பகலவன்8
Pani8

8 பகலவனின் பனிமலர் அவளோ??
பிரேக் போட்டு நின்ற தினுசில் நச்சென்று ஸ்ரீ முதுகில் மோதி சுவாதி கண்களை முழிக்க.. அவன் வீடடு வாசலில் வண்டி நின்றது..
"அச்சோச்சோ தூங்கிட்டேன் போலயே "என மணியை பார்க்க நெஞ்சை பிடித்தாள் மணி இரவு பத்து ..
கடவுளே!! அப்ப வரவேற்பு??
"கோவிந்தா கோவிந்தா" என்று சிரித்தான்.. சுவாதி எட்டி வீட்டை பார்க்க வாசலில் தலையில் கைவைத்து சிவகாமி அமர்ந்திருக்க.. அவர் மடியில் அழுது கொண்டு ராதிகா படுத்திருக்க .. சாய்வு நாற்காலியில் மகேந்திரன் சாய்ந்து கண்களை மூடியிருக்க, சுவாதிக்கு அழுகை கண்கள் தாண்டி விட்டது..
"ஓகே பொண்டாட்டி குட் நைட், நாளைக்கு சந்திப்போமா?? இந்த நாள் இனிய நாளாக, ஸ்ரீயின் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய் என்று கையாட்ட..
"ஏன் இப்படி பண்ணுணீங்க இப்ப எப்படி அவங்க முகத்தில முழிப்பேன்..
"நான் என்னடி பண்ணினேன் , ஆனா ஊனான்னா என்னையே எல்லாரும் குறை சொல்றீங்க .. நீ தூங்கிட்டு என்ன குறை சொல்ற..
"உங்களுக்காக காத்திருந்து டயர்ட் ஆகி தூங்கிட்டேன் .. தூங்கினா எழுப்பி விடலாம்தான, ஏழு மணிக்கு வரவேற்பு இருக்குன்னு அத்தை ஆயிரம் தடவை சொல்லி அனுப்பிவிட்டாங்க என்னால அவங்களுக்கு அசிங்கமா போச்சி ப்ச்..
"நீ கும்பகர்ணி போல தூக்கிட்டு, எழுப்பி விடு, தூங்க வைங்கிற.. எழுப்பி பார்த்து, முடியாம நான் பெட்ரோல் பல்க்ல போய் கடனுக்கு பெட்ரோல் போட்டுட்டு ஊரை சுத்தி சுத்தி வர்றேன் , தெரியுமா? "அவன் சொல்வது அத்தனையும் பொய் என சுவாதிக்கு தெர்யும் .. இந்த வரவேற்பை நடக்க விட கூடாது என திட்டமிட்டே அவளை காக்க வைத்து வந்திருக்கிறான் தூங்கவில்லை என்றாலும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்க மாட்டான் என அவன் எள்ளல் பார்வை கூற..
"நீங்க வேணும்னே பண்ணி இருக்கீங்க ஸ்ரீ ? அவள் கையை திருகி பிடித்த ஸ்ரீ..
"ஸ்ரீயா பல்லை உடைச்சிடுவேன் ..பாவா சொல்லுடி"
"சாரி சாரி விடுங்க வலிக்குது, இனி சொல்ல மாட்டேன்
" அது!! ஆமாடி வேணும்னுதான் பண்ணினேன் ,அப்படிதான் செய்வேன் .புருஷன் இல்லாம வரவேற்பு வச்சா நீயும் சரின்னு போய் மேடையில உட்காருவியா , அவர் வரட்டும், இல்ல எனக்கு இது வேண்டாம்னு சொல்ல தெரியாது.. அப்ப அனுபவிக்கதான் செய்யணும் அனுபவி.. "வரவேற்பு வச்சது தப்பா அவனை கூப்பிடாம வச்சது தப்பா, இரண்டுமே அவனை பொறுத்தவரை தப்புதான் .. கூப்பிட்டாலும் துரை வர முடியாதுதான் சொல்லுவார்..
"ஓகே ஸ்வீட்டி தூக்கம் கண்ணு கட்டுது.. காலையில வெயிட் பண்ணு வர்றேன் ...
"ச்சை ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க.. இந்த மாதிரி குடும்பம் எல்லாம் எல்லாருக்கும் அமையாது .. உங்களுக்கு கிடைச்சிருக்கு , ஆனா நீங்க உதாசனம் பண்றீங்க.. ஒவ்வொருத்தர் மனசையும் எவ்வளவு உடைக்க முடியுமோ .. வலி கொடுக்க முடியுமோ .. அவ்வளவு கொடுக்குறீங்க.. நீங்க இவ்வளவு கொடுத்த பிறகும் என் மகன் , என் அண்ணன்னு உங்களை விட்டுக் கொடுக்காமதான் வீட்ல உள்ளவங்க பேசுறாங்க .. ஸ்ரீ கைகள் அவள் பேச பேச ஆக்சலேட்டர் வேகம் கொடுத்து திருப்பினான் வந்து மாமா கிட்ட மன்னிப்பு கேளுங்க அந்த பெரிய மனுஷன் மனசு என்ன பாடுபடும் ..
"அடிங்க தொங்கனா கொடுக்கு , யாருகிட்ட மன்னிப்பு கேட்க சொல்ற , 32 பல்லும் தெறிச்சிடும் பார்த்துக்க.. உன் வாத்திச்சி வேலையெல்லாம் ஸ்கூலோட முடிச்சுக்க.. இங்க வந்து என்கிட்ட பாடம் எடுத்த பக்கோடா சாப்பிட பல்லு இருக்காது" சுவாதி ஆடிப் போனாள் அவன் காட்டு சத்தத்தில் .. கொஞ்சம் வந்த தைரியம் பின்னங்கால் பிடிறி அடித்து ஓடியது .. அவள் தைரியசாலி துணிச்சல் உள்ளவள்தான் மாற்று கருத்து இல்லை ஆனால் இவன் முன் போராடும் அளவு துணிச்சல் மிக்கவள் இல்லை .. யானையோடு போராட்டம் நடத்தலாம் அவ்வளவு ஏன் சிங்கத்திடம் கூட சண்டை போடலாம் ஆனா இது குரங்கு பிராண்டி வச்சிடும்..
"நான் இப்படித்தான் இருப்பேன், இஷ்டம் போலதான் பண்ணுவேன் .. உன்னால பல்ல கடிச்சுக்கிட்டு இங்க இருக்க முடியும்னா? இரு, இல்லையா கிளம்பி போயிட்டே இரு.. உன்ன வான்னு நான் கூப்பிடல .. நீதான் வந்து உட்கார்ந்து இருக்க,அதை மனசுல பதிய வச்சிக்க.. இன்னொருவாட்டி எனக்கு நின்னு உபதேசம் பண்றது, இப்படி பண்ணு அப்படி பண்ணுன்னு ரூல்ஸ் போடுற _யிர் எல்லாம் வச்சிக்காத ..." அவள் முகம் சுருங்கி போய் தலையாட்ட...ஸ்ரீ சட்டென்று அவள் இடுப்பை வளைத்து தன்னோடு நெருக்கி பிடிக்க..
"என்ன பண்றீங்க??" பதறி போனாள்.. ஊர் அடங்காத வேளை இவன் பண்ணும் வேலையில் அவளுக்கு கைகால் கிடுகிடுவென ஆடியது..
"என்ன பண்ணினேன் , என் பொண்டாட்டியை கட்டி புடுச்சா தப்பா ?"கிட்டதட்ட அவன் தொடைக்கு மேல் தூக்கி வைத்து பிடித்திருந்தான் ..
"ப்ளீஸ் இறக்கி விடுங்க, யாராவது பார்த்துட போறாங்க
"அப்ப பார்க்கலைன்னா ஓகேவா ஸ்வீட்டி??... அவள் அறியும் முதல் ஆண் அருகாமை, மனதில் உதற வைத்தது .... ஸ்ரீயின் உதடு அவள் சங்கு கழுத்தில் ரசவாதம் வதம் செய்ய
"ப்...ளீ..... ஸ்இஇஇ" அவன் நின்ற இடம் மதிலுக்கு அப்புறம் அவள் நின்றால் தலை தெரியும், ஸ்ரீதான் அவளை மடியில் தூக்கி வைத்து விட்டானே...
"ஆள் இல்லாம இருந்தா, இதே மாதிரி என்கூட இருக்க ஓகேவா ?அடாவடி குரல் இல்லாமல், கிசுகிசுத்து கரகரப்பும் சேர்ந்து வர..நெளிந்து அவனை விட்டு இறங்க பார்க்க..
"ப்ச் இருடி பேசிட்டு இருக்கேன்ல" என அவள் பின்னழகு மென்மெத்தை பிடித்து நசுக்க..
"ஹக்" அதிர்ந்து ஸ்ரீயை பார்க்க, காலையில் புருவத்தை தூக்கி இறக்கியது போல் செய்து..
"என்னடி??" என்று அவள் இடை சேலையை சற்று கீழிறக்கி, தன் விரலால் அழுத்தி கசக்கி, சுற்றி ஒரு ரவுண்ட் கண்ணால் பார்த்தவன், மாடியில் தலை தெரிய..
"ஓசி சீனுக்கு அலைவான்க" குனிந்து ஒரு கல்லை எடுத்து மாடி நோக்கி வீச..
"அய்யோ!! மண்டை போச்சு" என யாரோ அலறும் சத்தம் கேட்டது.. இவன் குனியும் போது சுவாதி மொத்தமாக அவன் உடலுக்குள் நுழைந்து நசுங்க ஸ்ரீயின் மேல் படர்ந்தது போல் ஆகி போனது.. அவளுக்கு பயத்தை விட புதிதாக ஆண் தீண்டல் உதற வைக்க , அவன் நிமிரவும் சுவாதி குதித்து இறங்கி ஓட போனவள் , சேலையை சட்டென்று பிடித்து இழுத்து தன் பக்கம் கொண்டு வந்தவன்.. சுவாதி பதறி சேலையை பிடிக்க.. ஸ்ரீயோ அவள் கன்னத்தை தாங்கி பதட்டம் இல்லாது , பயம் கொள்ளாது அவள் வென்புறா கண்கள் அலைவதை பார்த்து கொண்டே , சுவாதியின் கீழுதட்டை மெல்ல கவ்வி இழுக்க...
"ம்மாஆஆஆஆஆ" மறுத்தவள் .. கைகள் ஸ்ரீ கைக்குள் அழுத்தப்பட , அவள் உடல் ஸ்ரீ உடலோடு அணைக்கப்பட.. இரண்டு இதழையும் அவள் மறுப்பு அடக்கி கொண்டே சுவைத்து உறிஞ்ச ஆரம்பித்தான்.. சுவாதி தவித்து அடங்கி அவன் கை விரலை நெருக்க.. ஸ்ரீ அவள் திமிறல் குறைய, பிடித்திருந்த கையை விட, சுவாதி அவன் விரலை பிடித்துகொள்ள.. வந்த தேனை விட மனம் இல்லாது சப்பி சப்பி இழுத்து குடித்தவன் இடது கை ,அவள் இடுப்பு நோக்கி இறங்கி இதழின் இசைக்கு ஏற்ப மெல்ல அழுத்தி அழுத்தி அடிவயிறு தேடி விரலை நுழைக்க. சுவாதி உடலில் மயிர்க்கால்கள் அவன் தீணடலில் சிலிர்த்து அடங்க.. அடிவயிற்று சதையை தடவி கொண்டே ,அவள் நாவினை கொக்கி போட்டு சப்பி கொண்டான்... இதுதான் முத்தம் என முதல் முறை அறிந்தவள் புழுவாக நெளிந்து விடுபட முயன்று, தோற்று அவன் உடலோடு உலோக உருண்டை பிதுங்க சாய்ந்து கொள்ள, ஸ்ரீயின் இசைவு அதிகமாகி மனைவியை தனக்கே தனக்காக எடுத்து கொள்ள கைகள் அத்துமீறி சேலை நடுவே தாழைப்பூ தேடி முட்டி மோத ..அவன் கைமீது தன் கைவைத்து தடுத்த சுவாதி கண்களால் இறைஞ்ச.. சின்னதாக அவள் நாவை கடித்து விட்டவன்.. வியர்த்து வடிந்த மனைவி கன்னத்தில் முகத்தை வைத்து தேய்த்து, அவள் வியர்வையை தன் முகத்திற்கு மாற்றி கொண்டவன்.. ஓட போனவளை பிடித்து நிறுத்தி
"இப்படியே போக போறியாடி? என்று வழுவி கிடந்த சேலையை பார்க்க .. சட்டென்று திரும்பி நின்னு சுவாதி இழுத்து மூட..
"இன்னும் கொஞ்ச நாள் மூடிக்க.. அது உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது, நல்லா தூங்கி எழும்பி வா' என்றவன் மறுபடியும் அவளை இழுத்து இச் இச் என உதட்டை கவ்வி விட்டவன்..
"பார்த்து சேலை கட்டிடி.." அவள் இப்போ நடந்த எதுக்கும் அர்த்தம் புரியாது நிற்க
"ஆம்பள பையன் மனச காட்டி, உரசி கெடுத்துட்ட பின்னாடி ____ நசுங்க சாஞ்சிட்டே வந்தா, மனசு தடுமாறும்ல , எனக்கு கொஞ்சம் ஓவரா தடுமாறிடுச்சி" என்றவன் அவள் இடையில் தன் காதல் வன்மத்தை காட்ட நினைத்து , பைக்கில் இருந்தபடியே குனிந்து அவள் சேலை நகட்டி பச்சக் என கடித்து அவளை ஒரு சுற்று சுற்றி நகர்த்தியவன் ..
"காலையில பெட்ரோலுக்கு காசோட வா, நான் காலேஜூக்கு கூட்டிட்டு போறேன் ," பறக்கும் முத்தம் அந்த தெரு முக்கு திரும்பும் வரை கொடுத்து கொண்டே போக..
ஸ்ரீ நடவடிக்கை யாருக்கு புரிந்தது, இவளுக்கு புரிய பக்கி அடிச்சு போய் வாசலில் நின்றாள் ..
வெகுநேரம் ஸ்ரீ கொடுத்த முத்த அதிர்ச்சி தாங்காமல் வாசலிலேயே நின்றவள்.. உள்ளே மகேந்திரன் இருமும் சத்தம் கேட்டு , தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே போனாள்.. அவளை பார்த்ததும் ராதிகா முகத்தை சுருக்கி
"உங்களால வர முடியாது, அவன் பேச்சதான் கேட்பேன்னு சொன்னா , எங்ககிட்ட முதலிலேயே சொல்லிருக்க வேண்டியதுதானே.. நாங்க சொன்னது எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு ,சொந்தக்காரங்க முன்னாடி எங்க அம்மாவும் அப்பாவும் எப்படி அவமானப்பட்டு நின்னாங்கன்னு தெரியுமா?
"அது
'நீங்க வருவீங்கன்னு காத்திருந்து , போங்க அண்ணி .. நீங்களும் அவனைப்போலவேதான் அவனுக்குதான் வேலையே எங்க அம்மாவையும் அப்பாவையும் அழ வைக்கிறது.. நீங்களும் இப்ப அவன் கேட்டகிரில சேர்ந்துட்டீங்க அப்படித்தானே .. அதுசரி புருஷன் மாதிரிதானே பொண்டாட்டி இருப்பீங்க.. "
"ராதிகா அண்ணிகிட்ட போயி என்ன பேசிட்டு இருக்க.. அவ உனக்கு அண்ணி ,உள்ள போ " என்று சிவகாமி மகளை பிடித்து வாங்க ராதிகா எழும்பி உள்ளே போய்விட்டாள் ..
முதல் நாளே இப்படி அவமானம் ஆக்கிவிட்டானே என்று முத்தத்தின் சுவையை கூட உணர முடியாமல் , எல்லோரும் தன்னை குற்றவாளி போல் பார்ப்பதில் தானாக தலை குனிந்தாள்..
"சாரி மாமா அவர் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பார்க்கல, "
"இனிமே எதிர்பார்த்துக்க .. அவன் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாதே பழமா பேசுவான் .. பேசிட்டு அவனுக்குன்னு ஒரு ரூட் வச்சிருப்பான் ..அது புடிச்சுதான் போவான்.. இனிமே கொஞ்சம் கவனமா இரு , போய் ரெஸ்ட் எடு" என சிவகாமி மருமகளை உள்ளே அனுப்பினாலும் .. அவர் குரலில் காலையில் இருந்த அந்த அன்பும் அக்கறையும் சற்று குறைந்து இருந்தது ..
"சரி அத்தை" என படுக்கையில் போய் விழுந்தவளுக்கு ஸ்ரீ உடனான ஒவ்வொரு நொடி வாழ்க்கையையும் நினைத்து பயத்தை கொடுத்தான்.. அதையும் தாண்டி மெல்லிய சிவப்பு அவள் முகத்தில் எதிரொலித்தது ..பேச்சில் வன்மை, தொடுகையில் மென்மை.. வார்தையில் கடினம்.. அவன் அணைப்பு வலியின்றி இருந்தது .. பார்வைகள் சுட்டது, முத்தம் தித்திக்க வைத்தான்.. அடாவடி கணவன் ,அழகான காதலன்!
அவன் அறையை சுற்றி பார்த்தாள், ஸ்ரீராம் போட்டோ அவளுக்கு எதிர்புறம் கிடந்தது .. பெருமூச்சு விட்டு அவனை பார்த்தாள் .. அவனும் நிழலாக நின்று சுவாதியை பார்த்து புருவத்தை உயர்த்தி அவன் டிரேட் மார்க் செய்கை செய்ய.. நிழல் கூட அதிரடி கலவரம் பண்ண கண்களை சிக்கென்று மூடி தூங்க முயற்சித்தாள் ... எதிர்காலம் தெரியாத வாழ்க்கை தூக்கத்தை கெடுத்தது..
கால் வைத்தது முள்ளாக இருந்தால் அதை முள் என்று பிடுங்கி அப்புறப்படுத்து விடலாம் .. இவன் முள்ளா? பூவா ?என்று தெரியாமல் திணறினாள்
ஸ்ரீராம் முள்ளில் முளைத்த குறிஞ்சிப்பூ !!
அவன் அன்பும், பாசமும் ,காதலும் கிடைப்பது அரிதிலும் அரிது.. ஆனால் கிடைத்துவிட்டால் அந்த அன்பின் ரூசி அலாதி என்பது தெரியும்...
வேற வழியில்லை ஆத்தா நம்ம ஹீரோவுக்கு அப்படி இப்படி சொல்லி முட்டு கொடுத்தாதான் உண்டு ..