தினம் தினம் 14

Thinam14

தினம் தினம் 14

14 தினம் தினம் !! 

அடடே வாங்க சத்யா சார், என்ன அஞ்சலி மிஸ் ரெண்டு நாளா வேலைக்கு வரல, 

 அது விஷயமா தான் கொஞ்சம் பேசணும் அப்படியே தனியா கொஞ்சம் வரிங்களா என்றான்

சத்யா கையில் கிடந்த காப்பை முறுக்கிக் கொண்டே 

சொல்லுங்க சார் என்ன விஷயம் புத்தகங்கள் அடிக்க வைத்திருந்த ஸ்டோர் ரூம் உள்ளே ஹெச்எம் அவனை அழைத்து வர ..பேச்சை இல்லை நங்கு நங்கு என்று மூக்கில் நான்கு குத்து 

நாயே வேலைக்கு வர்ற பொண்ணுங்கள கைய புடிச்சு இழுக்கிறியா , என் பொண்டாட்டி பக்கம் கண்ணு திரும்பட்டும், கண்ணை அப்படியே கையில நோண்டி எடுத்துடுவேன் ... உன்னை எல்லாம் நம்பி அவளை வேலைக்கு விட்டேன் பாரு ... என்னைய தான் தலைப்பாடா அடிச்சுக்கணும் 

சார் உங்க மிஸஸ் பொய் சொல்றாங்க 

அடிங்க செருப்பால, அவள குறை சொல்றியா எல்லாத்துக்கும் காரணம் நான்தான், அவளை கண்ட நாய் முன்னாடி குறைவா பேசினதால வந்த வினை என் பொண்டாட்டிய நான் பேசுவேன், அது எங்க குடும்பம் நீ அதை அட்வாண்டெஜ்ச்சா எடுத்துக்கிட்டு உள்ள நுழைய பார்த்து இருக்கியா, உனக்கு அடுத்தவன் பொண்டாட்டி கேக்குதா என மீண்டும் நான்கு அடி ஆசை தீர போட்டவன், அவர் சட்டையை நீவி விட்டபடி... 

வெளியே சிரிச்ச முகமாக போற, இங்க நடந்தது வெளியே போனா உனக்கு தான் கேவலம் புரியுதா என்று அவர் கன்னத்தில் தட்ட போக அவர் பயந்து பின்னால் மண்டையை இழுக்க

இனி ஒழுங்கா இருந்துக்க என்று வெளியே வர லதா கையை பிசைந்து கொண்டு நின்றாள்

அண்ணே நான் தான் சொன்னேன்னு இங்க சொல்லிட மாட்டீங்களே.. என் வேலைக்கு உலையாகி போகும் 

இல்லம்மா பாத்துக்கிறேன் என்று விட்டு சத்யா பைக்கை எடுத்தான்

எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு திமிர் பிடிச்சவ ஒரு வார்த்தை சொன்னாளா..

அவ பாட்டுக்கு பஸ் ஏறி தாய்வீடு போய் சேர்ந்துட்டா.. நெனச்சேன் ஏதோ திருக்கி வேல பண்ணி வச்சுட்டு தான் இவ ஓடுறான்னு ... என்கிட்ட சொன்னா ஆகாதோ? அது சரி இவ என்னைக்கு நம்மள மனுஷனா நினைச்சிருக்கா, வர வர சொல் பேச்சு கேட்கிறது கிடையாது , அவ இஷ்டத்துக்கு ஏதாவது பேசிட்டு போறா இனி இது சரி வராது ஓவர் இடம் கொடுக்கிறேன்னு நினைக்கிறேன் என்று அவளைத்தான் திட்டிக்கொண்டு போனான்... 

சூப்பர் மார்க்கெட்டில் என்றும் இல்லாமல் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.. அந்த மேடமுக்கு என்ன வேணும்னு பார்த்து எடுத்துக்கொடு, சார் எல்லாத்தையும் எடுத்து கலைச்சு போடாதீங்க, என்ன வேணுமோ அதை மட்டும் எடுங்க.. இந்த பாப்பாவுக்கு ஒரு சாக்லேட் கொடு தேவி என்று அந்த கூட்டத்தில் வேலை சரியாக நடக்கிறதா என்று சத்யா நடந்தபடி பார்த்து கொண்டு இருக்க .. அவன் போன் அதிர்ந்தது 

அஞ்சு அவ்வளவுதான் போட்டோ எல்லாம் வைக்கவில்லை...  

அன்பே ஆருயிரே மானே தேனே போட தெரிந்திருந்தால் ஏன் பொண்டாட்டியிடம் இவ்வளவு எதிர்ப்பை வாங்க வேண்டும்.. இவ்வளவுதான் இவர் டக்கு, அவன் தாயை தங்கையை தாஜா பண்ண தெரிந்த அவனுக்கு மனைவியை தாஜா பண்ண தெரிந்திருந்தால் வாழ்க்கையிலும் எங்கேயோ போயிருந்திருப்பான் தொழிலிலும் எங்கேயோ போயிருந்திருப்பான்..

இருப்பதில் இன்பம் கொள்ளாத மனைவி இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் மனைவி

மற்ற கணவனோடு ஒப்பிட்டுப் பேசும் மனைவி சம்பாதிப்பது புருஷ லட்சணம், சம்பாதிப்பது மட்டுமே புருஷனின் வேலை என்று அவன் பணத்தை மட்டுமே பார்க்கும் மனைவிகளை நேசிக்க வராதுதான்...

ஆனால் , கணவனை மட்டுமே நேசிக்க தெரிந்த பெண்களை பதிலுக்கு நேசிப்பதில் தவறு இல்லை சேரும் சேர்க்கை நல்லதாக இருந்தால் , முன்னேற்றம் தானாக வரும் .. மனைவி தேவதையாக கிடைத்துவிட்டால், அவன் வாழ்க்கையும் எங்கோ போய்விடும் அவன் முன்னேற்றத்தில் உறுதுணையாக இருப்பாள் அவன் சோர்ந்து போகும் போது நான் இருக்கிறேன் என்று ஆதரவு கரம் நீட்டுவாள் நீ நகை வேணடும் என்று கேட்கவே வேண்டாம் அவள் வாயில் உள்ள உணவை கூட தந்துவிட்டு பட்டினி கிடப்பாள்..

அவன் கால்கள் தள்ளாடும் போதெல்லாம் நீ ஓய்வெடு உன் பாரத்தை நான் சுமக்கிறேன் என்பாள் அவன் தொண்டை வரண்டு நிற்கும் போதெல்லாம் அவன் குரலாக அவள் இருப்பாள்.. ஏனோ ஆணால் மட்டுமே இதையெல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் பெண்ணை குடும்பத்தில் தலைமை தாங்க விடுவதில்லை..

இவர்களை சொல்லி தப்பில்லை இது ஆதிகால பழக்கம் , போருக்கு பழக்கப்பட்டவன் ஆண் என்றும் சமையலுக்கு பழக்கப்பட்டவள் பெண் என்றும் பாகுபாட்டை ஆதி மனிதர்கள் பிரித்து வைத்து விட்டார்கள் ... அதன் கேடு இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

போனை எடுத்து காதில் வைத்தான்

என்ன? அதே டோன்.. எப்படித்தான் அச்சு பிசகாமல் இதே சவுண்ட் மாடுலேஷனில் அத்தனை புருஷன்மார்களும் பேசுகிறார்களோ தெரியவில்லை...

அந்த ஹெச்எம்மை போட்டு அடிச்சு பொளந்து இருக்கீங்க ... ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல இன்னைக்கு தான் லதா என்கிட்ட போன் போட்டு சொன்னா... மூன்று நாள் ஆன பிறகு தான் அஞ்சலிக்கு விஷயம் தெரியும் ... 

அய்யோ கோமா நோயாளிக்கு உயிர் வந்துடுச்சா இருக்காதே இவர் கீழடி தகடு போலல்ல அவ்வளவு லேசா மேல வர மாட்டாரே ...

உன் வாய்க்கு தான்டி அண்ணன் உன்ன இப்படி பேசுது 

ம்க்கும் இல்லைன்னாலும் உன் அண்ணன் என்ன கொஞ்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.. ரெண்டே தடவைதான் அவர் என்ன பார்த்து ரொமான்டிக்கா லுக் விட்டது 

எப்போடி ? 

ஒன்னு பொண்ணு பார்கக வந்த அன்னைக்கு 

இன்னொன்னு

தாலி கட்டும் போது அதை நம்பி கரும்பு மிஷின்ல தலையை கொடுத்த பாவப்பட்ட ஜென்மம்டி நான் ... உசாரா இருந்து என்ன கவுத்துட்டார் ... இல்ல இந்த கிழவனை கட்டிட்டு மாரடிக்கணும்னு எனக்கு அவசியமா 

ரொம்ப சலிச்சுக்காத..அண்ணன் உன்கிட்ட எதுவும் சொல்லலியா 

அதான் வாய்ல ஆல்டைம் அரைக்கிலோ முத்து வச்சிருப்பாரே துரை சொந்த பொண்டாட்டிகிட்ட எல்லாம் பேச மாட்டப்ல அடுத்தவன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் சொம்பு தூக்குவார்... இவன் இப்படி இருந்தா அவன் கையை பிடிச்சு இழுக்க தான் செய்வான் ... சம்பவம் நடந்து மூணு நாள் ஆகி இருக்கு ஒரு வார்த்தை என்ன ஏதுன்னு கேட்டாரா பார்த்தியா?  

எதுக்கு உன்ன வருத்தப்படுத்தணும்னு நினைச்சு இருப்பார் அஞ்சு

 ச்சே ச்சே அப்படி எல்லாம் தப்பா நினைக்காத, எப்படி இவளை வண்டி வண்டியா கழுவி ஊததலாம்னு தீவிரவாதி போல ஃபுல் ஸ்கெட்ச் போட்டு வச்சிருப்பான் பாரேன் நான்தான் தப்புன்னு ஒரே வார்த்தையில முடிச்சிருவான்.. ஆனா ஒன்னுடி அடுத்த ஜென்மத்துல நான் புருசனாவும் , அவன் பொண்டாட்டியாவும் பொறக்கணும் 

என்ன ஒரு காதல் அடுத்த ஜென்மத்துல கூட அதே ஜோடி வேணும்னு ஆசை படுறியே 

அய்ய இவன் வேற யார்கூடையும் நல்லா வாழ்ந்துட கூடாதுங்கிற எண்ணம் தான்... நான் படுற பாட்டுக்கு எல்லாம் வட்டியோட வச்சி வச்சி செய்யணும் ... 

ஆத்தாடி உன்கிட்ட உசாராதான் இருக்கணும் போல வேலைக்கு வருவியா இல்ல எப்படி அஞ்சு 

ப்ச் நம்ம முடிவை நாம எடுக்க முடிஞ்சிருந்தா நாம ஏன்டி இப்படி இருக்க போறோம் ... அவர் என்ன முடிவு எடுக்காரோ அதுதான நம்ம வாழ்க்கையில நடக்கும் இதுக்கு தான் பயந்தேன் ... போச்சு குட்டி நிம்மதியும் இனி இல்லாம ஆகிடும் என்று அஞ்சலி வருந்த 

அண்ணன்கிட்ட பேசுடி புரிஞ்சிப்பாரு

என்னத்த பேச அவர்கிட்ட நான் பேசின பேச்சை மேடையில பேசி இருந்தா லேடி சாலமன் பாப்பைய்யா ஆகி இருப்பேன்டி.. பேசி பேசி தொண்டை கிழிஞ்சு போனது தான் லாபம் ... என்ன யோசனையா இருக்கார்னு வேற தெரில மூணு நாளா போன் வேற வரல .. ஒருவேளை டைவர்ஸ் பண்ணிடுவானோ? 

ஏன்டி இப்படி பேசுற 

இங்க வர்ற வரை டைவர்ஸ் பண்ணிட்டு நிம்மதியா வாழலாம்னு ஒரு எண்ணம் கூட வந்துச்சு இங்க வந்த பிறகு மூணு நாளைக்கே எப்போ வீட்டுக்கு போவோம்னு இருக்கே , டைவர்ஸ் எல்லாம் ஆனா எப்படி அந்த ஆள் மூஞ்சை பார்க்காம இருப்பேன்னு தோண வச்சிட்டார் லதா, நமக்கு மட்டும் ஏன்டி இப்படி மேக் வாச்சிருக்கு ..

தெரிலையே 

ஆண்டி ஹீரோ கூட ரொமான்டிக்கா இருக்கானுக ஆனா இந்த புருசன் மெட்டீரியல் அதிலும் பெயில் மார்க் ... ஆன்டி ஹீரோவ்வது கடைசி நாலு எபி திருந்துவானுக இவனுக திருந்துவானுகன்னு காத்திருந்தே நாம கிழவி ஆகிடுவோமோ...  

சரி சரி புலம்பாத அண்ணன்கிட்ட பேசிட்டு அடுத்த ரவுண்டு புலம்ப வா ..

ஆக மொத்தமும் புலப்பங்கள் தொடர்கதைன்னு ஆகி போச்சு லைட்டா போன் போட்டு அசப்பு பார்த்துட்டு வர்றேன் .... நல்லா வக்கீலா பார்த்து வை 

அப்போ டைவர்ஸ் தான்னு முடிவே பண்ணிட்ட... 

"அவ்வளவு சீக்கரம் அதுவும் தர மாட்டான்டி , துணி துவைக்க ஆள் போடணும் , சமைக்க ஆள் போடணும் கிழவியை பார்க்க ஆள் போடணும் கையில இருந்து சுளையா காசு போகும்ல கஞ்சாசட்டி இவதான் நமக்கு ஏத்த அடிமைன்னு நாலு திட்டு திட்டிட்டு வந்து சேருன்னு முடிப்பான்... சிறுது நேரம் லதாவோடு பேசி நடுங்கிய பேஸ்மெட்டை சரி செய்து விட்டு தான் சத்யாவுக்கு போனை போட்டது .. 

"ஏன் என்கிட்ட சொல்லலங்க"

"உன்கிட்ட சொன்னா என்ன கிழிச்சிடுவ... 

"அது என்று அவள் விஷயத்தை கூற வாயெடுக்க என்னைக்கு அவள் பேச எடம் கொடுத்திருக்கிறான்

"இந்த மயித்துக்கு தான் உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன், நான் படிச்சவ சொந்தக்கால்ல தான் நிப்பேன்னு போன ... "

"அந்த நாய் கண்டபிடி பேசி இருக்கான் என்கிட்ட வந்து ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல , இனிமே வேலைக்கு போ, கால உடைச்சு றேன்.. இருக்குறத தின்னுட்டு வீட்ல கிடக்கிற வழிய பாரு.."

"சொன்னா இப்படித்தான் அவனை விட்டுட்டு என்னை திட்டுவீங்க எனக்கு தெரியும் நான் நிம்மதியா இருந்தா உங்களுக்கு பிடிக்காதே..

பாரு அஞ்சு ஆரம்பிக்காத நான் என்ன குடிச்சேனா, கூத்தியா வச்சிட்டு இருக்கேனா .. இல்ல உன்ன அடிச்சு கொடுமை பண்ணினேனா சும்மா பேமினிசன் பேசிட்டே இருக்க எல்லா வீட்டுலையும் இதுதான் நடக்கும் இப்படிதான் இருக்கும் சும்மா நான் கொடுமை படுத்துற மாதிரி பேசாத.... இத்தனை வருசம் ஆகுது உன் மேல என் சுண்டு விரல் பட்டிருக்காடி..

தீயினால் சுட்டது ஆறும் நாவினால் சுட்டது ஆறாது என் ஆளு வள்ளுவர் சொல்லி இருக்கார் 

என்ன சொன்ன ?

ம்ஹூம் ஒன்னும் இல்லை இப்படி எதுக்கெடுத்தாலும் நான் தான் தப்புன்னு சொன்னா அவன் செஞ்சது சரியோ? 

எங்களை சுத்தி ஆயிரம் பேர் இப்படித்தான் இருக்கான்.. இவனை எல்லாம் பார்த்தா எங்களால வேலை செய்ய முடியாது , எனக்கு தெரியும் நான் சரியா இருப்பேன்... சொந்த புருசனுக்கே நம்மள பத்தி தெரில இதுல அடுத்தவனுக்கு எப்படி நான் யார்னு விளக்க என்று கடைசி வரியை முனங்கி கொண்டாள்

நீ சரியா இருந்தா போதுமாடி, வேலைக்கு போனவ ஒழுங்கா போனாளா இல்லையான்னு இங்க இருக்கிறவன் எல்லா வேலையும் விட்டுட்டு உன் பின்னாடியே அலையணுமோ...சற்று கத்தி பேசியவன், கூட்டம் அவனை திரும்பி பார்க்கவும் குரலை குறைத்துக் கொண்டான்

உங்களை யார் பின்னாடி வர சொன்னா யாரும் என் பின்னாடி வர வேண்டாம் இப்ப ஏன் அவனை போய் அடிச்சீங்க உங்கள போய் அடிக்க சொன்னேனா? அடிச்சிட்டு வந்து ஐயோ அம்மான்னு என்கிட்ட கத்திக்கிட்டு இருக்கீங்க.. உங்க பழக்கமே இதுதானே அம்மா தங்கச்சி கிட்டையும் பேசுறதுக்கு வாயில வார்த்தையே வராது ,ஆனா என்கிட்ட எடுத்துக்கிட்டு வர்றதுக்கு மட்டும் வார்த்தை துள்ளிக்கிட்டு வரும்., பொண்டாட்டின்னா உங்களுக்கு கிள்ளு கீரைதான?

அஞ்சு வேலை இருக்கு வாய மூடு, பிறகு பேசுறேன் 

ஏதாவது நான் எதிர்த்து பேசினா மட்டும் இப்படியே கட் பண்ணிடுங்க..  

உன்கிட்ட மனுசன் பேசுவானா வை 

ஏன் பதிலுக்கு பதில்தான் பேசுங்களேன் பார்ப்போம், ஏன்னா பேசினா நான் கேட்கிற கேள்விக்கு உங்ககிட்ட பதிலே இருக்காதுன்னு நல்லா தெரியும்... அதனால என் வாய மூடிடிடுவிங்க... இல்ல மட்டம் தட்டி மட்டம் தட்டி அப்படி தரையோடு ததரையா நசுக்கிடுவீங்க வீட்லயும் நிம்மதியா இருக்க விடக்கூடாது சரி வேலைக்கு போவோம்னு போனா அங்கேயும் நிம்மதியா இருக்க விடக்கூடாது

 உனக்காக போய் அவன அடிச்சிட்டு வந்தேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும் 

அடிச்சுக்கங்க யார் வேண்டாம்னு சொன்னது, நானா உங்களை போய் அடிக்க சொன்னேன் இப்படி எல்லாம் வரும்னு எனக்கு தெரியாதா , என் புருஷன் லட்சணம் இவ்வளவுதான்னு, அடுத்தவன விட்டுட்டு என்கிட்ட தான் வந்து நாண்டுக்கிட்டு நிப்பார்னு , வேலைக்கு போறது என் இஷ்டம்

 உன் இஷ்டப்படி தான் இருப்பேன்னா, உன் அம்மா வீட்டிலேயே இரு தாயே, நீ இங்க வரவேவேண்டாம் 

நானும் அதான் சொல்ல வந்தேன் நானும் உங்க வீட்டுக்கு இனி வர்றதா இல்லை, எங்க அம்மா வீட்டுல இருந்துக்கிறேன் எப்ப போவான்னு காத்தே இருக்கீங்கல்ல எடுப்பட்ட பய, நமக்காக சண்டை எல்லாம் போட்டு இருக்கான்னு ஒரு காதல்ல வந்து போன போட்டுட்டேன் , எப்படி பேசுறார்.. இவனை எல்லாம் திருத்தவே முடியாதுடா சாமி, உனக்கு என்ன நீயும் ஆம்பள கடவுள் தானே, அங்கதான் கூட்டு சேருவ , 

தினம் ஒரு சண்டை தினம் ஒரு பிரச்சனை இந்த லட்சணத்துல ஆதர்ச தம்பதியாம் கிழிக்கும் கீங் கீங் கீங் போனை கட் பண்ணி வைத்து விட்டான்..

தந்தி இல்லா வீணையும் 

புரிதல் இல்லாத திருமண உறவும் 

இசை தராது வீணே இடத்தை அடைத்து கொண்டு தான் இருக்கும்...