தீ தித்திக்கும் தீ 1-7

தீ தித்திக்கும் தீ
அத்தியாயம்-1
மொபைலில் அலாரத்தின் சத்தம் கேட்டதும் எழும்பி பார்த்துவிட்டு "ஐயோ காலேஜ்க்கு நேரமாகிட்டே” என்று தலையில் கை வைத்தவள், எழுந்து குளித்து முடித்துத் தயாராகி வந்து மணியைப் பார்க்க அது காட்டியது காலை மணி எட்டு முப்பது என்று... உடனே கீழே சென்று, அவசர அவசரமாகச் சாப்பாட்டை டைனிங்க் ஹாலில் நின்று கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஷன்மதியிடம் "என்னடா இவ்வளவு வேகமாகச் சாப்பிடுற, இருந்து சாப்பிடேன்...வா டாடி ஊட்டிவிடுறேன்" என்றழைத்தான் ஷ்ரவன்.
“இல்லை டாடி நீங்க நிறைய நிறையை ஊட்டிவிடுவீங்க விழுங்க முடியல...எனக்காக விஷ்ணு காத்திட்டிருப்பான், பை டாடி” என்று அவனது கன்னத்தில் முத்தம் வைத்தவள்...
“உங்க பியூட்டி வர்றதுக்குள்ளாக நான் போயிடுறேன்...
இல்லைனா வண்டியில் போகவிடமாட்டாங்க " என்றவள் தனது பேக்கை மாட்டிக்கொண்டு அவசரமாக வெளியே ஓடிவந்து தனது என்பீல்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணவும், வீட்டினுள்ளே இருந்து அவளது தாய் ஹரிதா ஓடிவருவதற்குள் வண்டி எடுத்துக்கொண்டு போய்விட்டாள்...
ஹரிதா கோபத்தில் சிறிது நேரம் பார்த்து நின்றவள்...உள்ள வந்து தனது கம்பனிக்குச் செல்வதற்குத் தயாராகி வந்த ஷ்ரவனிடம் "எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான், என்ஃபீல்டு வண்டியை இன்றைக்கு எடுத்திட்டு போயிருக்கா..
என்ன பண்ணிவைக்கப்போறாளோ?" என்று அவனிடம் கோபத்தைக்காட்டினாள்.
அவளது கணவன் ஷ்ரவனோ, அவளின் தோளைப்பிடித்து இருக்கையில் அமர்த்தியவன் “நீ இவ்வளவு பதட்ட படுறளவுக்கு, அவ எனக்குச் சின்னப் பிள்ளையா? என் பொண்ணு இந்த வருட படிப்பை முடிச்சிட்டானா...வக்கீல் தெரியுமா, அவளைப் பார்த்து நீ டென்ஷன் ஆகாம என்கூடக் கிளம்பி வர்ற வழியைப் பாரு” என்று அவளைச் சமாதானப்படுத்தினான்...
ஷ்ரவன்- ஹரிதா தம்பதியருக்கு இரு பிள்ளைகள் ஷன்மதி மற்றும் ஹரிஷ்.
பெரியவள் ஷன்மதி எல்.எல்.பி படிக்கிறாள். அவளுக்கு நான்கு வருடம் இளையவன் ஹரிஷ் இப்போதுதான் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கின்றான்...
தேவானந்த் - நிருபமா தம்பதியின் இளையமகன்தான் ஷ்ரவன். அவர் புகழ்பெற்ற பிஸ்னஸ் மேன். ஷன்மதி பத்து வயதில் இருக்கும் பொழுது தேவானந்த் இறந்துவிட்டார்.
அவர் இறப்பிற்குப் பின் அவரது மனைவியான நிருபமா சொத்துக்களைப் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து அளித்து விட்டார். மூத்தவள் அக்ஷராவுக்கும், இளையவள் மேகாவிற்கும் அவரவருக்கு உள்ள பங்கை கொடுத்து போக மீதம் இருக்கும் தொழில்கள் அனைத்தையும் ஷ்ரவன் பார்த்துக் கொள்கிறான்.
ஷன்மதி பிறந்ததிலிருந்தே வீட்டிலிருக்கும் எல்லாருடைய செல்லப்பிள்ளை... அதுவும் குறிப்பாக ஷ்ரவனின் செல்லம் மகளுக்கு அதிகம்.
அதனால்தான் அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவான். அவளுக்குப் பைக் ரைடிங் என்பது மிகவும் ஒரு பிடித்தமான விஷயம் ...அதனால் விதவிதமாகப் பைக் வாங்கிக் கொடுத்திருக்கான்.
ஹரிதா தான் தலையிலடித்துக்கொள்வாள்,
“பெண்பிள்ளைக்கு எதுக்குப் பெரிய பெரிய பைக் அதுவும், ஆம்பளை பசங்க ஓட்டுறது வாங்கிக்கொடுக்கறீங்க என்று கண்டித்தாலும், ஷ்ரவனுக்கோ மகள் விசயத்தில் யார் சொல்வதும் அவனது காதுக்குள் செல்லாது...
ஆனால் ஹரிதாவிற்கோ ஷன்மதி குணம் தெரியும், ஆதலால் அதை அனுமதிக்க மாட்டாள். அதனால்தான் ஹரிதா வருவதற்குள் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள் ஷன்மதி...
இப்போது ஷன்மதி நிற்குமிடம் அவளது உயிர் தோழன் வீட்டிற்கு முன், அஜய்-காவ்யாவின் முதல் பையன், அவனுக்கு ஒரு தம்பியும் தங்கையும் இருக்கின்றனர். ஷன்மதியுடன் தான் லா படிக்கின்றான்...
விஷ்ணுவின் வீட்டிற்கு முன்பாக வண்டியில் இருந்துகொண்டே ஹார்ன் அடித்துக் கொண்டே நின்றாள்...
அவளது வண்டியின் சத்தம் கேட்,டு விஷ்ணு அவசர அவசரமாக வெளியே வர, அவனது தாய் காவ்யாவும் அவனுடன் வெளியே வந்தார்...
விஷ்ணு வண்டியில் பின்பக்கம் ஏறி அமர்ந்ததும், வண்டியை ஸ்டார்ட் செய்த ஷன்மதியிடம் “கவனமா போகணும், ரொம்ப ஸ்பீடா போகக்கூடாது” என்று சொல்லவும்...
"என்ன ஹரிதா அம்மையார் அதுக்குள்ள உங்களுக்குப் போன் பண்ணி சொல்லிட்டாங்களா... உயிர் தோழிகள்னா இப்படித்தான் இருக்கணும், நியூஸ் இரண்டே நிமிஷத்தில் பறந்து வந்துட்டு” என்று சொல்லிக்கொண்டே காவ்யாவிடம் விடைபெற்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்...
பாதி வழி செல்லும்பொழுது விஷ்ணு ஹரிதாவின் தோளை தட்டி, “அம்மாதாயே மெதுவா போ இல்லைனா, நீ பின்னாடி வர்றியா? நான் வண்டி ஓட்டுறேன்” என்று சொன்னான். அதெல்லாம் கேட்பவளா ஷன்மதி... அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள்...
ஒரு சிக்னல் கடந்து வேகமாகச் செல்லும்போது ட்ராஃபிக் போலிஸ் இவர்கள் வண்டியை நிறுத்த சொல்லி கையைக் காட்டவும், நிறுத்தாமல் சென்றவர்களின் வண்டிக்கு முன்பாகப் போலீஸ் கார் ஒன்று வந்து நின்றதும், ஷன்மதி சட்டென்று பிரேக் அழுத்த பேலன்ஸ் கிடைக்கமால் இருவரும் வண்டியிலிருந்து கீழே விழுந்து இருந்தனர்... இதை ஷன்மதி எதிர்பார்க்கவில்லை...
இருவரும் மெதுவாக எழும்பி நிற்க, வண்டியிலிருந்து இறங்கிய ஒரு போலீஸ் ஆபீஸர் ஷன்மதியின் சட்டையைப் பிடித்து இழுக்க வர, அதற்குள் விஷ்ணு ஷன்மதிக்கும் அந்தப் போலீஸ் ஆபீஸர்க்கும் இடையில் நின்று கொண்டான்...
அதைக் கண்ட அந்தப் போலீஸ் ஆபீஸர் கோபப்பட்டு விஷ்ணுவின் சட்டை பிடித்து இழுத்தவன் "அறிவில்லை இவ்ளோ பீக் அவர்ஸ்ல, வண்டிய வேகமா ஓட்டிட்டு வர்றது இல்லாம, நிறுத்த சொல்லி சைன் காண்பித்தா வண்டி நிறுத்த மாட்டீங்களாடா” என்று அடிக்கப் போக... ஷன்மதி சட்டென்று தன்னுடைய ஹெல்மெட்டை கழட்டிவிட்டு, விஷ்ணுவை தன் பக்கமாக இழுத்து
“எதுக்கு சார் சட்டையெல்லாம் பிடிச்சு அசிங்கப்படுத்தறீங்க, அடிக்கவேற போறீங்க, வேகமாக வந்தது தப்பு தான் அதுக்கு ஃபைன் போட்டுக்கோங்க, அடிக்கறதுக்கெல்லாம் உங்களுக்குப் பெர்மிஷன் கிடையாது, நாங்களும் சட்டம் தெரிஞ்சவங்கதான்” என்று சொல்லவும்...
அந்த ஆபீஸர் சிறிது அதிர்ந்தான்...அவன் நினைத்தது இரண்டு இளைஞர்கள் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு, ட்ரஃபிக் ரூல்ஸ் மதிக்காம செல்கிறன்றனர், என்றதும்தான், இவர்களின் வண்டிக்கு பின்னாடி வந்துக்கொண்டிருந்தவன், அவர்களது வண்டிக்கு குறுக்கே தன் போலிஸ் காரைக் கொண்டு வந்து விட்டான்...
விஷ்ணு அவளது கரத்தைப்பிடித்து,
“என்ன பேசுற அமைதியாக இரு” என்று சொல்லவும், அவர்களது செய்கையைப் புதுசாகப் பார்த்தவன், அவர்களைக் காதலர்கள் என்று எண்ணிக்கொண்டான், முகத்தைச் சுளித்து “லவ்வர்ஸ்னா அதுக்கு இப்படியா” என்று நினைத்தான்.
பெண்ணென்று சிறிது அதிர்ந்தவன், அவள் பேசிய பேச்சை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றான்...
உடனே அருகில் வந்து நின்ற டிராபிக் போலீசிடம் “சார்ஜ் ஷீட் இவங்களுக்கு எழுதுங்க, பைன் கட்டினதுக்குப் பிறகு வண்டி எடுத்துட்டு போகட்டும்” என்று சொல்லிவிட்டான்...
அந்த ட்ராபிக் போலீஸ் எதுவும் பேசாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த போலீஸ் ஆபீஸருக்குக் கோபம் வந்தது,
“சீக்கிரம் அவங்களுக்கு ஃபைன் எழுதி கொடுத்து அனுப்புங்க” என்க...
“சார் தெரிஞ்ச பசங்கதான்...பெரிய இடத்து பிள்ளைங்க சார்...” என்று மெதுவாகப் பேசவும்...
“ஓ...அப்படியா அப்போ அடிக்கடி நிறைய வாங்கியிருப்பீங்க போல; அதுதான் பணப்பாசம் தடுக்குது இல்லை” என்று அவரை முறைத்துக்கொண்டு நின்றான்.
அதற்குள் ஷன்மதி தனது போனை எடுத்து தந்தைக்கு அழைத்து விபரம் சொல்லவும், சிறிது நேரத்துலேயே ட்ராஃபிக் போலிஸிற்குத் தகவல் பறந்து வந்தது...இருவரையும் விட்டுவிடுமாறு...
அந்தத் தகவலைக் கேட்டு...அந்த போலிஸ் ஆபிசருக்கோ கண்கள் சிவந்து ஷன்மதியின் அருகில் வந்து "பணத்திமிரு இல்லை, சட்டம் எல்லாருக்கும் பொதுதான், பார்த்தா படிக்கற பசங்க மாதிரி இருக்கு, ரூல்ஸ்லாம் பணமிருந்தா மதிக்ககூடாதுனு எதுவும் இருக்கா...ம்ம். இடியாடிக் பீப்பிள்ஸ். இன்னோரு முறை என் கண்ணுலப் பட்டீங்க...” எனத் தனது ஆள்காட்டி விரலை காண்பித்து எச்சரித்தான்...ஆனால் ஷன்மதியின் கண்களில் அலட்சியம் தெரிந்தது...உன்னால் ஒன்னும் பண்ணமுடியாது என்றவொரு எண்ணத்தில் நின்றாள்.
“யாரு ரெக்கமண்ட் பண்ணாலும் விடமாட்டேன், பிடிச்சு உள்ள வச்சிருவேன்” எனக் கடுமையாக எச்சரித்தான்...
அதற்குள் ஷ்ரவன் ஆபீஸுக்கு செல்வதற்காக வந்தவன், மகள் அங்கு நிற்கவும் தனது காரை அதில் ஒதுக்கி இறங்கியவன்; போலீஸ் ஆபிசரிடம் "சாரி சார் பிள்ளைங்க பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், பைன் கட்டிட்டே வண்டியை எடுத்துக்குறோம்" என்றவன் ஷன்மதி விஷ்ணுவையும் தனது காருக்குப் போகச் சொல்லிவிட்டு, தன்னை அறிமுகம் செய்துகொண்டவன் சிறிது நேரம் அந்த ஆபிசரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்பு தனது காருக்கு வரவும்.
“என்ன ஷானு பாப்பா இப்படியா பிஹேவ் பண்ணுவ? அது யாருன்னு தெரியாம பேசிவச்சிருக்க...
ஸ்பெஷல்..ஏ.ஐ.ஜி.பி, லா அண்ட் ஆர்டர், மிஸ்டர்.சக்திகுமரன். நல்ல பையன்...இவ்வளவு சின்ன வயசுல இந்தப் பதவிக்கு வர்றது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா. ரொம்ப நல்லவர், அதில்லாம நேர்மையானவருங்கூட.. ஷானு நீ யாருக்கிட்ட பேசறோம்னு கவனிச்சு பேசு...உன்கிட்ட தப்பை வச்சிக்கிட்டு, அடுத்தவங்களைக் குற்றம் சொல்லக்கூடாதுமா... நான் உங்க இரண்டுபேரையும் காலேஜ்ல விடுறேன். இதை அம்மாகிட்ட சொல்லிடாத... விஷ்ணு நீயும் தான் சரியா?” என்று தகப்பனாக மகளுக்குப் புத்தி சொல்லிவிட்டுக் கல்லூரியில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டான்.
ஷன்மதி கோபத்தில் பேசாமல் அமைதியாக வரவும், விஷ்ணு தான் அவளைச் சமாதானப்படுத்தி வகுப்பிற்குள் அழைத்துச் சென்றான்...
தனது வண்டியில் அமர்ந்த சக்திகுமரன் ஷன்மதி விஷ்ணுவை யோசித்துக் கொண்டிருந்தான்.
“நல்லவேலை பையனு நினைச்சு சட்டையைப்பிடித்து இழுக்கலை, இழுத்திருந்தேன் அவ்வளவுதான்...
பாப்கார்ன் மாதிரி பொரிஞ்சிருப்பா, பணம் இருந்ததுனா என்னவேணாலும் செய்யலாங்கிற திமிரு, எங்க படிக்குதுங்களோ” என்று யோசித்தவன்...
‘அவளைப் பற்றி நம்ம என்ன யோசிக்கறது’ என்று தனது பணி நிமித்தமாக யோசிக்க ஆரம்பித்தான்.
அங்குக் கல்லூரியிலோ ஷன்மதி: விஷ்ணுவிற்காகச் சமாதானமானவளின் மனமோ குமிறிக்கொண்டிருந்தது, ‘அப்படி என்ன செய்தேன் பணத்திமிருனு சொல்றான், போலிஸ்னா அதுவும் பெரிய ஆஃபிஸர்னா பெரிய பருப்போ? என் சட்டையைப் பிடித்து இழுக்கவந்ததும் இல்லாம, விஷ்ணு சட்டையவும் பிடித்து இழுத்து அடிக்கப்போறான்... நான் இந்த வருசத்துல என் படிப்பை முடிச்சு உனக்கே லா சொல்லித்தர்றேன் பாரு’ என மனசுக்குள்ள திட்டம் தீட்டி தீர்மானம் பண்ணிக்கொண்டாள்( க்கும், அதுக்குள்ள உன்னை அவன் கட்டம்கட்டித்தூக்கி அம்மாவாக்கிடப்போறான்...சக்திகுமரனைப்பத்தி தெரியாம நீயா எதுவும் பிளான் பண்ணாத ஷன்மதி)
வகுப்பில் இவர்கள் அமர்ந்திருக்க, அங்கே வெளியே கல்லூரியே ரணகளப்பட்டது, கடைசி வருட மாணவர்களின் இரண்டுபிரிவுகளுக்குள்ளே எப்பவும்
மோதிக்கொள்வர்...
இன்றும் பிரச்சனையைத் தொடங்கிவிட்டனர். கல்லூரியின் வாயிலிலயே அடிதடி நடந்துக்கொண்டிருக்க , இதைக்கேள்விப்பட்ட விஷ்ணுவும் அங்கு ஓட, அவன் பின்னே ஷன்மதி ஓடினாள்.
கையில் கிடைத்தைக்கொண்டு அடிக்கவும், விளையாட்டுப் பொருட்களான ஹாக்கி மட்டை, கிரிக்கெட் கம்புகள் என்று ஆளாளுக்குக் கையில் வைத்திருந்ததைக் கொண்டு பயங்கரமான தாக்குதல்...அதற்குள்ளாகப் பேலிஸ்க்கு தகவல் போனது...
அத்தியாயம்-2
கல்லூரியின் எல்லாப் பக்கமும் மாணவர்கள் சிதறி ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொண்டிருக்க, விஷ்ணுவும் இப்போது வெளியே வரவும் அவனையும் சிலர் பிடித்துக்கொண்டு தாக்க ஆரம்பிக்கவும், பின்னாக ஓடிவந்து ஷன்மதி அவர்களுக்கு இடையில் வந்து விஷ்ணுவைப் பிடிக்கப்போக, அவர்களது கோபம் அவள் மேல் திரும்பவும் அவளையும் அடிக்க வர, இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மற்றவர்களைத் எதிர்த்து நின்றனர்...
விஷ்ணுவின் கூட்டாளிகளும் சேர்ந்துக்கொள்ள மாணவர்களுக்குள்ளேயான சண்டை வேறு யாரும் உள்ளே வரமுடியாது...மீடியாக்கள் கவர்செய்துக்கொண்டிருந்தனர்...
வெளியாட்கள் உள்ளே செல்லமுடியாத நிலை, போலிஸ் உள்ளேவரவும்தான் மாணவர்கள் தெறித்து ஓட ஆரம்பித்திருந்தனர்...
ஷன்மதியும் விஷ்ணுவும் கல்லூரியின் ஸ்டார்ஸ். எல்லாவற்றிலும் முதலில் இருப்பார்கள், சேட்டையிலும் சரி படிப்பிலும் சரி அவர்கள்தான் முன்னோடி...
இதனால் பல பேரின் பொறாமை கண்கள் அவர்களின் மேல்...அதில் ஷன்மதி திமிறும் அழகுடன் இருப்பவள், அவளின் பாதுகாவலனாக விஷ்ணு இருப்பதால் அவளிடம் யாருமே நெருங்கமுடியாது...
ஷன்மதியின் விசயத்தில் மட்டும் விஷ்ணு டெரர் பீஸ்...மற்றபடி சாதாரணமான ஒரு மாணவன் அவ்வளவுதான்...அதுபோல் விஷ்ணுவென்று வரும்போது ஷன்மதிக்கு மற்ற விசயங்கள் பின்னுக்குத்தான்...
போலிஸ் மொத்தமாக வந்து இறங்கவும் மாணவர்கள் ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓடினர்...விஷ்ணுவும் அவன் நண்பர்களும் ஓடி வகுப்பறைகளில் ஒளிந்துக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் ஷானு என்று தன் தோழியைத்தேட அவளைக் காணவில்லை. ஒரு நிமிடத்தில் அப்படியே உறைந்துவிட்டான்...
“ஐயோ எங்கபோனாளோ தெரியலையே? எங்கயாவது மாட்டிக்கிட்டாளோ?” என அவளைத் தேடி வெளியே ஓடிவரவும் போலிஸ் பிடித்துக்கொண்டது...அவன் கத்தினான் "என்னை விடுங்க சார் நான் ஒன்னும் பண்ணலை என் ப்ரண்ட்டைத் தேடி வந்தேன்...ப்ளீஸ் சார் தயவு செய்து கொஞ்சநேரம் விடுங்க, பொண்ணு சார் எங்கயாவது மாட்டிருப்பா" என அவன் கெஞ்சியதைக் அங்கே காதுக்கொடுத்துக் கேட்ககூட ஆளில்லை...
பொறுமையிழந்தவன் அவர்கள் பிடியிலிருந்து திமிறி ஓடப்பார்க்க நல்லா அடித்தனர்...இவன் கலவரம் பண்றதுக்குக்குத்தான் ஓடுகின்றான் என்று...அவ்வளவு பெரிய கலவரத்தில் காவலர்கள் தங்களது கடமையைத்தான் செய்ய முடியும் பாரபட்சமெல்லாம் பார்க்க முடியாது...
விஷ்ணு பரிதாபமாக மாட்டிக்கொண்டு தோழியைத் தேடுவதற்குக் காவலர்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கவும், ஒரு கார் விரைவாக உள்ளே வரவும் அதிலிருந்து சக்திகுமரன் இறங்கினான்...
அங்குக் காவலர்களிடம் திமிறிய விஷ்ணுவின் அருகில் வந்து அங்கிருந்த காவலர்களிடம் விசாரிக்கவும் " சார் பிரச்சனை பண்றான் சார்...பிடிச்சிவைச்சிருக்கோம்" என்றனர்.
விஷ்ணுவோ சத்தமாகப் “பொய் சொல்றாங்க சார்...
என்கூட இருந்த பொண்ணக் காணோம் அவளைத்தேடி வந்தேன் சார் பிடிச்சுவச்சுட்டு விடமாட்டுக்காங்க...
எங்க மாட்டிக்கிட்டானுத் தெரியலை” என்று பரிதாபாமாக வேதனையோடு சொல்லவும்...
ஒரு நிமிடம் யோசித்த சக்தி... ‘காதலியை கொஞ்சநேரம் பிரிஞ்சதுல வருத்தமாக்கும்’ என்று நக்கலாகக் கேட்கவும்.
விஷ்ணுவிற்கோ கோபம் "என்ன படிச்சிருந்தாலும் ஆணும் பெண்ணும் பழகினா காதல்னுதான் சொல்றாங்க, புத்தியை பயன்படுத்துறதில்லை, தப்பா பேசாதிங்க சார்” என்று ஆதங்கத்தோடு சொன்னான்.
“காலையில நடந்ததை மனசுலவைச்சுக்கிட்டு பழிவாங்காதிங்க சார்...அவ என்னோட பெஸ்ட் பிரண்ட் பிறந்ததிலிருந்தே ஒன்னா இருக்கோம்...ப்ளீஸ் நீங்களாவது தேடுங்க” என்றான்...
விஷ்ணு பேசியதைக் கேட்டதும் அவன் மனதிற்குள் ஒரு நிம்மதி பரவியது...உடனே சக்தி கல்லூரிக்குள் நுழைந்து நிலைமைக் கட்டுக்குள் இருக்கின்றதா என்று பார்த்துக்கொண்டே ஷன்மதியையும் தேடினான்...
உள்ளே பதிங்கியிருக்கும் மாணவக்குழுக்களைக் கைது செய்தனர்...
இதுவரைக்கும் ஷன்மதியைக் காணவில்லை..
பெண்பிள்ளையல்லவா என்று நினைத்த சக்தி நான்கு காவலர்களை அழைத்துத் தேடச்சொன்னான்...அவனும் கல்லூரி முழுவதும் சுற்றிவர...ஒரு இடத்தில் சத்தம் கேட்கவும் மெதுவாகச் சென்று பார்க்க...பழைய தண்ணீர் தொட்டியின் உள்ளே காய்ந்து சருகுகள் கிடந்தது...அங்கே ஷன்மதி ஒருவனிடம் போராடிக்கொண்டிருந்தாள்...உடனே சக்தி அதில் குதித்து அருகில் செல்லவும்தான் பார்த்தான்...
ஷன்மதி மேல் சட்டை முற்றிலும் கிழிந்து, உள்ளாடை மட்டுமே ஒழுங்காக இருந்தது...
ஒருவன் அவளைப்பிடித்துக் கீழேத்தள்ள, அவள் மீண்டெழுந்து அவனைத்தள்ளிவிட்டு மிதிக்க ஆரம்பித்தாள்...
சக்திக்கே ஒரு நிமிடம் என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை...பார்த்தால் அங்க ஒருவன் கீழே குற்றுயிராகக் கிடந்தான்....
அவனது முக்கியப்பகுதியிலேயே மிதித்துக்கொண்டிருந்தாள்...சக்தி ஓடிப்போய் அவளைப்பிடிக்கவுந்தான் உணர்வுக்கு வந்தாள்...
ஆனாலும் கீழேக்கிடந்தவனை அடிப்பதை நிறுத்தவில்லை...சக்தி பிடித்து இழுக்கவும் அவள் மறுபடியும் ஓடிச்சென்று அவனை அடிப்பதுமாக இருந்தது.
ஒருக்கட்டத்தில் சக்தி அவளைத் தன்னோடு இறுக்கிப்பிடித்துக்கொண்டான்...அவளது மூச்சு மேலகீழே செல்ல...அவளது உடல் குலுங்கியது...அவன் புரிந்துக்கொண்டான்.
ஷன்மதிக்கு சக்தி வந்தது அவ்வளவு ஒரு பலத்தையும், நிம்மதியையும் கொடுத்தது.
கொஞ்சம் ஆக்ரேஷம் குறைந்ததும் மெதுவாக சக்தியின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள் கண்ணீர் வர வர துடைத்துக்கொண்டே
"ராஸ்கல் என்னையவே தூக்கிட்டுவந்து, அசிங்கம் பண்ணாலாம்னு பார்த்தான்...செலவே இல்லாம குடும்பக்கட்டுப்பாடு பண்ணிவிட்டுட்டேன்...
யாருக்கிட்ட உன் வேலையைக் காண்பித்த, ஷன்மதிகிட்டயேவா...நானா இருக்கப்போய் உன்கிட்டயிருந்து என்னைக் காப்பாத்திகிட்டேன்...வேற எதாவது பொண்ணுனா சீரழிச்சிருப்பதான...மவனே இனி எந்தப்பொண்ணுகிட்டயாவது இப்படி நடக்ககூடாது...” என மீண்டும் ஓடிப்போய் அவனை மிதிக்கவும்...சக்திதான் இனி மிதிச்சா அவன் கண்டிப்பா செத்துப்போயிடுவானு தெரியும்.
அவளிடம் சத்தம் போட்டான் “நிறுத்துறியா கொஞ்சம் செத்துப்போயிடப்போறான்... கொலை கேஸ்ல உள்ளப்போயிடுவ” என்றவன்.
இரண்டு காவலர்களை வரச்சொல்லி அந்த மாணவனைத் தூக்கிக்கொண்டு போகச் சொன்னவன்...ஷன்மதியைத் தன்பின்னே மறைத்திருந்தான்.
ஒரு பெண் காவலரையும் அழைத்து ஷன்மதிக்கு ஒரு சட்டை வாங்கிவரச்சொல்லிவிட்டவன்...இப்போது ஷன்மதியிடம் திரும்பினான்...
ஷன்மதியோ அவனைப் பார்க்காமல் வேறு எங்கயோ பார்வையைத் திருப்பினாள்...
“ஹலோ சண்டிராணி இங்கப்பாருங்க , உங்க மேலயும் கேஸ் போடணும் பாவம்னு விட்டுவைக்கிறேன்” என்றதும்தான்...
ஆவேசமாகத் திரும்பியவள் அவனிடம் நெருங்கிவந்து “எதுக்கு சார் கேஸ் போடுவீங்க, நான் தான் கேஸ் குடுக்கணும் அந்தப் பரதேசிமேல...” என்று பேசவும் அவளது மேனியும் சேர்ந்து அசைய , இப்போது சக்தி தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளவும்தான் தன்னைக் குனிந்துக் கவனித்தவள் அப்படியே திரும்பி நின்றுகொண்டாள்... இருவரும் அமைதியாக நின்றனர்.
“உன் தைரியத்தைப் பாராட்டுறேன் ஆனா இன்னைக்கு நீ அவனை எதிர்த்துப்போராட முடிந்தது... அதுக்காக அசட்டுத்தைரியம் இருக்ககூடாது...கவனமா இருக்கணும்...எப்பவும் கொஞ்சம் புத்தியையும் பயன்படுத்து” என்றவன்...சிரித்துக்கொண்டே “செலவில்லாம குடும்பக்கட்டுபாடு உன் கான்செப்ட் நல்லாதான் இருக்கு” என்றான்.
அவளுமே இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தாள்...அவளுக்குச் சட்டை வந்ததும் மாற்றிக்கொண்டு இருவரும் கல்லூரிக்கு வெளியே வந்தனர்...
அங்குக் கைது செய்யபட்ட மாணவர்களுடன் விஷ்ணு இருக்கவும், ஓடிப்போய் அவனிடம் பேசப்போக அதற்குள் ஜீப் கிளம்பி சென்றது...
உடனே திரும்பி சக்தியிடம் “இது உங்க வேலை தான” என்று கோபத்தில் கேட்க...கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன் “உதவி பண்ணினா நன்றி சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் தப்பு சொல்லாமல் இருக்கலாம்... இவ்வளவு பெரிய சண்டை நடக்கும்போது வெளியவராம இருந்திருக்கணும்.... வெளிய வந்தா கைது பண்ணதான் செய்வாங்க"
ஷன்மதி “அவன் என்னைத் தேடித்தான் வெளிய வந்திருப்பான்... ப்ளீஸ் அவனை விடச்சொல்லுங்க சார்”, என்று தன் தலையைச் சாய்த்துப் பாவமாகக் கேட்க...
அதைப்பார்த்தவன் “இதுக்கே என்னவேணா செய்யலாம்போல” என்று ஒரு நிமிடம் யோசித்தவன்..தன் கடமையை உணர்ந்து "அவன் பேருல தப்பு இல்லைனா கண்டிப்பா வெளிய வந்திருவான், நீங்க உங்க வீட்டுக்குப்போங்க...உங்க வீட்டிற்கு எதுவும் தகவல் சொல்லணுமா?” என்று பார்க்க... "ஒன்றும் வேண்டாம். நானே போய்க்குவேன்” என்று காதலனிடம் முறைக்கும் காதலிப்போல அவனிடம் முறைத்துக்கொண்டு சென்றாள்.
“சண்டிராணி என்னையவே மிரட்டி முறைச்சிட்டுப்போறதைப் பாரு” என்று அவளையே பார்த்திருந்தவன்...சட்டென்று தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு அங்குள்ள நிலைமையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.
எல்லோரும் மாணவர்கள் என்பதால் கமிஷனர் ஆபிஸில்தான் அனைவரையும் பிடித்து வைத்திருந்தனர்...இதில் கொஞ்சம்பேரு வெளியே இருந்துவந்த ரௌடிகள் வேறு...அதுவேறு தனியாக விசாரணை நடந்துக்கொண்டிருந்தது.
விஷ்ணு அங்கேதான் இருந்தான். ஏ.ஐ.ஜி சக்திகுமரன் வருகின்றார் என்றதும் கமிஸனர் ஆபிஸில் எல்லாம் பரபரப்பு உள்ளே வரவும்...விஷ்ணு சக்தியைப்பார்த்து முறைத்துக்கொண்டு நின்றான்...
எல்லா விசாரணையும் முடிந்து சக்தி கிளம்பும்போது விஷ்ணுவிடம் வந்து "அது என்ன ரெண்டு பேரும் எப்பவும் என்னைப் பாத்து முறைச்சுட்டே இருக்கீங்க. இன்னைக்குக் காலையில் தானே பார்த்தோம் அதுக்குள்ள உங்க இரண்டேபருக்கும் நான் வில்லனாகிட்டேனா...?” என்று சிரித்துக்கொண்டு நின்றிருந்தான்.
அதற்குள்ளாக அஜய், ஷ்ரவன் மற்றும் புகழ்பெற்ற வக்கீல் ஒருவருடன் வந்திருந்தனர்...
வந்து அங்கிருக்கும் இன்சார்ஜ் பேசி விஷ்ணுவிடம் பேசுவதற்கும் அனுமதி கேட்டுக் கொண்டனர்... அதற்குள்ளாக விசாரணை முடிந்து சில மாணவர்கள் வெளியே விட்டனர் அதில் விஷ்ணு ஒருவன்...
அவன் வெளியேவரவும் காரிலிருந்து ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டவள், அவனது முகத்தில் காயங்கள் இருந்தது, காலையெல்லாம் பார்த்து “உனக்கு எதுவும் அடிபடலையே, போலீஸ்காரங்க வந்த அடிச்சாங்களா?” என்று அவனிடம் கேட்க...
விஷ்ணு “இல்லை, உன்னைத் தேடிவரதுக்காகச் சண்டை போட்டேன் அப்போதான் அடிச்சாங்க, இங்க வந்து அடிக்கலை” என்று தலையாட்டி அவன் மெதுவாக அப்படியே காரில் சாய்ந்து நின்று விட்டான்... விஷ்ணுவுக்குக் கேவலமாக இருந்தது போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டமேயென்று அதனால், அவன் மனதுக்குள் மருகி கொண்டு அப்படியே நின்றிருந்தான்...
இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே வெளியே வந்த சக்தி லேசாகப் புன்முறுவலுடனே அவர்கள் அருகில் வந்தான்.
விஷ்ணு முகத்தைத் திருப்பிக்கொள்ள, ஷன்மதிதான் சக்தியை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்...
“என்ன மேடம் உங்க பிரண்டு வெளியே வந்துட்டாங்க போலச் சந்தோஷமா இப்போ?” என்று கேட்டான்...
ஷன்மதி “ஆமாம்” என்று தலையை ஆட்டினாள்... “நன்றி சார்” என்று அவன் கண்களைப் பார்த்து கூறவும்...அப்படியே அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்து வைத்தான் சக்தி...அதைக் கண்டவள் அவனை முறைத்துப்பார்க்க முயன்று முடியாமல் சிறிது லட்ஜையுற்றவளிடம்... ‘இந்த ட்ரஸ்ஸும் நல்லாதான் இருக்கு’ என்று ரசனையுடன் பார்த்தான்.
விஷ்ணுவிற்கு சக்தி ஷன்மதியுடன் பேசுவைதைக் கண்டதும் கோபத்தில் "ஷானு சாருக்கிட்ட என்ன
வம்பு வளர்க்குற... அவரு ரொம்பப் பிஸிமேன் நிறைய வேலையிருக்கும் இல்லை சார்" என்று முறைத்துக்கொண்டே கேட்டான்( அதாவது கடலைப் போடாமா கிளம்புடா என்று அர்த்தத்தில்) .
இவர்களை விடப் பெரிய விடாக்கண்டன் சக்தி...விஷ்ணு சொல்வதைப் புரியாதவனா. என்ன? மறுபடியும் ஷன்மதியிடம் " என்ன இந்தப் பக்கம், அதான் உங்கப்பா வந்திருக்காரே, நீ எதுக்கு வந்த? பிரண்ட் பார்க்காம இருக்கமுடியலையா அவ்வளவு நெருக்கமா?” என்று வார்த்தைகள் ஷன்மதியிடமும், கண்பார்வை விஷ்ணுவிடமும் இருந்தது...விஷ்ணுவிற்கு எதுவோ புரியறமாதிரி, அதாவது சக்தி அவர்கள் இருவருக்கும இடையில் வருவதுபோல, குறிப்பாக ஷன்மதியிடம் நெருங்குவது போலத் தோன்றியது.
கண்களிலே நீ சொல்ல வந்தது எனக்குப் புரிந்தது எனப் பார்த்துவிட்டு சக்தி கிளம்பினான்.
ஷன்மதியோ "என்ன விஷ்ணு இப்படி அவருகிட்ட பேசுற, கொஞ்சம் மரியாதைக்குடு. அவரு எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்காங்க” என்று சொல்லவும்... “அதைவிட நான்” என்று அவள் பேச வாயை திறக்கவும்..
சக்தி சட்டென்று திரும்பி முறைத்துப்பார்த்தவன் வாயில் விரலை வைத்து “மூச்...யாருக்கிட்டயும் சொல்லாக்கூடாது” என்று சைகை செய்துவிட்டு போய்விட்டான்.
சக்தியின் அந்த ஒரு நிமிட செய்கையே அவளுக்கு என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிடித்தம் சக்தியிடம் வந்திருந்தது.
விஷ்ணுவோ "அந்தாளு எதுக்கு உனக்குச் சைகை காட்டிட்டுபோறாரு... காலையில எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா,என் பிரண்ட் காணலை தேடணும் சார் கொஞ்சம் என்னைய விடுங்கனு...கல்நெஞ்சுக்காரன் விட்டானில்லை...இவன்லாம் என்ன பெரிய அதிகாரி? இரக்கமில்லாதவன் .இன்றைக்குக் காலையில நடந்ததுக்குப் பழிவாங்கிட்டான்.. இந்தப்போலிஸ்காரனுங்களே சேடிஸ்ட்தான் போல” என்று திட்டிக்கொணடிருந்தான்...
ஷன்மதியோ சக்தி சென்றதிசையவே பார்த்துக்கொண்டிருந்தாள்...
அதற்குள் ஷ்ரவன், அஜய் எல்லோரும் வந்ததும், வீட்டை நோக்கி பயணித்தனர்...
ஷ்ரவன் அஜயிடம் " நான் விஷ்ணுவ எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். நீயும் காவ்யாவும் அவனை எதாவது சொல்லுவீங்க” என்றவன், அவனைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வீடு வந்து சேர்ந்ததும் தோட்டத்துப் பென்ஞ்சில் விஷ்ணு அமைதியாக இருக்க ஷன்மதி அவன் கையைப்பிடித்து "இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா ,வக்கீல் வாழ்க்கையில இனி எத்தனை முறை போலிஸ் ஸ்டேசன் ஏறி இறங்கணும்...டோன்ட் வொரி..பீ ஹாப்பி” என்று சொல்லி சிரிக்கவும், அவனுமே சிரித்தான் தான்...
ஷன்மதியின் முகமெல்லாம் சிறு கீறல்கள் இருந்தன, அது கையிலும் அவளது கைகளிலும் பார்த்தவன் அவளது கையைப்பிடித்து “என்ன இது காயம்?” என்று கேட்க...
“அதுவா பயத்துல ஓடினப்போ பழைய தண்ணித்தொட்டிக்குள்ள விழுந்திட்டேன் டா...அதுல இருந்த கம்புலாம் கையில முகத்துல கிழிச்சிட்டு” என்று அவனது முகத்தைப் பார்க்காமலயே கூறினாள்...
விஷ்ணு அவளது முகத்தை தன் பக்கம் திருப்பவும், அவளது கண்ணீர் அவனது கைகளில் பட்டது...அவ்வளவுதான் அங்கு என்ன நடந்தது என்று சொல்லிவிட்டாள்...
" அந்த நேரத்துல எங்கயிருந்து அவ்வளவு பலம் வந்ததுனு தெரியலைடா, ட்ரஸ்ஸெல்லாம் கிழிஞ்சு, சக்தி சார்தான் புது ட்ரஸ் வாங்கிகொடுத்தாங்க...
யாருக்கிட்டயும் சொல்லவேண்டாம்னு சொன்னாரு..அதுதான சைகையில சொல்லிட்டு போனாரு” என அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டாள்...
விஷ்ணுவிற்கு சக்தியை பிடிக்கலைனாலும் ஷன்மதிக்காகத் தனது எண்ணங்களை அவளிடம் சொல்லாமல் மறைத்துக்கொண்டான்.
அத்தியாயம்-3
கல்லூரிக்கு ஒருவாரம் விடுமுறை என்பதால், ஷன்மதிக்கு வீட்டிலிருப்பது ஒருமாதிரி இருக்க, விஷ்ணு வீட்டிற்கு ஒரு நாள் சென்றாள்...அங்கு விஷ்ணுவின் தங்கையும் தம்பியும் இருந்தனர்...தங்கை சங்கீதா அம்மாவைப்போல மருத்துவம் படிக்கின்றாள், தம்பி விக்ரம் ஷன்மதியின் தம்பி ஹரிஷுடன் படிக்கின்றான்... அங்குக் காலை முதல் மாலைவரை இருப்பதற்கு மட்டுமே ஷ்ரவன் அனுமதித்திருந்தான்.
ஷ்ரவனைப் பொருத்தவரை மகள் எப்பவும் வீட்டிலிருக்கணும். எங்குச் சென்றாலும் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அதனால் எங்கும் தங்குவதற்கு அனுமதியில்லை...
விஷ்ணுவின் வீட்டிலிருந்து வந்ததும் என்னமோ மனசுக்குள் தனியாக இருப்பது போலத் தோன்றவும், தனது லேப்டாப்ப எடுத்து சக்திகுமரனின் பெயர் போட்டுக் கூகுலாண்டவரிடம் தேடிக்கொண்டிருக்க...
அவனது பணியின் நிமித்தமாக உள்ள தரவுகள் மட்டுமே அவளுக்குக் கிடைத்தது...வேறு ஒருத்தகவலும் கிடைக்கவில்லை...
கொஞ்சநேரம் அவன் போட்டாக்களையே பார்த்துக்கொண்டிருந்தாள், அன்று அவன் முன்பாக நின்றிருந்த நிலையை நினைத்துப்பார்த்தாள்...
அந்த நிலையிலும் சக்தி அவளைப்பார்த்துவிட்டு திரும்பினானேத் தவிர அசிங்கமனா பார்வை பார்க்கவில்லை...அந்த நிகழ்வு பற்றி எதுவும் வெளியத்தெரியாதபடி செய்துவிட்டான் என்பதிலயே பெண்ணவளின் மனம் அவன்பால் சாய ஆரம்பித்துவிட்டது...
அப்படியே தனது கட்டிலில் சாய்ந்து படுத்தவளின் இதயத்துடிப்பின் ஓசை அவளுக்குக் கேட்டதும், லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழுந்து வெளியே போவதற்காக தயாராகி வந்தவளிடம், ஹரிதா "எங்க கிளம்பிட்ட, காலேஜ் லீவுதான" எனக்கேட்கவும்.
“ஷாப்பிங்க் போகலாம்னு கிளம்பினேன் மா, வீட்ல இருக்க ஒருமாதிரி இருக்கு...என்கூட வங்களேன். நம்ம இரண்டுபேரும் போய்ட்டுவரலாம்" என ஷன்மதி கேட்கவும்...
ஹரிதா "உன்கூடவா ஷாப்பிங்கா....அம்மா தாயே ஆளைவிடு, உன்கூட ஷாப்பிங்க் வர்றதும் பலியாடாகப் போறதுக்குச் சமம்...என்னைவிட்டுடுமா.... உங்கப்பாகிட்டக்கேளு, இல்லைனா விஷ்ணுவைக் கூட்டிட்டுப்போ" அங்கிருந்த ஷ்ரவன் உட்பட எல்லோரும் சிரிக்கவும் தனது காலை உதைத்துக் கொண்டே போய் ஷோபாவில் அமர்ந்தவள் விஷ்ணுவுக்கு அழைத்தாள்...
ஷன்மதியின் அழைப்பை ஏற்று விஷ்ணு உடனே கிளம்பி இங்கு வந்தான்... அவன் உள்ளே வரவும்
எல்லோரும் அவனைப் பார்த்து சிரித்து ஷன்மதியிடம் "பாரு உன் பலியாடு வந்துட்டு, அவனையே கூட்டிட்டு போ" என்று சிரிக்க ஆரம்பித்தனர்...
ஷன்மதிக்க்கு கோபம் வந்து "விஷ்ணுவை பலியாடுனு சொன்னீங்க அவ்வளவுதான்... உங்க கம்பேனிக்கு நாங்க ,லாயரா நாங்க எதுவுமே செய்யமாட்டோம் பார்த்துக்கோங்க...” தன் விரல் நீட்டி சிறுபிள்ளைப் போல எச்சரித்தவளைப் பார்த்து... “சரி சரி நாங்க உன் பிரண்ட்ட ஒன்னும் சொல்லலை..பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க” என்று ஷ்ரவன் சிரித்துக்கொண்டு அனுப்பினான்...
ஷன்மதி வண்டி ஓட்டும் மூடில் இல்லை என்பதால் விஷ்ணு வண்டி ஓட்டிக்கொண்டு சென்றான்...
சிறிது தூரம் சென்றதும் " நீ வண்டி ஓட்டுறியா” என்று கேட்க, “இல்லை வேண்டாம் நீயே ஓட்டு” என்றவள் அமைதியாக இடதுபக்கமாகத் திரும்பிப்பார்க்க, சக்தி அவரது டிபார்ட்மெண்ட் காரில் இருந்தான்...
தன் கண்களை அல்லியாக விரித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அவனும் அவளைத்திரும்பி பார்த்துப் புன்னகைத்தான்...
சட்டென்று இறங்கிப்போக அதற்குள் சக்தியின் வண்டி கிளம்பிவிட்டது...
விஷ்ணுவிடம் “வண்டியை எடுறா” என்று சத்தம்போட...அவனோ வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று வண்டியை உதைத்துக்கொண்டிருந்தான்...அதற்குள் சக்தியின் கார் கண்ணைவிட்டு மறையவும்... ஷன்மதி பெருமூச்சொன்றைவிட்டு சலித்துக்கொள்ளவும், வண்டியை ஸ்டார்ட் செய்தான் விஷ்ணு...
அவன் முதலிலேயே சக்தியைப் பார்த்துவிட்டுத்தான், ஷன்மதியின் கவனத்தைத் திசைதிருப்ப வண்டி ஓட்டுறியானுக் கேட்டான்...அதற்குள் சக்தியை ஷன்மதி பார்த்துவிட்டாள்.
சக்தியின் வண்டிக்குப்பின் செல்லச்சொல்வாள் என்றே நல்லாயிருந்த வண்டியை ஸ்டார்ட் ஆகவில்லை என்று பொய்ச் சொன்னான்...
விஷ்ணு எவ்வளவு செய்தாலும் ஷன்மதியின் மனதிற்குள் சக்தி நுழைந்துவிட்டான் என்பதை ஒரு நண்பனாக அறியத்தவறிவிட்டான்...
அதனால் தனது தோழியும் தானும் எவ்வளவு பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கப்போகிறோம் என்றறிந்திருந்தால் நிதானித்திருந்திருப்பானோ என்னவோ...
அங்கோ சக்தி வேண்டுமென்றேதான் காரை நிறுத்தவேண்டாம் என்று ட்ரைவருக்குச் சொன்னான்...
சுலபமாகக் கிடைத்தால் எதற்குமே அருமைத்தெரியாது...அதுவும் ஷன்மதியின் குணத்தை ஒரே நிமிடத்தில் கணித்த சக்தி, ஷன்மதியின் மேல் சிறிது விருப்பமிருந்தாலும், அவளாக அதை உணரவேண்டும் என்று தான் விரும்புகின்றான்...இல்லையென்றால் ஷன்மதி கெஞ்சினாள் மிஞ்சுகின்ற குணத்தைக் கொண்டவள் என்று அவனுக்குப் புரிந்திருந்தது...அவனும் மிஞ்சினான்.
பார்த்தன்றே சக்திக்கு ஷன்மதி அவனது உள்ளத்தில் ஒரு தீயை ஏற்படுத்திவிட்டாள்...
இங்கு ஷாப்பிங்க் மாலிற்குச் சென்றவர்கள் ஒன்றுமே வாங்காமல் சுற்றிக்கொண்டிருந்தார்கள்...விஷ்ணு அலுத்துப்போய் “ஷானு கால் வலிக்குது பாரு...காலையிலிருந்து சுத்துறோம் நீ ஒண்ணுமே வாங்காமல் சுத்திக்கிட்டே இருக்க... எதுக்கு நம்ம இங்க வந்தோம்...”
ஷன்மதி "எதுவும் வாங்குறதுக்கு மனசே இல்ல டா ...வா வீட்டிற்குப் போகலாம்” என்றவளை, திரும்பி பார்த்தவன் "நீ எதையாவது என்கிட்டயிருந்து மறைக்கிறீயா" என்று அவளிடம் நேரடியாகவே கேட்டான்...
"லூசா நீ உன்கிட்டயிருந்து என்னத்தை மறைக்கயிருக்கு ...போடா நீயா எதையும் நினைச்சிக்காத" என்றவள் "வா நம்ம பிஸ்ஸா சாப்பிட்டுப்போவோம்" என அழைத்துக்கொண்டு சென்றாள்...
விஷ்ணுவிற்காகச் சிறிது தனது எண்ணங்களை ஒதுக்கிவைத்தாள்....
ஒருவாரம் சென்று கல்லூரி தொடங்கவும் வழக்கம்போல ஷன்மதியின் தனது அதிரடியைத் தொடங்கினாள்...
ஒருமாதம் சென்றிருந்த நிலையில் கல்லூரியில் நடக்கின்ற விழா ஒன்றிற்குச் சட்டத்துறை அமைச்சரும், ஆளுநரும் வரவிருப்பதால் அதற்கான பாதுகாப்பு எல்லாம் செய்யவேண்டியிருந்ததால், டி.சி, மற்றும் ஏ.ஐ.ஜியான சக்திகுமரன் பொறுப்பில் விடபட்டது, அதுவும் சட்டம் ஒழுங்கு சக்தியின் கீழ் இருப்பாதால் அவன் அங்கு வந்து எல்லாவற்றையும் சரிபார்க்கவேண்டியது இருந்தது...இறுதி ஆண்டு மாணவர்களின் கையிலும் சில பேராசிரியரின் கையிலும்தான் எல்லாம் ஒப்படைக்கப்பட்டிருந்தது...
சக்தியும் கல்லூரியின் முதல்வர் அறைக்குச் செல்வதற்காக வராண்டாவில் நடக்க, ஷன்மதியும் அவளின் பின் விஷ்ணுவும் ப்யூன் வந்து முதல்வர் அழைக்கிறார் என்று கூறவும் அவசரமாக வந்தனர்....
பின்னாடி விஷ்ணுவிடம் எதுவோ விவாதித்துக்கொண்டே வந்தவள் மோதி விழப்போகவும் அவளைத் தாங்கிப்பிடித்தது ஒரு இரும்புக்கரம் " ஹலோ சண்டிராணி இன்னும் ஸ்டெடியாகலையா, விழுந்து விழுந்து எழும்புற" என்றவாறே அவளைத் தாங்கியிருந்தவன் தனது கைக்குள் வைத்துக்கொண்டே கேட்கவும்...
ஷன்மதியோ தனது நாக்கை பற்களுக்கிடையில் லேசாகக் கடித்து அவனது கண்களைப் பார்த்துக்கொண்டு நிற்க, சக்தி அவளை மெதுவாக நிறுத்தியவன் " ஆர் யூ ஓகே" என்று கேட்கவும், அவளைச் சட்டென்று தன்பக்கம் இழுத்த விஷ்ணுவோ " ஷானு உனக்கு ஒன்னுமில்லையே,பார்த்து நடக்கமாட்டியா?” என்று அவளைப் பார்த்துக் கேட்கவும்....
“எனக்கு ஒன்னுமில்லடா அதுதான் சக்தி சார் பிடிச்சிட்டாங்களே...நன்றி சார்” என்று இப்பவும் ஷன்மதியின் பார்வை சக்தியின் பார்வையைக் கவ்வி நின்றது...
விஷ்ணுவோ அவளது கரத்தினைப்பிடித்து "வா பிரின்ஸிபால் நமக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்க" அவளை என்று விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு சென்றான்...
விஷ்ணுவை வெறுப்பேத்தவே "ஷன்மதி இருங்க நானும் உங்ககூட வர்றேன், உங்க பிரின்ஸிபாலைத்தான் பார்க்கவந்தேன்... அவரோட ரூமிற்கு என்னை அழைச்சிட்டுப்போக முடியுமா?” என்று கொக்கிப்போட....
ஷ்னமதியே " ஓ...சூயர் சார் எங்களோட வாங்க" என்று தன்னுடன் அழைத்துச் செல்ல, அவளின் வலப்பக்கம் விஷ்ணுவும், இடப்பக்கம் சக்தியும் நடந்தனர்...
மூவரும் கல்லாரியின் முதல்வர் அறைக்குச் சென்றனர், சக்திகுமரனை வரவேற்று அவனை அமரவைத்துப் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் நின்றுகொண்டிருந்தனர்...
அதைப்பார்த்த சக்தி " நீங்க இரண்டுபேரும் ஏன் நிக்கறீங்க, உட்காருங்க” என்றதும், ஷன்மதி அவனின் அருகில் அமர, அடுத்து விஷ்ணு அமர்ந்தான்...
அதன்பின் விழாவிற்கான மாணவர்களின் ஏற்பாடு என்ன, அதற்கான பாதுகாப்பு என்ன என்று விவாதித்துச் சிலபல முடிவுகள் எடுக்கப்பட்டன....
முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் சக்தியோ தனது ஆட்காட்டி விரலைவைத்து மறைவாக ஷன்மதியின் கைகளில் கோடாக இழுக்கவும் ஒரு நொடி அவளது உடலில் எதுவோ தடம்புறள... ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து 'அடி' என்று சைகைசெய்ய, சக்தியோ இப்போது அவளது இடது கரத்தின் விரல்களோடு தனது வலது கரத்தின் விரல்களைக் கோர்த்துப் பிடித்துக்கொண்டான்....
அவஸ்தையாகக் கண்களினாலே நண்பனுக்குகூடத் தெரியாமல், உதடுக்கடித்துக் கையைவிடுவிக்கச் சொல்லவும், அவனோ தனது உடலை முன்பக்கமா தன்னை நகர்த்தி முதல்வரிடம் சுவாரஷ்யமாகப் பேசவதாகக் காட்டிக்கொண்டான்...
ஷன்மதியின் ஒவ்வொரு அசைவையும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கும் விஷ்ணு அவள் சரியில்லை என்று உணர்ந்து "ஷானு" என்று மெதுவாக அவளை அழைக்க...அவளின் மொத்தக் கவனமும் சக்தியிடம் மட்டுமே...
தனக்கானவன் என்று உணர்ந்த தருணம் இதுவே வேறு யாராவது என்றால் அவனின் பல்லை உடைத்திருப்பாள்...
மெதுவாக அவளது கையில் எதையோ திணித்தான் சக்தி...
எடுத்துப்பார்க்க... சின்னப் பேப்பர் அதில் சக்தியின் நம்பர்...
அதைத் தனது கைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டாள்...
அதற்குள் அவர்களைப் போகச்சொல்லவும் விடைப்பெற்றவர்கள் எழும்பவும்தான் விஷ்ணு பார்க்கவும் ஷன்மதியின் கரங்களை சக்தி பிடித்திருப்பதைக் கண்டவன்...கொதிநிலையின் உச்சிக்கே சென்றவன்...ஷானு என்று சிறு அதட்டலுடன் அழைக்கச் சட்டென்று கைகளை விடுவித்துக்கொண்டு வந்துவிட்டாள்...சக்தியை பார்க்க அவன் அலட்சியமாக விஷ்ணுவைப் பார்த்துவைத்தான்...நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளாடா என்று.
அந்த இடைவெளியிலும் ஷன்மதியும் சக்தியும் கண்களாலேயே பேசிக்கொண்டிருந்தனர்...அவளது கையைப்பிடித்து விறுவிறுவென்று இழுத்துக்கொண்டு வெளியே வந்தவன்...
தன்னை நிதானப்படுத்திக் கொள்ளத் தனது தலையைக்கோதியவன்...அப்படியே நிற்க அவனது தோளைப்பிடித்தவள் "ஏன் டென்சனா இருக்க" எனக்கேட்க...
“அந்தச் சக்திகுமரன் பக்கா போலிஸ்டா...அவன்கிட்டலாம் அன்பு பாசம்லாம் எதிர்பார்க்க முடியாது...
அன்னைக்கு உன்னைத்தேட எவ்வளவுக் கெஞ்சினேன் தெரியுமா, அதைவிட முதல்நாள் நம்ம அவரை மதிக்காம வந்தோம் அதுக்காகப் பழிவாங்கக்கூட உன்கிட்ட..." என்று வார்த்தையை நிறுத்த...
"ஏன் நிறுத்திட்ட பழிவாங்க என்கிட்ட பழகுறாருனு சொல்ல வர்றியா" என எதிர்கேள்விக் கேட்டாள்...
“அப்படியில்லை ஷானுமா ...உனக்கேத்தவரு அவரில்லை இனி அவர் வந்தாலும் பேசாத சரியா?” என்க...தன்னுடைய நலனுக்காக நண்பன் பார்க்கின்றான் என்றதும் அவனிடம் வாதாடாமல் “சரி உனக்குப் பிடிக்கலைனா அவருக்கிட்ட இனி பேசமாட்டேன்...ஓகேவா" என்று அவள் செல்லிவிட்டுத் திரும்ப சக்தி அங்கே நின்றான்...
அவள் பேசியதைக் கேட்டிருந்தான் முகத்தில் கோபத்தின் சாயல்...அது அவனது கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது ஷன்மதி தான் தவித்துப்போனாள்....
ஆனால் விஷ்ணுவோ முகத்தில் புன்னகையோடு சக்தியைப் பார்த்து வைத்தான்.
"பார்த்தியா அவள் என் பேச்சைத்தான் கேட்பாள்...இப்போவந்த நீ எங்களுக்கு இடையில் வரமுடியாது” என்று
சக்தியோ ஒருபக்கமாக உதட்டை வளைத்து ‘போடா நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா’ என்றுவிட்டு போய்விட்டான்...
ஷன்மதியோ சக்தி சென்ற திசையைப் பார்த்து நிற்க.. அதற்குள் அவளைத் தன்னோடு இழுத்துக்கொண்டு
வகுப்பிற்குள் நுழைந்துவிட்டான் விஷ்ணு....
இப்போது இரவு பத்து மணிக்கு மேலிருக்கும் தனது போனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஷன்மதி...
சக்திக்கொடுத்த நம்பரை பதிந்து வைத்துவிட்டு குறுந்தகவல் அனுப்பவா? வேண்டாமா? என்று நூறாவது முறையாகப் போனை எடுத்தவள் மறுபடியும் கீழே வைத்தாள்.
ஒருவழியாக "ஹாய் ஐயம் ஷன்மதி" என்று அனுப்பிவிட்டு காத்திருக்க...தகவல் சென்றது, ஆனால் பார்க்கவில்லை.
நள்ளிரவு வரை காத்திருந்தவள், அவனிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றதும் போனை அப்படியே கையில் வைத்துக்கொண்டே தூங்கிவிட்டாள்...
திடீரென்று போனில் அழைப்புச் சத்தம் கேட்கவும் படபடவென எழுந்தவள் பார்க்க அது சக்தியின் அழைப்பு என்றதும் எடுத்துக் காதில் வைக்க
"என்ன சண்டிராணி தூங்கிட்டீங்க போல " எனக் கேட்டுவிட்டுக் கம்பீரமாகச் சிரித்தான்...
ஷன்மதிக்கோ அவனது அந்த ஆளுமையான குரலும் பேச்சுமே அடிவயிற்றிலிருந்து ஜிவ்வென்று ஒரு உணர்வைக்கொடுக்க...
ஹஸ்கி குரலில் "காத்திட்டிருந்தேன் அப்படியே தூங்கிட்டேன்"
சக்தி "ஓ...சாரி...இப்போதான் வீட்டிற்கு வந்தேன்...உன்னோட மெசேஜ் பார்த்ததும், காத்திட்டிருப்பியோனு தான்
அழைச்சிட்டேன்"
“நீங்க வர இவ்வளவு நேரமாகுமா? அப்போ நான் தினமும் இப்படித்தான் காத்திருக்கனுமா? எப்படி உங்ககிட்ட பேசுறது?” எனச் சிறுபிள்ளையென நிருபித்தாள்...
“ச்ச..ச்ச...அப்படிலாம் காத்திருக்க வைக்கமாட்டேன்” என இரு அர்த்தத்தில் பேச அது எங்கே அவளுக்குப் புரிந்தது...
அவள் அமைதியாக இருக்கவும் "ஓய் நீ படுத்து தூங்கு நான் காலையில் பேசறேன்"
"ம்ம்..” என்றவள் போனை வைக்கப்போகவும் " நீங்க சாப்பிட்டீங்களா" என மெதுவாகக் கேட்க...
"நான் சப்பிட்டுட்டேன் .கேட்டதுக்குத் தேங்க்ஸ்" என்று வைத்துவிட்டான்.
அதன்பின் அவளுக்குத் தூக்கம் எங்கே வந்தது..கனவுகள்தான் வந்தது...
அடுத்த நாள் காலை எழும்பியவளின் முகத்தில் புதுக்கலை வந்திருந்தது...சக்தி காலையிலயே அவளுக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தான் அதைப் பார்த்ததும் அவளுக்கு அந்த நாளே புதியதாக இருந்தது...சந்தோஷமாகவே சாப்பிட்டுக் கிளம்பியவள், ஹரிதாவின் சொல்பேச்சைக்கேட்டு, விஷ்ணுவிற்காகக் காந்திருந்தாள்...
வீட்டிலிருப்பவர்களுக்குத்தான் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியாதக இருந்தது...ஷன்மதிக்கு என்னவோ ஆகிட்டு என்று...
அவள் நினைத்ததைச் செய்துக்கொண்டிருந்தவள் ஒரே நாளில் நல்லபிள்ளையாக நடந்துக்கொள்ளும்போது பயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது...இவர்களுக்கே இப்படியென்றால் விஷ்ணுவிற்கு எப்படியிருக்கும்....
அவனது வண்டியில் ஏறி அமர்ந்தவள் கல்லூரி செல்லும்வரைக்கும் பேசவேயில்லை...வகுப்பிற்குள் இருக்கும்போதும் மொபைலை பார்த்து பார்த்து இருக்க...
வெளியே சென்றவளின் போனை எடுத்துப்பார்த்த விஷ்ணுவிற்குக் கண்கள் தெரித்துவிழாத குறைதான்...குட்மார்னிங்க் மெசேஜ் அப்புறம் இரவு இவள் அனுப்பியிருந்த தகவல் எல்லாவற்றையும் பார்த்தவன்...
அது சக்தியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்து அந்த எண்ணை பிளாக் செய்துவைத்துவிட்டான்...அவள் திரும்பி வந்ததும்...
"ஷானு வகுப்புல எதுக்குப் போன்..உன்னோடத நானே வச்சிக்குறேன்” என்று தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்...
அவளும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...கல்லூரி முடிந்து வீடுவந்தபிறகும் சக்தியிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றதும்...
‘நம்ம பேசறது அவங்களுக்குப் பிடிக்கலையா? இல்லையே பெர்சனல் நம்பர் அவங்கதான தந்தாங்க...’ என யோசித்துக் கொண்டே இருந்தாள்...
அவளுக்குக் கோபம் உடனே சக்திக்கு அழைக்க; அழைப்புப் போய்க்கொண்டிருந்தது எடுக்கவில்லை...
அவளுக்கு சக்தி தன்னை தப்பா நினைச்சிட்டாங்களோ என்று அழுகையாக வர...அதையும் மீறிகோபம் வந்தது...
மறுபடியும் அவனுக்கு அழைக்க எடுத்தவன் "சொல்லுங்க மேடம்...என்னோட மெசேஜ், கால்ஸ் எல்லாத்தையும் பிளாக் பண்ணிட்டு நீங்க மட்டும் கால் பண்றீங்க...ஒரு நாளிலயே என்கூடப் பேசறது போரடிச்சிட்டுப்போல" என்றதும்...
அவளுக்குக் கண்ணீரே வந்துட்டு "காலையில இருந்து உங்களது போன் காலுக்காக வெயிட்டிங்க்...நீங்க பேசாமல் இருந்திட்டு, என் மேல தப்பு சொல்றீங்க ஆஃபிசர்" என்று அழுதுக்கொண்டே எகிறினாள்...
பேலிஸ் முளையல்லவா உடனே " உன் போன் யாருக்கிட்ட இருந்துச்சு" என்று வினவ...
" விஷ்ணுக்கிட்ட இருந்துச்சு...அவனைச் சந்தேகப்படுறீங்களா சார்...போலிஸ் புத்திய காண்பிக்குறீங்களோ...அவன் அப்படியில்லை"என்று அவனிடம் சண்டைபிடிக்க..
சக்தி சிறிதுக்கோபத்துடன்" உனக்கு மொபைல் யூஸ் பண்ணத்தெரியும்னா என்னோட நம்பர்லபோய் ஒரு தடவை செக் பண்ணிட்டு, யாரு மேலத் தப்புனு சொல்லு..உன் போன் காலுக்காக வெயிட்டிங்” என்றவன் அழைப்பை துண்டித்தான்...
தனது மொபைலில் அவனது நம்பரைத்தேட காணவில்லை...சிறிது அதிர்ந்தவள் பிளாக் லிஸ்ட்ல பார்க்க அங்கியிருந்தது....
அப்படியே போனையே அதிர்ந்து பார்த்திருந்தாள்...
அத்தியாயம்-4
போனைப் பார்த்துக்கொண்டே என்ன சொல்வதென்றுத் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு விஷ்ணுவிடமிருந்து அழைப்பு வந்தது, எடுத்துக் காதில் வைக்கவும் விஷ்ணுவோ " ஷானு தூங்கலையா, இன்னுமா முழிச்சிட்டிருக்க... உன் போன் பிஸியாக இருக்குமோனு நினைத்தேன்" என்று அவனே பேசிக்கொண்டிருந்தான்.
ஷன்மதியோ " ம்ம்” என உம் கொட்டிக்கொண்டிருந்தாள்.
" என்ன பாதித் தூக்கத்துலயேவா பேசுற, சரி உனக்குத் தூக்கம் வருதுனா தூங்கு நான் போன் வைக்கிறேன்" என்று வைத்துவிட்டான் விஷ்ணு...
அவன் அழைத்தது எதற்கு என்று அவளுக்குப் புரிந்தது...சக்தியுடன் பேசிக்கொண்டிருக்கின்றேனா என்று தெரிந்துக்கொள்ள அழைத்திருக்கின்றான்.
இல்லையென்றதும் போனை வைத்துவிட்டான்.
ஷன்மதிக்குக் கண்களில் கண்ணீர் முட்டிநிற்க அப்படியே தலையணையில் சரிந்தாள்...சக்திக்கு திரும்ப அழைக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து சக்தியின் அழைப்பு வர எடுக்கவா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்... அதற்குள் அழைப்பு நின்றது.
அவளுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது சக்தி தான் அனுப்பியிருந்தான் எடுத்துப் பார்த்தாள் "இனிமேல் உனக்கு நான் மெசேஜும்,போன்காலும் பண்ணமாட்டேன். நண்பர்கள் எப்பொழுதுமே நமக்கு நல்லது தான் சொல்லுவாங்க. உன் நண்பனும் உனக்கு நல்லது தான் செய்வான் சொல்லுவான்,அதனால் அவன் என்ன சொல்கிறானோ அதன்படி கேட்டு நட.குட் பாய்" என்றிருந்தது.
ஷன்மதிக்கோ இப்போது நன்கு அழுகை வர சத்தமாக அழுதாள்...அழுது அழுது அப்படியே தூங்கிவிட்டாள்.
கல்லூரிக்குப் போகவேண்டாம் என்று நினைத்தாலும், போகாமலும் இருக்க முடியாது ஏன் என்றால் இரு தினங்களில் கல்லூரி விழா வேறு இருப்பதால், ஷன்மதி கண்டிப்பாகப் போக வேண்டிய கட்டாயம், காலையில் எழும் பொழுதே மனசு சரியில்லாமல் இருக்க...
குளித்துத் தயாராகித் தனது தகப்பனிடம் வந்து, "என்னை நீங்க காலேஜ்ல ட்ராப் பண்றீங்களா டாடி" என்று அமைதியாகக் கேட்ட அவளின் முகத்தைப் பார்த்து, உற்சாகமின்றி மகள் காணப்படுவதைக் கண்டு " ஏன்டா முகம் ஒரு மாதிரி இருக்கு விஷ்ணு கூடச் சண்டை போட்டியா இல்லை வேற ஏதும் பிரச்சினையா ஒரு கை பாத்துருவோம்" என்றான்...
"ஒண்ணுமில்ல டாடி லேசா ஃபீவரிஸா இருக்கு. அதான் நீங்க கார்ல கொண்டு விடுறீங்களானு கேட்டேன்; நீங்க பிஸினா விஷ்ணுவுக்குப் போன் பண்ணி அவன் கூடப் போறன்" என்கவும்...
"உன்னைக் கொண்டுவிடுறதை விடவா எனக்கு வேறவேலை முக்கியம்...சாப்பிடு நானே காலேஜ்ல ட்ராப் பண்றேன்" என்று
காரில் அழைத்துச் சென்றான்...மகளின் முகத்தை முகத்தைப் பார்க்க ஷன்மதியோ தன்னோட சிந்தனையிலேயே உளன்றவள் ஷ்ரவனைக் கவனிக்கவேயில்லை...
ஷ்ரவனோ மகளைக் கவனிக்கவேண்டிய நேரமிது என்று புரிந்துக்கொண்டான்.
அவனும் காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டவனல்லவா...பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் வந்திருக்கு, ஒன்னு காதலாக இருக்கணும்...இல்லைனா எதாவது மனதின் காயமாக இருக்கணும்னு தகப்பனாகச் சரியாக மகளைக் கணித்துவிட்டான்.
ஷன்மதியோ விஷ்ணுவிற்கு ஏற்கனவே அப்பாக்கூட வர்றேன் எனத் தகவல் அனுப்பிவிட்டாள்...
மகளைக் கல்லூரியின் வாயிலில் இறக்கி விட்டவன், அவளிடம் கவனமாக இருடா என்று ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
விழாவிற்கான ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்து கொண்டிருந்தது... விஷ்ணு ஷன்மதியிடம் ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொன்னாள், மற்றபடி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
விஷ்ணுவின் மனதிற்கும் சிறு உறுத்தல் இருக்கத்தான் செய்தது.சக்தி நம்பரை பிளாக் செய்ததெல்லாம் பார்த்திருப்பாளோ என்று... ஆனா ஷன்மதியோ, அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட விஷ்ணுவிடம் கேட்கவில்லை.
விழாவின் நாளன்று மாலை நேரம், ஷன்மதி சேலைக்கட்டியிருந்தாள். நடந்துவரும்போதே சக்தி இன்னைக்கு இங்க வருவாங்கதான என்ற எண்ணத்தில் தான் நடந்துகொண்டிருக்க, சேலை கட்டி பழக்கமில்லாததால் கால் தட்டிவிழப்போக,யாரோபிடித்து நிறுத்திய உணர்வு, திரும்பி பார்க்க சக்தியே தான் அவளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டான்.
அவன் சென்ற திசையவே பார்த்துக்கொண்டு நின்றிருக்க...எல்லா முக்கியமானவர்களும் வந்துவிட்டதால் விழாவும் தொடங்கியது.
ஷன்மதி மற்ற மணவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டாள்...விஷ்ணு அவளிடம் வந்து ‘நீ எப்போ வந்த? ஏன் என்கிட்ட வரலை?’ என்று கேட்டுக்கொண்டிருந்தவன் ஷன்மதியின் கண்களைப் பார்க்க, அது வெறுமையாக இருந்தது...
"ஷானு" என்றவனிடம் கையைக்காட்டி "விளக்கம் எதுவும் சொல்லவேண்டாம், என் விஷ்ணுவை எனக்குத் தெரியும்" என்று பேச்சினை முடித்துவிட்டாள்.
எங்கிருந்தாலும் சக்தியின் கண்கள் ஷன்மதியை கவனிக்கத் தவறவில்லை.
கடைசிவருட மாணவர்களுக்கான உரையை ஷன்மதியிடம் கொடுத்திருந்தனர்...தனது பேச்சினை முடித்துக்கொண்டு கீழே வந்தவளின் காலில் சேலை தட்ட அதையும் சமாளித்துப் பின்பக்கம் வந்துவிட்டாள்.
அப்போதுதான் தெரியும் சேலை முழுவதும் இடுப்பிலிருந்து கழன்றுவிட்டதென்று, என்னசெய்யவென்று திருதிருவென முழித்து நின்றவளுக்குத் துணையாக யாருமில்லை...தோழிகளையும் அழைக்க முடியாத நிலையில் மெதுவாக நடந்து சேலையைக் கையில் பிடித்துக்கொண்டு வகுப்பறைக்குள் செல்ல, அப்போதுதான் அமைச்சரும், ஆளுநரும் கிளம்பி சென்றிருந்தனர்...அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு, சக்தி உள்ளே வரவும் ஷன்மதி செல்வதைப்பார்த்து அவளின் பின்னே சென்றான்.
அவள் வகுப்பிற்குள் நுழைந்து கதவை சாத்துவதற்கு எத்தனிக்க, சக்தி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்.
அந்த நேரத்தில் யாரையும் எதிர்பார்க்காத ஷன்மதி வேறு யாரோ என்று நினைத்துச் சத்தம் போட போக, சட்டென்று அவளது வாயை தனது கையால் மூடி இருந்தான்...
"கத்திராத நான் தான்" என்று தனது கையை எடுக்காமலயே அவளிடம் சொல்லவும், அவளது கண்களில் அவளது ஆசுவாசம் தெரிய, மெதுவாகத் தனது கையை எடுத்தவன்.... “இங்க எதுக்கு இப்போ தனியா வந்திருக்க?” என்று கேட்டபடியே ஒரு பெஞ்சின் மேல் ஏறி அமர்ந்தவன் அப்படியே சுற்றி நோட்டமிட்டான்.
ஷன்மதிக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை...தனது கையில் இருக்கும் சேலையைச் சுட்டிக்காட்ட புரிந்தவன்.
"ஓகே சீக்கிரம் கட்டிமுடி, இந்த நேரத்துல தனியா வந்திருக்கபாரு உன்னையெல்லாம் என்ன சொல்ல, குருட்டுத் தைரியம் உனக்கு அதிகம் தான் " எனப் பேசியபடியே அங்கயே இருந்தான்.
ஷன்மதியோ அவன் முன்னாடி எப்படிச் சேலை கட்ட என்று, "நீங்கள் கொஞ்சம் வெளிய போறீங்களா நான் சேலை கட்டிக்குறேன் "என்றவளைப் மேலும் கீழும் பார்த்தவன்...
“நீ சேலைக்கட்டப்போறியா? சேலையைப் பிடிச்சிருக்குற அழகைப் பார்த்தாலே தெரியுது நீ எப்படிச் சேலைக்கட்டுவன்னு. எப்படி இன்னைக்குள்ள கட்டிமுடிச்சு வெளியவந்திருவியா?” என நக்கலாகச் சிரித்தான்.
"அது எப்படி உங்களுக்குத் தெரியும்.
அம்மாதான் கட்டிவிட்டாங்க, பின்லாம் வச்சிருந்தேன். இப்போ மொத்தமா அவுந்திட்டு. அப்பா வர்றவரைக்கும் சமாளிச்சிட்டேனா வீட்டுக்குப்போயிடலாம் அதான்...”
"அதுக்கு எதுக்கு இப்படிச் சுருட்டி அள்ளி வச்சிருக்க" எனச் சக்தி கேட்க.
“டீஸ் பண்ணாதிங்க...நீங்க வெளியப்போங்க நான் எப்படியாவது சுத்திட்டு வர்றேன்” என்றதும்.
பெஞ்சிலிருந்து குதித்தவன், அப்படியே ஷன்மதியின் அருகில் நெருங்கி வந்தான்.
அவளோ ‘ஐயோ என்ன பண்ண போறாங்களோ?’ என்று முழித்துக் கொண்டு நிற்க...
அவளருகில் வந்தவன், அவள் கையில் இருந்த சேலையை வெடுக்கென்று இழுக்கவும் அது அவனது கையோடு வந்திருந்தது.
“ஐயோ! என்ன பண்றீங்க?” எனத் தனது கையை மார்போடு வைத்து மறைத்துக்கொண்டாள்.
சக்திக்கும் அவள் நின்றிருந்தது எதேதோ உணர்வுகளைத் தூண்டியது தான்.
இருந்தாலும் இது சரியான நேரமில்லை என்று அடக்கிக்கொண்டான்.
இப்போது ஷன்மதியைப் பார்த்து தனது புருவத்தை உயர்த்தி “நான் சொல்லித்தரவா?” என்று கேட்க...அது புரியாதவளோ “என்ன?” என்று திரும்ப அவனிடம் கேட்டு நின்றாள்.
"சேலைக்கட்ட சொல்லித்தரவானு கேட்டேன்"
"ஓ...உங்களுக்கு எப்படித்தெரியும்" எதிர்க்கேள்வி கேட்டவளிடம்.
"உனக்குத்தெரியாதா? ஐ.பி.எஸ் ட்ரைனிங்கல இதெல்லாம் சொல்லித்தந்தாங்க"
அதைக்கேட்ட ஷன்மதியோ தனது கையை எடுத்து இடுப்பில் வைத்துப் பொய்யாக அவனை முறைத்து நிற்க.
‘ஹப்பா...நானே என் மனசை அடக்கினாலும், இவ உசுப்பேத்தி விடுறாளே...குமரா சேதாரமில்லாம வெளியப் போய்டுவியா?
கண்ட்ரோல்டா ...கண்ட்ரோல்’ எனத் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
“இதுக்கெல்லாமா ட்ரைனிங் குடுப்பாங்க...கண்ணு பார்த்தால் கை செய்ய வேண்டாமா...அதுதான் அறிவு...அதெப்படி உன்கிட்டயிருக்கும்...?” என்று சிரித்தான்.
அவனது அந்தக் கம்பீரமான சிரிப்பை ரசித்தவள்...அப்படியே அவனைப் பார்த்துக்கொண்டு நிற்க.
“சீக்கிரம் பக்கத்துல வா...யாராவது பார்த்தா இந்த ஏ.ஐ.ஜி சேலைக்கட்டி விடுறேனு நீயுஸ்ல போட்டுடப் போறானுங்கம்மா..என் மானம் கப்பலேறிடும்..” என்று பேசிக்கொண்டே,
அந்த க்ஷனத்தில் அழாக மடிப்பு எடுத்து
அவளைத் தன்னருகில் கொண்டுவந்து இடுப்பில் சொருகிவிட்டான்.
இதை எதிர்ப்பார்க்காதவளுக்கோ...உயிர்ப்பூ பூத்தது ...தனது வயிற்றினை எக்கி வைத்திருந்தாள். அவனோ கையை அப்படியே வைத்திருக்க...அவளோ சக்தியின் கண்களையே பார்த்து நின்றாள்...
சக்தி தான் தனது கையை எடுத்து சிறிது விலக, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள் ஷன்மதி.
என்னவென்று சக்தி அவளைப் பார்க்க,
“என் மேல இன்னும் கோபத்துல தான் இருக்கீங்களா?”
என்று கேட்கவும், அவளது முகத்தைத் தனது கைகளில் ஏந்தியவன்.
அப்படியே அவளது அதரங்களைத் தனது உதடுகொண்டு மெதுவாகக் குனிந்து தொடவும்...ஷன்மதி தனது கண்களை மூடிக்கொண்டாள்.
சக்தி "இந்தச் சண்டிராணியை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...என் வாழ்க்கை துணையா வரணும்னு ஆசைப்படுறேன்
ஆனால் அது அவளுக்குத்தான் புரியமாட்டுக்கு "
தனது கண்களை மெதுவாகத் திறந்தவள் "அவளுக்கு எல்லாம் புரியும்...உங்க வாழ்க்கைத்துணையா வர்றதுக்குச் சண்டிராணி தயாராகதான் இருக்காள்"
"அப்படியா? அதைக் கொஞ்சம் செக் பண்ணிடவா"
" எப்படியாம்"
“அது சொன்னாலாம் புரியாது செயல்லதான் செக் பண்ணனும்” என்றான்.
அதன்பின் சும்மா இருக்க சக்தி என்ன முனிவனா? ஷன்மதியின் அதரங்களை மெதுவாகக் கடித்து இழுத்தவன், அவளின் இடுப்பில் கைக்கொடுத்து தன்னோடு இறுக்கிக்கொண்டான்.
அவளது திமிறும் அழகு சக்தியின் நெஞ்சோடு அழுந்த...அவளோ அவனது தோள்களைப் பிடித்துக்கொண்டாள்.
இடதுக்கையால் அவளது கேசத்திற்குள் நுழைத்து அழுத்திப்பிடித்துக்கொண்டான்.
மீசைமுடி அவளது வாயிற்குள் செல்ல, அவளோ கடித்து வைக்க, அதன்பின்புதான் மெதுவாக அவளது வாயிலிருந்து தன்வாயை எடுத்தவன்.
மெல்ல கன்னங்கள், கண்கள் என் முத்தமிட தடுத்தவள் “மீசைக் குத்துது...” எனச் சிணுங்கினாள்.
அப்படியே அவள்மேலே சாய்ந்து நின்றவன், ஒட்டி உரசிக்கொண்டு ...அவளது கையை எடுத்து தனது உதட்டினில் தேய்த்துக்கொண்டே
"மதி" என்றழைக்கவும்.
அவளது கண்கள் ஆம்பலாக விரிந்து
"எல்லோரும் என்னை ஷானுதான் கூப்பிடுவாங்க..நீங்க என்ன மதினு கூப்பிடுறீங்க"
சக்தி "அது தெரியும்டி, அதான் நான் மட்டும் மதினுக் கூப்பிடுறேன்..புரியுதா? நான் உனக்கு ஷ்பெசல்தான், அதே மாதிரி நீயும் எனக்கு ஷ்பெசல்தான்"
"ஆமா..ரெம்ப ஷ்பெசல்"என்று தனது உதட்டினைக் குவித்து முத்தமிடுவதுப்போலச் சைகைசெய்து சொன்னாள்.
மறுபடியும் அவளைத் தனது கைக்குள் கொண்டுவந்தவன் காட்டுமுத்தம் வைக்க ஆம்பித்தான்...கிடைக்கும் இடமெல்லாம் முத்தமும், தனது பற்களால் கடித்தும் வைத்தான்.
பெண்ணவளோ தாளாது அவனுக்கு விட்டுக்கொடுக்க, தனக்குள்ளாக இறுக்கினான்,அவளது எலும்பை உடைக்கும் அளவுக்கு...
மெதுவாக அவளைத்தூக்கி பெஞ்சில் அமரவைத்தவன்...அவளது கால்களுக்கிடையில் தான் நின்றுக்கொண்டான்.
அவளது கரங்களை எடுத்து தனது கன்னங்களில் வைத்தவன் "எல்லாரையும் விட என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு சொல்லு"
அவளுக்கு அவன் சொல்லவர்றது புரியாமாலில்லை...அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தவள் , அவனது மீசையை இழுத்து அவனது கீழுதட்டை கடித்துவைத்தவள்...”இப்படிலாம் கேள்விக்கேட்ககூடாது...ஆஃபிசர்”
"உங்களை எவ்வளவுப் பிடிக்கும்னு சொல்லிலாம் புரியவைக்கமுடியாது...அது நம்ம இரண்டுபேரும் வாழும்போதுதான் உணரமுடியும் சரியா" என்றவளின் தலையைப்பிடித்து ஆட்டியவன் “சரிங்க லாயர்...எப்படி இப்பவே பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சிட்டேன் பாரு” என தனது மீசையை பிடித்து முறுக்கிக்கொண்டே சொன்னான்...இப்படியாக அவர்கள் அங்கு கொஞ்சிக்கொண்டிருக்க...
விஷ்ணுவோ அங்குத் தனது தோழியைத் தேடியவன் அவளைக் காணவில்லை என்றதும், எங்கேயாவது பிரண்ட்ஸ்கூட இருப்பாள் என்று சிறிது நேரம் காத்திருந்தான், திரும்பவும் சுற்றி சுற்றிப்பார்க்க காணவில்லை வகுப்புத்தோழிகள் எல்லோரும் இருக்க...இவள் மட்டுமே அங்கில்லை.
மெதுவாக அவளது போனுக்கு அழைக்க அழைப்பு போய்க்கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படவில்லை...பலமுறை அழைத்தும் எடுக்கபடவில்லை...ஏற்கனவே நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வர. இப்போது பயந்து தேட ஆரம்பித்தான் வீட்டிற்குபோயிருப்பாளோ என்று ஷ்ரவனுக்கு அழைக்க.
அவனோ "எப்போடா பங்க்ஷன் முடியும், கூப்பிட வரவா" என்று இவனிடம் கேள்விகள் கேட்டான்...
"இல்லை அங்கிள் நாங்களே வந்திடுவோம்...நீங்க வரவேண்டாம்" என்றவனுக்குப் பயம் பிடித்துக்கொண்டது.
தேடியலைந்தவன் வகுப்பறைகளைத் திறந்து தேடிக்கொண்டிருந்தான்...தங்களது வகுப்பறைக்கருகில் வரவும், ஷன்மதி கதவைத்திறந்து வெளியே வந்தாள், அவளைப் பின்னாக இருந்து சக்தி பிடித்து இழுக்கவும், அவள் திமிறி வெளியே வர்றதையும் பார்த்துக்
கொண்டுவந்தவனுக்கு...
சக்தி ஷன்மதியை பலவந்தப்படுத்துகின்றது போலத் தோன்றுவும் ஓடிவந்தவன் சக்தியை பிடித்துத் தாக்கப்போக...
சக்தி அதைத் தடுத்து அவனது சட்டையைப்பிடிக்க.
இருவரும் வராண்டாவில் உருண்டுப்புரள....இருவரும் ஆக்ரோஷமாகத் தாக்கிக்கொண்டனர்..ஷன்மதி சத்தம் போட்டாள் “விஷ்ணு விடு அவரை எதுக்கு அடிக்குற...” என்று.
“நீங்களாவது விடுங்களேன்” என்று சக்தியை பிடித்து இழுக்க...எங்க விஷ்ணுவோ ஆவேசத்தின் உச்சத்தில்
"எங்க ஷானுவையே தப்பாபிடிச்சு இழுக்குறியா...ராஸ்கல்” என்று சக்தியின் யூனிபார்ம் சட்டையைப் பிடித்திழுக்க.
அதைத் தடுத்த சக்தி “புரியாம பேசாதட பரதேசி” என்று விஷ்ணுக்குப் போலிஸ் அடி ஒன்று வைக்க...அவ்வளவுதான் வாயில் இரத்தத்தோடு கீழே விழுந்திருந்தான்.
சக்தியுமே இதை எதிர்பார்க்கவில்லை...
ஷன்மதி தான் ஓடிப்போய் அவனை எழுப்பினாள்...
" ஐயோ! இரத்தம்” என்று தனது சேலையை வைத்து துடைத்தவள், சக்தியிடம்
“ நீங்களாவது பொறுமையா இருக்கமாட்டீங்களா?” என்று சக்தியை கடிந்துக்கொள்ள.
“புரியாமல் பேசாதடி எப்போப்பாரு முறைச்சிக்கிட்டு...போலிஸ்காரன் என்மேலயே கைவைக்கிறான்... இதைவேற யாராவது பார்த்தால் என்னாகும்...என் பதவிக்கான மரியாதை என்னாகும்...” என்று கோபத்தில் பொங்கினான்.
தனது கையைத் தலையில் வைத்துக்கொண்டு வராண்டாவிலயே
அமர்ந்து சத்தமாக அழ ஆரம்பித்தாள், விஷ்ணு ஓடிவந்து " ஷானு" என்க
இங்கோ சக்தி "மதி"என்று அழைத்தான்.
விஷ்ணுவிடம் திரும்பி "சக்திகிட்ட நான் தனியா பேசிட்டிருந்தேன்...எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு..நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம்...எதுனாலும் பொறுமையா கேட்கமாட்டியா" என்றவள் இப்போது திரும்பி சக்தியிடம் " அவன்தான் என் நல்லதுக்காகனு செய்றான் நீங்க புரிஞ்சுக்காம இப்படி அடிச்சு வச்சுட்டீங்க"...
“எனக்கு யாருமே வேண்டாம் போங்கடா...” என்றவள் மெதுவாக எழும்பி நடந்தாள்.
அவளின் பின்னே இருவரும் வந்தனர்...முறைத்துக்கொண்டே. தனது கம்பீர நடையுடன் ஷன்மதியின் அருகில் வந்து சக்தி அவளது கையைப்பிடித்து "மதி இங்கப்பாரு. நான் டூயூட்டில இருக்கேன் இப்போ ஒன்னும் பேசமுடியாது, நான் நாளைக்கு உன்கிட்ட பேசுறேன்டா” என்றவன் அவளது அழுத கண்களைத் துடைத்துவிட்டவன்...விஷ்ணுவின் முன்னாடியே அவளது நெற்றியில் முத்தம் வைத்து சென்றுவிட்டான்...
இப்போது தான் விஷ்ணுவிற்குப் புரிந்தது தனது தவறு....ஆனால் அதைத் திருத்திக்கொள்ள முடியாதளவு அடுத்தநாள் காலையில், இவர்களது சண்டை தமிழ்நாடு முழுவதும் முக்கியமான தினசரி நாளிதழில் பதிவாகி வந்திருந்தது.
அத்தியாயம்-5
காலையில் ஆறு மணிக்கே ஹரிதா ஓடிவந்து ஷன்மதியின் முதுகில் நாலுபோடுபோட்டு எழுப்பினாள்...
“எதுக்கும்மா எழுப்புறீங்க, இன்றைக்குக் காலேஜ் லீவுமா, தூங்கவிடுங்க” என்றவளை...இன்னும் நாலு அடி அடித்து எழுப்பவும், “என்ன மம்மி காலையிலயே கலாட்டா பண்றீங்க?” என்றவளை, வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் ஹரிதா.
ஷன்மதியோ மெதுவாக எழும்பியவள்
“என்ன மம்மி காலையிலயே இவ்வளவு பாசமா பார்த்துவைக்கீங்க” என்றவள் போய் ப்ரஷ் அப் ஆகிவர...
ஹரிதா " ஜன்னல் வழியா கீழ எட்டிப்பாரு என்ன நடக்குதுனு" என்க.
“மம்மி நல்லாதான இருந்தீங்க நேத்துவரைக்கும்...இப்போ என்ன ஒரு மார்க்கமா பேசிவைக்கிறீங்க” என நடந்துக்கொண்டே பேசியவள் வெளியே எட்டிப்பார்க்க...குழம்பியவள் “என்னச்சு? ஏன் இவங்களாம் வந்திருக்காங்க?”
இப்போது ஹரிதா ஒரு தினசரி செய்தித்தாளை நீட்டினாள். வாங்கிப்பார்த்தவள் அதிர்ந்து, அப்படியே தலையில் கைவைத்துக் கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
“சீக்கிரம் கிளம்பி கீழ வா உங்க நிருபமா பாட்டி வந்திருக்காங்க...இதைப் பார்த்திட்டு அக்ஷரா அத்தை அழுதாங்களாம்.இவங்க கிளம்பி இங்க வந்திட்டாங்க,உங்கப்பாவும் உன்கிட்ட பேசணும்னு காத்திட்டிருக்காங்க சீக்கிரம் வா” என்றவள் சென்றுவிட.
அந்தச் செய்தியை வாசித்தாள் இப்பொழுது,
சட்டம் ஒழுங்கு ஏ.ஐ.ஜி சக்திகுமரனின் காதல் லீலைகள்.
நேர்மையின் சிகரம் என்று வர்ணிக்கப்படும் சக்திகுமரனின் மறுபக்கம்....சக்தி குமரனின் தப்பை தட்டிக்கேட்ட மாணவனுடன் அடிதடியில் இறங்கிய காட்சி என்று செய்தியோடு.
அவர்கள் மூவரின் படங்களும், அதுவும் விஷ்ணுவும், சக்தியும் சண்டைப்போடும் காட்சிகளின் படங்களும் இடபட்டிருந்தன.
அவளுக்கே இதுப்புரிந்தது, விஷ்ணு மட்டும் அப்போது வராமலிருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை...யாருக்கும் தெரியாமலயே வெளியில் வந்திருக்கலாம்.
உடனே சக்திக்கு அழைக்க அழைப்பு போய்க்கொண்டிருந்தது...எடுக்கவில்லை...அதிகாலையிலயே சட்டத்துறை அமைச்சரின் முன்பு அமர்ந்திருந்தான்;
அவனது சுப்பீரியரும் அமரந்திருந்தார்.
கீழே வந்தவள் ‘எப்படியும் எங்க காதலை வீட்ல சொல்லித்தான் ஆகனும் அதை இப்பவே சொல்லிடுவோம், ஏன் காலந்தாழ்த்திகிட்டு’ என தைரியமாகவே வந்து தகப்பனின் அருகில் அமர்ந்தாள்.
ஷ்ரவன் எதையுமே கேட்கவில்லை அமைதியாக அமர்ந்திருந்தான்...
நிருபமா " ஷானு இதுக்குக் கண்டிப்பா நீ விளக்கம் சொல்லணும்.ஒவ்வொரு விசயத்தையும் நாங்களே வந்து கேட்கமுடியாது...எல்லா விசயத்தையும் இப்பவே சொல்லி முடிக்கற...
அதுக்குப்பிறகுதான் இந்தப் பிரச்சனைக்கான முடிவு எப்படி எடுக்கணும்னு பார்க்கலாம்...”
அவர்களது காதலை சொன்னவள் நேற்று விஷ்ணு செய்ததையும் சொல்ல...
நிருபமா “விஷ்ணு பிரச்சனை செய்தது சரிதான்...அது அவன் பக்க நியாயம்...யாராக இருந்தாலும் அப்படித்தான் நடந்துப்பாங்க...ஆனால் விசயம் அதுவல்ல.
அந்தப் போலிஸ்காரனோட எதிரியாக இருப்பவன்தான் இதைச் செய்திருக்கணும். அவனுக்கு ஒருவேளை நீங்க இரண்டுபேரும் யாருன்னுத் தெரியாமல் இருந்திருக்கலாம்”
சிறிது நேரத்தில் ஷன்மதியின் போனிற்கு அழைப்பு வரவும் யாரென்று பார்க்க சக்தி...அழைப்பையேற்று பேச அந்தப்பக்கமோ சக்தி ரொம்பச் சூடாக இருந்தான்...
“எதுக்குக் கால் பண்ண? என்ன விசயம்?” என்று அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டான்...
ஷன்மதி அமைதியாக இருக்கவும் "என்ன மீடியாக்காரங்க உங்க வீட்டுக்கு முன்னாடி இருக்காங்களா? நீ எதுவும் பேசாத...வெளியவும் வரவேண்டாம். இன்னும் அரைமணி நேரத்துல அங்க வந்திருவேன். அந்த மடச்சாம்பிராணியையும் வரச்சொல்லு. வைக்கிறேன்" என்று அழைப்பைத் துண்டித்தான்...
ஷன்மதிக்கோ சக்தி செமக்கோபத்தில் இருக்கின்றான் என்று புரிந்தது.
உடனே விஷ்ணுவை அழைத்தவள் "நீ பண்ணின வேலையால இப்போ பாரு நம்ம மானமே போய்ட்டிருக்கு...டீவி நியூஸ்ல மட்டுந்தான் வரலை... ஒரு அரைமணி நேரத்துல வந்து சேரு...யாரு என்னக்கேட்டாலும் பதிலே சொல்லாத சரியா " என்றவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
ஷ்ரவன் முதன்முதலாக மகளிடம் கோபத்தைக் காண்பித்தான் பேசாமலிருந்து... “டாடி” என்று அழைத்தும் அவன் பதில் சொல்லவில்லை.
நிருபமாவின் மடியில்தான் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள்...
அவளது தலையை வாஞ்சையாகக் கோதிக்கோதிக்கொடுத்தார்.
சிறிது நேரத்தில் சக்தி ஷன்மதியின் வீட்டிற்கு வரவும் அவளுக்கு அழைத்து வெளியே வரச்சொன்னான்.
ஷன்மதி எழும்பி முகத்தைத் துடைத்துவிட்டு வெளியேப்போக, ஷ்ரவன் “எதுக்கு வெளியப்போற...?
அவன் கூப்பிட்டா நீ போவியா எங்ககிட்ட என்ன செய்யணும்னு கேட்கமாட்டியா...?” என்று முறைத்து நிற்க, ஷன்மதிக்கோ ஐயோ என்றிருந்தது...எந்தப்பக்கம் நிற்க என எரிச்சலானாள்.
“அவங்க உங்களைவிட ஸ்மார்ட்டா முடிவெடுப்பாங்கப்பா... இதுக்கு எதாவது தீர்வு ரெடி பண்ணிட்டுத்தான் வந்திருப்பாங்க.”
ஷ்ரவன் "என்ன சொன்ன...உங்கப்பாவைவிட அடுத்தவன் ஸ்மார்ட்னுச் சொல்றளவுக்குப் போயாச்சா...சரிதான் எங்களைவிட அவன்தான் முக்கியமா போய்ட்டான் அப்படித்தான...நீ உன் காதலை எங்ககிட்ட சொல்லவேயில்லை, அதைவிட நாங்க உங்கக் காதலுக்கு சம்மதமும் கொடுக்கலை நியாபகமிருக்கா"
“டாடி இந்தப் பிரச்சனை வராமலிருந்திருந்தால், நானே உங்ககிட்ட எல்லாம் சொல்லிருப்பேன்...இப்போ பிரச்சனையை முடிக்க வழியப்பாருங்க...
இந்தப் பிரச்சனையால அவங்களுக்கும் டிபார்ட்மெண்ட்ல இருந்து பிரஷர் இருக்கும் புரியாம பேசாதிங்க" என்று எல்லாத் திசையிலும் சக்திக்காக யோசித்தாள்.
பேத்தியை நிருபமா புரிந்துக்கொண்டார், இனி ஷன்மதியை மாற்றுவதென்பது குதிரைக்கொம்பு, அவளது காதலுக்குச் சம்மதம் சொல்லித் திருமணம் முடித்துவைப்பதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்.
“ஷ்ரவன் கொஞ்சம் அமைதியாயிரு...அவள் வெளியப்போகட்டும் பார்த்துக்கலாம்” என்றதும் தான் ஷன்மதிக்கு அனுமதிக்கொடுத்தான்.
இப்பொழுது எல்லோரும் வெளியே வரவும், சக்தியும் உள்ளே நுழைந்தான்...மீடியாக்கள் சூழ்ந்துக்கொண்டது.
சக்தியிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்க பதில் சொல்லாமல் உள்ளே வந்தான்
“என்ன சார் இங்க வந்திருக்கீங்க...
உங்கமேல உள்ள குற்றச்சாட்டுக்கு என்னபதில் சொல்லப்போறீங்க?” என்று ஒருவர் கேட்கவும் அந்தநேரம் விஷ்ணுவும் உள்ளே வந்தான்...
ஷன்மதி வந்ததும் அவளைத் தன்பக்கமாக நிறுத்தியவன்...
“இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறப் பொண்ணு ,டி.என் குருப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் மிஸ்டர்.ஷ்ரவன் அவங்களோட பொண்ணு ஷன்மதி...” அறிமுகம் செய்துவைத்தவன்.
“என் வருங்கால மாமானார் வீட்டிற்கு வருவதற்குகூட மீடியாக்கிட்ட சொல்லிட்டு வரணுமா என்ன? சொல்லுங்க...” இப்போது விஷ்ணுவை தனதருகில் அழைத்தவன் “இதுதான் எனது மச்சான் அதாவது என் வருங்காலாத்தோட கசின் கம் பிரண்ட்.
இதுக்குமேல எதாவது தகவல் சொல்லனுமா...அப்புறம் அந்த நாளிதழில் எதுக்கு எங்களுடைய பெர்சனல் போட்டோக்களைப் போட்டு ஒரு சொந்தக் கதையவும் உருவாக்கி போட்டாங்கனு எங்களுக்குத் தெரியலை...எதுவும் பெர்சனல் ரிவன்ஞ்ஜ் எடுக்கவா எனவும் தெரியலை...அதை மக்களின் நண்பனான மீடியாக்கள்தான் தெளிவுபடுத்தனும்” என்று முடித்துக்கொண்டான்.
வேறு சுவாராஷ்யமா எதாவது நியூஸ் கிடைக்கும் என்று வந்த மீடியாக்கள் அவர்களது திருமணவிசயம் கேள்விப்பட்டதும் அதையே செய்தியாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்...
வெளியே எல்லோரும் சென்றதும் சக்தி ஷன்மதியிடம் “உள்ளே கூப்பிடுவியா? இல்ல அப்படியே நான் வெளியே போயிடட்டுமா?” என்று கோபத்தில் கேட்டான்.
நிருபமா "வாங்கத்தம்பி உள்ள வாங்க, தப்பா நினைச்சிக்காதிங்க எல்லோரும் ஒருமாதிரி அதிர்ச்சியில் நிக்குறாங்க...தயவுசெய்து உள்ளவாங்க தப்பா நினைக்காதிங்க" என்று அழைத்தார்.
சக்தியை உள்ளே அழைத்துச்சென்ற நிருபமா அவனை அமர வைத்துவிட்டு, திரும்பி பார்த்தால் எல்லோரும் உள்ளே வந்துகொண்டிருந்தனர் , அதுவும் ஷ்ரவனின் முகமே சரியில்லை.
‘எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அவனுக்கான முடிவை அவன் எடுக்கலாம் ஆனால் எப்படி என் மகளுக்கான திருமண விஷயத்தை சக்தி முடிவெடுத்தான்’ என்று கோபத்தில் இருந்தான்...
எல்லாரும் வந்து அமரவும் சக்தி பேசினான்
"மன்னிச்சுடுங்க உங்க மகளோட திருமண விஷயத்தை உங்களுடைய முடிவு தெரியாமல் நானே மீடியாவில் பேசியது தப்பு தான்.... ஆனால் இதில் என்னோட மானம் மரியாதை மட்டுமல்ல, என்னுடைய வேலை போகுமா? போகாதா? என்பதும் இந்த முடிவில் அடங்கியிருக்கு. அதனால்தான் நானாகப் பேச வேண்டிய கட்டாயம்” என்று தன்னிலை விளக்கம் அளித்தான்.
“நானும் உங்கள் மகள் ஷன்மதி ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறோம், உங்ககிட்ட பேசிட்டுத்தான், எங்க அப்பா அம்மாவோட வந்து பொண்ணு கேட்கற மாதிரிதான் திட்டமெல்லாம் இருந்தது”
விஷ்ணுவைக் கைகாண்பித்து, “ஆனால் நேற்று இந்த மடையன் பண்ண வேலையால, எல்லாருக்கும் பிரச்சினை. காலையிலேயே என்னுடைய சுப்பீரியர் அழைத்துப் பேசிட்டாரு, அமைச்சருக்குப் பதில் சொல்லிருக்கு. அடுத்தது என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று எனக்குத் தெரியாது... அதை விட இது யார் செய்தது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
இதையெல்லாம் சமாளிச்சிருவேன் எங்கவீட்டு பெரியாளைத்தான் எப்படிச் சமாளிக்கப்போறனோ அதுதான் இப்போ எனக்குப் பெரிய விசயம்”.
ஷ்ரவன் “நான் உங்க காதலுக்குச் சம்மதம் சொல்லலை, இந்தக் கல்யாண விசயத்துலயும் உடன்பாடில்லை...அவ சின்னப் பிள்ளை அவளுக்கு என்ன தெரியும், அவ இன்னும் படிப்பை முடிக்கலை" என்று கோபத்தில் பேசினான்.
ஷன்மதிக்கோ அதிர்ச்சி தன் தகப்பன் தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக இருப்பார் என்று அவள் கிஞ்சித்தும் யோசித்ததுக்கூடக் கிடையாது...இப்போது ஹரிதா தான் ஷ்ரவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.
"நம்ம அவளுக்கு ஒன்னும் தெரியாது சின்னப்பிள்ளைனு சொன்னாமட்டும் எகிறிட்டு வருவாங்க...இன்னைக்கு அவருமட்டும் மகள் சின்னபிள்ளை ஒன்னுந்தெரியாதுனு சொல்லிட்டிருக்காரு...அதைவிடக் காதலுக்கு எதிர்ப்பு சொல்றாங்க, என்னங்கடா நடக்குது” என முழித்தவள் ஷ்ரவனைப் பார்க்க.
அவளது எண்ணம் புரிந்தவன் “பிறகுப் பேசிக்கலாம்டா” என்றுவிட்டான் ஹரிதாவிடம்.
ஷ்ரவன் பேசியதைக்கேட்ட சக்தி இப்போது சோபாவில் நன்கு நிமிர்ந்து அமர்ந்தவன்,
"அப்படியா அங்கிள், உங்களையும் சம்மதிக்க வச்சுடுறேன்...என்ன ஷன்மதி உனக்கு எப்படி?உங்கப்பா சம்மதிக்கலைனா என்ன பண்ணுவ?...நம்ம இரண்டுபேரும் ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிக்கலாமா?இல்லைனா நான் உன்னைக் கடத்திட்டுப் போயிடட்டுமா? என்ன சொல்ற" என நக்கலாகக் கேட்டான்.
சக்தி என்ன சொல்ல வர்றான் என இவ்வளவு பெரிய பிஸினஸ்மேனான ஷ்ரவனுக்குப் புரியாமல் இருக்குமா என்ன...இப்போது ஷ்ரவன் சக்தியை நேரடியாகவே முறைத்துப் பார்த்தான்.
இதெல்லாம் சக்தியை பயமுறுத்துமா என்ன...ஆனால் ஷன்மதி உள்ளுக்குள் உடைந்துப்போனாள்...அப்பா சம்மதிக்காமல் எப்படி என...
அவளோ பரிதாபமாக சக்தியை பார்க்க, அவனோ நான் பார்த்துக்குறேன் என்று தலையாட்டினான்.
நிருபமா ஷ்ரவனைப் பார்வையால் அதட்டியவர்...சக்தியை “தம்பி...” என்றழைக்க.
“பாட்டி சக்தினே கூப்பிடுங்க, மதியும் நானும் ஒன்னுதான்...அவக்கிட்ட எப்படிப் பேசுவீங்களோ அப்படியே பேசுங்க” என்றுவிட்டான் சக்தி.
நிருபமா இப்போது நன்கு சிரித்தவர்...
“ஓகே சக்தி உங்கப்பா அம்மாவை அழைச்சிட்டு முறைப்படி பொண்ணுக்கேட்டு வாங்க...அப்போ எல்லாம் பார்த்துக்கலாம்” என்றார்.
“சரி பாட்டி நான் கிளம்புறேன்” என்று எழுந்தவன், ஷ்ரவனிடம் வந்தவன் “உங்களுக்குப் பிடிச்சாலும் பிடிக்கலைனாலும் உங்க பொண்ணுதான் என் மனைவி, உங்ககிட்டயே இப்படிபேசுறதுவேணா தப்பா இருக்காலாம்...ஆனால் நான் சொல்லவேண்டியது என்னோட உரிமை வர்றேன் மாமா” என்றானே பார்க்கலாம்.
ஷ்ரவனுக்குத் தான் இப்போது பிபி எகிறியது...விஷ்ணுவோ: நேத்துவிட்ட ஒரு அறையிலயே பொறிகலங்கி, இன்று ஷன்மதியின் அருகிலயே நின்றிருந்தான்.
கிளம்பினவன் ஷன்மதியின் அருகில் வந்து கண்ணடித்து, உதட்டினாலயே முத்த செய்கை செய்தவன் கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதும் ஷ்ரவன் தனது தாயிடம் சாடினான்,
“அவன் நேர்மையான அதிகாரிதான், நல்லப்பையன் தான்” என்றதும், ஷன்மதிக்கு அப்படியே மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்குற உணர்வு.
“ஆனால் போலிஸ்மா நேர்மையானவனு பேரு இருக்கறதுனாலதான், இன்னைக்கு அவன் பேரை கெடுக்கறதுக்காக நம்ம பிள்ளையவும் செய்தியில வரவச்சுட்டான்... அதுவும் சக்தி ரொம்பத் தெளிவானவன், மெட்சூர்டு....நம்மா ஷானு அவனுக்கு நேரெதிர் எப்படிச் செட்டாகும்மா...யோசிக்க மாட்டிங்களா?” என வருந்தினான்.
நிருபமா "ஹரிதா இதுக்கு நீதான் பதில் சொல்லணும"
ஹரிதா ஷ்ரவனை முறைத்துப்பார்க்க,
“நம்ம மேட்டர் வேறடா, இதுவேற ஒரு தகப்பனா பயமா இருக்கு...என் மகளுக்கு நல்ல சந்தோஷமான வாழ்க்கை அமையனும்னு...
பிரச்சனையான வாழ்க்கையாக இருக்ககூடாது” என்று கவலைப்பட்டான்.
ஷன்மதி இப்போது தகப்பனின் அருகில் அமர்ந்து "டாடி" என்றதும் அவளது தலையைத் தடவியவன்...அவளது முகம் வாடித்தெரியவும்.
“உன் மனசு கஷ்டப்படுறமாதிரி எதுவும் அப்பா பண்ணமாட்டேன்டா...நீ போ” அவளை அனுப்பினான்.
தனதறைக்குள் வரவும் விஷ்ணு ஷன்மதியின் கையைப்பிடித்து "சாரி ஷானு...என்னாலதான் இவ்வளவு பிரச்சனை" என்க.
“நீ இல்லைனாலும் பிரச்சனை வேற மாதிரி வரத்தான் செய்யும்...விடு எதுக்குக் கவலைப்படுற, என்னோட விசயம் வீட்ல தானாகத் தெரிஞ்சிட்டு அதுக்காக சந்தோஷப்படு” என்றதும்...சிறிது சமாதானமானவன் வீட்டிற்குக் கிளம்பினான்.
ஷன்மதி உடனே சக்திக்கு அழைக்க எடுத்தவன் " சொல்லு" என்று இறுகிய குரலில் கூற...
"என் மேல எதுவும் வருத்தமா, ஏன் கோபமா பேசுறீங்க"
"உன்மேல வருத்தம் எதுக்கு வரப்போகுது, உன் மேலவர வேண்டியது வேறம்மா...அது என்னனு தனியா மாட்டுவ தான அப்போ சொல்லித்தர்றேன்...இப்போ என்னோட டிபார்ட்மெண்ட் ஆபிஸ்ல இருக்கேன்.அந்த போட்டோகிராஃபர் சிக்கிட்டான் விசாரிச்சிட்டிருக்கேன்...கொஞ்சம் டென்சன்ல இருக்கேன், அப்புறமா பேசுறேன் மதிம்மா" என வைத்துவிட்டான்.
ஷன்மதியோ இங்குக் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டாள்...இளமைக் கனவுகள்.
ஏற்கனவே அவன் கொடுத்த முத்தம் நினைவுக்குவர, உடலெல்லாம் காற்றில் மிதக்கின்ற உணர்வு அப்படியே படுத்து துங்கிவிட்டாள்.
சக்தியோ தனது ஆபிஸில் இருந்துக்கொண்டு அந்த நாளிதழில் வேலை பார்த்த போட்டோகிராபரை நல்ல முறையில் விசாரிக்க...அவன் உண்மையைக் கக்கிவிட்டான்.
சக்தியின் நேர்மையினால் பாதிக்கப்பட்ட ஒரு நல்ல அரசியல்வாதி ஒருவரின் கையாள் தான் இவன், ஏற்கனவே ஒரு மீட்டிங்கில் எடுத்த போட்டோக்களை அழிக்கச் சொல்லி அந்தப் போட்டகிராபரை அழைத்து,கேமராவிலிருந்து எல்லாவற்றையும் அழிக்கவைத்திருந்தான் சக்தி அந்தக் கோபம்வேறு அதனால்தான் பழிவாங்கிவிட்டான்.
அவனை ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலை, இப்போ எது செய்தாலும் மீடியாவிற்குப்போகும் என்பதால் அமைதியாக அவனை விட்டுவிட்டான்.
அப்போது பழுது பாம்பாகும் என்று அறியவில்லை சக்தி.
எல்லாம் முடிந்து இரவு வீட்டிற்குச் செல்ல...உள்ளே இருந்த இருவரையும் பார்த்துவிட்டு சக்தி சிரிக்க .
அதில் ஒருவர் அவனைப் பார்த்து மலர்ந்து சிரிக்க, இன்னொருவர் சக்தியை முறைத்துக்கொண்டிருந்தார்...
சிரித்துக்கொண்டிருக்கும் தனது அம்மா நிலாவிடம் மெதுவாகச் சென்றவன் “எப்போ வந்தீங்க ஊர்லயிருந்து...வர்றேன்னு சொல்லவேயில்லை” என்றவனின் கவனத்தைத் தந்தை கதிரின் சிம்மக்குரல் கலைத்தது...
"உன் பிள்ளை சொல்லிட்டு வர்றமாதிரியா செய்து வச்சிருக்கான். என்ன பிரச்சனை உன் மகன்கிட்ட ஒழுங்க விசாரி...ஒரு பொண்பிள்ளயோட வாழ்க்கையும் அதுல இருக்கு"
நிலா அவனிடம் கையினால் செய்கை செய்துக்கேட்க... “இன்னும் இந்தப் பழக்கத்தைவிடலையா வாயத்திறந்து கேளு” என்று அதற்கும் கதிர் சத்தமிட்டான்.
“அம்மா இப்போதைக்கு எதுவும், கேட்காதிங்க எனக்குப் பசிக்குது...குளிச்சிட்டு,சாப்பிட்டுட்டுதான் எந்த விசாரணைனாலும்” என்றவன் தனதறைக்குள் சென்றுவிட்டான்...
அத்தியாயம்-6
கதிர் தன் மனைவி நிலாவிடம் “என்ன சொல்லிட்டுப் போறான் உன் மகன்” என்று கேட்டான்... அதற்கு நிலாவும் “ஒன்னும் சொல்லலை, குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுத்தான் சொல்லுவானாம்...ரொம்பப் பசிக்குதாம்...” என்றதும்.
கதிர் "அதான நம்ம கேட்கும் போது சொல்லிட்டாதான் அவன் நல்ல பிள்ளையாயிடுவானே, அப்படியா இருக்கான்.
பெத்து வச்சிருக்கப் பாரு உன்னை மாதிரியே. எது சொன்னாலும் கேட்குறதில்லை...நம்மகிட்டயும் எதுவும் சொல்றதில்லை. வேண்டாம் வேண்டாம்னு சொன்ன பிறகும் உங்களை மாதிரி வேணும், உங்களை மாதிரி வேணும்னு பெத்துக்கிட்டதான... உருவத்தில்தான் என்ன மாதிரி இருக்குக் குணத்தில் அப்படியே உன்னைய மாதிரியே இருக்கான். என் பேச்சைக் கேட்கக் கூடாது என்று முடிவோட பெத்துப் போட்டிருக்க...”
என்று திட்டிக்கொண்டிருக்க அதைக்கேட்டுக்கொண்டே வந்த சக்தி...
“ம்மா..சாப்பாடுத்தாங்க” என்று அழைக்கவும், கதிரைப் பார்த்தாள் நிலா... “நான் பேசினதெல்லாம் அவன் காதுல விழாமலா இருக்கும்...கேட்காதமாதிரியே உன்னைக் கூப்பிடுறான் பாரு...அவன்கிட்ட எல்லா விசயத்தையும் கேட்டுட்டுவந்து சொல்லு, நான் தூங்கப்போறேன்” என்று தனதறைக்குள் போய்விட்டான்.
சாப்பிட உட்கார்ந்த சக்தி நிலாவிடம் பேசிக்கொண்டே எல்லா விஷயத்தையும் கூறியிருந்தான்...ஷன்மதி பற்றியும் அவங்க குடும்பத்தைப் பற்றியும், அன்று நடந்த நிகழ்வையும் சிறிது சென்சார் செய்து கூறிவிட்டான்.
“நான் பேசிட்டு வந்திருக்கேன், இப்போ பொண்ணு கேட்டுப்போகணும் உங்க வீட்டுக்காரரை ரெடியா இருக்கச் சொல்லுங்க ஒரு பார்மாலிட்டீஸ்க்காகதான் போகணும்... அங்கேயும் வந்து என் மாமானார்கிட்ட என் இமேஜை டேமேஜ் பண்ணிடக்கூடாதுனு சொல்லி வைங்க ம்மா... என் மாமனார் வீட்ல வந்தும் என்னை டம்மியாக்கிட போறாரு”
அவனது முதுகில் ஒன்று போட்டு “வாய் பேசறதப்பார். எப்பவும் அவர் சொல்றதுக்கு நேரெதிர் என்றுதானே பண்ணிட்டு இருக்கப் பின் அவர் கோபப்படாமல் என்ன பண்ணுவார். ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் சொல்றத கேட்டுருக்கியா நீ? படிப்பிலயும் சொல்றது கேட்கல, வேலை விஷயத்திலயும் அவர் சொல்றத கேட்கலை...” என்று நிலா குறைபட..
“அவரைச் சீண்டிப் பார்க்கிறதுல ஒரு ரசம் ம்மா, போங்க போங்க உங்க கிட்ட என்ன சொன்னேன்னு கேட்கறதுக்காகக் காத்திருப்பார், மகனின் வீரதீர பராக்கிரமத்தை அவருகிட்ட சொல்லுங்க, போங்க” என்று நிலாவை விரட்டினான்.
சக்தி உருவத்தில் அப்படியே கதிரை உரித்து வைத்திருந்தான்...குணத்திலும் அவனைப்போலதான் முன்கோபி அதைவிட யாரையும் சார்ந்திருக்காமல் தனித்துவமாக இருப்பவன்.அதிகாரம் அவனிடம் செல்லாது...அன்பு மட்டுமே எடுபடும் அவனிடம்...
குணத்தில் ஒன்றுபோல் என்பதாலோ என்னவோ, மூத்த இரண்டுபேரையும் போல அல்லாமல் கொஞ்சம் கதிரிடமிருந்து விலகியே இருப்பான்...ஆனால் தகப்பன்மேல் பாசம் அதிகம்.
உண்டு முடித்துத் தூங்க சென்றவன் தன்னவளுக்கு அழைத்து இரவு நேர காதல் பயணங்களைத் தொடர்ந்தான்...அங்கு கதிரோ நிலாவின் மூலம் விசயத்தைக் கேள்விப்பட்டவன், எகிறினான் "உன் பையன் என்ன நினைச்சுகிட்டு இருக்கான்... எல்லாம் முடிவும் அவனேதான் எடுக்கிறேன் நம்ம கிட்ட ஒரு விஷயம் சொல்றானா வைக்கிறானா...அந்தப்பொண்ணுவீட்டுல நம்மளை என்ன நினைப்பாங்க...
தறுதலையா பிள்ளைய வளர்த்து வச்சருக்காங்கனு நினைச்சிருப்பாங்க...பெரிய பதவியில இருக்கானுப்பேரு...இன்னும் ஒன்னும் ஒழுங்கா செய்யத்தெரியலை..” என்றதும்
நிலவோ அதற்குக் “கல்யாணம் முடிச்சு கூட்டிட்டு வராமல், பொண்ணு பார்க்காவாது நம்மள கூப்பிடுறானே, அதற்காகவாவது சந்தோஷப்படுங்க மாமா” என்றதும்...
கதிர் அவளை முறைத்துப் பார்த்து "அதான யாரு மகன் நிலானியோட மகன், ஏட்டிக்குப்போட்டி செய்யாமல் இருந்தா தான் அதிசயம்...எப்போ பொண்ணுக் கேட்கப்போகணும்னு சொன்னானா? இல்லையா?”
"எதோ சக்தி பொறந்ததுல உங்களுக்குச் சம்பந்தமே இல்லாத மாதிரியே பேசுறீங்களே மாமா...நான் மூணாவது பிள்ளைவேணும்னு கேட்டேனாம், இவரு தர்மபிரபு அப்படிய வாரி வழங்கிட்டாராம்...நீங்க சும்மா இருந்திருந்தா அவன் எப்படிப் பிறந்திருப்பான்...எப்போ பாரு என் மகன்னு சொல்லிட்டு...இனி சொன்னீங்க கடிச்சி வச்சிருவேன் பார்த்துக்கோங்க” என்றதும்...சிறிது அடங்கியவன்.
“அதில்ல மொசக்குட்டி எப்பவும் அவன் நம்ம சொல்லைக் கேட்கவே மாட்டுக்கான் அதுதான் கோபம்” என்று மனைவியிடம் அடங்கினான்.
அடுத்த நாள் சக்தி மற்றும் ஷன்மதிக்கு அழகாக விடிந்தது...
இரவே ஷன்மதிக்கு தகவல் அனுப்பி விட்டான்: “நாளை உங்கள் வீட்டிற்கு வருகிறோம், உங்க பாட்டி,அப்புறம் என் மாமானாருக்கிட்டயும் சொல்லிடு” என்றுவிட்டான்.
சக்தியும் நிலாவும் கிளம்புவதற்கு முன்பாகவே கதிர் கிளம்பி நின்றான், கதிருக்கு சக்தி தன் பேச்சை கேட்கவில்லை எனத் தகப்பானாக ஆதங்கம் இருந்தாலும்.
எல்லா விசயத்திலும் யாரையும் சார்ந்திருக்காமல் படிப்பில் இருந்து வேலை வரைக்கும் அவனாகவே முன்னேறி வந்து விட்டான் என்று சந்தோஷம் கதிருக்கு உண்டு ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை...
ஷன்மதி வீட்டிற்கு சக்திக்குடும்பம் கிளம்பி சென்றனர், அங்கே சென்றதும் வரவேற்று உபசரித்து இருவீட்டுக்காரியங்களையும் பேசிக்கொண்டிருக்குமபோதே ஷன்மதியை சேலைக்கட்டி சிறிது அலங்கரித்து அழைத்து வந்தாள் ஹரிதா...
சக்திக்கோ இப்பவே துக்கிட்டுப்போய்த் தாலிக்கட்டிடலாமா என்று எண்ணம்தான் எழுந்தது. அழகாகப் பதுமையென வந்தவளைப் பார்த்து நிலாவிற்கும் கதிருக்கும் பிடித்தது.
ஷ்ரவன் மகளைத் தனது பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.
சிறிது நேரம் அமைதியாகவே கழிந்தது...நிருபமா பேசினார் "இரண்டு குடும்பத்திற்கும் சம்மதம் எனும் போது அடுத்தக்கட்ட நிகழ்வுக்கான பேச்சைத் தொடங்காலாமே...ஏன் சுத்தி வளைச்சுப் பேசிக்கிட்டு...நிச்சயதார்த்தம், கல்யாணம் எப்போ வைக்காலாம்னு பேசுவோமே " என்றார்.
கதிரும் “நீங்க சொல்றது சரிதான்மா, எங்களுக்குச் சம்மதம்தான்...என்னோட மகனோட தெரிவு கண்டிப்பா பெட்டராகத்தான் இருக்கும்...அதுல எங்களுக்கு நம்பிக்கையிருக்கு அதனால..நீங்க பெரியவங்க உங்களுக்கு எப்போ வைக்கணும்னு சொல்லுங்க...எங்களுக்கு சக்திக்கு மூத்தது இரண்டுபேரும் வெளியூருல இருக்காங்க...அவங்களும் வரணும், அவங்க வசதியையும் பார்க்கணும்"
ஷ்ரவனோ சட்டென்று
“இப்போதைக்குக் கல்யாணம் வைக்கவேண்டாம்...
ஷன்மதியோட படிப்பு முடிய இன்னும் ஆறுமாதமிருக்கு, அதுக்கப்புறம் வேணா கல்யாணம் வச்சிக்கலாம், இப்போ நிச்சயதார்த்தம் மட்டும் உறுதி பண்றதுக்காக வைக்கலாம் இதுதான் என்னோட முடிவு, இதுல வேற எதுவும் மாற்றம் செய்யணும்னா மட்டும் சொல்லுங்க...” எனச் சிறிது விரைப்பாகவே சொல்ல...
கதிரின் தன்மானம் சீண்டப்பட்டதுப்போலத் தோன்றியது, உடனே சட்டென்று சக்தியை பார்த்தான்...அவனுக்குமே கோபம் வந்தது , "அங்கிள் கல்யாணம் பண்ணிக்கிட்டும் படிக்கலாமே. ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க பொண்ணு படிப்புல கோட்டைவிட்ருவானு நினைக்கறீங்களா, அப்படியெல்லாம் ஆகாமா நான் பார்த்துக்குறேன்" என நக்கலாகக் கேட்டான்.
ஷ்ரவன் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்க, நிலா தலையிட்டாள் இப்போது.
கதிரின் கையைப்பிடித்தவள் "சரிங்க, உங்க விருப்பபடியே கல்யாணத்தை ஆறுமாதம் கழித்து வைக்கலாம்...நிச்சயதார்த்தம் இப்போதைக்கு வச்சு உறுதி செய்துக்கலாம்” என்றதும்...ஷ்ரவனின் முகத்தில் சிறிது தெளிவு வந்தது.
சக்தி நிலாவினை "என்னம்மா இப்படி?” என்ற ரீதியில் பார்த்து வைக்க...அவளோ கண்களை மூடி பொறுமையா இரு என்றாள்.
இரு குடும்பமும் நிச்சயதார்த்தம் இன்னும் பத்து நாளில் வைக்க முடிவு செய்தனர், எல்லாம் முடிந்து சக்தி குடும்பம் கிளம்பினர்.
ஷன்மதிக்கும் சக்திக்கும் அப்படி ஒரு சந்தோஷம்...அதன் பூரிப்பு முகத்தில் தெரிந்தது.
நிச்சயதார்த்தம் அன்று இரு குடும்பத்திலுமிருந்து வெளியூரிலிருந்து பிள்ளைகள் எல்லாம் வந்திருந்தனர்.
சக்தியின் அக்காவும், அண்ணனும் அவர்களது பிள்ளைகளும் வந்திருக்க நிலாவிற்கும் கதிருக்கும் சந்தோஷமென்றாலும், ஷ்ரவனிற்கு இதில் சிறிது விருப்பமின்மையை அவனது முகத்திலய தெரிந்தது...
நிலாதான் கதிரையும் சக்தியையும் சமாதானப்படுத்தினாள்...
“ஷன்மதி அவங்களுக்கு ஒரேப்பொண்ணு, திடீர்னு கல்யாணம் செய்துக்கொடுத்துப் பிரியறது ரொம்பக் கஷ்டம்டா...ஷ்ரவனுக்கு அவள் ரொம்ப செல்லம்போல...பார்த்தியா ஷன்மதி வந்ததும் அவளைத் தனதருகில் உட்கார வைத்து வாஞ்சையா பார்த்திருந்தாங்க.” என விளக்கம் சொன்னதுக்கு அப்புறம்தான் புரிந்துக்கொண்டனர்
இப்போது இருவரும் சமாதானமானாலும்...சக்தி அவன் ஆதங்கத்தை ஷன்மதியிடம் காண்பித்தான்...
“என்னடி நெனைச்சிட்டிருக்காங்க உங்கப்பா , ஏன் கல்யாணத்துக்கு இவ்வளவு நாள் கடத்துறாரு...கிடைக்குற கேப்ல உன்னை எங்கிட்டயிருந்து பிரிச்சிடலாம்னு கிரிமினல் ஐடியா எதுவும் பண்றாரா. போலிஸ்காரன்கிட்டயேவா, உங்கப்பா பிஸினஸ்மேன் குணத்தைக் காண்பிக்குறாரா என்ன?”
ஷன்மதி "என்ன பேசுறீங்க சக்தி...புரிஞ்சுக்காம பேசாதிங்க...அப்பா இப்பவே ஃபீல் பண்றாங்க ,நான் கல்யாணம் சீக்கிரமா பண்ணிக்கிறேனாம், எங்கவீட்ல நான் ஒரே பொண்ணு மிஸ் பண்ணமாட்டாங்களா...ஏன் நீங்க உங்க அக்காவை மிஸ் பண்ணவேயில்லையா?" என்று அவளும் பதிலுக்கு காட்டமாகப் பேசினாள்.
சக்தியோ "ஓ மேடம் லாயர்னு அடிக்கடி நிருபிக்கறீங்களோ...பேச்சுப் பாயிண்ட் பாயிண்ட்டா வருது"
ஷன்மதி "ஆமா ,ஏன் நீங்க போலிஸ்மாதிரி பேசும்போது நான் லாயர்மாதிரி பேசுவேன்...பதிலுக்குப்பதில்...எப்படி"
" இச் ..இச்...இச் இச்..உம்மா..." என்று சக்தி போனிலயே தொடர்ந்து முத்தம் கொடுத்தவன், “இப்போ பதிலுக்குப் பதில் செய் பார்ப்போம்” என்றான்.
ஷன்மதியோ எப்படி உணர்ந்தாள் என்று தெரியாது...அப்படி ஒரு கிறக்கம்.
"என்ன பதில் வரலை" எனச் சக்தி அவளைச் சீண்ட...அவ்வளவுதான்.
" பதிலுக்குப் பதில் நேர்லதான் தரமுடியும்...போன்ல எல்லாம் தரமுடியாது ஆஃபிசர்" என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
இருவருக்குள்ளும் திருமணத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகியது.
நிச்சயதார்த்தவிழா வெகு விமர்சையாகவே நடத்தினர்...தொழிலதிபர் ஷ்ரவனின் மகள் ஷன்மதி எனும்போது அதற்கேற்றவாரு விழாவினையும் ஏற்பாடு செய்திருந்தனர்...
ஷன்மதி எல்லாவற்றிற்கும் விஷ்ணுவைத்தான் இப்போதும் தேடினாள்...எங்காயாவது செல்வதென்றாலும் சரி, அவளுக்கு எதாவது பேசவென்றாலும் சரி அவனைத்தேடினாலும்...முதல் உரிமையை சக்திக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.
நிச்சயதார்த்த நாள் அன்று எல்லோரும் அமர்ந்திருக்க லக்னப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது ..
அடுத்து பெண்ணும் மாப்பிள்ளையும் எழுந்து நின்றுமோதிரம் மாற்றிக்கொள்ளக் கையைப்பிடிக்க, சும்மா இருந்தால் அது சக்தியில்லையே, மோதிரத்தை அவளது விரலிலிட பிடித்தவன் அப்படியே சிறிது நேரம் அவளது கண்களேயே பார்த்திருந்தான்...அவ்வளவு காதலோடு ஒரு நிமிடம் ஷன்மதியே அசந்துவிட்டாள்...
எப்பவும் விரைப்பாகவே இருக்கும் சக்தியின் பார்வையும் சரி உடலும் குழைந்து, பார்வையோடு பார்வைக்கலந்து அப்படியே ஃபீரீஸாகி நின்றுவிட்டான்.
ஷன்மதி தான் “ஆபிசர் எல்லோரும் நம்மளைத்தான் பார்குறாங்க...இது நம்ம பங்கஷன் மோதிரம்போடுங்க” என்றதும் தான் போட்டுவிட்டான்...அவளும் அவனுக்கு மோதிரம் போட்டுவிட, மெதுவாக விரலைப்பிடித்தவன் “நிச்சயமான அரைப்பொண்டாட்டியாம்...
தூக்கிட்டுபோயிடட்டா” என மெதுவாகக் கேட்க.
“ஆபிசர் நீங்க போலிஸ், கிரிமினல் இல்லை...” என ஷன்மதி சொல்ல...
“அத நீ தான் சொல்லனும், அங்கப்பாரு உங்கப்பாவும், உன் நண்பனும் என்னைய கிரிமினல் ரேஞ்ச்க்கு பார்க்குறத, இவங்க இரண்டுபேரும் சேர்ந்து என்னைய குற்றவாளியாக்காமல் விடமாட்டாங்க போலயிருக்கு” எனச் சக்தி சொன்னதும் ,அவனது கையில கிள்ளியவள் “கொன்றுவேன் உங்களை. எப்போ பாரு அவங்க இரண்டுபேரையும் முறைச்சிகிட்டே இருக்கீங்க...
அவருதான் கைப்பிடிச்சுக் கன்னிகாதானம் பண்ணனும் நியாபகம் இருக்கட்டும்...இல்லைனா கல்யாணத்தை இன்னும் ஆறுமாதம் தள்ளிப்போட்டிருவாரு ஓகேவா உங்களுக்கு?” என்று ஷன்மதி பதிலுக்கு அவனுடன் வாயாடிக்கொண்டிருந்தாள்...
கதிர் இவர்கள் இருவரையும் பார்த்து “இங்கப்பாரு இப்பவே இரண்டும் கல்யாண முடிந்த மாதிரி பேசிட்டிருக்கு...
இரண்டுபேருக்கும் கொஞ்சமாவது வெட்கம் முகத்துல தெரியுதாபாரு...
எனக்கென்னவோ இப்பவே உன் மகன் அவகிட்ட சாய்ஞ்சிட்டான் போலதான் இருக்கு...நடக்கட்டும் நடக்கட்டும் நல்லாயிருந்தா சரிதான்” என்றான்.
நிலாதான் "ஏன் ஐயாவிற்கு இப்படி நிக்கமுடியலன்னு கவலையா இருக்கா...வேணும்னா இன்னோரு கல்யாணம் பண்ணிக்கோங்க...காதலிச்சு" என்றதும்.
கதிர் "வாயாடி உனக்கு... உன் மகனும் இப்படித்தான் பேசி வைக்கிறான் நீயும் இப்படித்தான் பேசுற. மனுஷன் பேசுவானா உங்ககிட்ட"என்று திரும்பிக்கொண்டான்.(அப்பவும் சரி இப்பவும் சரி கதிர் நிலாகிட்ட மொக்கை வாங்குறதே உனக்குப் பொழைப்பா போச்சுது...பேரன் பேத்தி எடுத்தபிறகும் மாறமாட்டுக்கு)
“யாருக்கிட்ட? எங்ககிட்டயேவா?” என்றவள். சிரித்தாள். நிலாவிற்குச் சந்தோஷம் காதலித்த பெண்ணையே மகன் திருமணம் செய்துகொள்கின்றான் என்று.
அழகாக முடிந்தது நிச்சயதார்த்தம், போட்டோக்கள் எடுக்கும்போது விஷ்ணு ஷன்மதியிடம் வந்து நிற்கவும், அவனது முகமே சரியில்லை, அதைக் கண்டவள் அவனது கையைப்பிடித்துக்கொண்டு நின்றாள்... அதைப்பார்த்த சக்திக்கு சிரிப்புதான் வந்தது.
விஷ்ணு பண்றதைத்தான், ஷ்ரவன் செய்தான்... இருவருக்கும் ஷன்மதிமேல எவ்வளவு அன்பு என்று சக்திக்குப் புரிந்தது...
ஆனாலும் அவங்க இரண்டுபேரையும் சீண்டி வெறுப்பேத்துவது என்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவதுப்போல...
ஷன்மதியின் மொத்தக்குடும்பம் போட்டோ எடுக்க நிற்க ஷ்ரவன் தன் மகளின் அருகே நின்று தோளில் கைபோட முயல, அதற்குள் சக்தியோ “மதி” என்றழைத்து அவளது தோளில் கைபோட்டவன், அவளது கன்னத்தில் முத்தமும் வைக்க அந்த போட்டே அவ்வளவு அழகாக வந்தது..ஷ்ரவனின் முகத்தைதவிர...மருமகனை இப்போது முறைக்கவும் முடியாமல், எதுவும் சொல்லவும் முடியாமல்...கடுகடுவென்று முகத்தை வைத்திருந்தான்.
விளையாட்டுச் சில நேரங்களில் வினையாகும், சக்தி இப்படிச் சீண்டுவதே ஷ்ரவனது உள்ளத்தில் தனது மகளின் மீதான உரிமையை நிலைநாட்டணும் என்ற எண்ணம் சிறிது சிறிதாக வலுப்பெற்றது...
நிச்சயதார்த்தாம் முடிந்து ஒருவாரமாகிவிட்டது. இடையில் ஒரு நாள் மட்டுமே ஷன்மதிக்கு அழைத்துப் பேசினான்...மறுபடியும் அழைக்கவில்லை...
காத்திருந்த ,ஷன்மதி சக்திக்கு அழைத்துப்பேச முயல அழைப்பு எடுக்கப்படவில்லை...சிலநேரம் அழைப்பைத் துண்டித்துவிட்டான்
என்னவாயிற்று என்று கலங்கிப்போனாள்...யாரிடம் கேட்க என்று திணறிக்கொண்டிருந்தாள்...
அத்தியாயம்-7
சக்தி தேடி யாருக்கு போன் பண்ண என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்குச் சட்டென நினைவுக்கு வந்தது நிலா தான். உடனே அவளுக்கு அழைத்தவள் "எப்படி அத்தை இருக்கீங்க மாமா? எப்படி இருக்காங்க?” என்று நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன்.
“உங்க மகன் எங்க அத்தை?” என நேரடியாகவே கேட்டு விட்டாள்.
நிலாவிற்குச் சிரிப்பாக வந்தது ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு “நாங்க இங்க மதுரைக்கு வந்து விட்டோம்மா.அவன் சென்னையில் தான் இருக்கான் நான் வேணா நீ போன் பண்ணதா சொல்லவா”
“அய்யய்யோ வேண்டாம் அத்தை, நானே கால் பண்ணி பேசிக்கிறேன் எப்பப் போன் பண்ணாலும் கட் பண்றாங்க, எடுத்து பேசவுமில்லை, அதுதான் எதுவும் பிரச்சனையானு கேட்கத்தான் ஃபோன் பண்ணேன்...”
“ஓஓஓ.... ஏதோ டென்ஷன்ல இருக்கிறதா சொன்னான்... என்னன்னு தெரியல என்னனு அவனா சொன்னால் தான் நமக்குத் தெரியும், அவ்வளவு சீக்கிரத்தில் எதையும் வெளியில் சொல்ல மாட்டான்...” என நிலா பேசியதும்,
“சாரி அத்தை உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன், நான் அவங்களுக்கே போன் பண்ணிப் பார்த்துக்குறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவள்...
“இன்னைக்கே அங்கப் போய்ட வேண்டியது தான்” என்று மனதிற்குள் திட்டம் போட்டு முடித்தாள்...
கல்லூரிக்கு சென்றவள் விஷ்ணுவை அழைத்து “எனக்கு ஒரு சின்ன உதவி செய்வியா?” என்று கேட்கவும்.
விஷ்ணு சிறிது யோசித்தான் "இதைச் செய், அதைச் செய்,என்று கட்டளை இடுபவள் இன்று பம்முறாளே... ஏதோ வில்லங்கத்தில் மாட்டி விட்டுடுவா போலிருக்கே” என நினைத்தவன், மெதுவாக
“முதல்ல விஷயத்த சொல்லு அப்புறம் உதவி செய்யலாமா இல்லையானு யோசிக்கிறேன்” என்று விஷ்ணு பதிலுக்குச் சொன்னான்...
“அது ராத்திரி நம்ம ஒரு ப்ராஜெக்ட்டுக்குப் போகிறோம் கொஞ்சம் லேட் ஆகும்னு டாடிகிட்ட சொல்றியா?”
விஷ்ணுவின் கண்கள் தெறித்து விழாத குறை தான். “என்ன அங்கிள் கிட்ட பொய் சொல்ல போறியா இது என்றையிலிருந்து புதுப் பழக்கம்...?”
“சொல்ல முடியுமா? முடியாதா? அதைச் சொல்லு ஃபர்ஸ்ட்...”
“அங்கிள் கிராஸ் கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல. முதல்ல எதுக்கு இந்தப் பொய், நம்ம எங்க போறோம்;அந்த டீட்டைல் சொல்லு அப்புறம் பொய் சொல்லலாமா இல்லையான்னு நான் யோசிக்கிறேன்...”
“ஏன்டா எனக்காக இதெல்லாம் செய்ய மாட்டியா ஒரு பொய் கூட உன்னால சொல்ல முடியாதா...”
“அது நீ எங்க போற? என்ன பண்ண போறன்னு? நீ செய்ற விஷயத்தைப் பொறுத்து பொய் சொல்லலாமா இல்லையான்னு பாக்கறேன்.”
“அதுவா சக்தியை பார்க்க போறேன்” என்று முகத்தை தூக்கித் வைத்துக்கொண்டு விஷ்ணுவிடம் சொன்னாள்.
“அங்கிள் கிட்ட நான் அப்போ பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்... நீ அவரைப் பார்க்க போறது எனக்கே பிடிக்கலை அப்புறம் அங்கிள் எப்படிச் சம்மதிப்பாங்க...”
அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்தவள் “சரி அப்ப நான் தனியாகப் போயிருக்கிறேன்.. நான் எதாவது டாடிக்கிட்ட சொல்லிட்டுப் போறேன். நீ என்கூட வரவேண்டாம்” என்றவள் அமைதியாக இருந்துவிட்டாள்.
சாயங்காலம் வீடு வந்தவள் கொஞ்சநேரம் இருந்துவிட்டு...ஹரிதாவிடம் வந்தவள் “எனக்குக் கொஞ்சம் வெளியே வேலையிருக்குமா...புக்ஸ் வாங்கவேண்டியதிருக்கு போயிட்டு வர்றேன்” என்றதும்...
“இரு நிச்சயதார்த்தம் முடிஞ்சபொண்ணு இப்படித் தனியா வெளியலாம் போகக்கூடாது...அப்பா வரட்டும்” என்று தடைப்போட கோபத்தில் தனதறைக்குள் சென்றவள்... ”என்ன செய்யலாம்?” என்ற யோசனையில் இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்...மறுபடியும் கண்விழித்துப்பார்க்க...மணி பதினொன்றை தாண்டியிருந்தது...
மெதுவாக வெளியே எட்டிப்பார்க்க வாட்ச்மேன் இருந்தான்... ‘இந்த வாட்ச்மேனுக்கு என்ன தூங்கவேண்டியதுதான, முழிச்சிருக்கான்’ என்று அவனைத்திட்டிக்கொண்டே பார்த்தவளுக்கு யோசனைத்தோன்றியது.
தோட்டத்தில் நடக்கச் செல்வது போல் மெதுவாக வெளியே சென்றவள், விஷ்ணுவுக்கு அழைத்து “எங்க வீட்டுக்கு வெளியே வந்து நில்லு, நான் கேட்டேறி குதுச்சு வெளியே வரப்போறேன்” என்று அவனுக்கு அதிர்ச்சிக்குடுக்க...
அவன் அவசரவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு வந்தான்...அதற்குள் மெதுவாகக் கேட்டேறி வெளியே குதித்திருந்தாள்...
“என்ன பிரச்சனை உனக்கு இப்படித் திருட்டுத்தனம் பண்ற...என்னையவும் கூட்டுச்சேர்த்துக்குற.அர்த்த ராத்திரில எங்க போகப் போறோம்?” என்று கேட்டு நின்றான்.
வண்டியில் ஏறி உட்கார்ந்தவள் “சக்தி வீட்டுக்கு போ” என்று சொல்லவும் அவனோ திரும்பி முறைத்துப் பார்த்து... “போலீஸ்காரன் கூடச் சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்ட திருடி ஆகிட்ட நீ இப்போ...”
“ஹை...சூப்பர் சக்தி போலிஸ் நான் திருடியா நல்லாயிருக்கே இது” என்று அவள் சிரிக்க...
விஷ்ணுவோ “உனக்குச் சக்தி பைத்தியம் ரொம்ப முத்திப்போச்சுது... உன் கூடச் சேர்ந்த பாவத்திற்கு எனக்கும் பைத்தியம் பிடித்து விடும்...” என்று புலம்பியபடியே சக்தியின் வீடு நோக்கி வண்டியை செலுத்தினான்...
சக்தியின் வீட்டு முன்பாக ஷன்மதியை இறக்கி விட்டவன்... “ஆமா இப்ப எதுக்கு இங்க வந்து இருக்க எப்படி உள்ளே போகமுடியும்... வெளியே ஒரு போலீஸ் இருக்காங்களா பாரு பாதுகாப்பிற்கு” என்று கேட்டான்...
“இல்லை கேட்ல தான் வாட்ச்மேன் இருப்பான்...சமாளிக்கலம்.” என நோட்டம் விட்டவள் விஷ்ணுவின் பைக்கில் ஏறி நின்று பார்க்க அங்கு ஒருத்தரும் இல்லையென்றதும் ஏறிகுதித்துவிட்டாள்...
“ஆண்டாவா லட்டுவ மட்டும் கட்டிப்போட்டிருக்கணும்” என வேண்டிக்கொண்டாள்...லட்டு சக்தி வளர்க்கும் நாயின் பெயர்.
எந்தச் சத்தமும் இல்லையென்றதும் நேராகச் சென்றவள் காலிங்க் பெல்லை அழுத்தினாள்...கதவை திறக்கவும் சக்தியை தள்ளிக்கொண்டு உள்ளே போக முயல இருவரும் விழுந்திருந்தானர்.
சக்தியோ தனது போலிஸ் குணத்தினால் சட்டென்று யாரெனத் தெரியாமல் அவள் நெஞ்சோடு சேர்த்து தப்பவிடாது இருக்கிப் பிடித்திருந்தான். விழுந்த வேகத்தில் சக்தியின் மேல் ஷன்மதி படுத்திருக்க...
ஷன்மதிதான் என்று உணர்ந்தவன் "அடியே சண்டிராணி இப்படியாடி வந்து மோதுவ...அதுவும் அர்த்த ராத்திரியில்...” என்று கடிந்துக்கொண்டே எழும்ப முயல. முடியவில்லை ஷன்மதி மேலேபடுத்திருப்பதால்...
அவள் அவன்மீதே படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்தான்...
அவன் வெளியிலிருந்து அப்பொழுதுதான் வந்திருந்தான், அதனால் குளித்துவிட்டுச் சாப்பிடலாம் என்று போனவனைத்தான் அழைப்பு மணியின் சத்தம்கேட்டு கதவைத் திறக்க வந்தான்...வெறும் துண்டுமட்டுமே அவனது உடை, அதுவும் இப்போதிருக்கும் நிலையில் என்னவாயிற்றோ?
அவனது வெற்று மார்பில் படுத்திருந்தவள், அவனின் நெஞ்சிலிருக்கும் முடியை இழுத்தபடியே...
“நான் உங்களுக்குப் போன் பண்ணேன் ஏன் எடுக்கலை..நீங்களும் என்கிட்டப் பேசலையா அதான் வந்துப்பார்க்கலாம்னு...” எனப் பேசிக்கொண்டிருந்தவளின் இதழ்கள் சக்தியின் வாய்க்குள்...
இதை எதிர்பார்க்காத ஷன்மதியோ அவனிடமிருந்து விலகப்பார்க்க...ம்ஹம்...தனது கரங்கொண்டு வளைத்து பிடித்திருந்தான்,அதுவும் அவனது மேல படுத்திருப்பதால் அவளால் எழும்பவே முடியவில்லை...
சிறிது திமிறியவள் இப்போது இசைந்துக்கொடுக்க...சும்மாவே அளிடம் அதீத நெருக்கம் காட்டுவான்...இப்போ சும்மாவா விடுவான்...அவ்வளவுதான் அவளைக் கீழே தள்ளி அவள் மேல்படுத்துக்கொண்டவன்...
முகமெங்கும் எச்சில் முத்தம் வைக்க... “மூச்சு முட்டுது எழும்புங்க” என்றதும் தான் எழும்பபோக, டவல் விழுந்தது, அது ஏற்கனவே கீழே விழுந்த வேகத்தில் அவிழ்ந்துவிட்டிருந்தது...இப்போது ஷன்மதி தனது கண்களை இறுக மூடிக்கொண்டாள்...
டவலை மீண்டும் கட்டியவன் அவளது கைப்பிடித்து “என்னடி கண்ணைமூடிக்கிட்ட...ஏன். என்னைக்கு இருந்தாலும் பார்க்கவேண்டியதுதான...இன்றைக்கு இல்லைனா, இன்னும் ஆறுமாசத்துல அவ்வளவுதான்” என்று கண்ணடிக்க...
“வரவர ரொம்பப் பேசறீங்க” என்று அவனது கையைக் கிள்ளியவள் வெட்கத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்...
இப்போதுதான் நியாபகம் வந்தவன் "ஆமா எப்படி வந்த, உங்க வீட்லயிருந்து எப்படி வந்த? இங்க கேட் பூட்டியிருக்கு எப்படி உள்ளே வந்த?" எனக் கேள்விகளை அடுக்கினான்...
“இருங்க ஆபிசர் கேள்வி ஒன்னு ஒன்னா கேளுங்க மொத்தமாகக் கேட்ட எனக்கு மறந்திரும்....” என்று அவளின் பதிலைக்கேட்டவன்... ‘இந்த ஆர்வக்கோளாறு என்ன குளறுபடி செய்து வச்சிருக்கோ தெரியலையே’ என்று எண்ணியவன்...அவளது கையைப்பிடித்து இழுத்து சோபாவில் அமரவைத்து "அம்மா தாயே! ஏற்கனவே என்னோட பெயரை அந்த மடப்பயலால் கெடுத்துவச்சிருக்க.அந்த விசாரனையே இன்னும் முடியலை...இந்த அர்த்த ராத்திரியில வந்திருக்க, அதுவேற எவன் கண்ணுலயாவது மாட்டிடப்போகுது.
எப்படிவந்தனு சொல்லு” என்றான்
“அது ஒன்னுமில்லை சக்தி...”
"என்னது சக்தியா...மரியாதை என்ன இப்போ மல்லாக்கப்படுத்திட்டு" என்று கேட்டான் சக்தி...
“இப்படிப் பேசனீங்கனா இங்கயே இருந்திடுவேன்...பார்த்துக்கோங்க..” என்று சட்டமாக அமர்ந்துக்கொண்டாள்.
“மதிம்மா அங்க உங்கவீட்டுல தேடுவாங்க...உன்கூட அந்த வால்பிடிச்சுட்டு வருவானே அந்தக்குரங்கு வரலையா?”
“அவன் வெளியே நிக்குறான்...அவன் பைக்குல ஏறித்தான் காம்பவுண்ட் சுவர் தாண்டிக் குதிச்சேன்...”
"என்னது சுவரேறி குதிச்சியா...வெளிய கார்ட் இருப்பானே...லூசாடி நீஅவன்கிட்ட கேட்டு உள்ள வரவேண்டியதுதான... நல்லவேலை இப்போதான் லட்டுவக் கட்டிப்போட்டேன். இல்லைனா என்னாகிருக்கும்...எனக்கே டஃப் குடுக்கறடி பிசாசே"
“ரொம்பப் பண்ணாதிங்க கார்ட் இல்லை...அதான் ஏறிக்குதிச்சேன்... “என முறைத்துக்கொண்டு அமர்ந்தாள்...
“எதுக்கு இவ்வளவு அவசரமா என்னைப் பார்க்க வந்த? என்ன விசயம்?” என்க...
" இவ்வளவு அட்வெஞ்சர் பண்ணி உங்களைப் பார்க்க வந்தா, ஏன் வந்தனுக் கேட்கறீங்க...எங்க வீட்டுக் கேட்டெல்லாம் ஏறிக்குதிச்சு வந்தேன் தெரியுமா" என்க
சக்திக்கோ அதிர்ச்சிக்குமேல்...அதிர்ச்சி.
“ஏன்டி நான் பேசலைனா நான் எதாவது முக்கியமான விசாரனையில இருப்பேனுத் தெரியாதா...”
அவளோ வாய்க்குள்ளவே “பெரிய புலன்விசாரனை ஹீரோனு நினைப்பு....முஞ்சியப்பாரு” என்று முனங்கினாள்...
“இங்க வருறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன்,ஏன் வந்தேனுக் கேட்கறதப்பாரு” என்றாள்...
மெதுவாக அவளைக் கரம்பிடித்து எழுப்பியவன், அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்...சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தனர் இருவரும்....
“இப்படியெல்லாம் பக்கத்துல வந்து நிக்காதடி...எனக்கு கண்ட்ரோல் போகுதுடி...” என்றவன் அவளின் டீசர்ட்டின் இடையில் கைவைக்க வெண்ணெய் போன்ற, அவளது வளுவளு இடுப்பின் மென்மையை உணர்ந்தவன்...
அப்படியே கைகளை மேலக்கொண்டுப்போனான்...
“ஆபிசர் தப்பு பண்றடா...” என்றாள்...
“தப்பை சரியாகப் பண்றானானுப் பார்க்கறேன்டி...பின்னாடி திணறக்கூடாதுல...” என்றவனின்...நாக்கு ஷன்மதியின் உதட்டில் கோலம்போட...சுகவுணர்வில் கண்களை மூடியவள்... “என்னடா பண்ற?” என்று மெதுவாக அவள் வாயைத்திறக்க, அதுதான் சமயம் என்று அவளது வாய்க்குள் நாக்கை நுழைத்துக்கொண்டான்...
ஹப்பா எனத் தனது உணர்வுகளைப் பிரதிபலித்தவள்...அவனது கையை இறுக்கிப்பிடிக்க...தன்னை மறந்து அவளிடம் லயித்திருந்தவன்...
அவளது இதழமுதம் பருகிக்கொண்டிருக்க...அவளோ அவனின்பால் மயங்கி கிறங்கி நிற்க...சிறிது நேரம் கழித்து விடுவித்தவன்...மறுபடியும் அவளது கழுத்தில் முகம் புதைத்து அவளது வாசம்பிடித்தவன்...விடுவித்து.
“ஓய் நீ கிளம்பு உன்னைக்கொண்டு விட்டுட்டு வர்றேன்” என்று அவளை விலக...எங்கு விலகவிட்டாள்.
அவனின் முதுகோடு கைகளைப் படறவிட்டுப் பிடித்துக்கொண்டு...அவன் நெஞ்சோடு சாய்ந்துக்கொண்டவள்
"மிஸ் யூ சக்தி"
அவன் அவளது தலையில் மேல் தன் நாடியை வைத்து அமைதியாக இருந்தவன்...
“உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்டி...இனி” என்றதும்.
“அது என்ன மிஸ் பண்ணுவேன் இல்லை, மிஸ் பண்றேன் தமிழ் ஒழுங்கா பேசுங்க சக்தி...” என்றாள்.
“இல்லைடி சரியாதான் பேசுறேன்...அதான் உன்கூடவே வந்த குரங்கு எங்க...அவன் செய்தவேலையால இப்போ டிரான்ஸ்ஃபர் ஹைதராபாத்திற்கு...அதுவும் டீப்ரோமோஷன்ல”
அப்படியே அவனைச் சோபாவில் தள்ளிவிட்டவள்...அவன் மீது ஏறி உட்கார்ந்தவள்...
“என்ன விளையாடுறீயா...லவ்வ சொன்ன அன்னைக்கே பிரச்சனை...உடனே நிச்சயதார்த்தம்...இப்போ ட்ரான்ஸஃபரா... அப்பா எப்பதான்டா காதலிக்கறது?” என்று கேட்டவளைப் ஒரு மார்க்கமாக பார்த்துவைத்தான்.
"என்னடா அப்படிப் பாக்குற"
“அடிங்க உன்னைவிட ஏழு வயசுக்கு பெரியவன்டி நான்...டா போட்டுக்கூப்பிடுற” என்றவன்...
“இப்பவும் நம்ம லவ் பண்ணிட்டுதான் இருக்கோம் மதி டார்லிங்க்...” எனக் குரலை குழைந்துப்பேசினான்.
ஷன்மதி கண்களில் கண்ணீர் , அதை அவனிடம் காண்பிக்காமல்,முகத்தைத் திருப்பிக்கொண்டாள்...
சக்திக்கு அவள் அழுகின்றாள் என்றதும் "ஏய் சண்டி ராணி இறங்குடி பார்குறதுக்குத்தான் ஒல்லியா இருக்க...வெயிட் எப்பா கர்லா கட்டை மாதிரி" என்றதும்...நார்மலானவள்.
“நான் உங்களுக்குக் கர்லா கட்டையா....” என அவனை அடிக்க எது கிடைக்கும் என்று கீழிறங்கித்தேட...அதுக்குள்ளாக எழும்பியவன் மணியைப் பார்த்து...நேரமாகிவிட்டதை உணர்ந்தான்.
“உன்மேலயும் அவன் மேலயும் செமக் கோபத்துல இருந்தேன்டி... உன்னைப் பார்த்ததும் எல்லாக் கோபமும் ஓடிப்போச்சுது...இன்னும் மூனு நாள்ல நான் ஹைதராபாத்ல சார்ஜு எடுக்கணும்.... இரு நான் ரெடியாகிட்டு வர்றேன், உன்கூட நானும் வர்றேன்” என்றவன்...விலகப்போக.
"சக்தி" என அழைத்தாள்.
அவன் திரும்பி பார்க்க “என்னையுவும் உன்கூடவே கூட்டிட்டுப் போறியா?” எனச் சிணுங்கினவளைப் பார்த்தவன்.
“ஏது உங்க அப்பா என் மேல டைரக்டா கேஸ் குடுக்கவா? என் மகளைக் கடத்திட்டுப்போயிட்டானு. நம்ம இரண்டுபேரையும் நிரந்தரமாகவே பிரிச்சுருவாரு...ஏற்கனவே அதுக்கான சந்தர்பத்தை எதிர்பார்த்துதான் காத்துக்கிட்டிக்காரு...”
“எங்கப்பாவை குறை சொல்லலைனா உங்களுக்குத் தூக்கம் வராதா?” எனக் கோபம் முகம்காட்ட...
“மதி எங்கப்பாவையே நான் கடுப்பேத்துறவன்...உங்கப்பாவை சும்மாவா விடுவேன்...அதெல்லாம விடு...நீ என்னைவிட்டு நகர்ந்து நில்லு எனக்கு என்னவோ போலாகுது...அப்புறம் நீ வயிற்றைத் தள்ளிக்கிட்டுத்தான் கல்யாணமேடையில் உட்காரணும். எங்கப்பா என்னை உப்புக்கண்டம் போட்ருவாரும்மா...” என்று தள்ளி நிறுத்தியவன் தனதறைக்குச் சென்று உடை மாற்றிவந்தான்...
வரமாட்டேன் என்று அடம்பிடித்துச் சோபாவில் படுத்துக்கொண்டவளை, இழுக்க எழுந்து அவன் மீதே மோதி நின்றாள்...மேதிய வேகத்தில் மலர்மேடுகள் அவனது நெஞ்சில் அழுத்த அப்படியே, நின்றாள்...
சக்தியோ அவளிடம் கிறங்கியவன், மலர்மேடுகளைக் கரங்கொண்டு தொட்டழுத்த, கண்களைக் கிறக்கமாக மூடிக்கொள்ள, அவனுக்கு அவள் அனுமதியளித்ததாகத் தோன்ற, டீ சர்டின் உள்ளே கரங்களை நுழைத்து பிடித்துக்கொண்டவன் இன்னும் அழுத்த அப்படியே சோபாவில் சரிந்து படுத்துவிட்டாள்...
இளமை துள்ளும் நங்கையவள், தன்னவனின் கரம்படவும் உணர்வுகள் தாங்காது மயங்க, அவனோ அவளின் அழகை ஆரதிக்க நினைத்து அவளது மேலாடையை கழட்டிவிட்டான்...
எவ்வளவு கட்டுப்பாடு நிறைந்தவன் என்றாலும் தன்னவளிடம் மயங்கி கிறங்கத்தான் செய்தான், அவளது மேனியில் முத்தமிட்டு, கடித்து வைக்கத் துடித்தவளை " மதி " என்ற ஒரு வார்த்தையில் அடக்கினான்...
அதற்குள் ஷன்மதியின் போன் அலர சக்தி எடுத்துப்பேச, விஷ்ணுதான் அழைத்திருந்தான்... “எப்போ வருவ போய் ஒரு மணிநேரமாகிட்டு" என்றான்...
ஷன்மதி சக்தியை பார்க்க பத்து விரல்களைக் காண்பிக்க " பத்து நிமிஷத்துல வந்திடுவேன்...இரு " என்றவள் அழைப்பைத் துண்டிக்க...
எழும்பு என்று அவளை எழுப்பியவன் கிடைத்த இடமெல்லாம், முத்தம் வைத்து...
“இப்போதைக்கு இதுபோதும்...இனி தனியாலாம் சந்திக்ககூடாது சரியா....குருட்டுத் தைரியமா எதையும் செய்யாத...என்ன” என்று அவளது தலையை எல்லாம் சரிசெய்தவன்...வா என்று வெளியே அழைத்துச் சென்றவன் லட்டுவை அவிழ்த்துவிட்டான்.
தனது பைக்கை எடுத்தவன் ஸ்டார்ட் செய்து அவளை அமரவைத்து வெளியேவரவும் கார்ட் வணக்கம் வைக்க, “இரு மவன வந்து உனக்கு டோஸ் தர்றேன். ஒருத்தி என் வீட்டுக்குள்ள நுழைந்ததையே கவனிக்க முடியலை; இதுல எனக்குப் பாதுகாப்பு கொடுக்குறானுங்க...” என முறைத்துவிட்டு வெளியே வந்தவன்....அங்கு விஷ்ணு நிற்பதை கண்டவன்.
அவனைக் கோபமாக முறைத்துவிட்டு
“இதுவரைக்கும் எனக்குச் செய்த நன்மை போதாதுனா ராசா இந்தச் சண்டிராணிய இங்க கூட்டிட்டு வந்த...உங்க இரண்டுபேருக்கும் மூளைனு ஒன்னு இருக்கா என்ன, இதுலவேற லா படிக்கிறோம்னு பீத்தல் வேற...”
ஷன்மதி “ஏன் சக்தி அவனைத் திட்டுறீங்க...நான் தனியா வர்றேனு சொன்னேன், அதான் கூட வந்தான்...அவன் மேல தப்பில்லை...”
“ஆமா உங்க இரண்டுபேரு மேலையும் தப்பேயில்லை...எல்லாம் என்மேலதான் தப்பு இழுத்துவச்சு நாலு அறைவிடாமா பேசிட்டிருக்கேன்பாரு என்னைச் சொல்லணும்” என்றவன்...
“நான் மதியை வீட்லக் கொண்டுவிடுறேன்...நீ என் பின்னாடியே வா...அப்படியே உங்க வீட்டுக்குப் போயிடு” என்று விஷ்ணுவிடம் கூறினான்..
விஷ்ணுவும் எதிர்த்துபேசினா அடிப்பானோ என்று நினைத்தவன்... ‘இதுக இரண்டும் என்னவேனா செய்யட்டும், நம்ம வீடுபோய்ச் சேருவோம்’ என்று போய்விட்டான்.
ஷன்மதியின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் பார்க்க அங்கு எல்லோரும் விழித்திருந்தனர்...வாட்ச்மேன் ஓடிவந்து கேட் திறந்துவிட்டான்...
ஷ்ரவன் சக்தியை முடிந்தால் அடித்துவிடுவான், அந்தளவுக் கோபத்தில் நின்றிருந்தான்....