்க ப்ளீஸ் ..
"சரி நாளைக்கு ஈவினிங் கிளாஸ் முடிச்சிட்டு வா .. நீயும் ஒழுங்கா படிக்கணும் .
ஓகே ஓகே தினமும் மாலை அவன் காலேஜ் வாசலில் நிற்பாள்..அவன் வந்ததும் ..
"பாவாஆஆஆஆ "என்று அத்தனை பேர் திரும்ப கத்தி அழைப்பாள் ..
கத்தாதடி அமைதியா பேசு" .. பைக்கில் இரண்டு பேரும் ரவுண்ட் அடிப்பார்கள் ..அவள் தொட்டாலும் ஸ்ரீ தொட்டு கூட பேச மாட்டான் ..
"பாவாவுக்கு பீர் பிடிக்குமா "அவளே போய் வாங்கிட்டு வருவாள் அவனை அவனாக ஏற்று கொண்டாள்..
"நான் போறேன் நீ நில்லு ..அவளை அனுப்ப மனம் இல்லாமல் ஸ்ரீ நகர..
"ம்ஹூம் எனக்கு ஆசையா இருக்கு பாவா வாங்கி தர்றேன் கூட்டணி போட்டு குடிப்போன் இல்ல நீங்க குடிங்க நான் பக்கத்தில உட்கார்ந்து இருக்கேன் "என்று ஓடுவாள் ..
அவள் சிரிப்பு பார்த்தவன் அவன்,
அவள் அழுகை பார்த்தவன் அவன் ,
அவள் குறும்பை பார்த்தவன் அவன் ,
அவனே அவள் ஸ்ரீராம்...
"பாவா வாங்கிட்டேன்" பாவா பாவா என அவனை விட்டு ஒரு நொடி கூட விலக வில்லை... அவனை அறியாமலேயே சுவாதி அவன் உயிராக போனாள்
"பாவா நான் பாஸ் ஆகிட்டேன், இந்தாங்க ட்ரீட் என அவன் அருகே இடித்து கொண்டே அமர..
"எத்தனை மார்க் மேடம்?
"சஸ்ட் பாஸ்" என்று பல்லை காட்ட..
"அடே அப்பா சாதனைதான் போ.. அதுக்கு குவாட்டரும் கோழி பிரியாணியுமா...
"ம்ம் ம்ம் குவாட்டர் உங்களுக்கு, பிரியாணி எனக்கு..
"அடுத்து என்ன பண்ண போற ஸ்வீட்டி..." அவளோடு இருந்தால் அளவாக குடிப்பான், அவள் பாதுகாப்பில் அதிக கவனம் எடுப்பான்.. அதுவே சுவாதியை பித்து நிலை அடைய வைத்தது ..
"தெரியல நீங்க எங்க ஹையர் படிக்க போறீங்க நானும் வர்றேன் ..
"உனக்கு ஒரு ஆசை இருக்கும்லடி அது என்ன ?
"என் ஆசை உங்கள கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ளை பெக்கணும்.. அவ்வளவுதான் ..ஸ்ரீக்கு தொண்டையில் எச்சில் ஏறி இறங்கியது.. அதிகமாக உடலை அவஸ்தை ஆக்குறாள் ... தடுமாறும் வயது, தாண்டி விடு ,அவளுக்கும் எதிர்காலம் இருக்கு எனக்கும் இருக்கு .. காதல் அவசியம் அதைவிட அவளுக்கான எதிர்காலம் அமைச்சு கொடுக்க வேண்டியதும் அவசியம் என தன்னை அடக்கி..
"ரெண்டு போதுமா...
"ம்ம் அதுக்கு மேல பெக்க வேண்டாம் , அளவான குடும்பம்தான் அழகா இருக்கும் ..வேலைக்கு போக மாட்டேன் பாவா நம்ம பசங்க ,உங்கள கவனிச்சிக்கிறேன் " ஆசையோடு அவன் தோளில் சாய.. அவனும் சாய்த்து கொண்டான் தன் இணையை ..
"டிரைவர் வண்டியை நிறுத்து" என்ற மைதிலி குரலில் டிரைவர் நிறுத்த வீட்டுக்கு அருகே உள்ள தள்ளுவண்டி கடை பக்கம் ஸ்ரீயும் சுவாதியும் அமர்ந்து ஏதோ பேசி கொண்டு நிற்க , சுவாதி சாப்பிட்டு கொண்டு அவனுக்கும் ஊட்டிவிட..
"என்ன நடக்குது ஆறுமுகம் ?
"அது ரொம்ப நாளா போகுதும்மா..
"வாட் ?
"ஆமாம்மா மேடம்தான் ,அம்மாகிட்ட யாரும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க..
"ப்ச் பையன் யாரு??"..அவன் விவரம் சொல்ல முகம் சுளித்த மைதிலி...
"என்னது மிடில் கிளாசா?? இவளுக்கு ஏன் புத்தி இப்படி போகுது ச்சை ..அவன் கிட்ட பேசணும் நாளைக்கு ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லு" என்று கூறிவிட்டு போய்விட ..
நம்ம ஸ்ரீ , என்னைக்கு யார் சொல்லையும் கேட்டிருக்கான் அழைத்து விட, வர முடியாது தேவைன்னா என்ன தேடி வர சொல்லு என்று போய்விடடான்..
"தெரிஞ்சு போச்சா ஈசிதூசி ,அவ எனக்கு வேணும் சொல்லிட்டா போச்சு" என தோள் உலுக்கி கொண்டான்..
நாளை படிப்பு முடித்து ஆந்திரா போகிறான் ... இதுவரை தான் கூறாத காதலை அவளுக்கு கூறி..
உனக்கு எப்பவும் நான் இருக்கேன்டி என்று காதலை கூறி அவள் நெற்றியில் முதல் முத்தமிட ஆசை கொண்டான்..
ஆனால் நடந்ததோ வேறு!!
ஸ்ரீராம் புட்பால் விளையாண்டு கொண்ட நிற்க அவனைத் தேடி மைதிலி வந்தார்.. ஏற்கனவே சுவாதியின் ஃபோனில் இவரை பார்த்திருக்க விளையாண்டு கொண்டே என்ன விஷயம்? என்றான்..
"என் பொண்ண பத்தி பேசணும்..
"விஷயம் எல்லாம் தெரிஞ்சுதானே வந்திருப்பீங்க.. எஸ் அவள லவ் பண்றேன், எனக்கு ஸ்வீட்டி வேணும் நீங்களே தடுத்தாலும் ஐஞ்சு வருஷம் கழிச்சு வந்து அவளை தூக்கிட்டு போவேன்.. ஏதாவது தப்பா மூவ் பண்ண நினைச்சீங்கன்னா, என்ன பத்தி இந்த காலேஜ்ல விசாரிச்சு பார்த்துக்குங்க .. என்ன வேணாலும் பண்ணுவேன்.. உங்களுக்குத்தான் ஸ்டேட்டஸ், கெப்பாசிட்டி எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கும் .. நான் தர லோக்கல் இறங்கி அடிச்சா ஒரு பய கேட்க மாட்டான்.. "
" நான் சுவாதியை உனக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே ஸ்ரீராம்" என்றதும் அவன் கால்கள் ஒரு விசை நின்று மறுபடியும் பாலை தட்டியது..
"நல்லா படி, அவளையும் படிக்க விடு உங்க காதலுக்கு நான் எப்பவுமே எதிரி இல்லன்னு சொல்லிட்டு போகதான் வந்தேன்.. பெஸ்ட் ஆப் லக் ஸ்ரீராம் உன்னுடைய எதிர்காலத்துக்கு" என்று சிரித்தவர் சிரிப்பில் உண்மை இல்லையோ என்று அவனை யோசிக்க வைத்தது..
ஆம் !!அடுத்த நாள் மகேந்திரனை ஆந்திராவில் போய் சந்தித்த மைதிலி ..
"உங்களுக்கு உங்க மகன் வச்சித்தான் எதிர்கால கோட்டை கட்டி வச்சிருக்கீங்க போல ,அவன் வேணுமா இல்லை ..
"யார் நீங்க எதுக்கு வந்து மிரட்டுறீங்க"..ஆறுமுகம் விஷயம் கூற..
"படிக்க அனுபிச்சா காதல் பண்ணி இருக்கான்டி உன் மகன் .."
"வயசு தானுங்க அதுல என்ன தப்பு .."
"தப்புதான் அவன் படிச்சி முன்னேறி ஒரு நிலைக்கு வரணும்னு நான் கனவு காணாத நாள் இல்ல"
"ஆனா அவனுக்கும் ஒரு ஆசை இருக்குமே ..
"நீ வாயை மூடு ,உனக்கு என்ன தெரியும் ..மேடம் தப்புதான் ஆனா இனி அந்த தப்பு நடக்காது, எங்க தகுதி எங்களுக்கு தெரியும் உங்க பொண்ணுக்கு சொல்லி கொடுங்க "
"அதை பத்தி கவலை பட வேண்டாம் அவள,நாளைக்கே லண்டன் அனுப்ப போறேன் ..
"சந்தோஷம் ங்க செய்ங்க
"எப்படி செய்ய, உங்க மகனை கூட்டிட்டு வந்தாதான் அவளை அனுப்ப முடியும்.. போக மாட்டேன்னு அடம் பிடிப்பா , அவன் அவளுக்கு இல்லைன்னு தெரிஞ்சா வழியில்லாம போவா.."
"சரிங்க நானே வந்து அவனை கூட்டிட்டு வந்திடுறேன்.."
"குட் , அப்பறம் போன் பேசுறது பார்க்க போறது"..
"இதுக்கு எல்லாம் நேரம் இருக்காது, நான் கொடுக்கவும் மாட்டேன் ..
வெரி குட் மிக்க நன்றி என ராதிகா கையில் பணத்தை கொடுக்க
"நாங்க யாருகிட்டையும் பிச்சை எடுக்கறது இல்லை" என்று சிவகாமி பிடிங்கி மைதிலி கையில் திணித்து விட்டாள்..
"ம்ம் ஸ்ரீ உங்க போலவே காரம் "என சிரித்து கொண்டு வந்தவர் மகளிடம் லண்டன் போ என்க..
"நான் போகல போக மாட்டேன், நான் ஸ்ரீ பாவா படிக்கற காலேஜ்தான் போவேன் அவர லவ் பண்றேன் " என் அடமாக நிற்க...
"ப்ச் அவன் உன்ன லவ் பணணவே இல்ல சுவாதி, லவ் பண்ணி இருந்தா உன்கிட்ட சொல்லாம ஊரை காலி பண்ணி போவானா?" ..
"என்ன ?
"ம்ம் நாளைக்கு போறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு இன்னைக்கே ஸ்ரீ கிளம்பி போறான்..இனி உன்பக்கமே திரும்பி கூட பார்க்க மாட்டானாம்.. நீதான அவன லவ் பண்ற, அவன் உன்ன லவ் பண்ணல தான, அவங்க அத்தை பொண்ணு கம்பெனியை டேக் ஓவர் பண்ண போறான் போல.. அவளைத்தான் கல்யாணம் கூட பண்ண போறானாம் .. அடுத்த மாசம் கல்யாணம் இருக்கும் போல ,"இதுவரை காதலை அவன் சொன்னது இல்லையே சிறு பெண் பயந்து நின்றாள் மகள் முகமாற்றம் பார்த்து கொண்டே கூறிட..
"நோ ஓஓஓஓ பாவா அப்படி பண்ண மாட்டார் "என பைக்கை எடுத்து கொண்டு ஓடினாள் ..
"அண்ணா ஸ்ரீ எங்க ??
"அவன் அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டார் ம்மா
"எங்க
"ஊருக்கு, பஸ் ஸ்டாப் போய் தேடு" ..பதட்டத்தில் பஸ் ஸ்டாப் போனாள்...
ஸ்ரீயை காரணம் கூறி அழைக்க முடியாது என அறிந்த மகேந்திரன்.. சிவகாமிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூற.
" அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னா நீ என்ன இங்க பண்ற? பதில் கேள்வி கேட்க
" நான் வேலை விஷயமா வந்தேன், இப்பதான் போன் வந்தது ,அதான் உன்னையும் கூட்டிட்டு போக வந்தேன் என்று மகனை நம்ப வைத்து அழைத்துக்கொண்டு சென்று விட்டார் ..
அவனுக்கு தாய் என்றவுடன் சரி, இரண்டு நாள் கழித்து வந்து கூட ஸ்வீட்டியை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து பஸ்ஸில் ஏறி விட்டான்.. பேருந்து நிலையத்தை விட்டு பஸ் வெளியே கிளம்ப.. ஸ்ரீ ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தான்.. மனம் முழுவதும் ஸ்வீட்டியின் பக்கத்தில்தான் இருந்தது.. நாளைக்கு வருவேன் பாவா என் கிட்ட சொல்லாம போயிடாதீங்க என்று கண்ணீர் கட்டி பேசிய ஸ்வீட்டியை நினைத்து தலை சாய்த்து உட்கார்ந்திருக்க சிக்னலில் நின்ற ஸ்ரீயை சுவாதி பார்த்து விட்டாள்..
" பாவா" என்று உரக்க கத்த சுவாதி குரல் ஸ்ரீயின் காதை அடையவும்.. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்க்க .. சைகை காட்டினாள்..
உடனே எல்லாம் மறந்து ஸ்ரீ எழும்ப போக.. தகப்பன் அவனை பிடித்து அமர வைத்தவர்
" பாரு ஸ்ரீ உன்னுடைய எல்லா வேலையும் எனக்கு தெரியும் , உன்ன பத்தி நான் எவ்வளவு கனவு கண்டு வைத்திருக்கிறேன் என்று உனக்கு தெரியாது.. நீ நல்லா இருக்கணும்னு நினைச்சுதான் ஒவ்வொரு செயலையும் நான் செஞ்சேன் , இப்ப மட்டும் நீ அந்த பொண்ணு பின்னாடி போனேன்னு வை , அதுக்கு பிறகு உனக்கு எதிர்காலமே இல்லாம போயிடும் .. அவங்க எல்லாம் ஸ்டேட்டஸூக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க .. எனக்கு என் மகன் வேணும் அவன் நல்லா இருக்கணும், நான் சுயநலமான தகப்பனாகவே இருந்துக்கிறேன் போகாத என்று அமர வைக்க ..
"போய்யா நீயும் உன் எதிர்காலமும், எனக்கு எதிர்காலமே தேவையில்லை என்று எழும்ப போனவனை, இவர் நகர விடாது தடுக்க.. அதற்குள் பேருந்து நகர ஆரம்பித்துவிட்டது, மறுபக்கம் சிக்னல் போட்டதை கவனிக்காமல், ஸ்ரீயை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்ட ஆரம்பித்தவள்.. இரண்டு பக்கமும் பேருந்தும் லாரியும் மாற்றி மாற்றி வர .. அவள் கவனம் முழுவதும் ஸ்ரீயின் பக்கத்திலேயேதான்.. எப்படியாவது அவனிடம் போய் விட வேண்டும் என்று வண்டியை தவறான பக்கத்தில் அவனை நோக்கி செலுத்த..
நடக்கப் போகும் விபரீதம் அறிந்து ஸ்ரீ ஓடி வந்து குதிக்கவும் ...அவன் முன்னால் இரத்தத்தோடு சுவாதி வந்து விழவும் சரியாக இருந்தது
" பாவாஆஆஆஆஆஆ "என்று அவனை நோக்கி கையை நீட்டி கொண்டே
"பாவா
"பாவா என்றவள் கையசைத்து அவனை அழைக்க, கண்கள் நிலைகுத்த ஸ்ரீ அவளை பார்த்தான் ..
"பாவாஆஆஆஆஆஆஆஆஆஆ ....
"ஸ்வீட்டி இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்று பதறி போய் அவளை தூக்க போக..
"ஸ்ரீ வா பிரச்சனை ஆகிட போகுது .போலீஸ் கேசுன்னு ஆனா உன்னால மேல படிக்க முடியாம போயிடும்: என்று மகேந்திரன் பதறி அவனை பிடிக்க
"யோவ் விடுய்யா, என் ஸ்வீட்டி" ... அவரை தள்ளி விட்டுவிட்டு ஓடி வர ..அவன் கையை எட்டி இறுகி பிடித்தவள் தலை தொங்கி, சுயநினைவு மறந்து கண் மூடி விட்டாள்..
கண் முழித்த ஸீவிட்டிக்கு குறுகிய கால நினைவுகள் மட்டும் மறந்து போயிருக்க.. அதில் அவள் ஸ்ரீராமும் அழிந்து போயிருந்தான்..அந்த ஆக்ஸிடெண்ட்டில்தான் அவள் மூளையில் ரத்த கசிவாகி அது கட்டிபோல் மாறி அடைத்து கொண்டது அதை கவனிக்காது விட்டுவிட்டார்கள் ..
ஸ்ரீ விடாது அவளை பின்னால் துரத்தினான் பிரையோஜனம் இல்லை , சுவாதிக்கு அவனை அடையாளம் கூட தெரியவில்லை ...
"நான் படிக்கணும் , நான் நல்லா இருக்கணும்னு நினைச்சு தானய்யா என்ன பிடிச்ச.. நான் உன் கண்ணு முன்னாடியே உருப்படாம போறேன் "என்று ஏட்டிக்கு போட்டி செய்ய ஆரம்பித்தவன், சுவாதி யாரோ போல் பார்வை வலிக்க வைக்க .. எப்படி அவளிடம் தன் காதல் புரிய வைக்க என தெரியாது அவளை வழி மறிக்க பேச டிரை செய்ய எல்லாம் ராங்காவே போக..
பொறுக்கி பய மறுபடி வந்த போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன் என மிரட்ட சிரிப்பு தான் வந்தது
அவளுக்கு அன்று பிடித்த பொறுக்கி இன்று பிடிக்காது போக... பாரின் போக மாட்டேன் என மறுத்த சுவாதியை ,ஸ்ரீ அவள் பின்னாடி சுற்றுகிறான் என கேள்வி பட்டு மைதிலி அதட்டி உருட்டி பாரின் அனுப்பி வைத்து விட்டாள்..படித்து வரட்டும் என்று ஸ்ரீ அவளை விட்டு சற்று விலகினான் .. அவளுக்கு தனிமை தன்னை நினைவு படுத்தும் என்று .. இரண்டு வருடம் உத்தரபிரதேசத்தில் வினய்யோடு தங்கி இருந்தான் .. அவள் வந்தது அறிந்து மறுபடி அவளை தேடி வர.. இங்கு நடந்த நிகழ்வுகள் மொத்தமாக அவனை உடைத்து விட்டது.. வீரோடு காதல், திருமணம் என கேள்வி பட்டு அவளை தூக்கிட்டு வந்துட வேண்டியதுதான் என ஸ்ரீயும் வினய்யும் கிளம்ப..
"பாவம் சுவாதி பொண்ணு விஷத்த குடிச்சி செத்துருச்சி "என்று வெறுமையாக கிடந்த கல்யாண மண்டபத்தில் இருவர் பேச ..பதறியது இதயம்.. மணமேடையில் கசங்கி கிடந்த காகிதத்தை எடுத்து பார்க்க , அவள் இறுதியாக எழுதிய கடிதம்
"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ உனக்காக நான் இருக்கிறது எப்படிடி மறந்த, எப்படி மறந்த இந்த பாவா ஏன்டி உனக்கு நியாபகமே வரல "என்று துடித்து கேரளா செல்ல, அவள் இறந்து போனதாகவே மைதிலி கூறி சங்கு ஊதி காதலை முடித்துவிட்டார் ..
"சாரி தம்பி என் பொண்ண நானே கொன்னு".... ஹக் என இதயத்தை பிடித்து கொண்டு விழுந்தார்... மகளுக்காக எதையும் செய்ய வேண்டும் என்று திருந்திய மைதிலி, அவள் காதலுக்கு அவர் அறியாது மூடு விழா நடத்தி விட்டார்..
அவள் உணர்வுகளை கொன்று விட்டேன், அவள் மகிழ்ச்சியை கொன்று விட்டேன் என கூற நினைத்தவர், அதற்கு மேல் மகள் தன்னைவிட மொத்தமாக விலகி போய் நிற்பதை தாங்க முடியாது மூச்சை நிறுத்தி விட...
தன் ஸீவிட்டியை இதய கூட்டில் நிரந்தரமாக வாழ வைத்துகொண்டு ஊர் வந்து சேர்ந்தான்...
சுவாதிக்கு வீர் பிடிக்க காரணம்..
"முதல் பார்வையில் ஸ்ரீயை போல நாய்க்குட்டியை தடவி கொடுத்த வீர் யாரையோ நியாபக் படுத்தினான்.. சிகரெட்டை இழுத்து கொண்டு படியில் ஏறும் வீர் அவளை ஈர்த்தான்... காரணம் அவள் ஸ்ரீ இன்னும் உயிரோடு உறவாடி ஊசலாடி கொண்டிருந்தான்.. முகம் தெரியாத அவனை வீர் உருவத்தில் கண்டாள் ... அன்று தன் மூளை மரத்து நின்றவேளை வீர் வீர் என கையசைத்து அழைக்கும் போது கடைசி வரி அவள் வாயசைத்தது பாவா!! என்றது யாரும் பார்த்திருக்க வாயப்பு இல்லை ...
தன் ஸ்ரீ முகம் மின்னி மறைய கண் மூடினாள் ... ஒரு காதலை விட்டவள் மறுபடியும் ஸ்ரீயை விடமுடியாது வீர் உருவத்தில் அவள் காணும் ஸ்ரீயை துரத்தி இம்முறையாவது காதலை அடைய நினைத்து ஓட்டத்தை நிறுத்தி விட்டாள் ..கோமா நோயாளி மறுபடியும் எல்லாத்தையும் மறந்துட்டாளா மொத்தமா முடிஞ்சு ..
ஸ்ரீ என்று அவளை இங்கே பார்த்தானோ அதிர்ச்சி உயிரோடு இருக்காளா ? எப்படி என் கண்ணில் விழாது போனாள் அவள்தானா இவள்? என உற்று பார்த்தான்.. அவளேதான்!!
"எனக்கு இவர பிடிக்கலை" என்று கூற..
"அடிங்க செருப்பால இந்தவாட்டி உன்ன விட்டா பார்போம்டி , அது எப்படி இந்த பாவா மறந்து போறேன்னு பாப்போம் "என்று தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டான் .. அவள் ஆந்திரா விட்டு ஓடியது தெரியும் ..
போ, போ பின்னாடி வந்து தூக்குகிறேன் என நேரம் பார்த்து தான் அங்கே போனது .. சும்மா ஷாக் ரியாக்ஷன் கொடுத்து கல்யாணமும் பண்ணிட்டு வந்துட்டான் ...
அவள் காதல் எப்போதும் ஸ்ரீக்கானது ...
ஆனால் என்ன காலநிலைகள் அவளை உணர விடாது , ஸ்ரீயை அடையாளம் காண முடியாது ஆக்கி விட்டது ... இதோ அவள் பழைய காதலை தட்டி எழுப்பி கொண்டிருக்கிறான்..
அவனுக்கு தேவை அவள் காதல் மட்டுமே ...அவன் ஸீவிட்டி மட்டுமே ...
அவன் ராமன் என்றால் அவனை மட்டுமே மனதில் சுமந்து வாழும் அவள் சீதைதானே!!
இந்த பகலவனின் பனிமலர் எப்போதும் அவளே!!!