தினம் தினம் 5

Thinam5

தினம் தினம் 5

5 தினம் தினம் !! 

சத்யா தன் அறைக்குள் போக.... அவன் மனைவி அஞ்சலி படுக்கையில் குட்டி வெளிச்சத்தில் உட்கார்ந்து ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தாள்... 

அந்த அறை வழியாக இன்னொரு குட்டி அறை, அந்த அறையில் மகனும் மகளும் தனித்தனி படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்... மணியை பார்த்தான் மணி 11

எ"ன்ன பண்ணிட்டு இருக்க அஞ்சு" ஃபோனில் கண்ணாக இருந்தாலும் அவள் கைகள் அருகில் கிடந்த லுங்கியை எடுத்து சத்யாவுக்கு நீட்ட... அதை வாங்கி அணிந்து கொண்டே மனைவியை எரிச்சலாக பார்த்தான்... அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே போனில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்

"உன்கிட்ட தான் கேட்டேன் என்று என்ன பண்ணிட்டு இருக்க போன்ல 

"இல்லைங்க ஸ்கூல் பிரெண்ட்ஸ் குரூப்ல சாட் போயிட்டு இருக்கு, அதான் சும்மா வேடிக்கை பாத்துட்டு இருக்கேன் "

"என்னது ஸ்கூல் குரூப்பா ? உன் அன்னைக்கே இந்த குரூப் எல்லாம் விட்டு வெளியே வான்னு சொல்லி இருக்கேன்ல... ஏழு கழுதை வயசாகுது, இன்னும் பிரண்ட்ஸ் குரூப்னு அங்கன உக்காந்து அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கியா? உன்னை பார்த்து தான் உன் பிள்ளைங்க வளரும், முதல்ல நீ ஒழுங்கா இருக்க பாரு அஞ்சு 

"இல்லைங்க அன்னைக்கு நீங்க சொன்னது காலேஜ் குரூப் , அன்னைக்கே நான் அதிலிருந்து வெளியே வந்துட்டேன்... இது ஸ்கூல் குரூப் "

"எந்த குரூப்பா இருந்தாலும் என்ன, இந்த வயசுல உனக்கு பிரண்ட்ஸ் எதுக்கு ? காலையில முழிச்சதிலிருந்து ராத்திரி வரைக்கும் குடும்பம் வேலைன்னு ஆயிரம் வேலை உனக்கு இருக்கு, இதுல இது என்ன தேவையில்லாத வேலை... அவள்க வீட்டு விஷயத்தை இங்க பேசுறது, இங்க உள்ள விஷயத்தை வெளியே சொல்றது இதெல்லாம் நமக்கு தேவையா? "

"என்னமோ தீவிரவாதி கும்பல் கூட உட்கார்ந்து நாட்ட கெடுக்குறதுக்கு திட்டம் போட்ட மாதிரி பேசிக்கிட்டு இருக்கான் படவா.. இவன் மட்டும் வருசத்துல ரெண்டு தடவை காலேஜ் பிரண்ட்ஸ் குரூப் கூட ஒரு டூர், ஸ்கூல் குரூப் கூட ஒரு டூர்னு போறாரு... நாம அட்லீஸ்ட் அவங்க கூட எல்லாம் பேசத்தானே செய்றோம், அதுக்கு கூட 1008 ரெஸ்ட்ரிக்ஷனா? ' மனதிற்குள் அஞ்சலிக்கு குமைந்தது.. இதை பற்றி பேசினால் விடியற்காலை வரைக்கும் லெக்சர் எடுப்பான்.... என்னமோ இவர்களுக்கு இருக்கும் நட்பு எல்லாம் உயிரை கொடுப்பவர்கள் மாதிரியும், பெண்களுக்கு இருக்கிற நட்புகள் எல்லாம் கெடுத்து விடுவதற்கே வந்து சேர்வது போலவும் பேசி தொலைப்பான் , எதற்கு தேவையில்லாத வேலை "என்று அஞ்சலி ஃபோனை சார்ஜ் போட்டுவிட்டு படுக்கையில் படுத்தவள்... பிள்ளைகள் அறையை போய் வெளி தாழ்ப்பாள் போடும் கணவனை பல்லை நறநறத்து பார்த்தாள் ....   

அஞ்சு  

இதுக்கு மட்டும் அஞ்சு, எட்டி மாரிலேயே மிதியுங்கள் மன்னா ... பெண்ணுக்கு சம உரிமை பெண் என்றால் தெய்வம் என்று பேசும் நாட்டின் நிலை என்னவோ சில வீடுகளில் இன்னமும் இதுதான் ....  

"நாளைக்கு வச்சிப்போமாங்க , தன் இடையில் கால் போடும் புருசனை சலித்து கொண்டு பார்த்தாள்... 

நாள் ழுழுக்க நாண்டுட்டு நிக்க வேண்டியது , ராத்திரி வந்து காலை போட்டால் எங்கிருந்து ஆசை வர... நாலு மிதி, ஏழு கடி அலற அலற சாட்டையடி கொடுக்கதான் ஆசை வரும்... அவனை பொறுத்தவரை சமைப்பது துவைப்பது போல பெண்ணின் வேலையில் ஒன்று படுப்பது .. அதுவும் அவன் ஆசைப்படும் அன்று அவள் வரணும், இவளுக்கு ஆசை வந்து கையை கூட போட முடியாது 

எப்ப பார்த்தாலும் புருசனை இடிச்சிட்டே இருக்கணுமா, ரெண்டு பிள்ளை பெத்தவளுக்கு இன்னும் அலுக்கலையா? என்று ஒரு நாள் வள்ளென்று விழுந்து விட்டான், அத்தோடு ஆசை எல்லாம் புறமுதுகு காட்டி ஓடி விட்டது 

"உங்களுக்கு மட்டும் இப்ப ஆசை வருதா?? என்று இவளும் ஒருநாள் சத்யா நெருங்கும் போது கேட்டு விட 

நான் ஆம்பளடி பத்து பேர் கூட காசு கொடுத்து போக தெரியாம இல்லை, குடும்பம் மானம் போயிடும்னு தான் ஒழுக்கமா இருக்கேன் உன்ன தொடுறேன்... ஆளு இல்லாமலையோ இல்லை, உன் அழகுல மயங்கியோ உன் மேல விழல... அவன் பேச்சு எப்போதாவது வலிக்க வைக்கும், இப்போது எல்லாம் என்ன பேசினாலும் வலிக்க மட்டுமே வைக்கிறது ... 

நானும் பத்து பேர் கூட போகவா, நான் கூப்பிட்டா வர மாட்டானா என்று கேட்க வாய் வரை வந்தது எப்போ இந்த வார்த்தையை சொன்னானோ அப்போதே அவன் மீதிருந்த நம்பிக்கை , மரியாதை அனைத்தும் தரையோடு தரையாக போனது ... 

சூப்பர் மார்க்கெட்டுக்கு பேங்க் மேனேஜர் வைஃப் வருவாங்க, வயசு 50 ஆகுதாம்... சிக்குன்னு 20 வயசு பொண்ணு மாதிரி இருக்காங்க... 

'கிழவி எல்லாம் சைட் அடிச்சிட்டு மானம் கெட்டவன் அதை வேற வந்து சொல்லிட்டு இருக்கான், தன் உதட்டில் அவன் தந்த மிட்டாயிக்கு வேண்டா வெறுப்பாக வேலை நடந்தது ...

புருஷன் நுனிவிரல் தொட்டதும் சிலிர்த்து விட்டாள், உதட்டை கடித்து விட்டாள், நாவல்ல எல்லாம் படிக்கிறேன் அவன் இவளோட குட்டி இடுப்ப பார்த்த உடனே அப்படியே டெம்ப் ஆயிடுரான்.. அவ அவனுடைய ஓர கண்ணை பார்த்தவுடனே அப்படியே அவன் மேல காதல்ல தொகுக்கடீர்னு விழுந்துடுறா .. நடக்கும்போது ஏழு தடவை காலு வழுக்கி ஹீரோ மேல விழுந்து , அத்தனை தடவையும் ஹீரோ மேலதான் மேடம் விழுவாங்க ... உடனே ஹீரோ வேலை வெட்டியே இல்லாம வந்து இவளை அடுப்பை பிடிச்சு ச்சை இடுப்பை பிடிச்சு தூக்குவான்... ஹீரோ கை பட்ட உடனே ஹீரோயின் இளமை பூத்துடும்....அது என்ன பூவாடா பூக்க ,ப்ளடி பிக்கிள்ஸ் எப்படி எலலாம் தாய்குலத்தை ஏமாத்திபுட்டாங்க... இதை எல்லாம் பார்த்துப்புட்டு இப்படித்தான் வாழ்க்கை இருக்குமோன்னு நினைச்சு யாரும் குடும்ப வாழ்க்கைக்குள்ள வந்துறாதீங்க மக்கா.... 

ப்ச் என்னடி சுதி இல்ல" சத்யா குரல் கொடுக்க 

இவன் வேற "என்று எரிச்சல் வந்து சேவை செய்தாள் 

"அங்க சொன்னது போல , ஒரு மண்ணும் நடக்காது நாம அம்மணமாவே நின்னாலும் அவனுக்கு நம்ம மேல ஆசை வராது ... அதே போல அவ மொட்ட மொழுக்குன்னு நின்னாலும் ரசிக்க தோணாது... கட்டி புடிச்சு உருண்டாலும் நாளைக்கு காலையில இட்லி வைக்கவா, தோசை போடவா.. சட்னி வைக்கவா சாம்பார் வைக்கவாங்குற யோசனைதான் மூளை முழுக்க இருக்கும் ... அதே மாதிரி அவனுக்கு உடம்பு குறுகுறுப்ப அடக்கினோமோ , போய் குறட்டை விட்டு தூங்கனோமான்னு இதுவும் ஒரு ஜாப் தான்... சோ அவன் தொட்டா சிணுங்கி, நான் உதட்டை கடிச்சு இந்த வார்த்தையை எல்லாம் பார்த்து ஏமாந்து கல்யாணம் கட்டிக்கிட்டு , என்னை மாதிரி அவஸ்தைப்படாதீங்கடா அவ்வளவுதான் சொல்லுவேன்..

அஞ்சு 

ம்ம் சொல்லுங்க..

"36 வயசுலயே உனக்கு இடுப்பு முழுக்க டயர் டயரா கிடக்கு, குறைச்சு தின்னா இப்படி கிழவி மாதிரி ஆக மாட்டல்ல.... ஏதாவது சொன்னா நான் உன்ன குறை சொல்ற மாதிரியே நினைச்சு கண்ணீர் மட்டும் வந்துரும் ... படுக்கையில் அஞ்சுவின் ஆடையை துகிலுரித்துக் கொண்டே கணவன் அவளை குறை பேசிக் கொண்டிருக்க அஞ்சலி செத்த பிணம் போல கிடப்பது அவள் முறையாகிக் போனது ... 

சபையில் துகிலுரித்ததனால் ஒரு போரே மூண்டது.. ஆனால் மஞ்சத்தில் தினம் தினம் தாலி கட்டிவிட்டு துகிலுரிக்கும் இந்த பந்தத்திற்கு பெயர் புனித பந்தமாம்... காசு கொடுத்துவிட்டு போவது விபச்சாரி இல்லம் , காசு கொடுக்காமலேயே போவது தன் இல்லம் அவ்வளவுதான் வித்தியாசம்... அங்கேயும் இச்சை தீர்த்து வைக்க படுகிறது, இங்கேயும் அதே இச்சை தான் தீர்கிறது .. பெண்ணின் மனம் எங்குதான் மதிக்கப்படும்?? 

எல்லா குடும்பங்களும் இந்த வகையில் சேருமா என்றால் சத்தியமாக இல்லை... ஆனால், இப்படியும் குடும்பங்கள் இன்னும் அழியாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.... 50 சதவீத பெண்கள் இந்த இழிநிலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது... 

எப்போ முடிச்சு தொலைவான் தூக்கத்துக்கு கண்ணை சொக்குதே என்று இவள் கிடக்க 

"பாத்தியா இத்தனை வயசுலயும் என் பெர்பாமென்ல் உனக்கு கண்ணை சொக்க வைக்குது "என்ற புருஷன் பேச்சில் சிரிப்பு வந்துவிட 

என்னடி எதுக்கு சிரிக்குற ??

"ம்ஹூம் சும்மா

"ப்ச் என்னன்னு கேட்டேன் அவள் கழுத்தில் முகம் புதைத்த கணவனை வெறுக்க தெரிந்தால் தான் இன்று விவாகரத்து பண்ணி பத்து வருடம் ஆகி இருக்குமே... அவளுக்கு முழுதாக வெறுக்க முடியவில்லை இவனுக்கு முழுதாக நேசிக்க தெரியவில்லை 

"என்னங்க 

"ம்ம் சொல்லு 

"லதா இருக்கால்ல 

"அவளுக்கு என்ன இப்ப , எதுக்கு அவளை பற்றி பேசுற 

"இல்லங்க இந்த மாதிரி டைம்ல கொஞ்சம் பேசிட்டு அப்பறம் சேர்ந்து இருந்தா ரொம்ப நேரம் ஹேப்பியா இருக்கலாமாம் 

"ச்சை அவ எல்லாம் பொம்பளையா, இது என்ன பேச்சு அஞ்சு ஏன் உனக்கு நான் பண்றது போதலையா ?

அய்யய்யோ அப்படி எல்லாம் சொல்லலங்க உங்களுக்கு பிடிக்குமோன்னு சும்மா கேட்டேன் 

"எனக்கு இது போதும் என்று தன் ஆசையை தீர்த்து தள்ளி படுத்த கணவனை பெருமூச்சு விட்டு பார்த்தாள் 

திருமணம் முடிந்த புதிதில் சிலிர்த்து அடங்கியது, அதன் பிறகு தாம்பத்தியம் எல்லாம் அவளை கூச செய்தது கூட இல்லை அவளுக்கும் ஆசை உண்டு தான், கணவன் கொஞ்சி தடவி ஹீரோக்கள் போல காமம் பேசி காதல்பேசி கலவி செய்ய... இதை பற்றி பேசினால் இலவச வேசி பட்டம் கொடுத்து விட்டால்.. யம்மாடியோவ்!! பயந்து பயந்தே இளமை போயே போச்சு... 

தன் அருகே வந்து படுத்த கணவன் நோக்கி திரும்பி படுத்தாள் அஞ்சலி.. 

"என்னங்க

என்ன சுள்ளென பதில் வந்தது.. தேவை முடிஞ்சு போச்சுல்ல நார்மல் மோட் போயிட்டான்.. 

"இல்ல அடுத்த வாரம் எங்க அத்தை மக கல்யாணத்துக்கு போகணும், நகை வேணும்னு சொன்னேனே.. பணம் ஏதாவது கிடைச்சதா

நகை திருப்பிடலாமா?

"எப்ப பார்த்தாலும் பணம் அது வேணும் இது வேணும் பிள்ளைகளுக்கு இது வேணும்னு உள்ள வர்றவன நச்சரிக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருப்பியா அஞ்சு ... மனுஷன் நிம்மதியா இருக்குறதுக்கு தான் வீட்டுக்கு வருவான், வீட்டில் நிம்மதி இல்லைன்னா இனி கல்லறையில் தான் போய் படுக்கணும்

"ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க, அன்னைக்கு சொல்லும்போது ஏதாவது செஞ்சு திருப்பி தரேன்னு சொன்னீங்க இல்ல... அதான் தெரியாம கேட்டுட்டேன் அதுக்கு ஏன் இப்படி எல்லாம் வார்த்தை பேசுறீங்க 

"பின்ன இப்படித்தான் பேசுவாங்க பொண்டாட்டின்னா அனுசரணையா நம்ம மனநிலை தெரிஞ்சி நடந்துக்கணும் .. காசு இருந்தா திருப்பி தர மாட்டேனா , 

"இல்லை , ஒரு லட்சம் ரூபாய் காசு இருக்குன்னு நேத்து அத்தை கிட்ட சொல்லிட்டு இருந்தீங்களே..

"அப்போ நானும் அம்மாவும் பேசுறதை ஒட்டு கேட்டு இருக்க

"அய்யோ இல்லங்க நான் அப்போ கிச்சன்ல நின்னுட்டு இருந்தேன்.. அதனால கேட்டது ... 

"ஒரு லட்ச ரூபா வச்சிருந்தா அப்படியே தூக்கி உனக்கு கொட்டிடனுமா இல்ல மகாராணி நகை போடாம கல்யாண வீட்டுக்கு எல்லாம் போக மாட்டிங்களா... முட்டை போடுற கோழிக்கு தான் வலி தெரியும்... சும்மா அவன் பணத்துல உட்கார்ந்து திங்குற உனக்கு அதோட அருமை தெரியாது ... தொண தொணக்காம படுத்து தூங்கு" என்று விட்டு சத்யா அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்... 

இவளுக்கு இப்படி அவமானப்படுவது எல்லாம் சகஜம்தான்.! ஆனால் ஒவ்வொரு நேரமும் அவன் அவமான படுத்தும் பொழுது என்னடா வாழ்க்கை இது என்று தோன்றும் விரக்தி மனநிலையை தான் விரட்ட வழி இல்லை... சில நேரம் இவன் பேசும் பேச்சுக்கெல்லாம் செத்து தொலைத்து விடலாமா? என்று தோன்றும்... ஆனால், இவள் செத்துவிட்டால் அவன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவான்... பெற்றுவிட்ட பிள்ளைகள் இரண்டும் நிற்கதியாக நின்று விடுமே என்ற பயம் தான் அவள் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பதற்கு காரணம்...

அவன் போனில் கிங் கிங் என்று மெசேஜ் டோன் வர கண்ணை மூடி தூங்குவதற்கு ரெடியான சத்யா கையை அலையவிட்டு தன் போனை எடுத்தான் அவன் நண்பர்கள் குரூப்பில் இருந்து சாட்டிங் நடந்தது.... இவன் அதற்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்ப அவர்கள் ஒரு வாய்ஸ் நோட் அனுப்ப என்று அரட்டை ஒரு மணி வரை போனது...

எங்கே தூங்க .... கண்டதையும் நினைத்து கொண்டே கிடந்த அஞ்சலிக்கு என் வாழ்க்கை இப்படியே போயிடுமா ? என்ற பயம் தான் எப்போதும் போல இன்றும் தோன்றியது 

சரிபாதி, ஈருடல் ஓர் உயிர் தான் கணவன் மனைவி வாழ்க்கை என்றார்கள்.. அவள் மனதில் உள்ள எதையும் அவனிடம் மனம் விட்டு பேச முடியாது , பேசினாலும் கேட்க மாட்டான் ... அவன் என்ன செய்கிறான் செய்ய போகிறான் இவளிடம் சொல்ல மாட்டான் இதற்கு பெயர் தான் சரிபாதி திருமண வாழ்க்கையா?   

எதுவுமே சரியாக இல்லாத வாழ்க்கைக்கு உலகம் வைத்திருக்கும் பெயர் தாம்பத்திய பந்தம் ... எல்லாவற்றுக்கும் காலாவதி உண்டு .. இதற்கும் காலாவதி ஆப்சன் வச்சி பாருங்கடா, அம்புட்டு பேரும் பிச்சிக்கிடடு ஓடிருவாங்க,. இல்லை பெண்களுக்கு தனிநாடுன்னு ஒரு நாட்டை உருவாக்கி பாருங்க, நகை நட்டை வித்தாவது கப்பல் ஏறிடுவாங்க....  

அவளின் குமுறல் சிரிக்க வைத்தாலும் இதுவே நிதர்சனம்!!