தினம் தினம் 17
Thinm17

17 தினம் தினம் !!
அவள் வாழவில்லை அவள் சுதந்திரமாக இருக்கவில்லை , அவள் விரும்பியபடி இருக்கவில்லை என்று வருத்தம் உண்டுதான் ஆனால் அவன் வருந்த வேண்டும், அவன் கலங்க வேண்டும் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை.. அவளை அவன் தன் ஒரு பகுதியாக பார்க்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவள் தன் இதயத்தில் ஒரு பகுதியாகத்தான் அவனைப் பார்த்து இருக்கிறாள அவன் கலங்கி நிற்கும் வேளை அவள் மட்டும் எப்படி அதை கல்லாக கடந்து போக முடியும். அவள் வலியை அவன் புரிந்தது இல்லை , ஆனால் அவன் சொல்லாத வலியை கூட அவள் புரிந்து கொள்கிறாள் என்றால் அவளை விட சிறந்த துணை அவனுக்கு கிடைத்திருக்க கூடுமா?
ஓடி வந்து சத்யா அருகில் உட்கார்ந்த அஞ்சலி..
"என்னங்க மாமி போன் போட்டிருந்தாங்க, உங்க அம்மா கடை வீடு எல்லாத்தையும் உங்க தங்கச்சி பேருல எழுதி கொடுத்துட்டாங்கன்னு சொல்றாங்க உண்மையா அவங்க ஏதோ தெரியாம சொல்றாங்கன்னு நினைக்கிறேன்
"உண்மைதான் என்றான் கண்ணை மூடிக்கொண்டு
"உண்மையா ?
"இப்போ உனக்கு குளு குளுன்னு இருக்குமே இதைத்தானே எதிர்பார்த்த, இவன் சந்தோஷமா இருக்கக் கூடாது , நடுத்தெருவுல நிற்கணும் யாருமே இல்லாம அடுத்து என்ன பண்ண போறோம்னு பிச்சை எடுக்கணும்... அப்படி ஒரு நிலைமை வராதான்னு எதிர்பார்த்து இருந்திருப்பல்ல... இதோ உன் கண்ணு முன்னாடியே வந்துடுச்சு, இப்ப சந்தோஷமா ? என்று சத்யா நெற்றியை மறைத்த கையை எடுத்தான் கண்கள் சற்று கலங்கி இருந்தது... எப்படி இங்கு வந்து சேர்ந்தான் என்பதே ஆச்சரியம் தான் பெட்டியை எடுத்தவன் நேரே மனைவி ஊருக்கு ஏறும் பஸ்சில் ஏறி அமர்ந்து விட்டான் ...
தெரிந்தது அப்பவும் பொண்டாட்டி முன்னாடி அழ மாட்டானாம் அவனுடைய கெத்து போயிருமாம்..
"நான் என்ன செஞ்சேன்?
"அம்மாவுக்கு செய்ற , உன் தங்கச்சிக்கு செய்றன்னு உக்காந்து அழுதல்ல, பக்கத்திலேயே இருந்து நெஞ்சில் குத்திட்டு போயிட்டாங்க.. குளுகுளுன்னு இருக்குமே கத்தி சிரி... என் புருஷன் ஏமாந்துட்டான் நாடு தெருவுல விட்டுட்டு போயிட்டாங்கன்னு எப்போதும் உள்ளுக்குள்ள கவுண்டர் கொடுப்பியே, இப்ப கொடு அஞ்சலிக்கு தலையில் அடித்துக் கொள்ளத்தான் தோன்றியது
துரோகம் செய்தது யாரோ? அதற்கும் பலியாடு இவளாம்.. அவர்களைப் பேச வக்கில்லை, இவளிடம் வந்து இப்போதும் சாடிக் கொண்டு இருந்தான் ...மொத்தமாக உடைந்து விட்டான் போலும்
" பணம் பணம், எனக்கு என்ன செய்வ எனக்கு என்ன செய்வேன்னு அவங்க ஒரு பக்கம், இவன் என்ன எனக்கு ஒன்னும் செய்யலையேன்னு நீ ஒரு பக்கம் , மொத்தத்துல இந்த சத்யா ஒருத்தருக்கு வேண்டாம் இல்ல... இவனிடம் என்னத்த பேச அஞ்சலி பாவமாக அவனை பார்த்து கொண்டு இருந்தாள் ...
"நான் சம்பாதிக்கிற பணம் நான் கொடுக்கிற காசு இதுதான் உங்க ரெண்டு பேருக்கும் தேவை... ஏற்கனவே நீ என்ன அம்மன் சல்லிக்கு மதிக்க மாட்ட.. ஏதோ தாலி கட்டிட்டானேன்னு வச்சி வாழ்வோனு நினைச்சு பெருந்தன்மையாதான் நீ என்கிட்ட வாழ்ந்துகிட்டு இருக்க ... நான் சொல்லல தாயே நீ தான் என்கிட்ட சொல்லிட்டு இருந்த ... எப்படா விடுவான் , அப்பா வீட்டில போய் உட்கார்ந்துக்கலாம்னு நேரம் பார்த்து காத்திருந்த... எனக்கு இப்ப திரும்புன திசை எல்லாம் சூனியம்மா இருக்கு மொத்தத்தையும் இழந்தாச்சு, கையில நயா பைசா கிடையாது இனி பிச்ச தான் எடுக்கணும் அதுக்கும் என் மனசுல தெம்பு இல்ல தாயே..
இவளுக்கு தான் அழுகை வந்தது ... பணம் போச்சே என்ற வலி இல்லை , நம்பி செஞ்சானே ஏமாத்திட்டாங்களே இந்த வலியை எப்படி கடந்து வர போறான்னு தெரிலேயே என்று தான் பயமாக இருந்தது ...
"என்னங்க என்று அவன் நெஞ்சை தடவி விட சிறுது நேரம் அமைதியாக இருந்தான்..
"என்ன பண்ணலாம்ங்க..
"இனிமே உன்ன நம்பி வந்தேன்னு வச்சுக்கோ தேவைக்கு மட்டும் என்கிட்ட வந்து இருக்கியான்னு கேலி பேசுவ.. இல்ல என் அப்பன் கிட்ட பணம் இருக்குன்னு இந்த பக்கம் வந்து சேர்ந்துட்டான்னு பகுடி பேசுவ எதுக்கு வம்பு .... பெருமூச்சு விட்டவன்..
"பெட்டிக்குள்ள விவாகரத்து பத்திரம் இருக்கு
எடுத்து கையெழுத்து போட்டு கொடு ... வாங்கிட்டு ஊர் போய் சேர்றேன்" என்ற சத்யாவின் வரண்ட குரலில் அஞ்சலி நெஞ்சை பிடித்துக் கொண்டு
"எ... ன்......ன சொன்னீங்க...
"யாரும் இல்லன்ன உடனே நம்மள தேடி வந்துட்டான்னு நீ நினைக்க கூடாது பாரு, அவங்க இஷ்டப்பட்ட படி சொத்தை எல்லாம் அவங்களுக்கு கொடுத்தேன், நீ இஷ்டப்பட்டபடியே உனக்கு சுதந்திரத்தை கொடுத்திடுறேன் ... டைவர்ஸ் தானே தந்துடறேன் நீ என்ன செய்யனுமோ செஞ்சுக்கோ.... அப்பப்போ என் பிள்ளைகளை பாக்குறதுக்கு மட்டும் விடு... அதுக முகத்தை பார்க்காம என்னால் இருந்துக்க முடியாது ... அதுக்கு மட்டும் நீ பெர்மிஷன் கொடு போதும்.... ஜீவனாம்சம் கொடுக்க என் கையில் ஒன்னும் இல்லை... உன்கிட்ட வாங்கின நகையை மட்டும் எப்படியாவது திருப்பி தந்துடுறேன்... அதுக்கும் ஒரு ரெண்டு வருஷம் டைம் கொடு எந்த கடையிலையாவது போயி வேலைக்கு நின்னு "என்றவன் வாயை தன் விரல் கொண்டு அடைத்த அஞ்சலி ...
கணவனுக்கு மனைவிகள் சம்பளம் இல்லா வேலைக்காரிகள் தான்
ஆனால் மனைவிகளுக்கு கணவன் எப்போதும் ராஜகுமாரன் தானே அவன் தாழ்ந்து பேசுவதை கூட அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை
"என்ன பேசுறீங்க நானும் உங்க பணத்துக்காக தான் உங்க கூட வாழ்ந்தேன்னு நினைக்கிறீங்களா? மனசை தொட்டு சொல்லுங்க உங்க அஞ்சலிக்கு பணம் தான் உங்கிட்ட வேணுமா ஹான் ??சத்யா முகத்தை அவளுக்கு திருப்பி கொள்ள அவன் முகத்தை இழுத்து தன் முகம் பார்க்க வைத்த அஞ்சலி
"அந்த பணம் எனக்கு அவசியம் இல்ல அது என் தகப்பன் வீட்டிலேயே மித மிஞ்சி இருக்கு...
"என்னால இனி குடும்பத்தை தூக்கி சுமக்க முடியாது "நம்பிக்கை இழந்து தான் நின்றான்
பார்த்துக்கலாம்
"என்னோட இயலாமையையும் உங்கிட்ட தான் காட்டுவேன் "
"தாங்க்கிக்கிறேன்
"பிள்ளைங்க படிப்பு அது இதுன்னு
"நானும் இருக்கேன் எதாவது பண்ணிக்கலாம்
"ப்ச் இதெல்லாம் ஒத்து வராது என்ன விடு அதுல கையெழுத்து போட்டு கொடு அப்பா எங்கன்னு கேட்டா "
"ம்ம் அதையும் சொல்லுங்க என்ன சொல்லட்டும் ....
"என்ன சொல்வ அஞ்சு, அப்பா ஏமாந்துட்டார்னு சொன்னா பிள்ளைங்க காறி துப்பும்ல, நீ இது மட்டும் பண்றியா அப்பா ஃபாரின் போயிட்டார்னு சொல்லிடுறியா என்றவன் பார்வை அவளை சுக்குநூறாக உடைந்து நோக்க...
அப்பா நமக்கே நமக்கு கிடைச்சிட்டார்னு சொல்லவாங்க என்றவள் அவன் கைக்குள் தன் கையை விட அதை அவன் நடுங்கிய விரல்கள் தள்ளிவிட போக அதை அவள் கைகள் அழுத்தி பிடித்து கொண்டு
பணம் தான் போயிருக்கு, சொத்து தான் போயிருக்கு உங்கள நம்பி உங்க குடும்பம் இருக்கு உங்க அஞ்சலி இருக்கா விடுங்க போனது போகட்டும் பார்த்துக்கலாம்....
அப்பாஆஆஆஆஆஆ என்று மகனும் மகளும் ஓட வந்து தகப்பன் கழுத்தை கட்டி கொள்ள.. வாசலில் நின்ற சாந்த குமார் அமைதியாக சத்யாவை பார்க்க சத்யா தலையை குனிந்து கொண்டான்.... விஷ்ணு தலை வலிக்குது தாத்தா வீட்டுக்கு போவோம் என்று பாதி வழியிலேயே கூறவும் பேரனை அழைத்து கொண்டு வந்தவர் கதறி அழும் மகள் குரலை கேட்டு ஓடி வர இருவரும் பேசியது கேட்டு விட்டது ...
எம்மாடி அஞ்சலி
ஒன்னும் இல்லப்பா அவருக்கு தலை வலியாம் அதான்
"விடுத்தா விடுத்தா எல்லோருக்கும் இப்படி ஒரு கட்டம் வரத்தான் செய்யும் , எல்லார் வீட்டுலையும் நடக்குறதுதான் .... அடுத்து என்னன்னு பாருங்க மருமகன் , அஞ்சலி கூட இருப்பா பார்த்துக்கலாம் மனசை தளர விடாதீங்க என்ற மாமனார் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாது கவுந்தே உட்கார்ந்து இருந்தான்
நான் என்று பெருமை கொண்டவன் என்றாவது தலைக்கணம் தாங்காது தலையை கவுந்து தான் விடுவான்...
இல்ல அவளை உங்ககூடவே வச்சுக்கோங்க
"என் புள்ளைக்கு வாழ்ந்து இருக்கவும் தெரியும் தாழ்ந்து இருக்கவும் தெரியும் மருமகன் , ஏத்தா
"அப்பா என்றவள் கையில் கட்டு கட்டாக பணத்தை வைத்த சாந்தகுமார்
"ஊருக்கு கிளம்பு ... அம்மா தங்கச்சி கிட்ட எதையும் சொல்லாத இதை வச்சி எதாவது பண்ண சொல்லு..
பணம் எல்லாம் வேண்டாம்" கெளரவ ராசா வாயை திறக்க
நான் சம்பாதிச்சது யாருக்கு என் மகளுக்கு தானே அவளுக்கு பாதி இவளுக்கு பாதிதான் சரியா பிரிச்சிட்டேன்.. உங்க பங்கு இது, கொண்டு போங்க மாமனார் வீட்டுல இருந்தா உங்களுக்கு மரியாதை குறைச்சல் அதான் யோசிச்சேன் ... கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அதுக்கு பிறகு மேலே ஏறி வந்துடலாம், அதுவரை கொஞ்சம் பல்ல கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கோங்க.. இருட்டுல வழி தெரியாது கொஞ்சம் வெளிச்சத்துக்கு வாங்க, ஏதாவது வழி கிடைக்கும் நாம நினைச்ச ஊருக்கு போகலனாலும், ஏதோ ஒரு ஊருக்கு போயி சேர்ந்துடலாம் நம்பிக்கையை மட்டும் இழந்துடாதீங்க
ம்ம் , பணம் வேண்டாம் நான் பாத்துக்கிறேன் ... அஞ்சு காசை திருப்பி கொடுத்துடு, நீ கல்யாண வீட்டுக்கு கிளம்பு கொஞ்ச நேரம் தூங்குறேன்.... நைட் பஸ்சுக்கு போகலாம் வந்து இறங்கிய போது இருந்த இறுக்கம் இப்போது அவன் முகத்தில் இல்லை ... மனைவி பிள்ளைகள் முகம் பார்த்த பிறகு தெளிவு வந்திருந்தது..
மனைவி தன்னை எப்போதும் விட்டுவிட மாட்டாள் என்று நம்பிக்கை உண்டு... அதில் வருவது தானே ஆணவம்,..
இல்லை நான் உங்ககிட்ட இருக்கேன் ....
கொஞ்சம் தூங்க விடு அஞ்சு போ எரிச்சலாகத்தான் கத்தினான்...
அப்பா நான் பார்த்துக்கிறேன் , நீங்க போங்க என்று பணத்தை தகப்பன் கையில் கொடுத்த அஞ்சலி கதவை பூட்டி விட்டு வந்து சத்யா அருகே படுத்து அவன் முதுகை கட்டி கொண்டு...
இப்ப தூங்குங்க என்று அவனை நெருக்கி அணைத்து கொள்ள சிறுது நேரத்தில் சத்யாவிடம் இருந்து மெல்லிய குறட்டை வந்தது ...
அத்தனையும் இழந்த பின்பு நம்பிக்கை கொடுக்க ஒரு உறவு இருந்தால் போதும் தப்பி கரை சேர்ந்து விடுவான்..
அவனுக்கு இது பேரதிர்ச்சி
ஆனால் அஞ்சலிக்கு தெரியுமே இவன் இப்படி உடைந்து நின்று விடுவான் என்று
அஞ்சலிக்கு நஷ்டத்தில் லாபம் எப்பாடா!! ஏமாந்தாலும் இனி அதுக தொல்லை இருக்காது இனி இந்த கரடி மூஞ்சன் எனக்கே எனக்கு என்றுதான் மகிழ்ந்தது...
தொப்புள்கொடி சொந்தம் தாலிகொடி ஏறும் வரை மட்டுமே , உடலோடு உறவாக வரும் துணைக்கு இணை தாய்மை கூட ஈடாகாது ....
உலகில் எதையும் மறைக்காது உறவாட ஒரு உறவு உண்டு எனில் அது கணவன் மனைவி உறவு மட்டுமே ... புரிந்தவன் யாரை முதலில் வைக்க வேண்டும் என்று தகுதி பட்டியல் சரியா போட்டு விடுவான் தெரியாதவன் கோட்டை விட்டுவிடுவான் அவ்வளவே!!