நாளை இரவு கதை நீக்கப்படும் தினம் தினம் 26

Thinam26

நாளை இரவு கதை நீக்கப்படும் தினம் தினம் 26

26 தினம் தினம் !!

அஞ்சு பணத்த எல்லாம் எடுத்து ஹேண்ட் ஃபேக் உள்ள வச்சுக்கிட்டியா ?

ம்ம் வச்சாச்சு 

ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டியா , பிறகு அங்க போய் அத வச்சுட்டு வந்துட்டேன் இத வச்சுட்டு வந்துட்டேன்னா பாரபட்சம் பார்க்காம திட்டு வாங்கவ பாத்துக்கோ..

அதெல்லாம் தெரியாதா, என் புருஷன் அப்பப்ப கடவுள் பாதி மிருகம் பாதின்னு ஆயிடுவாருன்னு,ஃ எல்லாத்தையும் ராத்திரியே எடுத்து வச்சுட்டேன் காலையில ஒரு தடவை செக் பண்ணிட்டேன் வேணும்னா , நீங்க இன்னொரு தடவை செக் பண்ணிடுங்க ...

நீ பண்ணிட்டல்ல சரியா இருக்கும்... கிளம்பு நேரா பத்ரஆபீஸ் போயிடலாம்.... அஞ்சலி நிறைமாத வயிற்றோடு வெளியே வர ...வீட்டின் முன்னே கார் நின்றது 

என்னங்க யார் கார் இது ? 

"என் கடைக்கு வந்த கார்தான் , உன்ன பைக்ல கூட்டிட்டு போக முடியாது இல்ல , அதான் காரை எடுத்துட்டு வந்தேன் என்றதும் அஞ்சலி நாடியை தடவிக்கொண்டே மேலே எட்டிப் பார்க்க ... அவள் தலையில் செல்லமாக தட்டினான் 

"இப்ப நீ என்ன நினைக்கிறன்னு ஆல் டீடைல் ஐ நோ, ஏன் உன்ன மாதிரி ஆட்கள் எல்லாம் பைக்ல போக மாட்டாங்களா கார்ல தான் போகணுமான்னு நான் சொன்னத ரீவைண்ட் பண்ணி பாக்குற கரெக்ட்டா

"ஹிஹி ம்ம்.. என்னதான் நீங்க ரொம்ப நல்லவரா மாறிட்டாலும் அப்பப்போ அந்த பழைய சத்யாவை திரும்பிப் பார்த்து அவன நாலு திட்டு திட்டுறதுல எனக்கு ஒரு குட்டி சந்தோஷம்தான்...

"அப்போ நான் இன்னும் திட்டு வாங்கிகிட்டு தான் இருக்கேன் 

"யா அஃப்கோர்ஸ், அது உங்க சாபக்கேடு கடைசி வரை வாங்க தான் வேணும் மிஸ்டர் சத்யா 

நேரம் போகாத நேரத்துல எல்லாம், அந்த சத்யா இன்னும் திட்டு வாங்கிட்டுதான் இருக்கார் , சரி சரி கதவை திறந்து விடுங்க வண்டியில ஏறுறேன்

"ஏன் அந்த கதவை நீ தொறந்தா ஆகாதாடி

"ஏன் அதை நீங்க தொறந்தா உங்க கையில சுளுக்கு வந்துடுமா , பதிலுக்கு பதில் பேசும் மனைவியை சத்யா முறைத்துக் கொண்டே போய் கதவை திறக்க போக .. அவன் அருகே வந்து ஆட்டோ நின்றது

ஆட்டோவில் இருந்து காயத்திரியும் , மங்களமும் இறங்கினார்கள்... அஞ்சலி அவர்களை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க ... தன் மனைவியின் முகம் சட்டென மாறிவிட்டதை உணர்ந்த சத்யா தலையை திருப்பி பார்க்க.. தன்,தாயும் தங்கையும் 

"அய்யா சத்யா என்று அழுது கொண்டே ஓடிவந்து அவன் கையைப் பிடிக்க 

"அண்ணே என்று இன்னொரு பக்கம் காயத்ரி ஓடி வந்து அவன் இன்னொரு கையைப் பிடிக்க...  

'இப்போதைக்கு இந்த அழுகாச்சி சீனுக்கு எண்ட் கார்டு கிடையாது போயி உட்காருவோம்' என்று நினைத்த அஞ்சலி போய் வாசலில் உட்கார்ந்து விட்டாள் ... ...

அண்ணே எங்கள மன்னிச்சிடு என்று காயத்ரி மாலை மாலையாக அழுது வடிந்தாள் 

"நல்ல மாப்பிள்ளை பார்த்து பார்த்து கட்டி வச்ச அவர் பண பேயா இருந்திருக்கார் அண்ணா "

"ஆமா சத்யா தான் உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு.. இதை எல்லாம் அவன் பொண்டாட்டி பேர்ல எழுதி கொடுக்கலைன்னா அவளை கொன்னுடுவேன் இல்ல டைவர்ஸ் பண்ணிடுவேன்னு மிரட்டினான்... நீ எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன்னு எனக்கு தானடா தெரியும் ..

 நீ பட்ட கஷ்டம் வேஸ்ட்டா போயிடக் கூடாதுன்னு நினைச்சுதான் உன்ன சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கையில வேற வழி இல்லாமதான் காயத்ரி பேர்ல சொத்தை எல்லாம் எழுதி கொடுத்தேன்.... உன்னை வந்து பார்த்து என்ன நடந்ததுன்னு சொல்லலாம்னு பல தடவை ட்ரை பண்ணுனேன் ஆனா முடியல, சத்தியமா இதுதாண்டா நடந்தது.. அவ வாழ்க்கையை காப்பாத்த வேற வழி தெரில சத்யா... "

"நான் வேணும்னே இதெல்லாம் பண்ணல அவன் எங்களை மிரட்டி தான் சொத்தை காயத்ரி பேர்ல வாங்கினா  

"ஆமா அண்ணன் அவன் என்ன படுத்தின கொடுமை கொஞ்சம் நஞ்சம் இல்லை .. எங்க அதை எல்லாம் சொன்னா நீ உடைஞ்சு போயிடுவியோன்னு தான் , அம்மா எதையும் உங்கிட்ட சொல்ல விடல ... அவன் என்ன கொடுமை படுத்தாத நாளே இல்லை அண்ணா, கார் வாங்க காசு வேணும், வீடு வாங்க காசு வேணும்னு நான் கேட்டது எல்லாம் நானே கேட்டது இல்லை, எல்லாம் அவர் என்ன பண்ணிய டார்ச்சர்லதான் வந்து கேட்டேன் சத்தியமா அண்ணன் ... 

"இப்போ எல்லாம் நாசமா போச்சு சத்யா , எல்லாத்தையும் ஏதோ ஒன்னு போட்டு நாலா பிடிக்கிறேன்னு கொண்டு போய் போட்டு , அவ்வளவு பணமும் முங்கி போச்சு... பிசினஸ் இவ பேர்ல தொடங்கி இருப்பான் போல இருக்கு ... பணத்தை கொடுத்தவங்க கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்களாம் ... 40 லட்ச ரூபா கொடுத்தாதான் நாங்க ரெண்டு பேரும் தப்பிக்க முடியும் சத்யா 

இல்ல ஜெயில்ல தான் கெடக்கணும்... உண்மையா நாங்க உனக்கு துரோகம் பண்ணல சத்யா நம்புடா என்று அழுது கொண்டே மங்களம் அவன் காலை பிடிக்க போக சட்டென நகர்ந்து நின்று கொண்ட சத்யா .... திரும்பி அஞ்சலியை பார்த்தான் ... 

அவள் தன் கணவனை கண் சிமிட்டாமல் பார்த்தபடி இருந்தா அந்த பார்வையில் நம்பிக்கை இருந்ததா இல்லையா அவர்களை நம்பிவிடுவானோ என்னை விட்டு போய் விடுவானோ? என்ற பயம் இருந்ததா எதுவுமே தெரியவில்லை... ஆனால் எந்த அசைவும் இல்லாமல் , அவன் கண்கள் அப்படியே தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்தது ....

"என் பிள்ளை மேல சத்தியம்" என்று ஆட்டோவில் இருந்து பிள்ளையை தூக்கி காயத்திரி அதன் தலையில் சத்தியம் வைக்க போக சட்டென சத்யா தங்கை கையை பிடித்து கொண்டு 

என்ன பண்ற ??

"அண்ணன் நீ நம்பல அதான்

"ப்ச் அதுக்கு குழந்தை மேல போய் என்ற சத்யா கள்ளமில்லாமல் சிரித்த தங்கை குழந்தையை தலையை தடவி கொடுத்தவன் அஞ்சலியை திரும்பி பார்க்க ... அஞ்சலி ஹேண்ட்பேக் திறந்து கொண்டே அவனை பார்க்க ரெட்டை விரல் நீட்டினான் 

ம்ம் என்று அஞ்சலி இருபதாயிரம் ரூபாயை பெரிய பணக்கட்டை திறந்து அதை எண்ணி சத்யா கையில் கொடுக்க சத்யா அதில் எருந்நு இரண்டாயிரம் ரூபாய் மட்டும் எடுத்து தங்கை குழந்தை கையில் திணித்தவன் , மீதியை மனைவியிடம் கொடுத்தான்..அவன் செயலில் தாய் மகளுக்கு அப்பாடா எப்படியாவது கறந்துடலாம் என்ற மகிழ்ச்சி... 

"அண்ணே ஏதாவது பேசு அண்ணே இப்படி அமைதியாக நின்னுகிட்டு இருக்காத

"அண்ணன் ஆட்டோவை அனுப்பி விட சொல்லவா என்று காயத்திரி அவன் பதிலுக்கு காத்திருக்க 

"ஆட்டோ அண்ணன் வெயிட் பண்ணுங்க வருவாங்க .... உள்ள வாங்க "என்ற கணவன் பேச்சில் பெருமூச்சு விட்ட அஞ்சலி கதவை திறக்க இருவரும் அடித்து பிடித்து உள்ளே ஓடி வந்தனர் 

"அண்ணன் கடனா தந்தா கூட போதும் திரும்பி தந்துடுறேன் 

"ஆமா சத்யா என் தலையை அடைமானம் வச்சாவது அதை கொடுக்கிறேன்டா 

'இவ தலையை யாரு வாங்குவா வெட்டி போட்டா நாய் கூட தூக்கிட்டு போகாதே' என்று அஞ்சலி வழக்கம் போல கவுண்டர் கொடுத்து விட்டு உதட்டை கடித்தாள்...

'சும்மா இரு அஞ்சலி, இது சீரியஸ் சீன் கவுண்டர் கொடுத்து சொதப்பிடாத.. சத்யா பெர்பாமன்ஸ் எதிர்பார்த்து காத்திருக்க பிள்ளைங்களை ஏமாத்திட கூடாது , நாம இங்க இருந்தா தான் பிரச்சனை இடத்தை காலி பண்ணிடலாம் என்று நினைத்தவள் 

"என்னங்க காபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று அஞ்சலி நகர போக... சட்டென்று அவள் மணிக்கட்டை பிடித்தது சத்யாவின் கைகள் , அவன் கைப்பிடித்து தடுக்கவும் என்னவென்று அஞ்சலி அவனை திரும்பிப் பார்க்க

"நில்லு அஞ்சலி காஃபி எல்லாம் போட வேண்டாம்

"இல்ல வீட்டுக்கு வந்தவங்களுக்கு என்று அவள் இழுக்க 

"வீட்டுக்கு வந்தவங்க விருந்தாளியா இருந்தா உட்கார வச்சு உபசரிக்கலாம் , விருந்து கொடுக்கலாம் .. இவங்களுக்கு செய்ய வேண்டிய தேவை உனக்கு இல்ல , உக்காரு" என்ற சத்யாவின் பேச்சில் ... தாயும் மகளும்

" சத்யா எங்களை நம்பலையா, சத்தியமா துண்ட போட்டு தாண்டுறேன்டா... உண்மையா அந்த நாசமா போறவன் பண்ணுன வேலைதான் இதெல்லாம்.... அப்ப கூட உன் சந்தோஷம் , நிம்மதி கெட்டுட கூடாதுங்கறதுக்காகதான் அவன்கிட்ட அடி உதை எல்லாத்தையும் நாங்க வாங்கிகிட்டு கிடந்தோமே தவிர... உன்னை வந்து தொந்தரவே பண்ணல ... உன்ன பெத்தவ சொல்றேண்டா நம்பு என் மேல சத்தியம் என்று தாய் தன் தலையின் மீது சத்தியம் அடிக்க போக அதை பிடித்துக் கொண்டவன்

"எத்தனை பொய் சத்தியம் நீங்க பண்ண போறீங்க

"சத்யா 

"இந்த சத்யா ஒரு நாள் கூட உங்க மகனா தெரிஞ்சதே இல்லையா, இப்ப கூட ஏமாத்துறீங்களே ... ஆமாடா நான் செஞ்சுட்டேன் உன்ன விட, என் மக நல்லா இருக்கணும்னு நினைச்சதனால நான் செஞ்சிட்டேன்னு , இப்ப கூட உண்மையை சொல்லி இருக்கலாமே, அது சரி கோமாளியா கூட இருக்கலாம், ஆனா ஏமாளியா இருக்க கூடாது .... நான் ஏமாளியா இருந்து இருக்கேன்... தப்பு என் பேர்ல, உங்களை எல்லாம் குறை சொல்ற தகுதி எனக்கு சத்தியமா இல்ல.. அதனால உங்களை குறை சொல்ல மாட்டேன்... இப்போ எதுக்கு உள்ள கூப்பிட்டேன்னா, இத்தோட பேசி முடிச்சிட்டா எல்லாருக்கும் நல்லது ... அதுக்காக தான்...

"சத்யா 

"நீங்க செஞ்சது குற்றமா இல்லையா எதையுமே நான் ஆராய விரும்பல... ஏன்னா நான் அவ்வளவு பெரிய யோக்கியனும் இல்ல... 15 வருஷம் என் கூட வாழ்ந்த மனைவியை, பிள்ளைகளை புரிஞ்சுக்காத ஒரு அடி முட்டாள்தான் நான் ... அதே செயல் எனக்கு உங்க மூலமா திரும்பி வந்து இருக்கு அவ்வளவுதான்.... எனக்கு வருத்தம் உண்டு ஆனா அதை நினைச்சு நான் கவலைப்படல, இது எல்லாம் என் வாழ்க்கையில நடந்ததுனாலதான் .. என் குடும்பம் என் பிள்ளைகள்னு யோசிக்கிற புத்தி எனக்கு வந்துச்சு .... அந்த புத்தியை வர வச்சதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் மிகப்பெரிய நன்றி "என்று கையெடுத்து கும்பிட்டான் 

இருவரும் கையை பிசைந்து கொண்டே சத்யாவின் பேச்சை எச்சில் விழுங்கி கேட்டனர் ..

உடனே ஏமாந்துடுவான் , ஏமாற்றி விடலாம் கண்ணீர் வடித்தால் அடுத்த நொடி மறந்து விடுவான் மன்னித்து விடுவான் என்று அசட்டு தைரியத்தில் வந்து விட்டார்களோ? ஆனால் அவனோ, தீர்க்கமாகத்தான் ஒவ்வொரு வார்த்தையும் பேசினான் .. 

"சத்யா ஏதோ புத்தி கெட்டு பண்ணிட்டேன்டா, உன் பொண்டாட்டிய எனக்கு ஆகல , உன் பணத்துல அவ தான நல்லா இருப்பாங்கிற வயித்தெரிச்சல் கண்டதையும் பண்ணி, இப்ப நடுத்தெருவுல நிற்கிறேன்டா

'அட குறுக்கு செத்த கிழவி , நான் பாட்டுக்கு ஒரு மூலையில போட்டதை தின்னுட்டு வேலைக்காரி மாதிரி கிடந்து இருக்கேன் .. எவ்வளவு வஞ்சம் இந்த கிழவிக்கு 'என்று அஞ்சலி என்ன முயன்றும் வாயில் வந்த வார்த்தையை விழுங்க முடியவில்லை... அவன் அப்படியே நிற்க 

"அம்மாடி அஞ்சலி அத்தையை மன்னிச்சுடு , உன்ன என் மகளா பார்த்து இருக்கணும், மருமகளாகவும் பார்க்கல ஒரு மனுஷியாவும் பாக்கல, எங்க என் பிள்ளை கூட நீ நல்லா இருந்தா, எங்களுக்கு வேண்டியது வாங்கிக்க முடியாதோன்னு நெனச்சு, உன்ன அவன் கூட நான் சந்தோஷமாவே வாழ விடல .. அதையும் இதையும் சொல்லி அவன்கிட்ட இருந்து உன்ன பிரிச்சு வச்ச பாவத்துக்குத்தான் நான் இப்போ இப்படி நிக்கிறேன், என்ன மன்னிச்சிடு "என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு மங்கலம் கதற...

"என்ன பண்றீங்க "அவள் பதற 

"இந்த ஒருவாட்டி மட்டும் சத்யா கிட்ட சொல்லி ங்கள காப்பாற்றி விட சொல்லும்மா , இனிமே எங்களால அவனுக்கு சத்தியமா பிரச்சனை வராது பிச்சை எடுத்தாவது பொழைச்சிக்கிறோம்... போலீஸ் அது இதுன்னு சொல்றாங்க பயமா இருக்கு அஞ்சலி"

"ஆமா அண்ணி பயமா இருக்கு "என்று இருவரும் ஓடி வந்து சத்யா வேலைக்கு ஆக மாட்டான் என தெரிந்து அஞ்சலியின் கையைப் பிடித்துக் கொண்டார்கள்....

"அஞ்சலி சத்யா குரல் விரைந்து வந்தது

"என்னங்க  

"உள்ள போ 

"ஹான் 

"உள்ள போன்னு சொன்னேன்" இருவர் கையையும் விலக்கி விட்டு விட்டு அஞ்சலி அறை உள்ளே போக 

"சத்யா ஆஆஆ

"உங்க பேராசைக்கு நான் பலியாக முடியாது, எனக்கும் குடும்பம் இருக்கு , பொண்டாட்டி இருக்கா அவங்களுக்கு செய்ய வேண்டியது இருக்கு.. 

"சத்யா உன்கிட்ட காசு இருக்குன்னு தெரியும் எங்க ரெண்டு பேரையும் இந்த ஒரு தடவை காப்பாத்தி விடேன்

"ம்ம் காசு இல்லன்னு நான் எப்ப சொன்னேன்... இருக்கு , ஆனா அத உங்களுக்கு கொடுக்க மனசுல இடம் இல்லை.. பாவம் பார்த்து கடமைக்காக இப்படின்னு ஏதோ ஒன்னு சொல்லி உங்களுக்கு கொடுத்து காப்பாத்த வழி இருக்கு.. ஆனா கொடுக்க மாட்டேன் .... நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன்... நான் சுயநலம் பிடிச்சவனாவே இருந்துட்டு போறேன்.. என் குடும்பத்துக்காக சுயநலம் புடிச்சவங்கிற பட்டம் கெட்டவன்ங்கிற பட்டம் கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்..

"ஊர் என்ன சொல்லும் தாய் தங்கைய நடுத்தெருவில விட்டுட்டான்னு சொல்லும் அப்படித்தானே சொல்லிட்டு போகட்டும், எனக்கு கவலை இல்லை என் குடும்பம் என் பிள்ளைங்க நிம்மதியா சந்தோஷமா இருந்தா அது போதும்.. உங்கள பார்க்காததனால என் ஆயுசு குறையுதா குறைஞ்சிட்டு போட்கட்டும் .. இருக்கிற ஆயுசு வரைக்கும் என் பிள்ளைகளுக்கு என் பொண்டாட்டிக்கு உண்மையா அன்போட இருந்தா அதுவே போதும்

 டேய் நான் உன்ன பெத்தவடா , எனக்காக இது கூட செய்ய மாட்டியா ... இன்னைக்கு வந்த பொண்டாட்டிக்காக பெத்தவள நடுரோட்டில விட பாக்குறியா என்ற மங்களம் பேச்சு என்றுமே மாறாது போலிருக்கிறது... பெருமூச்சு விட்டவன் 

எப்போ அவ்வளவு கஷ்டப்பட்டு பெத்த மகனுக்கு நீங்க ரெண்டகம் பண்ணுனீங்களோ, அப்பவே தாய் மகன் அப்படிங்கற உறவு எல்லாம் முடிஞ்சு போச்சே... நான் பேசும் போது கவனிச்சிருப்பீங்களே உங்களை அம்மா என்கிற வார்த்தை சொல்லிக் கூப்பிடவே இல்ல.. கடைசி வரைக்கும் இனி அந்த வார்த்தை என் வாயிலிருந்து வராது... சாதாரண பணத்துக்காக நான் இப்படி வெட்டிக்கிட்டு நிக்கல . இனி நீங்க என் கூட சேர்ந்தாவோ, இல்ல நான் உங்களை என் வீட்டுக்குள்ள அனுமதித்தாவோ, என் வீட்டோட சமாதானம் கெட்டுடும்.... 

சத்யா 

"எனக்கு என் வீடு சமாதானமா இருக்கணும், என் வீடு சந்தோஷமா இருக்கணும் ... என் மனைவி நிம்மதியா இருக்கணும் , அவ நிம்மதிதான் எனக்கு முக்கியம்... ஒத்த பைசா தரமாட்டேன், ஆனா எனக்குன்னு ஒரு கடமை இருக்கு ... உங்க சாப்பாட்டு செலவுக்கு மாசம் 2000 ரூபாய் அனுப்புறேன்... உங்க மகளுக்கு செய்ய வேண்டியது என் கடமையில்லை... கட்டிக் கொடுக்க மட்டும் தான் முடியும்... அத்தோடு என் கடமை முடிஞ்சது, கடமைக்கு மேலேயும் நான் அவளுக்கு நிறைய செஞ்சுட்டேன் ... சோ அவளுக்கு நான் எதுவும் செய்யப் போறது இல்ல .. படிக்க வச்சிருக்கேன் டிகிரி வாங்கி இருக்கா, இனி என்ன வேணும் அதை வச்சு உழைச்சு சம்பாதிக்க சொல்லுங்க ... உங்களுக்கு வரவேண்டிய காசும் வீடு தேடி வரும் எந்த காரணத்தைக் கொண்டும் என் வீட்டுக்கு வராதீங்க... நறுக்கு தெறிக்க பேசினான்... 

"அஞ்சலி பத்திரம் போட நேரம் ஆயிடுச்சு , வீட்டு சாவியை எடுத்துட்டு வா பூட்டிட்டு போகணும்"கிளம்பு என்பதை நாசுக்காக கூறிவிட்டான் 

மங்களமும் காயத்ரியும் மாறி மாறி சத்யாவை பரிதாபமாக பார்த்து வைக்க... அஞ்சலி பெருமூச்சு விட்டபடி பூட்டு சாவியோடு தன் கணவன் அருகே வர

இதற்கு மேல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவானோ என்ற பயத்தில் இருவரும் தடுமாறி வீட்டை விட்டு வெளியேற... பூட்டு போட்டு வீட்டை பூட்டிய சத்யா.... குனிந்து செருப்பை மாட்ட போன மனைவியை நிறுத்தி

"உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இவ்வளவு பெரிய வயித்த வச்சுக்கிட்டு சட்டுன்னு குனியாதனுனு நில்லு நான் மாட்டிவிடுறேன்" என்று அவள் அருகில் குத்த வைத்து உட்கார்ந்து அஞ்சலியின் செருப்பு வாரை இழுத்து மாட்டிவிட 

அஞ்சலி என்ன நினைத்தாளோ, அவன் உச்சி முடியை கோதிவிட்டவள் கோதலில் சத்யா அண்ணாந்து பார்க்க .... அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் வந்து சத்யாவின் நெற்றியில் விழுந்தது ..

ஒரு குடும்பத் தலைவனுக்கு ஒரு குடும்பத் தலைவிக்கு இருக்க வேண்டியது சிறிது சுயநலம்!! 

சுயநலமா? 

ஆம் !! 

இது என் குடும்பம்! என் வீடு என்ற எண்ணம் அவர்களுக்கே வரவில்லை என்றால் யாருக்கு வரும்? அவர்களே அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அன்பை, நேரத்தை, நேசத்தை கொடுக்கவில்லை என்றால் யார் கொடுத்து விட முடியும்? சுயநலம் இல்லாத குடும்பம் வேலியில்லாத தோட்டத்திற்குச் சமம்.... யார் வேண்டுமானாலும் உள்ளே வந்து உறவாடி கெடுத்து விட்டு போய்விடுவார்கள்.. 

சிலநேரம் சுயநலம் நல்லதே!!