தினம் தினம் 25
Thinam25

25 தினம் தினம் !!
இதோ ஒரு வருடம் ஓடி போனது ... ஆஹா ஓஹோ என்று மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு மதிக்கக்கூடிய மதிப்பெண் எடுத்து விஷ்ணு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தான்..
சத்யாவின் தொழில் ஓரளவுக்கு நன்றாக சூடு பிடித்து விட்டது, வீட்டின் தேவை போக கவனமாக சேமித்து வைத்து ஒரு பெரும் தொகையை சேர்த்து வைத்திருந்த மனைவி கிடைத்தது உண்மையிலேயே அவன் பெற்று வந்த வரம்தான்..
மாதத்தில் ஒரு முறை எங்காவது போய்விட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்வார்கள்... இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை படம் பார்ப்பதற்கு போவார்கள், வாரத்தில் அத்தனை ஞாயிற்று கிழமையும் , எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தை மட்டும் தான் கவனிப்பார்கள் ...
நான் அன்பு வைத்திருக்கிறேன் என்று ஒவ்வொரு நொடியும் ஆண் அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்க தேவையில்லை.அவன் செய்யும் சில அன்பு சீர்திருத்தங்கள் , குடும்பத்தை செவ்வையாக்கி கொண்டு போய்விடும்..
சத்யா ஒன்றும் அன்பை கொடுக்கத் தெரியாதவன் இல்லை தாய் தங்கை என்று அவர்களுக்கு கொடுத்த அன்பை அப்படியே பகுதி பிரிக்காது இப்போது மனைவி பிள்ளைகளுக்கு கொடுத்த தன்னை மாற்றிக் கொண்டான் அவ்வளவுதான்... அந்த மாற்றம் வரத்தான் இத்தனை வருடம் ஆயிற்று
அஞ்சு
"ஹான் என்னங்க" இப்போது வயிற்றில் ஆறு மாதம் ...
"என்ன அஞ்சலி பெரிய பிள்ளை இருக்கு இப்போ போய் உண்டாகி இருக்கீங்க" என்று கிண்டல் செய்யும் யாருக்கும் அவள் பதில் சொல்ல தேவையில்லை
"வாவ் மம்மி ரியலி " என்று விஷயம் கேள்விப்பட்ட மகன் தாய் தகப்பன் கன்னத்தில் முத்தமிட்டது போதும் ... புரிந்து கொள்ள வேண்டியவர்கள் நம்மை புரிந்து கொண்டால் போதும் ..சுற்றி இருக்கும் ஆயிரம் பேருக்கும் நாம் யார் என்று சொல்லி கொண்டே இருந்தால் நம் நேரம் தான் வீணாக போகும் ...
"அஞ்சு
"ம்ம் என்னங்க
"மகன் எங்க ?
"நீங்க தான கடையில ஆள் இல்ல கொஞ்ச நேரம் போய் இருன்னு சொன்னீங்க
"ஆமா மறந்தே போயட்டேன்
"பாப்பா எங்க ?
"தூங்குது ...
"ஓஓஓஓ அவள் பின்னே கட்டி கொண்டு அஞ்சலி வயிற்றை சேலையை நீக்கி மெல்ல தடவி கொடுத்தான்
காதலில் மட்டுமே கிடைத்த பொக்கிஷம் இது ... அவள் கருவில் வளர்கிறது , ஆனால் அவன் அரவணைப்பில் வளர்கிறது...
"என்ன அய்யா தடவல் ஜாஸ்தியா இருக்கு ..
"கொஞ்சம் குழப்பமா இருக்குடி
"என்ன ஆச்சு?
"பழைய சூப்பர் மார்க்கெட் பக்கத்துல ஒரு இடம் கிடக்கும்னு சொன்னேன்ல "என்றதும் இரவு சாப்பாட்டை செய்து கொண்டிருந்த அஞ்சலி திரும்பி கணவனை சற்று மிரண்டு பார்த்தாள்
பழைய கடை பக்கம் உள்ள இடம் விலைக்கு வந்திருக்கிறது சத்யாவிற்கு வாங்க ஆசை இவளுக்கும் ஆசைதான் .. ஆனால் பழைய பள்ளங்களை நினைக்கும் பொழுது, பயம் அந்த பள்ளத்தில் விழுந்து எழும்ப எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று அவளுக்குதானே தெரியும்
ஆமாங்க
"ஓனர் வந்து இன்னைக்கு பேசினார் ... ஐம்பது லட்சம் இருந்தா முடிச்சிடலாம், சத்யாவுக்குன்னா 35 லட்சத்தில் முடித்துடலாம்னு சொல்றார்
"ஓஓஓ
"இருக்கிற பணம் தேறுமாடி "
"அதெல்லாம் இருக்கு நீங்க பண்ணி தந்த நகை சேர்த்து வைத்திருக்க காசு எல்லாத்தையும் போட்டா ஓரளவுக்கு தேரிடும்..
ப்ச் , நகை எல்லாம் வேண்டாம்... அது உனக்கும் மகளுக்கும் செஞ்சது பணம் ஏதாவது எடுக்க முடியுமா?
வரவு செலவு அத்தனையும் அஞ்சலியின் கையில்தான்
"முப்பது வரை வரும் மீதி ஐஞ்சு அப்பாக்கிட்ட கேட்கவா
"ச்சே சே வேண்டாம் மாமாவை போட்டு சங்கட படுத்தாத
"அடேங்கப்பா நீயா பேசியது அன்பே நீயா பேசியது சத்யா முறைக்க
கேட்டு பார்க்கிறேனே "
"சும்மா இரு அவங்க வயசு காலத்துக்கு இருக்கட்டும் அதுல கை வச்சா ஒன்னும் நூறுமா பிஞ்சு போகும் என்ற கணவன் நெஞ்சில் அவளே விரும்பி சாய்ந்து கொண்டாள்...
மாமா குழந்தை உண்டாகி இருக்கோம் என்று பல வருடம் கழித்து மருமகன் போன் பேசி அஞ்சலி தகப்பனிடம் கூட
"நல்லது மருமகன் சந்தோசம் "என்று முடித்து விட்டார் அவ்வளவு தான் அவருக்கு வேணும்.... ஒரே வார்த்தையில் இவனும் தன் மனைவி மீது உள்ள நேசத்தை கூறிவிட்டான் ... மகள் விடுறைக்கு வரும் போது சத்யாவே அழைத்து வருவான் ... எப்ப வருவ எப்ப வருவ என்று அவன் நச்சரிப்பதும் மகள் உரிமையாக சுதந்திரமாக புருசனோடு பேசும் பேச்சும் பெரியவருக்கு பரம திருப்தி .. எனக்கு தா என்ன பாரு என்ற ஆசை எல்லாம் இல்லை நான் கண்ணா கொடுத்த என் மகளை உன் கண்ணா பார்த்துக்க அது போதும் என்ற நப்பாசை தான் ...
"வேற எதாவது பண்ணி ஐஞ்சு லட்சத்தை ரெடி பண்ணிடலாமா அஞ்சு
"சீட்டு போட்டது இருக்கு
"அது எப்போடி எனக்கு தெரியாம போட்ட
"மக்கும் எல்லாத்தையும் சொல்லிட்டா செய்ய முடியும் ரெண்டு தெரிஞ்சு , நாலு தெரியாம போட்டாதான் பிள்ளைங்களை கரை சேர்க்க முடியும் எடுத்து தர்றேன் ...பாதியில முறிக்கணுமேன்னு பார்த்தேன் அதான் அப்பாக்கிட்ட வாங்கிட்டு இது முடிஞ்சமும் கொடுக்க நினைச்சேன் நீங்க சொல்றது தான் சரிதான் இதையே எடுத்துப்போம்...
ம்ம்.. அப்போ ஓகே துணிஞ்சு இறங்கவா
டபுள் டன் என்ற மனைவி பட்டு கன்னத்தில் ஒன்றை இச் என்று வைத்தான் ..
இங்கே வந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது... ஆனால் ஒரு நாள் கூட உன் அம்மா இப்படி உன் தங்கச்சி இப்படி பண்ணிட்டாங்க என்று அவள் குறைபேசியதும் இல்லை .. அவன் தன் தாய் தங்கையைப் பற்றி இவளிடம் சத்யா பேசியதும் இல்லை ...
ஏதோ யோசனையாக நின்ற அஞ்சலி தோளில் கை வைத்த சத்யா
ஏன் அஞ்சு பயமா இருக்கா ?
இல்லை அங்க வாங்குறது ஓகே பட் , உங்க நிம்மதியை மறுபடியும் கெடுத்திட கூடாதுன்னுதான் யோசிக்கிறேன்... வேற ஒன்னும் இல்ல
நீ பக்கத்துல இருக்கும்போது நிம்மதியை , நான் எங்க போய் தேட போறேன் அஞ்சு ... அஞ்சலின்னு பேர் வெச்சதுக்கு பதிலா நிம்மதின்னு பெயர் வச்சிருக்கலாம்
"ஐஸ் எல்லாம் வைக்கிறாம்ப்பா இந்த சத்யா" என்றுஅவள் சிரிக்க
"அப்பப்போ பேச்சுக்கு நடுவுல பேர் சொல்லி கூப்பிடற மாதிரியே இருக்குடி ."
"அப்படியா இருக்கு, அது உங்க கற்பனையா இருக்கும்
கற்பனையாக இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு டேய் சத்யா வேற போடுற ... அஞ்சலி வழிய
"என் பொண்டாட்டிக்கு இல்லாத உரிமையா கூப்பிடு கூப்பிடு நாளைக்கு அட்வான்ஸ் வாங்க வரேன்னு சொல்றார் வர சொல்லவா வேண்டாமா?
"உங்களுக்கு பிடிச்சிருக்குல்ல வர சொல்லுங்க நம்ம என்ன காச வீணாவாக்கவா போறோம்.. அத ஒரு பொருளா தான மாற்ற போறோம், கூப்பிடுங்க என்று விட்டாலும் அவளுக்கு இன்னும் கண்ணில் விழுந்த உறுத்தலாக கட்டை போலத்தான் மாமியாரும் நாத்தனாரும் ..
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இவன் வைத்திருந்த கடையை மகளின் புருஷனுக்கு கொடுத்து விட்டார் மகளை அதை இதை சொல்லி தன் வீட்டோடு மருமகன் மகளை அழைத்து வந்து விட்டதாக இவள் காதுக்கு அப்டேட் வந்தது ...
"அப்போ அவ மாமியார் பாவமே அவங்க என்ன ஆனாங்க என்று இவள் தான் வருத்தப்பட்டு கேட்டாள்
"அதை ஏன் கேட்கிற முதியோர் இல்லத்துல கொண்டு போய் மாமியாரை சேர்த்துட்டா போல, தாயும் மகளும் தான் இங்க கூட்டணி போட்டு ஒரே குலுக்கல் மினுக்கல்.. என் மகன் பொண்டாட்டி தாசனாகி என்ன கொடுமை படுத்தினான், அதான் என் மகளுக்கு எழுதி கொடுத்தேன்னு உன் மாமியா வாயே கூசாம என்கிட்டேயே சொல்லுது அஞ்சலி என்று போட்டு கொடுக்கும் உறவு ஒன்று ஆட்டோ பிடித்து அஞ்சலியிடம் கூறி வி்ட்டு போக
எனக்கே சுடச்சுட வருதுன்னா, அவருக்கு போகாம இருக்குமா பாவம் என்று அவனுக்காக தான் மனம் வருந்தும் இவளுக்கு கவலையே வராது என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் பாட்டு தான் பேக்ரவுண்டில் ஓடும்...
பாதாம் ஊற வைத்து தின்று கொண்டு இருந்தாள் காயத்ரி.. வேகமாக உள்ளே வந்த மங்களம், இங்க ஊரே தீப்பத்தி எரியுது நீ பாதாம் தின்னுக்கிட்டு இருக்கியா?
என்னம்மா என்ன ஆச்சு?
உன் புருஷனை எங்கடி?
ஏதோ வேலை விஷயமா டெல்லி போயிருக்கார்
மயிறு, கிழிச்சான் , என்னவோ ஒரு கோடியை போட்டு நாலு கோடியா திருப்பி தந்துடுறேன்னு சொல்லி கடை பத்திரம் வீட்டு பத்திரம் எல்லாத்தையும் கொண்டு போய் சேட்டு கடையில் வச்சான்.. வட்டியும் கட்லை முதலும் கட்டலையாம் ...
அம்மா சும்மா அவரை திட்டாதே, பிசினஸ்ல தான் போட்டு இருக்கார் ... சீக்கிரம் திருப்பி தந்துவிடுவார்., இப்ப எல்லாம் ஏன்டா உன்ன என் கூட வச்சுக்கிட்டோம்னு நிறைய யோசிக்க வைக்கிறம்மா..
"ஏண்டி சொல்ல மாட்ட அவன்கிட்ட இருந்து புடுங்கி அத்தனையும் உன்கிட்ட தந்தேன்ல .. அது அத்தனையும் சேட்டு கடையில வச்சுட்டு உட்கார்ந்து பாதாம் பிஸ்தா திங்குற, உனக்கு எங்க வலி தெரிய போகுது, பாரு இப்படி ஒரு பிள்ளைய பெத்து வச்சிருக்கியே இத நாளைக்கு கரை சேர்க்கணுமேன்னு உனக்கு கொஞ்சமாவது பயம் இருக்காடி என்று முக்கில் மனவளர்ச்சி இல்லாமல் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையை மங்களம் கை காட்டினாள்
பிறக்கும் போதே பிள்ளைக்கு மூளை வளர்ச்சி குறையாக போய்விட்டது .. மக்களம் தான் பார்த்து கொள்ள வேண்டியது ஆகி போனது.. மகள் கால் மேல் கால் போட்டு சதா டிவியே கதி என்று இருக்கிறாள்... அவள் புருசன் அதோ வானத்துல இரிடியம் இருக்கு மண்ணுளி பாம்பு பிடிச்சா பணத்தை அள்ளலாம், சோடியம் வித்தா சோக்கா இருக்கலாம் என்று சுத்த , அவனை நம்பி அத்தனை பணத்தையும் கொடுத்த மங்களம் உக்கார்ந்து மங்களம் பாடி கொண்டிருக்கிறார்...
நடு இரவு கதவு தட்டப்பட, மங்களம் போய் கதவை திறக்க ..அங்கும் இங்கும் திருட்டு முழி முழித்துக் கொண்டு மருமகன் வாசலில் நின்றான்.. கதவைத் திறந்ததும் வேகமாக உள்ளே ஓடி வந்த காயத்ரி கணவன்
"காயத்ரி காயத்ரி சீக்கிரம் என் பாஸ்போர்ட் எடுத்து கொடு என்று அறக்கப் பறக்க துணியை எடுத்து உள்ளே வைக்க
"என்ன விஷயம் எங்க போறீங்க?
"ஒரு சின்ன பிரச்சினையாகி போச்சு ,போலீஸ் வந்து விசாரிச்சா நான் எங்க போனேன்னு தெரியலன்னு சொல்லிடு
"என்னங்க என்ன ஆச்சு காயத்ரி மங்களமும் அரண்டு முழிக்க
காசை வாங்கிட்டு போய் ஒரு சிப்மெண்ட்ஸ்ல கொடுத்தேன் ஒரு கோடி ரூபாய் கொடுத்தா நாலு கோடி ரூபாய திருப்பி தரேன்னு சொன்னான்.. அதை நம்பி கொடுத்தேன் ஏமாத்திட்டான்
"என்னது ஒரு கோடி ரூபாயை ஏமாத்திட்டு போயிட்டானா, கடவுளே !! என்று தாயும் மகளும் நெஞ்சை பிடித்துக் கொண்டு அவனைப் பார்க்க..
"ப்ச் , அது மட்டும் இல்ல எனக்கு தெரிஞ்ச 10 பேர அதுல சேர்த்து விட்டிருந்தேன்... அவங்க எல்லாரும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாங்க காச கேட்டு என்ன டார்ச்சர் பண்றாங்க... கொஞ்ச நாளைக்கு வெளியூர் போனாதான் தப்பிக்க முடியும்
அப்போ என் நிலைமை என்று காயத்ரி கணவனை பார்க்க
"வேணும்னா நீயும் என் கூட வா
அப்ப எங்க அம்மா?
"அதை எங்க அம்மாவை சேர்த்த முதியோர் இல்லத்திலேயே சேர்த்துடு இதையெல்லாம் இழுத்துகிட்டு போக முடியாது" மங்களம் அப்படியே சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தார் ...
என்னங்க நீங்க, வேற வழியே இல்லையா
வழி இருக்கு நீங்க ரெண்டு பேரும் நினைச்சா இன்னொரு வழிய உண்டாக்கலாம்... அவங்களுக்கு ஒரு 40 லட்ச ரூபாய் குடுத்து பைசல் பண்ணிட்டா , நம்ம வழியே குறுக்க வர மாட்டாங்க, அதுக்கு பிறகு நம்ம சோத்து பாட்டை எப்படியாவது பாருத்துக்கலாம்
"அப்போ நாம கொடுத்த ஒரு கோடி ரூபாய்
"அத அப்பவே சேட்டு அவன் பேர்ல எழுதிட்டானே
என்னதுஊஊஊஊஊ
"அது எப்படி அவன் பேருல எழுத முடியும்... நீதான கையெழுத்து போட்டுக் கொடுத்த..
எப்போ
பிசினஸ் பார்ட்னரா உன்ன சேர்த்துக்கிறேன்னு போன வாரம் ஒரு கையெழுத்து வாங்கிட்டு போனேன் இல்ல ... அது என்னன்னு நெனச்ச சேட்டுக்கு நம்ம சொத்தை மாற்றிவிட்ட பத்திரம் தான்
தலைதலையாக தாயும் மகளும் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை..
இப்போ பிசினஸ் தொடங்கினது உங்க அம்மா பேர்ல, அதுக்கு பார்ட்னர் நீ .. போலீஸ் கிட்ட மாட்டுறதா இருந்தா நீங்க ரெண்டு பேரும் தான் மாட்டணும் உள்ள போய் கம்பி எண்ண போறீங்களா? , இல்ல 40 லட்ச ரூபா ரெடி பண்ணி எனக்கு தந்து, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போறீங்களான்னு நீங்கதான் யோசிக்கணும்
40 லட்சத்துக்கு நாங்க எங்க போவோம் என்று காயத்ரி கணவனை ஆற்றாமையில் பார்க்க
ஏன் உன் அண்ணன் தான் நல்லா இருக்காரே, சூப்பர் மார்க்கெட்டுக்கு பக்கத்து இடத்துக்கு அவர் தான் அட்வான்ஸ் போட்டு இருக்கார் ... 45 லட்சமாம் நாளைக்கு பத்திரப்பதிவு இருக்கு , எப்படியும் அவர்கிட்ட காசு இருக்கும் போய் வாங்கிட்டு வா இல்ல ஜெயிலுக்குள்ள போ ... காசை ரெடி பண்ணிட்டு எனக்கு போன் போடு நான் பக்கத்துல இருக்குற லாட்ஜில் தங்கி இருக்கேன்" என்று பெட்டியை தூக்கிக்கொண்டு கணவன் வெளியே போய் விட்டான்
மகளும், தாயும் அரண்டு போய் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்
எதை கொடுக்கிறோமோ அதுவே திரும்பி வரும் !!